ஸ்ரேயா கோஷலுடன் ஒரு EXCLUSIVE பேட்டி !

உங்களுக்கு ரொம்ப புடிச்ச பர்ப்யூம் இன்னாது?

அது நிறையா இருக்கு., பட்! நான் எப்பவும் அதிகம் பயன்படுத்துறது இந்த பர்ப்யூம்தான்!

உங்களுக்கு பிடிச்ச கார் எது?

இதுவரைக்கும் என்கிட்ட சொந்தமா கார் கிடையாது! ஆனாலும் இன்னும் கொஞ்ச காலத்துக்குள் கார் வாங்குற ஐடியாவில இருக்கேன்!

உங்களுக்கு பிடித்த உணவு வகைகள்?

நான் பெங்காலிங்கறதால எனக்கு பெங்காலி உணவு வகைகள் ரொம்ப பிடிக்கும்! எனக்கு ரொம்ப் ரொம்ப பிடிச்சது மீன்கறியும் அரிசி சாதமும்தான்! ஆனா எனக்கு அந்தளவுக்கு ரொம்ப நல்லா சமைக்க தெரியாது!

உங்களோட இளமையின் ரகசியம்?

எனக்கு கிடைக்கிற சில மணி நேரங்களில் என்னால் அந்தளவுக்கு உடல்பயிற்சி செய்ய இயலாவிட்டாலும்ம்கூட நான் முன்பு செய்து கொண்டிருந்த யோகா உடல் பயிற்சிகளை அவ்வப்போது செய்து வருகிறேன்!

உங்களுக்கு பிடிச்ச டூரிஸ்ட் ஸ்பாட் எது?

எனக்கு அவ்ளோவா நிறைய ஹாலிடேஸ் கிடைக்கறது ரொம்ப கஷ்டம் இப்ப கடைசியா நான் போய் வந்த மொரிஷியஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது!

உங்களுக்கு பிடிச்ச நடிகர்?

குரு தத்

உங்களுக்கு பிடிச்ச நடிகை?

மாதுரி தீக்ஸித்
(நியூ இயர் ஸ்பெஷலாக,மிகுந்த சிரமங்களுக்கிடையில், தமிழ்மணம் ஸ்ரேயா ரசிகர்களுக்காகவே பிரத்யோகமாக எடுக்கப்பட்ட பேட்டி! )

9ம் பின்னே பெனசிரும்!


வழக்கம்போலவே பெனசிர் இறந்ததை வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து அந்த ரிசல்ட்களையும் ரீலிஸ் பண்ணிட்டாங்க!

பெனசிர் பிறந்த வருடம் 1953 கூட்டுனா, 1+9+5+3 =1+8= 9 வருதா?

பெனசிர் இறந்த வருடம் 2007 கூட்டுனா, 2+0+0+7=9 வருது

பெனசிர் மணம் புரிந்த நாள்: டிசம்பர் 18 - கூட்டி பார்த்தா 9 வரும்

பெனசிர் பாகிஸ்தானிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ஆண்டு 1998 கூட்டுனா, 1+9+9+8 =9 வந்துடுச்சி!

பெனசிரின் வாழ்க்கை காலம் 1953 லிருந்து 2007 வரையில் 54 வருடங்கள் கூட்டுனா இதுலயும் 9

பெனசிரை கொல்ல நடந்த முயற்சி 18 அக்டோபர் இதுலயும் 9 வந்துடுச்சு

இரண்டாவதாக நடந்த கொலை முயற்சி 27 டிசம்பர் கடைசியா இதுலயும் 9 வந்து

பெனசிரை பழிவாங்கி சென்றது :(

(இதெல்லாம் இங்கிருந்து சுட்டு போட்டதுதான்)

ஒரு பாட்டு - ஒரு புகைப்படம் :)

இந்த பதிவு "கப்பி"யார் பதிவிலிருந்து, கன்டினியூ ஆகும் பதிவாக கூட நீங்க வைச்சுக்கலாம் :-)


ஒரு படம்:-


ஒரு பாட்டு - சூப்பர் பாட்டு


திஸ்கி:- டேய் எனக்கெல்லாம் பார்வேர்டு மெயில் அனுப்பாதடா.! அதனால ஒரு பிரயோசனமும் இல்லன்னு நான் நண்பனிடம் சொன்னதையும் ஏற்காமல் அனுப்பி,அனுப்பி, கடைசியில இப்ப இதுக்கு பயன்படுத்திக்கிட்டேனே..!

நன்றி நண்பா!

பாட்ஷா - டிரெயிலர்..!


டிரெயிலர் வெளியாகிய போது பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லையென்றாலும் கூட, ரஜினி ரசிகர்களுக்கு இது ஒரு ஆக்ஷன் படம் என்று அவதானிக்க முடிந்திருந்தது!

ஆனால் மிகப்பெரியதொரு மெகா ஹிட் மேட்டராக மாறும் என்று அன்று எதிர்பார்க்கவில்லை!

எப்போது படத்தை பார்த்தாலும், முதல் தடவை பார்ப்பதை போன்றே,

பீட் குறையாத பாட்ஷா!

மற்றுமொரு பிரபலமான பஞ்ச்,

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி"

எல்லோராலும் பேசப்பட்ட,பேசப்படுகின்ற பஞ்ச் ஆக மாறிய வரிகள்!

இத்தனைக்கும் பலரது வீடுகளிலும் அன்றும் இன்றும் எப்போதுமே பேசப்படுக்கின்ற வரிகள்தான் இவை, பெரியவர்கள் சிறியவர்களிடம்,"உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா நூறு வாட்டியா சொல்லணும்" என்று அறிவுரையாகவோ அல்லது அதட்டலாகவே பயன் படுத்தும் வார்த்தைதான்!

எனக்கு தெரிந்து, பழைய தஞ்சை மாவட்டத்தில்(காவிரி டெல்டா) பல இடங்களிலும், இன்னும் கூட பசங்களை கண்டிக்க இந்த வரிகளை பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்! ( நல்லவேளை யாரும் காப்பிரைட் கேட்டு அன்று கோர்ட்டில் கேஸ் போடவில்லை :)))

பெனசிர் பூட்டோ


இன்று மாலையில் நடந்த பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ சரியாக பாகிஸ்தான் நேரப்படி 6.16 மரணமடைந்தார்! 15க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

சென்ற அக்டோபர் 19 அன்று பாகிஸ்தான் வந்திறங்கியபோதே நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் தப்பி பிழைத்த பெனசிருக்கு அந்த சம்பவத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 136 பேரை பலி கொடுக்க நேர்ந்தது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் மகளான இவருக்கு கூடபிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள்,ஹார்வர்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களில் பயின்ற இவர் பிறந்த இடம் பாகிஸ்தானில் கராச்சி
பின்னாளில் பெனசிரின் இரண்டு சகோதரர்களையும் தனது தந்தையையும்,இவரது தந்தையிடமிருந்து ஆட்சியை பறித்த ஜியா-வுல்-ஹக்கால் கொல்லப்பட்டனர்!

பெனசிர் தனது புத்தகத்தில் ,பாகிஸ்தான் நாடு மற்ற நாடுகளைப்போன்று சாதரண சூழலை கொண்ட நாடல்ல, என்றும் அது போலவே எனது வாழ்வும் சாதரண மனிதர்களை போன்றதல்ல என்றும் பலவிதமான கஷ்டங்கள்,சோகங்களை சந்தித்திருப்பதாகவும் மேலும் பாகிஸ்தானின் அரசியல்தான் என்னை தேர்ந்தெடுத்தது என்றும் தான் நினைத்துகூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்!

1988ல் விமான விபத்தில் ஜியா-வுல்-ஹக் பலியான பிறகு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக பாகிஸ்தானின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார் பெனசிர்! பிற்பகுதியில் ஊழல் காரணமாக 1990ல் ஆட்சி கலைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்,திரும்பவும் 1996ல் ஊழல் காரணமாக ஆட்சியை இழந்தார்!

பின்னர் வந்த அரசியல் மாற்றங்களில் 1999க்கு துபாய்க்கு சென்ற பெனசிர் அங்கும் லண்டனிலும் தம் பிள்ளைகளுடன் காலத்தை கழித்து வந்த நிலையில் இவர்தம் கணவர் ஊழல் வழக்கில் 8 வருட சிறை வாழ்க்கையிலிருந்து 2004 வெளிவந்த பிறகு, முஷாரப்புடனான உடன்படிக்கையின் படி மீண்டும் பாகிஸ்தானில் கால்பதித்தார் அக்டோபர் 19 அன்று !

முஷாரப்புக்கும் பெனசிரிக்குமிடையே ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் இருந்ததும் இதனால் ஜிகாதிகளிடமிருந்தும்,அல்கய்தாவிடமிருந்தும் மிரட்டல்கள் வரும் என்றும் பெனசிர் எதிர்பார்த்திருந்தார்!

அன்று பெனசிர் எதிர்பார்த்தது நடந்தது இன்று !

மருத்துவ கழிவுகள் - சங்கடங்களை எதிர்நோக்கிய சங்கதி !


மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.

மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியே றும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்து வமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழ மான குழியில் புதைக்க வேண்டும்.

நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் "கல்சர்' பொருள்கள் போன்றவற்றை "ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்' ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும்.காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.

ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோ கிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.

இவை மட்டுமல்ல... மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக்கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன?

எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி? அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும் போது அப்போதுமட்டும் "மூக்கைப் பொத்திக் கொண்டு' செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை !

நன்றி - தினமணி

சுனாமி - பார்வையில் என் தடம் பதிக்கின்றேன்....!


மனதில் பதிந்த சோகத்தை

மற்ந்துவிட முடியாத நாளாக

இன்று

எதிர்காலம் நோக்கியதல்ல,

என் பார்வை

எதிர் கொண்ட,என் சொந்தங்களை கொன்ற காலனை

இனி எப்படி வீழ்த்துவேன் என்ற பார்வையில்

என் தடம் பதிக்கின்றேன்....!

திரட்டி செய்வது எப்படி?

பொதுவாக எல்லாருக்கும் புடிச்ச மாதிரி அமையறது கஷ்டமான விஷயம்தான் இந்த திரட்டி செய்றதுல, ஏன்னா,எல்லாருக்கு ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும்! அவங்களுக்கு சில நேரங்களில் மட்டுமே புடிக்கும், ஃபீல் பண்ணி சாப்பிடற ஆளுங்களும் உண்டு, மழை காலத்தில் ஆஹா இது இப்ப இனிப்பா எதாவது கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு ஆசைப்படுவாங்க!

அது மாதிரிதான் திடீருன்னு ஒரு ஆசை திரட்டிபால் செய்யணும்னு, சரி செஞ்சு பாத்துடுவோம்னு,உதவிக்கு அறுசுவை ஒபன் பண்ணி வைச்சிட்டு ஆரம்பிச்சிட்டேன்!
(நாலு நாள் லீவு என்னா ஆனாலும் கவலைப்படக்கூடாதுன்னு ஒரு தைரியம்தான்! பக்கதிலேயே தான் ஆஸ்பத்திரியும் இருக்குல்ல :))

அறுசுவையில இதெல்லாம் தேவையானப் பொருட்கள்ன்னு, சொல்லியிருந்தாங்க, கிடைச்சதால எடுத்து ரெடிப்பண்ணிக்கிட்டு,

தேங்காய் - 2
பயத்தம்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்

இப்படித்தான் செய்ய ஆரம்பிச்சேன், தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.

கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். - இங்க தான் மிஸ்டேக்! இங்கதான் மிஸ்டேக்! - பரவாயில்லைன்னு முந்திரியை வறுத்து (கருக்கி) போட்டு முடிச்சுட்டேன்!

அருமையா வந்துருக்கும்னு நினைச்சு சந்தோஷாமா சாப்பிட்டேன்னு நினைக்காதீங்க ஒரு இடத்துல மிஸ்டேக் ஆகிடுச்சு :-(

உருட்டும் பதத்திற்கு வரவரைக்கும், நாம கொஞ்சம் மெசேஜ் பாத்துட்டு வந்திடுவோம்னு போனா அங்க அபி அப்பா! சாட்ல தம்பி நல்லாயிருக்கியாப்பான்னு? கேட்க, நானும் பதிலுக்கு நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு? பதில் அனுப்பிட்டு ரிப்ளைக்காக (உக்)காத்திருந்து காத்திருந்து கருகிப்போனதப்பா எனது திரட்டி பால் :-(

உங்களுக்கும் செஞ்சு பார்க்க ஆசையாயிருந்தா இங்க போய் பாருங்க!

அறுசுவை

திரட்டுப் பால் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

X MAS வாழ்த்துக்கள்.!

என் பங்கை எடுக்காமல், நான் பங்கெடுத்துக்கொண்ட கிறிஸ்துமஸ் கறி விருந்துகளையும்,

யாரையும் கேக்காமல் நானே எடுத்து தின்ன கேக்குகளையும்;

கிறிஸ்துமஸ் இரவுகளிலும் சரி புத்தாண்டு இரவின்போதும் சரி குழு பாடல்கள் புரியாவிடிலும், ரசித்த தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை;

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் இரவுகளில் சர்ச்சுக்கு செல்வோம் செல்வோம் என்று திட்டமிட்டு தூங்கிய நாட்கள்;

ஒவ்வொரு வருட கிறிஸ்துமஸ் இரவுகளில் பலகாரங்கள் சாப்பிட கூப்பிட்ட எதிர் வீட்டு விக்டேரியா அம்மாவையும்;

நம் வீட்டிலும் நட்சத்திரத்தை தொங்கவிடுவோம் என்று நினைத்து கொண்டே இருந்த நாட்கள் என எல்லாம் தனிமையில், இன்றுதான் - இங்குதான்,

ஞாபகத்துக்கு வருகின்றன!

கருணையின் வடிவங்களுள் ஒன்றாய் திகழும் கிருத்துவ மதத்தின்
சகோதரர்களுக்கு,சகோதரிகளுக்கு
என் இனிய வாழ்த்துக்களுடன்....!

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தின் தமிழ் ஒளிபரப்பில் பல நாட்கள் கேட்டு ரசித்த வேளாங்கன்னி மாதா பற்றிய ஒரு பாடலுடன்...
பயணிக்கிறேன் புத்தாண்டு நோக்கி....!

செல்லமடி நீ எனக்கு! அப்ப...!

நான் நீ அவன்

நானாகவே போக நினைத்தேன்

நீ யாகவே போக சொன்னாய்

அவனாகவே வர நினைத்தான்

நீ யாகவே வரவழைத்தாய்

நாமாக நினைத்தேன் நான்

அவனிடம் தானகவே சென்றாய் நீ

நாமம் தரித்துவிட்டாய் நீ எனக்கு

ஆனாலும்,

செல்லமடி நீ எனக்கு! அப்ப...!

இப்ப.. அவனுக்கு!

வாழ்த்த நினைக்கிறேன் மனதால்

வாயில் வரவில்லை சொல்

வாழ்க்கையை வாழ நீ செல்....


(சும்மாத்தான் எல்லாம் :-))

எம்.ஜி.ஆர் நினைவு நாளில்...இசையை கொஞ்சம் ரசிப்போம்...!

டிரைப்பண்ணி பாருங்களேன்...!

சில நிமிடங்களுக்கு

மகிழ்ச்சியையும்,

அந்த சில நிமிடங்களுக்குபிறகு

மனதில் கொஞ்சம் உற்சாகத்தையும்

கொடுக்கும் வகையிலான இந்த

மேற்கத்திய இசையையும் கொஞ்சம்

ரசித்துத்தான் பாருங்களேன்....!!


ஞாயிற்று கிழமைகளில் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்!

வாரத்துல ஒரு நாள் தமிழ்படம், காலையில் ஒரு காமெடி நாடக்ம் (சோ நாடகம்ன்னு நினைக்கிறேன்) ராமாயணம் மகாபாரதம்னு போயிக்கிட்டிருக்கிற, பல ஞாயிறு கிழமைகளில் அவ்வப்போது வந்து இம்சை கட்டும் இந்த பாடல்

ஆரம்பத்துல மொழி புரியாவிட்டாலும், தேசியம் பத்தி ஏதோ சொல்லவர்றாங்கன்னு நம்ம பாலமுரளிகிருஷ்ணாவும், கமலும் வரும்போதுதான் தெரியும்!

ஆனாலும் பாருங்க அடிக்கடி போட்டு அப்ப, கொஞ்சம் எரிச்சல் உண்டாக்கிய விஷயம்தான் எனக்குன்னு சொன்னா அது உண்மைதான்! இப்ப பாக்க தோணுது!
உங்களுக்கு புடிச்சிருந்துச்சா?
(இவ்ளோ நேரமும் உக்காந்து கேட்டுத்தான் ஆகணும் வேற வழி கிடையாது! புடிக்கலைன்னு வெளியில போயிட்டு வந்த அப்புறம் டிவிக்கு முன்னாடி இடம் கிடைக்காதுங்கறது வேற ஒரு பயம்!)

கணித மேதை ராமானுஜர் - நினைத்துபார்க்கிறேன் கணிதத்தை!

பத்தாவதுக்கு பிறகு வெறுப்பை வரவழைத்த பொருளடக்கங்களை கொண்ட பாடம் கணிதம் என்று சொன்னால் மறுப்பேதும் சொல்லாமலே ஒத்துக்கொள்வார்கள் இன்றைய மாணவர்கள் வரை!

அதுவும் தொழில்நுட்ப பயிலும் மாணவர்கள் என்றால் கணித்ததில் எப்படியோ தேர்வானதை நினைத்து,நினைத்து சந்தோஷப்படுவார்கள்! (என்னைய மாதிரியே...!)

அப்படி ஒரு தோஷம் புடிச்ச சப்ஜெக்ட்தான்! ஆனா ஒண்ணு கொஞ்சமா இன் ட்ரஸ்ட் இருந்து எப்போதுமே அதுக்குள்ள முழ்கினா அது இன்ப கடல்ன்னு என் கணக்கு பிரெண்ட் சொன்னான்!

எது எப்படியோ இந்த சப்ஜெக்ட்ல ரொம்ப முழ்கி வேலையேல்லாம் விட்டுப்புட்டு நிறைய கணித தேற்றங்களை (பித்தகராஸ் தேற்றத்துக்கு நான் பட்ட பாடு இருக்கே அப்பா சொல்லிமாளாது..! ஒரு வேளை வாத்தியார் சரியில்லையோ??-) இவரு கண்டுபிடிச்சு, சொன்ன விஷயங்கள்தான் இன்னிக்கு எல்லா இன்ஜினியரிங்க டிபார்ட்மெண்ட்களிலும் சும்மா போடு போடுன்னு போடுது!

இன்னிக்கு டிசம்பர் 22 இவரோட பிறந்தநாள் இன்னிக்கு எல்லாரும் கண்டிப்பா இவர நினைச்சு பார்க்கணும்!

ஏதோ என்னால நினைச்சு பாக்க முடிஞ்ச விஷயம்

நான் நினைச்சு பாக்குறேன் நீங்களும் இது மாதிரி இல்லாட்டியும் இன்னும் நல்லாவே நினைச்சு பாருங்க ஒ.கே! (இத விட 10 வாய்பாடு இன்னும் ஈசியா இருக்கும் ;-))

நளினி (M.C.A) & முருகன் (M.C.A)


நளினி (M.C.A) & முருகன் (M.C.A) இன்னும் சில மாத காலங்களில் இவர்கள் கணினி துறையில் மேல்படிப்பை முடித்துவிடுவார்கள்! ஆனால் மற்ற தமிழகத்து மக்கள்ஸ் போன்று இன்போசிஸ்க்கும் விப்ரோவுக்கு அப்ளை செய்வதற்கும், ஒரு வேளை அங்கு பணி கிடைத்தால் சென்று வேலை செய்வதற்கும் இவர்களுக்கு அனுமதி கிடையவே கிடையாது!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில்,ஆயுள் மற்றும் மரண தண்டனை பெற்ற இவர்களுக்கு மற்றவர்களைப்போல் கை நிறைய சம்பாதித்து பொருள் ஈட்டுவதன் மூலம் தம் வாழ்க்கையை சீராக்கிகொள்வதென்பது என்ன தேர்வு மாதிரியான விஷயமா....??

வாழ்க்கை பயணத்தில் இவர்களின் இச்சிறுமுயற்சி இவர்தம் வாழ்வின் நிலையை மாற்றுமெனில்,

வாழ்த்துக்களுடன்...!

சென்னை புத்தக கண்காட்சி 2008 - என்னா வாங்கபோறீங்க?


வருடா வருடம் வரும் புத்தக் கண்காட்சியில் இது வரை நான் சென்று கலந்து கொண்டது இரண்டு முறைதான் அதுவும் அந்த கல்லூரி காலகட்டத்தில் கண்காட்சியில் கல்லூரி புத்தகங்களை தேடி தேடி களைத்துப்போய், முடிவில் ராமகிருஷ்ணமட பதிப்புகளையும்,சில பல சுயமுன்னோற்ற நூல்களையும் வாங்கி வந்ததோடு சரி (அப்பப்ப கொஞ்சம் படிச்சிருந்திருக்கலாம்!)

இந்த வருடம் முன்கூட்டிய ஏற்பாடுகளோடு இந்த புத்தக கண்காட்சியை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் (லீவுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்!)

எனது இதுவரைக்குமான புத்தக லிஸ்டில் சில சுயமுன்னேற்ற நூல்களும் சில சைவம் சம்பந்தப்பட்ட நூலகளுமே இடம்பிடித்துள்ளது!
(சமீபத்தில் சென்ஷியால் ரெக்கமண்ட் செய்யப்பட்ட நூலும் கூட லேட்டஸ்டா சேர்ந்திருக்கு!)

எவ்வளவோ நல்ல பல நூல்கள் பார்த்தும் படித்தும் நினைத்தும் இருக்கும் பதிவர்கள் கொஞ்சம் ரொக்கம்ண்ட் செய்யுங்களேன்!

அல்லது நீங்கள் வாங்க நினைத்திருக்கும் புத்தகங்களின் பட்டியலை கொஞ்சம் வெளியிட்டு உதவுங்களேன் :-)

Dr.ராமதாஸ் - உரிமைக்குரலா..??


ராமதாஸின் பார்வை இப்போது புறம் போக்கு நிலங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது ! (அட கருணை பார்வையோடத்தாங்க...!!!)

ஆறுகள் குளங்களை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் குடிசைகள் வீடுகளுக்கு நிரந்த பட்டா வழங்குவதன் மூலம் இனியும் யாரு ஆக்ரமிப்ப்பு செய்ய மாட்டார்கள் என்ற தீர்க்க சிந்தனையின்பால் வெளிவந்துள்ள கருத்துக்கள்!

ராமதாஸ் சொல்வது போல அங்கு தம் ரத்தம் சிந்தி உழைத்த காசை கொண்டு ஆற்றின் கரைகளில் பெற்ற சிறு துண்டு நிலங்களை கல் மண் கொண்டு குடிசை வேய்ந்து காலம் தள்ளிக்கொண்டிருப்பது 100 சதவீகிதம் உண்மையே!

சாதரண கூலி வேலை செய்யும் அவர்கள் இவ்வளவு தைரியமாகவா எதிர்கால சூழ்நிலைகளை பற்றி சிந்திக்காமலா புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டுவார்கள்?

அரசியல்வியாதிகளே இதற்கு முழுமுதல் காரணம் !

கூலி தொழிலாளிகளிடமும் கூட பெற்ற அந்த காசினை கொண்டு தம் வளமான வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் கீழ்மட்டத்தில் உள்ள தம் அடிப்பொடிகளிடம் தான் இந்த கலெக்ஷன் கலாச்சரத்தை வழிநடத்தி செல்ல யோசனை அளிக்கின்றனர்!

அவ்வப்போது விழித்துக்கொள்ளும் அரசு துறையினர் ஆக்ரமிப்பு அகற்றல் என்ற ஆயுதம் ஏந்தி புறப்படுகையிலேயே நமக்கு தெரிந்து விடும் அது அவர்களின் கையில் இருக்கும் மொக்கையான கத்திதான் என்று! அப்படியே சில ஷார்ப்பான அதிகாரிகளும் மேல்மட்டத்து ஆட்கள்,மூலம் மொக்கையாக்கப்படுகின்றனர்!

இந்த அரசு இதை செய்ல்படுத்தாவிட்டாலும்,இனி வரும் 2011ல் பா.ம.கவின் ஆட்சியில் (?!) இது செயல்படுத்தப்படக்கூடும்! அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்றிலிருந்தே தொடக்கப்பட்டு விடக்கூடும் (அதாங்க கலெக்ஷன்ஸ்...!?)

வாழ்க ஜனநாயகம்

ஆறுகளின் கரைகள் கரைந்து,

எழும்பட்டும் எங்களின் இல்லங்களாய்....!!!

இப்படியெல்லாமா தோணும்....??

அடப்பாவி மக்கா!

இப்படியெல்லாமாவா யோசிப்பாங்க....?!?!?
ஹச்சென்று ஒரு க***காலை எழுவது தொடங்கி,

இரவு விழுவது வரையுமான,

இடைப்பட்ட கால நேரத்தில்

இது போன்றதொரு சுதந்திரமான

சுறுசுறுப்பான,

மனச்சுமையற்ற,

மகிழ்ச்சியோடிணைந்து

வாழும் வாழ்க்கையையும்,

வாழ்ந்துபார்க்கவேண்டும் என்று

தோன்றுகிறது,

வாழ்க்கை ஓட்டத்தில்

ஒடவும் முடியாமல்,

நடக்கவும் முடியாமல்,

நடைபிணமாகிவிட்ட எனக்கு....!

மார்கழி ஆரம்பிச்சிடுச்சி :-)இதெல்லாம் ஒரு காலமப்பா...!!!

இனி வருமா,

வருடந்தோறும் வருகின்ற மார்கழிகளில்...?

அர்த்தமுள்ள இந்து மதத்திலிருந்து - குசும்பனுக்கு..!


தண்ணீரில் வாழுகின்ற மீன் அதைவிட உயர்ந்த பாலிலே வாழும்படி கெஞ்சினாலும் வாழாது வாழ முடியாது

அது போல யார் என்ன சொன்னாலும் செய்தாலும் கும்மியையோ அல்லது மொக்கையோடும், சில சமயங்களில் தீர்க்க சீரியஸ் சிந்தனைகளோடும் வாழுங்கள்..!

நம்முடைய உள்ளங்கையிலே எவ்வளவு சாதம் அடங்குமோ அதன் பேர்தான் கவளம்.

ந்ம்முடைய இருகைகளாலும் முடிந்தால் காலாலும் கூட எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு நல்ல சத்தம் வரும் வகையில் கீ போர்டில் அடிப்பதுதான் கும்மி அந்த எண்ணங்களோ உங்களது வாழ்க்கையை விரிவுபடுத்தும்!

இதுவே நமது கடமை என்று ஒரு சேவையை செய்!

இதுவே நமது கடமை என்று கலாய்த்தலும் கும்மிகளையும் தொடருங்கள்!

ஊருக்கு செய்யாவிட்டாலும் உன் குடும்பத்துக்கு செய் அதன் பெயரும் சுயதர்மம் தான்!

ஊரையே கலாய்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களின் பா.குடும்பத்துக்குள் கலாய்த்துக்கொள்ளுங்கள் அதன் பெயரும் சுய கலாய்த்தல்தான்!

வில்லங்கங்கள் இல்லாத சேவையில் ஒரு நிம்மதி இருக்கிறது

வில்லங்கமான கலாய்த்தல்களிலும் கும்மிகளிலும் ஒரு நிம்மதி உனக்கு இருக்கத்தான் செய்யும்!

மிகமுக்கியமான சேவை தாய்க்கு மகன் செய்யும் சேவையாகும்

மிக மிக முக்கியமான நபர்களின் கலாய்த்தல்கள் சேவையே தமிழ்மணத்துக்கு நீ செய்யும் பெரிய சேவையாகும் !

பொதுச்சேவை என்ற பெயரில் அரசியலில் ஈடுபடுவதனால் நாட்டுக்கு அதனால் பயன் இருந்தாலொழிய, எந்த தலைவனையும் நம்பி இறங்காதே.!

பொழுதுப்போக்கு என்ற பெயரில் ஓவர் டைம் போட்டு கலாய்த்தலில் ஈடுபடுவதால்,அரபிக்கும் ஆபிசுக்கும் பயன் இல்லையே என்றாலும் கூட, எந்த சூழ்நிலையிலும் ஓவர் டைம்மை விட்டுக்கொடுக்காதே!

வாழ்த்துக்களுடன்....!!!


நன்றி - அர்த்தமுள்ள இந்துமதம் (போல்டாக சொன்னது!)

ஹிந்தி கத்துக்கலாம் வாங்கப்பா....!

ஒரு பத்து வருஷத்துக்கு, முந்தி ஆரம்பிச்ச ஆசைதான் இது இந்தி கத்துக்கிடணும்னு,ஆனா பாருங்க அதுக்கான வாய்ப்புக்களோ, அல்லது ஊக்கமோ ஒண்ணும் இல்லாமலே இருந்தது!

திடீருன்னு ஒரு நாளு ஸ்கூல் PT வாத்தியார் வந்து, டேய்..! பசங்கள நம்ம ஸ்கூல் கிரவுண்டல (அபி அப்பா & குரங்கு ராதாவின் பேமஸ் ராஜன் தோட்டம்தான்!) ரொம்ப பெரிய ஸ்போர்ட்ஸ் டே நடக்கப்போகுது, அதுல எல்லா ஸ்கூல் பசங்களும் கலந்துக்கிறாங்க,விழா ஆரம்பிக்கறப்ப டான்ஸ் ஆடுறதுக்கும் பசங்கள ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அதனால நீங்களும் எதாவது ஆடுறதுக்கு தயாரா இருந்தா வாங்கடான்னு சொல்ல,எல்லாரும் ஒரு ஆசைதான்!

உடனே டக்குன்னு மனசுக்குள்ள டான்ஸ் ஆடுனாது அந்த டைம்ல ரொம்ப கலக்கலா போய்க்கிட்டிருந்த இந்த ஹிந்திபாட்டுத்தான்!

இந்த பாட்டு (தேசாப் 1988) மூலமா எனக்கு 7 வரைக்கு இந்தி தெரியுமே...!


ஸ்போர்ட்ஸ் டேவும் வந்துச்சு, நல்லபடியா கலை நிகழ்ச்சிகளோட ஆரம்பிச்சு அந்த பாட்டும் போட்டு அதுக்கும ஆடி, நாங்க அடிச்சி தூள் கிளப்புனோம்ல! :-(
(பாட்டுக்கு ஆடினது தருமபுரம் ஸ்கூல்! அடிச்சு தூள் கிளப்புனது நாங்க!
ஐடியா கொடுத்தவனையும், பிராக்டிஸ்க்கே வராதவனையும் ஓட ஓட விரட்டி அடிச்சது நானும் என்னோடே இன்னொரு ரெண்டு பிரெண்ட்ஸூம்...! :- )

MADE IN இந்தியா :-)

1996களில் ஆடியோ கடைகளிலும் சரி வீடியோ வாடகைக்கு விடும் கடைகளிலும் இந்த பாடல் கேசட் இல்லாமலோ அல்லது ஒளி/ஒலிக்காமல் இருந்திருக்காது!

அந்தளவுக்கு ரொம்ப பயங்கரமான ஹிட் கொடுத்த பாட்டு!

அலிஷா அலிஷான்னு பித்து பிடிச்சு, கதறிக்கிட்டு கிடந்தது ஒரு கூட்டம்!

ஆடியோ கடைகளில் அசெம்பிள் செட்டின் மகிமையால் பாட்டு சும்மா ஜில்ஜில் சவுண்டோட அசத்திய காலங்கள் !

இந்தியாவைப்பத்தி பெருமையான பாட்டுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க,எதாவது ஒரு கடை பங்ஷன்னாலோ அல்லது ஆயுத பூஜைக்கோ சும்மா சவுண்டு கிழிக்கும் பாட்டு கேட்டு பாருங்களேன்....!


நெல்லை மாநாடு - ரெஸ்பெக்ட் தெரியாத மினிஸ்டர்ஸ்...?

விழா மேடையில் தலைவர்கள்;

வீதியில் வரும் பேரணியில் தளபதி ;

வரும் பேரணியை வரவேற்க பெருந்தலைகள்;

தளபதியின் கையசைப்புக்கு நோ ரெஸ்பெக்ட்..!?

ஆற்காட்டரிடமிருந்தும், துரைமுருகனிடமிருந்தும்...!

சீனியர்கள் என்ற எண்ணமோ...!

அட கி.வீரமணி மாதிரி கும்பிடு போடவேணாம்ங்க.,

நம்ம 2 க.அன்பு மாதிரி ஒரு சின்ன "ஹாய்" சொல்லலாம்ல....!!!

சுற்றுகிற உலகத்திலே, சுற்றுகிற மனிதர்களே...!

ஹைய்யா இது கார்த்திகை மாசமான்னு குஷியோட ஆரம்பிக்கிற மாசம்தாங்க ஆனா பாருங்க கார்திகை 20 தேதிக்கு மேலதான் ரொம்ப பரபரப்பா இருக்கும்!

சீக்கிரம் முடிக்கணுமே..!

சீக்கிரம் முடிக்கணுமே,

பயங்கர டென்ஷனா இருக்கும்! நாம இப்படி டென்ஷன்ல இருக்கறத பார்த்துட்டே நிறையபேரு ரொம்ப கிண்டலா என்னடா இப்பத்தான் ஆரம்பிக்கிறீயா? எப்ப முடிக்கறது அதுக்குள்ள தை மாசம் வந்துரும்டான்னு, ஆனா அதப்பத்தியெல்லாம் நாம கவலைப்படறது கிடையாது அவங்களுக்கு தெரியாதுல்ல நம்ம டைமிங்கே வேறன்னு ..! (காலையில 4.00 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு முடிச்ச கையோட மயூரா 2 ஸ்ட்ராங்க் பில்டர் காபி ஒண்ண உள்ள வுட்டுக்கிட்டு 5 மணிக்கு ஆரம்பிச்சா 7.30 க்குள்ள 25 சுத்து வந்துடலாம்!)

என்னாடா இந்த இழு இழுத்துட்டு வரானேன்னு பாக்குறீங்களா?
எல்லாம் சுத்தல் மேட்டர்தாங்க!

வருஷா வருசம் கார்திகை மாசம் வந்தா போதும் எங்க ஊருல இருக்கற கோவில்கள் ரொம்ப பிசியாகிடும் (எங்க ஊருன்னு இல்ல பல ஊர்களிலும் இதான் கதை) ஊர்ல உள்ள அம்புட்டு 6லிருந்து 60 வரையானவர்கள் கோவில் பிரகாரம் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்!

சும்மா சாதாரணமா சுத்தறது இல்லைங்க, கார்த்திகை மாசத்து டார்கெட் 1008 அவ்ளோதான்!ஆனா ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு மாதிரியான ரவுண்ட்ஸ் பிக்ஸ் பண்ணியிருப்பாங்க நம்ம மக்கள்ஸ்

பெரிய கோவில்லுன்னு எடுத்துக்கிட்டா அபயாம்பிகை சன்னதியை 1008 தடவை சுத்திவரணும்,கோவிலையே 108 முறை சுத்திவரணும்ன்னு, இதெல்லாம் சீக்கிரமாவே முடிச்ச பி.டி.உஷாக்கள் சுவாமி சன்னதியையும் 108 சுத்திக்கிட்டு இருப்பாங்க! (பெரிய கோவில்தான் பெரிய விஷயம் பெரிய பிரகாரம் நிறைய டைம் எடுக்கும்!)

வள்ளலார் கோவில் சொல்ற வேதபுரீஸ்வரர் கோவில் அம்பாள் சன்னதியை தினமும் 108 சுத்து சுத்தணும்! (இது சின்ன பிரகாரம்தான் இதுல சுத்தறவங்க மற்ற கோவில்களிலும் கமிட் ஆகியிருப்பாங்க!)

மற்றபடி அய்யாரப்பர் கோவில் & புனுகீஸ்வரர் கோவில்களிலும் இந்த சுற்றல்கள் உண்டு ஆனா அந்தளவுக்கு கூட்டம் இருக்குமான்னு தெரிய்லை! (இந்த ஏரியாக்கள் நம்ம கண்ட்ரோல்ல வராதுங்க..!)

ஆனா எனக்கு தெரிஞ்சு இங்க சுத்துனாவங்க எல்லாம் நல்ல வேலை கிடைச்சு, நல்ல வாழ்க்கை கிடைச்சு நல்லாத்தான் இருக்குறாங்க! அதுக்கு நிறைய பேர உதாரணமா சொல்லலாம் !
(நாங்கூடத்தான் உதாரணம்!)

எங்க ஊர்லேர்ந்து போயி முன்னணி சாப்ட்வேர் கம்பெனிகள் பணிபுரியும் அத்தனை பெண்களும் பெரும்பாலன் ஆண்களும் கண்டிப்பாக சுத்தியிருப்பார்கள்! (நாங்க எவ்ளோ பேர பாத்துருக்கோம் கோவில்ல!)

இந்த வாரத்தோட முடியுதுங்க கார்த்திகை பிரகார சுற்று விஷயங்கள்!

இப்போதைக்கு எங்க ஊரு கோவில்களுக்கு போனீங்கன்னா கோவில் சுவத்துல ஒரே நம்பர்களா இருக்கும் (இதை மட்டும் மாத்த முடியலப்பா!)

அதெல்லாம் இந்த கார்த்திகை மாசத்து கைங்கரியங்கள்தான் :-)

சென்னை புத்தக கண்காட்சி - 2008

வருடா வருடம் ஜனவரி மாதத்தில் பெரும் கொண்டாட்டமான ஒரு திருவிழா போன்று நடைப்பெறும், சென்னை புத்தக கண்காட்சி 2008ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 4 -வெள்ளிகிழமை தொடங்கி சுமார் 14 நாட்கள் 17 நிறைவுப்பெறும் வகையிலான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து வந்தாலும் இதுவரையிலும் அந்தளவுக்கு ஊடகங்களில், ஊக்கம் அளிக்கும் வகையிலான, செய்திகள் ஏதும் காணப்படவில்லை இந்த எண்ணங்கள் தவிர

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்று சில புத்தகங்களை பெற்றதும், சில கடைகளுக்கு சென்றதும் சில கடைகளை கண்டதும், இன்றும் விழிகளில் நிழலாடுகின்றது! இந்த முறையும் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மனதுக்குள் நம்பிக்கை வைத்துள்ளேன்!

இதே போன்றே மிகுந்த நம்பிக்கையோடு தமிழக முதல்வர் அவர்கள் சென்ற 2007 புத்தக கண்காட்சியின் போது அறிவித்திருந்த புத்தக் கண்காட்சிக்கென நிரந்தர இடம் பற்றிய நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன, என்று இன்னும் கூட தெரியவில்லை (சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்...?!)

இந்த வருடமும் மக்களின் நல்வரவேற்புடனும்,புத்தக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையிலும் கண்காட்சி அமையும் என்ற எதிர்பார்ப்போடு...!

படங்கள் நன்றி :- திண்ணை & தமிழ்நாடு அரசு

ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாளில்..!


ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக

உலக நாடுகளின் செவிகளுக்கு செல்ல,

ஈழத்தமிழர்களது வலி நிறைந்த துயரங்களை

உலக நாடுகளின் விழிகளுக்கு தெரிவித்த,

போர்களம் செல்லவில்லையென்றாலும்,

போர் அற்ற ஒரு புதிய பரிணாமத்தில்,

ஈழ விடுதலைக்கான முயற்சிகளை,

மேற்கோண்ட தேசத்தின் குரல்!

ஈழத்தின் மீது தான் கொண்ட நினைவுகள்,

நிஜமாக்கும் நாள் வரும் வரை காத்திருக்கும்

இவர் ஆன்மா அமைதியாய்....!

தும் சலோ - LEAD INDIAமொழி விளாங்காவிடிலும்,

பார்க்கும் விஷயங்களில்

புரிந்துக்கொள்வோம்..!

புதிய இந்தியாவை வழிநடத்தி செல்ல

வாருங்கள்...!

வரவேற்று வாழுங்கள்..!


நன்றி:- தேசிய நலனில் தம்மை இணைத்துக்கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு

திருநீர்மலை – “கழிவு”ப்பாதையில்

சென்னைவாசிகளுக்கு அதிகமே பழக்கமான ஊராக கூட இது இருக்ககூடும்

திருநீற்றுமலையாக ஆன்மிக அன்பர்களுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு சின்ன ஊர்தான்!

இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது! சுமாராக 200 மேற்பட்ட வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து பெறப்படும் மீத்தேனை உபயோகித்து,அதன் முலம் சுமார் 3000 வாட்ஸ் சக்தியை பெற்று அங்குள்ள வீதிகளுக்கு விளக்குகளால் வெளிச்சம் அளித்துக்கொண்டிருக்கின்றனர்!


அங்கு அல்லது இங்கு போய் பாருங்களேன் என்னதான் நடக்கிறது என்று...? (அட நாத்தமெல்லாம் கிடையாதாம்ங்க!)

தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)


இருக்கற கோஷ்டிகளை எண்றதுக்குன்னு ஒரு கோஷ்டி போட்டா அவங்களும் சத்தியமூர்த்தி பவன்ல் உக்காந்துக்கிட்டு தனி தர்பார் நடத்துவாங்க! அப்படியாகிப்போச்சு, நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் நிலைமை (சும்மா டீ கொண்டு வந்து கொடுக்கற டீக்கடை ஆளுங்களுக்கே அந்த கோஷ்டி பாதிப்பு உண்டாம்ல..! )

இப்படி பட்ட இக்கட்டான நிலைமையிலதான் அன்னை சோனியா கூறவுள்ள உத்தரவை ஏற்று மக்கள் பணி ஆற்ற வருகிறார் நக்மா!

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பும், டெல்லியில் முக்கியமான எம்.பிக்களுக்கு விருந்து அளிக்கும் வழக்கம் கொண்ட நம்ம நெல்லை எம்.பி தனுஷ்கோடி ஆதித்தனின் இந்த வருட பார்ட்டியில்,பிரதமர் மற்றும் அன்னை சோனியா பங்கேற்க, அந்த பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தாரம் நக்மா!

அன்னை சோனியாவின் ஆலேசனையின்படி, மிக விரைவில் அறிக்கை ரீலிஸோட அசத்தல் அறிமுகம் அரசியலில்...!

நேஷனல் லெவலா இல்லை தமிழ்நாட்டு லெவல்லையான்னு இன்னும் சரியா தெரியலைங்க!

எது எப்படியே…! நல்ல கில்(ஜில்)பான்ஸியா இருக்கும்ல :)))

12.12.07ல் - விருட்சமாய்... !

12.12.07ல் -வாழ வைக்கும் தெய்வம் நீ ... !

12.12.07ல் - வாழ வைத்த தமிழ்...!

12.12.07ல் - வென்று முடிப்பவன்!

12.12.07ல் - காலடி மண்ணெடுத்து...!

12.12.07ல் - சொன்னாலும் தீராது..!

12.12.07ல் - நம்ம பத்தி கேட்டுப்பாருங்க !

12.12.07ல் - ஆகாயம் போல் வாழ்பவன்..!

12.12.07ல் - கடவுள் உள்ளமே...!12.12.07ல் - ஒரு நாளும் உனை மறவாத... !

"தம்பி" அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
கொஞ்சம் லேட்டாகிடுச்சு...!

அண்ணா!

வாழ்த்துக்கள்......!

பொறந்த நாள்களில்

நல்ல விசயங்களை செய்யணும்;
நல்ல விசயங்களை சிந்திக்கணும்;
அப்படின்னுல்லாம் பெரியவங்க சொல்லுவாங்க!

பேசாம நல்ல விஷயமா மன்றத்த ஆரம்பிச்சுப்புடலாம்!

ஸ்ரேயா கோஷல் நற்பனி(ணி) மன்றம் மாதிரியே...!

எதோ வெட்டியா இருக்குற நாங்களும் மன்ற பணிகளில் சுறுசுறுப்பாகிவிடுவோம்!

எதோ எங்களுக்கும் ஒரு நாலு மல்லு தேசத்துக்காரங்க ப்ரெண்ட்ஷிப் கிடைக்கும் :)))

நல்லவிதமா யோசிச்சி தம்பி முடிவெடுக்கணும்!

ச்சே..! என்ன தம்பி என்னாச்சு ஏன் இவ்ளோ யோசனை..?

இப்ப ஒ.கேதானே...!!!!

12.12.07ல் - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா?

12.12.07ல் ரஜினி - 1

ரெடி...!

ஸ்டார்ட்....!

ஜூட்....!


சூப்பரான விஷயம் "அவள்" இடமிருந்து

காற்றலைகளோட கபடியாட ஆரம்பிச்சுட்டாங்க திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி மாணவிகள். அதாங்க.. எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்புல படு பிஸியா கலக்கிட்டிருக்காங்க. புரொபசர் ஷெர்லி தீபக்கோட மேற்-பார்வை-யில இந்தக் களத்துல இறங்கியிருக்குறவங்க, அந்த காலேஜோட விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகள்

காலை 6லிருந்து இருந்து 10 மணிவரை, மாலை 4லிருந்துல இருந்து 8 மணிவரைனு நிகழ்ச்சிகளை தயாரிச்சு திருச்சியில 20 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காதுல ஹனி ஊத்துறாங்க!

நிகழ்ச்சி வடிவமைப்பு, பதிவு, ஒலிபரப்புனு எல்லாமே அம்மணிகள் அட்மினிஸ்ட்ரேஷன்தான். சினிமா பாடல்களுக்கு ‘நோ’, அவங்களே இசையமைச்ச பாடல்களைப் போட்டு ஆடி(யோ)யன்ஸை அசர வைக்கிறாங்க. பார்வை இழந்தோர்க்கான பிரத்தியேக நிகழ்ச்சி, சமூக விழிப்பு உணர்வு விளம்பரங்கள்னு உபயோகமானதையெல்லாம் திகட்டாமலும் தர்றது இவங்க திறமையைத்தான் காட்டுது.

இன்னொரு முக்கியமான விஷயம்.. டெல்லியில இருந்து ‘டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி’ங்கிற அமைப்பு இவங்ககிட்ட 16 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து, பெண்கள் மத்தியில நோய்க்கான விழிப்பு உணர்வு ஏற்படுத்துறது தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்கச் சொல்லி, ஒப்பந்தம் போட்டிருக்காங்களாம்!

நன்றி - அவள் விகடன்

அட...! உண்மையிலேயே ரொம்ப சூப்பரான விஷயம்தானே..!

ஏற்கனவே கம்யூனிட்டி ரேடியோன்னு ஒரு திட்டத்த அமல்படுத்த அரசு ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது இது போன்ற விஷயங்களில், துறை சார்ந்த மக்கள்ஸ் களத்தில இறங்குனா நல்லாத்தானே போகும்....!

மாதுரி ரிட்டர்ன்ஸ் - வீக் எண்ட் கலக்கல்ஸ்
தளபதி - நோ டயலாக்ஸ்...!

இதுக்கு எதுக்குங்க டயலாக்ஸ்!

ஆக்ஷன் போதுமே!

பாருங்க உங்களுக்கே புரியும்...!!!


:: .குட்டீஸ் கார்னர். :: குட்டீஸ்களுக்காக....!

முளைச்சு மூணு இலை விடுல, (எல்லாரும் சொல்றாங்க அதான் நானும் சொன்னேன்!) அதுக்குள்ள இந்த சின்ன புள்ளைங்களோட சின்ன மூளையில இவ்ளோ மேட்டருகள் இருக்கான்னு அப்படியே ஒரு பெருமித்தோடுத்தான் பாத்துக்கிட்டிருக்கோமே ஒழிய அந்த குட்டீஸ்களுக்கு தேவையான அறிவுரைகளை கொடுப்போம்னு யாருக்கும் டக்குன்னு தோணமாட்டிக்குது (எனக்கும் லேட்டுதான்...!)

ஸோ...! அந்த குறையை போக்கத்தான் இது..!இது மாதிரி நீங்களும் இந்த குட்டீஸ் கும்பலுக்கு நெறய்ய்ய்ய்ய்ய் அட்வைஸ் கொடுங்க என்ன....! ஒ.கே வாஆஆ..!?

மருத்துவ மாணவர்கள் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி.


மருத்துவப் படிப்பு காலத்தை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து நீடித்து ஓராண்டு கட்டாய கிராம சேவையுடன் ஆறரை ஆண்டுக ளாக்கும் ""மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின்'' முயற்சியை எதிர்த்து பல்லாயிரக்கணக் கான மருத்துவ மாணவர்கள் மூன்று வாரகா லமாகப் போராடி வந்தனர்.

அப்போராட்டம் தமிழகத்தில் பல கட்டங் களை நோக்கி நகர்ந்தது. சாகும்வரை பட்டினிப்போர் என்ற வருத்தப்படக்கூடிய நிலைக் கும் மாணவர்கள் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். மருத்துவ மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆறுதலையும் ஆதரவையும் அளித்தனர்.இறுதியாக மருத்துவ மாணவர்களின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.

மூன்று வாரமாக தொடர்ந்த இப்போராட்டம் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியின் வழிகாட்டுதலுமின்றி மிக மிக அமைதியாக வும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்தது.

"அமைதி வழி' ஒன்றே என்பதாலோ என்னவோ? அவர்களின் போராட்டத்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவில்லை.

ஐந்தரை ஆண்டுகாலக் கல்வியுடன் ஓராண்டுகால சேவையை இணைப்பது எந்தவிதத் தில் நியாயம்? கல்விக்கும், பணிக்கும், சேவைக்கும் வித்தி யாசம் உண்டா இல்லையா? கல்வி என்றால் கற்பது மட்டுமே.

கல்வியோடு பணியையும் சேவையையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும்? தற்பொழுது நான்கரை ஆண்டுகள் முழுக்க படிப்பு மட்டுமே. அதன் முடிவில் தேர்வு. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் சுழற்சி முறையில் அனைத்துத்துறை மருத்துவப் பிரிவுகளிலும் பயிற்சி. அதில் மூன்று மாதம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார்கள். அதன்பின் பட்டம் பெறவும், மருத்துவராகப் பணியாற்றவும் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.


தற்பொழுது கூடுதலாக ஓராண்டு கிராமப் புற மருத்துவமனையில் பணியாற்றினால் மட்டுமே "பட்டம்' பெறத் தகுதியுடையவர்களாக்குவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு அல்லது பொது மக்களுக்குப் பலனளிக்கப்போகிறது என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.

அப்பாவி கிராம மக்க ளுக்கு கத்துக்குட்டி மாணவர்க ளின் சேவையைத்தான் மத்திய அரசு அளிக்க இயலுமா? ஐந்தரை ஆண்டுகள் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து விட்டு வெறுமனே ரூ. 8,000-க்கு ஓராண்டு பணிபுரிய இயலுமா?

11 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் பலம் பொருந்திய இந்தியாவில் உள்ள கோடிக்க ணக்கான கிராமவாசிகளுக்கு பட்டம் பெற்ற மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்த முடியாதா? அப்பாவி மருத்துவ மாணவர்க ளின் உழைப்பை ஓராண்டிற்குச் சுரண்டுவது தான் இந்திய அரசின் லட்சியமா?

கிராமப்புற மருத்துவமனையில் ஓராண்டுகாலம் தங்கி எவ்விதமான சிகிச்சை அளிக்க இய லும்? எனவே ஓராண்டு காலம் நீடிப்பது என் பது படிப்பா? பணியா? சேவையா? என்று விளக்க வேண்டும்.

படிப்பு என்றால் கிராமப்புற மருத்துவமனைகளில் இவர்களுக்கு யார், என்ன பாடம் சொல்லித்தரப் போகிறார்கள் என்பது விளக் கப்பட வேண்டும். பயிற்சி என்றால் ஏற்கெ னவே "ஒரு வருடப் பயிற்சியே போதுமானதே'. மேற்கொண்டு பயிற்சி என்றால் நவீன சிகிச்சை யில்தானே பயிற்சி பெற வேண்டும்? சேவை என்றால் இளம் பிஞ்சுக ளிடம் எப்படி கட்டாய சேவை யைப் பெறுவது? மேலும் மனமுவந்து செய்வதுதானே சேவை!
.
பணி என்றால் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், மத்திய அரசுப்பணிக்குத் தயாராக உள்ள நிலையில் ஏன் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அவர்களை நிரந்தர அரசு வேலைக ளில் அமர்த்தக்கூடாது.

அதில் என்ன தயக்கம்? ஆண்டு முழுவதுமே பனிமழை பொழியும் மலைப்பகுதிகளில் உள்ள ராணுவத்தில் கூட மருத்துவர்கள் பணியாற்ற முற்படும்பொழுது கிராமப்புறங்களில் நிரந்தரப் பணி கொடுத்தால் அதைச் செய்ய எந்த மருத்துவர் களும் தயக்கம் காட்டமாட்டார்கள்.

கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களி லும் மத்திய அரசே மருத்துவர்களை நியமிக்க எவ்வித முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதுபோன்ற எந்த முயற்சியையும் மத்திய சுகாதாரத்துறை எடுக்கவில்லை.


மாணவர்களையே ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியில் அமர்த்துவது பல்லாயிரக்கணக்கான மாண வர்களின் உழைப்பை ஆண்டுதோறும் சம்ப ளம் கொடுக்காமலே சுரண்டுவதற்குச் சமம்.
இது உண்மையில் "மனித உரிமை மீறலும்' அரை கொத்தடிமைத்தனமுமாகும். "கல்வி கொடுக்க வேண்டிய காலத்தில் நல்ல கல்வி, வேலை கொடுக்க வேண்டிய நேரத்தில் நிரந்தரமான வேலை' என இரண்டையும் அரசு உத் தரவாதம் செய்யாமல், கல்வியோடு பணியையும் சேவையையும் போட்டுக் குழப்பக்கூடாது''.

இன்றைய கிராமங்களில் மக்களுக்கு அளிக் கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சையும் மருத்துவ வசதிகளும் வெகுவாக மாறிவிட் டன.

ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதில் பட்டம் பெற்ற பொது மருத்துவர், உயிர் காக்கும் மருந்துகள், உரிய நவீன பரிசோதனைக்கூ டம், வாகனங்கள், ஆபரேஷன் தியேட்டர் கள் என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள் ளன. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கிராம மருத்துவமனைகளை மேம்படுத்த எண்ணாமல், கூடுதலாக "ஒரு மாணவரை' நியமிப்பதால் "கிராம மக்களின்' சுகாதாரம் எப்படி மேம்படும் என்பதை சம்பந்தப்பட்டவர் கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

"கிராமப்புறங்களில் சேவை செய்ய முன்வர வேண்டும்' - என மேடைக்கு மேடை கோஷங்கள் முழங்கப்படுகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த பொருளோடு இருக்க வேண்டும். இன்றைய தேவையை உணர்ந்து கிராமப் புற மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.அதைவிடுத்து "மருத்துவ மாணவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிப்ப தால், வெறுமனே திருப்தி ஏற்படலாம். அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. எனவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களோடு போராடாமல், எதார்த்தங் களை உணர்ந்து கொண்டுவரவுள்ள சட்டத்தை கைவிட வேண்டும்.


கிராமப்புற சேவையை ஊக்கப்படுத்த படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டுமே தவிர மாணவர்களை அல்ல!.


நன்றி - தினமணி

மிரட்டும் ரஜினியாய் - டிசம்பர் புகைப்பட போட்டிக்கு

நான் பாட்டுக்கு சும்மா பொழுதுபோகம சரி நாமளும் டிஜிட்டல் கேமிரா வைச்சிருக்கோம் எப்பவுமே நம்மளையே எடுத்துக்கிட்டிருக்கோமே...!? ஒரு சேஞ்சுக்கு நாம ஏன் புகைப்பட போட்டிக்கு டிரைப்பண்ணக்கூடாதுன்னு தான் ஒரு ரெண்டு போட்டியில கலந்துக்கிட்டேன்.

ஆனா பாருங்க என் நேரம் நல்லாருந்துச்சு போல நம்ம குசும்பு பிரதர் அப்ப கலந்துக்குல?!

சரி இப்ப எதாவது டிரைப்பண்ணலாம்னு ரெடியாகுறத்துக்குல்ல, இதோ தலைவரு மிரட்டுற மாதிரி,
இன்னைக்கு வந்து மிரட்டிட்டாரு....!!!

சரி அவரே ஜெயிக்கட்டும்...!

ப்ளீஸ் லைட்ட அணைங்க....!


ஒரு மணி நேரம் ஒரே ஒரு மணி நேரம் நீங்க லைட்ட ஆஃப் பண்ணுங்க ஃப்ளீஸ்!

இப்படி ஒரு கான்செப்ட்டோட கிளம்பியிருக்காங்க ஒரு நாலு பொடியன்கள்!

அதுவும் எல்லாருமே ஒரே நேரத்தில, டிசம்பர் 15 அன்னைக்கு ஒரு மணி நேரத்துக்கு லைட்ட அணைச்சிட்டு இருந்தா....!

ஏதோ நம்மளால செய்யமுடிஞ்ச விஷயமா சூடாகிக்கிட்டிருக்க உலகத்தோட சூட்ட கொஞ்சம் குறைக்கலாம்னு, இந்த பசங்க ஃபீல் பண்றாங்களாம்!

இநத நாளு பொடிப்பசங்களையும் இப்படி ஃபீல் பண்ண வைச்ச விஷயம் ஆஸ்திரேலியாவுல நடந்துச்சாம்! எர்த் ஹவர்ங்கற பேர்ல ஒரு மணி நேரம் கரண்ட் கட் பண்ணினாங்கலாம், அதுவும் அதை ஒரு பெரிய பங்ஷனாக நடத்தினாங்களாம்!

சுமாரா2.2 மில்லியன் மக்கள் சேர்ந்து, அவங்களோட ஒரு மணி நேரத்து மின் பயன்பாட்டின் வெளிப்பாடான, சுமார் 24.86 டன் கார்பன் டை ஆக்சைடு வெளிய வராம இருக்க உதவி பண்ணுனாங்களாம்!

சும்மா அந்த ஒரு மணி நேரம் கரண்ட் நிப்பாட்டுனாக்கூட நீங்க சந்தோஷமா அக்கம்பக்கத்துல பேசிக்கிட்டிருங்க குழந்தைகளோட உட்கார்ந்து விளையாடுங்கன்னுல்லாம் சொல்லி எல்லாரையும் ஃபீல் பண்ண சொல்றாங்க இந்த பொடிப்பசங்க!

ஆனா இது எல்லாம் நடக்கப்போறது நம்மூரில இல்ல மும்பையில....!

நாமளும் இதே மாதிரி செய்யுலாம்ல,- அல்ரெடி நம்ம வீட்டு பெருசுங்க செஞ்சுக்கிட்டிருக்கும் - வீட்டுல லைட்டப்போட்டுட்டு வீட்டுக்கு வெளிய வந்து நின்னுக்கிட்டு, முதல்நாளில் நடந்த மெகா நாடகங்களை அசைப்போட்டுக்கொண்டிருப்பார்கள்!

அநத ஆளுங்களுக்குகிட்ட நாம இந்த பிரச்சாரத்த கொண்டுப்போகலாம்ல.....!!!

(அட...! ஆமாம், ஒரு நாளைக்கு மெகா தொடர் பாக்காம இருந்தாலே எவ்ளோ நல்ல விஷயங்கள் தேறும்போல தெரியுதே....????!!!)

பரிசு கிடைக்காது! - இருந்தாலும் 'பூக்கள்' டிசம்பர் மாதப்போட்டிக்கு...!

ஆமாங்க ரொம்ப ஆர்வமா கலந்துக்கிட்டு,போட்டோ போட்டா...!
அது சரியில்ல, இது சரியில்லன்னு, எல்லாரும் சொல்றாங்க! (கடைசியா புலியை பார்த்து பூனை ச்சூடூப்போட்டுக்கிட்ட கதையா போயிடுச்சு!)

சரி நமக்கு இந்த லைன்னு சரிபட்டு வராது போலன்னு ஒரு முடிவுக்கு வந்திட்டேன்!

இருந்தாலும் உள்ள மனசுக்குள்ள ஒரு பட்டாம்பூச்சி மாதிரி ஆசை கிடந்து, பறந்து துடிக்குது...!

பரிசு கிடைக்காது - இருந்தாலும் "பூக்கள்" டிசம்பர் மாதப்போட்டிக்கு...!

இப்ப போறேன் ஆனா திரும்ப வருவேன்! இந்த மாசப்போட்டியில எப்பாடுபட்டாவது நான் ஜெயிக்கணும் அவ்ளோதான் :-)

தெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி - ஆண்டாள் தாமோதரன்

1967ல் குழந்தைகளின் நலனின் மீது ஆர்வம் கொண்டு சமூக சேவை உலகில் காலடி எடுத்து வைத்தவருக்கு மனதுக்கு திருப்தியளிக்கும் பணியாக இந்த சேவை அமைந்திருப்பதில் மகிழ்ச்சிதான்!

சாதரணமாக குழந்தைகள் அதுவும் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படும் சிறார்கள் அனுபவிக்கும் பணி சார்ந்த இடத்து பயங்கரங்கள் மிகக்கொடுமையானது! அதுவும் பெண் சிறார்களுக்கோ சொல்ல இயாலத அளவு உள்ளன!

அதுபோன்ற பயங்கரங்களிலிருந்து சிறார்களை மீட்டு, அவர்களது இளமை பருவம் வீணாகமலும்,வாழ்க்கையின் அடிப்படையை அமைந்துகொள்ளும் வயதில் அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் வேண்டிய ஏற்பாடுகளை செய்வதுதான் இந்த அரசு சார தனியார் சேவை அமைப்பின் முக்கிய நோக்கம்!

கொஞ்சம் நீங்களே யோசிச்சு பாருங்க! ஒரு பையனோ அல்லது பெண்ணோ சிக்னல்ல நின்னு பிச்சை எடுத்து சுமாரா 100 வரைக்கும் சம்பாதிக்கும் போது,அந்த சிறார்கள பெத்தவங்க ஒ.கே.ஒ.கே போய்க்கோடா ராசான்னுதான் சொல்வாங்க! அவங்களை புடிச்சு சம்மதிக்க வைச்சு, அது மட்டுமில்லாம அந்த சிறார்களை ஒரு காலகட்டத்துக்கு பிறகு அந்த தொழில்லேர்ந்து விடுவிச்சு,படிக்க வைக்கிறதுங்கறது ரொம்ப்ப்ப் ரொம்ப பெரிய கஷ்டமான விஷயம்தான்! அதை செஞ்சுக்கிட்டிருக்கற இந்த மனிதர்களை பற்றி நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

சுனாமி பாதிப்பின் போதும் தங்களது சேவை அமைப்பின் மூலம் பல பணிகளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் நிறைவேற்றியுள்ளனர்!

பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்கள்,அடிமைத்தொழிலில் சிறார்கள் ஈடுபடுத்தும் செயல், போன்றவற்றிலிருந்தும்.சிறார்களை சட்டப்படி விடுவித்து, சிறார்கள் தங்களின் இளம் வயது வாழ்க்கையை மிக்க மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும் அத்தனை செயல்களிலும் ஈடுபடுவதில் மிக்க மகிழ்ச்சியும், மிக்க மனத்திருப்தியோடு செய்துவருவதாக கூறும் இவரின் பணி குறித்து, உசிலம்பட்டியில் மீண்டு, வாழும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை சொல்லும் பெருமிதத்தோடு...!

டூபாயில் கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்...!
டூபாயில் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஜூமைரா பீச் ரோட்டில் ஜில்லென்று ஜொலிக்க தொடங்கி விட்டது பேருந்து நிறுத்தம்!

ஆனா பாருங்க இப்ப சீசன கூல்ல்ல்ல்ல்.....!

(டூபாய் பத்தி - எனக்கு அங்க வேலை கிடைக்காததாலத்தான் நான் துபாய் கூட டூ விட்டுட்டேன்..!)

படங்கள் - X Press

குப்பைகளின் கூடாரமாகப்போகும் இந்தியா..!


பாடாத ரேடியோக்கள் & டேப்புகள், பழைய இத்துப்போன சைக்கிள்கள்,பெரிய பெரிய மருந்துப்பாட்டில்கள், மற்றும் இன்னும் பிற உபயோகப்படுத்தப்பட்டு பின்பு, உபயோகிக்கமுடியாத நிலையை அடைந்த பொருட்களை அடைகாத்து வைத்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருக்ககூடும்!

ஒரு பிரயோசனமில்லவிட்டாலும் கூட அதை இழக்க மனமின்றி இருக்கும் மனிதர்கள்!

அப்படியே சிலரால் தூக்கி எறியப்படும் பொருட்கள் இதே மனநிலை கொண்ட மற்ற மனிதர்களால் கைப்பற்றப்பட்டு, மீட்டு கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைப்பவர்களும் உண்டு!

இதே மன நிலையில்தான், இப்போது நமது மத்திய அரசாங்கமும் செயல்பட போகின்றது!

உலகநாடுகளிலிருந்து வீணான பொருட்களை பெற்று அதைக் கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது! ஆனால் இதனால் வரும் காலத்தில் உலகிலில் இருந்து வரும் குப்பை பொருட்களின் கூடாரமாகத்தான் நம் நாடு மாறிப்போகுமே ஒழிய இதனால் வேறு பலனேதும் இல்லை! அது மட்டுமின்றி கவர்ன்மெண்ட் சொல்வது, போல 60 சதவீகிதமான பொருட்கள் மறு சுழற்சி முறையில் உபயோகிக்ககூடிய பொருட்கள்தான் எனற கான்செப்ட் ஒ.கேதான்! என்றாலும் பிரித்தெடுக்கப்படும் உபயோகிக்ககூடிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை எப்படி நாம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்போகிறோம் எனபது ஒரு பெரிய ?

ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்!

எது எப்படியோ, வரும் காலங்களில் நாட்டை குப்பையாக்குவதாக இருந்தாலும் சரி,கோபுரத்து உச்சியில கொண்டு போய் வைக்கிறதா இருந்தாலும் சரி, எல்லா முடிவும் அரசியல்வாதிகள் கையில்தானே இருக்குது…?!

வீக் END ஜொள்ளு - அமீரகத்தில்தீபிகா பட்த்கோன்

மருத்துவ மாணவர்கள் போராட்டம்?


பெரிய திரையின் பின்னால் சுற்றி,

சின்ன திரையில் எண்ணங்களை சிதறவிட்டு,

செமஸ்டர் அரக்கனின் பிடியில் சிக்கி,

பருவ கோளாறுகளில் பங்கேற்று,

இளம்வயதில் இளமை கொண்டாட்டங்களே,

வாழ்க்கையாக்கி கொண்டு,

பல

வேடிக்கை மாணவர்களை போல - நாம்

வீழ்வோ மென்று நினைத் தீரோ...!?


போராட்டம் வெற்றி பெற

வாழ்த்துக்களுடன்....!