தினமணி நாளிதழை எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு செய்திக்கட்டுரையை பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.ஆழமாக அதை இருமுறை படியுங்கள். மேலே சொன்ன விதிகளைப் பயன்படுத்தி அதை பின்நவீனத்துவக் கட்டுரையாக ஆக்குங்கள்.
'எழுபதுகளின் இறுதியில்தான் பிராய்லர் கோழிகளை வளர்த்தல் பரவலாகியது. அரசின் ஊக்குவித்தலுடன் நாமக்கல் ஈரோடு வட்டாரங்களில் கோழிப்பண்ணை வைப்பது பெருந்தொழிலாக வளர்ந்தது. அன்றுவரை விவசாயத்தின் ஒரு பகுதியாக இருந்த கோழிவளர்த்தல் என்பது ஒரு தொழிற்சாலை உற்பத்தியாக மாறியது. இதன் விளைவாக கோழியிறைச்சி மற்றும் முட்டை விலை ஒப்புநோக்க மலிவாகியது. தமிழர்கள் ஞாயிறுதோறும் கோழியிறைச்சி உண்ண ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் இது வருடத்திற்கு ஒருமுறை விசேஷ தினங்களில்தான் என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். கோழிவளர்த்தல் தொழிலாக மாறி லாப நோக்கம் கொண்டபோது சுகாதார விதிகள் புறக்கணிக்கப்பட்டு தோல்தொழிற்சாலைக் கழிவுகளை கோழிகளுக்குக் கொடுத்து அவற்றை பருக்க வைத்தல், ஊக்க ஊசிகளைப் போடுதல் போன்ற முறைகேடுகள் நிகழ ஆரம்பித்தன. இதன் மூலம் சமூக ஆரோக்கியம் பாதிப்படைந்தது. அதிக புரோட்டீன் உற்பத்திமூலம் மக்கள் ஆரோக்கியம் மேம்படுதல் என்ற நிலைக்கு நேர் மாறான நிலை இது என்பதைக் காணலாம்."
இந்தப்பத்தியை பின்நவீனத்துவக் கட்டுரையின் ஒற்றை வரியாக மாற்ற ஒரே வழிதான் உள்ளது. 'எங்கிருந்தாவது தொடங்கி எப்படியோ கொண்டுபோய் எங்கோ முடித்தல்' என அதை அறிஞர்கள் வகுத்திருக்கிறார்கள். பார்ப்போம்.
"கோழியிறைச்சி மற்றும் முட்டையின் விலையியலில் ஏற்பட்ட மலிவியல் மாற்றமானது எழுபதுகளின் இறுதிக்காலகட்டத்தில் நாமக்கல் மற்றும் ஈரோடு பகுதியில் கோழிப்பண்ணையியலில் ஏற்பட்ட தொழில்மயமாதல் மற்றும் பெருந்தொழிலாக்கம் மற்றும் வேளாண்மையியலாக்க நீக்கம் முதலிய பண்புக்கூறேற்றம் மற்றும் அரசுமுறை சார் ஊக்குவித்தலடிபப்டையின் நிகழ்முறை விளைவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான ஒரு தலைகீழாக்கமாக நிகழ்ந்த காரணத்தினால் தொழிற்சாலைத்தன்மையும் உற்பத்தியியலில் ஒட்டுமொத்தத்தமயமாதலும் நிகழ்ந்து உருவான வேளாண்மை மற்றும் பெருந்தொழில் சார் ஈரடித்தலின் விளைவாக நிகழ்ந்த நுண்குடிமை வளார்ச்சிப்போக்கு என்று சொல்லும்போது அதில் இயல்பாக குடியேறிய தொழிலியல் இலாபநோக்கின் அதீதப்பெருக்கம் காரணமாக சுகாதாரவியல் விதிகளின் புறக்கணிப்பாக்கம் நிகழ்ந்து அதன் ஊடுவிளைவாகவும் இடுபொருளியக்கமாகவும் தோல்தொழிச்சாலைக் கழிவுகளையும் [கழிவுகள் என்பவை உற்பத்தியின் பேரளவான பண்பியல் கூறுகளினால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட பொருள்நிலைகளே என்று லக்கான் சொல்வதை இங்கே கணக்கில் கொள்ளவேண்டும்] மற்றும் ஊக்கமருந்துகளையும் [ ஊக்க மருந்துகள் செயற்கையாக உருவாக்கப்படும் விரிவாக்க முயற்சிகள் என்பதுடன் அவை எந்த சூழலில் எவற்றை ஊக்குவிக்க அளிக்கப்படுகின்றன, அவற்றின் உள்ளார்ந்த அரசியல் என்ன என்பதையும் ஊக்குவிக்கப்படும் கூறுகள் எவையெவற்றை அடிப்படுத்தவும் மறைக்கவும் காரணமாக உள்ளன என்பதையும் கருத்தில் கொண்டு அளிக்கப்படும் விரிவான நுண்ணாய்வுக்கான தரவுகள் நம் பண்பாட்டுத்தளத்தில் உள்ளுறைந்துள்ளன என்ற விஷயத்தை இங்கே விரிவாக விவாதிக்க இடமில்லையாதலால் குறிப்புணர்த்தியாகவேண்டும்] கோழிகளுக்கு அளிப்பதனூடாக அவற்றை அதிகளவிலான புரோட்டீன் உற்பத்திக்கான கருவிகளாக ஆக்கி அவற்றின் மூலம் நுகர்வியலின் அடித்தளமாக உள்ள சுவைமையில் பாரதூரமான விளைவுகளை உருவாக்கி பொதுச்சுகாதாரத்தை சீரழிக்கும்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியதாக உள்ள கருத்தமைவென்பது அதிகபுரோட்டீன் அதிக ஆரோக்கியத்தை உருவாக்குமென்ன்ற செவ்வியல் நிலைபாடுகளின் முழுமறுப்பாக்கமும் மாற்றுக்கூற்றுகளின் தோற்றவியலுமாகும் என்ற நிலையில்….."
இவ்வண்ணம் நான்கு கட்டுரைகளை எழுதிப்பார்த்தபிறகு நீங்களே சுயமாக கட்டுரைகளை எழுதி சிற்றிதழ்களுக்கு அனுப்பலாம். அவை அச்சிடப்படாவிட்டால் சுயமாக இணையத்தில் 'கசந்தவனின் அசைவுகள்' அல்லது 'கூறிலியின் கூற்று' என்ற பேரில் வலைப்பூ தொடங்கி அவற்றை வரலாற்றில் ஏற்றலாம். தொடர்ந்து இப்படி கட்டுரை எழுத எழுத பின்நவீனத்துவம் என்றால் என்ன என்று உங்களுக்குப் புரிந்து ஒருமாதிரி சமநிலை கைவரும்போது நிறுத்திக் கொள்வீர்கள்.
நன்றி - ஜெயமோகன்
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற சுட்டி
பின்நவீனத்துவ கட்டுரைகள் எழுதுவது எப்படி? - ஜெயமோகன்
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: பத்திரிக்கை
பாருக்குள்ளே நல்ல நாடு - தினமணியிலிருந்து :-)
பிராட்வே பஸ் நிலையம் செல்வதற்காகக் கடற்கரைச் சாலையில் காத்திருந்தேன். ""குட்டிப் பிசாசே, குட்டிப் பிசாசே'' என்ற தேவ கானம் கேட்டு திகைத்தேன். குரல் வந்த திசை யைப் பார்த்தால் ஆகாய மார்க்கம் என்று தெரிந்தது.
யட்சர்களா, கின்னரர்களா, கந்தர்வர்களா, தேவர்களா என்று அறிய பஸ் ஸ்டாப்பிலிருந்து வெளியே தலையைநிமிர்த்தி அண்ணாந்து பார்த்தால், மாநகர பஸ் கூரையில் "பாட்டும் பரதமும்' சேர்ந்த கலைவிருந்து.
மழையில் நனைந்த குருவிகளைப் போல பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் அவரவர் சீட்டில் ஒடுங்கியபடி இருந்தனர். நொடியில் புரிந்துவிட்டது, ஏதோ ஒரு கல்லூரியின் மாணவர்கள் தாங்கள் அன்றாடம் பயணம் செய்யும் பஸ்ஸýக்கும் அதன் டிரைவர், கண்டக்டர்களுக்கும் நன்றி தெரிவிக்க ""பஸ்-டே'' (நல்ல தமிழ்ச் சொல்!) கொண்டாடிக் கொண் டிருக்கிறார்கள் என்று.
அந்த நேரம் பார்த்து இரும்பு உலக்கையை காலில் போட்டது போல ஒரு வலி, யாரோ ஒரு ""முகம்மது அலி'' காலின் மீதே ஏறி துவைத்தார் போல இருந்தது. ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்தில் ஒரு ஆப்பிரிக்க வாலி பன். ""ஐயாம் ஸாரி' என்று சொல்லியபடியே என் கையைப் பிடித்து குலுக்கினான். "இட்ஸ் ஆல்ரைட்' என்று தமிழில் பதில் சொல்லும் போதே, "காலில் மிதித்ததே பரவாயில்லை, கை என்ன பாடுபடுகிறது' என்று நினைத்துக் கொண்டேன்.
அந்த பஸ்ஸயே அவனும் பார்த்துவிட்டு, "இது என்ன?' என்று என்னிடம் கேட்டான்.
"தமிழன் எப்போதும் நன்றி உணர்ச்சியால் கொப்பளிப்பவன். தன்னை ஆண்டு முழுவதும் சுமந்து சென்ற பஸ்க்கும் அதை இயக்கியவர்களுக்கும் மாணவர்கள், தங்க ளுக்குத் தெரிந்த வழியில் நன்றி தெரிவிக்கின் றனர்' என்றேன் பெருமிதமாக.
"அப்படியானால் பஸ்ஸில் செல்லும் மற்றவர்களுக்கெல்லாம் அந்த நன்றி உணர்ச்சி இல்லையா?' என்று எடக்காகக் கேட்டான் அந்த ஆப்பிரிக்கன்.
"இது முதலாண்டு முடிவு, இது இரண்டாம் ஆண்டு, இது கடைசி ஆண்டு என்று மாணவர்களுக்கு திட்டவட்டமாகத் தெரிகிறது கொண்டாடுகிறார்கள்; மற்றவர்கள் இன்னும் எத்தனைநாள் இந்த பஸ் பிரயாணமோ என்று வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு போவதால் கொண்டாட நேரம் இல்லை' என்று விளக்கினேன்.
"நான் இன்னொன்றையும் கவனித்தேன், மாநகர பஸ்களில் கல்லூரி மாணவர்கள் ஓடி வந்து ஏறுகிறார்கள், படிக்கட்டில் தொற்றுகிறார்கள், மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்கள், இதெல்லாம் உங்கள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் கண்களில் படுவதே இல்லையா?' என்று சற்று எகத்தாளமாகவே கேட்டான்.
"தமிழ் இனத்துக்கு ஒரு ஆபத்து என்றால் ஒரு நாளைக்கு 3 வேளையும் உயிரை விடக்கூடிய ""டாக்டர் தலைவர்கள்'' இங்கே நிறைய இருக்கிறார்கள்.
உலகத்திலேயே வேறு எங்கும் பார்த்திராத அளவுக்கு நிர்வாகத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தக்கூடிய தேர்ந்த அதிகாரிகள் இருக்கி றார்கள்; அவர்கள் இதையெல்லாம் சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றா நினைக்கிறாய்?' என்று கோபமாகக் கேட்டேன்.
"நீ நினைக்கிற மாதிரி இதெல்லாம் தவறான காரியம் என்றால் பகுத்தறிவாளர்கள், பொதுவுடைமைவாதிகள், ம.க.இ.க.வினர், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக நீதிக்கான போர் வாள்கள் என்று எல்லோருமே அணியாகத் திரண்டு பஸ் கூரையிலேயே தனி மேடை அமைத்து எதிர்ப்புக் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?
"தமிழனின் இலக்கிய வரலாறு உனக்குத் தெரியாதா? அந்தக் காலத்தில் தமிழன், போர் எங்கே என்று திணவெடுத்த தோளோடு அலைவான். போரே இல்லாமல் ஆறு மாதம் "லே-ஆஃப்' என்றால் மலை முகட்டிலிருந்து கீழே குதித்து உயிரை விடுவான்.
எந்த வயதினனாய் இருந்தாலும் தலைவியைத் தேடி காதல் வயப்பட்டு கவிதையோடு செல்வான். எந்தத் தலைவியும் கிடைக்காவிட்டால் மடல் ஏறி மடிவான்' என்று பழைய வரலாறை அவனுக்குத் தெரிவித்தேன்.
அப்படியானால், தமிழர்களுக்கு தற்கொலை உணர்வு ஆரம்பகாலத்திலிருந்தே இருந்தது என்கிறீர்களா? அதன் வெளிப்பாடு தான் இந்த புட்ஃபோர்டு டிராவலா?' என்று கேட்டு எரிச்சல் ஊட்டினான்.
அவசரப்பட்டு நீயாக எதையாவது கற்பனை செய்யாதே அப்பா... ஸ்டாப்பிங்கிலிருந்து பஸ் புறப்பட்ட பிறகு வேகமா ஓடி வந்து ஏறும்போது, முரட்டுக் காளையை அடக்கிய திருப்தி எங்கள் இளைஞர்களுக் குக் கிடைக்கிறது. அப்படிப்பட்ட இளைஞர் களைத்தான் பஸ்ஸில் இடது ஓரமாக உட்கா ரும் காலேஜ் பெண்கள் விரும்புகிறார்கள்.
காலையில் காலேஜுக்குப் போகும்போதே பழந்தமிழர் வாழ்க்கையின் காதலும் வீரமும் கலந்தே "டிரிப்' அடிக்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் பேசறியே' என்று கோபமாகவே கேட்டேன்.
உங்க நாட்ல இதெல்லாம் கிடையாதா? என்றேன்.
"இல்லிங்க' என்றான்.
புட் ஃபோர்டு டிராவல், இலவச பஸ் பாஸ், ஸ்டாப்பிங்கைவிட்டு தள்ளி நிறுத்தறது, பீக் அவர்ல தாழ்தள சொகுசுப் பேருந்தை அனுப்பி பர்ஸ ஓட்டையாக்கிறதெல்லாம் எங்க நாட்லே இல்லை... ஏன்னா, எங்க நாட்ல பஸ்ஸ இல்லே, எல்லாமே நடை தான்' என்றான் அந்த வாலிபன்.
"அட போய்யா பரதேசி, தமிழ்நாட்டைப் பற்றி பேச வந்துட்டே' என்று ஆத்திரம் தீர திட்டிவிட்டு விடைபெற்றேன்.
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: தினமணி, பத்திரிக்கை
அசத்தும் தினமணி - சென்னை புத்தக கண்காட்சி 2008
2008ல் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி, மழையோடு சேர்ந்து ஆரம்பித்த புத்தக கண்காட்சி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு!
மிக்க ஆர்வத்தோடு வந்து செல்லும் கூட்டம் போட்டிபோட்டுக்கொண்டு புத்தக கண்காட்சிக்காகவே பல புதிய படைப்புக்களும், வெளியாகிக்கொண்டிருக்கின்றன!
சீசன் டைப்பு புத்தகங்களாக முன்பிருந்த வாஸ்து சமாச்சாரங்கள் ஒதுங்கிக்கொள்ள, தன்னம்பிக்கை,சுய முன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களின் தேடல்கள்தான் இந்த ஆண்டின் ஸ்பெஷல் (பெரும்பாலும் எல்லா வருடங்களுமே இதற்கு மவுசு இருக்கத்தானே செய்கிறது!)
இடதுசாரி கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்களின் மீது இளைய தலைமுறை புத்தக ஆர்வலர்களின் பார்வையை திருப்பியுள்ளது இந்த வருட புத்தக கண்காட்சி!
வழக்கம்போலவே இந்த ஆண்டும் கண்காட்சி பற்றிய ஒரு பக்க அளவிலான செய்திகள், கண்காசட்சிக்கு வரும் பிரபலங்களின் பேட்டிகள் என அசத்திக்கொண்டிருக்கும் தினமணியிலிருந்து...!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: பத்திரிக்கை
சூப்பரான விஷயம் "அவள்" இடமிருந்து
காற்றலைகளோட கபடியாட ஆரம்பிச்சுட்டாங்க திருச்சி ஹோலிக்ராஸ் கல்லூரி மாணவிகள். அதாங்க.. எஃப்.எம். ரேடியோ ஒலிபரப்புல படு பிஸியா கலக்கிட்டிருக்காங்க. புரொபசர் ஷெர்லி தீபக்கோட மேற்-பார்வை-யில இந்தக் களத்துல இறங்கியிருக்குறவங்க, அந்த காலேஜோட விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகள்
காலை 6லிருந்து இருந்து 10 மணிவரை, மாலை 4லிருந்துல இருந்து 8 மணிவரைனு நிகழ்ச்சிகளை தயாரிச்சு திருச்சியில 20 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் காதுல ஹனி ஊத்துறாங்க!
நிகழ்ச்சி வடிவமைப்பு, பதிவு, ஒலிபரப்புனு எல்லாமே அம்மணிகள் அட்மினிஸ்ட்ரேஷன்தான். சினிமா பாடல்களுக்கு ‘நோ’, அவங்களே இசையமைச்ச பாடல்களைப் போட்டு ஆடி(யோ)யன்ஸை அசர வைக்கிறாங்க. பார்வை இழந்தோர்க்கான பிரத்தியேக நிகழ்ச்சி, சமூக விழிப்பு உணர்வு விளம்பரங்கள்னு உபயோகமானதையெல்லாம் திகட்டாமலும் தர்றது இவங்க திறமையைத்தான் காட்டுது.இன்னொரு முக்கியமான விஷயம்.. டெல்லியில இருந்து ‘டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி’ங்கிற அமைப்பு இவங்ககிட்ட 16 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து, பெண்கள் மத்தியில நோய்க்கான விழிப்பு உணர்வு ஏற்படுத்துறது தொடர்பான நிகழ்ச்சிகளை தயாரிக்கச் சொல்லி, ஒப்பந்தம் போட்டிருக்காங்களாம்!
நன்றி - அவள் விகடன்
அட...! உண்மையிலேயே ரொம்ப சூப்பரான விஷயம்தானே..!
ஏற்கனவே கம்யூனிட்டி ரேடியோன்னு ஒரு திட்டத்த அமல்படுத்த அரசு ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது இது போன்ற விஷயங்களில், துறை சார்ந்த மக்கள்ஸ் களத்தில இறங்குனா நல்லாத்தானே போகும்....!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: பத்திரிக்கை
மருத்துவ மாணவர்கள் போராட்டம் - டாக்டர்.கிருஷ்ணசாமி.
அப்போராட்டம் தமிழகத்தில் பல கட்டங் களை நோக்கி நகர்ந்தது. சாகும்வரை பட்டினிப்போர் என்ற வருத்தப்படக்கூடிய நிலைக் கும் மாணவர்கள் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். மருத்துவ மாணவர்களின் போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது ஆறுதலையும் ஆதரவையும் அளித்தனர்.இறுதியாக மருத்துவ மாணவர்களின் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.
மூன்று வாரமாக தொடர்ந்த இப்போராட்டம் தனிப்பட்ட எந்த அரசியல் கட்சியின் வழிகாட்டுதலுமின்றி மிக மிக அமைதியாக வும் நேர்த்தியாகவும் நடந்து முடிந்தது.
"அமைதி வழி' ஒன்றே என்பதாலோ என்னவோ? அவர்களின் போராட்டத்தால் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படவில்லை.
ஐந்தரை ஆண்டுகாலக் கல்வியுடன் ஓராண்டுகால சேவையை இணைப்பது எந்தவிதத் தில் நியாயம்? கல்விக்கும், பணிக்கும், சேவைக்கும் வித்தி யாசம் உண்டா இல்லையா? கல்வி என்றால் கற்பது மட்டுமே.
கல்வியோடு பணியையும் சேவையையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்க முடியும்? தற்பொழுது நான்கரை ஆண்டுகள் முழுக்க படிப்பு மட்டுமே. அதன் முடிவில் தேர்வு. தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு காலம் சுழற்சி முறையில் அனைத்துத்துறை மருத்துவப் பிரிவுகளிலும் பயிற்சி. அதில் மூன்று மாதம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிகிறார்கள். அதன்பின் பட்டம் பெறவும், மருத்துவராகப் பணியாற்றவும் தகுதி பெற்றுவிடுகிறார்கள்.
தற்பொழுது கூடுதலாக ஓராண்டு கிராமப் புற மருத்துவமனையில் பணியாற்றினால் மட்டுமே "பட்டம்' பெறத் தகுதியுடையவர்களாக்குவது எந்த விதத்தில் மாணவர்களுக்கு அல்லது பொது மக்களுக்குப் பலனளிக்கப்போகிறது என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்க வேண்டும்.
அப்பாவி கிராம மக்க ளுக்கு கத்துக்குட்டி மாணவர்க ளின் சேவையைத்தான் மத்திய அரசு அளிக்க இயலுமா? ஐந்தரை ஆண்டுகள் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்து விட்டு வெறுமனே ரூ. 8,000-க்கு ஓராண்டு பணிபுரிய இயலுமா?
11 லட்சம் கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் பலம் பொருந்திய இந்தியாவில் உள்ள கோடிக்க ணக்கான கிராமவாசிகளுக்கு பட்டம் பெற்ற மருத்துவர்களின் சேவையைப் பயன்படுத்த முடியாதா? அப்பாவி மருத்துவ மாணவர்க ளின் உழைப்பை ஓராண்டிற்குச் சுரண்டுவது தான் இந்திய அரசின் லட்சியமா?
கிராமப்புற மருத்துவமனையில் ஓராண்டுகாலம் தங்கி எவ்விதமான சிகிச்சை அளிக்க இய லும்? எனவே ஓராண்டு காலம் நீடிப்பது என் பது படிப்பா? பணியா? சேவையா? என்று விளக்க வேண்டும்.
படிப்பு என்றால் கிராமப்புற மருத்துவமனைகளில் இவர்களுக்கு யார், என்ன பாடம் சொல்லித்தரப் போகிறார்கள் என்பது விளக் கப்பட வேண்டும். பயிற்சி என்றால் ஏற்கெ னவே "ஒரு வருடப் பயிற்சியே போதுமானதே'. மேற்கொண்டு பயிற்சி என்றால் நவீன சிகிச்சை யில்தானே பயிற்சி பெற வேண்டும்? சேவை என்றால் இளம் பிஞ்சுக ளிடம் எப்படி கட்டாய சேவை யைப் பெறுவது? மேலும் மனமுவந்து செய்வதுதானே சேவை!
.
பணி என்றால் ஐந்தரை ஆண்டுகள் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள், மத்திய அரசுப்பணிக்குத் தயாராக உள்ள நிலையில் ஏன் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக அவர்களை நிரந்தர அரசு வேலைக ளில் அமர்த்தக்கூடாது.
அதில் என்ன தயக்கம்? ஆண்டு முழுவதுமே பனிமழை பொழியும் மலைப்பகுதிகளில் உள்ள ராணுவத்தில் கூட மருத்துவர்கள் பணியாற்ற முற்படும்பொழுது கிராமப்புறங்களில் நிரந்தரப் பணி கொடுத்தால் அதைச் செய்ய எந்த மருத்துவர் களும் தயக்கம் காட்டமாட்டார்கள்.
கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையைப் போக்க அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களி லும் மத்திய அரசே மருத்துவர்களை நியமிக்க எவ்வித முயற்சியும் இதுவரை செய்யப்படவில்லை. அதுபோன்ற எந்த முயற்சியையும் மத்திய சுகாதாரத்துறை எடுக்கவில்லை.
மாணவர்களையே ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியில் அமர்த்துவது பல்லாயிரக்கணக்கான மாண வர்களின் உழைப்பை ஆண்டுதோறும் சம்ப ளம் கொடுக்காமலே சுரண்டுவதற்குச் சமம்.
இது உண்மையில் "மனித உரிமை மீறலும்' அரை கொத்தடிமைத்தனமுமாகும். "கல்வி கொடுக்க வேண்டிய காலத்தில் நல்ல கல்வி, வேலை கொடுக்க வேண்டிய நேரத்தில் நிரந்தரமான வேலை' என இரண்டையும் அரசு உத் தரவாதம் செய்யாமல், கல்வியோடு பணியையும் சேவையையும் போட்டுக் குழப்பக்கூடாது''.
இன்றைய கிராமங்களில் மக்களுக்கு அளிக் கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சையும் மருத்துவ வசதிகளும் வெகுவாக மாறிவிட் டன.
ஒரு நோயாளியின் உயிரைக் காப்பதில் பட்டம் பெற்ற பொது மருத்துவர், உயிர் காக்கும் மருந்துகள், உரிய நவீன பரிசோதனைக்கூ டம், வாகனங்கள், ஆபரேஷன் தியேட்டர் கள் என பல்வேறு அம்சங்கள் அடங்கியுள் ளன. அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கிராம மருத்துவமனைகளை மேம்படுத்த எண்ணாமல், கூடுதலாக "ஒரு மாணவரை' நியமிப்பதால் "கிராம மக்களின்' சுகாதாரம் எப்படி மேம்படும் என்பதை சம்பந்தப்பட்டவர் கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.
"கிராமப்புறங்களில் சேவை செய்ய முன்வர வேண்டும்' - என மேடைக்கு மேடை கோஷங்கள் முழங்கப்படுகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த பொருளோடு இருக்க வேண்டும். இன்றைய தேவையை உணர்ந்து கிராமப் புற மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட வேண்டும். தரம் உயர்த்தப்பட வேண்டும். முதுகலை மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்.அதைவிடுத்து "மருத்துவ மாணவர்களைக் கிராமப்புற மருத்துவமனைகளில் நியமிப்ப தால், வெறுமனே திருப்தி ஏற்படலாம். அடிப்படை மாற்றம் எதுவும் ஏற்படாது. எனவே மத்திய, மாநில அரசுகள் மருத்துவ மாணவர்களோடு போராடாமல், எதார்த்தங் களை உணர்ந்து கொண்டுவரவுள்ள சட்டத்தை கைவிட வேண்டும்.
கிராமப்புற சேவையை ஊக்கப்படுத்த படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும் நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டுமே தவிர மாணவர்களை அல்ல!.
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: சமூகம், பத்திரிக்கை
லுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 2)
கடைசி பக்கத்துக்கு முன்பக்கத்துல நாலு காலம் விட்டு சினிமா,டிவி,மற்றும் மிஸ்லேனியஸ் மேட்டரகள போட்டு நிரப்பி,கடைசி பக்கத்துலதான் கமர்சியல் விஷயங்களான (புக் முழுசும் படிச்சி வெளிய வர்றவன் கொஞ்ச நாள்ல அரசியல் பித்தோ அல்லது விமர்சன் குளறுபடிகளோ அல்லது வித்தியாசமான தமிழை பழக ஆரம்பிக்காமலோ இருக்க..) கொஞ்சூண்டு பாலிவுட் ஃபிகர்களின் படங்களுடன் மங்களம்!
பெரும்பாலும் புலனாய்வு ரீதியிலான அரசியல் கட்டுரைகளும்,ஹாட் டாபிக்கின் அஸ்திவாரம் வரை சென்று,செய்தி சேகரிக்கும் விதமும் மிகப்பிரபலமானது.
வித்தியாசமான கோணங்களில் செய்தி சேகரித்தலும் அவ்வப்போது உண்டு!
எனக்கு நன்றாக ஞாபகத்தில் உள்ள விஷயம் உலககோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் பெங்களூரில் மோதிக்கொண்ட நாளில் இந்தியா டுடே பத்திரிக்கையாளர் பாகிஸ்தானில், ஒரு ஊரில் அனைவரும் டிவியில் அந்த போட்டியினை கண்டு ரசித்துக்கொண்டிருந்ததை பற்றி எழுதியிருந்தார் ஒரு கட்டத்தில் அமீர் சோகைல் பிரசாத்தை பார்த்து எதோ சொல்ல, அடுத்த பந்தில் அவர் அவுட்டாகி வெளியேறுவார்! இந்தியாவில் பிரசாத்தின் சாதனையாக மகிழ்ந்த, அந்த நேரத்தில் பாகிஸ்தானில் அமீர் சோகைல் பணம் வாங்கிக்கொண்டு அவுட்டாகி செல்வதாக் கூறியதாக, அந்த நிருபர் எழுதியிருந்தார்!
அதுபோலவே ஊருக்கு போன போது “நல்ல மரியாதை” கிடைத்தது அமீர் சோகைலுக்கு!
அமைதிப்படை வெளியேறியது சம்பந்தமான கட்டுரைகள் இலங்கை அகதிகள், ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தமான புலனாய்வு கட்டுரைகள் அது பிளான் பண்ணியதற்கான காரணங்கள் சம்பவங்கள், திமுக லிங்க் செய்யும் விஷயங்கள் மற்றும் தற்கொலை செய்துகொண்ட சிவராசன் டைரி மேட்டர்கள் பெரிய பரபரப்பை உண்டாக்கின!
பாகிஸ்தானில் இப்ப வந்திறங்கிய பெனசிரின் அப்போதைய அராஜக ஆட்சி பற்றியவை, அவ்வப்போது வெளிவரும் பாகிஸ்தான் இந்தியா பற்றிய ஆய்வுக்கட்டுரைகள்! உலக நாடுகளில் நடைபெறும் வரலாற்று சம்பவங்கள் மண்டல் கமிஷன் பற்றிய ஆய்வுக்கட்ரைகள் (அந்த தீ பற்றி எரியும் மனிதன், புகைப்படம்!மறக்க முடியுமா?)
ஒரு நேரத்தில் செக்ஸ் சம்பந்தமான கட்டுரைகள்,
ஒரு நேரத்தில் விடுதலைப்புலிகள் இந்தியா குறிப்பாக தமிழகம்
ஒரு நேரத்தில் ஜெயின் கமிஷன்
ஒரு நேரத்தில், சந்திராசுவாமி
என. இன்னும் காரம் சுவை குறையாமல் போய்க்கிட்டே இருப்பது இந்தியா டுடேவின் சாதனையா அல்லது இந்தியாவின் சாதனையா..?!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், நினைவுகளில்.., பத்திரிக்கை
லுக் தி புக் – இந்தியா டுடே (பாகம் 1)
நாளைக்கு இந்தியா அப்படியாகப்போகுது, இப்படியாகப்போகுதுன்னு, பில்ட் அப் கொடுக்கறதுக்கா என்னோட ஐடியா தானம் பண்ற மேட்டரு இல்லைங்க இது..!
நான் முதன்முதலா படிச்ச (ரொம்ப கஷ்டப்பட்டு) அரசியல் சம்பந்தப்பட்ட மாத இதழ் பின்பு வார இதழாக மாறிய இந்தியா டுடே!
இந்த விஷய்த்தில, எனக்கு வாசந்தி, மாலன், ஞாநி சில நேரங்களில் திருமாவளவன். எங்க ஊரு மணி சங்கர் இப்படி பல பேரோட அரசியல் பற்றிய கண்ணோட்டங்களில் நான் கண்ணை விரிச்சு, வைச்சி ரொம்ப நேரம் யோசிச்சி யோசிச்சி படிச்ச விஷய்ங்கள்!
(இத படிச்சா அறிவுஜீவிகளாகிடலாமுனு யாரோ சொன்னத நம்பி நானும் டிரைப்பண்ணுனேன்?)
அட்டை டூ அட்டை அழகிய வண்ணப்ப்டங்களை தாங்கி வந்த இந்தியா டுடே பல சுவர் விளம்பர ஒவியர்களின் மாடலாகவும் இருந்ததை, நான் நேரிலேயே, கண்டுள்ளேன் இதுல மட்டும்தான் தலைவர்களின் போட்டோக்கள் அதுவும் வித்தியாசமான கோணத்தில் நாம் காணமுடியும்! அதுவும் வழவழப்பான பேப்பரிலென்றால எத்தனைப்பேரின் வீடுகளில் இன்னும் அந்த பேப்பரில் தலைவர்கள்,நடிகர்கள்,போட்டோக்களாக சிரித்துக்கொண்டிருக்கிறார்களோ!
தமிழ்நாட்டில் எந்த பத்திரிக்கையால் சர்ச்சை அதிகமாகிறது, அதிகமாக்கப்படுகிறதுன்னு,ஒரு சர்வே போட்டா முதலில் முண்டியடித்து வந்து நிற்கும் இந்தியா டுடே அவ்வ்ளோ சர்ச்சைகள்!
கை வைக்காத கான்டிரவர்ஷியல் சப்ஜெக்ட்டே கிடையாதுங்கற நிலைமை இருக்கும்போது, கூட சும்மா ஒரு சின்னப்பொறியை கிளப்புறமாதிரி ஒரு மேட்டர போட்டுட்டு, அவங்க பாட்டுக்கு அடுத்த தீப்பொறி தேடி போகும்போது, அங்க ஏற்கனவே பத்த வைச்சது கொழுந்துவிட்டு எறிஞ்சுக்கிட்டு இருக்கும்!
அரசியல் கட்டுரைகள் ஐந்திலிருந்து ஆறுபக்கங்களில் அதுமட்டுமல்லாமல் சில விஷயங்கள் பெட்டிகளிலும், சில சர்வே டைப்பாகவும் கூட இருக்கும் (எனக்கு தெரிஞ்சு இந்தியா டுடேதான் இந்த சர்வே போடறது, பர்சன்டேஜ் டையகிராம் போடறத ஆரம்பிச்ச பத்திரிக்கைன்னு நினைக்கிறேன்!)
போட்டோ செய்திகள், திரையுலக பிரபலங்களின் அரசியல் சம்பந்தமான கருத்துக்கள்,அப்புறம் முக்கியமான கார்ட்டூன்கள் இவங்க கார்ட்டூன்கள் மட்டுமல்லாம இரவலா வாங்கின கார்ட்டூன்கள்..!
அப்புறம் வாசகர்களில் அரசியல் சம்பந்தமான கருத்துகளை சொல்ல வாசகர் கடிதம்,புத்தக மதிப்புரைகள்னு அசத்தலாத்தான் இருக்கும்!
தொடரும்...
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், நினைவுகளில்.., பத்திரிக்கை
