சென்னை புத்தக கண்காட்சி - 2008

வருடா வருடம் ஜனவரி மாதத்தில் பெரும் கொண்டாட்டமான ஒரு திருவிழா போன்று நடைப்பெறும், சென்னை புத்தக கண்காட்சி 2008ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 4 -வெள்ளிகிழமை தொடங்கி சுமார் 14 நாட்கள் 17 நிறைவுப்பெறும் வகையிலான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து வந்தாலும் இதுவரையிலும் அந்தளவுக்கு ஊடகங்களில், ஊக்கம் அளிக்கும் வகையிலான, செய்திகள் ஏதும் காணப்படவில்லை இந்த எண்ணங்கள் தவிர

சில வருடங்களுக்கு முன்பு நான் சென்று சில புத்தகங்களை பெற்றதும், சில கடைகளுக்கு சென்றதும் சில கடைகளை கண்டதும், இன்றும் விழிகளில் நிழலாடுகின்றது! இந்த முறையும் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மனதுக்குள் நம்பிக்கை வைத்துள்ளேன்!

இதே போன்றே மிகுந்த நம்பிக்கையோடு தமிழக முதல்வர் அவர்கள் சென்ற 2007 புத்தக கண்காட்சியின் போது அறிவித்திருந்த புத்தக் கண்காட்சிக்கென நிரந்தர இடம் பற்றிய நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன, என்று இன்னும் கூட தெரியவில்லை (சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்...?!)

இந்த வருடமும் மக்களின் நல்வரவேற்புடனும்,புத்தக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையிலும் கண்காட்சி அமையும் என்ற எதிர்பார்ப்போடு...!

படங்கள் நன்றி :- திண்ணை & தமிழ்நாடு அரசு

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஆம் புத்தகப்பிரியர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு இது.. ஆனால் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் இதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பஜ்ஜியும் பாப்கானும் வாங்கி உண்டுச்செல்வது தான். ஒரு தேடலோடு வருபவர்கள் மிகவும் குறைவாகவே உண்டு

said...

இதே போன்றே மிகுந்த நம்பிக்கையோடு தமிழக முதல்வர் அவர்கள் சென்ற 2007 புத்தக கண்காட்சியின் போது அறிவித்திருந்த புத்தக் கண்காட்சிக்கென நிரந்தர இடம் பற்றிய நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன, என்று இன்னும் கூட தெரியவில்லை ///

இதை இத்தனை நாட்களா நினைவு வைத்து இருக்கும் உங்களை ஏன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது?

said...

///கிருத்திகா said...
ஆம் புத்தகப்பிரியர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வு இது.. ஆனால் மிகப்பெரும் சோகம் என்னவென்றால் இதற்கும் மக்கள் கூட்டம் கூட்டமாய் வந்து பஜ்ஜியும் பாப்கானும் வாங்கி உண்டுச்செல்வது///

நிச்சயம் அப்படி இல்லை வருகின்ற பலரும் குறைந்த பட்சம் ஒரு புத்தகமாவது வாங்காமல் வெளியே வருவது இல்லை! ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு வாங்க போகலாம்:))) தெம்பாக:)

said...

//குசும்பன் said...
இதை இத்தனை நாட்களா நினைவு வைத்து இருக்கும் உங்களை ஏன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது?//


நானே ரொம்ப ஆசையா ஊருக்கு போக காத்துக்கிட்டு இருக்கும் போது ஏன் நண்பா இப்படி பீதியை கிளப்புறீங்க :(

said...

////குசும்பன் said...
இதை இத்தனை நாட்களா நினைவு வைத்து இருக்கும் உங்களை ஏன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கூடாது?//

குசும்பன், :)))

said...

மாம்ஸ்.. எனக்கு கூட எங்க ஊரில் சில வருடங்களுக்கு முன்னாடி நடந்த புத்தக கண்காட்சி நினைவு வருது,..

நல்ல நல்ல புத்தகமெல்லாம் மலிவு விலையில...
மாணவர்கள்,கல்லூரி இளைஞர்கள்ன்னு எல்லாத்தரப்பு மக்களும் ஆர்வமா வாங்கனாங்க..

புத்தக கண்காட்சி உண்மையிலேயே பயனுள்ள விசயம் தான்..