குசேலன் - தலைவரு படம் பார்த்துட்டேன்ல :))


வாரந்திர வியாழன் பிரச்சனைகள் பனி விலகிய பாதையாக்கி தந்து மதியம் முதல் ஷோவுக்கு எல்லாம் ரூட்டும் கிளியராக்கி கொடுத்த என் நண்பர்களுக்கு முதல் நன்றி!

அட...! படமே நட்புக்கு நன்றி கூறும் நண்பர்களின் கதைதாங்க!

மெளனமாய் ரஜினியை அவரின் குணத்தினை விளம்பரமின்றி சொல்ல வந்த இன்னுமொரு படம்!

விளம்பரமே இல்லையே...? என்று நினைக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு, இனி விளம்பரமே தேவைப்படாது!

அரசியலுக்கு வரேன்னு சொல்லமாட்டிக்கிறீங்க வர்லைன்னும் சொல்லமாட்டிக்கிறீங்க அப்புறம் என்ன ம** அதை பத்தி சொல்றீங்க? (இந்த கேள்வி அதிகம் தமிழ்பதிவுகளில் கூட உலாவியதும் உண்டு!) அந்த கேள்விக்கு, ரஜினியின் பதில் சும்மா ”நச்”ன்னு இருக்கு!

இளமையான ரஜினி !

கலக்கல் காமெடிகள் !

போற்றுதலுக்குரிய நட்பு!

ரஜினிக்காக அமைக்கப்படாத கதைக்களம் ஆனால், ரஜினிதான் படத்தின் நாடிதுடிப்பாய்..!

குசேலன் - காத்திருக்கும் விழிகள்...!




நெஞ்சில் ஒரு களங்கமில்லை!

சொல்லில் ஒரு வஞ்சமில்லை!

வஞ்சமில்லா வாழ்க்கையினில்

தோல்வியும் இல்லை!

ஹீரோக்களாய்...!

வன்முறை ஆட்டம் ஆடி, பின் ஓடிய

வில்லன்கள் மட்டுமே இப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேளை!

எந்த விளம்பரமுமின்றி...!

எந்த பலனையும் எதிர்நோக்கா, எமனை எதிர் நோக்கிய பணிகளில் இவர்கள்...

மெளனமாய், என்றும் ஹீரோக்களாய்....!



எங்கள் ஹீரோக்களாய்...!

*******************

பிற்சேர்க்கையாய்....!

ஆபத்தினையே பணியாக கொண்ட இவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், - நடக்காமல் நடந்துக்கொண்டிருக்கிறது இது வரை - இவர்களின் குடும்பத்தினரை காத்துக்கொள்ள உதவும் வகையிலான நடவடிக்கைகள் சாதாரண ஊழியர்களின் நிலையிலேயே இருக்கிறது - இனஷுரன்ஸ் கூட இவர்களுக்கு கிடையாது!

- நன்றி புதுகை தென்றல் & ஜீவ்ஸ்

இணையத்தில் என் தினம்! -


தினந்தோறும் சென்றுவரும் பதிவுகள் அப்படின்னா இதெல்லாம் தினமும் மூச்சு விடற மாதிரி!

இந்த தளங்களுக்கு போயிட்டு வர்லைன்னா கையெல்லாம் நடுங்கும் மனசுல அப்படியெ படபடப்பாவே இருக்கும்! வாயெல்லாம் குழறும்! பேசுறது எல்லாம் புரியாது! மத்தவங்க பேசுறது கேட்கவே கேட்காது! நேர்ல பார்க்கிறவங்களலெல்லாம் யாருன்னு சரியா புரிபடாது! என்பது போன்ற எந்த எபெக்ட்டும் கிடையாதுங்க ஆனாலும் ஏதோ இதாலதான் உசுரு ஓடிக்கிட்டிருக்குன்னு ஒரு பீலிங்க்ஸ்! - அட என்னைய மாதிரி ஒத்தையா வெளிநாட்ல குந்திக்கினு இருக்கற ஆளுங்களுக்கு மட்டும்தான்ங்க!

தமிழ்மணம் - என்ன சொல்றது? எல்லாவிதமான செய்திகளையும் ஒரு மணி நேர அவகாசத்தில் தெரிந்துவிடுகிறது.ஏராளமான பொழுதுப்போக்கு விஷயங்கள்,மனதை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் பதிவுகள் என இணைய தினம் இதிலிருந்தே ஆரம்பிக்கிறது!

ஜிமெயில் - டெய்லி வரும் ஒன்றிரண்டு மெயில்களை காண்பதிலும் நண்பர்களுக்கு மெயில் அனுப்புவதிலும் இருக்கற சந்தோஷமே தனி!

பிளாக்கர் - இது இல்லாமல் நான் என்பது எது?

தமிழ் தினசரி காலண்டர் - டெய்லி காலண்டர் அதுவும் நம்மூரில சுவத்துல மாட்டி வைச்சுப்பார்க்கிற மாதிரியே ஒரு பீலிங்கோட பார்க்கற தளம்!

யாகூ மெயில் - இதுவும் மெயில்களுக்கும் மற்றும் உறவுகள் நட்புகளுடமான தொடர்புகளுக்கும்!

ரஜினிஃபேன்ஸ் - பின்னே! இது பார்க்காம தினப்பணிகள் ஸ்டார்ட் ஆகுமா?


தமிழ் ரேடியோ - கிட்டதட்ட 5 சேனல்களில் வித விதமாய் பாடல்களை கேட்டு மகிழ்....! ( ஒரே பாட்டுக்கள் தான் ரிபிட் ஆனாலும் கூட நல்லா இருக்கு!

சூரியன் எப் எம் - இனிய இரவு தினமும் கேட்பது!

ஆஹா எப் எம் - இப்ப புதுசா கொஞ்ச நாளா - வைரமுத்து நேரம் சூப்பரா இருக்குங்க!

ஆஸ்திரேலிய வானொலி - http://s7.viastreaming.net/7920/listen.asx - இது இப்ப சமீபத்தில சேர்ந்தது அட நம்ம கானா வெள்ளிகிழமையும் புதன் கிழமையும் கலக்குறாருங்க! -அவுங்களுக்கு துணையா வரப்போறவங்க ( ஏற்கனவே பார்ட்டி சிக்கியிருக்கா இல்லையான்னு கன்பார்மா தெரியலப்பா..?!) ரொம்ப குடுத்துவைச்சவங்க! ரொம்ப பொறுமையான மனுசன்! (அப்புறம் இந்த லிங்க் அப்படியே மீடியா ப்ளேயர்ல ஒபன் உரல் போட்டீங்கன்னா நல்லா பாடும்!)

தினமணி - இது தமிழ் பேப்பரு ஆனா அப்படியே உலகத்தை ரவுண்டு அடிச்சு லோக்கல்ல கொண்டாந்து விட்டுடும்!

தினத்தந்தி - இது ஒன்லி லோக்கல் ஊரு நீயுஸ் பார்க்கறதுக்கு!

இந்தியன் எக்ஸ்பிரஸ் - அட நானெல்லாம் இங்கிலீபிசுல டெவலப ஆகறதுக்குத்தான்!

டைம்ஸ் ஆப் இந்தியா - இதுவும் கூட டெவல்ப்மண்ட் ஸ்டடீஸ்தான்!

டூயுப் தமிழ் - உடனுக்குடன் திரையிடப்படும் சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகள் அவ்வப்போது புதிய் படங்கள் பாடல்கள் காண...!

இன்னும் சில தளங்கள் வெளியாகும் படங்களினை உடனுக்குடன் பார்க்கும் வகையில் அயலகத்தில் வாழும் எம்போன்றோருக்காக தம் சேவைகளினை செய்து தரும் சில தளங்கள்! - அதெல்லாம் சாய்ஸ்ல விட்டு எஸ்ஸாகிட்டோம்ல!

சரி புதுசா சில தளங்களை இண்ட்ரோ பண்ணிவிட்டு போறேன்!

இது மழலைகள் தளம் தமிழ் மொழி பற்றிய ஆழ்ந்த அறிவு பெற..! - எல்லா வயதினருக்கும் கூட..!

வள்ளலார் - எப்பொழுதும் அல்ல எப்போதாவது கூட இந்த தளங்கள் தேவைப்படக்கூடும்

கணீர் குரலில் தேவாரம் கேட்பது என்பது எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமானதொரு நிகழ்வாகவே இருக்கின்றது! ஸோ தினமும் இந்த சைவம் தளத்திலிருந்து ஒரு பாடல் எப்படியும் ஒலித்துக்கொண்டிருக்கும்!


பழந்தமிழ் சொற்கள் பற்றி படித்து கஷ்டப்பட்டு எழுத்துக்களை கூட்டி படிப்பதென்பது ஒரு வித்தியாசமானதொரு ஆர்வமூட்டும் அனுபவம்! அதற்கேற்ற இந்த தளம் தேவாரம்

தமிழ் நேஷன் - எத்தனை எத்தனை தகவல்கள் தமிழ் பற்றியதாய் மட்டுமே இருக்கும் இத்தளம் அவ்வப்போது சென்று கண்டு கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளினை தெரிந்துக்கொள்வதும் உண்டு!

தமிழ் மொழி இந்த பெயரிலேயே ஒரு இணையத்தளம் அனைத்து விதமான தலைப்புக்களிலும் இங்கு தமிழ் சேகரிக்கப்படுகிறது - நாளைய கணினி தலைமுறைக்காக சேர்க்கப்படுகிறது!

மேலும் மூவரை அழைக்கவேண்டும் என்றார்கள்! இந்த முறை எந்தவித முன்னறிவிப்பு அழைப்பிதழும் அனுப்பாமல் நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த மூவரை அழைக்கின்றேன்!

நீங்க எப்ப வேணும்னாலும் பதிவு போடுங்க என்ற கண்டிஷனோட...!

இணைய உறவுகளில் இவர்கள் மூவர்

யாத்ரீகன்
விக்னேஷ்வரன்
தமிழ்பிரியன்


(ஏம்ப்பா இத்தோட நிப்பாட்டிக்குவோம்! அடுத்து யாராச்சும் ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா நீங்கள் டெய்லி சாட்டில் சந்திக்கும் நபர்களை பற்றி சொல்லுங்கள்ன்னு கேட்டுப்புடாதீங்க! - நானாச்சு பரவாயில்ல டெய்லி ஒரு பத்துலேர்ந்து 12 பேரு வரைக்கும்தான் சமாளிக்கிறேன் பட் நிறைய நண்பர்கள் இருக்காங்க கிட்டதட்ட 20 முதல் 30 ரேஞ்சுகளில் அவுங்களெல்லாம் லிஸ்ட் போட்டா தாங்கதுப்பா தாங்காது!)

இந்திய சுடர்!


இந்தியாவில், எரியும் சுடர்கள் எப்பொழுது ஒரு வித பயம் தரும், இம்சைகளினை அதிகரிக்கவைக்கும் மனநிலையிலேயே ஏற்றப்படுகிறது! ஆனால்,இந்த இந்திய சுடர், நேற்றைய குண்டுவெடிப்புகளில் பற்றி எரியும் நெருப்பு போல் பயம் தருபவை அல்ல! இந்த சுடர் பயன் தருபவை!

ஆம்! இந்த சுடர் அஹிம்சையில் பாதையில் மெளனமாய் பலருக்கும் கல்வி தரும் விளக்கின் வெளிச்சமாய் எரிந்துக்கொண்டிருக்கிறது!

இருள் சூழ்ந்த உலகில் ஒளி ஏற்றி வைத்தவன் யாரோ அவனை நாம் இறைவன் என்றே நினைத்துக்கொள்வோம்! ஒளி இல்லாத உலகினை இன்று நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது! ஒளி இல்லாத உலகம் ஒன்றும் இல்லாத வெறுமையாய் இருக்கும் - வெண்மையாய் கூட இருக்காது! ஒளி - இங்கு கல்வியின் மூலம் பிரகாசிக்கிறது!

கல்வி கொடுப்போம் அதற்கு கரம் கொடுப்போம்! இதுதான் ஒரு சிலரின் சித்தாந்தமாக மனதில் தோன்றி மாறியது! அது இன்று பல நூறு ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளியாக மாறியிருக்கிறது! மேலும் இவர்களின் சுடர் வெளிச்சத்தால்...!

தன்னலம் கருதா சேவையினை மனதில் நிறுத்தி பணியாற்றும் ஆசிரியர்களால் கிராமப்புறங்களில் கல்வி வாய்ப்பினை அனைவருக்கும் அளிக்கும் திட்டங்களில் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்!

எளிய ஏழை மாணவர்களும் பொருளாதாரத்தினை பெரியதாக நினைத்து கற்கும் கல்வியினை,ஏற்றமிகு வாழ்க்கையினை இடையில் நிறுத்தி செல்லும் வழக்கத்தினை மாற்றும் முக்கிய பணியிலும்..!

குறைந்த காலகட்டத்தில் பயிற்சியுடன் கூடிய தொழில் நுட்ப படிப்புக்களில் கிராமப்புற மாணவர்களை ஈடுப்படுத்தி, தாங்களாகவே தங்களின் திறமைக்கேற்ப வாழ்க்கை பயணத்தினை உறுதிசெய்யும் வேலைவாய்ப்புகளில் ஈடுபாடு காட்டிவருகின்றனர்!

இந்த ஒளியின் ஒரு துளியாய் இருக்கும் யாத்ரீகன் பதிவின் தொடர்பில், என் கண்ணில் பட்ட செய்திகளினை பற்றிய பகிர்தலினை பதிவினில் தந்து செல்கிறேன்!

செல்லும் இடமெல்லாம் எம்மால் முடிந்தளவு சிறு உதவிகளினையாவது செய்ய இயலும் என்ற நம்பிக்கையில்.....!

பரதம் - அழகு மலர் ஆட...!

1988ல் ஆண்டுவிழாவில் கேட்ட, பார்த்த இந்த பாட்டு அப்படியே இன்னும் கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! இருக்காதா பின்னே ஆண்டுவிழாவில் பரதநாட்டியம் என்ற பெயரில் ஆடிய ஐவரில் என் சகோதரியும் ஒருவராச்சே!

அப்போதெல்லாம் பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ஆர்வமிருந்தாலும் கூட, அதற்கென்று தனியாக பயிற்சி எடுக்கவேண்டும் என்பதிலோ அல்லது தினமும் ஆசிரியரிடம் சென்று வகுப்புக்களில் கலந்துக்கொள்ளவேண்டும் என்பதிலோ அத்தனை ஆர்வம் இருந்தது கிடையாது! ஆனாலும் சிலரது வீடுகளில் மட்டுமே அப்போது தெரிந்துக்கொண்டிருந்த டிவிக்களில் வரும் பரத நாட்டிய நிகழ்ச்சிகளினை பார்க்கும்போதெல்லாம் ஏனோ பெண் குழந்தைகளுக்கு ஒரு ஆசை ஏற்படுவது தவிர்க்க இயலாத விசயமாக இருந்தது! அதையும் விட இன்னொரு விசேஷமும் இந்த பரதநாட்டியத்திற்கு உண்டு !



வேற என்னங்க! நானும் பரத நாட்டியம் ஆடப்போறென்னு வீட்ல சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி பட்டு புடவையோ அல்லது பட்டு பாவாடை செட்டோ இன்னும் பிற ஆபரணங்கள் எல்லாம் ரெடி பண்ணனும்ல!

பரத நாட்டிய ஆட்டங்கள் அந்த காலகட்டத்தில் எல்லா பள்ளிகளிலும் வாழ்த்துப்பா சங்கதி போன்று கட்டாயமானதாக்கப்பட்டிருந்த ஒரு விஷயம்! அதிகமான மேக்கப்புக்கள், ஆடத்தெரியாவிட்டாலும் கூட ஆரம்பம் அட்டகாசமாக இருக்கவேண்டும் என்ற சில கண்டிஷன்கள்! சிலருக்கோ சரி ஆடணும்னு முடிவு பண்ணிட்டோம் அப்புறம் பரத நாட்டியம் மட்டும் எதுக்கு எல்லாத்தையும் கலந்துவிட்டுடலாம் என்ற சில சோதனை களங்களும் கூட அரங்கேறிய நாட்கள் பற்றி முந்தா நாள் நினைச்சு பார்த்தேனுங்க!

நம்ம முத்தக்கா பொண்ணு நல்ல அருமையா பரத நாட்டிய போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றது,பற்றிய சேதி கேட்டப்பொழுது, இதெல்லாம் நினைப்பு வந்துச்சு :-)

பயம் - பெங்களூரு குண்டு வெடிப்புகள்!


பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!

இது தொடர்பான சம்பவங்களும் அதாவது பயத்தின் அடிப்படையிலேயே நிறைய சம்ப்வங்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன நிகழ்ந்துக்கொண்டும் இருக்கின்றன!

ஜம்ப் ஆகும் பூட்ஸ் மாட்டின திருடர்கள்!
தானாகவே எரியும் வீடுகள்!
சைக்கோ திருடர்கள்! என ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விசயங்கள் பிரபலமாகியிருந்தாலும் கூட முழுமையான விசாரணையில் இது மாதிரியான சம்பவங்கள் நடைப்பெற்றது பயத்தினை அனைவர் மத்தியிலும் வரவழைக்கவேண்டும் என்பதாகவே இருக்கும்!

இந்த அடிப்படையினைத்தான் தற்போது பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு தெரிவிக்கின்றன! ஏற்கனவே பெங்களூருவின் அறிவியல் கல்லூரியில் நிகழ்த்தப்ட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சுட்டு நிகழ்வுகளும் கூட இந்த செய்தியைத்தான் நமக்கு தெரிவித்தன!

ஏன் பெங்களூரூ தேர்ந்தெடுக்கப்படுகிறது? என்ற விஷயத்தில் நிறைய காரணங்களும் இருக்கின்றன! இதில் அரசியல் மட்டும் சுட்டிக்காட்டப்படுவது அவ்வளவாக சரியான விஷயமில்லை!

இந்தியாவின் சாப்ட்வேர் பூங்காவாக இருக்கும் நாடுகள் அனைத்திலும் தம் உதவியினை தினமும் தந்துக்கொண்டிருக்கும் ஒரு மையமாகவும் இப்போது பெங்களூரு திகழ்ந்துக்கொண்டிருக்கிறது!- இங்கு ஒரு சின்ன வன்முறை செய்திகூட அது பெருமளவில் பேசப்படக்கூடிய அளவு உலகளவில் தகவல் தொடர்பு துறை மிக விழிப்பாகவே இருக்கிறது!

இத்தனைக்கும் இப்போது பெங்களூரு பெருமளவு படித்தவர்களின் கட்டுபாட்டிலேயே உள்ளது! அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் - அதிலும் ஜனத்திரள் அதிகம் உள்ள இடங்கள் என்ற செய்தி வேறு - வேறு என்ன சொல்வது எல்லோருமே எவனா இருந்தா எனக்கென்ன மனநிலையிலேயே தத்தமது தினசரி வாழ்க்கையினை பழகிவருகிறார்கள்....!



கிட்டதட்ட 9 இடங்களில் குண்டுகள் வைக்கப்படுகின்றன, வெடிக்கச்செய்யப்படுகின்றன! யாராவது ஒருவர் கண்ணில் கூடவா இந்த காட்சி பட்டு சந்தேகம் எழுந்திருக்காது?

எழுந்திருந்திருக்கலாம்!

ஆனால்,

பயம்

கேள்வி கேட்பதில் பயம் - நீ என்ன செய்கிறாய்? என்று கேள்வி கேட்பதில் பயம்!

பொது இடங்களில் யாரும் யாரிடமும் கேள்வி கேட்கமுடியும்தானே!

இனி வரும் நாளிலாவது நாம் இந்த பயத்தினை தொலைத்து, வாழ முயற்சிப்போம்!

”வாழ்க்கையில பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்ககூடாது”

தப்பே இல்ல! இந்த வார்த்தைகளினை பெரிதாக ப்ரேம் போட்டு வீட்டில் மாட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம்!

இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும்,பாதிப்பில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அடையவேண்டி பிரார்த்தனையோடு....!

பர்மா கடைக்காரர் - வெள்ளி நினைவுகள்!

கீழநாஞ்சில் நாடு !

இதுதான் நான் வாழ்ந்து வளர்ந்த இடம் எந்த மாவட்டம்னு கேட்காதீங்க? இது மயிலாடுதுறையில் உள்ள 500 மீட்டருக்கும் குறைவான கல்லுக்கார தெரு ( கல்லிடா ஸ்டீரிட் அப்படின்னா முடிவு உள்ள தெரு முட்டு சந்துன்னு பேரு அது இங்கீலிஸ்காரனிடமிருந்து உருவி அது பின்னாடி மருவி கல்லுக்கார தெருவாகி போயிடுச்சு!)

அதுக்கு எதோ பெரிய நாடு ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து வைச்ச புண்ணியவான் யாருன்னு தெரியலை! இது பரவாயில்லைங்க இங்கிருந்து மேற்க பாக்க போன் சுமார் இரண்டு கி.மீ தாண்டி மேல நாஞ்சில் நாடு அங்கேயிருந்து பெண் எடுக்கறது இங்கேயிருந்து ஆண் கொடுக்கறதும் 1995 வரைக்கும் நடந்துக்கிட்டிருந்து அதற்கப்புறம் ஆளுங்க இல்லாம கல்யாணங்கள் கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுது!

அந்த நாட்லதான் எங்க வீடு! ரோட்டிலிருந்து கிட்டதட்ட 4 அடி உயரத்திற்கு உயர்த்தி கட்டப்பட்ட குட்டித்திண்ணையிலிருந்து ஆரம்பிக்கும் வீட்டின் நுழைவாயில்,பெரிய கதவினை திறந்து, சின்ன வராண்டாவில் நுழைந்து,பெரிய முற்றத்தினை கடந்தால் அருகே பெரிய ஹாலும்,அதை ஒட்டியே ஒரு பெரிய ரூமும் அமைந்திருக்கும்! முற்றத்தினை கடந்து பின்புறம் சென்றால் சமையலறை அருகில் பெரிய கொல்லைப்புற கதவு (நல்ல ஸ்ட்ராங்!நானெல்லாம் அந்த வயசுல தள்ளுற மாதிரி பாவ்லாதான் காட்டியிருக்கேனாம்!)
கொல்லை - அதுதாங்க கொல்லை எம்மாம் பெருசு நீட்டத்துக்கும் இருக்கும் இங்கன தான் எனக்கே எப்போதுமே பிடித்திப்போயிருந்த அந்த கிணறும் இருந்தது! - சரி விடுங்க! அதெல்லாம் போயே போச்சு! (அய்யோ மாடியை பத்தி சொல்லவே இல்லையே!?)

வீட்டுக்கு சொந்தக்காரர் தரங்கம்பாடி ( அந்த தெரு மொக்குலதான்) ரோட்ல டீ+இட்லி கடை வைச்சிருந்தாரு அவருக்குத்தான் பேரு பர்மா கடைக்காரர்ன்னு! என்னவோ அவரு பர்மா ஆளுன்னுத்தான் நான் அப்ப - எப்பவுமே நினைச்சிக்கிட்டிருந்தேன்! ஆனா பாருங்க கையில் காசு அதிகம் இருந்த காலத்தில செட்டியார்கள்,காசை எடுத்திக்கிட்டுப்போய் இன்வெஸ்ட பண்ணின இடம்தான் பர்மாவாம் (லேவாதேவிக்காரர்களாம்)

விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டோர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வகையில் கொஞ்ச காலங்களில் தொழிலில் நஷடம் ஏற்பட திரும்பவும் ஊருக்கு திரும்பியவர்களைத்தான் பர்மா செட்டியார்கள் என அழைக்கின்றனர் எங்க வீட்டு ஒனரும் அந்த கேரக்டர்தான்!

திடீரென்று ஒரு நாள் வீடு காலி பண்ண சொல்லிவிட்டார்கள் என்று சொன்ன நாளிலிருந்து எனக்கு அவர் மேல அத்தனை வெறுப்பு!

அத்தனை பெரிய ஹாலுடன் பெரிய பெட்ரூம் பின்னால் மாடிப்படிகள் ஏறி சென்றும் அங்கிருந்து பொருட்களை தாழ்வரத்திற்கு தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டுகள் விட்டு செல்லப்போகிறோமே என்று!?

வீட்டை இடித்துவிட்டு வேறு புதிய வீடு கட்டப்போவதாக, என்னதான் காரணம் சொன்னாலும் எனக்கு தாங்கி கொள்ளவே முடியவில்லை!

அந்த தெருவிலதான் வாகன போக்குவரத்து அதிகமின்றி எப்போதும் தெருவிலேயே கிடக்க முடியும் அது மட்டுமல்லாமல் இரவு 8 மணிக்கு மேலும் விளையாடினாலும் எந்த வீட்டுக்காரர்களும்,தம் பிள்ளைகளை பற்றி கவலையின்றி அவர்தம் வேலைகளில் முழ்கி இருப்பார்கள்!

நான் விளையாடி பருவத்தில் என்னை அடிக்கடி அடிக்கும் பக்கத்து வீட்டு எருமை (அப்ப இப்படித்தான் கூப்பிடுவேனாக்கும்), அவனது கால் ஊனமுற்ற சகோதரியின் மீது இரக்கப்பட்டு அதையும் தாங்கி கொண்ட சமயங்கள்! அண்ணனின் நண்பனாக இருந்தாலும், என்னையும் விளையாட அழைக்கும் அண்ணனின் நண்பர்கள், என பல நட்புகள் அந்த வீடு மாறுதலில் பிரிந்து போனது மறக்க முடியவில்லை!

இப்போதும் அந்த பக்கம் போகையில் என் வீடு இருந்த பக்கம் ஒரு சோகப்பார்வையையும், அந்த ஒனர் வீடு இருந்தப்பக்கம் ஒரு கோபப்பார்வையையும் செலுத்தாமல் போகமாட்டேன்!

ஆனாலும் இப்போது எண்ணங்களில் சில மாற்றங்கள்!

இன்று அந்த வீட்டில் இருந்திருந்தால், எப்போதும் மாடியில்தான் இருக்கவேண்டும் அப்பத்தானே ஏவிசி இன்ஜினியரிங்,ஆர்ட்ஸ் & தருமபுரம் காலேஜ் பஸ்களுக்கு டாட்டா காமிக்கலாம்!? (யாருக்குன்னு கேட்காதீங்க - யாருக்கோ!)

இந்த மாதிரியான மன மாற்றங்கள் தவிர்க்க முடியாதுதானே...?

மீள் பதிவு! - மனதில் சுகம் மலரும் மாலையிது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில்)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(இதழில்)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது




(சில நேரங்களில் இங்கன இந்த பாட்டு தெரிய்லைன்னா அங்கன போய் பார்த்துட்டும் வரலாம்!)


டிஸ்கி :-
நாம எழுதுன பதிவுகள்லேர்ந்துதான் மீள் பதிவு போடமுடியுமா? ஏன் மத்தவங்க பதிவுலேர்ந்து சுட்டு போட்டா அது மீள் பதிவு வகையில் வராதா?? என எனக்குள்ளே பீறிட்டு வந்த எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் இந்த மீள் பதிவு! பாட்டு கேட்டு பாருங்க எத்தனை பேர் எத்தனை தடவை மீள் பதிவா போட்டாலும், போய் பார்த்து கேட்க துடிக்க வைக்கற ரகம்தான்!

விடுமுறை நாள்! இரவு நேரம் இது போன்ற ரா(ர)கங்களில் பாடல்கள் கேட்பது ஒரு வித சுகானுபவம்தானே!

..::மைபிரண்டு::.. - இணைய நட்பின் அதிசயம்!




பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்!
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்!
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்!

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்!

ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே


பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே



இத்தனை அதிசயங்களுமே அசந்து போகும் அதிசய நட்பு - ..::மைபிரண்டு::..


சகோதரியின் பிறந்த நாளில்,வரும்,பெறும் வெற்றிகள் பெரும் வெற்றிகளாக இருக்கும் என்று வாழ்த்தி மகிழ்கிறோம்!

சித்து - ஒவ்வொரு பற்களிலும் சிரிக்கும் .:: மை ஃபிரண்ட் ::. :-)



எகிறி குதித்தேன் வானம் இடித்தது
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது
புருவங்கள் இறங்கி மீசையானது

Hey ஆனந்தக்கண்ணீர் மொண்டு குளித்தேன்
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய்
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய்

காதல் சொன்ன கணமே
அது கடவுளைக் கண்ட கணமே
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ

நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
வெண்ணிலவை இவன் வருடியதும்
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன்
ஒரு விதை இதயத்தில் விழுந்தது
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே

கலங்காத குளமென இருந்தவள்
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன்

மணல் முழுதும் இன்று சர்க்கரையா?
கடல் முழுதும் இன்று குடிநீரா?
கரை முழுதும் உந்தன் சுவடுகளா
அலை முழுதும் உந்தன் புன்னகையா
காகிதம் என்மேல் பறந்ததும்
அது கவிதைநூல் என மாறியதே

வானவில் உரசியே பறந்ததும்
இந்த காக்கையும் மயில் என மாறியதே........

வலையுலக சூப்பர் ஸ்டார் - .:: மை ஃபிரண்ட் ::.

சின்ன குட்டீஸ்கள்லேர்ந்து பெரிய பார்ட்டீகள் வரைக்கும் அம்புட்டு ஆளுங்களுக்கும் நம்ம .:: மை ஃபிரண்ட் ::. புடிச்சிருக்குன்னா அவுங்க தானே வலையுலக சூப்பர் ஸ்டாரு!

இன்னிக்கு நம்ம .:: மை ஃபிரண்ட் ::. பர்த்டே!

வாங்க கொண்டாடுவோம்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் .:: மை ஃபிரண்ட் ::.


இது சங்கீத திருநாளோ!

புது சந்தோஷம் வரும் நாளோ

ரதி நம் வீட்டில் பிறந்தாளோ

சிறு பூவாக மலர்ந்தாளோ

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..

கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..

செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..

தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..

உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..

அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..

பூவெல்லாம் இவை போல அழகில்லை..

பூங்காற்றில் இவை போல சுகமில்லை..

இதுபோல சொந்தங்கள் இனியில்லை..

எப்போதும் அன்புக்கு அழிவில்லை..

இவள்தானே நம் தேவதை..

நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..

சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;

கண்ணில் மின்னும் ஒரு காவியம்;

மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;

நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..

என்றும் எங்கும் இவள் ஞாபகம்..

இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..

இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..

இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..

இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..

எப்போதும் தாலாட்டுவேன்..

சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..

முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..

கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..

இது சங்கீத திருநாளே!

எம் இனிய இணைய நட்பிற்கு,
எங்களின் இணைய தமிழ் சகோதரி ..::மைபிரண்டு::.. இன்று பிறந்த நாள்!எம் மனம் மகிழ வாழ்த்துகிறோம்!


புடிச்சு போட்ட பாட்டு இங்கே இருக்கு பார்க்கலாம் :-)

ஆடி மாசம் - தினமணியிலிருந்து...!




ஆடி மாதம் இது சிலருக்கு வாய்ப்புகளை வழங்கும் மாதமாகவும், மணமான இளம் தம்பதிகள் விரும்பாத மாதமாகவும் திகழ்கிறது. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப விவசாயப் பணிகளை விவசாயிகள் தொடங்கும் மாதமும் இதுதான்.

பெரும்பாலானவர்கள் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் எதையும் ஆடி மாதத்தில் மேற்கொள்ள மாட்டார்கள். இதனாலேயே ஜவுளி விற்பனை பிற மாதங்களை விட மந்தமாக இருக்கும். இதெல்லாம் அந்தக் காலம். விளம்பர யுகத்தில், வீடு தேடிவரும் டி.வி. விளம்பரங்கள் மூலம் ஜவுளிக் கடைக்கு மக்களை கடலென இழுக்கும் காலமிது. சமீப காலமாக ஆடி மாத விற்பனையைப் பெருக்க ஜவுளி வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் பலப் பல உத்திகளைக் கடைப்பிடித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை தங்கள் தயாரிப்புகளின் மீது திருப்புகின்றனர

இப்போதே தீபாவளிக்குத் தேவையானதை வாங்கிவைத்து பணத்தைச் சேமிக்கலாம் என்று நினைப்பவரும் உண்டு.

பணிக்குச் செல்லும் பெண்கள், அந்த வருடத்தின் விசேஷ நாள்களுக்கும் சேர்த்து, ஆடி மாதத் தள்ளுபடியை பயன்படுத்தி அரை டஜன் வரை வாங்குகின்றனர் எல்லாம் சரி, ஜவுளி நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடி உண்மையிலேயே தள்ளுபடிதானா. இதனால் வாடிக்கையாளர்களுக்கு பலன் உண்டா? என்றால் அதை எந்த வகையிலும் "செக்' செய்து பார்க்க முடியாது.

ஏனென்றால், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு உள்ள ஒரே சீரான மதிப்பு துணிகளுக்குக் கிடையாது.ஆடிக் கழிவுக்கு முன் இதுதான் இப்பொருளின் விலை என்று யாருக்குமே தெரியாது (கடைக்காரரைத் தவிர).

தீபாவளிக்காக வாங்கும் துணிகளில் தேங்கும் துணிகளுக்கு இத்தகைய தள்ளுபடி அளித்து விற்பதாக பெரும்பாலான நிறுவனங்கள் கூறுகின்றன. ஆண்டு முழுவதும் தள்ளுபடி அளிக்கும் அரசு நிறுவனங்களான கோ-ஆப் டெக்ஸ், ஆந்திர அரசின் ஆப்கோ போன்ற துணி விற்பனையகங்களில் இந்த அளவு கூட்டம் குவியாததற்குக் காரணம் என்ன? என்பதும் புரியாத புதிர்! ஆண்டு முழுவதும் விற்பனையைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு துறையினரும் ஓர் உத்தியைக் கடைப்பிடிக்கின்றனர். அந்த வகையில் வந்தது தான் இந்த "ஆடிக் கழிவு' என்று வர்த்தகத்துறையினர் கூறுகின்றனர்.

ஆண்டு முழுவதும் ஆகும் விற்பனையை ஒரே நாளில் சம்பாதிக்க தங்க நகை விற்பனையாளர்கள் கண்டறிந்த யுக்திதான் "அட்சய திருதியை'.அதைப் போல ஜவுளித்துறையினர் ஆடி மாத தேக்க நிலையைப் போக்க கண்டுபிடித்த உத்தியே "ஆடிக் கழிவு' என்று சொல்வோரும் உண்டு.

உண்மையிலேயே இந்தத் தள்ளுபடி விற்பனையால் வாடிக்கையாளர்களுக்குப் பலன் உண்டா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்..

சரி படத்தில இருக்கற புடவை பத்தி ஒரு குறிப்பு! இது லேட்டஸ்டு டிசைன் சாரியாம்! முத்து மணிகள் கோர்த்து இருக்கும் இந்த சேலை நல்லி ஸ்பெஷல்! - அம்மிணி பத்தி உண்மையாவே ஒண்ணும் தெரியாதுப்பா!??? :-(

விறகு ராட்டி அடுப்பு! - திரும்புதல் இயற்கை

ஆட்டோகிராப் நினைவுகளில்...!

உலகம் உருண்டையானது நீ ஒரிடத்தில் விட்டு பிரியும் நபரை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பினை பெறுவாய் என்ற ரீதியில் ஆட்டோ கிராப் போட்டு தந்த அந்த சகோதரியின் நினைவு வந்தது! ஆட்டோ கிராப் மட்டுமல்ல கிராமப்புற வாழ்க்கை பற்றிய சில பல செய்திகளும் கூட நான் கல்லூரி நாட்களில் அந்த சகோதரியிடமிருந்துதான் பெற்று, கற்றுக்கொண்டேன்!

சரி மேட்டருக்கு வர்ரேன்!

கிராமப்புறங்களில் அதிகாலை எழுந்து மாட்டுத்தொழுவத்தினை சுத்தம் செய்து,மாடுகளை அந்த இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் குறிப்பாக கொஞ்சம் வெயில் வந்து விழும்படியான இடத்தில் கட்டி விட்டு ( அந்த மாட்டு கயிற்று சுருக்கு போடற ஸ்டைல்லு இன்னிக்கும் கூட உங்களை ரசிக்கவைக்குற ஒரு விசயம்தாங்க!)மாட்டுச்சாணங்களை குவித்து, மாடுகளின் உணவில் மீந்த சிதறிக்கிடக்கும் வைக்கோல்களோட சேர்த்து அள்ளி தனியாக ஒரிடத்தில் குவித்து அழகாய் வட்டமாய் உருவமைத்து வெயிலிலிட்டு, காயவைத்து பெரும்பாலும் தம் வீட்டு உபயோகத்திற்கும், சிலர் மற்றவர்களுக்கும் கூட விற்பனை செய்யும் அந்த ராட்டி பற்றி மேலும் சொல்வதற்க்கு என்னிடம் ஒரு விசயமும் இல்லை!

ஆனால்,இதே இந்த கான்செப்டினைத்தான் இப்போது படு வேகமாய் பரப்பிக்கொண்டு வருகிறார்கள் இந்த என்விரோபிட் அமைப்பினை சார்ந்தவர்கள்!

அதிகரித்துவரும் சுற்றுசுழல் மாசு அதை விட வேகமாய் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள் இவை எல்லாவற்றிற்குமே இது ஒரு எளிய தீர்வாய் அதே சமயத்தில் மிகப்பெரிதாய் சுற்றுசுழலுக்கு மாசு ஏற்படுத்தவண்ணம் இவர்களின் தயாரிப்பில் விலை குறைவான சமையல் அடுப்புக்களை தற்போது விநியோகித்துக்கொண்டு வருகின்றனர்!



எப்பொழுதோ அல்லது இப்பொழுதும் கூட நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருக்கும் இதே போன்ற விஷயங்கள் இன்னும் கூட நம்மில் அலட்சியமான பார்வையில் பட்டுத்தான் ஒளிர்ந்து அல்லது ஒளிந்துக்கொண்டிருக்கின்றன!எது எப்படியோ வெளிநாடுகளிலிருந்தும்,இயற்கை பற்றிய விழிப்புணர்வுகளின் பிரச்சாரத்தின் மூலமும் இது போன்றதொரு விசயம் நம் கிராமங்களுக்கு செல்லும் போது நம் கிராம மக்கள் சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்கும் !

அட இதுதான் எங்களுக்கும் தெரியுமே!

ஆடல் கலையே தேவன் தந்தது!

ஆண்டுவிழாக்களிலும் ஆர்கெஸ்ட்ராக்களிலும் இன்னும் பிற நிகழ்ச்சிகளிலும் தவறாமல் நடைபெறும் நடன நிகழ்ச்சிகள்! ஆடுபவர்களின் திறமையினை வெளிக்கொணர்ந்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், ஆட்டத்தினை ரசித்துக்கொண்டும் அல்லது மனதினில் ஆடிக்கொண்டிருக்கும் அல்லது ஆட்டத்தை பற்றிய அவதானிப்புக்களை நினைத்துக்கொண்டிருக்கும் வித்தியாசமான ரசிகர்களினை நீங்கள் கண்டதுண்டா? ஏன் சில சமயங்களில் அது போன்ற மனத்தினை கொண்ட ரசிகர்கள் நீங்களாகவும் கூட இருக்ககூடும்!

அது ஒரு மகிழ்ச்சிகரமானதொரு அனுபவம்தான்!

ஆடும் ஆட்டத்திற்கேற்ப நாமும் நம்மை தயார் செய்துக்கொண்டு ஆடிக்கொண்டிருப்போம் - மனதுக்குள்ளாகவே...!

வெகு சிலர்தான் கொஞ்சம் கூட அக்கம் பக்கத்தினரின் சிந்தனைகள் பற்றிய கவலையின்றி மிக ஆனந்தமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்! - அவர்கள் என் பார்வையில் வாழத்தெரிந்தவர்கள் வாழ்க்கையினை அனுபவித்து....!

இன்னும் சிலருக்கோ தங்களுக்கு ஆடவும் தெரியாது அதே சமயத்தில் ஆட்டம் பற்றிய குறைகளோ அளவற்று இருக்கும்! அவர்களை பற்றி நாம் என்ன கூறமுடியும் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை..!

ஒ.கே நீங்கள் இந்த பாடலை பாருங்கள்! முடிந்தால் ஆடுங்கள்! இருக்கும் விடுமுறையில் இனிமையாய் ஆக்கிக்கொள்ளுங்கள்! (குத்து பாட்டான்னு நினைச்சு ரொம்ப பீல் ஆகுபவர்களுக்கு நெக்ஸ்ட் டைம் நல்ல பாடல் வரும் என்ற நம்பிக்கையோட எதிர்காத்து இருங்கள்!)



இந்த பாட்டு, இங்க தெரியலைன்னா இங்கன போயும் பாருங்களேன்..!

Mentholலில் விளை சுகமே....!

எனக்கு வர்றப்ப பாரின் சிகரெட்டு வாங்கிட்டு வா மாப்ளே!

டேய்...! பாரின் ரிடர்ர்ன்னு பாரின் சிகரெட்டு ஒண்ணும் வாங்கிட்டு வர்லையாடா?மச்சி!

உங்க ஊர்லெல்லாம் சிகரெட்டு மென் தால் தானாம்ல அது பத்தி ஒண்ணும் சொல்லமாட்டிக்கிறியேடா? ஒண்ணும் வாங்கி வந்துருக்கலாம்ல!

இப்பபடி பலரிடரிமிருந்தும் கோரிக்கைகள், கேள்விகள் தொடர்ந்த, பதில்கள் ஆதங்கங்கள் சந்தேகங்கள் எழவைக்கும் அந்த பாரின் சிகரெட்ல அப்படி என்னதாங்க விஷயம் இருக்கு.???



அப்படின்னு பார்த்தா பெருசா ஒண்ணும் விஷயம் இல்லைங்க! கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் மட்டும் இருக்கறதுமட்டும்தான்!

அதிக புகையில்லாத அதே சமயத்தில் அதிக ஆபத்தினை விளைவிக்க கூடிய நிக்கோடின் அளவினை அதிகமாக கொண்ட இந்த மென்தால் வகை சிகரெட்டுக்கு இப்ப ரொம்ப நல்ல கிராக்கியாம்!

பொதுவாக பற்பசைகளிலும்,இருமல் சிரப்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மென்தால் ஒரு கூலிங்க் எபெக்டினை மட்டுமே தரும் வேறு எதுவும் பிரத்யோகமான மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருப்பதில்லை! இந்த சங்கதியினை சிகரெட்டினில் நுழைத்து, இப்போது அதிக அளவில் பலரது விருப்பமான பொருளாக சிகரெட்டினை மாற்றியதும் இந்த மென்தால்தான்!

இந்த சிகரெட்டுகளை ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அந்த பழக்கத்தினை விட்டுச்செல்வது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறும் அளவுக்கு உங்களை அடிமைப்படுத்தும் அதிசயம்தான் அந்த மென்தாலின் மூலம்!




முன்பெல்லாம் மேம்போக்காக சிகரெட் குடித்தவர்கள் இந்த மென்தால் சிகரெட்டில் நீண்ட இன்ஹேலில் இன்பம் எய்துகிறார்களாம்! பாவம் அவர்களுக்கு தெரியாது அதிகம் நிக்கோடினையும் கார்பன் மோனாக்சைடினையும் கூடவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று !

இப்படியான வாழ்க்கையில்...!



நன்மை ஒன்று செய்தார்கள்!

நன்மை விளைந்தது!

இனிய ஞாயிறு - கொண்டாட்டம்

இனிய இசையால் இமயம் தொட்ட மாமேதைகளின்

இனியதொரு இசை விருந்துடன்,

இந்த இசைப்பயணத்தினை முடிக்கிறேன்!

(டேய்...! வாராவாரம் ஜொள்ளுப்பதிவு மாதிரி போட்டுட்டு இசைப்பயணம் அது இதுன்னு ஃபீலிங்க்ஸ் காட்டுறீயேடான்னு நீங்க கேக்கறதுக்கு கேக்குது!? விடுங்க..! விடுங்க..!! அதான் எண்டூ கார்டூ போட்டாச்சுல்ல!)




அம்புட்டுத்தேன்!

ஆடி(ய)யோ காலங்கள் - தீம் மியூசிக் & ரிங்டோன்ஸ்!

கிட்டதட்ட கடந்த 5 ஆண்டுகளில் இந்த தீம் மியுசிக் வார்த்தையின் புழக்கம் படு ஸ்பீடாகிவிட்டது! எல்லாம் மொபைல் வந்த நேரம்! அவனவன் பாட்டுக்கு இடையில எங்காவது ஒரு பிட்டு புடிச்சு அதை ரிங்டோனாக்கி மத்தவங்களை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஆக்கிக்கிட்டிருந்தானுங்க! (இன்னும் சிலர் இருக்காங்க! எனக்கு தெரிஞ்ச ஒரு பார்ட்டீ வடிவேலு படத்தில அழுகுற அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் சவுண்ட கூட ரிங்டோனாக்கி வைச்சுருக்காரு!??)

மொபைல் கையில வாங்கியதுமே அவனவன் நோண்டுறது, இந்த ரிங்டோன்கள் மேட்டரத்தான் அதுலயும் தீம் மியூசிக் படங்களை பத்தி பயபுள்ளைங்க சேகரிக்கற தகவல்கள் அந்த இசை அமைத்த இசையமைப்பாளருக்கு போட்டு காட்டுனா கூட அவ்ளோ ஈசியா அவுகளுக்கு புரியாது! அந்த மாதிரி பூந்து விளையாடுவாங்க!

இந்த தீம் மியுசிக் கான்செப்ட்ங்கறதே அதிகம் பேச கூடாத இடங்களிலோ அல்லது பேசுவதற்கு வார்த்தை கிடைக்காத இடங்களிலோ ஸ்டார்ட் மியூஜிக்ன்னு போட்டதால பொறந்த விஷயம்ன்னு நினைக்கிறேன்ங்க!

ரொம்ப பிரபலமானது எனக்கு தெரிஞ்சு இசைப்புயல் வந்ததுக்குப்பிறகுதான் போல! ஆனாலும் கூட நம்ம ராசா ஏற்கனவே இந்த விஷயத்தில களம் பல கண்ட விஷயங்களையும் ஒரு தீம் மியுசிக்கினை இடம் பொருள் பார்த்து பயன்படுத்தி அசத்தியதையும் நாம இப்ப கொஞ்சம் கொஞ்சமா அண்ணன் கா.பி புண்ணியத்தில கேட்டுக்கிட்டு வர்ரோம்! (ரொம்ப பொறுமையா செய்யவேண்டிய வேலையிலே இதுவும் 1. கரெக்ட்டா முதல்ல படத்தை பார்க்கணும் அப்புறம் எந்த இடங்களில் எந்த மாதிரியான வகைப்படுத்தலில் இசை அமைந்திருக்குன்னு பார்க்கணும் அப்புறம் அதை அப்படியே கட்டி ஒட்டணும் ஷ்ஷ்ஷப்ப்ப்ப் இப்பவே கண்ணை கட்டுது!)

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த படத்தின் பாடல் கேசட்டுகளில் கண்டிப்பாய் இது போன்ற தீம் மியூசிக் பிட்டுகள் இருக்கும்! அதெல்லாம் அந்த டைம்ல அவ்வளவா பிரபலமாகாட்டியும் கூட இப்ப ரொம்பவே ஆர்வத்தை உண்டாக்கி வைச்சுருக்கு!

ஒரு தீம் மியூசிக் அதை வைச்சுக்கிட்டு சந்தோஷமா இருந்தாலும் சரி,துக்கமா இருந்தாலும் சரி, காதலியை முதன்முதலாக பார்க்கும்போதும் சரி அப்புறம் பிரிவிலும் சரி போட்டு தாக்கியே பல படங்கள் ஒடியிருக்கு! ( உதாரணத்துக்கு ரோசாப்பூ சின்ன ரோசப்பூ அப்புறம் விக்ரமன் படங்கள்,எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்த் படங்களை சொல்லலாம்!)

அதே மாதிரி ஒரு வாத்திய கருவியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம்! டைட்டில்லயே சூப்பரான தீம்! அப்படியே மனசை எந்திரிச்சு ஆட வைக்குறமாதிரி ஒரு ஃபீலிங்க் கண்டிப்பாக உங்களுக்கும் கூட வரும் இந்த பாட்டினை கேட்டா....!



கொஞ்ச காலம் நான் இந்த பாட்டை ரிங்க்டோனா வைச்சிருந்தேன் ஆனா பயங்கர எதிர்ப்பு இருந்ததால பின்னே மாத்திட்டேன் - ஆமாங்க பாட்டு ஆரம்பிக்க கொஞ்சம் லேட்டாகும் அதுவரைக்கும் நமக்கு போன் சத்தம் கேட்காதது எதிர்ல போன் பண்றவங்களுக்கு தெரியாதுல்ல! - இப்ப என்ன ரிங்டோன்னு கேட்கறீங்களா? - நம்ம தலைவர் படம் ஆடியோ ரீலிசாகியிருக்கும்போது வேற பாட்டுக்கள் வைக்க தோணுமா?

வனஜா :-(

மனம் சந்திக்கும் முதல் பார்வையில் மகிழும் காதல் மட்டுமல்ல, சில நேரங்களில் மனம் கலங்கும் காட்சிகள் கூட இருக்கலாம் கவனமாகவே இருங்கள் என்று எப்பொழுதோ கேட்ட வார்த்தைத்தான் தோன்றியது இந்த படத்தினை காணுகையில்...!



மனம் தொட்ட படத்தினை சுட்டி, தொடர்ந்து செல்கையில், ஊருக்குள் அதுவும் ஒரு பெரிய பண்ணை வீட்டில் எப்படியாக அடிமை போன்ற ஒரு பணியில் வறுமை வாழ்க்கை பெற்ற மக்கள் ஈடுபடுத்தபடுகின்றனர் என்பதை அப்படியே நிழல் படங்களிலேயே உணர்வுபூர்வமாய் கதை பற்றிய செய்திகளை எளிதில் தெரிந்துக்கொள்ளலாம்! அத்தனை உயிரோட்டமான ஒளிப்படங்கள் அது மட்டுமல்ல முழுபடமும் கூட அத்தனை உயிரோட்டமாகவே மனதினை கனத்துப்போக வைக்கிறது!

வறுமை, சாதி ரீதியான வெறுப்புக்களையும் சேர்த்து, ஒரு முக்கிய பிரச்சனை பால்ய விவாகத்து பிரச்சனையும் கூட இந்த படத்தின் மையகருத்தாக்கி அருமையாக படைத்துள்ளனர் ஒளி - ஒலியுடன் கிட்டதட்ட இரு வருடங்களுக்கு முன்பு வந்த படமாம்! ( அப்படியே தொடர்ச்சியாக கூகுளாண்டவரை வேண்டியதில் படத்தினையும் கூட பார்க்கும் வாய்ப்பும் பெற்றேன்! - லிங்கெல்லாம் கொடுக்கப்பிடாது தப்பு!)






பெரும்பாலான உலக திரைப்பட விழாக்கள் அனைத்திலும் கடந்த இரு வருட காலங்களில் திரையிடப்ட்ட இந்த படத்தினை பற்றியும் அதன் ஒவ்வொரு நிழல்படங்களிலும் அதை பற்றிய குறிப்புக்களுடன் முழுமையானதொரு தகவல்களையும் கூட நீங்க இந்த வனஜா பிரத்தியோக இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்!

குறிப்பு:- ச்சும்மா ஒரு விளம்பரம் படம் நல்லா இருக்கு கண்டிப்பா வாய்ப்பு கிடைச்சா பாருங்க!

ச்சவன்பிராஷ்!

தூக்கு சாடி மாதிரியான கைப்பிடி வைச்ச வடிவத்தில அப்போது வந்துக்கொண்டிருந்த ஐட்டம்தான் சவன்பிராஷ் அல்லது ஜவன்பிராஷ் ரெண்டுமே ரொம்ப கஷ்டமா இருக்குன்னா ஜீவன் பிரஷ்ன்னு வைச்சுக்கலாம்! - அப்படித்தான் இருக்குமாம் இதை சாப்பிட்டா!

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த லேகியத்தை சாப்பிட்டுவந்தால் நல்லா புஷ்டியாக ஆரோக்கியமாக இருக்கும் புள்ளைங்கன்னு எல்லா அம்மாக்களையும் போல எங்க அம்மாவும் இதை மாசம் மாசம் வாங்கி வைச்சு, வைச்சு தூக்கு வைச்ச பாட்டில்களால்தான் பயன் அதிகமானதே தவிர பசங்களுக்கு ஒண்ணும் ஆரோக்கியத்தும் அந்தளவுக்கு வந்து சேரலை - தின்னாத்தானே வரும்! லேகியம்ன்னா அவ்ளோ கசக்கும்ல! ( அதெல்லாம் திங்காமலே சும்மா அந்த மாதிரி புஷ்ன்னுத்தான் இப்ப இருக்கேன்ல!)

ஜீவன் பிரெஷ் ஒரு வித்தியாசமான சுவைன்னுத்தான் சொல்லணும்! புடிக்கும்னும் சொல்லமுடியாது!

அய்ய அதுவான்னு ஒதுக்கிவைக்ககூடிய அளவுக்கும் அவ்ளோ மட்டம் கிடையாது! சில சமயங்களில் சளி தொந்தரவுகளால் பாதிக்கப்படு மூச்சு விட சிரமம் படும் நபர்களுக்கு டாகடர்களே பரிந்துரைக்கும் மருத்துவம் இதுதான்!

டெய்லி ஒரு ஸ்பூன் காலையில உள்ள உட்டுக்கிட்டோம்னா சும்மா அவ்ளோ நல்லது உடம்புக்குன்னு கேட்டதுண்டுங்க! வாரம் வாரம் ஜீவன் பிரெஷ் புண்ணியத்துல எதாவது ஒரு புரோகிராம் டிடியை வளைச்சுக்கட்டி அடிக்கறத வைச்ச கண்ணு வாங்காம பார்த்ததுல அப்படியே பச்சக்குன்னு பதிஞ்சு போன விஷயம்தான் இந்த சவன்பிராஷ்!

என்னதான் ஊரில் இருந்தபோது கடைகளில் கண்டு,காணாமல்போனாலும் (அப்ப அருமை தெரியாது போல!) இங்க இப்ப திடீருன்னு பார்க்கறச்ச அப்படியே நினைப்பு நினைப்பா வந்து வுழுவுதுங்க! சரி ஏண்டாப்பா நீ கடைக்குப்போகணும் அதை பார்க்கணும் அப்புறம் இங்க வந்து அழுவணும்ன்னு கேட்கறது எனக்கு கேட்குது?

என்னங்க பண்றது? பத்து நிமிஷம் வெளியில (வெய்யில்ல) நின்னா பத்தி எரிஞ்சுடுவோம் போல இருக்கு அந்தளவுக்கு கொளுத்துது வெய்யில்! நிழல் கண்டு ஒதுங்குனாலே உடனே ஜில்லுனு தண்ணி குடிக்க தோணுது! அதை குடிச்சா ஆட்டோமேடிக்கா அடுத்த 2 மணி நேரத்துல ஜல்ப்பு புடிச்சுக்கிது! இவ்ளோ கஷ்டத்தையும் கண்ட்ரோல் பண்ணனும்னா எதாவது மருந்து சாப்பிடலாம்ம்னு எனக்கு தெரிஞ்ச இந்திய பொருட்கள் விக்கிற கடைக்கு போனப்ப இந்த சவன் பிராஷ்தான் டக்குன்னு கண்ணுல பட்டுச்சு! பதிவுல போட்டாச்சு!

சரி, கடையை பத்தியும் கொஞ்சம் சொல்லிக்கிறேன் தென்னிந்திய உணவுகள்னு சொல்லிட்டு எல்லாம் கேரளா பொருள் மட்டுமே வைச்சிருக்காணுங்க! இன்னொன்னு நம்ம ஊரு ரேஷன் அரிசி மாதிரியே வாசனையோட அரிசியும் இருக்குங்க! தஞ்சாவூர் பொன்னி அரிசியாம்! - கேரளாவுக்கு அரிசி கடத்தல்ன்னு சேதி படிச்சதுதான் இந்த சந்தேகம் என் ஞாபகத்துக்கு வருது! அது அப்பிடியே இங்கேயா வருது????

நிலவு ஒரு ஃபிகராகி உலவுகின்ற குரலோ...!



இவன் தான்... இவன் தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன்தான்...

என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ
ஏன்னை கூறு போட வருபவனோ
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!
என் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்...

என் பாவாடை பூக்களில்
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ

ரரராரரரரரரரரர....ரரராரரரரரரரரர
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!

லலலலலலலலா..

சுனிதா சாரதி - அருமையான இன்னிசை பாடகி!

யாரு அது? யாரு அதுன்னு? கேட்கறவங்களுக்கு கொஞ்சம் காலம் கழிச்சு படத்தோட பதிவு வரும்போது பார்த்துக்கலாம் அதுவரைக்கும் ஒன்லி அவுக பாட்டை மட்டும் கேட்டு ரசியுங்கோ...!

எண்...!?

ஏழாம் வகுப்பிலிருந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகள் வரை படித்த காலங்களில், எடுக்கும் மார்க்குகளின் மொத்த எண்ணிக்கையினை கூட்டினால் கூட நூறு வராத ( அதனால நான் நல்லாவே படிச்சிருக்கேன்னு நீங்க நினைச்சுக்கலாம்!) காலகட்டம்! தேர்வுகளில் மார்க் எடுப்பது என்பதே பெரிய விஷயம் அதுவும் 80 மேல் போவதென்றால் ஐயகோ....!

இந்த கவலைகள் ஒருபக்கம் இருந்தாலும் கூட ஒவ்வொரு முறையும் பொது தேர்வு எழுத செல்லும் போது, குறிப்பாக அறிவியல் தேர்வுக்கு செல்லும் போது கையில் 2 மார்க்கினை கொண்டே செல்லுவேனா பாருங்களேன்! கொண்டு சென்ற அந்த இரண்டு மார்க்கினை ஆசிரியரிடம் பேப்பர் வழி கொடுப்பதுதான் என் வழக்கம்! (அடப்பாவி! பிட்டு எழுதி எடுத்து போறத, என்னாமா டிசெண்டா சொல்றான்னு நினைக்காதீங்க! இது வேற...!)

நல்ல ஆசிரியராக இருந்தால் அதை அப்படியே 2 மார்க்கினை கொடுப்பார்! மத்த படி வாத்திகளெல்லாம் (கோவம்!) ஒண்ணு அல்லது ஒன்றரை போட்டு திரும்ப அனுப்புவாங்க!

ரொம்ப பெருமையா இருக்கும்!

அட...! நான் மட்டுமாங்க இப்படி பல பயபுள்ளைங்களும் இப்படித்தான் அறிவியல் பரீட்சைக்கு போயி மார்க்கு வாங்கி வந்திருப்பாங்க! சொல்லமுடியாது?! நீங்களே கூட இப்படிப்பட்ட என்னைய மாதிரியான ஆளாக கூட இருக்கலாம்!

ஆனாலும் பாருங்க மனசுக்குள்ள ஏண்டா..! இந்த ஒரு வரிக்கு ரெண்டு மார்க்கு கொடுக்கிறாங்களே இதெல்லாம் நல்லதுக்கான்னு ஏகப்பட்ட தடவை என்னையவே நான் கேட்டிக்கிட்டதுண்டு! ஒரு தடவை இப்படி புலம்பறப்பத்தான் ப்ரெண்டு ஒருத்தன் சொன்னான்! “நாதாரி அந்த ஆன்ஸரை முழுசா எழுதுங்கடான்னு சொன்னா அப்ப தெரியும்டி உனக்குன்னு..!

ஆமாங்க உண்மையிலேயே ரொம்ப கஸ்டமான விஷயம்தான், இந்த நம்பரை முழுசா எழுதச்சொன்னா...!



அவகாட்ரா எண்

ஆமாம் இந்த நம்பர் எதுக்கு பயன்படுத்துறன்னு எல்லாருக்கும் கேள்வி எழும்!

எழணும்!

சரி அந்த கஷ்டமான விஷயத்தை பத்தியெல்லாம் நாம் ஏன் அதுவும் இங்க பேசிக்கிட்டு அதப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்னும் கூட சிலருக்கு எண்ணம் வரும்!

வரணும்!

அப்பத்தானே நான் எஸ்ஸாக முடியும்! ( நல்லா அறிவியல் படிச்ச மக்கள் யாராவது வந்து வெளக்குவாங்க விடுங்க கவலையை!)

சுத்தம் காசு போடும் - ஆய் மேட்டர்!


பொது இடங்களில் அசுத்தம் செய்தால் தண்டனை - அறிவிப்புகள் ஆங்காங்கே காணும் அதே நேரத்தில் அங்கோ அல்லது அதற்கு அருகில் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு வகையில் அசுத்தம் செய்து கொண்டிருப்பதையும் காணும் நிகழ்வுகள் தான் அதிகம் நம் அன்னை தமிழ் நாட்டில்!

ஆனாலும் கூட ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ்நாட்டிலேயே...!

தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்றும் மற்றும் அரசு வேளாண் பல்கலையும் இணைந்து, தினமும் சுத்தமான முறையில் அசுத்தம் செய்பவர்களுக்கு தலா பத்து பைசா தந்து ஊக்குவிக்கும் ஒரு முறையினை செய்லபடுத்தியுள்ளதாம் - திருச்சி அருகில் இருக்கும் முசிறியில்....!

பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர் அறை ஒன்று வீதிகளின் அமைக்கப்பட்டு தற்போதைக்கு அதாவது இந்த நிமிடம் வரைக்கும் ஒன்லி ஒண்ணும் மட்டும்தானாம்! வேளாண் பல்கலையின் இயற்கை உரம் சம்பந்தமான ஆய்விற்கும் இந்த முறை சிறப்பானதொரு முடிவினை கொடுக்கும் என்று நம்புகின்றனர்!

இன்னும் சில நாட்களிலேயே ஒன்றும் இரண்டும் ஒன்று கூடும் வகையில் எளிய வடிவமைப்பில் தற்காலிக முறையில் அருமையானதொரு கழிவறையினை அமைக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தனியார் தன்னார்வ அமைப்பும் வேளாண் பல்கலையும்!

எது எப்படியோ இன்னும் சில தினங்களில் முசிறியில், சாலையில் நடக்கும் சகலரும் மூகமுடி அணிந்தோ அல்லது கர்சீப்பினால் மூடிக்கொள்ளாமலே நிம்மதியாக கை வீசி நடந்துப்போய் வரலாம்!

குறிப்பு:- செய்தி நான் படித்து தெரிந்துக்கொண்டது ஒரு வெளிநாட்டு இணையதளத்தில்! அதுவும் வித்தியாசமான தலைப்பில்!? இங்க சொன்னா நல்லா இருக்காது! இருந்தாலும் என்ன தலைப்பின்னு ஆர்வமா கேட்குறவங்களுக்காக நான் ரகசியமான மொழியில சொல்றேன்! ஒ.கேவா?!
fee to pee !

ஞான் மலையாளியாக்கும்!

இந்த ஜோக்ஸ் கிட்டதட்ட முணு வருஷங்களா போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு உலகமெல்லாம் மெயிலாக மாறி சுத்துன ஜோக்ஸ்!

நீங்களும் கூட எத்தனையோ தடவை

கேட்டிருக்கலாம்!

பார்த்திருக்கலாம்!

படித்திருக்கலாம்!

இருந்தாலும் கூட் இன்னொரு தடவை படிச்சா மட்டும் சிரிப்பு வராம அழுகையா வரப்போகுதுன்னுத்தான் இன்னிக்கு இந்த பதிவு!

இவ்ளோ திறமையான ஆட்கள் இருக்கும் கேரளம்!

What is the Latest Malayalee Punch Line?

Frem Tea Shops To Koll Cenders , We Are Yevery Where

Why aren't Mals included in hockey and football teams ?

Coz Whenever they get a corner, they set up a tea shop

Why did the Malayalee buy an air-ticket?

To go to Thuubai, zimbly to meet his ungle in Gelff

Why do Malayalees go to the Gelff?

To yearn meney

What did the Malayalee do when the plane caught fire?

He zimbly jembd out of the vindow

What is the tax on a Malayalee's income called?

IngumDax

Where did the Malayalee study?

In the ko-liage

Why did the Malayalee not go to ko-liage today?

He is very bissi

How does a Malayalee spell moon?

MOON - Yemma Woah yet another Woah Yenna

What is Malayalee management graduate called?

Yem Bee Yae

What does a Malayalee do when he goes to America?

He changes his name from Karunakaran to Kevin Curren

What does a Malayalee use to commute to office everyday?

An Oto

Where does he pray?

In a Temble, Charch and a Maask

Who is Bruce Lee's best friend ?

A Malaya-Lee of coarse

Why did he go to Rome ?

To hear POPE music.

Name the only part of the werld, where Malayalees dont werk hard?

Kerala

Why is industrial productivity so low in Kerala?

Because 86% of the shift time is spent on lifting, folding and re-tying the lungi

Why did Saddam Hussain அட்டாக் Kuwait?

He had a Malayalee baby-sitter, who always used to say 'KEEP QUWAIT' 'KEEP QUWAIT'


இதற்குமட்டுமல்ல ....!


இதற்கும்,







சேர்த்துத்தான் எங்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறது என்று சொன்னால் அதில் கிஞ்சித்தும் பொய்யில்லை!

பள்ளி பார்க்காத + பாலகர்கள் - தினமணியிலிருந்து....!


தமிழகத்தில், எய்ட்ஸ் நோய் பரவுவது கட்டுப்பாட்டு மையத்தால் நிகழ்த்தப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பிரசாரங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கப்படவேண்டிய விஷயம்.

எய்ட்ஸ் பாதிப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக சாபக்கேடான ஒன்று. பெரியவர்கள் முறையற்ற உறவுகளால் நோய் தாக்கி பாதிக்கப்படுவது கூட அவர்களது செயலுக்குக் கிடைத்த தண்டனையாக எடுத் துக் கொள்ளலாம். ஆனால் தவறு செய்த கணவனால் பாதிக்கப்படும் மனைவி, மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்ஐவி பாசிடிவ் கொண்ட ரத்தம் செலுத்தப்பட்டவர்கள், பெற்றோர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட குழந் தைகள் போன்றோர் உண்மையிலேயே பரிதாபமானவர்கள்.

குழந்தைகளுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கும் பட்சத்தில் அந்த இளவயதிலேயே அவர்களது வாழ்நாள் எண்ணப்படுவது தெரியாமலே வளரவேண்டிய சூழல். குழந்தைகளுக்கு 7 முதல் 8 வயது வரை தங்களுக்குள்ள பாதிப்பு பற்றி தெரியாமலே கூட இருக்கும். அதனால் அவர்களுக்கு மனதில் பாதிப்பு மிகுந்திருக்காது. ஆனால் இன்றைய கல்வி முறையில் 5 அல்லது 6-ஆம் வகுப்புகளிலேயே அறிவியல் பாடங்களில் இது போன்ற விஷயங்கள் விளக்கப்படுவதால் குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேற்றுமை, ஒற்றுமைகளை கேட்டது, படித்ததுடன் ஒப்பிட்டு ஆராய ஆரம்பித்து விடுகிறார்கள்.

எனவே நோய் பாதிப்பைவிடவும் மனதில் ஏற்படும் குழப்பமே அவர்களது வாழ்வுக்கு முதல் எதிரியாய் மாறுகிறது. இதனால் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் குழந்தைகள் அடுத்தவர்களை விட்டு ஒதுங்கிவிடுவதும் உண்டு. அவர்களின் விளையாட்டுத்தனம் போய் மனநிலை எதிலும் ஒன்றாமல் தனித்து விடப்பட்டதாக நினைத்து தடம் மாறவும் செய்கின்றனர்.

இந்நோய் தாக்கப்பட்ட பள்ளி செல்லும் குழந்தைகள் பக்கத்திலிருக்கும் குழந்தைகளிடம் இருந்து அதிக நோய்த் தொற்றுகளைச் சம்பாதிக்கும் வாய்ப்பும் அதிகம். இவர்களுக்கு வியாதி தாக்கக் கூடிய தன்மை அதிகம் என்பதால் சாதாரணக் குழந்தைகள் நோய்த் தொற்றால் வெறும் சளித் தொல்லைக்கு ஆளானால் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கு சளியுடன் உபரியாக நிமோனியாவும் (காய்ச்சல்) தொற்றிக் கொள்ளும்.

தோல் வியாதிகள் இவர்களுக்கு பெருந் தொல்லையாய் இருக்கும் என்பது அச்சுறுத்தும் உண்மை. சாதாரணக் கொசு கடித்தால் கூட இவர்கள் அரிப்பு, புண், ரத்தம் அல்லது சீழ் வடிதல் எனப் பாதிக்கப்படுவது பரிதாபம். எய்ட்ஸின் முக்கியத் தாக்கமே நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பது தான் என்ப தால் அரிப்பு, புண் போன்றவை சில நேரங்களில் தொடர்கதையாகும் வாய்ப்புமுண்டு.

மேலும் பள்ளிகளில் இவர்கள் எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் எனத்தெரிந்தால் அனேகமாக ஒதுக்கப்படுகிறார்கள். பல பள்ளிகளில் இவர்களைச் சேர்த்துக்கொள்வதே கிடையாது. இதனால் இவர்களுக்கு கல்வி என்பது கேள்விக்குறிதான்.

இக் குழந்தைகள் சந்திக்கும் அடுத்த பிரச்சனை அடைக்கலம். அனேகமாய் இக்குழந்தைகள் பெற்றோரிடமிருந்தே நோயைப் பெறுவதால் அவர்களின் பெற்றோரும் இறுதி வரை குழந்தையைப் பேண முடியாமல் இடையிலேயே மரணத்தைத் தழுவிவிடும் நிலையில் குழந்தைகள் அனாதை ஆக்கப் படுகிறார்கள். இந்நிலையில் குழந்தைகளின் தாத்தா, பாட்டி என யாராவது அடைக்கலம் கொடுத்தால் மட்டுமே உண்டு. ஆனால் அவர்களும் பொருளாதார நிலையில் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் குழந்தையின் நிலை அதோகதிதான்.

பெற்றோரை இழந்த, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளையே கண்டு கொள்ள ஆளில்லாத இன்றைய நிலையில் கூடுதலாக எய்ட்ஸ் தாக்கத்துக்கு ஆளான குழந்தைகள் என்றால் உறவுகள் சொல்லாமல் ஓடிப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை. இவர்களைப் போன்றோரை சேர்த்துக் கொள்ள சேவை இல்லங்களும் குறைந்த அளவிலேயே உள்ளன.

இவர்கள் சந்திக்கும் அடுத்த மிக முக்கியப் பிரச்னை மருத்துவம். இவர்களை அனேக தனியார் மருத்துவமனைகள் சேர்த்துக் கொள்ளத் தயங்கும் நிலை இன்றும் உள்ளது கண்டிக்கத்தக்க ஒன்று. பொருளாதார நிலையில் பின்தங்கியோர் அரசு மருத்துவமனைகளை நாடத் தயங்குவதில்லை. ஆனால் பணம் படைத்தோர் இங்கு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.

இக்குழந்தைகளை அரவணைக்க குடும்ப அமைப்பிலான இல்லங்கள் அமைப்பது, சமூகத்திலிருந்து ஒதுக்காத நிலையை ஏற்படுத்துவது, பள்ளிகளில் அங்கீகாரம், தனியார் மருத்துவமனைகளில் உரிய மருத்துவம், உறவுகள் விலகாமை, நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வு போன்றவற்றால் இவர்கள் மனப் புழுக்கம் இல்லாமல் எஞ்சிய நாள்களையாவது வாழ்ந்து பார்க்க வழி செய்வோம்!

கற்றுகொடுங்கள் இந்தியாவுக்கு!

பள்ளியில் படித்த காலத்தில் டீயுசன் படித்த நேரத்தில் கண்டிப்பாய் எல்லார் மனதிலும் பல வாத்தியார்கள் வில்லன்களாகவும்,இன்னும் பலர் ஹீரோக்களாகவும், வெகு சிலர் தாமும் ஜீரோ ஆகி, நம்மையும் ஜீரோவாக்கி பாடம் கற்பித்திருப்பதை நீங்கள் கண்டதுண்டு, கேட்டதுண்டு, அப்படியான அனுபவங்களில் சிக்கியதும் உண்டு!சரியா?!

சரி அந்த மாதிரியான சமயங்களில் நமக்கும் கூட சில பல எண்ணங்கள் தோன்றியிருக்குமல்லவா?

இதே வாத்தியாரு இப்படி கிளாஸ் எடுத்திருந்தா நாமளுக்கு நல்லா புரியும்?

இதே வாத்தியாரு இப்படி அப்ரோச் பண்ணியிருந்தா இன்னும் எவ்ளோ ஆசையாக இருந்திருக்கும்?

இந்த வாத்தியாரு எப்படி அழகா பாடம் புரியிற மாதிரி எடுக்கறாரு?

இந்த வாத்தியாரு எப்படி அன்பா திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கறாரு?

இப்படியான பல பல எண்ணங்கள் ( எனக்கு 2 எண்ணங்கள்தானப்பா திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வருது!) நம்ம மனசுக்குள்ளயும் ஏற்பட்டிருக்கும்!

அது மாதிரியான எண்ணங்கள் சிலருக்கு தீவிர விருப்பமாக மாறி, அழகாய் ஆசிரிய பணி செய்பவர்களாக மாறி விடுவார்கள்! ஆனாலும் கூட அந்த மாதிரியான ஆசைகள் அதிகம் இருந்தும் கூட சூழ்நிலை காரணமாய் தடம் மாறி அது போன்ற சந்தர்ப்பங்களுக்குள் செல்லாமலே பயணித்துக்கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு!

அது போன்றவர்களுக்காகவே,நேரம் இருக்கும் நிச்சயம் செய்ய முடியும் நம்மால், என்ற எண்ணமும் ஆர்வமும் கூட அதிகம் இருக்கும்! ஆனால் வாய்ப்புகள் என்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்க கூடியவையாக இருக்கும்! பகுதி நேர பணி வாய்ப்புக்கள் என்பது ரொம்ப அருகிய வாய்ப்பாகவே இருக்கும்!


இதே எண்ணங்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற, டைம்ஸ் ஆப் இந்தியாவின் “கற்றுக்கொடுங்கள் இந்தியாவுக்கு” என்ற திட்டம் கண்டிப்பாய் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு.....!

இனிய ஞாயிறு - கொண்டாட்டம்!



இசைக்கு மொழி லேது....!

அதுவும் தலைவியோட இந்த பாட்டை கேட்டுப்பாருங்க அப்புறம் நீங்களும் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!

(இந்தி & இங்கிலீஸ் தெரிஞ்ச மக்களுக்காக வேண்டி பாடல் வரிகளும் வைச்சிருக்கோம்ல..!)

haan Hai Koi to wajah
yes, there must be some reason
To jeena ka maza yun aane laga
because of which life suddenly became fun

Yeh hawaon mein hai kya
what is this in the air
Thoda sa jo naasha yun chane laga
which caused this intoxication
Pucho na pucha mujhe kya
go ahead ask me
Hua hai teri raahon mein aakar Pucho na pucha na
what happened to me when I met you?
Pucho na pucha mujhe kya
go ahead ask me
Milega teri bahon mein aakar
what will I find in your arms?

Yeh Ishq Haaye Baithe bithaye
this love, just like that
Jannat dikhaye haan
showed me heaven, oh yes
O raama
o God
Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan

Todi mene sare hi bandhan zamane Tere
I have broken all constraints of the world
Todongi na mein vada
but I will not break promise [to you]
Aadha hissa mere to dil ki kahani ka tu
half of my heart's story is you
Piya Mein baaki aadha
my beloved, I am another half

Dekho na dekho mujhe hua hai
look what has happened to me
Teri yaadhon mein kho kar
in your memories

Pucho na pucha mujhe kya
go ahead ask me
Milega teri baton mein jeekar
what will I get living in your memories

Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan
O raama
Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan

Mere jaise lakho mile honge
Tujhko piya
you, my darling, must have found thousands like me
Mujhe to mila tuu hi
yet you are the only one for me

Tu hi mere hooton ki khilti hui se hasi
you are smile on my lips
Gila bhi piya tu hi
and you are my complain too

Dekho na dekho mujhe kya hua hai
look what happened to me
Tujhe sapno mein lakar dekho na dekho
by bringing you in my dreams

Pucho na pucha mujhe kya
Hua hai teri baaton mein aakar

Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan
O raama
Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan

haan Hai Koi to wajah
To jeena ka maza yun aane laga

Yeh hawaon mein hai kya
Thoda sa jo naasha yun chane laga
Pucho na pucha mujhe kya

Hua hai teri raahon mein aakar Pucho na pucha na
Pucho na pucha mujhe kya
Milega teri bahon mein aakar

Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan
O raama

Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan

Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan
O raama
Yeh Ishq Haaye Baithe bithaye
Jannat dikhaye haan

ஆடி(ய)யோ காலங்கள் - 1

இன்னிக்கும் கூட நீங்க கிராமத்து பக்கம் போனீங்கன்னா இரவு நேரங்களில் இசை தாலாட்டு கேட்டவாறே ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் நபர்களை காணமுடியும்! வானொலி ஒலிபரப்புகள் முடிந்ததுமே, அடுத்து உடனடியாக ஆடியோ கேசட்களில் பக்தி,பழைய அல்லது புதிய பாடலக்ள் ஒலிக்கதொடங்கிவிடும்! இப்படியான இசைக்கு அடிமையானவர்கள் கண்டிப்பாக இந்த வார்த்தைக்கும் அடிமைப்பட்டே கிடப்பவர்கள்!

அசெம்ப்ள்டு செட்!

பெரும்பாலும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் இது போன்றவர்களின் அசெம்ப்ள்டு ஆடியோ செட்கள் ஆசையை நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அதுவும் பொய் இல்லை!

சும்மா ஒரு 300 - 500க்குள் ஒரு சின்ன ரேடியோ & ஆடியோ அப்புறம் ரெண்டு ஸ்பீக்கர் ரெண்டு ட்விட்டர்கள் கொடுத்தாக்கா அப்படியே காசு கொடுத்தவன் அடுத்த நிமிஷமே ஆடியோ உலகத்தில் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான்!



இதுவே கொஞ்சம் காசு அதிகம் உள்ள பார்ட்டீயா இருந்தா அவருக்கேத்த மாதிரி அவரோட ஆசைகளை பூர்த்தி செஞ்சு ஒரு ஆடியோ சிஸ்டம் ரெடி பண்ணிக்கொடுக்கவும் ரெடியா ஆட்கள் இருப்பாங்க! வேணும்ங்கறவங்க என்ன மாதிரியான எபெக்ட்ஸ் என்ன மாதிரியான சவுண்டு இருக்கணும் (தம்பி சவுண்டு வைச்சா தெருவே சும்மா கடந்து அல்லோலகல்லோலப்படணும்ம்ப்பா!) இப்படியான யூசர் ப்ரெண்ட்லியா சிஸ்டம் ரெடி பண்ணி கொடுத்துக்கிட்டே இருப்பாங்க!

இதுல முக்கியமான கட்டமே டெஸ்டிங்க்த்தான்! இதுலதான் பயபுள்ளைங்க ஏமாறதும், அப்பாவிகளை ஏமாத்துறதும் நடக்குற கட்டம்! பாட்டு போட்டு அதை கேட்டுட்டுத்தான் மிச்ச பணம் கையில கொடுக்க முடிவா இருப்பாங்க வாங்க வந்தவங்க! எப்படியாவது சிஸ்டத்தை தலையில கட்டிட்டு கையில இருக்கற காசை வாங்கறதுல குறியா இருப்பாங்க விக்கிறவங்க! இந்த இரண்டு பேருக்கும் நடுவுல கஷ்டப்படுறது யாருன்னு கேட்டா அக்கம்பக்கத்துல நிக்கிறவங்க,கடை வச்சிருக்கறவங்க இது மாதிரி ஆளுங்கதான்!

சிலவிபரமான ஆளுங்க கையில கேசட்டை கொண்டு வந்து கொடுத்து போட்டு பாடச்சொல்லி கேக்குவாங்க! அப்பத்தான் பழைய டேப்ரெக்கார்டருக்கும் புதுசுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம்னு! ஆனா பாருங்க,விக்கிற ஆளுங்க வாங்குற ஆளுங்க கொடுக்கற கேசட்டை பத்தி ஆயிரம் குறை சொல்லி நாங்க இப்ப போட்டுக்காட்டுறோம்! சவுண்ட் எபெக்ட் எப்படி கிழியுது பாருங்கன்னு சொல்லி இந்த பாட்டை போட்டதுமே எல்லா விவரமானவங்களும் ஏமாளியாக மாறி ஆடியோ சிஸ்டத்தை எடுத்துக்கிட்டு நடையை கட்டுவாங்க!

அப்படி என்ன இருக்கு அந்த பாட்டுலன்னு கேட்கறீங்களா?

ஒண்ணுமில்லைங்க! சிலு சிலு சிலுன்னு சவுண்ட் அப்புறம் புரியாத மொழி வேகமான பாடல் இது எல்லாத்தையும் கேட்டா வாங்க வந்தவங்க அப்படியே தன்னையே மறந்துட மாட்டாங்களா....???


எனக்கு தெரிஞ்ச வரையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திலிருந்த ஆல்ப பாடல் இதுவாகத்தானிருக்கும் - அதுவும் வேற எந்த ஒரு ஆல்ப பாடலகளும் வெளிவந்திராத காலகட்டத்தில்...! (நான் சொல்வது சரிதானே...??)

இட்லி மிளகாய் பொடி...!

நாற்புறமும் வட்டத்தில் குன்றுகளாய் அமைத்து,

அதன் நடுவில் அழகாய் விட்ட எண்ணெய்யில்,

குன்றுகளை கரைத்த பின் காணும் சொர்க்கம்!

காரமாகவே இருந்தாலும் கூட, கடலினிருந்து பெற்ற அமிர்தத்துக்கு இணையாக இட்லிக்கும் தோசைக்கும், துணையாக வரும் இந்த இட்லி மிளகாய் பொடியும் சாப்பிடாத ஆட்களுண்டோ...!



அனேகம் பேருக்கு அதிகம் அறிமுகமாவது இட்லிக்கு துணையாகத்தான்! அதுவும் கூட வீடுகளில் அவசரகால நடவடிக்கை சமயங்களில்தான்!

சூடச்சுட இட்லியும் அதற்கு துணையாக நல்லெண்ணை முழ்கிய மிளகாய் பொடியும் இருந்தால் போதும் எண்ணிக்கை இங்கு எடுபடாது!அப்படியே தின்று கொண்டே இருக்க தோன்றும்! அதை போலவே இந்த துணை தோசைக்கும் நன்றாக ஈடுக்கொடுக்கும்!

ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது தயிர்சாதத்துடன் + மிளகாய் பொடி -அனுபவிச்சு பாருங்கப்பா அர்த்தம் விளங்கும்!

கொஞ்சம் உளுத்தம் பருப்பு (வெள்ளை)
கொஞ்சம் சிவப்பு மிளகாய் ( அதாம்ப்பா காஞ்ச மிளகாய்!)
கொஞ்சம் கடலை பருப்பு,
கொஞ்சம் எள்,
கொஞ்சம் பெருங்காயம்,
இன்னும் கொஞ்சமா உப்பு,
அவ்ளோதாங்க! அப்படியே இட்லியை கொஞ்சிக்கிட்ட சாப்பிட்ட வைக்கலாம் இதை தொட்டுக்கொண்டு...!

சின்னபசங்க இந்த இட்லி மிளகாய் பொடி காம்பினேஷனா சாப்பிடுறதையும் கொஞ்சம் வாட்ச் பண்ணி பார்த்தீங்கன்னா, கொஞ்சமா இட்லி பிட்டு அதுல மிளகாய் பொடியை தோய்த்து கையில வைச்சுக்கிட்டு, கண்களால் அதையே ரொம்ப நேரத்துக்கு நோட்டம் விடற பார்த்தீங்கன்னா, நமக்கே அதை அப்படியே பிடுங்கி சாப்பிட்டணும் போல தோணும்! (அப்படியும் சாப்பிட்டிருக்கேன்ல....!)


இதெல்லாம் நார்மலா எல்லாரும் டிரைப்பண்ற விஷயம் நாமெல்லாம் அப்படியா...!??? இட்லி தோசை எல்லாம் அடிச்சு முடிச்சப்பிறகு மீந்து போயிருக்கு எண்ணெய் + மிளகாய் பொடியை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்து பாருங்களேன்..! ச்சே சான்ஸே இல்லப்பா!

யாருப்பா..! கண்டுபிடிச்சது இத்தனை ஆனந்தம் வரவழைக்கும் இந்த ஐட்டத்தினை..??

(இருக்கும்போது இல்லாத எண்ணம் இழந்தபோது தான் தோன்றியது! - ஆமாங்க லீவுக்கு ஊருக்கு போனப்ப அம்மாவை செய்ய சொல்லி, எடுத்து வந்த மிளகாய் பொடியை யாருக்குமே கொடுக்காமல்,கிட்டதட்ட 5 மாசம் பொத்தி பொத்தி வைச்சு தின்னு நேற்றையோட காலி! :-( )

தும் லகாகே ஹைய்சா..!



சிம்பிள் கான்செப்ட்டூ!

லாஜிக்கே கொஞ்சம் கூட இல்லாத மேட்டர்!

ஆனாலும் ஜனங்க மனசுல நல்ல பதிஞ்சுபோன விசயம்!

இன்னிக்கும் மார்க்கெட்டுல பெவிகால் தான் பிராண்ட் நேம் ஆகிப்போச்சு!

எவ்ளோ பேருக்கு ஞாபகமிருக்கோ தெரியல?

பட் யாரோ புண்ணியத்துல நான் இன்னிக்கு பார்த்து திரும்பவும் நல்லா ஞாபகப்படுத்திக்கிட்டேன் அந்த நாள் நினைவுகளை....!

அப்ப நீங்க!

(அட இது மாதிரியும் ஒரு வெளம்பரம் இருக்குல்ல....!)

400ல் - விருப்பமுடன் விடைப்பெறுகிறேன் உங்களிடமிருந்து....!


சற்றே குறைய 365 நாட்களை நிறைவு செய்து 400வது நாளினை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் நாழிகைகள் படு வேகமாய்...!

அப்போது இருந்த கவலைகள் பயங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் சென்றதும் இதே வேகத்திலேயே, இப்போது வரையிலும்..!

நட்புகள் பல பெற்றேன்!

நாளும் நிகழும் மகிழ்ச்சியின் பலனினை பகிர்ந்தேன்!

தமிழ் பாசத்துடனும் ,

தமிழ் நேசத்துடனும்,

தமிழ் உலகத்தோடு ஒட்டி உறவாடும் உறவுகளிடமிருந்து

மண்டியிட்டு,மலர்ந்த முகத்தோடு

அன்புடன் உங்களிடமிருந்தும் - உறவுகளிடமிருந்தும் - விடை பெற வேண்டி விரும்பி.....



உங்களின் நட்பு,
ஆயில்யன்.

















ஹைய்!

அஸ்க்கு!

புஸ்க்கு!

அவ்ளோ சீக்கிரத்தில போய்டுவேனா பதிவுலகை விட்டு...!

இன்னும் எவ்ளோவோ இருக்கு!

வரிசையா கீழே கொடுத்திருக்கற அத்தனை தமிழ் வார்த்தைகளுக்கும் பதில் சொல்லுங்க பார்ப்போம்! (திருமுறைகளில் படிக்க தொடங்கியபோது திணறிய வரிகளில் அர்த்தம் தெரியா வார்த்தைகள்!)

நரிபுரி
சுரிபுரி
தெரிபுரி
அரிபுரி
கீளலால்
பந்தார்
புழுவி
பெம்மான்
செம்மான்
விடுமின்கள்
புடை
வாரணம்
இகலல்
கூகா
ஆர்த்தான்

எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 2


நற்சிந்தனைகளை மனதில் எண்ணும் போது, திட்டமிடலும் சிறப்பாக அமையும். பின்னர், திட்டமிட்டபடி அதைத் திறமையாகச் செயல்படுத்த வேண்டும்.

செயல்களில் வெற்றிகாண தளராது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். முயற்சிகள் தோல்வியுற்றாலும் மனம் தளரக் கூடாது.

தோல்விகளுக்கான காரணங்களை பிறர் மீது திணிக்கக் கூடாது.

அனைவரையும் அன்பால் அரவணைக்க வேண்டும். அன்பினால் வெல்ல முடியாதது ஒன்றுமே இல்லை. இல்லத்திலும் சரி, வெளியிலும் சரி, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தனது பொறுப்பிலுள்ள அனைவரையும் அன்பால் அரவணைத்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.அவர்களது தேவைகளில் நிறைவேற்றக் கூடியவற்றை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக மன இறுக்கத்தை கைவிடப் பழகிக் கொள்ள வேண்டும். மன அழுத்தமானது மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், மனித உயிரையே மாய்த்துவிடும். எனவே மனசாட்சிப்படி நடக்க வேண்டும்.

மனசாட்சிக்கு ஏற்ப வாழ வேண்டுமானால், அதற்கு இன்றிமையாதது மனப்பக்குவம். இதற்கான பயிற்சிகளை நாள்தோறும் வளர்க்கத் தவறக் கூடாது.

இந்த உலகில் நிரந்தரமானது ஒன்றுமில்லை.மாற்றம் என்ற ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் மாற்றங்களுக்கு உள்பட்டது.

எனவே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, நாம்தான் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தோல்வியுற்றபோது துவளவும், வெற்றிபெறும்போது வீறுகொள்ளவும் கூடாது.எந்தச் செயலைச் செய்தாலும், அதை முனைப்புடன் செய்ய வேண்டும். முழு ஈடுபாட்டுடன் செய்தால்,கடினமானதும் கைகூடும். முடியாதது என்று ஒன்றுமே இல்லை.

பிறரை அழிக்க வேண்டும்; பிறருக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என்ற கொடிய எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. அனைவரும் நம் சகோதரர்களே என்ற அன்பு மலர்கள் நம் மனதில் மலர வேண்டும். அனைத்து உள்ளங்களும் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.

துன்பங்களையும், எதிர்பாராது ஏற்படும் இன்னல்களையும், தாங்கிக் கொள்ளும் வலிமையை, பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல்விகளை படிப்பினைகளாகக் கருதி, அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெல்வதற்கான முயற்சிகளை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்!

நன்றி - தினமணி

ஏற்கனவே போட்ட பார்ட்டு 1 இங்க இருக்கு!

டம் டம் டிகா! டிகா..!

ஏதோ ஒரு காலகட்டத்தில் கேட்டதில் பிடித்திருந்தது போல! (பசு மரத்தாணி போல பதியணும்னு இது மாதிரியான விஷயங்களைத்தான் சொல்லுவாங்க போல...!)

இப்போது தேடியதில் டக்கென்று கிடைத்தது!-

ரொம்ப பழைய படம் போல..!

ஆனா பாருங்க மழையில எவ்ளோ ஜாலியா டான்ஸ் + பாட்டு பாடறாருன்னு! பார்த்ததுமே மழை ஞாபகம் வந்துச்சு ( இதுல நேத்திக்கு ஸ்ரேயா படம் வேற போட்டிருந்தோம்ல! )



வழக்கம்போலவே பாட்டுக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே கேட்டு கேட்டு ரசிச்சாச்சு!

சும்மா டிரான்ஸ்லேஷன் டிரைப்பண்ணுனது!

இப்ப மழை பெய்த்துக்கொண்டிருக்கிறதாம்!
மனுசன் தண்ணி அடிக்காமலே கீழ விழுந்துக்கிட்டிருக்கானாம்!
ஆண்டவா ரொம்ப அழகா அருமையா இருக்கிறாராம்!
இப்படித்தான் எனக்கு ரெண்டுவரி புரிஞ்சுந்துப்பா!
(டேய்...! ஏண்டா ஹிந்தி இப்படி கொல பண்ணுறன்னு நீங்க கேட்டா? நான் என்ன பண்ணமுடியும் என்னால முடிஞ்சது இவ்ளோதான்!)

உங்களுக்கு மொழி தெரிஞ்சிருந்தா என்ன அர்த்தம்னு டிரான்ஸ்லேட் பண்ணி, புல் பாட்டையும் தமிழ்ல பாடிக்காட்டுங்களேன் சரி பதிவில் காட்டுங்களேன்! (சும்மா தெரிஞ்சு வைச்சுக்கதான்!)


Dum dum diga diga
Mausam bheega bheega
Bin piye maein to gira...Maein to gira
Haye allah, surat aap ki subhan allah

Teri ada wah-wah kya baat hai
Ankhiya jhuki jhuki, baatein ruki ruki,
Dekho lutera aaj lut gaya
Haye allah..

Sanam hum mana garib hain
Dhanda khota sahi banda chhota sahi
Dil yeh khazana hai pyar ka
Haye allah..

Teri kasam tu meri jaan hai
Mukhada bhola bhola, chupke daka dala
Jaane tu kaisa mehmaan hai
Haye allah...