
ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருந்த கூகுள் குரோம் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரீலிசு ஆகிடுச்சு!
ரீலிசுன்னு வார்த்தையை கேட்டாலே கை காலெல்லா உதறிப்போகும் முதல் ஷோவுக்கே டிக்கெட் கிடைக்கணுமே ராசானு ஃபீல் ஆகிப்போவேன்! அப்படித்தான் இப்பவும் ஆச்சு!
இளா அண்ணாச்சி சொல்ற மாதிரி யுனிகோட் டைப்பிங்க்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு! தமிழ் யுனிகோட் சரியா டிஸ்பிளே ஆகலை :-(
அதைபத்தி கூட நாம கவலைப்பட தேவையில்ல நம்ம தகடூர் கோபி அண்ணா இருக்காங்க! சரி செஞ்சுடுவாங்க அப்புறம் NHM குரூப்புக்கும் அப்பப்பா இது மாதிரியான சோதனைகள் வந்தாத்தானே இன்னும் நிறைய விசயங்கள் நமக்கு புதுசு புதுசா கிடைக்கும்! :-)
சரி எல்லாம் ஆண்டவன் விட்ட வழின்னு டவுன்லோடி பார்த்தா அட்டகாசமா வந்துச்சு தமிழ்மணம்!
ஒரு கிளிக்கினாலே டப்புன்னு பக்கத்துக்கு பக்கம் பாயுது பார்ப்போம்! என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு! ( அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா?)
இணையதளங்களை பார்த்துட்டு விண்டோவை குளோஸ் பண்ணிட்டு திரும்ப ஒபன் பண்றப்ப,அப்படியே அழகா பழைய ஹிஸ்டரி தம்ப்நெயில் (thumbnail) காமிக்குதுங்க சூப்பரா இருக்கு!
முதல் நாள் ரீலிசுலேயே பார்க்கணும்ன்னு ஃபீல் பண்றவங்க இப்பவே இங்க போய் பார்த்துடுங்க!
இல்ல எனக்கு இப்பவேணாம் பிறகு எல்லாரும் ரிவ்யூ பண்ணி அனுப்பட்டும் அப்பாலிக்கா பாத்துக்கிறேன்னு இருக்கறவங்க அப்படியே இருந்துக்கோங்க!
எல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்சு!
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
டபுள் சாட் - ஜி சாட்!
ஏற்கனவே இந்த சேதி தெரிஞ்சவங்க கண்டுக்க வேண்டாம்! - நிறைய பேருக்கு தெரியாமலும் இருக்கு! இன்னுமும் ஒரு இண்டர்நெட் எக்ஸ்புளோரர் விண்டோவினையும் இன்னொரு பயர்பாக்ஸ் விண்டோவினையும் வைச்சுக்கினு சாட்டிக்கிட்டிருக்காங்க! - பாவம்!
ரெண்டு ஜிசாட்டினையும் இன்ஸ்டால் பண்ணிக்கிட்டு இரண்டு யூசர் ஐடியில
இனி நீங்க ரொம்ப மகிழ்ச்சியாக சாட்டலாம்!
குகூள் சாட் வர்ஷனுக்கு இங்கே
குகூள் லேப் வர்ஷனுக்கு இங்கே
இது ச்சும்மா டிரையல் தானாம் !
எதுவா இருந்தா என்ன? நமக்கு புடிச்சிருந்தா புடிச்சிக்கவேண்டியதுதான்!
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
ஸ்கூல் நினைப்பு!
ஆறாவதில் ஆரம்பிக்கும் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் நாம் படித்த பாடங்கள் ஞாபகத்திற்கு வருகிறதோ இல்லையோ ஆசிரியரிடம் நாம் முதலில் வாங்கிய அடி அல்லது வாழ்த்து கண்டிப்பாய் ஞாபகத்துக்கு வரும்! (எனக்கு அடி வாங்குனது நல்லா ஞாபகத்துக்கு வருதுப்பா!)
ஒவ்வொரு வகுப்பிலும் வருடங்களை கழித்து மாறிச்சென்றது, மாறி செல்கையில் மறந்த நட்புகள்! சிலசமயங்கள் சோகம் அதிகம் கொடுத்த பிரிவுகள் என ஒரு 1000 ஜிபி அளவில் எண்ணங்கள் நினைவுகள் இருக்க கூடும்! - அவ்ளோ ஞாபகம் இருக்காடா உன்கிட்டன்னு ஆச்சர்யப்படறவங்களுக்கு நான் எல்லாத்தையும் வீடியோ பைலாக வைத்திருப்பதால் இருக்கும் என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
அவ்வப்போது பீறிட்டு கிளம்பும் எண்ணங்களை நினைவுகளை சொல்லி கொள்ள அருகில் நண்பர்கள் கிடையாது என்ற காரணத்தினாலும், போன் போட்டு அழ,அல்லது சிரித்து மகிழ வாய்ப்புக்கள் மிக காஸ்ட்லியாக இருப்பதாலும், இருக்கவே இருக்கு இணைய தொடர்பில் நட்புகள் என்ற தைரியத்திலும், ஊர் உறவுகள் தங்கள் உணர்வுகளினை பகிர்ந்துக்கொள்ள ஒரு இடம் வலைத்துப்போட்டிருப்பதாலும் இனி அங்கு இருந்தப்படியே உங்களை அவ்வப்போது சந்திக்கிறேன் என்ற செய்தியோடு மீ த எஸ்கேப்பு!
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
Labels: என் உள்ளத்தில், விளம்பரம்
இந்திய சுடர்!
ஆம்! இந்த சுடர் அஹிம்சையில் பாதையில் மெளனமாய் பலருக்கும் கல்வி தரும் விளக்கின் வெளிச்சமாய் எரிந்துக்கொண்டிருக்கிறது!
இருள் சூழ்ந்த உலகில் ஒளி ஏற்றி வைத்தவன் யாரோ அவனை நாம் இறைவன் என்றே நினைத்துக்கொள்வோம்! ஒளி இல்லாத உலகினை இன்று நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது! ஒளி இல்லாத உலகம் ஒன்றும் இல்லாத வெறுமையாய் இருக்கும் - வெண்மையாய் கூட இருக்காது! ஒளி - இங்கு கல்வியின் மூலம் பிரகாசிக்கிறது!
கல்வி கொடுப்போம் அதற்கு கரம் கொடுப்போம்! இதுதான் ஒரு சிலரின் சித்தாந்தமாக மனதில் தோன்றி மாறியது! அது இன்று பல நூறு ஏழை எளிய மாணவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளியாக மாறியிருக்கிறது! மேலும் இவர்களின் சுடர் வெளிச்சத்தால்...!
தன்னலம் கருதா சேவையினை மனதில் நிறுத்தி பணியாற்றும் ஆசிரியர்களால் கிராமப்புறங்களில் கல்வி வாய்ப்பினை அனைவருக்கும் அளிக்கும் திட்டங்களில் முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்!
எளிய ஏழை மாணவர்களும் பொருளாதாரத்தினை பெரியதாக நினைத்து கற்கும் கல்வியினை,ஏற்றமிகு வாழ்க்கையினை இடையில் நிறுத்தி செல்லும் வழக்கத்தினை மாற்றும் முக்கிய பணியிலும்..!
குறைந்த காலகட்டத்தில் பயிற்சியுடன் கூடிய தொழில் நுட்ப படிப்புக்களில் கிராமப்புற மாணவர்களை ஈடுப்படுத்தி, தாங்களாகவே தங்களின் திறமைக்கேற்ப வாழ்க்கை பயணத்தினை உறுதிசெய்யும் வேலைவாய்ப்புகளில் ஈடுபாடு காட்டிவருகின்றனர்!
இந்த ஒளியின் ஒரு துளியாய் இருக்கும் யாத்ரீகன் பதிவின் தொடர்பில், என் கண்ணில் பட்ட செய்திகளினை பற்றிய பகிர்தலினை பதிவினில் தந்து செல்கிறேன்!
செல்லும் இடமெல்லாம் எம்மால் முடிந்தளவு சிறு உதவிகளினையாவது செய்ய இயலும் என்ற நம்பிக்கையில்.....!
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
கற்றுகொடுங்கள் இந்தியாவுக்கு!
சரி அந்த மாதிரியான சமயங்களில் நமக்கும் கூட சில பல எண்ணங்கள் தோன்றியிருக்குமல்லவா?
இதே வாத்தியாரு இப்படி கிளாஸ் எடுத்திருந்தா நாமளுக்கு நல்லா புரியும்?
இதே வாத்தியாரு இப்படி அப்ரோச் பண்ணியிருந்தா இன்னும் எவ்ளோ ஆசையாக இருந்திருக்கும்?
இந்த வாத்தியாரு எப்படி அழகா பாடம் புரியிற மாதிரி எடுக்கறாரு?
இந்த வாத்தியாரு எப்படி அன்பா திரும்ப திரும்ப சொல்லிக்கொடுக்கறாரு?
இப்படியான பல பல எண்ணங்கள் ( எனக்கு 2 எண்ணங்கள்தானப்பா திரும்ப திரும்ப ஞாபகத்துக்கு வருது!) நம்ம மனசுக்குள்ளயும் ஏற்பட்டிருக்கும்!
அது மாதிரியான எண்ணங்கள் சிலருக்கு தீவிர விருப்பமாக மாறி, அழகாய் ஆசிரிய பணி செய்பவர்களாக மாறி விடுவார்கள்! ஆனாலும் கூட அந்த மாதிரியான ஆசைகள் அதிகம் இருந்தும் கூட சூழ்நிலை காரணமாய் தடம் மாறி அது போன்ற சந்தர்ப்பங்களுக்குள் செல்லாமலே பயணித்துக்கொண்டிருப்பவர்களும் பலர் உண்டு!
அது போன்றவர்களுக்காகவே,நேரம் இருக்கும் நிச்சயம் செய்ய முடியும் நம்மால், என்ற எண்ணமும் ஆர்வமும் கூட அதிகம் இருக்கும்! ஆனால் வாய்ப்புகள் என்பதுதான் கொஞ்சம் யோசிக்க வைக்க கூடியவையாக இருக்கும்! பகுதி நேர பணி வாய்ப்புக்கள் என்பது ரொம்ப அருகிய வாய்ப்பாகவே இருக்கும்!

இதே எண்ணங்களோடு இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களின் விருப்பத்தினை நிறைவேற்ற, டைம்ஸ் ஆப் இந்தியாவின் “கற்றுக்கொடுங்கள் இந்தியாவுக்கு” என்ற திட்டம் கண்டிப்பாய் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு.....!
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
ILA - இளா 2008
ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
சில காலங்கள் இயங்க முடியாத சூழல் இருந்தும் கூட, பெரும்பாலோனரின் முயற்சியில் மீண்டும் ஆட தொடங்கிவிட்டார்கள்!
சாரங்க் (மயிலாக மாறியவள்)
மயில் தோகை விரித்து ஆடும் இயந்திரபறவைகளாய் நம் இந்திய ஹெலிகாப்டர்கள் பறந்து ஆடிக்கொண்டிருக்கும் பெர்லின் நகரம்!
ஜெர்மனியின் பெர்லினில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் உலகில் சுமார் 37 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விமானங்களின்,அணிவகுப்புகளுடன் தொடங்கி,போய்க்கொண்டிருக்கிறது!
உயர்ந்துக்கொண்டே இருக்கும் பெட்ரோலிய பொருடகளின் விலைகள் அதற்கேற்றார்போல மாற்றி அமைக்கவேண்டிய சூழலில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதுவே இந்த கண்காட்சியின் முக்கியமானதொரு அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது!
புதிய ரக விமானங்களின் அறிமுகங்களும் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இந்த கண்காட்சியில் பல நாடுகளின் கொள்முதல் ஆர்வத்தை தூண்டு விதமாக புதிய வடிவமைப்பில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு சாம்பிள்தான் இந்த நியோ (குட்டியூண்டு ஹெலிகாப்டருங்க அனேகமா,கார் மக்களின் அடுத்த ஆர்வமிக்க பொருளாக மாறக்கூடும்!)
விமானங்களில் திங்கிறதுக்கு சோறும் குடிக்கிறதுக்கு கொடுக்கப்படும் தண்ணியும் வைக்க பயன்படுத்தப்படும் கண்டெய்னர்களுக்கு செலவிடப்படும் இடமும், மின் வசதியையும் குறைக்கும் நோக்கத்தில் பாக்கெட்வடிவில் கூல் ஆக்வும் ஹாட்டகவும் அதே சமயத்தில் குறைந்த இடவசதியோடும் இருக்கும் வகையிலான பேக்குகளும் கூட இந்த கண்காட்சியின் ஸ்பெஷல் ஐட்டங்களாம்!
ரொம்ப தூரம் நீண்ண்ட நேரம் பயணிப்பவர்களின் வசதிக்காக அதுவும் எகனாமிக் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அரெஸ்ட் ஆகி இருக்கும் நிலைமையை விடுவித்து, அங்க இங்க அலையறதுகும், அப்பப்ப உடம்பை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி சாதனங்களை நிரப்பப்போகிறார்களாம் அதுவும் கூட இந்த கண்காட்சியின் இன்னுமொரு ஸ்பெஷல்!

இன்னும் கூட நிறைய ஸ்பெஷல்கள் 1ண்ணு 1ணா வெளியே வரும் இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல :-)
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
அட்டகாசமான ஒரு விளம்பரம்!
கிட்டதட்ட ஒரு அம்பது விதமான பொருட்களை கொண்டு,
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
அப்புறமா அதை எக்ஸ்க்யூட் பண்ண
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
யோசிச்சு
கடைசியா வர்ற புராடெக்ட்
ரெண்டே இரண்டு நிமிஷம்தான்!
எவ்ளோ அட்டகாசமா,
எவ்ளோ கலக்கலா இருங்குன்னு,
நீங்களே பாருங்களேன்!
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
குட்டி நாய் - VODOFONE லேட்டஸ்ட் விளம்பரமும் + சர்ச்சையும்
எங்கு சென்றாலும் உங்களுடனேயே வரும் எங்களின் நெட்வொர்க்கும் என்று ஆரம்பத்தில் அசத்தாலாக அதுவும் அழகான நாய்குட்டியுடனான விளம்பரம் எல்லோரையும் கவர்ந்திருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை!
அப்படியே இது வரைக்கும் நான் அந்த விளம்பரங்களை பார்த்ததே இல்லை என்று ஃபீல் பண்ணுபவர்களுக்காய் இந்த கிளிப்
இதுதான் பிரச்சனைக்குரிய விளம்பரம் :-)
இந்த விளம்பரம்தான் பிராணிகள் வதை தடுப்பாளர்களின் லேட்டஸ்ட் ஹாட் மேட்டராகியிருக்கிறது!
எப்படி நீங்கள் அந்த குட்டி நாய் வேகமாக செல்லும் பஸ்ஸினை துரத்தி வருவதுபோல காட்சிகளை படமாக்கலாம்? இதற்காக அந்த குட்டி நாய்க்கு பயிற்சி என்ற பெயரில் வதை செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறீர்கள்? என்று விளம்பர தயாரிப்பாளார்கள் மீது கோர்ட்டுக்கு கேஸ் போய்விட்டது? அனேகமாக இந்த விளம்பரம் நீக்கப்படலாம்!
குறிப்பு:-
நம்ம ஊருகளிலும் தெருவுக்கு தெரு நாய்கள் இப்படித்தான், சாரி இப்படிக்கூட அல்ல இன்னும் வேகமாக துரத்திவந்தால் மக்கா யாரும் கல்லை எடுத்து அடிச்சுப்புடாதீங்க! பிராணிகள் வதை தடுப்பு சம்பந்தமான தண்டனைக்கு நீங்கள் ஆளாகலாம்,உங்க வாயை மூடிக்கிட்டு நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வீட்டுக்குபோய் சேருங்க..!
# ஆயில்யன் 16 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
அறியாமை இருள் அகலட்டும் - ஏப்ரல் 1- ல்
காலம் காலமாக "முட்டாள்கள் தினமாக' கடைப்பிடிக்கப்படும் ஏப்ரல் 1- ம் தேதியை, மருத்துவ அறியாமை இருள் போக்கும் தினமாகக் கொள்ளுங்கள்.
1. தினமும் குளிப்பது, நகங்களை அவ்வப்போது வெட்டி விடுவது உள் ளிட்ட அடிப்படைச் சுகாதார விஷயங்களில் கவனமாக இருங்கள்.
2. காய்ச்சிய தண்ணீரையே எப்போதும் குடியுங்கள். ஈ, கொசு மொய்க்கும் சாலையோர உணவுப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடாதீர்கள்.
3. வெயிலில் செல்லும்போது குளு குளு கண்ணாடி அணியத் தவறாதீர் கள். கண் புரை ஏற்படாது.
4. பசி இல்லாமல் நண்பர்கள் வற்புறுத்தினாலும் எதுவும் சாப்பிடாதீர்கள்.
5. மருத்துவச் செலவு காரணமாக நீங்கள் கடனாளியாக மாறாமல் இருக்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சேர்த்து மருத்துவ இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி - தினமணி
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
சிந்தால் (அல்லது) சின்தால் ஓல்டு :)

1952 களில் சுதேசி நிறுவனமான கோத்ரேஜ்ன் அட்டகாசமான படைப்புத்தான் சிந்தால(சிண்டால்) சோப்!
இந்தியாவின் முதல் டியோடரண்ட் சோப் என்ற பெயருடன் வணிகரீதியில் முன்னிடத்திற்கு வெகு விரைவிலேயே வந்து சேர்ந்தது !
காலங்கள் மாறிக்கொண்டிருக்க கோத்ரேஜ் கம்பெனியினருக்கே சற்று கவலையளித்திருக்கும்போல எத்தனை வருடங்களுக்க்குத்தான் ஒரே பிராண்ட்டில் வண்டி ஓட்டுவது என்று, அப்படி நினைத்துதான் அவர்கள்1990களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய சிந்தால் லைம் ஃப்ரெஷ் !
வணிக ரீதியில் சிந்தால் பெயரால் கொஞ்சம் ஒட்டம் இருந்தாலும்,நுகர்வோர்கள் -உண்மைதான் சிந்தாலை நுகர்ந்தவர்கள்தான் அதிகம்! விருப்பத்தின் படியே மீண்டும் சிவப்பு நிறச்சிந்தால் திரும்ப தன் விற்பனை இடத்தில் முன்ணனியை பிடித்தது, தொடர்ந்துக்கொண்டிருக்கின்ற சூழலில்,பெரிய பெரிய வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டிகளுக்கு இடையிலும்,விதவிதமான சோப்புகள்,திரவ வடிவிலும் வந்து கலக்கிக்கொண்டிருக்கின்ற நிலையிலும் தற்போதைய சிந்தாலின் நிலைமை கோத்ரேஜ் கம்பெனியினரை சிந்திக்க வைத்துவிட்டது!
தற்போது, ரொம்பத்தான் படுத்து போகவிடிலும், எதிர்காலத்தில் மார்கெட் நிலவரங்களை சோகமான செய்தியையே வரவழைக்கும் எனவே, இச்சமயத்திலேயே விளம்பரங்களை மையப்படுத்தி சோப்பின் விற்பனையை அதிகரிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியிருக்கிறது கோத்ரேஜ் கம்பெனி!
அந்த காலத்து அரவிந்த சாமியின் சிந்தால் விளம்பரம், ஆரம்ப காலத்து ஏ.ஆர்.ரகுமானின் இசையில்...!
குறிப்பு: விலங்குகளின் கொழுப்புகளை பயன்படுத்தாமல்,தாவர எண்ணெயின் மூலம் தயாரிக்கப்படுவதாலும்.இந்தியாவிலேயே தயாராவதாலும் சுதேசி டைப்பு ஆசாமிகள் நிச்சயம் டிரைப்பண்ணலாம்!
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
மண்ணின் மைந்தன் அது யாரு? - டி.ஆர்!
ஈழத்தமிழர்களின் வாழ்வு வளமும் நலமும் பெறவேண்டி,
இந்தியாவின் ஆயுத உதவிகளை நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் பொருட்டு,
அரசு பணியில் இருந்து,இது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆளுங்கட்சிக்கு,மத்தியில் காங்கிரஸ்க்கும் நெருக்கடியான சூழலை உருவாக்க விரும்பாத சூழலில்,
லடசியத்தை முதன்மையாக்கி.அரசுப்பணியை அலட்சியமாக்கி இன்று அரசு பணியிலிருந்து விலகும்
எங்கள் மயிலை மண்ணின் மைந்தன் டி.ஆருக்கு
வாழ்த்துக்கள் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
அர்ஜூனோட அம்மா இனி நதியா :)
சில வருடங்களுக்கு முன்பு வெளியான விளம்பரம் தான் அர்ஜுனோட அம்மா யாரு?
கிட்டதட்ட ஒரு மாசம் ஊரையே அலைக்கழிச்சு அப்புறமா தெரியவந்துச்சு அது ஆரோக்யா பால் விளம்பரம்னு
(4.5 பாலை குடிக்கிற ஏழரையை பெத்ததுதான் அந்த அம்மான்னு அதிகம் பேசப்பட்டது!
)
எத்தனை வருடத்துக்குத்தான் அந்த விளம்பரத்தையே ஒப்பேத்தறதுன்னு யோசிச்சி,யோசிச்சி பார்த்திட்டு கடைசியா அர்ஜுனோட அம்மாவை மாத்திட்டாங்க!
இப்ப அர்ஜுனோட அம்மாவா நதியாவை மாத்திட்டாங்க ஆரோக்யா நிர்வாகத்தினர்!
கான்செப்ட்ஸ் எல்லாம் நிறைய மாத்தி இனி அதிகமா பேசுறவங்கத்தான் அர்ஜூனோட அம்மாவாம் :)
இனி அழகான அர்ஜூன் அம்மா எல்லாருக்கும் அட்வைஸ் பண்ண டெய்லி டி.வி யில வருவாங்களே...!
2005காலத்து சோக்கு :-) (இலவச இணைப்புதான்!)
பழங்காலத்துக்கும் இந்த காலத்துக்கும் என்ன வித்தியாசம்
பழங்காலத்துல எல்லாரும் "கர்ணன் அம்மா யாருன்னு" கேட்டாங்க? இப்ப "அர்ஜூன் அம்மா யாரு"ன்னு கேட்கிறாங்க !
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பா! - TVS FLAME
.jpg)
மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட,
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து....!
நெருப்பாய்.....!
போர் விமானங்களை வடிவமைக்க பயன்படுத்தப்படும் டெல்டா டெக்னாலஜியின் அடிப்படையில் தரையில் தவழப்போகிறது டி.வி.எஸ்ஸின் ஃப்ளேம்
ரகளையான விளம்பரம், மட்டுமல்லாமல்,
125 சிசி
DTSi சொல்லப்படற ரெண்டு ஸ்பார்க் இக்னீசியன் செய்ற டெக்னாலஜி,
லிட்டருக்கு 82 கிலோ மீட்டர் மைலேஜ்,
டிஜிட்டல் டிஸ்பிளே,
மூன்று வால்வுகளில் இயங்கும் CC-VTi இன்ஜின் (இப்பத்தான் இந்தியாவுலயே அறிமுகமாகிறதாம்!)
கருப்பு தீம்!
என எல்லாமே பிகர்களை கரெக்ட் பண்ணவே, கணக்கு பண்ணி செஞ்ச மாதிரி ஒரு பீலிங்ஸ் :)
சரி லீவுக்கு வந்ததுதான் வந்தோம்! இந்த வண்டியை வாங்கிட்டு புல்லட்டு பாண்டி கணக்கா ஊரைசுத்துவோமேன்னு ஒரு ஆசை!
அதுவும் வாங்கின உடனேயே அந்த ஏவிசி காலேஜ் பஸ்ஸ ஒவர்டேக் பண்ணனும் ஒரு தீர்மானம் போட்டாச்சு ( ஆரம்பிச்ச ஒரு ஆசை இப்படியாக கிளை விட்டுக்கொண்டே போனது!)
டிவிஎஸ் டீலர்கிட்ட போய் வண்டி மாடலை சொன்னால் ஒரு மாதிரி எல்லோரும் திருதிருவென முழித்து இல்ல சார் இன்னும் வர்லை என்ற பதிலை தர ச்சேவென்று ஆகிவிட்டது!
அப்புறம்தான் தெரிஞ்சுது டிவிஎஸ் பைக் ரீலிஸ் பண்ணக்கூடாதுன்னு பஜாஜ் கம்பெனிக்காரன் ஸ்டே வாங்கிட்டான்னு!?
சரி அப்புறம் என்ன பண்ண முடியும்? கனவுக்கோட்டைகள் தகர்ந்து ஏவிசி பஸ் என்னைவிட்டு ரொம்பத்தூரம் போய்க்கொண்டிருந்தது- இருக்கிறது!
லீவு முடிஞ்சுப்போச்சு!
டி.வி.எஸ் கம்பெனியும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு,இந்த வாரம் திரும்பவும் பைக் ரீலீஸ் பண்ணப்போகுது!
வண்டி வாங்கப்போற பசங்களே....!
நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பா!
# ஆயில்யன் 1 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
லீவ் - ஊருக்குப்போகிறேன்..!
1.கடந்து போன பிறந்த நாட்களுக்காக நண்பர்களை நேரில் வாழ்த்த வேண்டும்
2.எங்கயாவது எந்த வித நோக்கமுமின்றி பைக் செல்லும் திசையில் செல்லவேண்டும்
3.என்னோட போட்டோவை பெருசா போட்டோ ஷாப்ல கொஞ்சம் கரெக்ட் பண்ணி வீட்ல மாட்டணும்!
4.யாருக்கிட்டயும் கோபப்படாம பேசணும்
5.முடிந்தவரைக்கும் நிறைய விஷயங்களை போட்டோ டாக்குமெண்டாக மாத்தணும்!
6.சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று வரணும்.
7.ஒரு நாள் முழுவதும் ரேடியோ கேட்கவேண்டும் (மொட்டை மாடியில் அமர்ந்து!)
8.புதிதாய் நிறைய நண்பர்களை சேகரிக்கணும்
9.மறந்துபோன நட்பு வட்டங்களை புதுப்பிக்கணும்
10.முடிந்தவரைக்கும் புத்தகங்கள் படித்து குறிப்பு எடுக்கவேண்டும்
11.நண்பர்களுடன் சென்று திரைப்படம் பார்க்கவேண்டும்
12.நண்பர்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களை சொல்லணும் (அரபு நாடுகளில் வேலைகள் பற்றி)
13.யோகா வகுப்பில் சென்று பயில்வதற்கு முயற்சிக்கவேண்டும்
14.ஸ்டாக் மார்கெட் பங்கு சந்தை இன்ன பிற சமாச்சாரங்களை பற்றி தெளிவாக நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்
15.கையில மருதாணி போட்டுக்கொள்ளவேண்டும்
16.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்தோம் என்று குறிப்பெடுக்கவேண்டும்
17.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்யப்போகிறோம் என்று குறிப்பெடுத்து செயல்பட வேண்டும்!
18.மொட்டை மாடியில் படுத்து தூங்கவேண்டும்
19.பெட்ரோல் போடாமல் வண்டியை தள்ளிக்கொண்டே தெரு சுற்றவேண்டும்
20.மணிக்கூண்டு அது சார்ந்த இடங்களில் சுற்றி திரிய வேண்டும்
21.எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்
22.இட்லி+சாம்பார்+சட்னி கலந்து சாப்பிடவேண்டும்
23.தலைமுடிக்கு டை அடிக்க முயற்சிக்கவேண்டும்
24.சைவதமிழ் புத்தகங்களை தருமை ஆதீனத்திலிருந்து வாங்கி வரவேண்டும்!
25.குசும்பன் ஊரை சுற்றியுள்ள அனைத்து சிவாலயங்களும் இந்த முறை செல்லவேண்டும்!
26.அண்ணாமலை பல்கலைகழகம் சென்று கண்டு வரவேண்டும்
27.நண்பர்களை ஒருங்கிணைத்து சுற்றுலா சென்று வரவேண்டும்
28.விழியில் விழுந்து எழுந்த மனிதர்களை சந்திக்கவேண்டும்
29.சைவத்தமிழிசை பாடல்களில் நாட்களை கழிக்கவேண்டும்
30.மஹதியிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
போன்ற எந்தவிதமான பெரிய எதிர்பார்ப்புக்களுமின்றி என் விடுமுறைக்கால பயணம் துவங்குகிறது :-)
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
மருத்துவ கழிவுகள் - சங்கடங்களை எதிர்நோக்கிய சங்கதி !

மருத்துவமனைகள், பரிசோதனை மையங்கள், கால்நடை சிகிச்சை மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவற்றிலிருந்து மனித, கால்நடைகளின் உறுப்புகள், ரத்தம் மற்றும் திரவங்கள், அவற்றைத் துடைக்கப் பயன்படுத்தப்பட்ட பஞ்சு உள்ளிட்ட திடப் பொருள்கள், காலாவதியான மருந்துகள், உடைந்த ஆய்வகக் கண்ணாடிகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கழிவுகளாக நாள்தோறும் வெளியேறுகின்றன.
மாநிலம் முழுவதும் இவ்வாறு வெளியே றும் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு மட்டும் ஏறத்தாழ 3 லட்சம் கிலோ என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றை அழிக்கும் முறைகள் வரையறுக் கப்பட்டுள்ளன. மனித உள்ளுறுப்புகளின் கழிவுகள், திசுப் பகுதிகள், கால்நடை மருத்து வமனைகளில் வெளியாகும் விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு பொசுக்க வேண்டும் அல்லது ஆழ மான குழியில் புதைக்க வேண்டும்.
நுண்ணுயிரியல் ஆய்வகங்களில் இருந்து வெளியாகும் கழிவுகள், மனித மற்றும் விலங்கு செல்களின் "கல்சர்' பொருள்கள் போன்றவற்றை "ஆட்டோ கிளேவ் அல்லது மைக்ரோ வேவ்' ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
கூர்மையான ஊசிகள், கத்திகள், கண்ணாடி- கண்ணாடித் துகள்கள் ஆகியவற்றை உடைத்துத் தூளாக்கி அழிக்க வேண்டும்.காலக்கெடு முடிந்த மருந்துப் பொருள்களை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆழமான குழியில் இட்டு அழிக்க வேண்டும்.
ரத்தத்தால் மாசுபட்ட பொருள்கள், உடலில் இருந்து வெளியாகும் திரவங்கள் துடைக்கப்பட்ட பஞ்சு, காரத்துணி, அழுக்கான துணிகள், படுக்கைகள் போன்றவற்றை வெப்ப உலையில் இட்டு அல்லது ஆட்டோ கிளேவ், மைக்ரோ வேவ் ஆகியவற்றில் இட்டு அழிக்க வேண்டும்.
இவை மட்டுமல்ல... மருத்துவமனைகளில் இருந்து வெளியாகும் திரவக் கழிவுகளையும், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்துவிட்டு கழிவுநீர்க் கால்வாய்களில் வெளியேற்ற வேண்டும் என்றும் விதிகள் கடுமையாக எச்சரிக்கின்றன.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட முறையில் வெப்ப உலையில் இட்டு அழிக்கும்போது ஏற்படும் சாம்பலையும் நகராட்சிக் கழிவு உரக்கிடங்கில் ஆழமாகக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்றும் எச்சரிக்கைகள் நீள்கின்றன. ஆனால், இந்த எச்சரிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன?
எல்லா நகரங்களிலும் குப்பைக் கழிவுகளுக்கிடையே பஞ்சுகளையும், சிரிஞ்சுகளையும் மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிகிறதே எப்படி? அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் போன்றோருக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகளை அளிக்கவும், கண்காணிப்புக் குழுக் களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இவை எதுவும் மாநிலத்தின் எந்த மூலையிலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனைப் பார்க்கும் போது அப்போதுமட்டும் "மூக்கைப் பொத்திக் கொண்டு' செல்லும் நம்மவர்களின் மன நிலை மாற வேண்டும்.சுருங்கச் சொல்லவேண்டுமானால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு தேவை !
நன்றி - தினமணி
# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க
Labels: விளம்பரம்
சென்னை புத்தக கண்காட்சி - 2008
வருடா வருடம் ஜனவரி மாதத்தில் பெரும் கொண்டாட்டமான ஒரு திருவிழா போன்று நடைப்பெறும், சென்னை புத்தக கண்காட்சி 2008ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 4 -வெள்ளிகிழமை தொடங்கி சுமார் 14 நாட்கள் 17 நிறைவுப்பெறும் வகையிலான ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் செய்து வந்தாலும் இதுவரையிலும் அந்தளவுக்கு ஊடகங்களில், ஊக்கம் அளிக்கும் வகையிலான, செய்திகள் ஏதும் காணப்படவில்லை இந்த எண்ணங்கள் தவிர
சில வருடங்களுக்கு முன்பு நான் சென்று சில புத்தகங்களை பெற்றதும், சில கடைகளுக்கு சென்றதும் சில கடைகளை கண்டதும், இன்றும் விழிகளில் நிழலாடுகின்றது! இந்த முறையும் கண்டிப்பாக செல்லவேண்டும் என்று மனதுக்குள் நம்பிக்கை வைத்துள்ளேன்!
இதே போன்றே மிகுந்த நம்பிக்கையோடு தமிழக முதல்வர் அவர்கள் சென்ற 2007 புத்தக கண்காட்சியின் போது அறிவித்திருந்த புத்தக் கண்காட்சிக்கென நிரந்தர இடம் பற்றிய நிலைப்பாடுகள் எந்தளவில் இருக்கின்றன, என்று இன்னும் கூட தெரியவில்லை (சரியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில்...?!)இந்த வருடமும் மக்களின் நல்வரவேற்புடனும்,புத்தக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையிலும் கண்காட்சி அமையும் என்ற எதிர்பார்ப்போடு...!
படங்கள் நன்றி :- திண்ணை & தமிழ்நாடு அரசு
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
தும் சலோ - LEAD INDIA
பார்க்கும் விஷயங்களில்
புரிந்துக்கொள்வோம்..!
புதிய இந்தியாவை வழிநடத்தி செல்ல
வாருங்கள்...!
வரவேற்று வாழுங்கள்..!
நன்றி:- தேசிய நலனில் தம்மை இணைத்துக்கொண்ட டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு
# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க
திருநீர்மலை – “கழிவு”ப்பாதையில்
சென்னைவாசிகளுக்கு அதிகமே பழக்கமான ஊராக கூட இது இருக்ககூடும்
திருநீற்றுமலையாக ஆன்மிக அன்பர்களுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு சின்ன ஊர்தான்!
இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது! சுமாராக 200 மேற்பட்ட வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து பெறப்படும் மீத்தேனை உபயோகித்து,அதன் முலம் சுமார் 3000 வாட்ஸ் சக்தியை பெற்று அங்குள்ள வீதிகளுக்கு விளக்குகளால் வெளிச்சம் அளித்துக்கொண்டிருக்கின்றனர்!
அங்கு அல்லது இங்கு போய் பாருங்களேன் என்னதான் நடக்கிறது என்று...? (அட நாத்தமெல்லாம் கிடையாதாம்ங்க!)
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க






