Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

அம்மா aka MY MOTHER



பாட்டி,அம்மா அக்கா பத்தி எப்பவுமே நினைக்கும்போதெல்லாம் கண்டிப்பா கண்கலங்கிட வைக்கும்! பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க! அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது! சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம்! வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது! அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான்! அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும்! என்னமோ தெரியல சரியா இன்னைக்குன்னு பார்த்து என் கண்ணில இந்த படம் வந்து பட, கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து அழுது முழுதாய் பார்க்க மனமின்றி நிறுத்தியிருக்கிறேன்!

படம் பார்க்க நினைத்தால் சற்றே படுவேகத்தில் ஒரு டிரெயிலர் டைப்பில பார்த்துட்டு படம் ஆரம்பிச்சு முடிக்கிற பழக்கம் உண்டு! அதுல ஒரு இண்ட்ரஸ்ட் அப்படித்தான் MY MOTHERம்

ரொம்ப அழகான ஒரு குடும்பம் அந்த பெண் மட்டும் தன் குடும்பத்தினரை விட்டு தன் தாயினை சந்திக்க ஊருக்கு செல்வதாக தொடங்கி இளம்பிராயத்துக்கு ப்ளாஷ்பேக் ஆகிறது! குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி! இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும்! மேற்கொண்டு சில காட்சிகளுக்கு பிறகு என்னால் தொடர முடியா மனநிலை!

நான் பார்த்த டிரெயிலரினை விட்டு படத்தின் டிரெயிலரினை மீண்டும் ஒரு முறை பார்க்க தொடங்கினேன் தொடர்ந்த காட்சிகள் முடிவில் ஒரு ரயில் நிலையத்தில் அம்மா பெருங்குரலெடுத்து அழுதபடியே பிரியா விடை கொடுக்கும் காட்சி ,அழத்தொடங்கிய என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் காட்சியாகி மறைந்துகொண்டிருக்கிறது!





படம் பாருங்கள் என்று சொல்வதை விட அந்த சூழலினை அனுபவியுங்கள்!

எங்கோ ஒரு மூலையில், அம்மாவினை பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற, பெண்கள் மட்டுமல்ல, ஆணகளும் கூட பார்த்தால், பிரிவின் வலி பெருகுவதை உணரமுடியும்!


டிஸ்கி:- வாழ்வியலின் பிரதிபலிப்புகளை சினிமாவாக, டிரெயிலரில்/டிரெயிலராக மட்டும் பார்த்து எழுத முற்பட்டது

நானும் சினிமாவும் - இன்னொருவாட்டி!

சினிமா பத்தி எழுதணும்ன்னு நினைச்சாலே கொஞ்சம் யோசனையாத்தான் இருந்திச்சு! எம்புட்டு விசயம் இருக்கு எல்லாம் பிளாஷ் அடிச்சுட்டு அடிச்சுட்டு மறைந்துக்கொண்டே இருந்துச்சு! முதல்ல பார்த்த படம் இதுவோ அதுவோன்னு ஒரு கன்ப்யூசன்! எப்படியோ ஒரு மாதிரியா போட்டு ஒப்பேத்தியாச்சு! (இன்னும் கிடைக்கவேண்டிய இடத்திலேர்ந்து ரிப்ளை கிடைக்கல! - அட பிரதர் கிட்டேருந்துதான்! ஆனா கிடைச்ச சேதிப்படி நான் tag பண்ணிவிட்டவங்க கலக்கியிருக்காங்க!)

நேத்து பதிவு எழுதி முடிச்ச பிறகும் கூட யாரோ கூப்பிடற மாதிரி ஒரு நினைப்பு இன்னிக்கு பார்த்த மெயில் வல்லியம்மா கூப்பிடிருந்தாங்க எதிர்ப்பார்ப்பு வைச்சிருந்தா ஏமாத்தகூடாதுன்னு இன்னும் ஒரு வர்ஷன் போட்டாச்சுப்பா!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


எங்க ஊர் கொத்ததெரு மாரியம்மன் கோயில் திருவிழா ஸ்பெஷலா புரொஜெக்டர்ல்லாம் வைச்சு தெருவையே பிளாக் பண்ணி அதிகாலை வரைக்கும் முழிச்சியிருந்து படம் பார்த்துதான் நான் பப்ளிக்கா -பப்ளிக்கே- பார்த்த முதல் படம்:- அதுவும் கந்தன் கருணை! (அதுலயே நான் பாதி படத்துல மயங்கிட்டேன்!)

******************


அண்ணன் அக்கா,நானு அம்மா பாட்டி என்று எல்லோரும் போய் பார்த்த கடைசிப்படம்ன்னா அது அஞ்சலி தான்! அதுக்கு பிறகு ஏனோ எல்லாரும் சேர்ந்து போய் பார்க்கற அளவுக்கான சூழ்நிலைகள் அமையவே இல்லை! (கிளிக்கு இறக்கை முளைச்சுடுச்சு எல்லாம் பறந்துப்போச்சு ஸ்டைல்தான்!)

******************

ரொம்ப பயந்துக்கிட்டே போய் படம் பார்த்துட்டு திரும்ப வரும்போதும் பயந்துக்கிட்ட வந்ததுன்னு சொல்லணும்னா மை டியர் குட்டிசாத்தான் படம்தான்! - போகும் போது படத்தை பத்தின பயம்! திரும்ப படம் முடிஞ்சு வரும்போது பையில மறைச்சி வைச்சு கொண்டு வந்த கண்ணாடியை தியேட்டர்காரன் பறிச்சிடுவானோன்னு பயம் அம்புட்டுதான்!

******************

சொந்தக்கார பயமக்களோட படம் பார்க்க அடம்பிடிச்சு போனது சுந்தரகாண்டத்துக்கு ஆனா அதுக்கு டிக்கெட் கிடைக்காம ஒபன்ல கிடந்த ரிக்‌ஷாமாமா போனது தான் நான் முதலும் கடைசியுமாகி போன இரவு நேர இரண்டாம் ஆட்ட சினிமா!

******************

ரொம்ப ஆர்வப்பட்டு,(மணி,ரகுமான் & ஐஸ்வர்யா) அவஸ்திபட்டு, நேரம் போயி, வெய்யில்ல நின்னு வெளுத்துப்போயி (வெள்ளை கருப்பானா கருப்பு வெள்ளையாத்தானே ஆகும்!) பார்த்து ஆனாலும் மத்தவங்க மாதிரி பாதியிலே எழுந்து போகாம பார்த்த படம்ன்னா அது இருவர்தான்! - பாதி இண்டர்வெல்ல பின்னாடியும் சரி முன்னாடியும் சரி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் தென்பட்டிருக்க வெளியில படம்முடிஞ்சு வரும்போது ஒரு 10 -15 பேர்தான் :-(

ஆனாலும் எனக்கு இப்பவும் பார்க்க பிடிக்கிது :-)

******************

பாலிடெக்னிக் கடைசி செமஸ்டர் கடைசி பரீட்சை முடிஞ்சு நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நியாபகமா படம் பார்த்துட்டு ஹோட்டல்ல போய் சாப்பிடலாம்டான்னு முடிவு பண்ண ஒ.கே பண்ணிட்டு மாரியப்பா தியேட்டருக்கு போனா காலேஜே அங்கதான் நிக்கிது (படம் - காதலுக்கு மரியாதை!) பார்த்தே தீரவேண்டும் என்ற ஆவல்,ஆனால் கூட்டம் ஒத்துவராது வேணும்னா இன்னொரு படத்துக்கு போவோ அதுவும் ஜூப்பரா இருக்குன்னு சொன்னாங்க என்று நான் சொன்னதை நம்பி வந்து,படத்தையும் பார்த்துவிட்டு இன்று வரை மறக்காமலே இருக்க வைத்த படம் - நாம் இருவர் நமக்கு இருவர் (போயும் போயும் இப்படி ஒரு படமாடா நமக்கு எண்ட்டூ கார்டு போடணும்ன்ன்னு நொம்பவே ஃபீல் பண்ணிட்டானுங்க நண்பர்கள்!)

******************

பயங்கரமா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி ஆனாலும் வேற வழியே இல்லாம வெறுப்பாய் தியேட்டருக்குள் சென்று 3 மணி நேரம் அமர்ந்திருந்து சில காட்சிகள் சில பாடல்கள் மட்டும் பார்த்து மற்ற நேரங்களில் கிடைத்த தீனிப்பண்டங்களை தின்றுகொண்டு வாரந்தாவிற்கும் தியேட்டருக்குள்ளும் நட(ன)மாடி இருந்துவிட்டு இப்பொழுது பாடல்கள் கேக்கும்போது பார்க்கவேண்டும் என்று நினைக்கவைக்கும் படம் - பாண்டி நாட்டு தங்கம்!

******************

கடைசியா ஆனா கலக்கல்ன்னு நான் நினைச்ச விசயம்:))


படையப்பா ரீலிசு!
பியர்லெஸ் தியேட்டர்ல பெரிய பெரிய சவுக்கை கட்டைகளையெல்லாம் கட்டி வழி அமைச்சு வைச்சிருக்காங்க!- ஏதோ பெரிய பார்ட்டீ மீட்டிங்க் மாதிரி! (அந்த காலகட்டத்தில இருந்த எங்க ஊரு சப்கலெக்டர் ஐடியா!) காலையில 8.30 மணிக்கு முதல் ஷோ! பேப்பர் வாங்க கடைக்கு வந்திட்டு வீட்டுக்கு போயிக்கிட்டிருந்த எனக்கு ஒரு சின்ன ஆசை போய்த்தான் பார்ப்போமே! (அந்த டைம்ல அண்ணன் ஊர்ல கிடையாது!) சைக்கிள் எதிர்ல இருந்த லைப்ரயில பேப்பரோட தள்ளிவிட்டுட்டு ஓடினேன்! ஒடினேன் கவுண்டரின் முன் வரைக்கும் ஒடினேன்! ஒரு சிக்கலும் இல்ல! டிக்கெட் வாங்கியாச்சு கடும் ஆரவாரத்திற்கிடையில் படமும் பார்த்து திருப்தியாகியாச்ச்சு - அதிலிருந்து தொடர்கிறது ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ! :-)

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இந்த பதிவு மூலமாவும் நான் ஒரு ஐந்து பேரை சினிமா பற்றி எழுத அழைக்கின்றேன்! கேள்விகள் பார்க்க இங்கு போய்ட்டு வரவும்!

மழை - ஸ்ரேயா

ஸ்கிரிப்பிளிங் ஸ்க்ரைப் - சங்கீத்

செல்லம் - ஸாவரியா

தயாமலர் - தினேஷ்

டிவிங்கிள் டிவிங்கிள் - சபரி

கனவு தொழிற்சாலையில்....?

1970களின் தொடக்கத்திலிருந்தே, நாடக உலக நடிகர்களின் சினிமாபிரவேசத்தின் மாயையை கண்டு அதை பற்றி, அவர்கள் வழியிலேயே தாமும் எப்படியாவது ஒரு பெரிய நடிகராக வேண்டுமென்ற விருப்பத்தில் (வெறி!?) ஊர் விட்டு உறவு விட்டு புது உலகு காணவந்து இன்னும் கூட தங்களின் கனவுகள் முழுதும் நிறைவேறாமல்,ஆனாலும் சினிமா உலகினை விட்டுச்செல்ல மனமில்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளம்!

காத்திருக்கும் வாய்ப்பு கிடைத்தால் சாதாரண மனிதர்களுக்கே கூட சில மணி நேர காத்திருப்புக்களுக்கு பிறகு, ஒரு இரட்டை நிலை எண்ணங்கள் தான் தோன்றும்! விட்டு விட்டு சென்றுவிடலாமா? விட்டு சென்ற சில நிமிடங்களில் நாம் எதற்காக காத்திருந்தோமோ அது நடைப்பெற்றால் பாதிப்பு நமக்குத்தானே? சரி இத்தனை நேரம் காத்திருந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு பொறுத்திருந்து பார்ப்போம் இதுதான் பொதுவாக எல்லோருடைய எண்ணங்களிலும் தோன்றும் இது பொதுவானது!

இதைப்போன்ற சூழ்நிலையே இப்படி சினிமா உலகில் விருப்பமுடன் நுழைந்து,ஆடம்பர வாழ்க்கையில் அதிசயித்து போன மனிதர்களுக்கு கண்டிப்பாய் அத்தனை எளிதாய் வெளியேறி வந்துவிட மனம் நினைக்காது! இருக்காது!

இந்த நடிகரும் கூட கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பே இளமையில் ஆரம்பித்த தன் நடிப்பு பணியினை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்! ஆனால் எந்தவொரு பெரும் பலன் இன்றி...!

இவர்களை நினைத்து கவலைப்படுகின்ற அதே நேரத்தில் இவர்கள் தம் எண்ணங்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை நிஜமாக அதிசயிக்க வைக்கிறது!

இவற்றையெல்லாம் விட, படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் கூட, இவர்கள்தான் சரியாக பொருந்துவார்கள் வேறு ஆட்கள் வேண்டாம்! என்று தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவு தந்துக்கொண்டிருக்கும், முன்னேறிய நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் பல மடங்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!





கழுத்தில் துண்டுடன், அண்ணன் ராமசாமி வாழ்க!
கொட்டகை கட்டிய கோமான் ராமசாமி வாழ்க! என்ற வசனத்தில் ஆரம்பித்து, பொட்டீ வர்லைங்க என்று கூறும் வரையிலான 10 நிமிட நடிப்பிலும்,



அவுட் ஆப் போகஸில், ஆனால் எல்லோரையும் டக்கென்று சிரிக்கவைக்கும் மிகக்குறுகிய நகைச்சுவை காட்சியில்,வழி தேடிக்கொண்டிருக்கும் நபராய்

ஒரு மனிதனின் கதை - ஆண்டனி..! மார்க் ஆண்டனி :-(

நெடிய உருவம்

வில்லன்களுக்கே உரித்தான் உருவ அமைப்பு அன்றி,

வசனங்களிலும்,நடிப்பிலும் மட்டுமே,

கொடூரத்தை காட்டிய முகம்,

இவரைப்பற்றிய் சில செய்திகளில் குடும்பத்தில் கொண்டிருந்த நேசத்தை தெரிவித்தன,

இவரைசுற்றியே பல செய்திகள் தீய பழக்கங்களுடன் கொண்ட நேசத்தை தெரிவித்தன!

நிஜத்தில் எப்படியெல்லாம், வாழக்கூடாது என்று காட்டிவிட்டு சென்ற மனிதன்!
திரையில் எப்படியெல்லாம் வில்லனாக வாழவேண்டும் என்று நடித்து காட்டிச் சென்ற மனிதன்!

ஆண்டனியின் (ரகுவரனின்) ஆன்மா சாந்தியடையட்டும் !


எப்போதுமே பார்த்துக்கொண்டிருக்க தோன்றும் படத்திலிருந்து ஒரு காட்சியாக...!!!

MADE IN இந்தியா :-)

1996களில் ஆடியோ கடைகளிலும் சரி வீடியோ வாடகைக்கு விடும் கடைகளிலும் இந்த பாடல் கேசட் இல்லாமலோ அல்லது ஒளி/ஒலிக்காமல் இருந்திருக்காது!

அந்தளவுக்கு ரொம்ப பயங்கரமான ஹிட் கொடுத்த பாட்டு!

அலிஷா அலிஷான்னு பித்து பிடிச்சு, கதறிக்கிட்டு கிடந்தது ஒரு கூட்டம்!

ஆடியோ கடைகளில் அசெம்பிள் செட்டின் மகிமையால் பாட்டு சும்மா ஜில்ஜில் சவுண்டோட அசத்திய காலங்கள் !

இந்தியாவைப்பத்தி பெருமையான பாட்டுன்னு நிறைய பேர் சொல்லுவாங்க,எதாவது ஒரு கடை பங்ஷன்னாலோ அல்லது ஆயுத பூஜைக்கோ சும்மா சவுண்டு கிழிக்கும் பாட்டு கேட்டு பாருங்களேன்....!


கடலோர கவிதைகள்..!

படித்த பெண், படிக்காத ஆண், இருவருக்குள்ளும் எழும் காதல் க(வி)தை!

பாரதிராஜா உருவாக்கிய புதுக்கவிதை!

காலை முதல் மாலை வரை எந்த நேரத்திலும், படத்தின் ஏதேனும் ஒரு பாடலை கேட்டாலே, மனம் குதூகலிக்க வைத்தது இளையராஜவின் இசைக்கு வைரமுத்துவின் கவிதைகள்!

படத்தில் ரேகாவிற்கு டீச்சராக உத்யோகம் - டீச்சர்களை பார்த்து குடை புடிச்சாங்களா? இல்லை இந்த படம் பார்த்ததுக்கப்புறம் டீச்சர்ஸெல்லாம் குடை புடிக்க ஆரம்பிச்சாங்களான்னு கொஞ்சம் குழப்பம்தான்!

டிபன் பாக்ஸ் எடுத்துப்போக மறந்தாலும் குடை எடுத்துபோக மறக்காத டீச்சர்களை நான் கண்டதுண்டு! அதை போன்ற கதாபத்திரத்திலும் ரேகா ரொம்ப அழகா நடிச்சுருப்பாங்க!

லொகேஷனும் பார்த்தீங்கன்னா..!? குளச்சல் முட்டம் ஏரியா டீச்சர் நெனைச்சா, உடனே கடற்கரைக்கு வந்து காத்து வாங்குவாங்கல்ல!

எல்லா படத்தில வர மாதிரியும் கெஸ்ட் ரோல்ல ராஜா (இப்ப எங்கப்பா ஆளையே காணும்?)

மற்ற விஷயங்களையெல்லாம் ரொம்ப டீடெயில போய் பார்க்கணும்னு தேவையே இல்லை! படத்தின் பாடல்களே உங்களுக்கு தெளிவாக்கிவிடும் படம் பற்றி...!


கொடியி்லே மல்லியபூ, மனக்குதே மானே, ஜெயச்சந்திரனின் குரலில் ஆரம்பிக்கும் பாடலுக்கு, ஜானகி குரல் இணையும் போது என்ன ஒரு ஆனந்தம்!




அருமையான கதை!

அதற்கேற்றார் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் !

இவையனைத்தும் அழகாக அரங்கேற்றப்பட்ட முட்டம் கடற்கரை!

மனதை உருக்கும் இசையில் என

அனைத்து அம்சங்கள் சேர்ந்து ஒரு படம் வந்தால் என்னவாகும்?

மனசு சிறகடிக்கும்..!

மகிழ்ச்சி பொங்கும்..!

வடிவேலு & ஸ்ரேயா - So What?











என்னாங்க இந்த மாதிரி போட்டோ பாக்கறப்பத்தான் ஒரு தன்னம்பிக்கை வருது!

ஆனா பாருங்க எவ்ளோ கூச்சல்..!

பொறமைக்கார பசங்கப்பா...!!!



மலைக்கோட்டை - இடம் அல்ல படம்!


விஷாலின் வழக்கமான ஆக்ஷன் படம்!

Photo Sharing and Video Hosting at Photobucket


அனேகமா இவருக்குன்னு கதை ரெடி பண்ற்துக்கு டைரக்டருங்க ரொம்ப கவலையோ அல்லது யோசனையோ பண்ண மாட்டங்க போல, அதே ஸ்டைல் கதைகள்தான்,ஆனால் கொஞ்சம் விறுப்பு விறுப்பு கூட்ட, மத்தவர்களிடமிருந்து கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்க முயற்சிப்பண்றாங்க!

டைரக்டரு காமெடி லைன் போல, அவரப்போயி ஆக்ஷன் லைனுக்கு கொண்டு வந்தா என்னா ஆகும் சில இடங்களில் காமெடியாத்தான் இருக்கு..! அதுவும் அவ்ளோ பெரிய உருவமான பொன்னம்பலமே என்னமோ வடிவேலு லெவலுக்கு கொண்டு போகப்போற மாதிரி காமெடி பண்ண வச்சுருக்காரு டைரக்டரு!

பாடல்கள் ஆஹா ரகம் இல்லையென்றாலும் மணிஷர்மாவின் கடைசியில் ஒரு ரீமிக்ஸ் சாங்குடன் முடித்து அவர் பணியை பின்ணணி இசையில் அதிக கவனம் செலுத்தினாலும்,அதுல பாருங்க ஒரு ஆளு இன்னொரு ஆள இரும்பு ராடால அடிக்குபோது,வர்ற சத்தம் பொதுவா அய்யோவாகத்தான் இருக்கும், ஆனா இங்க டிங்...! டிங்ணு..! என்னமோ பள்ளிக்கூடம் விடற மணிச்சத்தம் மாதிரியெல்லாம் மியூசிக் கொடுக்கறது ஒவரோ ஒவருங்க..!

படத்துக்கு தனியா காமெடி டிராக்னு இல்லாம கதை போகும் பாதையிலேயே காமெடியும் பயணிக்கிறது! அதுவும் குறிப்பாக ஆஷிஷ் வித்யார்த்தி,ஊர்வசி தனது காதல் ஜெயித்து பின் தோற்ற பிளாஷ் பேக் சொல்வதிலும் சரி, பின்னர் டீ பன் கொடுத்து கொஞ்சும் காட்சிகளும் அசத்தல்தான்..! (காமெடியாக பார்த்தால் மட்டுமே! இல்லையேல் அந்த பழக்க வழக்கமே நடக்காத ஒன்றுதான்..! – பின்ன காதலித்து விட்டு ஆண் இன்னொருவளை திருமணம் செய்து கொள்கிறான், ஆனால் பெண் அவன் வேலை பார்க்கும் இடங்களிலேயே, தானும் போலீஸாக வேலை பார்க்க அதுவும் கல்யாணமாகாமல்! )

Photo Sharing and Video Hosting at Photobucket


மெயின் கதைக்கு வருவோம்,கதாநாயகன் இந்த படத்திலிருந்து புரட்சி தளபதி ஆகியிருக்கிறார்! (ஆக்ஷன் சம்பந்தமா ஒண்ணும் பட்டமில்லையா..??? – ஆமாம் இவரு என்ன புரட்சி பண்ணாருன்னு கேள்வியெல்லாம் கேட்காதீங்க? நான் தமிழ் சினிமா விஷயத்தில் தரை டிக்கெட்டு!)

ஜாமீன் கையெழுத்துப்போட பட்டுக்கோட்டையிலிருந்து மலைக்கோட்டை மாநகருக்கு வரும்போது கதாநாயகியை கண்டு கண்டதும் இவருக்குள் காதல்..!? அதற்கேற்றாற் போலவே சந்தர்ப்பங்களை அமைத்துக்கொண்டு காதலிக்க தொடங்க,ஆனால் கதாநாயகி தான் வேறு ஒருவனை காதலிப்பதாக கூற, அவள் கூறிய ஆளோ குடும்பமா ரவுடியிஸம் பண்றவங்க! கதா நாயகன் தன் காதலியின் காதலனிடம் சென்று வாழ்த்து தெரிவிக்க,அப்ப ஆரம்பிக்கு(குத்)து (வாழ்த்து தெரிவித்தல்..! விஷன் 2020 இதுவும் உண்டா.??!!)

வில்லனாக கன்னட நடிகர் நன்றாகவே செய்துள்ளார்( டைரக்டர் சார் வில்லன் அடிக்கடி செருப்பை கழற்றிவிட்டு சிகரெட்டை அணைப்பது எதுக்கு?)

பின்ணணி இசை, சண்டை காட்சிகள்,நெறைய அடியாட்கள் ,மழை & கிராபிக்ஸ் உதவியுடன் வில்லனுக்கு சங்கு ஊதப்பட்டு சுபமாக முடிகிறது!

எல்லாம் முடிந்தப்பிறகு நடக்கும் விஷயங்களாக வில்லன் அடியாட்கள் திருந்தி வாழ்வதை சொல்லி தனது காமெடி ரசனையோடே படத்தை முடித்துள்ளார் டைரக்டர்!

சிலருக்கு தேவையான அல்லது தேவையில்லாத செய்திகளாக

தமிழக முதல்வர் இத்திரைப்படத்தை பார்வையிட்டார்..!

நம்ம அபி அப்பாவின் மனம் கவர் நாயகிதான் இந்த படத்தை ஆரம்பத்திலேயே அழுது தொடங்கி வைத்து,பின் அழுது தொடர்ந்து,கடைசியில் அமைதியாக செல்கிறார்!

பயங்கர வன்முறை நகரில் நடந்துகொண்டிருக்கும் போது,தமிழ்நாட்டுக்கே சென்டர் திருச்சி, திருச்சிக்கே சென்டர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல ஹீரோவும் வில்லனும் மோதிக்கொள்வதை, லைன் கட்டி பார்க்கும் அவ்ளோ மக்களை பார்த்ததும் தான் நமக்கு தோணுகிறது அட நம்ம தமிழ் படம்டா...!

எம்.ஜி.ஆர்...!

எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பினை,இணையத்தில் எனக்கு பிடித்தமான தமிழ் சினிமாக்களை தேடிக்கொண்டிருக்கும்போது கிடைத்தது,



சினிமா கலை நிகழ்ச்சிகள், திருமணங்கள் டாக்டர் பட்டம் பெற்றதற்கு கலை விழா என காட்சிகள் வரும் இத்திரையில் சில
சுவையான காட்சிகளாக,.

பாரட்டுவிழாவில், கலை உலகினருக்கு முடிவில் முத்தாய்ப்பாக சொல்லும் “நல்ல படமா எடுங்க”

‘ஜல்லிகட்டு’ படத்தின் நூறாவது நாள் விழா எம்.ஜி.ஆரின் கடைசி விழாவில், முதலில் வரும் சிவாஜிக்கு முத்தமளிக்கும், எம்.ஜி.ஆர், அடுத்து வரும் நம்பியார் விருதை வாங்கி விட்டு கன்னத்தை காட்டி முத்தம் கேட்க,அதை மறுத்து அமரும் எம்.ஜி.ஆர், அதை பார்த்து,நட்பாக நம்பியார் முதுகில் தட்டும் சிவாஜி, முத்தம் வாங்கிய இன்ப அதிர்ச்சியுடன், செல்லும் நம்பியார்.

காணக்கிடைக்காத காட்சிகள்தானே...!

இறுதியில் வரும் முன்னாள் முதல்வர் கடைசி நேர காட்சிகள்,
மனேரமாவிற்கு ஆறுதல் கூறும் ராதிகா,அழுது கொண்டே செல்லும் விஜயகாந்த (எவ்ளோ சிலிம்மா இருக்காரு பாருங்க!)

கூடவே நிற்கும் எஸ்.முத்துசாமி (முன்னாள் அமைச்சர்) இவரு இப்ப காணாமல் போனவர்கள் லிஸ்ட்தானே அந்த கட்சியில..!?

MISSION 90 DAYS – மலையாள சித்ரம்

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21 ல் ஆரம்பித்து, ஒற்றை கண் சிவராசன் தற்கொலை செய்துகொண்ட ஆகஸ்ட் 20 வரைக்கும்மான, இடைப்பட்ட காலத்தில், நடக்கும் படுகொலை பற்றிய, விசாரணைகளை அடிப்படையாக கொண்ட கதை!

Photo Sharing and Video Hosting at Photobucket

ராஜீவ் காந்தி படுகொலையானதற்கு பின்பு அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வு பிரிவின் செயல்பாடுகளையும், உண்மைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்!

அது மட்டுமல்லாமல் கேரக்டர்கள் கூட உண்மையான நபர்களின் பெயர்களுடனேயே...!

சி.பி.ஐ ஸ்பெஷல் இன்வெஷ்டிகேஷனில் பங்கு பெற்றவங்க பார்த்தாங்கான உண்மையிலேயே ,ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! மாதிரியான் மேட்டர் தான் படம் புல்லா! (டைரக்டரே அந்த டீம்ல இருந்தவர்தானாம்!)

கொலைக்கான காரணங்கள் அல்லது அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது சரியா தப்பா? விடுதலைப்புலிகள் செஞ்சது சரியா தப்பா? போன்ற விஷயங்களிலெல்லாம் ரொம்ப உள்ள போகாம, சாமர்த்தியமாக தவிர்த்து, ஒரு டிடெக்டிவ் ஆக்ஷன் படம் கொடுத்து அசத்தியிருக்காரு, டைரக்டரரு மேஜர் ரவி.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி கம்பீரமான கமாண்டோ உடையில் கச்சிதமாக பொருந்துகிறார் அதுவும், அமைதிப்படை செய்தது என்ன? பழி ஒரிடம் பாவம் ஒரிடமாக இந்திய ராணுவத்துக்கே கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசிய்லவாதிகள் நடந்துகொண்ட விதம் பற்றி ஆகரோஷமாக பேசும் கட்டத்தில் சூப்பர்!

ஒரு கட்டத்தில் சிவ்ராசன் & கோ இருக்குமிடம் தெரிந்து,லோக்கல் போலீஸ் கமாண்டோக்களுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்ல, அங்கு வரும் மம்முட்டி & குரூப்ஸ் என்ன சார் வீட்டுக்கு பக்கத்திலேயே இப்படி வரச்சொன்னா எப்படி சார் நாங்க பிளான் பண்றதுன்னு? கோபப்படுறதும், லோக்கல் போலீஸ்ங்களோ என்னமோ மாமூல் வாங்க வந்த மாதிரி சிவ்ராசன் & கோ தங்கியிருக்கும் வீட்டு காம்பவுண்ட் வாசல்ல ஹாயா நிற்கறதும் ! டைரக்டர் சார் உண்மை கதைதானா...?!

கிளைமாக்ஸ் காட்சி சிவராசன் குரூப்ப கார்னர் பண்ணியாச்சு,வீட்ட சுத்தி ஆங்காங்கே கமண்டோஸ் வீட்டை குறி வைச்சப்படி பார்த்துக்கிட்டு இருக்க,ஆனா மேலிடத்திலிடத்திலிருந்து,பிடிக்கறதுக்கோ அல்லது சுடறதுக்கோ ஆர்டர் வரலை, நைட் ஆரம்பிச்ச ஆபரேஷன் ஒரு பிராக்ரஸூம் இல்லாம போய்க்கிட்டே இருக்க,பகல் ஆனதும் மக்கள்ஸ் கூட்டம் கூடி – பீச்ல பொம்மை துப்பாக்கியால பலூன் சுடறவனை பார்க்கற கூட்டம் மாதிரி - லோக்கல் போலீஸ் வந்து கூட்டத்தை கலைக்குது!

ஒரு வழியா அந்த மேலிடத்து ஆர்டர் போடற ஆசாமி வந்து,இப்ப போய் புடிங்கப்பான்னு சொல்ல, அதுவரைக்கும் சிவராசன் & கோ என்ன காத்துக்கிட்டா இருப்பாங்க..!?

Photo Sharing and Video Hosting at Photobucket

கடைசியா என்ன மேட்டரு அப்படின்னு பார்த்தா, சிறப்பு பிரிவு அருமையான வாய்ப்பை தவறவிட்டதுக்கு காரணம், யார் பேரு வாங்கறதுங்கற போட்டித்தான்னு முடிக்க – முடிக்கலை அத வைச்சு நம்ம டி.ஆர் கார்த்திகேயன ஒரு இடி இடிச்சுருக்காரு, டைரக்டருன்னு சில மீடியாக்கள் சொல்ல ஆரம்பிக்க, ஆனா படம் கற்பனை கலந்த கதைன்னு டைரக்டர் சொல்லிட்டாரு!


சரி படம் எப்படி போய்க்கிட்டிருக்குன்னு கேட்கறீங்களா? எங்க போகுது பொட்டியிலயே படுத்து தூங்கிக்கிட்டு இருக்காம்...!? பின்ன 90% தமிழ் வசனங்கள் அத மலையாள படம்னு சொல்லி அங்க ரீலீஸ் பண்ணுனா எங்க போகும்? கொஞ்ச நாள்ல நம்ப ஊர்ல வரும் அப்ப பாருங்க!




மாயாவி

டைரக்டர் பாலா + கலைப்புலி தாணு உதவியுடன் தயாரித்த படம்,இயக்கியது, பாலாவின் உதவி டைரக்டராக பணிபுரிந்த சிங்கம்புலி! (பிதாமகன் ரீமிக்ஸ் சாங்குக்கு ஐடியா கொடுத்ததும் இவர்தானாம்)

Photo Sharing and Video Hosting at Photobucket

சூர்யா ஜோதிகா ஜோடியின் வெற்றிப்படமாக, அமைந்திருக்கவேண்டியது, ஆனால் என்ன காரணமோ – மக்கள்ஸோட டேஸ்ட் அந்த டைம்ல எப்படி இருந்துச்சோ தெரியலை படம் ஃபிளாப் ஆகிப்போச்சு!

பொதுவா பார்த்தா படத்தில கதை லாஜிக்ஸ்ன்னு ஒண்ணும் கிடையாது!

ஆனாலும் பாருங்க, படம் காமெடியாத்தான் போகும்,சூர்யாவோட கேரக்டர் கொஞ்சம் சோகம்,நெறையா காமெடி ஸ்டைல்ல, வித்தியாசமா பண்ணியிருப்பாரு, பிட் டைப் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்ல ஆளு அசத்தியிருப்பாரு!

ஜோடியாகத்தான் கடைசியில் இணைவார்கள் என்ற நம்பிக்கையை பொய்க்க செய்யும் கிளைமாக்ஸ்!

Photo Sharing and Video Hosting at Photobucket

நடிகை ஜோதிகாவை மீட்டு தரவேண்டி உண்ணவிரத காட்சியிலும் சரி டான்ஸ் மூவ்மெண்ட்களிலும் சரி சூர்யா அசத்தியிருப்பாரு! அதுவும் அந்த பென்சில் மீசையும் விதவிதமான கலர்களில் டிரெஸும் சூப்பர்!

அதை விட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் இடங்களிலும்,(ஒவர் ஆக்டிங்காக இருந்தாலும் ) அசத்தல்தான்!

சூர்யாவின நண்பராக, வரும் சத்யன் சிம்ரன் ரசிகர் மன்றம் பற்றி ஜோதிகாவிடம் சொல்லி கலாய்ப்பதும், ஜோ ஜோ ஜோதிகா பாடலிலும், நல்லாவே பண்ணியிருப்பாரு! – அனேகமாக அதுதான் ஹீரோ பொசிசன்லேர்ந்து, ஹீரோவுக்கு ப்ரெண்ட் கேரக்டர்களா டவுனான படமென நினைக்கிறேன்!

படத்தின் பெரும்பாலான காட்சிகளில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் ஜோ அம்மாக்கிட்ட விசாரணை நடத்தும்போதும் சரி,சூர்யாவோட உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும் சீனிலும் நன்றாகவே பண்ணியிருப்பாரு!

பாலா தயாரிப்பு படம்னா எதாவது சென் டிமெண்ட் சீன் இருந்தாகுணும்ல அதுக்குத்தான் சிகப்பி கேரக்டர்!

கெஸ்ட் ரோலில் விக்ரம் வருவார் என பிரபலப்படுத்தப்பட்டாலும்,பிதாமகன் சம்பள பிரச்சனையால் அவர் நடிக்கவில்லை!

தெலுங்கு இசையமைப்பாளார் தேவிப்ரசாத்தின் இசையில் பாடல்களும் அதிலும் புஷ்பவனம் குப்பு சாமியின் பாடல் ஆட்டம் போட வைக்கும் வகைதான்!

சிகப்பி பாடும் கடவுள் தந்த அழகிய வாழ்வு உண்மையிலேயே சிந்திக்க வைக்கும் வரிகள் – படத்தோடு சேர்ந்து இந்த பாடலும் அந்தளவுக்கு பேசப்படாமல் மறைந்து போனது! நேரம் இருக்கறப்ப நீங்க கேட்டு பாருங்களேன்!

என்னடா ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த படத்த பத்தி இப்ப, அப்படின்னு கேட்கறீங்களா? இப்பத்தாங்க் நெறையா டைம் கிடைக்குது அதுவுமில்லாம, ஆன்லைன்ல போட்டி போட்டுக்கிட்டு படம் கொடுக்கறாங்களே!