கண்ணில் பட்ட கேமராவில் சுட்டவை - ஜனவரி 2008 PIT க்கு

எது இன்பம் ?

எது துன்பம் ?

இவற்றின் மதிப்பு எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது

இன்பத்தை விட்டுவிடச்சொல்லி, தத்துவம் நம்மை வற்புறுத்துவதில்லை;

மாறாக,

உண்மையான இன்பத்தை அறிந்து கொள்! என்றே அது வற்புறுத்துகிறது.

- சுவாமி விவேகானந்தர்

முக்கிய தேவை பல இடங்களில் - காலணிமுக்கிய தேவை இந்த காலத்தில் - மொபைல் போன்
முக்கியமானது ஆனால் முக்கியமற்று கிடக்கும் - வடிகட்டிதற்போது இதன் தேவை சற்று குறைய தொடங்கியுள்ளது - துணி சோப்வாழ்வின் அவசியம்வீட்டின் தேவை - சாவிநாகரீக உலகில் நகைகளின் இருப்பிடம்அடிக்கடி தமிழ் பதிவுலகு வந்து செல்பவர்களுக்கு :)
லீவ் - ஊருக்குப்போகிறேன்..!

1.கடந்து போன பிறந்த நாட்களுக்காக நண்பர்களை நேரில் வாழ்த்த வேண்டும்

2.எங்கயாவது எந்த வித நோக்கமுமின்றி பைக் செல்லும் திசையில் செல்லவேண்டும்

3.என்னோட போட்டோவை பெருசா போட்டோ ஷாப்ல கொஞ்சம் கரெக்ட் பண்ணி வீட்ல மாட்டணும்!

4.யாருக்கிட்டயும் கோபப்படாம பேசணும்

5.முடிந்தவரைக்கும் நிறைய விஷயங்களை போட்டோ டாக்குமெண்டாக மாத்தணும்!

6.சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று வரணும்.

7.ஒரு நாள் முழுவதும் ரேடியோ கேட்கவேண்டும் (மொட்டை மாடியில் அமர்ந்து!)

8.புதிதாய் நிறைய நண்பர்களை சேகரிக்கணும்

9.மறந்துபோன நட்பு வட்டங்களை புதுப்பிக்கணும்

10.முடிந்தவரைக்கும் புத்தகங்கள் படித்து குறிப்பு எடுக்கவேண்டும்

11.நண்பர்களுடன் சென்று திரைப்படம் பார்க்கவேண்டும்

12.நண்பர்களுக்கு வேலை சார்ந்த விஷயங்களை சொல்லணும் (அரபு நாடுகளில் வேலைகள் பற்றி)

13.யோகா வகுப்பில் சென்று பயில்வதற்கு முயற்சிக்கவேண்டும்

14.ஸ்டாக் மார்கெட் பங்கு சந்தை இன்ன பிற சமாச்சாரங்களை பற்றி தெளிவாக நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்

15.கையில மருதாணி போட்டுக்கொள்ளவேண்டும்

16.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்தோம் என்று குறிப்பெடுக்கவேண்டும்

17.ஒரு நாளில் நாம் என்னென்ன செய்யப்போகிறோம் என்று குறிப்பெடுத்து செயல்பட வேண்டும்!

18.மொட்டை மாடியில் படுத்து தூங்கவேண்டும்

19.பெட்ரோல் போடாமல் வண்டியை தள்ளிக்கொண்டே தெரு சுற்றவேண்டும்
20.மணிக்கூண்டு அது சார்ந்த இடங்களில் சுற்றி திரிய வேண்டும்

21.எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்

22.இட்லி+சாம்பார்+சட்னி கலந்து சாப்பிடவேண்டும்

23.தலைமுடிக்கு டை அடிக்க முயற்சிக்கவேண்டும்

24.சைவதமிழ் புத்தகங்களை தருமை ஆதீனத்திலிருந்து வாங்கி வரவேண்டும்!

25.குசும்பன் ஊரை சுற்றியுள்ள அனைத்து சிவாலயங்களும் இந்த முறை செல்லவேண்டும்!

26.அண்ணாமலை பல்கலைகழகம் சென்று கண்டு வரவேண்டும்

27.நண்பர்களை ஒருங்கிணைத்து சுற்றுலா சென்று வரவேண்டும்

28.விழியில் விழுந்து எழுந்த மனிதர்களை சந்திக்கவேண்டும்

29.சைவத்தமிழிசை பாடல்களில் நாட்களை கழிக்கவேண்டும்

30.மஹதியிடம் தினமும் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்

போன்ற எந்தவிதமான பெரிய எதிர்பார்ப்புக்களுமின்றி என் விடுமுறைக்கால பயணம் துவங்குகிறது :-)

பதி பசு பாசம்...!

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நில்லாவே.

என் கண்களில் அதிகம் தென்பட்ட வர்த்தையாக இது இருந்தது அடிக்கடி தருமபுரம் பக்கம் செல்லும் போதும் சரி மாத இத்ழாக வரும் ஞானசம்பந்தம் இதழிலிலும் சரி, இந்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்!ரொம்ப நாட்களாக இதன் அர்த்தங்கள் தெரியாது,யாரிடம் கேட்டாலும், நீயெல்லாம் சின்னபயடான்னு தான் பதில் வரும்( ஒரு வேளை அவங்களுக்கும் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்!)

பதி பசு பாசத்திற்கான விளக்கம் வெகுநாட்கள் கழித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.

பதி இறைவனையும் பசு எனப்படுவது ஆன்மா அல்லது

உயிரையும் பாசம் எனபது மலங்கள் என்று அழைக்கப்படும்

ஆணவம் கன்மம் மாயை குறிக்கும் சொற்களாம்ஒரு முறை இந்த பதிபசுபாசத்தொகையின் புத்தகம் எங்களின் பெரியப்பா வீட்டில் யாருக்கும் உபயோகமின்றி இருந்தப்போது அதை நான் எடுத்து வந்து படிக்க முயற்சித்து,முடியாமல் தனித்தனியாக டைரியில் எழுதி வைத்து, அப்போதும் அது சம்பந்தமாக சரியான விளக்கங்களுக்கு புரிந்து கொள்ள இயலாமல் விட்டுவிட்டேன்! அதிலிருந்து சில வரிகளாக சிற்சில பகுதிகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் ஆழ பதிந்து எண்ணங்களுக்கு விதையாகவும் அமையும்!

உதவி இரவி உலகுக்கு

இரவிக்கு உதவி செய்யுமோ உலகு

உலகத்திற்கே உதவும் சூரியனுக்கு உலகம் என்ன செய்யப்போகிறது? என்ற விடை தெரியாத கேள்விகள் சில வரிகளாக நிறைய உள்ளன.

பொதுவாக இது போன்ற புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே பீதி கிளம்பும்
இவர்களால் இயற்றப்பட்டு;
இவரது உரையுடன்;
இவரது திருவுளப்பாங்கின்படி;
இவரால் பரிசோதனை செய்யப்பட்டு;
இவர்களால்,
இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது .
இவை அனைத்தையும் படித்து முடிக்கும் முன்பே அலுப்பு வந்து புத்தகம் திரும்பவும் ஒரு மூலைக்கு போய் விடும்!

ஆனாலும் கூட இது போன்ற புத்தகங்களை படிப்பதன் மூலம்தான் பழந்தமிழ் மொழி சம்பந்தமான,நிறைய சொற்களை தெரிந்து கொள்ளலாம்!

முடிந்தால் முயற்சித்து பாருங்களேன்!

அசத்தும் தினமணி - சென்னை புத்தக கண்காட்சி 2008

2008ல் எவ்வித ஆர்ப்பாட்டமின்றி, மழையோடு சேர்ந்து ஆரம்பித்த புத்தக கண்காட்சி நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு!

மிக்க ஆர்வத்தோடு வந்து செல்லும் கூட்டம் போட்டிபோட்டுக்கொண்டு புத்தக கண்காட்சிக்காகவே பல புதிய படைப்புக்களும், வெளியாகிக்கொண்டிருக்கின்றன!

சீசன் டைப்பு புத்தகங்களாக முன்பிருந்த வாஸ்து சமாச்சாரங்கள் ஒதுங்கிக்கொள்ள, தன்னம்பிக்கை,சுய முன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களின் தேடல்கள்தான் இந்த ஆண்டின் ஸ்பெஷல் (பெரும்பாலும் எல்லா வருடங்களுமே இதற்கு மவுசு இருக்கத்தானே செய்கிறது!)

இடதுசாரி கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்களின் மீது இளைய தலைமுறை புத்தக ஆர்வலர்களின் பார்வையை திருப்பியுள்ளது இந்த வருட புத்தக கண்காட்சி!

வழக்கம்போலவே இந்த ஆண்டும் கண்காட்சி பற்றிய ஒரு பக்க அளவிலான செய்திகள், கண்காசட்சிக்கு வரும் பிரபலங்களின் பேட்டிகள் என அசத்திக்கொண்டிருக்கும் தினமணியிலிருந்து...!

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

எனத்தொடங்கும் அந்த தேவாரப்பாடல் சாதாரணமாக முத்லில் தோன்றினாலும் 63 நாயன்மார்களின் வரலாற்றை ஒரிரு வரிகள் சொல்லி முடிக்ககூடிய திருத்தொண்டர் புராணமாக எனக்கு தெரிய வந்தது வெகு நாட்கள் கழித்துத்தான்!


வாரங்களின் இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில்,பெரிய கோவிலை வலம் வராவிட்டால் தொடங்கும் வாரமே,எதையோ தொலைத்துவிட்டு,ஆரம்பிப்பதை போன்ற எண்ணம்!

ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தாலும் பெரிய கோயிலில் அவ்வளவாக கூட்டமிருக்காது,நாம் நினைத்தப்படியான வழிபாடுகளை,தேவாரப்பாடல்களை உரக்க நம்க்கு தெரிந்த ராகத்தில் பாடலாம்,உட்கார்ந்து யோசிக்கலாம்? அதாங்க தியானமுனு சொல்வாங்க ஆனா பாருங்க நான் எப்ப அத செஞ்சாலும், உட்கார்ந்து ரொம்பத்தான் யோசிப்பானே என்ற ரீதியிலேயே அமையும்! சாதரணமா வராத நினைப்பெல்லாம் வரும்,- வெளியில இருக்கற வண்டியை எவனாவது எடுத்துப்போயிட்டா,என்ன பண்றது? எப்படி போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கறது? கால்ல வேற செருப்பு இல்லையே – இப்படி லிங்க் மேல லிங்க போட்டு அதுப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கும் அத நிப்பாட்டுணுமுனா நான் செய்ற அந்த தியானத்தை நிப்பட்டணும்! இத்தோட நிப்பாட்டிக்குவோம் இந்த மேட்டர!

அது போன்ற சமயங்களில் நான் மிகவும் எதிர்பார்த்து,கேட்டு ரசிப்பது,

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

என்ற கணீர் குரலுடன், வலம் வரும் சிவனடியார் திருக்கூட்டத்தினர்தான்!

எதோ வயசான ஆளுங்கன்னு நினைச்சிடாதீங்க! எல்லாருமே இளம்வயதுக்காரர்கள்தான்! தலைமை வகித்து செல்பவருக்கு ஒர் முப்பது வயதிருக்ககூடும்,கூடவே பாடிக்கொண்டு செல்லும் தொண்டர்கள் அனைவருமே வயது 22க்குள்தான் அதிலும் ரொம்ப குட்டி ஒரு வாண்டு 5 வயசு இருக்கு நெற்றியில வீபுதி அணிந்து பாடிச்செல்லும் காட்சி,காண ரொம்ப ஆசையாத்தான் இருக்கும்!

தமிழிசை பாடல்களில் தேவராப்பாடல்களை கொண்டு வழிபட்டு செல்லும் இக்காட்சி இந்த பாடலும் என்னை மிகவும் கவர்ந்திழுக்க அது நாள் முதல் கொண்டு நானும் சுந்தரர்சுவாமிகளால் பாடப்பெற்ற ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றையும் ஒற்றை வரிக்குள்ளாகவே சுருக்கி கூறும் தேவராத்தின் திருதொண்டர்கள் புராணம் கூறும் பாடல்களை,கற்று ஒரளவுக்கு பாடத்தெரிந்துகொண்டேன்!

பெரியபுராணத்திற்கு அடிப்படையாக அமைந்த இப்பாடல்கள் மற்றும் தேவாரப்பாடல்களை ஒவ்வொரு கோவில்களிலும் ஒலிப்பதன் மூலமும் தமிழ் வாழும்!

அடியே ஜில்லு..! - தில்லானா மோகனாம்பாள்

அடியே ஜில்லு..! என ஆசை + அதட்டலுடன்,மனோரமாவை அழைக்கும் சிவாஜியின் குரலை, தில்லானா மோகனாம்பாள் ஆடியோவாக மட்டுமே கேட்டு முணுமுணுத்து கொண்டிருந்த நாட்கள்!

மறைந்திருந்து பார்க்கும் மவுனம் என்ன என்று,

நகைகளுடாக ஜொலிக்கும் பத்மினி;

நடித்துக்கொண்டே இருக்கும் சிவாஜி

நம்மை அக்கம் பக்கம் செல்ல விடாமல்,

தடுத்துக்கொண்டிருக்கும் பக்க வாத்தியங்களாக,

தங்கவேலு பாலையா குரூப்கள்

என படம் முழுவதும் கலக்கல்ஸ் ரகம்தான்...!

பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்,ரொம்ப பிடிச்சது:

நடந்ததெல்லாம் மறந்திருப்போம் .

நடப்பதையே நினைத்திருப்போம் :)

பொங்கல் - பானையில் பழகுவோம் வாருங்கள்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

தூக்கம்


எனக்கு அவ்ளோவா தூக்கம் வர்லை, இல்லாட்டி மத்தவங்கள மாதிரி அவ்ளோ நேரம் என்னால தூங்க முடியலைன்னு பொலம்புற ஆளா நீங்க,தயவு செயது உங்களது புலம்பலை விட்டு தள்ளுங்க, இல்லாட்டி அதுவே ஒரு வித மன வியாதியாக மாறி விடக்கூடிய ஆபத்துக்கள் உண்டு இதுக்கு learned insomnia பொட்டு வைச்சு பேரு வைச்சு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க அதுக்குள்ள போய் மாட்டிக்காதீங்க!

தூக்கத்தை கட்டாயபடுத்தி வரவழைக்காதீங்க, இது மாதிரி செய்ய ஆரம்பிச்சிங்கன்னா அப்புறம் சீக்கிரமாவே விழிப்பு வந்துடும் அப்புறம் நல்ல தூக்கம் கிடைக்கிறது ரொம்ம்ப்ப்ப் கஷ்டம்

எப்ப உங்களுக்கு தூக்கம் வர்ர ஃபீலிங்க்ஸ் வருதோ அப்ப மட்டும் தூங்க போனா போதும்!
( இது ஃபார் எக்ஸாம்பிளா நம்ம அபி அப்பா வை தூக்கிக்கோங்க, மனுசன் பத்து பதினைந்து பேருக்கிட்ட சாட்டிக்கிட்டிருந்தாலும் தூங்க வந்துடுச்சுன்னா அப்படியே ஆப் லைன் தான்!)

இளம் சூடான தண்ணீரில் கை கால்களை கழுவிவிட்டு போய் உறங்க ஆரம்பித்தால் வரும் அருமையான தூக்கம் ( மேக்கப் கூட போட்டுக்கிட்டு போயும் தூங்கலாம் கனவுல வர்றவங்களுக்கு ஒரு குஜாலா இருக்கும்!)

ஓவரா தூங்கதீங்க! அதாவது லிமிட்ட மீறி போயி தூங்கிக்கிட்டே இருந்தா அப்புறம் கொஞ்ச நாளைக்கு நல்ல தூக்கமே கிடைக்காது !

இது எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் தேவையில்லாம பெட்ரூம்ல உக்காந்துக்கிட்டு, டிவி பார்த்து சீரிய்லா அழுவறது,நல்ல திங்கறது அப்புறம் 24 மணி நேரம் பத்தாத ஆளு மாதிரி படுத்துக்கிட்டே புத்தகம் படிக்கிறது இதையெல்லாம் விட்டாத்தான் நம்மகிட்ட தூக்கம் வரும்!

சரி என்னாடா இவன் தூங்கறாதுக்கு போய் இவ்ளோ பில்ட அப் கொடுத்திக்கிட்டிருக்கான்னு அலட்சியமா பாக்குறீங்களா? அப்பன்னா உங்களுக்காகத்தான் இந்த மெசேஜ் ஒழுங்கா தூங்கலைன்னா டயாபடீஸ் வந்துடுமாம்ல!

நல்லா தூங்கறதுக்கு உடல் நலம் எப்படி பேண வேண்டும்

தூக்கம் வருவதற்கு என்ன செய்யவேண்டும்

நேர மேலாண்மை தத்துவத்தை எப்படி தூங்கறப்ப யூஸ் பண்றது!

தூங்கறதுக்கான இயற்கை சூழல் எப்படி இருக்கணும்

வெப்பம் மிகுதியாக இருக்கும் சுற்று சுழலில் எப்படி நிம்மதியாக தூங்கறது?

உங்களுக்கு நீங்களே எப்படி ஒரு அருமையான தூககத்தை கொண்டு வர முடியும் இப்படின்னு ஆயிரத்தெட்டு சங்கதிகள ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்காங்க விஞ்ஞானிகள்!
பின்குறிப்பு:- எல்லாத்தையும் கரெக்ட்டா கடைபிடிக்கணும் முடிஞ்சா வீட்ல இல்லாட்டி எப்போவும்போல ஆபிஸ்ல :)

அந்த காலத்து குசும்பன் - சுப்புடு

சென்னையில் வருடந்தோரும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கிவிடுவார்கள்!

தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில்அதைக்காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது,

அதற்கு காரணம் சுப்புடு!

பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..!

பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு!

மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்!

அதற்குமுன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும்முன்பு நன்றாக பயிற்சி எடுத்துவரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!

ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)

இளையாராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"
தேவாவுக்கு,இளையராஜா பரவாயில்லன்னு சொன்னவரொட அடுத்த அட்டாக் ரகுமான் காதலன் படத்து உன்னிகிருஷணன் பாடல்! (படத்துலயே அந்த பாட்டுத்தான் சூப்பர்ன்னு எல்லாரும் சொல்வாங்க!)

கடைசியாக அவர் சொன்ன கமெண்ட் "இவங்க ரெண்டு பேருக்கு,தேவாவே பெஸ்ட்ன்னு..!

ஒரு பரதநாட்டியக்கலைஞரை பற்றி சுப்புடு குறிப்பிட்டது"சுற்றளவை குறைத்தால் உலகம் சுற்றலாம்ன்னா" பாருங்களேன் ஆளுக்கு எவ்ளோ குசும்புன்னு!

2008 இனிய ஆண்டில் - உதவிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!


''மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.

சேவை என்று தெரியாமலே, அனை வரும் நமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு, நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கும், ஊருக்கும், நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்ய வேண்டும்!

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை... இத்யாதி இருக்கின்றன. 'நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவில் சமூக சேவை வேறா!' என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறைக்க வழி உண்டாகும்.

ஒரு லாப- நஷ்ட வியாபாரமாக நினைக்காமலே பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால், போதும். அதனால் பிறத்தியார் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்... நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு, அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

நம்மைப் போல் சேவை செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லாரும் ஒரு சங்கமாக, ஒரே அபிப்பிராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம்.

அப்படிப் பலர் கூடிச் செய்யும் போது நிறையப் பணி செய்ய முடியும். இப்படிப்பட்ட சங்கங்கள் உடையாமல், சத்தியத்தாலும், நியமத்தாலும் காக்க வேண்டும்.

உதவி செய்பவர்களுக்கு ஊக்கமும் அத்தியாவசியம். மான- அவமானத்தை பொருட்படுத்தாத குணமும் வேண்டும்.

பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கின்ற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதைப் பிறருக்குச் சேவை செய்வதில் செலவிட வேண்டும்.

'வாழ்க்கைத் தொல்லைகளிடையே கொஞ்சம் உல்லாசமாகப் பொழுது போக்குவது ஒரு தப்பா' என்று கேட் பீர்கள்.

உங்களுக்குச் சொல்கிறேன்; பரோபகாரமாகச் சேவை செய்தால், அதுவே விளையாட்டு; அதுவே இன்பம்.

கண்ணதாசனிடமிருந்து,

அர்த்தமுள்ள இந்து மதத்தின் வாயிலாக...!