பொங்கல் - பானையில் பொங்குவோம்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!

வெட்கம்!


பார்க்கும் விழிகள் ஏற்படுத்துகின்ற கேலித்தனம் நிறைந்த கருத்துக்களால் நாம் பாதிக்கப்படுவோம் என்ற எண்ணம் ஏற்படுகையில் நமக்கு ஒரே வெக்கம் வெக்கமா வரும்!

வெட்கமும் தயக்கமும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், பிறரிடத்தில் உண்டாகும் பயம் கலந்த மரியாதை அல்லது அந்த ரீதியிலான ஏதோ ஒன்றில் தனித்து நிற்கிறது - தயக்கம்!

சமூகத்தில் பல நிலைகளிலும் காணும் காட்சியாக பெற்றோர்கள் பீற்றிக்கொள்ளும் பிள்ளைகளையும் - ச்சே அவன்/அவள் வீட்டை விட்டு வெளியே வரவே அவ்ளோ வெட்கப்படுவாங்க என்ற பெருமிதமோ - அல்லது ஒரு மனிதன் இருக்கிறான் என்ற சுவடே தெரியாத அளவுக்கு அக்கம்பக்கத்து வீடுகளில் வெட்கம் நிரம்பி வழிய வாழ்க்கை நடத்தும் மனிதர்களை சமூகத்தில் நிறையவே நீங்கள் காண முடியும்!

சரி வெட்கம் நல்லதா கெட்டதா என்று எழும் கேள்விக்கு பல சூழல்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது .கே நல்லதுதான் என்றே தோன்றும் சில விசயங்களில் ஆஹா அப்படி ஆகப்பிடாதே ரொம்ப தப்பு என்றும் சொல்லவைக்கும்!

யாரோ வெட்கப்படாமல் செய்த ஆராய்ச்சியில் - படிக்கும் காலத்தில் ரொம்பவே வெட்கப்பட்டுக்கொண்டு இருக்கும் பிள்ளைகள் படிப்பில் கெட்டியாக இருக்கிறார்களாம்! மற்றவர்களோடு அதிக நேரம் செலவிட தேவையின்றி படிப்பினில் கவனம் செலுத்துவதினால் இப்படியான திறன் மேம்படுத்தப்படுகின்றதாம்!

சரி
இப்படியே படிச்சு பெரிய லெவல்ல மார்க்கெல்லாம் எடுத்துட்டு வேலைக்குன்னு வர்றப்ப இந்த வெட்க நிலை வேதனையளிக்கும் விசயமாக கூட பணி புரிவர்களிடத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் தொடர்பு நிலையில் உள்ள யாரிடமும் எளிதில் தொடர்பு கொள்ளமுடியாதபடி செய்துவிட அந்த கட்டத்தில் வெட்கம் ரொம்ப தப்பும்மா என்று உணர்வு எழும்புகிறது!

மொத்தமாக கூட்டி கழித்து பார்த்தால் கொஞ்ச காலம் வெட்கம் இருந்துவிட்டு போகட்டும் தொடரவிடவேண்டாம் என்ற சிந்தனையே பெஸ்ட் என்று முடிவு செய்துக்கொள்ளலாம்.

பெற்றோர்களின் கடமையாக முடிந்தவரை தங்களால் இயன்ற அளவு வெட்கத்தினையும் தயக்கத்தினையும் தம் பிள்ளைகளிடத்திலிருந்து களைய முயற்சி மேற்கொள்ளுதல் மிக அவசியம்! இல்லையெனில் அவர்கள் வாழ்க்கை பயணத்தில் இழக்கும் விசயங்கள் நிறையவே இருக்கக்கூடும்!

சரி சிம்பிளான வழிமுறைகள் கடைப்பிடிச்சு இந்த வெட்கத்தை தொலைச்சு கட்டமுடியுமான்னா - முடியும்! சில சின்ன சின்ன வழிமுறைகளில் அதை ஒரளவுக்கு குறைக்கமுடியும்!

நம்மிடத்தில் நம்மை நாமே வெளிப்படுத்திக்கொள்ளுதல் - அப்பிடின்னா என்னான்னு சொல்றதுக்கு இப்ப எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா வருது பிறகு வந்து சொல்லவா...?