பாடாத ரேடியோக்கள் & டேப்புகள், பழைய இத்துப்போன சைக்கிள்கள்,பெரிய பெரிய மருந்துப்பாட்டில்கள், மற்றும் இன்னும் பிற உபயோகப்படுத்தப்பட்டு பின்பு, உபயோகிக்கமுடியாத நிலையை அடைந்த பொருட்களை அடைகாத்து வைத்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருக்ககூடும்!
ஒரு பிரயோசனமில்லவிட்டாலும் கூட அதை இழக்க மனமின்றி இருக்கும் மனிதர்கள்!
அப்படியே சிலரால் தூக்கி எறியப்படும் பொருட்கள் இதே மனநிலை கொண்ட மற்ற மனிதர்களால் கைப்பற்றப்பட்டு, மீட்டு கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைப்பவர்களும் உண்டு!
இதே மன நிலையில்தான், இப்போது நமது மத்திய அரசாங்கமும் செயல்பட போகின்றது!
உலகநாடுகளிலிருந்து வீணான பொருட்களை பெற்று அதைக் கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது! ஆனால் இதனால் வரும் காலத்தில் உலகிலில் இருந்து வரும் குப்பை பொருட்களின் கூடாரமாகத்தான் நம் நாடு மாறிப்போகுமே ஒழிய இதனால் வேறு பலனேதும் இல்லை! அது மட்டுமின்றி கவர்ன்மெண்ட் சொல்வது, போல 60 சதவீகிதமான பொருட்கள் மறு சுழற்சி முறையில் உபயோகிக்ககூடிய பொருட்கள்தான் எனற கான்செப்ட் ஒ.கேதான்! என்றாலும் பிரித்தெடுக்கப்படும் உபயோகிக்ககூடிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை எப்படி நாம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்போகிறோம் எனபது ஒரு பெரிய ?
ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்! எது எப்படியோ, வரும் காலங்களில் நாட்டை குப்பையாக்குவதாக இருந்தாலும் சரி,கோபுரத்து உச்சியில கொண்டு போய் வைக்கிறதா இருந்தாலும் சரி, எல்லா முடிவும் அரசியல்வாதிகள் கையில்தானே இருக்குது…?!
குப்பைகளின் கூடாரமாகப்போகும் இந்தியா..!
# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க
இது கவர்ன்மெண்டா...?
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் கல்வித்துறை சிறப்பாக பங்காற்றிவருகிறது! அதுலயும் ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கறதுக்காக வேண்டி கவர்ன்மெண்ட்ல படிக்கிற புள்ளைங்கள,தனியார் பள்ளிக்கு டிரான்ஸ்பர் பண்ணி படிக்க சொல்ற கவர்ன்மெண்ட்டும் இருக்குங்க!
அங்க கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற பசங்கல அரசே பணம் உதவி சொஞ்சு தனியார் பள்ளிகளில் சேர்த்து அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு வசதி செய்துவருகின்றனர்!
சுமாராக 800 மாணவர்கள் வரும் கல்வியாண்டில் இந்த சிறந்த கல்வி தரும் தனியார் பள்ளிகளில் இணைய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்!
இதற்கு அந்த மாநில அமைச்சரும் மாணவர்கள் கல்வி விளையாட்டில் சிறந்து இருக்கும்போது அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைத்தான் இது என்று சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார்!
எதுவாயிருந்தால் என்னங்க? அந்த 800 பேர தவிர்த்து மத்தவங்க மோசமான கல்வியைதானே (அரசின் வாதத்தின்படி) பெறமுடியும்!
இதெல்லாம் கவர்ன்மெண்டா இல்ல மெண்டல்களா?
# ஆயில்யன் 3 பேர் கமெண்டிட்டாங்க
அரசியல் இட ஒதுக்கீடு - பெண்களுக்கு சுத்த வேஸ்ட்டு!!??
33 சதவீகித இடஒதுக்கிட்டின் அடிப்படையில் கடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்கள்,மேயர் ஆரம்பித்து, ஊராட்சி மன்ற தலைவர்கள் வரை உள்ள பெண் உறுப்பினர்கள் தங்களது வழக்கமான பணிகளை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்ள, கணவன்மார்கள் தான் கவர்ன்மெண்ட்க்கு மக்களின் பிரதிநிதியாக பணி ஆற்றுகிறார் அரசு அலுவலங்களில், யாரும் கேள்வி கேட்பது கிடையாது! (எந்த லட்சணத்தில் அலுவலங்கள் இருக்குங்கறது நமக்கு தெரிஞ்ச விஷயம்தானே!)
மக்கள் பிரச்சனைகளில் பெண் தலைவர்கள் களம் இறங்கி பணியாற்ற வரும் தயக்கம் என்னதான் படித்திருந்தாலும் கணவர் பேச்சுக்கு கட்டுப்பட்ட வாழ்கை (சார் சொல்றபடி செஞ்சுடுங்க..!) குடும்பத்தை கவனிப்பதுதான் முக்கியம் மற்றவை பிறகுதான் – நல்லதுதான் போட்டியிடுவதற்கு முன்பே அல்லவா யோசித்திருக்கவேண்டும்
அலுவலகங்களில் யாரும் இதை பற்றி பெரிதாக கவலைப்படுவதில்லை!
உண்மையாத்தான் சொல்றேன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து, பஞ்சாயத்துலேர்ந்து மேயர் வரைக்கும்,எம்.எல்.ஏவிலேருந்து மினிஸ்டர் வரைக்கும் பதவி கொடுக்கறது சுத்த வேஸ்ட்!
சும்மா..! ஒப்புக்கு சப்பாணி மாதிரியான கேரக்டர்ல நடிக்கறதுக்கு எதுக்குங்க இட ஒதுக்கீடு?
நீங்களே பாருங்க! மினிஸ்டரோட அவரு வீட்டுக்காரருக்குத்தான் எங்கயும் மரியாதை! அவர் சொல்றத கேட்டு தலைமை செய்லகத்திலேர்ந்து, கீழ் மட்டத்தில வரைக்கும் தலையாட்டுற அரசு அலுவலர்கள்! நீ யாருய்யான்னு? கேட்க ஒரு நாதி கிடையாது? ஐ.ஏ.எஸ்களும் அடங்கித்தான் கிடக்குறாங்க!
பொம்பளைய செலக்ட் பண்ணா கொஞ்சம் நல்லவிதமா ஊருக்கு நன்மைய செய்வாங்கன்னுத்தான் நினைக்கறாங்க மக்கள் ஆனா நடக்கறது – எல்லாத்தையும் நடத்திகாட்றது அந்தம்மாவேட வீட்டுக்காரங்கதான்! அந்தம்மா எப்போதும்போல வீட்டு வேலையில கவனமா இருப்பாங்க!
அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா பெண்களுக்குன்னு தனியா ஒரு இட ஒதுக்கீடு!
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், என் உள்ளத்தில், ச்சே
