இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி!

அன்பு சகோதரர் ”கறுப்பியின் தமிழன் - காண்டீபராஜ்” இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களுடன்....!
கவிதைகளால் காதலித்து, காதலித்து, காதலை காத்து வரும் தூணாக...! புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே...!)

எண்ணங்களை எழுத்துக்களாக்கி, ப்ளாக்கி வைக்காமல் மனம்போன போக்கிலேயே காற்றிலேயே கவி எழுதி காணாமல் போகுமாறு செய்துக்கொண்டிருக்கும் சகோதரர் தீவிரமாக இணையத்தில் எழுதிட வேண்டும் என்ற கோரிக்கையினூடாக,பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

என் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...!

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!
***********************************
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
***********************************
எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்
போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!
***********************************
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...
***********************************
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!
***********************************
அவள்
ஓடிக்களைத்ததில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
***********************************
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.
***********************************
காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னமும் ஈரமாய்...
நானும் நீயும் வாழ்ந்த ஊரில்
நம் வருகைக்காய்......
***********************************
டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)


உன்னால் தானே நானே வாழ்கிறேன்!

பாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..!
பத்தாவது முடிச்ச கையோட பாலிடெக்னிக்ல சேர்ந்த புதுசு முதன் முதலா பொம்பளை புள்ளைங்க கூட சேர்ந்து படிக்கற கிளாசுல உக்கார இடம் வேற கிடைச்சிருந்தாலும் மனசு மகிழ்ச்சியா இல்ல காரணம் அட்மிஷன் நான் நினைச்ச காலேஜ்ல கிடைக்கலன்னுதான்! [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது!]

இப்ப டைட்டிலுக்கு வருவோம்! முதல் வருசம் முழுசா கணக்கு வாத்தியார்க்கிட்டயும், கெமிஸ்ட்ரி & டிராயிங்க் வாத்தியார்ங்ககிட்டயும் மல்லுகட்டி படிச்சு ஒரு வழியா ரெண்டாவது வருசம் ஒதுக்கப்பட்ட டிபார்மெண்ட்ல வந்து உக்காந்தாச்சு! முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு! ரெண்டாவது வருசம் எங்களோட பழமையான டிபார்மெண்ட்டுக்கு முதல் நாள் வந்த விகிதாச்சாரம் கூட அதே ரேஞ்சுதான் ஆனா ஒரு வாரத்துல பெரும் கும்பலே பொட்டி தட்டுற கிளாசுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க எங்க கிளாஸ்ல : 24 பெ:5 ஆகிப்போச்சு!

ஒரு வழியா தட்டு தடுமாறி,கான்கீரிட் சும்மா அளந்து அளந்து கொட்டி,ஹைட்ராலிக்ஸ் லேப்ல சாக்கடை தண்ணீர்க்கு சகலமும் கண்டுபுடிச்சு இது நல்ல தண்ணி கிடையாது குடிக்கப்புடாதுன்னு நிறையா தெரிஞ்சுக்கிட்டு மூணாவது வருசம் வந்து சேர்ந்தோம்!

அந்த நேரத்துல டிபார்மெண்ட் ஹெட் ரிடையர்ட்மெண்ட் வந்து ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து பிரிவுபசார விழா செய்யுறதா ப்ளான் பண்ணி பயபுள்ளைங்க எவனாச்சும் அவர பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா பேசணும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க! எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்க!அது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற..! ஸோ எதாச்சும் செஞ்சு அசிங்கப்பட்டுக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும் !

நான் மட்டும் தைரியமா, என்னோட ப்ரெண்ட்டுக்கிட்ட கவலைப்படாத நண்பா டோண்ட் ஓர்ரி நான் ஸ்கிரிப்ட் எழுதி தாரேன் நீ மேடைக்கு போற, நிக்கிற, சரசரன்னு பேப்பர்ல இருக்கிறதை படிச்சுட்டு வர்ற; டீல் .கேவான்னு கேட்டு .கே வாங்கிட்டேன்! அவனும் எதோ ஒரு நினைப்புல .கேவும் சொல்லிட்டான்!

சரி நாம என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு ம்ஹும் இது சரி வராது வழக்கமா அரசியல்வாதிங்க மாதிரி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்ன்னு இங்கு வீற்றிருக்கும் துறை தலைவரே,துறை ஆசிரியர்களே, மாணவ மாணவிகளேன்னு சொல்லி முடிச்சப்பிறகு என்னா சொல்றதுன்னு ரோலிங்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு!

ரிடையர்ட்மெண்ட் ஆகற வாத்தியார பத்தி எதாச்சும் சொல்லணும்ல? யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது! யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு! நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு!(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்!)

மண்ணை வேர்கள் பிரிந்தாலும்,
விண்ணை நீலம் பிரிந்தாலும்,
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் அப்படின்னு கொண்டு போய்ட்டு, நீங்க சொல்லிக்கொடுத்த படிப்பை மறக்க மாட்டோம், அப்புறம் காலேஜை மறக்கமாட்டோம், இப்படியே ஒரு கண்ட்ரோலே இல்லாம போய்க்கிட்டே இருக்க, ஒருவழியா பதட்டத்தை குறைச்சு,அத்தோட முடிச்சுகிட்டு,பேப்பரை நாலா மடிச்சு கையில வைச்சுக்கிட்டா தெரியாதுன்னு ஐடியாவும் கொடுத்தாச்சு!

பங்ஷன் அன்னிக்கு பயபுள்ள சொன்னமாதிரியே எல்லாமும் செஞ்சுடுச்சு,அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட்டை போட்டு பேசுனதுமில்லாம, ஒரு இடத்துல நிக்காம ,லெப்ட்ல ஒரு ரெண்டு அடி ரைட்டுல ஒரு ரெண்டு அடி பின்னாடி முன்னாடின்னு ஒரு வட்ட ஆட்டமே போட்டுட்டான்!அதை பார்த்த பைவ் ஸ்டார்ஸ் மட்டுமில்ல எல்லாருக்குமே ஒரு சந்தோஷ புன்னகை பூக்க....!

நண்பா நல்லா பேசுனேனாடா!

.கேடா நல்லா பேசுன, அதை விட நீ டான்ஸ் ஆடிக்கிட்டே பேசுனதுதான் கலக்கல்ன்னு பெருமையா சொல்ல..

ஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க! தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....!?

நீயுமாடா....?!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

நார்த்தங்காய் ஊறுகாய்!


”பேரைக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதுல்ல” அப்படின்னு டைட்டில் போட்டு டெரர் காமிக்கலாம்தான்..! ஆனா நிறைய பேருக்கு இந்த நார்த்தங்காய் ஊறுகாய் பத்தின செய்திகள் தெரியாத அளவுக்கு இந்த ஊறுகாய் நினைவிலிருந்து, உணவிலிருந்தும் காணாமலே போய்டுச்சுல்ல :-(

வீடுகளில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பிரியாவும் ஆச்சியும் அடுக்களையிலோ அல்லது பிரிட்ஜுக்குள்ளோ சாப்பாட்டுக்கு தொட்டுக்க ரெடியா இருக்காங்க அப்புறம் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் யார் போய் தலையிட்டு மாட்டிக்கிடறது நோ ரிஸ்க்! (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு!)

நேத்து மிளகாய் கிள்ளி சாம்பார்ரை பார்த்ததுமே எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்தது இந்த நார்த்தங்காய் ஊறுகாய்தான்!

எங்கயாச்சும் ஊருக்கு போய்ட்டு வந்தாலோ அல்லது இரவு நேரங்களில் சாதம் சமைக்க வேண்டியிருந்தாலோ இந்த மெனுதான் எங்க வீட்லயும் பாசிப்பருப்பு அப்புறம் வெங்காயம்,தக்காளி,மிளகாய் மற்றும் இன்ன பிற ஐட்டங்களை போட்டு கொதிக்கவிடும்போதே வாசனை பசியை கிளப்பிவிட்டுடும் பிறகு அதுல வெங்காய வடகத்தை தாளிச்சு கொண்டும்போது கையில தட்டோட “அம்மா பசிக்குது அம்மா பசிக்குது” அப்படின்னு டைமிங்கல ரைமிங்கா பாடிக்கிட்டே வந்து அடுப்பாங்கரையில உக்காந்துட்டா வேற வழியே இல்ல சுடச்சுட அப்படியே சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றி ஆகவேண்டிய கட்டாயம் பாட்டிக்கு!

வடகம் சுட ஆயத்தபடும் வேளையில் அவ்ளோ நேரமெல்லாம் தாங்காது என்ற அலறலில் வரும் ஐட்டம்தான் நார்த்தங்காய் ஊறுகாய் உப்பு போட்டு நல்லா காஞ்சு இருக்கும் அதை தின்னவே பிரம்மபிரயத்தனபடவேண்டியிருக்கும் ஆனாலும் சுடுசோறு சாம்பார் + ஊறுகாய் வைச்சுக்கிட்டு தின்னா..!

இந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப சிக்கனமானதொரு தயாரிப்புன்னு சொல்லலாம் பெரும்பாலான வீடுகளில் அப்போ எலுமிச்சை மரம் நார்த்தமரம் எல்லாம் இருக்கும் அதுல இருந்து பறிச்சுக்கிட்டு வந்து அழகா அறுத்து (அது ஒரு விதமான டிசைனா அறுத்து வைப்பாங்க) உப்பு மற்றும் இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு யாராச்சும் சொல்லுங்கப்பா - போட்டு ஊறவைப்பாங்க!

கொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி! அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க! வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது!

ம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க! சிம்பிள்தான்!

ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!

வானொலியில் பாடல்கள் கேட்பது என்பது ஒருவித அலாதியான இன்பம்! என்னவிதமான பாடல்கள் யாருடைய இசை ஆர்வத்திற்கேற்ப ஒலிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் - எதிர்பாரா இன்பம் தரும் ஒரிடம் வானொலி!

தினமும் வானொலியில் பாடல் கேக்கும் பழக்கம் அதுவும் ஃஎப்.எம் ரேடியோவில் மட்டுமே அதிக அனுபவம் 5 வகையான நிலையங்களாக பிரித்து புதுப்பாடல் இளையராஜா மற்றும் .ஆர்.ஆர் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் மிக சவுகரியம்!

எதேச்சையாக கேட்ட பாடல் ஆயிரத்தில் ஒருவன் (2009) படத்தில் இடம்பெற்றிருக்கும் "பெம்மானே" என்று தொடங்கும் பாடல்

திருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்!பெம்மானே பேருலகின் பெருமானே..
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!
வெய்யோனே ஏனுருகி வீழ்கின்றோம்!
வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ..!
புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம்!
அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே..! (பெம்மானே)

சோறில்லை சொட்டு மழை நீரில்லை..!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம் முன் வளைந்து முடமானோம்..!
மூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடை கோனே!

நீராகி ஐம்புலனும் வேறாகி
பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம்!
எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை
விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்,
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே..!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ..!
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே..!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ..!

பெம்மானே பேருலகின் பெருமானே..!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..!

பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்

பெம்மானே பேருலகின் பெருமானே..

பதிவர் கதியால் அவர்களோட பதிவில் இந்த பாடல் பற்றி விவரமா சொல்லியிருக்காங்க!

ஆட்டோ கேட்


கம்யூட்டர் அப்படின்னா என்னான்னு தெரியாத காலகட்டத்தில ஆட்டோகேட் படிங்கன்னு அட்வைஸ் மட்டும் கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்த மாதத்தின் ஏதோ ஒரு சுபயோக நன்னாளில் மயிலாடுதுறை பாரத் கம்யூட்டர்ஸின் படியேறி (ஆமாங்க மூணாவது மாடி) சேர்ந்த படிப்பு ஆட்டோகேட் கூட படிக்கிற மக்கள்ஸ் - ஒன்லி ஆண்கள் :( - கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்) ஆரம்பிச்சோம் டாஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டம்ல ஆட்டோகேட் ரீலிஸ் 11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்ஷன்!

இருந்த 7 சிஸ்டத்தில ஒரே ஒரு சிஸ்டம் மட்டும்தான் விண்டோஸ் 95இயங்குறது மத்ததெல்லாம் டாஸ்! ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும்! (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது !)

3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்!

பாடமாக சொல்லி கொடுத்த விசயங்கள் ஆட்டோகேட் ரீலிஸ் 12 ஆகஇருந்தாலும் பயிற்சி பெற்றது ரீலிஸ் 11 (புக்கு கிடைச்ச அளவுக்கு சாப்ட்வேர்கிடைக்கறது அப்போ அவ்ளோ ஈசியில்ல இப்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு - ஆச்சர்யப்படக்கூடிய வகைகளில் ஒரிஜினல் ரீலிஸ் ஆனாதும் கூடவே காப்பிஅடிச்சு அனுப்பிடறாங்க! (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம்!) புத்தகங்களும் கூட இணையத்தில் நிறையவே கிடைக்கின்றஎன்ன ஒன்று பொறுமை அதிகம் தேவை படித்து பயில்வதற்கு....!

இதே டைம்ல ஒரிஜினல் வைச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கிற கம்பெனிக்காரங்க (CADD CENTER) காலேஜ் பாலிடெக்னிக்குன்னு கடை பரப்ப ஆரம்பிச்சாங்க! எங்கபாலிடெக்னிக்கலயும் வந்து ஒரு நாள் டெமோவெல்லாம் பண்ணினாங்க, ஏதோகிளாஸ் கட் ஆனா சரின்னு நினைச்சு போய் உக்காந்து படம்பார்த்துக்கிட்டிருந்தேன், கம்யூட்டர்ல எல்லாமே புதுசாவே தெரியுது ஏன்னா அதுரீலிஸ் 12 புது வர்ஷன் என்ன என்னமோ சொல்லுறாங்க...?!

எனக்கு எங்க கம்ப்யூட்டர் செண்டர் கேட் வாத்தியார் மட்டும் மினுங்கி மினுங்கிதெ()ரியிறாரு,எண்ட் கார்டு போடற டைம்ல யாரெல்லாம் ஆட்டோகேட்படிக்கிறீங்க கை தூக்குங்கன்னு கேள்வி வர நண்பர்களெல்லாம் ரொம்பபெருமையா என்னைய மட்டும் கை காமிக்க,எனக்கோ ஒரே ஆனந்த கண்ணீருநாம ஒண்ணு படிக்கிறதும் இங்க ஒண்ணு பாக்குறோம்ன்னு ) அப்படியேசமாளிச்சு பாலன்ஸ் பண்ணிட்டு கமுக்கமா உக்காந்திட்டேன்! அந்த டைம்ல ஒருஉந்துதல் இருந்துச்சு எப்படியாச்சும் அந்த விசயத்தை தெரிஞ்சிடணும்ன்னு... !

அன்னிக்கு ஆரம்பிச்ச தேடல்தான் ஒரு 2 அல்லது 3 வர்ஷன் சிடி புடிச்சு அதைஇன்ஸ்டால் செஞ்சு படிச்சு ஒரு வழியா தேறி வந்தாச்சு! இப்ப ரீலிசாகியிருக்கிறஆட்டோகேட் 2010 நினைச்சுபார்த்தாலே எல்லாமே அதிசயம் ஆச்சர்யமாவேஇருக்கு!

ஓவ்வொரு ரீலிஸ்களிலும், ஆட்டோகேட் மேம்படுத்தி ஏகப்பட்ட புதியநுட்பங்களை இணைத்து கொண்டு வரும்போது எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது! அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்!

கிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொழில் ரீதியாக என்னுடனேபயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோகேட் மென்பொருளுக்கும் (ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....?!) அது பற்றிய முயற்சிகளில் தீவிரமாகஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகுமார்


காதல் சுவை கொட்டிக்கிடக்கும் கவிதைகள்,பயணத்தில் பார்த்ததை தன் பாணியில் வர்ணிக்கும் அழகு - இவரின் பயணத்தின் பிம்பங்களில், ரஜினியும் தேவதையின் தேசங்களும் புகைப்படமாகவும், லேபிளாகவும், கண்டு தொடர்ந்து சென்ற எனக்கு கதைகளும் கவிதைகளும் வர்ணிப்புக்களும் எளிய இனிய சொல்லாடல்களும் ஈர்ப்பினை உண்டாக்கிட பயணத்தின் பிம்பங்களின் வழியே நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கும் இந்த நாள் இனிய ஞாயிறு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!

***************************

எந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளிக்கிறது வானம்! எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி! கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில்! நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு!

நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை! ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள்! பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு காலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்!

ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள்! பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங்காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்!

மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்! வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..!

***************************

டிஸ்கி:- மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் எவ்வித முன் அனுமதியுமின்றி பயணத்தின் பிம்பங்களிலிருந்து எடுக்கப்பட்டது பதிவர் இரா.வசந்தகுமார் மன்னிப்பாராக...! :-)

கோவில் மணிகள்!கோவில் கதவுகளில் அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகளை பார்த்தால் ஒசை எழுப்பிவிடாமல் செல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்?!

மணி ஓசை கேட்டு செல்லுதலும், மணி ஓசை கேட்க செய்வது என்பதும் எல்லோருக்குமே ஒரு அலாதி பிரியம்தானே!

முன்பெல்லாம் - இப்பொழுதும் கூட பழங்காலத்து கோவில்களில் பெரியபெரிய 10’ நுழைவாயில் கதவுகளினை அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் அத்தனை கனமான அந்த மணிகளினை, அதிகம் யாராலும் சீண்டப்படாத அந்த மணிகளினை காணும்போதெல்லாம் எதோ மனத்தில் பாரமேற்றும் நினைவுகள் வந்து செல்லும் எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன!

விடுமுறைகளில் சொந்த ஊருக்கோ அக்கம் பக்கத்து ஊர்களுக்கோ செல்ல திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக ஊரின் அருகில் இருக்கும் பழங்காலத்து கோவில்களுக்கு ஒரு முறை விசிட் செய்து மணி ஓசை ஒலிக்க செய்துவிட்டு வாருங்களேன்! - கட்டிடக்கலையில் நம் முன்னோர்களின் திறமையினை காணுகின்றோம் என்ற எண்ணத்தின் வழியாகவும் கூட உங்களின் கோவில் தரிசனம் இருக்கட்டுமே....!

கிரியேடிவிட்டி

நாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்!

- தீப்பொறி திருமுகம்

*******************************************************


ஜியாலஜி சப்ஜெக்ட்ல அசைன்மெண்ட் வைக்க சொன்னாங்க! ச்சும்மா சாதாரணமா காப்பி அடிச்சு கொண்டாந்து குப்பை மாதிரி போடவேண்டாம் எதாச்சும் கிரியேடிவா செஞ்சுட்டு வாங்கடா ராசாக்களேன்னு சொன்னாரு எங்க ஜியாலஜி லெக்சரர்!

முதன் முதலா கிரியேடிவ்வா செய்ய நினைச்சு செஞ்சது! - அப்ப டெக்னிகல் டிராயிங்க் வாத்தியாரை மனசுல நினைச்சுக்கிட்டு பென்சிலும் ஸ்கேலும் வைச்சுக்கிட்டு, பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்!


பட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்!

டிஸ்கி:-
தொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு! காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!! :)

உருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்

சப்பாத்தியை உருளைக்கிழங்கு குருமா காம்பினேஷன்ல தின்னு பார்த்துடணும்ன்ன் நொம்ப்ப்ப்ப்ப நாளா ஒரு ஆசை!

இங்க இருக்கிற மலையாளிங்க கடையில காலையில உருளைகிழங்கு குருமா இருந்தா சப்பாத்தி இருக்காது சாயந்திரம் சப்பாத்தி இருந்தா உருளைகிழங்கு குருமா இருக்காது ஸோ லேப்ல செஞ்சு திங்கிறதுதான் ஒரே வழி - செய்யுற காலகட்டம் வர்ற வரைக்கும் நினைச்சுக்கிட்டே நாக்கை நனைச்சுக்கிட்டிருந்தேன்!

சரி இன்னிக்கு ரொம்ப வெட்டியாத்தானே ( அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க) இருக்கோம் லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம்ன்னு முடிவு எடுத்து ஹோம் ஓர்க் செஞ்சுக்கிட்டேன்! (அதாங்க நெட்லேர்ந்து வழிமுறைகள் முறைகள் ஸ்டெப்ஸ் எப்படி அப்படின்னு)

என்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல! இணையத்தில இருக்கிற குறிப்புபடி என்னால இந்த நாள் மட்டுமில்ல எந்த நாளுமே சமைக்கமுடியாதுன்னு முடிவு பண்ணி ரோட்ல இருந்த கோட்டை மட்டும் கவனமா பார்த்துக்கிட்டேன்!

திடீருன்னு ஒரு சந்தேகம் நமக்குத்தான் உருளைக்கிழங்கு காரக்கறி செய்ய தெரியுமே அப்ப இதுக்கும் உருளை கிழங்கு குருமாவுக்கு அப்படி என்ன பெரிய வித்தியாசம்ன்னு ஒரே மண்டை குடைச்சல் சரி யார்க்கிட்டயாச்சும் சின்ன முயற்சி எடுத்தாவது கேட்டு கிளியர் பண்ணிக்கிடலாம்ன்னு, சகோதரி ஒருத்தங்ககிட்ட கேட்டு ஒரளவுக்கு சமாதானமாகிகிட்டேன்!

ஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு!

நான் எடுத்துக்கிட்ட மூலப்பொருட்கள்:-
உருளைகிழங்கு
வெங்காயம்
தக்காளி
பச்சைமிளகாய்
இஞ்சி
உப்பு
வறுக்கற வாணலி
வேகவைக்கிற பாத்திரம்
அப்புறம் ஒரு கரண்டி
ஒரு டம்ளர்
ஒரு ஸ்பூன்
ஒரு வேஸ்ட் துணி
(போதுமா இல்ல இன்னும் டீடெயிலா....?)


உருளைகிழங்கு வேகவைக்கிற பாத்திரத்தில தண்ணி ஊற்றி மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு உப்பு போட்டு வேக வைச்சுட்டேன் (திடீர்ன்னு எங்கேர்ந்து மஞ்சள் பொடி வந்துச்சுன்னுல்லாம் கேக்காதீங்க அது அப்படித்தான்!)

வெங்காயத்தை நீள வாக்குல ஸ்லைஸ் அட அதாங்க வில்லைகளாக வெட்டி வைச்சுக்கிட்டேன் பிறகு இஞ்சியும் தக்காளியும் முறையே கடினமான இலகுவான வேலையாக செய்துமுடித்துவிட்டேன்!

பச்சை மிளகாய் மட்டும் பாக்கி .மி ரெண்டு ரிஸ்கு இருக்கு!

1.சின்னசின்னதா ரவுண்ட் சைசில வெட்டி போட்டா நாக்குல பட்டு நல்லா உறைக்கும் கஷ்டமாகிடும் அப்புறம் அழுதுடுவேன்.

2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூக்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம் ஆனா, நீளவாக்குல வெட்டுறதுல விரலுக்கு பயங்கர ரிஸ்க்கு !

.மிளகாய் பத்திரமா நிக்கவைச்சு நீட்டு வாக்குல இரண்டாக்குறதுல பொறுமை ரொம்ப அவசியம் இல்லாங்காட்டி விரலு வீங்கிடும் (கட்டு போட்டு)

வாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு போடுங்க (எண்ணெய் ஊத்தினா கடுகு போட்டு தாளிக்கணும்ங்கறாது ஒரு மனக்கணக்கு!) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க! கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க ! எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க! டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா!

.கே டன்!

இனி
இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு!

13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..!


//பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!
//
பெங்களூரூ குண்டு வெடிப்பு தொடர்பான பதிவிலிருந்து...!

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தெளிவாய் ஒரு சேதியினை சொல்லியிருக்கிறது!

இந்தியாவில் மனிதர்களை பீதியில் ஆழ்த்துங்கள்!

ரொம்ப சிம்பிளான சினிமாக்களில் கூட எடுத்து கையாண்ட விசயம்தான் இந்த கான்செப்ட்!

ஆனாலும் கூட அரசு தன் பாதுகாப்பு எந்திரங்களினை எந்த அளவுக்கு முடுக்கி விட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது! (இன்னும் லூசாக்கதான் இருக்காங்க போல - இத்தனைக்கும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைந்த டெல்லியில் சர்வசாதாரணமாக வந்து குப்பை தொட்டியில் குண்டினை போட்டு செல்கின்றனர்!

ஆனால் இந்த முறை ஒரே ஒரு முன்னேற்றம் - லைவ்வாக இருந்த குண்டினை பாம் ஸ்குவாடு அகற்றி அழகாய் கான்கீரிட் மிகஸ்ர் மிஷினை போன்றதொரு உருவமுடைய சிமுலேட்டரில் போட்டு சின்னதாய் வெங்காய வெடியாக வெடிக்க வைத்து அதை டிவிக்களில் லைவ் செய்துள்ளனர்!

குண்டுவெடிப்புக்கள் லைவ் ஆகாமல் இருக்க லையர்கள் ஆட்சிபீடத்தில் இருந்தபடியே ஏதேனும் செய்யவேண்டும் அட்லீஸ்ட் செய்வது மாதிரியாகவாவது நடித்து மக்களிடமுள்ள பீதிகளினை குறைக்கவேண்டும்!

மொக்கையாய் சில கேள்விகள்?

1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்?

2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க?

3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்?

4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன? அலர்ட் பண்றாங்களா? இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா?

வரிகளில் வலிகள்ஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்றன.

விருப்பம் தோற்றுப்போகும் போது கிடைப்பதை பற்றிக்கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள் ஆனால் அடிமனதில் ஒரு பூரானைப்போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம்...
எஸ்.ராமகிருஷ்ணன்

பாரதியார் !துவக்கப்பள்ளியின் நுழைவு அறையில் எண்ணற தலைவர்களுக்கு மத்தியில்தான் எனக்கு பாரதியார் பழக்கம் மற்றவர்களை விட தனித்து முண்டாசு ஒரு வித தனித்துவத்தினை கொடுத்திருந்ததும் காரணமாக இருந்திருக்கலாம்! மற்றபடி சிறுவர்மலரில் சின்னவயதில் படித்த பாரதியார் பற்றிய படக்கதைகள் மட்டுமே பாரதியாரை பற்றிய அறிமுகம் மற்றபடி பாடல்களிலோ கவிதைகளிலோ அல்லது கட்டுரைகளிலோ கொஞ்சமும் பாதிப்பு பெற்றிராத இளம் வயது பருவம்!

ஆண்டுவிழா அல்லது எப்பொழுதாவது பள்ளியில் காண்பிக்கப்படும் சுவர் திரை புரொஜெக்டர் படங்களின் மூலம் பாரதியார் பற்றி ஒரளவு அறிந்துக்கொண்டது ! இந்த அளவு அறிமுகமே கொண்டிருந்த எனக்கு, எட்டயபுரம் பாரதி நினைவு இல்லம் நோக்கிய பயணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒரு ஊருக்கு செல்கிறோம் என்ற நினைப்பு மட்டுமே!

மிகச்சிறிய ஊர் தான் என்றாலும் எட்டயபுரம் என்று சொல்லும்போதே ஒரு கம்பீரம் கொள்ளவைக்கும்! பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமே பாரதியாரின் நினைவு மண்டபமும் சற்று தூரம் நடந்து சென்றாலே பாரதியாரின் நினைவு இல்லத்தினை சென்றடைய முடியும் என்பது மட்டுமே ஓரளவுக்கு புரிந்து கொண்டு சகோதரருடன் நினைவு மண்டபம் நோக்கிய பயணம்!

கையில் கேமரா பேக்குடன் மண்டபத்திற்குள் எதோ ஒரு எதிர்பார்ப்புடனே நுழைந்தோம்! - ஏமாற்றம் தராவிட்டாலும் மாற்றம் நடந்துக்கொண்டிருந்தது மண்டபத்தில் மராமத்து பணிகள் என்ற பெயரில் முன்பக்கத்தில் சில பல வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. வாசலில் அமர்ந்திருந்த அலுவலரிடம் கையெப்பம் இட்டு இடதுப்புறம் திரும்பி உள்ள 20X20 அடி அறையில் முழுவதும் படங்களுடன்....!

சார் போட்டோ எடுக்கலாம்ங்களா?

ஒ.கே சார் தாராளமா எடுக்கலாம்! எடுங்க ! - விடுமுறையில் சுற்றி வந்த ஊர்களில் பொதுவிடங்களில் கேமராவோடு ஆயத்தமாக, நினைத்தப்போதெல்லாம் நான் கேட்டிராத வார்த்தைகளடங்கிய குரல்!

தலைவர்களுடனான படங்கள் - பாரதி இல்லாத இருக்கும் படங்களும் உண்டு.பாரதியாரின் இல்லத்தில் சேவை புரிந்த அம்மாக்கண்ணு இன்னும் சில கையெழுத்துபிரதிகள் பாரதியாரின் கையெழுத்து போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்!

கிராமம் ஆதலால் மண்டபத்துக்கே உரிய அம்சங்களின்றி சாதரண மக்களின் தினப்பொழுது அமர்ந்திருந்து பேசும் அரட்டைகள் வெளியில் காட்சிகளாக மெளனமாக நினைவு இல்லம் நோக்கி நடைப்போடுகின்றோம்!

வழியில் தமிழிசை மூவேந்தர்களில் ஒருவரான முத்து சாமி தீட்சிதர் நினைவு மண்டபம் திருவாரூரில் பிறந்து எட்டயபுரத்தில் முக்தியடைந்தவர் !

பாரதியார் நினைவு இல்லம் திறந்திருக்கும் வாசல் முன்பக்க வரண்டாவில் மேஜைகள் நாற்காலிகளுக்கு மத்தியில் தினகரனும், தினமலரும் சிதறிக்கிடக்க ஒருவரும் இல்லை எங்களை தவிர! உள்ளே சென்று பார்ப்பதில் சற்று அச்ச உணர்வு வந்த் போனது! வீட்டின் ஒவ்வொரு வடிவமைப்பும் இரும்பாலான வளைவு படிக்கட்டுகளும் சின்ன சிறு நுழைவாயில் கதவும் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துக்கொண்ட சகோதரனை சற்று ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன்! - இதுநாள் வரையில் இப்படியானதொரு சம்பாஷணைகள் நிகழ்ந்ததே இல்லை!- பல நூல்கள் பற்றிய செய்திகளுடன் திரும்ப திரும்ப இல்லத்தினை வலம் வந்து வெளியேறும் வரையிலும் எங்களை தவிர வேறு யாருமின்றி தனித்தே இருக்கிறது நினைவு இல்லம்!

மூத்த தலைமுறையினரின் வீடுகளுக்கு - கிராமங்களில்- சென்று வரும்போது ஏற்படும் ஒரு வித மனபாரம் - எத்தனையோ விசயங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்த காலத்தில் நம்மால் நம் பெரியவர்களை சரியாக கவனித்துக்கொள்ளவில்லையே என்ற பழி உணர்வு கண்டிப்பாய் வரும்! அப்பொழுது அந்த பெரியவர்களை மனதில் நினைத்து,நினைத்து கால ஓட்டத்தில் பெரிய்வர்களையும் ஒரு கடவுளாக நினைத்து கும்பிட பழகிக்கொள்வோம்! அப்படியானதொரு மன பாரம் தான் அன்று!

எத்தனையோ பாடல்கள் எத்தனையோ கவிதைகள் என குறுகிய காலகட்டத்தில் தம்மை முழுவதும் தமிழுக்காய்,சுதந்திர போராட்டத்திற்காய் அர்ப்பணித்திட்ட பாரதியாருக்கு நாம் ஒன்றும் பெரிதாய் அர்ப்பணித்துவிடவில்லை என்பது நிதர்சனம்!

எத்தனையோ பேர் அவர்தம் கவிதைகளினை பாடலினை பணமாக்கி பெரும் செல்வந்தர்கள் ஆன கதையும் கூட உண்டு! அவர்களுக்கு பொதுவாய் ஒரு வேண்டுக்கோள் உங்களால் செய்ய முடிந்த அளவு செய்து பாரதியாரின் நினைவு இல்லத்தில் அவர்தம் பாடலினை அந்த சுவர்களுக்கு எப்பொழுதும் சஞ்சரிக்கும்படி செய்து விட முயற்சியுங்களேன்!

நான் அமிர்தம் உண்டேன்
இப்பொழுதும் இனி எப்பொழுதும்
எல்லையற்ற தெய்வத்துடன் கலந்துவிட்டேன்
இனி இல்லை எப்பொழுதும் எனக்கு துன்பம்
எப்பொழுதும் எனக்கு விடுதலை!
- பாரதியார்

வாழ்த்துக்கள் புதுகை தென்றல்


புதுக்கோட்டை - விடுமுறைக்கு அதிகம் சென்ற ஒரே ஒரு ஊர் !சின்னஞ்சிறுவயதில் என்றாலும் இன்றும் கூட மனதில் பதிந்து நிறைந்திருக்கும் புதுக்கோட்டை - எதோ ஒரு வெள்ளிகிழமைகளின் மதிய வேளையில் கூகுளில் பயணம் மேற்கொள்வேன்!

ஊர் பெயர் மூலம் அறிமுகம் பெற்ற இணைய நட்பு! அன்பு காட்டவும் எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியவர் புதுகை தென்றல் கலா அக்கா! இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனியவேளையில் வாழ்த்துக்களுடன் கலா அக்கா அவர்களின் பழைய நினைவுகள் பதிவு ஒன்றினை பகிர்ந்துக்கொள்கிறேன்!

இந்த பதிவு படித்தப்பொழுது எனக்குள் என் விடுமுறைக்கால புதுகை ஞாபகங்கள் தாலாட்டின :)

***************
எங்கள் புதுகை சின்ன ஊர்தான். காலை 5 மணி, 9 மணி, பகல் 12 மணி, சாயந்திரம் 5 மணி, மற்றும் இரவு 8 மணிக்கு சாந்தாரம்மன் கோவில் அருகில்
இருக்கும் மார்க்கெட்டிலிருந்து சங்கு ஒலி கேட்கும்.(இன்றும் இப்பழக்கம் இருக்கிறது) இதை வைத்தே நேரத்தை கணக்கிட்டுக்கொள்வோம்.

(அதற்கு முன்னரே பக்கத்துவீட்டில் மாடு கறக்க கோனார் வந்துவிடுவார்.) பால் கறந்த கையோடு(3 மணிக்கு) முதல் பால் டெலிவரி எங்கள் வீட்டிற்குத்தான். பால் சொம்போடு வந்து என்னைத்தான் எழுப்புவார் மோகனம்மா. (மோகன் அவர்களின் பையன்) அப்போது எழுந்து (சமையற்கட்டு மேடை மீது அமர்ந்து (சிம்மாசனம் :) ) படித்துவிட்டு 5 மணி சங்கு ஊதியதும் வந்து படுத்துக்கொண்டு அதிகாலையை ரசிப்பேன்.

அதிகாலை 5 மணி சங்கு ஒலிக்கேட்ட கொஞ்ச நேரத்தில்பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்கும். 10 நிமிட கழித்து வீட்டுக்கருகில் (வடக்கு 4ல் எங்கள் வீடு)இருக்கும் சர்ச்சில் ஜபம் தொடங்கும். இன்று என்ன பாடல் போடுவார்கள் என்றுகாத்திருப்பேன்.யேசு ராஜா முன்னே செல்கிறாரா..இல்லை வேறு எந்தப் பாட்டு என்று என் மனதும் நானும் பந்தயம் கட்டிக்கொள்வோம்.

வாசல்
பெருக்கும் சத்தம், பால்வண்டி மணி, இவைகளுடனே துவங்கும் நாள்.

மார்கழி மாதக் குளிருக்கு பயந்து மஃப்ளர் கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம் போடுவது தனி சுகம்..அந்த நேரத்தில் சைக்கிள் எடுத்துக்கொண்டு கீழராஜவீதியில் போவது ஒரு சுகம்.:) 6.30 மணிவாக்கில் கீரை, பூசணிக்காய், உப்பு விற்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும தண்ணீரை பிடித்து வைக்க குடம் தூக்கிப்போகும் பெண்கள்.“எனக்கும் ரெண்டு குடம் தண்ணிக்காஎன்று சைக்களில் குடம் கட்டி வரும் பையன்கள்,குழாயடி சண்டை. வாகனங்கள் அதிகம் போகத் துவங்கியிருக்காத என வீதியே அழகாய் இருக்கும் அந்தக் காலை நேரத்தில்.பல்துலக்கி,குளித்து கல்லூரிக்கு ரெடியாகும் வரைதோழி ஒலித்துக்கொண்டிருப்பாள்.( ரேடியோவில் பக்திமாலை, செய்திகள்.. எக்ஸ்ட்டரா...)

நான் மிகவும் ரசித்த தருணங்கள்!


***************


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !

Fig 'o' Fig

டிஸ்கி:-

Fish 'o ' Fish!


படத்தில்
மல்லு ஃபிகர்களை பார்த்ததும், சிஸ்டத்தில் நாமும் ஃபிகர்களை வைத்துக்கொள்ளலாம் என்றார் பெரியபாண்டி!

பாமாவை
பார்த்தால், 'பாமாவை டெஸ்க்டாப்பில் வச்சுக்கலாம்', 'பாவணாவை வெளியே போகச்சொல்லு', 'மீரா நந்தனையும் டெஸ்க்டாப்பில் வைச்சுகலாமென்றுஎந்த ஃபிகரையாவது டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமென்ற மேனியாவந்துவிட்டிருக்கிறது!!

நானே
போட்டோஷாப்பில் மல்லு ஃபிகர்களை கொலோஜ் செய்து தாரேன் என்று அப்போதைக்கு அவரது கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக் கேட்டு நடக்கும் செல்லபிகராக இருக்க 21 வயதாக வேண்டும்,பெரியபாண்டி )

எப்படி கொலோஜ் செய்ய போகிறேனென்று சொன்னேன் வித விதமான பாமா போட்டோக்களை ஒரே தேர்வு செய்து, இன்னும் etc... etc,,, கொண்டு கொலோஜ் செய்ததில் பாமா டெஸ்க்டாப்பில் சிரித்துக்கொண்டிருக்கிறார்!பெரியபாண்டிக்கு மிகவும் பிடித்த விசயமாய் - மல்லு பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது - எதேனும் சில மல்லு பாடல்களை லிங்க் எடுத்துக்கொடுத்துவிட்டால் நாம் ஒரு 2 மணி நேரம் ஃப்ரீ!!!! :)))

இன்னொரு கொலாஜ் அம்பிகா ராதா என தமிழகத்தின் அந்த கால நடிகைகள், இது பெரிய பாண்டியும் நிஜமா நல்லவனும் சேர்ந்து செய்தது

அடுத்த வருடத்திலாவது நிஜமா நல்லவன் பழைய நடிகைகளை ரசிப்பதை விட்டு லேட்டஸ்ட் டிரெண்டுக்கு வருவார் என்று நம்புகிறேன்! கொஞ்ச நேரத்துக்கு முன்டைப்பிய ஆச்சி பதிவிலிருந்து அப்படியே வெளியிடுகிறேன்

இறைவன்கள்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!
எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

நிஜமா நல்லவன்!?Mrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது

Mrs.நிஜமா நல்லவன்:-. நான் ஊருக்கு போய்ட்டேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:-ஆஃபீஸ்ல போய் தூங்கிட்டு வீட்ல வந்து முட்டை போண்டா செஞ்சு தின்னுக்கிட்டு ஆன்லைல ஒளிஞ்சிருந்து வெளையாடுவேன்!.

Mrs.நிஜமா நல்லவன்:-. நாம ஊருக்கு போனா அங்க நீங்க என்ன பண்ணுவீங்க?

Mr.நிஜமா நல்லவன்:- கேமரா எடுத்துக்கிட்டு தெருவுல சுத்தி,சுத்திக்கிட்டிருக்கிற மாடுங்கள போட்டோ எடுப்பேன்.

Mrs.நிஜமா நல்லவன்:- ஆபிஸ்க்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- எதுவுமே எடுத்துட்டு போக புடிக்காது! கேண்டீன்ல எவனாச்சும் வாங்கி தருவானுக

Mrs.நிஜமா நல்லவன்:-. உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்?

Mr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்!)

இதுக்கு பிறகும் அங்கே கொஸ்டீன் & ஆன்சர் நடக்கும்ம்னு நீங்க நினைச்சா........!

கடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்!


இத்தனைக்கும் நிஜமா நல்லவன் ஏர்போர்ட்ல அம்மிணியை அழைச்சுட்டு வரப்போன கெட்டப்பு பார்த்தா, உங்களுக்கே அனுதாப ஆறு பாஞ்சு ஓடும்.....உலகம் முழுவதும் செய்மதி
இணையம் நமக்கொரு வெகுமதி
ஒரு மாதம் இல்லை திருமதி
இன்று வருவாள் முழுமதி இனி
இணையத்துக்கில்லை அனுமதி..
இனி கிச்சனே கதி !!!
- கறுப்பி - தமிழன்

ஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)

ஊருல கல்யாணமாம் மார்ல சந்தனமாம் - சின்னவயசுல எதாச்சும் விசேஷத்துக்கு போய் கொட்டிக்கிறதுக்கு ரெடியாகும்போது பாட்டி பண்ற கிண்டல் வார்த்தைகள்

பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும் - அப்படி ஒரு அலம்பல் செஞ்சு கொண்டு கிளம்பியதால் பாட்டிக்கு ஏற்பட்ட எரிச்சலாக கூட இருக்கும் !

என்னமோ நீ போகலைன்னா எல்லாமே நின்னுபோயிடற மாதிரியில்ல இருக்கு நீ பண்ற அழிச்சாட்டியம் என தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றாலும் பில்ட்-அப் கொடுத்து

கிளம்புவதுதான் வழக்கம்! (அந்த கதையெல்லாம் பிறகு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிறேன்!)

எவனுமே கூப்பிடாத விசேஷத்துக்கு யாரை பாக்கடா நீ போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட கிண்டல செய்யும் சூழல்களும்,நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு பட் கொட்டிக்கணும்ன்னு

முடிவு பண்ணிட்டா ச்சும்மா தெருவுல மரியாதைக்கு விஷ் பண்ணிட்டு போனவங்க வீட்டு விசேஷமா இருந்தாலும் போய் குந்திக்கவேண்டியதுதானே!

அப்படித்தான் இந்த ஓணம் (ஹைய்யா லைனுக்கு வந்தாச்சே!!!) விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல

பச்சக்குன்னு ஓட்டியிருக்கு ! :) இலைச்சாப்பாடு என்ற ஆச்சர்யம் கிள்ம்பி காணாமல் போனாலும் அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே

இல்லை,வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும், கலாச்சாரம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதே ஒரு பெருமைதானே! - ஒரு நாளும் கிழமையும் விரதம் இருக்கணும்னாலே

ஒரே டயர்டா இருக்கு வேணாம்ன்னு சொல்ல தோணுது எனக்கெல்லாம்! - அப்படிப்பட்ட ஒரு விசேஷம் நிறைந்தது இந்த ஓணம் பண்டிகை !

ஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை !

கண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜி3


வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

ப்ரவாகத்தில்
இல்லை வெறுமை
இருக்கும் கலாட்டா டைம்
வேறென்ன வேண்டும் உலகத்திலே?
சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷத்தோடு
ராயலாய் வாழ்த்துக்கள் சொல்வோம்
நட்பு ப்ரவாகத்திற்கு - சகோதரி ஜி3க்கு -

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

டிஸ்கி:-

1.பிரவாகத்தில் வந்த பதிவுகளின் தலைப்பினை கோர்த்து தங்கச்சி ஜி3 தரப்போகும் டீரிட் & கேக்கிற்காய் இன்றிலிருந்தே காத்திருக்கிறேன்....!

2.டிஸ்கிக்கு மேலிருக்கும் வார்த்தைகள் கண்டிப்பாய் கவிதை அல்ல!