கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்...!

சன் டிவியின் - படிக்காதவன் -பார்த்ததுமே டக்குன்னு புடிக்காது!

பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!

****************************************************************

கலைஞர் டிவியின் - வில்லு
தில்லு இருந்தா எதிர நில்லு !
டிஸ்கி:-

படமெல்லாம் பாக்கலைங்க ச்சும்மா டிவியை ஒரு மணி நேரம் பார்த்த எபெக்ட்! நான் யாரை அட்டாக் பண்ணமுடியும் அப்பாவி பிளாக்கர்ஸத்தானே...!?! :))

வரேன்ங்க..!

அதிகாலை கோவில் தரிசனம்

உணவு வகையறாக்களுடன் கொஞ்ச நாள் (சு)வாசம்.(நல்லா திங்கறதுக்குத்தான்...!)

இருக்கும் நட்புக்களோடு இணைந்து ஊர் சுற்ற,

இனிய உறவுகளின் இல்லங்களில் தலை காட்டி,

தனிமையை பொறுமையாய் கழித்த காலத்தினை நினைத்துப்பார்த்து,

உறவுகளோடும் நட்புக்களும் மகிழ்வாய் இருந்து போக எனக்கு வரும் ஒரு மாத காலம்!

ஒரு மாத காலம் ஊர் சுற்றி திரிந்தாலும் ஒரு வருடமாய் உற்ற துணையாய் இருந்த, இருக்கும்,இருக்கப்போகும் உங்களின் நினைவுகளை சுமந்தபடியே....

நான் வரேன்ங்க..!

அய்யா பெரியவரே.....!


பொறுத்து

பொறுத்து

பொறுமையே

பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!

இனியும் பொறுமை காத்தல் என்பது பிணங்களை பார்த்தல் என்பதில் மட்டுமே முடியக்கூடும்!

மத்திய அரசிடம் வைத்த் கோரிக்கைகள் யாவும் வீணாகிப்போனது இன்னும் புரிபடவில்லையா...?

இல்லை இதற்கு மேலும் எதோ ஒன்று தமிழினத்தை காப்பாற்றும் என்ற இறை நம்பிக்கை முடிவில் இருக்கிறீர்களா...?

வீழும் ஈழ தமிழ் மக்களின், கல்லறைகளில், தமிழன் உதவி செய்யாததால் வீழ்ந்தவர்கள் இவர்கள் என்ற குறிப்புக்கள் எழுத்துகளாய் அல்ல எண்ணங்களாய் நிறைந்திருக்கும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!

மனப்பூக்கள் மலரட்டும் - 2வாழ்வை வைத்துக்கொண்டு இத்தனை நாள் என்ன செய்தேன் என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பெரிய வாய்ப்பை உணராமல் ஏதோ நாட்களை ஓடிக்கொண்டிருப்பது புரிந்தது. உலகம் எனக்கு ஏதும் கடமைப்பட்டில்லை என்ற உணர்வு தோன்றியது. எல்லா காரியங்களையும் நான்,என்ற நோக்கில்தான் செய்தேன் என்பது புரிந்தது.

நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனா அல்லது அவை எனக்கு நல்லது என்பதற்காக காரியங்களை செய்தேனோ என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன்.

வாழ்வில் ஒரு அர்த்தத்தை தேடி நான் பாடுபட வேண்டும், உழைக்க வேண்டுமென்ற ஒரு நெறி பிறந்தது. இவ்வுலக வாழ்வின் மேன்மைகள் எனக்கு முன்னைவிட நன்கு புலனாயின. அறிவு தெளிவு பெற்றது. முன்பெல்லாம் என் குழந்தைகள்,என் குடும்பம் என்று கவலைப்படுவேன். இப்பொழுது எதிர்காலத்தை பற்றிக்கவலைப்படாமல் நிகழ்காலத்தில் வாழ்கிறேன். நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கின்றேன்.

பிறரிடம் என் அன்பு அதிகமாகிறது.பிறர் தேவைகளை என்னால் ஒரு கணத்தில் ஊகிக்க முடிந்தது. நான் புனிதம் அடைந்துவிட்டதாகவோ அல்லது தெய்வீகம் பெற்று விட்டதாகவோ கூறவில்லை!

என் வாழ்வில்...

புதிய லட்சியம் பிறந்தது;

புதிய நெறி பிறந்தது;

புதிய உறுதி பிறந்தது;

நன்றி:- ஆத்மதரிசனம்
எம்.எஸ்.உதயமூர்த்தி.

இவர்களுக்கு என்று வரும் "sun"day...?
The simple truth is that the people are a normal people with normal aspirations. They are no better or worse than any other nationals. What they aspire to, above all, is a piece of land to call their own on which to live in freedom and dignity.

நன்றி:- கல்ப் டைம்ஸ்!

Lessons Learned..!


இனிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிஞ்சு நார்மல் நாட்களுக்கு திரும்ப ரிடர்ன் ஆகியிருப்பீங்கன்னு நினைக்கிறேன்!

பள்ளி நாட்களில் புத்தாண்டு விடுமுறை முடிந்ததும் வரும் அடுத்த நாள் மிக கவனமாக செய்யும் விசயம் தேதி சரியாக குறிப்பிடுதல் - டேய்...! இன்னும் போன வருசத்துலயேவாடா இருக்கன்னு, எள்ளல் நக்கல், எதுவும் அக்கம்பக்கத்துலேர்ந்து எந்திரிச்சு வரக்கூடாதுன்னு, மிககவனமா வீட்லயே கணக்கு நோட்ல ஆரம்பிச்சு எல்லா நோட்லயும் ஒரு ரெண்டு மூணு பக்கத்துக்கு நாள் நிரப்பிட்டுத்தான் வருவோமாக்கும் ரொம்ப விவரம்ல..!

புத்தாண்டுக்கு எதையாச்சும் செய்வோம்ன்னு சபதமெல்லாம் போட்டிருக்ககூடும் பலர் முடிஞ்சவரைக்கும் பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க !

ரொம்ப கஷ்டமா இருந்தா அட்லீஸ்ட் மாசத்துக்கு ஒரு விசயத்தை செலக்ட் பண்ணி அதுல கவனமா பாலோ பண்ண டிரைப்பண்ணுங்க!

பிளாக்கர்ஸ் பீல்டுல உதா”ரணம்” வைச்சு சொல்லணும்னா...

1.ஒரு மாசம் புல்லா ஆயில்யன் மாதிரி மொக்கையே போடமாட்டேன்னு சங்கல்பம் எடுத்து பாலோ பண்ணுங்க..! (பட் என்னால முடியலங்க தோ.. இப்பவே நீங்கதான் பாக்குறீங்களே...!)

2.பதிவு எழுதுறதை எல்லாம் நிப்பாட்டிட்டு சகட்டுமேனிக்கு பின்னூட்டம் போட்டு பின்னூட்ட பட்டியல்ல இடம் பிடிக்கணும்ன்னு ஒரு மாசம் ஒதுக்கி வைச்சு செய்யுங்க!

3.ரொம்ப டயர்டாக்கிட்டீங்கன்னா ஒரு மாசம் தமிழ்மணம் பக்கம் தலைவைச்சே படுக்கமாட்டேன்னும் கூட நினைச்சு டிரைப்பண்ணுங்க! (என்னை பொறுத்தவரைக்கும் இருக்கறதுலேயே ரொம்ப டெரரான முடிவு!)

இப்படியாக பலப்பல விசயங்கள் இருக்கு! (பிறகு ஒண்ணொண்ணா யோசிச்சு யோசிச்சு சொல்றேன்!)

எதாச்சும் பர்பெக்டா அழகா விசயம் அதிகமா இருக்கற மாதிரிதான் பதிவு போடுவேன்னு முடிவு பண்ணிட்டா சூப்பரூ! அது ரொம்ப்ப்ப பெரிய விசயம்...!

டைட்டில் விசயத்துக்கு வாரேன்!

நாட்குறிப்பு எழுதும் வழக்கம் பலருக்கும் இருக்கும்! அவுங்களுக்குத்தான் முக்கியமான விசயம் ஜஸ்ட் ஒரு இனிய விடுமுறை நாளில் உங்க 2008 டைரி எடுத்து வைச்சு ஒரு ரீவ்யூ பண்ணுங்க அப்புறம் 2007 டைரி இருந்தா அதையும் ஒரு ரவுண்ட் வாங்க, என்ன? என்ன ?தவறுகள் பாதிப்புக்கள் அல்லது, என்ன என்ன முடிவுகளால் சக்சஸ் போன்ற விசயங்களை கவனமா மனசுல பதியவைச்சுக்கோங்க!.

அவ்ளோதான்! இனி வரும் நாட்களில் வரும் அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த டெக்னிக் யூஸ் பண்ணிட்டு ச்சும்மா தட்டிட்டு போயிடலாம் வெற்றிக்கனியை...!

நான் டைரி எழுதற பழக்கமே கிடையாதே நான் என்ன செய்றதுன்னு கேக்குற ஆளுங்களுக்கு நீங்க தான் டைட்டிலுக்கு 100% ஒத்து போற ஆளு.!

இனி டைரி எழுத ஆரம்பிச்சிடுங்க...!

ரொம்ப பயங்கர் தகவல்கள் ரகசியங்கள் இருக்கே அதை எப்படி நான் டைரியா எழுத முடியும்ன்னு யோசிக்காதீங்க! ஒரு வேர்டு பைல் போதும் பாதுகாப்பா கம்ப்யூட்டர்ல போட்டு பூட்டி வைச்சுக்கலாம்!