Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்!

டிஸ்கி-1:- வெட்டியாத்தானே இருக்கோம்ன்னு நினைச்சப்போது - நினைச்சது!





நீ பேசிடும் போது பேசாமல்,
நான்
மௌனம் தந்திடுவேன்


ஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கிட்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்!

தேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே! - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க! [அதான் டிரெண்ட்டே]

அந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும்! மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும்! அதானே கரீக்ட்டு! [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே!]

டிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு?!

புறா!

ஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்!



வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!

வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!

எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!

கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!

சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?

ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!



கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!

ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!

நினைத்தாலே உறைக்கும்!


டிஸ்கி:- படிச்சப்பிறகு நாக்கை சப்பு கொட்டிக்கிட்டு உக்காந்திருக்ககூடாது சட்டுப்புட்டுனு போய் காரியத்தை கச்சிதமா முடிச்சுட்டு வந்து கமெண்ட்ல ஆஹா நீங்க சொன்னதும் நிசம்தான்னு சொல்லிட்டு போகணும் ஒ.கேய்ய்!

எங்க ஊரு மக்களுக்கு நாளும் கிழமையும்ன்னா கண்டிப்பா காலையில வீட்ல இட்லிதான் போடுவாங்க திங்கிறதுக்கு!

நாளும் கிழமையும்ன்னா நல்ல நாட்கள், விசேஷ நாட்கள் மற்றப்படி கிருத்திகை,பெளர்ணமி அப்புறம் இன்ன பிற விரத நாட்கள் வெள்ளி ஞாயிறு இப்படியான நாட்கள்ன்னு வைச்சுக்கலாம்!

மத்த நாட்களில் எதாச்சும் டிபன் ஐட்டம்ன்னு சொல்ற தோசை,உப்புமா,பொங்கல் அல்லது வடக்கத்திய ஐட்டம்ங்கள் பூரி சப்பாத்தின்னு ஓடிக்கிட்டிருக்கும் ஆனா இந்த நாளும் கிழமையும்ன்னு சொன்னா ஒன்லி இட்லி ஐட்டம்தான் அதுக்கு சைடு கட்டி வைச்சு தட்டறதுக்கு சட்னி அல்லது சாம்பார் ஐட்டங்கள்!

இந்த சைடு ஐட்டங்கள் நார்மலா செய்யுறது,சில சமயங்கள் ட்யூ டூ அர்ஜென்சிக்கு (அம்மா பசிக்குதும்மா!) செய்யுற சைடு ஐட்டம்தான் நான் இங்க சொல்லி, நீங்க செஞ்சு திங்கப்போறது

சிவப்பு மிளகாய் பொடி - ஆக்சுவலா இப்படித்தான் நாங்க ஜொள்ளுவோம்! ஆனா இது துவையல் கேரக்டர்!

ரொம்ப சிம்பிளான செய்முறைதான் ஆனா திங்கிறப்பத்தான் சும்மா ஜிவ்வுன்னு காரம் தூக்கி கலக்கும் !

செய்யிறது எப்பிடின்னு நானே கூடச்சொல்லிடுவேனாக்கும்

நல்ல நாலு காஞ்ச மிளகாய் அப்புறம் கொஞ்சம் சின்ன வெங்காயம்,கொஞ்சம் உப்பு அம்புட்டுத்தேன்!

இந்த ஐட்டங்களை சேர்த்து,கொஞ்சமா தண்ணி தெளிச்சு விட்டு,அம்மியில வைச்சு விழுதாக அரைக்கணும்! ச்சும்மா வெண்ணெய் பதத்துக்கு அரைக்கணுமாக்கும்!

கடைசியா கொஞ்சம் கடுகு பொரிச்சு போடணும்!

அவ்ளோதான் புராடெக்ட் ரெடி!

இனி நல்லா சப்பணம் போட்டு உக்காந்துக்கிட்டு,சுடச்சுட இட்லியை டைரக்டா இட்லிபானையிலேர்ந்து அப்படியே தட்டுக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்ட்டு, அரைச்சு வைச்சா மிளகாய் பொடி/துவையலை ஒரங்கட்டி நடுவில குழிவிட்டு நல்லெண்ணை விட்டு கொஞ்சமா கலக்கி வைச்சுக்கிட்டு (ரொம்ப எண்ணெய் விட்டா நல்லா இருக்காதுப்பா!)
இட்லியை பிட்டு அதை சிவப்பு மிளகாய் பொடி/துவையல்ல தோய்த்து ச்சாப்ட்டா...!

(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!எனக்கு இப்பவே சாப்பிடுணும் போல இருக்குங்க ஒரே அழுகை அழுகையா வருது!)

டெவல்ப்மெண்ட் ஸ்டடீஸ்க்கு :-

1.சிவப்பு மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும் ச்சூப்பரா இருக்கும்!.

2.இந்த ஐட்டங்களோட கொஞ்சம் பூண்டு சேர்த்து அரைச்சா அதுலயும் கொஞ்சம் டிபரெண்ட் டேஸ்ட் காமிக்கும்

3.சின்னவெங்காயத்துக்கு பதிலா பெரியவெங்காயமும் போடலாம் பட் பெரியவெங்காயத்தை கொஞ்ம் பொன்னிறமா வறுத்துப்போடா இன்னும் சூப்பரா இருக்கும்!


ரொம்ப உறைப்பாகிடுச்சுன்னா லைட்டா ஜீனி நாக்கில தொட்டுக்கோங்க!



ஒ.கேய்ய்ய்ய் !

அப்பத்தான் நினைத்தாலே இனிக்கும்!

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டப்பொழுதில் காதில் விழுந்து மனதில் பதிந்திருந்தது! ( அனேகமாய் அப்பாவின் டேப்ரெக்காடர் வழி கேட்டிருக்கவேண்டும்!)

நினைவுகள் அளிக்கும் தொந்தரவான தருணங்களில்,சில வரிகள் மட்டும் மனம் சிந்தித்து வாய் வழி ஒலித்து தெறித்து விழும் பாடல்!

மிக நீண்ட நாட்கள் தேடலில் ஒரு வழியாய் கிடைத்து பிடித்துவிட்டேன்!

இன்று முதல் இனிய காலை வேளைகளின் தோழமையாய் மாறிவிட்ட இந்த பாடல்

எத்தனையோ செய்திகளை இணைய நட்புகளோடு பகிர்ந்துக்கொண்ட எனக்கு இதையும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு....!


பாடலை காண...




பாடல் வரிகளினை காண

நன்றி செல்லி

நன்றி ஜில்ஸ்!

எல்லாருக்க்கும் மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே சரி ரிஷி மூலத்தை பாக்கலாம்ன்னு போனா அங்க நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஸ்டைலா படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருக்காரு! அவுருக்கும் ஒருபெரிய்ய்ய்ய் தேங்கஸ்சு!

ஆடி(ய)யோ காலங்கள் - 1

இன்னிக்கும் கூட நீங்க கிராமத்து பக்கம் போனீங்கன்னா இரவு நேரங்களில் இசை தாலாட்டு கேட்டவாறே ரசித்துக்கொண்டே அமர்ந்திருக்கும் நபர்களை காணமுடியும்! வானொலி ஒலிபரப்புகள் முடிந்ததுமே, அடுத்து உடனடியாக ஆடியோ கேசட்களில் பக்தி,பழைய அல்லது புதிய பாடலக்ள் ஒலிக்கதொடங்கிவிடும்! இப்படியான இசைக்கு அடிமையானவர்கள் கண்டிப்பாக இந்த வார்த்தைக்கும் அடிமைப்பட்டே கிடப்பவர்கள்!

அசெம்ப்ள்டு செட்!

பெரும்பாலும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகள் இது போன்றவர்களின் அசெம்ப்ள்டு ஆடியோ செட்கள் ஆசையை நம்பியே ஓடிக்கொண்டிருக்கின்றன என்று சொன்னால் அதுவும் பொய் இல்லை!

சும்மா ஒரு 300 - 500க்குள் ஒரு சின்ன ரேடியோ & ஆடியோ அப்புறம் ரெண்டு ஸ்பீக்கர் ரெண்டு ட்விட்டர்கள் கொடுத்தாக்கா அப்படியே காசு கொடுத்தவன் அடுத்த நிமிஷமே ஆடியோ உலகத்தில் கனவுகளில் சஞ்சரித்துக்கொண்டிருப்பான்!



இதுவே கொஞ்சம் காசு அதிகம் உள்ள பார்ட்டீயா இருந்தா அவருக்கேத்த மாதிரி அவரோட ஆசைகளை பூர்த்தி செஞ்சு ஒரு ஆடியோ சிஸ்டம் ரெடி பண்ணிக்கொடுக்கவும் ரெடியா ஆட்கள் இருப்பாங்க! வேணும்ங்கறவங்க என்ன மாதிரியான எபெக்ட்ஸ் என்ன மாதிரியான சவுண்டு இருக்கணும் (தம்பி சவுண்டு வைச்சா தெருவே சும்மா கடந்து அல்லோலகல்லோலப்படணும்ம்ப்பா!) இப்படியான யூசர் ப்ரெண்ட்லியா சிஸ்டம் ரெடி பண்ணி கொடுத்துக்கிட்டே இருப்பாங்க!

இதுல முக்கியமான கட்டமே டெஸ்டிங்க்த்தான்! இதுலதான் பயபுள்ளைங்க ஏமாறதும், அப்பாவிகளை ஏமாத்துறதும் நடக்குற கட்டம்! பாட்டு போட்டு அதை கேட்டுட்டுத்தான் மிச்ச பணம் கையில கொடுக்க முடிவா இருப்பாங்க வாங்க வந்தவங்க! எப்படியாவது சிஸ்டத்தை தலையில கட்டிட்டு கையில இருக்கற காசை வாங்கறதுல குறியா இருப்பாங்க விக்கிறவங்க! இந்த இரண்டு பேருக்கும் நடுவுல கஷ்டப்படுறது யாருன்னு கேட்டா அக்கம்பக்கத்துல நிக்கிறவங்க,கடை வச்சிருக்கறவங்க இது மாதிரி ஆளுங்கதான்!

சிலவிபரமான ஆளுங்க கையில கேசட்டை கொண்டு வந்து கொடுத்து போட்டு பாடச்சொல்லி கேக்குவாங்க! அப்பத்தான் பழைய டேப்ரெக்கார்டருக்கும் புதுசுக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாம்னு! ஆனா பாருங்க,விக்கிற ஆளுங்க வாங்குற ஆளுங்க கொடுக்கற கேசட்டை பத்தி ஆயிரம் குறை சொல்லி நாங்க இப்ப போட்டுக்காட்டுறோம்! சவுண்ட் எபெக்ட் எப்படி கிழியுது பாருங்கன்னு சொல்லி இந்த பாட்டை போட்டதுமே எல்லா விவரமானவங்களும் ஏமாளியாக மாறி ஆடியோ சிஸ்டத்தை எடுத்துக்கிட்டு நடையை கட்டுவாங்க!

அப்படி என்ன இருக்கு அந்த பாட்டுலன்னு கேட்கறீங்களா?

ஒண்ணுமில்லைங்க! சிலு சிலு சிலுன்னு சவுண்ட் அப்புறம் புரியாத மொழி வேகமான பாடல் இது எல்லாத்தையும் கேட்டா வாங்க வந்தவங்க அப்படியே தன்னையே மறந்துட மாட்டாங்களா....???


எனக்கு தெரிஞ்ச வரையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் அதிகம் புழக்கத்திலிருந்த ஆல்ப பாடல் இதுவாகத்தானிருக்கும் - அதுவும் வேற எந்த ஒரு ஆல்ப பாடலகளும் வெளிவந்திராத காலகட்டத்தில்...! (நான் சொல்வது சரிதானே...??)

இட்லி மிளகாய் பொடி...!

நாற்புறமும் வட்டத்தில் குன்றுகளாய் அமைத்து,

அதன் நடுவில் அழகாய் விட்ட எண்ணெய்யில்,

குன்றுகளை கரைத்த பின் காணும் சொர்க்கம்!

காரமாகவே இருந்தாலும் கூட, கடலினிருந்து பெற்ற அமிர்தத்துக்கு இணையாக இட்லிக்கும் தோசைக்கும், துணையாக வரும் இந்த இட்லி மிளகாய் பொடியும் சாப்பிடாத ஆட்களுண்டோ...!



அனேகம் பேருக்கு அதிகம் அறிமுகமாவது இட்லிக்கு துணையாகத்தான்! அதுவும் கூட வீடுகளில் அவசரகால நடவடிக்கை சமயங்களில்தான்!

சூடச்சுட இட்லியும் அதற்கு துணையாக நல்லெண்ணை முழ்கிய மிளகாய் பொடியும் இருந்தால் போதும் எண்ணிக்கை இங்கு எடுபடாது!அப்படியே தின்று கொண்டே இருக்க தோன்றும்! அதை போலவே இந்த துணை தோசைக்கும் நன்றாக ஈடுக்கொடுக்கும்!

ஒன்றுமே செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கும்போது தயிர்சாதத்துடன் + மிளகாய் பொடி -அனுபவிச்சு பாருங்கப்பா அர்த்தம் விளங்கும்!

கொஞ்சம் உளுத்தம் பருப்பு (வெள்ளை)
கொஞ்சம் சிவப்பு மிளகாய் ( அதாம்ப்பா காஞ்ச மிளகாய்!)
கொஞ்சம் கடலை பருப்பு,
கொஞ்சம் எள்,
கொஞ்சம் பெருங்காயம்,
இன்னும் கொஞ்சமா உப்பு,
அவ்ளோதாங்க! அப்படியே இட்லியை கொஞ்சிக்கிட்ட சாப்பிட்ட வைக்கலாம் இதை தொட்டுக்கொண்டு...!

சின்னபசங்க இந்த இட்லி மிளகாய் பொடி காம்பினேஷனா சாப்பிடுறதையும் கொஞ்சம் வாட்ச் பண்ணி பார்த்தீங்கன்னா, கொஞ்சமா இட்லி பிட்டு அதுல மிளகாய் பொடியை தோய்த்து கையில வைச்சுக்கிட்டு, கண்களால் அதையே ரொம்ப நேரத்துக்கு நோட்டம் விடற பார்த்தீங்கன்னா, நமக்கே அதை அப்படியே பிடுங்கி சாப்பிட்டணும் போல தோணும்! (அப்படியும் சாப்பிட்டிருக்கேன்ல....!)


இதெல்லாம் நார்மலா எல்லாரும் டிரைப்பண்ற விஷயம் நாமெல்லாம் அப்படியா...!??? இட்லி தோசை எல்லாம் அடிச்சு முடிச்சப்பிறகு மீந்து போயிருக்கு எண்ணெய் + மிளகாய் பொடியை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சுவைத்து பாருங்களேன்..! ச்சே சான்ஸே இல்லப்பா!

யாருப்பா..! கண்டுபிடிச்சது இத்தனை ஆனந்தம் வரவழைக்கும் இந்த ஐட்டத்தினை..??

(இருக்கும்போது இல்லாத எண்ணம் இழந்தபோது தான் தோன்றியது! - ஆமாங்க லீவுக்கு ஊருக்கு போனப்ப அம்மாவை செய்ய சொல்லி, எடுத்து வந்த மிளகாய் பொடியை யாருக்குமே கொடுக்காமல்,கிட்டதட்ட 5 மாசம் பொத்தி பொத்தி வைச்சு தின்னு நேற்றையோட காலி! :-( )

பென்சில் :-)


இந்த ஆயுதத்துடனான என் ஆட்டம் தொடங்கியது அனேகமாக 6வதோ அல்லது 7வதிலிருந்தோதான் இருக்கும் என நினைக்கிறேன்! ஏன்ன அப்பத்தான் நாங்க அன்னிய மொழி கற்க ஆரம்பித்திருந்தோம் அதாங்க ஆங்கிலம்ன்னு சொல்லுவாங்கள்ல, அட நம்ம இங்கீலீஸுங்க!

இரட்டை வரி நோட்டுல அழகா A B C D எழுத ஆரம்பிச்ச நேரம்தான் எனக்கும் பென்சிலுக்குமான முதல் தொடர்பு! அப்ப தெரியாது கடைசி வரைக்கும் நாந்தாண்டா உன்கூட கண்டினியூவா வரப்போறேன்னு அந்த பென்சில் சொல்லியிருக்கும்போல!

அதன் பின்னர் எல்லா வகுப்புகளிலும் கண்டிப்பாய் பென்சில் இருக்கவேண்டும் என்று உத்தரவு போட்ட ஆசிரியர்கள்!

ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))

தமிழ் மனப்பாட பாடல்கள் படித்துக்கொண்டே எழுதிப்பழக,

கணித வகுப்புகளில் கண்டபடி கிறுக்கி கணக்கிட.

அறிவியலில் படம் வரைந்து பாகங்களை குறிக்க ( படத்தை வரைஞ்சுட்டு பாகத்தை வேற இடத்துல குறிச்சு வைச்சதால பொளோர்ன்னு அறை கொடுத்த அந்த சயின்ஸ் வாத்தியை ( கோவம்!) மறக்கமுடியுமா?)

வரலாற்றில், வரவே பயப்படும் காவிரியிலிருந்து கண்ட ஆறுகளையும் தமிழ்நாட்டுக்குள் ஓடவிட்ட நாட்கள்! ( இந்தியா மேப்ல ஆறுகளை குறிங்கடான்னு சொன்னதுக்கு எல்லா ஆறையும் அப்போ எனக்கு தெரிஞ்ச நாடான தமிழ்நாட்டுக்குள்ளையே வரைஞ்சு வைச்சிருந்தேன்ல!)

இப்படியாக இன்ப துன்பமனைத்தையும் அள்ளி நோட்டுப்புக்கில் தெளிக்க காரணமாயிருந்த பென்சில்லுக்கு அடுத்த புரொமோஷன் படம் வரையறது!

பாலிடெக்னிக் போனா அங்கயும் முதல்லேர்ந்து விதவிதமாக திரும்பவும் அன்னிய மொழியினை அலங்கரிக்க சொல்லி வற்புறுத்திய அந்த வாத்தி (கோவம்!)

சரின்னு பொறுத்துக்கிட்டுத்தான் அந்த வேலையும் செஞ்சோம்! ஆனா பாருங்க ஒரு நாள் அந்த வாத்தியாரு வன்முறையில என் பென்சிலை ஈடுபடுத்த வைச்சுட்டாரு!

தொடரும்....!

(இப்படித்தான் போட்டு அடுத்த பாகத்துல அதிக ஆர்வத்தோட சொல்லலாம்ம்னு நினைச்சேன் பட்..! ரெண்டு வரிக்கெல்லாம் தனியா ஒரு பதிவு போட்டா அடி விழும்னு அண்ணன்களெல்லாம் பயமுறுத்துனதால இப்பவே சொல்லிக்கிறேன்!)

ஒரு நாள் அதே டிராயிங்க் கிளாஸ் அதே வாத்தி! பட் எங்களுக்குள்ள ரெண்டு பேர்கிட்ட பென்சில் மிஸ்ஸிங்க்! என்ன பண்றதுன்னு ஒரே ரோசனை ரோசனையா வருது! சரி சமாளிப்போம்ன்னு ப்ரெண்டுகளுக்கிட்ட இருந்த பென்சிலை எடுத்து உடைச்சிட்டோம்! ஆனா எந்த நாயுமே ஷார்ப்னர் வைச்சிருல்ல! (கிளாஸ்ல நாங்க மொத்தமே 12 பேருதாம்ல) சரி திரும்பவும் சமாளிப்போம்னு கொஞ்சமா கடிச்சி கருப்பு கிராபைட் தெரியுற அளவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு சும்மா பாவ்லா காட்டிக்கிட்டு உக்காந்திருக்கோம்!

ஆனா இதை கரெக்ட்டா கண்டுபிடிச்சு வந்தாரு எங்ககிட்ட வாத்தியாரு (எப்படித்தான் கண்டுபிடிப்பாய்ங்களோ!)

வாத்தி:- என்னாடா இது?

கோரஸ்:- சார் பென்சில் சார்!

வாத்தி:- .கே எங்க டிப்பை காணும்?

கோரஸ்:- வரையலாம் சார்!

வாத்தி:- இங்க கொடு! வாங்கி பார்த்துட்டு,அவரு பையில இருந்து ஒரு பென்சில எடுத்து காட்டி இப்படி இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!

கலர் பார்க்க போகலாமா?

கலர் பார்க்க போகலாமா? அப்படின்னு ஒரு கேள்வி வந்தாலே போதும் பயபுள்ளைங்க எல்லாத்துக்கும் மனசுக்குள்ள மத்தாப்பூ சிறகடிச்சு, சிரிப்பு சிரிப்பா பறந்து வரும்!

நான் ரெடி நீ ரெடின்னு நிப்பானுங்க! ஆனா பாருங்க எவனுக்கும் அப்ப எந்த வேலையிருந்தாலும் சரி அதைப்பத்தியெல்லாம் அப்பவே மறந்துடுவானுங்க!

கலர் பாக்குறதுன்னா அம்புட்டு இஷ்டமாக்கும்!

தீபாவளி பொங்கல் நியூ இயர்ன்னு வந்துட்டா போதும் தினமும் கடைத்தெருவுக்கு போய்ட்டு வரதுக்கு எல்லாம் ரெடியா நிக்கும் அதுவும் பாருங்க சொன்ன டைம்முக்கு ஒரு மணி நேரமு முன்னாடியே வந்து நின்னுப்பாங்க! (எக்ஸாமுக்கு குரூப் ஸ்டடி போடணும்னா சொன்னா வாட்சை மறந்திட்டேன்னு சொல்ற பயலுக!)

மாசத்துக்கு ஒரு நாளாச்சும் இப்படி கலர் பார்க்க போகலைன்னா ஒருத்தன் முகத்தை ஒருத்தன் ரொம்ப ஏக்கமா பாத்துக்குவானுங்க! அந்த மாதிரி சமயங்களில் சரி பாவம் போகட்டும் நாம இன்னிக்கு இவுங்களை அழைச்சிட்டுப்போவோம்னு ஒரு பரிதாபத்தோட அழைச்சுட்டு போகவேண்டிய சூழல் நிறைய வந்திருக்கு எனக்கு!

சரி பாவம் பார்த்து அழைச்சுப்போறோமே நாம பாக்குற கலர்களை பத்தில் எதாச்சும் சாதகமா சொல்லுவானுங்கன்னு பார்த்தா ஆயிரம் நொள்ளை சொல்லியே, ஏண்டா இவனுகளை அழைச்சிட்டு வந்தோம்முனு நொந்து போற அளவுக்கு என்னைய பேசியே சாகடிச்சிடுவானுங்க!

சரி அவனுங்க பாக்குற கலர்களை பார்த்த நம்ம மனசுக்கு மேட்சே ஆகாது அவ்ளோ கொடூரமா இருக்கும் கேட்டா இதுதாண்ட்டா இப்ப ஸ்டைலு டிரண்டு அப்படி சொல்லியே எஸ்ஸாகிடுவானுங்க!

எனக்கு எப்பவும் வெள்ளைத்தான் பிடிக்கும்! ஆனா பாருங்க படுபாவிங்க ஒரு நாள் கூட, உனக்கு வெள்ளை மேட்சே ஆகாது அத போய் எப்படிடா நீ அவ்ளோ லைக் பண்றேன்னு ஒவர் நக்கலு வேற! வேணும்னா லைட் கலாரா டிரைப்பண்ணி ப்பாருடான்னு அட்வைஸ்!

இப்படியா எனக்கு பிடிச்ச கலர் அவங்களுக்கு பிடிக்காம போக அவுங்களுக்கு பிடிச்ச கலர் எனக்கு உவ்வேக் வர வைக்க சில சமயம் பெரிய வாக்குவாதமாககூட ஆகிப்போய்டும் அந்த மாதிரி சமயத்திலதான் கடைக்காரான் சொல்லுவான்

ஏம்ப்பா நீங்க டிரெஸ் எடுக்க வந்தீங்களா? இல்ல எங்க கடையில சண்டை போட வந்தீங்களா போங்கப்பா போய் முடிவு பண்ணிட்டு பிறகு வாங்க்ப்பான்னு சொல்லுவான்! ( நிறைய தடவை திட்டியிருக்காங்க பட் நாம எப்பவும் பொது ஊடகங்களை நல்ல மாதிரியான சூழ்நிலையிலதானே அறிமுகப்படுத்தணும்!)

சரி வாங்க இப்ப கலர் பாக்கலாம்!



ஆமாம் நீங்க நினைச்ச கலர் இதுல இல்லைல்ல! ???

சோதனை - பதிவாய்....!


சில நேரங்களில் சில குண்ங்க(ளால்)ளில் ஏற்படும் மாற்றங்கள்!

நம்மை எங்கேயாவது கொண்டு செல்லும்

அல்லது எங்கயோ கொண்டு செல்லும்!

சில நேரங்களில் துன்பங்களாலும்
சில நேரங்களில் இன்பங்களாலும்
இச்செயல் நடைப்பெறும்!
அப்படியான சமயங்களில்,
உங்களுக்கே பல எண்ண அலைகள் எழும்பியிருக்கும்!

சாதரண மானிட வாழ்வில் ஈடுபாடு கொண்டதால்,
அன்பில் அடங்குவதால்
பண்பில் மற்றவர்களை பணிய வைப்பதால்,
சமூக பிரக்ஞைகளில் சஞ்சரிப்பதால்,
சில எண்ணங்கள் சிதறிப்போய்விடும்
அல்லது
நம்மை விட்டு உதறி போய்விடும்!

இப்படியில்லாமல் மிக உன்னத நிலைக்கு செல்ல செய்ய வேண்டிய விஷயமாக ரமணர் சொன்னது தான் நான் யார்?

ஒரு சில மணிநேரங்களில் தனிமையில் உங்களைபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கும் தோன்றும் கேள்விதான்..

நான் யார்?
நான் யார்!
எங்கிருந்து வந்தேன்?
என்ன செய்கிறேன்?
எங்கு செல்ல போகிறேன் ?

என்று கன்...........................................டினியூ ஆகும்
விடை தெரியா வினாக்கள்

(இது எனக்கான சோதனையா இல்ல படிக்கிற உங்களுக்கு சோதனையான்னு சொல்ல தெரியலப்பா :-))

மீன் மாத்திரை

1985களின் மத்தியில் பள்ளிகூட சத்துணவு சாதத்தை ஒரு முக்கு முக்கிட்டு ரொம்ப டைட்டாக உக்கார்ந்து கொண்டே தூங்கிக்கொண்டிருந்த ஒரு இனிய மாலைப்பொழுதில், டேய் பசங்களே எல்லாரும் வாங்கடா லைனா? ஒண்ணாம் டீச்சர் கூப்பிடும் சத்தம் கேட்டு எந்திரிச்சு சாரி சுதாரிச்சு அக்கம்பக்கம் திரும்பி பார்த்தா அம்புட்டு பயமக்களும் என்னைய அம்போன்னு விட்டுட்டு ஓடிட்டானுவோ! அதுக்கும் காரணம் இருக்கு!

எப்போதுமே ஒண்ணாம் டீச்சர் எங்களுக்கு உதவும் கரம் மாதிரிதான்!கடுப்பேத்திக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து வெளியேற வேண்டுமெனில் கடவுளே டீச்சர் கூப்பிடணும் கிரவுண்டுக்கு அப்படின்னுத்தான் வேண்டிக்குவோம்!

அப்படி ஒரு ஹெல்பிங்க் ஹாண்ட் டீச்சர்! எப்போதுமே, கிரவுண்டுக்கு வாங்கடா போட்டி வைக்கப்போறேம் அல்லது எதாவது விசேஷமான செய்தி அப்படியில்லாங்காட்டி முனிசிபால்டியிலிருந்து வந்திருக்கும் மீன் மாத்திரை டிஸ்டிரிப்பியூசன்!

மீன் மாத்திரை பேரைக்கேட்டாலே யாருக்குமே எஸ்கேப்பாகணும்னு எண்ணம் வராது! ஏன்னா அப்படிப்பட்டதொரு மாத்திரை மத்த மாத்திரைங்களைமாதிரி கசக்குறதோ அல்லாங்காட்டி கல்லுமாதிரி இருக்கறதோ கிடையாது!

இது குருவி ஸ்டைல்ல மொழ, மொழன்னு யம்மா யம்மா வாகத்தான் இருக்கும்! எதோ உடம்புக்கு நல்லதுன்னு கொடுப்பாங்களாம்! அது சரி நமக்கு ஃப்ரியா கிடைச்சாத்தான் நோ கொஸ்டீன் ரைசிங் ஆச்சே!
பயலுக கையில கொடுத்த திங்காம தூக்கி போட்டுடுவானுவேன்னு நினைச்சு எல்லாரையும் லைன் கட்டி கையையும் கட்டி வாயை மட்டும் ”ஆ” தொறக்க சொல்லி மீன் மாத்திரைய போடுவாங்க! நாங்களும் அந்த நிமிசம் கரெக்ட்டா வாயால காட்ச் பிடிச்சு மறுநிமிசம் இடம் மாறி கைக்கு மாத்திடுவோம்!
அதுக்குப்பப்புறம் என்ன நடக்கும் சண்டைதான்!

ஒருத்தனுக்கொருத்தன் மாறி மாறி மாத்திரையை பாக்குறேன் சொல்லி பொறமை புடிச்சவனாட்டம் உடைச்சுப்புட்டு ஓட கல்லெறி கலகங்கள் துவங்கும்!

சரி நீங்க கல் எடுக்கறதுக்கு முன்னாடியே இந்த கதையை அப்ரூட்டா கட் பண்ணிக்கிட்டு மேட்டருக்கு வர்றேன்!

நம்ம சா(ப்)ட்வேர் வேலையில் இருக்கறவங்களுக்கு,அல்லது இதே போன்றதொரு பணியிடங்களில் பணி ஆற்றுபவர்களுக்கு அதிக நோய் தொந்தரவுகள் வர்றதுக்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியிலே ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சிருக்காங்களாம்!

வைட்டமின் டி இது அதிகம் வெய்யில்ல அடங்கியிருக்காம் இந்த டி நம்ம உடம்புல இருக்குற கால்சிட்டிரால்ங்கற ஹார்மோன் அனுதினமும் சாப்பிடற ஐட்டமாம்!

இந்த சாப்பாடு குறையறப்ப கால்சிட்டிராலோட வேலையும் குறையுது இதனால மத்த ஆளுங்க கெட்ட வேலை செய்யறதுக்காக நம்ம உடம்புல பூந்து விளையாட ஆரம்பிக்க நாம உடம்பு படாத பாடு படுது! கால்சிட்டிரால் ஒரு பாதுகாப்பு படை மாதிரி எந்த எதிரிகளையும் சீக்கிரத்தில அண்டவிடாது!அதுக்கு நாம சரியா சோறுபோடலைன்னா நம்ம கதி அதோகதியாகுது!

வெளியில அலைஞ்சு திரிஞ்சு வேலை பாக்குறவங்களவிட இப்ப ஏசி ரூம்ல இருந்துக்கிட்ட்டு வேலைபாக்குறவங்க எண்ணிக்கைத்தான் அதிகமாயிக்கிட்டிருக்குதாம் அதே நேரத்தில இந்த டி பிரச்சனையினால வியாதிகளும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் அட்வான்ஸ் வாழ்த்து சொல்லிக்கிட்டே வந்து சேருதாம்!

ஸோ மக்களே அப்பப்ப வெளியில வெய்யில்லயும் கொஞ்சம் அலைஞ்சு திரிஞ்சுக்கோங்க! இல்லாங்காட்டி அதை ஈக்குவல் பண்றதுக்கு நிறைய மீன் மாத்திரைகளை சாப்பிட ஆரம்பியுங்க! ஒ.கேவா!

எல்லாம் உடம்புக்கு நல்லது :-)

எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி


இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எழுந்தரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்காவது போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பிறந்த நாள் - ரீவைண்ட ஆகும் மனசு!

ஒவ்வொருவரின் பிறந்த நாளுமே அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்! மற்றவர்கள் மகிழ்ச்சியினை வாழ்த்துக்களாய் கொடுக்கவேண்டிய நாள்!

ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அதிகாலையிலேயே எழுந்து, ஆண்டவனை தொழுது, புத்தாடைகள் அணிந்து பெற்றோரை வணங்கி வாழ்த்துப்பெற்று, அக்கம்பக்கத்து வீட்டார்களிலிருந்து, பள்ளிக்கூடம் வரையிலாக பலருக்கும் மனம் மகிழ ஆசை ஆசையாக இனிப்புகளை தந்து மகிழ்ந்த நாட்களை நினைக்க தோன்றுகிறது!

இது நாள் வரையிலான எனது பழக்கத்தின்படி,கண்டிப்பாய் ஒவ்வொரு மாதமும் வரும் நண்பர்களின் பிறந்த நாட்களின் போது, அதிகாலையிலேயே எழுந்து போன் செய்து, போன் செய்யும்போதே முதலில் ஹலோ சொல்வதா? அல்லது பிறந்தநாள் வாழ்த்துசொல்வதா? எனத்திக்கி திணறி கடைசியில் இரண்டும் கலந்த ஹாப்பி ஹலோ பர்த்டே! என்று சொல்லுகையில் பரபரத்து மகிழும் மனது!

வாய்ப்புகள் வாய்த்த காலங்களில் நேரில் சந்தித்து, புத்தகங்கள் பரிசளித்து பதில் மரியாதையாக ஏதேனும் இனிப்புகளாகவோ அல்லது உணவகங்களிலோ நட்புகளுடன் இணைந்த மகிழ்ச்சியான உணவுப்பரிமாற்றங்களில் மனம் நிம்மதி பெற்றிருந்த காலம்!

சில பல ஆண்டுகளாய் இன்னும் அந்த முதல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பரபரக்கும் மனதுடனேயே வாழ்த்துக்களும் என் வாழ்க்கையும் போய்க்கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு முறையும் எனது பிறந்தநாளில் வாழ்த்துக்கள் சொல்ல மறந்து தவறவிட்டு மீண்டும் நண்பர்கள் தாமதமாக சொல்லும்ப்போதும் கூட ஏனோ எனக்கு மனதில் பெரும் மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கிறது! நானா இருந்தா காலையிலேயே சொல்லியிருப்பேன்ப்பா! ?

வலைபக்கம் வந்து அதிலேயே உண்டு உறங்கி பின் விழித்தெழ ஆரம்பித்துவிட்ட பிறகு பிறந்த நாள் வாழ்த்து பதிவுகள் வந்தாலும் சரி சுவரொட்டினாலும் சரி ஓடிச்சென்று அட்டெண்டன்ஸ் போட மட்டும் ஆசை இன்னும் சிறகடித்து பறந்துக்கொண்டுதான் இருக்கிறது!

இன்று இனிய பிறந்த நாளை கொண்டாடுவது எம் கும்மி குடும்பத்து குழந்தைகள் அபி பாப்பா மற்றும் நிலா பாப்பா!


பறந்தோடி சென்றேன் பிறந்த நாள் வாழ்த்தி விட்டேன் நீங்களும் இங்கு சென்று வாழ்த்திவிட்டு வாருங்களேன்!

குறிப்பு:-

நண்பர்கள் எல்லாருக்கும் நிறைய ஸ்வீட்ஸ் வாங்கி வைச்சிருக்காராம் நம்ம அபி அப்பா & நிலா அப்பா ( அப்பான்னாலே இப்படித்தான் மகள்களின் பிறந்த நாளில் ரொம்ப மகிழ்ச்சியாக இனிப்பு கொடுப்பார்கள் போல! ) அதனால அவங்கவங்க அட்ரஸ் கொடுத்தீங்கன்னா பார்சல் அனுப்பி வைப்பார்கள் என்பதை மிகுந்த மரியாதையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

இதுதான் ஸ்வீட் உங்களுக்காக பிரத்யோக சாம்பிள்:-)

திரட்டி செய்வது எப்படி?

பொதுவாக எல்லாருக்கும் புடிச்ச மாதிரி அமையறது கஷ்டமான விஷயம்தான் இந்த திரட்டி செய்றதுல, ஏன்னா,எல்லாருக்கு ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும்! அவங்களுக்கு சில நேரங்களில் மட்டுமே புடிக்கும், ஃபீல் பண்ணி சாப்பிடற ஆளுங்களும் உண்டு, மழை காலத்தில் ஆஹா இது இப்ப இனிப்பா எதாவது கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு ஆசைப்படுவாங்க!

அது மாதிரிதான் திடீருன்னு ஒரு ஆசை திரட்டிபால் செய்யணும்னு, சரி செஞ்சு பாத்துடுவோம்னு,உதவிக்கு அறுசுவை ஒபன் பண்ணி வைச்சிட்டு ஆரம்பிச்சிட்டேன்!
(நாலு நாள் லீவு என்னா ஆனாலும் கவலைப்படக்கூடாதுன்னு ஒரு தைரியம்தான்! பக்கதிலேயே தான் ஆஸ்பத்திரியும் இருக்குல்ல :))

அறுசுவையில இதெல்லாம் தேவையானப் பொருட்கள்ன்னு, சொல்லியிருந்தாங்க, கிடைச்சதால எடுத்து ரெடிப்பண்ணிக்கிட்டு,

தேங்காய் - 2
பயத்தம்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்

இப்படித்தான் செய்ய ஆரம்பிச்சேன், தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.

கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். - இங்க தான் மிஸ்டேக்! இங்கதான் மிஸ்டேக்! - பரவாயில்லைன்னு முந்திரியை வறுத்து (கருக்கி) போட்டு முடிச்சுட்டேன்!

அருமையா வந்துருக்கும்னு நினைச்சு சந்தோஷாமா சாப்பிட்டேன்னு நினைக்காதீங்க ஒரு இடத்துல மிஸ்டேக் ஆகிடுச்சு :-(

உருட்டும் பதத்திற்கு வரவரைக்கும், நாம கொஞ்சம் மெசேஜ் பாத்துட்டு வந்திடுவோம்னு போனா அங்க அபி அப்பா! சாட்ல தம்பி நல்லாயிருக்கியாப்பான்னு? கேட்க, நானும் பதிலுக்கு நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு? பதில் அனுப்பிட்டு ரிப்ளைக்காக (உக்)காத்திருந்து காத்திருந்து கருகிப்போனதப்பா எனது திரட்டி பால் :-(

உங்களுக்கும் செஞ்சு பார்க்க ஆசையாயிருந்தா இங்க போய் பாருங்க!

அறுசுவை

திரட்டுப் பால் (ஸ்ரீவில்லிபுத்தூர்)