படிப்பு - திசை மாறும் பயணம்


ஐந்து வருடங்களுக்கு முன்பு ------------------------------------------> [ரவுண்டு ரவுண்டா சுத்தவெல்லாம் முடியாது இப்பிடித்தான்] கடைசி பரீட்சை முடிந்ததுமே கவலைப்பட்டது சிதம்பரம் கோவிலுக்கு போய் மங்களம் பாடுவதா அல்லது புத்தூர் ஜெயராமனுக்கு போய் தின்று கும்மாளம் போடுவதா என்று! அந்த கவலையிலேயே 3மணி நேர பரீட்சை எல்லோருக்கும் 2 மணி நேரத்தில் நிர்பந்தமாக முடிக்கப்பட்டு கட்டுகடங்கா காளையின் வேகத்தில் சூபர்வைசரின் அட்வைசை அலேக்காக காற்றில் தள்ளிவிட்டு திமிறிக்கொண்டு, வெளியே வந்த தருணங்கள்! மெஜாரிட்டியினரின் முடிவின் படி மங்களமே பாடப்பட்டது! [செண்டிமெண்ட் செண்டிமெண்ட்]

சரி இந்த கதை இப்ப எதுக்குன்னு நீங்க கேட்க மாட்டீங்க [ வந்து தொலைஞ்சுட்டோம் பிறகு என்ன கேள்வின்னு] இப்ப திடீருன்னு புத்தகத்தை எடுத்து வைச்சுக்கிட்டு உக்கார்ந்து படிக்க ஆரம்பிக்கலாமேன்னு ஒரு அழகிய மதிய பொழுதினில் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்த போது உதித்தது ! குதித்தோடி எழுந்து, தேடோ தேடுவென தேடி, கிடைத்தது ஒரு சிறிய டைரியில் ”சிவில் இன்ஜினியரிங்” என்று மட்டும் எழுதி அட்டவணைப்படுத்தியிருந்த பாடங்களின் தலைப்புக்கள் மட்டுமே! சரி முடிவு எடுத்தாஊக்குவிக்கற மாதிரி நடந்துக்கிடணும்பின்வாங்குற மாதிரி நடவடிக்கை கூடாதுன்னு, நண்பரிடமிருந்து பெற்ற புத்தகத்தினை எடுத்து வைச்சு தொடங்கியாச்சு!

ரொம்ப பக்கம் இருக்கிற தலையாணை டைப்பு புத்தகம் ஆரம்பிச்சதுமே அவ்வப்போது சந்தேகங்கள் எழுவதும், அடங்குவதும் என மாறுபட்ட மனநிலையில் - இங்கதான் ரிஸ்க் நிறைய எடுக்கிறோமோன்னு லைட்டா தோணுச்சு - நாம டெக்னிகலா படிச்சு டெவலப்பாகறதை விட, வேற அன்னிய மொழிகளின் மீதும் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே என்று!

டெக்னிகல்
விசயங்களை சொல்வதற்கு அன்னியமொழி சற்று தெரிந்துகொள்வதில் தவறில்லைத்தானே [!?] அதுவும் ஒன்றுமே தெரியாமல் காட்சி பரப்பும் [சீன் போடுதலின் தமிழாக்கம்ங்க] கண்ணியவான்கள் நிறைந்த அலுவலக சூழலில் முயற்சிப்போம் என்று கொஞ்சமாய் அதற்கான விபரங்களையும் திரட்டி அதுவும் பாடத்திட்டத்துடன் இணைந்துகொண்டது தினமும் மதிய பொழுதினில் மல்லாந்து கிடப்பதை விட சொல்லில் ஆழந்து சிறந்து விளங்கிட வேண்டும் என்ற ஆர்வம் உந்துதலாக தள்ளிக்கொண்டு வந்தது - ரெண்டு நாள்தாங்க ரெண்டே நாள்தான்!

எங்கோ ஒரு தேசத்திற்கு வந்து யாருக்காகவோ நாம் அன்னிய மொழியினை கற்று சிறப்பு பெயர் பெறுவதை விட நாம் ஏன் நம்முடையை மொழியில் உள்ள சிறப்பானவைகளை ஊன்றி படிக்ககூடாது அப்படின்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கும்போதே பிங்கியது ஒரு பிரபலம் - உங்களுக்கு ஒளவையார் எழுதிய அகவல் தெரியுமா?

என்னது தெரியுமாவா? னிட்டர் பண்ணி வைச்சிருக்கேனாக்கும் சொல்லட்டுமா? என்று கேட்க தொடங்கிய அடுத்தகணமே மனசிலாயி!

அடடே! அதான் நிறைய இருக்குல்ல படிக்கிறதுக்கு !

என்னங்க பாதியில நிக்கிதேன்னு பாக்குறீங்களா

இப்ப நான் இங்கே நின்னுக்கிட்டிருக்கேங்க-------> மதுரை திட்டம்

ஆலயங்கள் - ஜுலை 2010 PITக்குமஸ்கட்ல இருக்கிற பெரிய சுல்தான் குப்பூஸ் மசூதிஇது திருநள்ளாறு - ஊருக்கு போறச்ச ஓவ்வொரு வாட்டியும் எனக்கு சனி புடிச்சிருக்கு ஒரு விசிட் போய்ட்டுவான்னு சொல்லுவாங்க எனக்கென்னமோ ஒவ்வொரு வாட்டியும் போறப்பத்தான் பயபுள்ளை நல்லா ஜம்முன்னு என்னைய பிரெண்டு புடிச்சிக்கிடறாரோன்னு எனக்கு நொம்ப நாளா ஒரு ஃபீலிங்குநந்தி @ கோவில் மதிலில் சிட்டிங் & வாட்சிங்இது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வலம் வருகின்றபோது எடுத்த ஒரு கோபுரத்தின் பகுதி - கோணல்மாணலா எடுத்தாலாச்சும் சரியா வருதான்னு பார்த்தேன் ம்ஹும் வர்ல![ஜீவ்ஸ்ண்ணாச்சி மன்னிப்பாராக]இதுவும் மதுரை :)


ஜுலை -2010 போட்டிக்கு அம்புட்டுத்தேன்!