பெனசிர் பூட்டோ


இன்று மாலையில் நடந்த பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ சரியாக பாகிஸ்தான் நேரப்படி 6.16 மரணமடைந்தார்! 15க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

சென்ற அக்டோபர் 19 அன்று பாகிஸ்தான் வந்திறங்கியபோதே நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் தப்பி பிழைத்த பெனசிருக்கு அந்த சம்பவத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 136 பேரை பலி கொடுக்க நேர்ந்தது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் மகளான இவருக்கு கூடபிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள்,ஹார்வர்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களில் பயின்ற இவர் பிறந்த இடம் பாகிஸ்தானில் கராச்சி
பின்னாளில் பெனசிரின் இரண்டு சகோதரர்களையும் தனது தந்தையையும்,இவரது தந்தையிடமிருந்து ஆட்சியை பறித்த ஜியா-வுல்-ஹக்கால் கொல்லப்பட்டனர்!

பெனசிர் தனது புத்தகத்தில் ,பாகிஸ்தான் நாடு மற்ற நாடுகளைப்போன்று சாதரண சூழலை கொண்ட நாடல்ல, என்றும் அது போலவே எனது வாழ்வும் சாதரண மனிதர்களை போன்றதல்ல என்றும் பலவிதமான கஷ்டங்கள்,சோகங்களை சந்தித்திருப்பதாகவும் மேலும் பாகிஸ்தானின் அரசியல்தான் என்னை தேர்ந்தெடுத்தது என்றும் தான் நினைத்துகூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்!

1988ல் விமான விபத்தில் ஜியா-வுல்-ஹக் பலியான பிறகு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக பாகிஸ்தானின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார் பெனசிர்! பிற்பகுதியில் ஊழல் காரணமாக 1990ல் ஆட்சி கலைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்,திரும்பவும் 1996ல் ஊழல் காரணமாக ஆட்சியை இழந்தார்!

பின்னர் வந்த அரசியல் மாற்றங்களில் 1999க்கு துபாய்க்கு சென்ற பெனசிர் அங்கும் லண்டனிலும் தம் பிள்ளைகளுடன் காலத்தை கழித்து வந்த நிலையில் இவர்தம் கணவர் ஊழல் வழக்கில் 8 வருட சிறை வாழ்க்கையிலிருந்து 2004 வெளிவந்த பிறகு, முஷாரப்புடனான உடன்படிக்கையின் படி மீண்டும் பாகிஸ்தானில் கால்பதித்தார் அக்டோபர் 19 அன்று !

முஷாரப்புக்கும் பெனசிரிக்குமிடையே ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் இருந்ததும் இதனால் ஜிகாதிகளிடமிருந்தும்,அல்கய்தாவிடமிருந்தும் மிரட்டல்கள் வரும் என்றும் பெனசிர் எதிர்பார்த்திருந்தார்!

அன்று பெனசிர் எதிர்பார்த்தது நடந்தது இன்று !

0 பேர் கமெண்டிட்டாங்க: