சென்னை புத்தக கண்காட்சி 2008 - என்னா வாங்கபோறீங்க?


வருடா வருடம் வரும் புத்தக் கண்காட்சியில் இது வரை நான் சென்று கலந்து கொண்டது இரண்டு முறைதான் அதுவும் அந்த கல்லூரி காலகட்டத்தில் கண்காட்சியில் கல்லூரி புத்தகங்களை தேடி தேடி களைத்துப்போய், முடிவில் ராமகிருஷ்ணமட பதிப்புகளையும்,சில பல சுயமுன்னோற்ற நூல்களையும் வாங்கி வந்ததோடு சரி (அப்பப்ப கொஞ்சம் படிச்சிருந்திருக்கலாம்!)

இந்த வருடம் முன்கூட்டிய ஏற்பாடுகளோடு இந்த புத்தக கண்காட்சியை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் (லீவுக்கு சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன்!)

எனது இதுவரைக்குமான புத்தக லிஸ்டில் சில சுயமுன்னேற்ற நூல்களும் சில சைவம் சம்பந்தப்பட்ட நூலகளுமே இடம்பிடித்துள்ளது!
(சமீபத்தில் சென்ஷியால் ரெக்கமண்ட் செய்யப்பட்ட நூலும் கூட லேட்டஸ்டா சேர்ந்திருக்கு!)

எவ்வளவோ நல்ல பல நூல்கள் பார்த்தும் படித்தும் நினைத்தும் இருக்கும் பதிவர்கள் கொஞ்சம் ரொக்கம்ண்ட் செய்யுங்களேன்!

அல்லது நீங்கள் வாங்க நினைத்திருக்கும் புத்தகங்களின் பட்டியலை கொஞ்சம் வெளியிட்டு உதவுங்களேன் :-)

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நான் இரண்டு புத்தகங்கள் யோசித்து வைத்திருக்கிறேன்..
1) பா.ராகவனின் 'நிலமெல்லாம இரத்தம்'
எளிதில் கிடைக்கும் புத்தகம்தான்.. இதுவரை சமயம் வாய்க்க வில்லை.
2) மெளனியின் 'அழியாச்சுடர்'
நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் ஒரு புத்தகம்.. இது வரை கிடைக்கவில்லை.. இப்போதாவது கிடைக்கிறதா பார்க்கலாம்..

said...

இவை முழுமையான பட்டியல் அல்ல என்றாலும்
என் நினைவிலிருந்து ஓரளவு இறக்கம் செய்துள்ளேன் ஆயில்யன்

சிலவற்றின் பதிப்பகங்கள் ஞாபகமில்லை

கட்டுரைத் தொகுப்பு

1. நதியின் பிழையன்று
நறும்புனல் இன்மை

- நாஞ்சில் நாடன்
தமிழினி பதிப்பகம்

2.கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது.
(பல்வேறு இலக்கியவாதிகள் தங்களைக் கவர்ந்த நூல் பற்றி எழுதிய கட்டுரைகள் )

-அ முத்துலிங்கம்
உயிர்மை பதிப்பகம்

3. டாக்டர் உ.வே.சா. அவர்களின் உரைநடை நூல்கள்

டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம் சென்னை-90
ஜெயராம் அச்சகம்



4. பெ.நா அப்புசாமியின்
அறிவியல் கட்டுரைகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

5. காத்திருந்த வேளையில்

மனுஷ்யபுத்திரன்
உயிமை பதிப்பகம்

கவிதை தொகுப்பு
1. ஒரு இரவில் 21 செண்ட்டி மீட்டர் மழை பெய்தது

முகுந்த் நாகராஜன்
உயிர்மை பதிப்பகம்

2. ஒரு கிராமத்து நதி

சிற்பி
விஜயா பதிப்பகம்

3. பாம்புக்காட்டில் ஒரு தாழை

லதா
காலச்சுவடு பதிப்பகம்

தமிழ்
1. புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

தமிழண்ணல்
மீனாட்சி புத்தக நிலையம்

நாடகம்

1. என் தாத்தாவுக்கொரு
குதிரை இருந்தது

செழியன்
உயிர்மை பதிப்பகம்


நாவல் /புதினம்

1.பாலிதீன் பைகள்

இரா நடராசன்


2. லங்காட் நதிக்கரை

அ. ரெங்கசாமி
தமிழினி
3. வாசந்தியின் அண்மையில் வெளிவந்த நாவல்

பம்பாய் கலவரங்களின் பின்னணியில் எழுதப்பட்டது

4. தகப்பன் கொடி

அழகிய பெரியவன்

5. பாழி

கோணங்கி

6. கோபல்ல கிராமம்

கி.ராஜநாராயணன்
காலச்சுவடு பதிப்பகம்



மொழிபெயர்ப்பு நூல்கள்

1.கோட்பாடு
இலக்கியக் கோட்பாடு
மிகச் சுருக்கமான அறிமுகம்

ஜானதன் கல்லர் , தமிழில் ஆர். சிவகுமார்
அடையாளம் பதிப்பகம்

2. அம்மாவின் மரணம்
தஸ்லீமாநஸ்ரீன் கவிதைகள்

தொகுப்பு மொழியாக்கம்
யமுனா ராஜேந்திரன்
சகாரா ப்ரிண்ட் மீடியா
விற்பனை உரிமை
உயிர்மைபதிப்பகம்

3. ஆட்டுக்குட்டிகள் அளித்த தண்டனை
(சிறுகதை தொகுப்பு)


வாழ்க்கை சரிதம்

1.என் சரித்திரம்

டாக்டர் உ.வே.சா

2. நளினி ஜமீலா

காலச்சுவடு பதிப்பகம்

சிறுகதை தொகுப்பு

1. பின் சீட்
ஜெயந்தி சங்கர்
மதி நிலையம்

2. ஒரு கப் காப்பி
இந்திரா பார்த்தசாரதி

பயணம்

1. கடலோடி
நரசய்யா

said...

ஆயில்யன்,

வாசந்தியின் நாவல் -
சிறை

said...

// மாதங்கி said...
ஆயில்யன்,

வாசந்தியின் நாவல் -
சிறை///

புத்தகங்களை நேசிப்பவர்களால்தான் இந்தளவுக்கு ஆர்வம் + ஆவலுடன் இருக்கமுடியும் மாதங்கி!

எனது வாங்க வேண்டிய புத்தகங்கள் லிஸ்டில் வாசந்தியும் உண்டு - அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு!

said...

1. நதியின் கரையில் - பாவண்ணன் -எனிஇந்தியன்
2. உள்ளுணர்வின் தடத்தில் - ஜெயமோகன் - தமிழினி
3. எப்போதுமிருக்கும் கதை - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
4. மகாவம்சம் - ஆர்.பி. சாரதி - கிழக்கு
5. தமிழ் மொழி வரலாறு - தெ.பொ.மீ.களஞ்சியம் ச.செயப்பிரகாசம் - காவ்யா 
6. நள்ளிரவில் சுதந்திரம் - Dominique Lapierre and Larry Collins , தமிழில் : வி.என்.ராகவன் - மயிலை பாலு' - அலைகள் வெளியீட்டகம்
7. இந்தியப் போர் (பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட நூல்) - சுபாஷ் சந்திரபோஸ் - அலைகள் வெளியீட்டகம்
8. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
9. சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள் - சு.பொ.அகத்தியலிங்கம் - பாரதி புத்தகாலயம்

said...

நல்ல பொத்தகம் வாங்க வருவோர் சிலரே. கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான பொத்தகங்கள் ஆன்மீகம்,சமையல்,சோதிட புத்தகங்கள் தானாம். பொத்தக கண்காட்சிக்கு வந்தால் அவசியம் குறும்பட அரங்கிற்கு வாருங்கள். நல்ல தமிழ் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.

மணிமேகலை நிலையத்தில் தினம் ஒரு சிறப்பு விருந்தினர் என அதிகபட்சமாக திரைப்பட நடிகர்களை அழைத்து வருகின்றனர். தேவையா ?