சென்ஷி - காதலன்

காதல் என்பது அனுபவம்;

காதலித்தல் சுகானுபவம்;

காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்...நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்....நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்...அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலை ஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

சென்ஷி - காதலன்

*********************************************************************************இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி...!

பணியிடத்தில்...
பணியிடத்தில் பாதுகாப்பினை உணருங்கள்;

மற்றவர்களிடத்தில் பாதுகாப்பு பற்றி உணர்த்துங்கள்!


ஏப்ரல் - 28 -பணியிட பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் [workplace safety day]

மயிலாடுதுறை - விட்டாச்சு டிரெயினு!

இன்று 23/04/2010 மாலை 6.30 மணிக்கு அகல ரயில்பாதையில் ரயில் வண்டியின் பயணம் தொடங்கியது! கிட்டதட்ட 3 வருடங்களை கடந்த மீட்டர்கேஜ் - பிராட்கேஜ் இருப்புப்பாதை அகலமாக்குதல் திட்டம் ஒரு வழியாக நிறைவேற்றம் பெற்றிருக்கிறது!

மயிலாடுதுறை மக்களுக்கும் சுற்றியுள்ள ஊர்களை சார்ந்திருப்போருக்கும் மேலும் கும்பகோணம் தஞ்சாவூர் மக்களுக்கும் தற்போதைய சூழலில் [ அணைக்கரை பாலம் வலுவிழந்த நிலையில் பேருந்துகள் கிட்டதட்ட 50 கி.மீ சுற்றி சென்றுகொண்டிருக்கிறது] நிச்சயம் மகிழ்ச்சியான செய்தியாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது இன்று!

திட்டம் சிறப்பாக[!?] நிறைவேற்றம் பெற பங்கு பெற்ற மத்திய & மாநில அரசு ஊழியர்களுக்கும்,பணிகளை சிறப்பாக செய்து முடித்த தனியார் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் மயிலாடுதுறை மக்களின் சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !


நிதர்சனம்!

விரும்புகிற வாழ்வை ஏற்படுத்திக்கொள்வது எல்லோர்க்கும் எளிதானது இல்லை.அதே நேரம் கிடைக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொள்வதும் யார்க்கும் எளிதாக இல்லை.இரண்டுக்கும் நடுவில் மனிதன் சிலந்தியைப் போல தன்னைச் சுற்றிலும் ஆசையின் மெல்லிய வலையை நெய்தபடி அதனுள் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்!
-எஸ்.ராமகிருஷ்ணன்

நன்றி - தினமணி