திரட்டி செய்வது எப்படி?

பொதுவாக எல்லாருக்கும் புடிச்ச மாதிரி அமையறது கஷ்டமான விஷயம்தான் இந்த திரட்டி செய்றதுல, ஏன்னா,எல்லாருக்கு ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும்! அவங்களுக்கு சில நேரங்களில் மட்டுமே புடிக்கும், ஃபீல் பண்ணி சாப்பிடற ஆளுங்களும் உண்டு, மழை காலத்தில் ஆஹா இது இப்ப இனிப்பா எதாவது கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு ஆசைப்படுவாங்க!

அது மாதிரிதான் திடீருன்னு ஒரு ஆசை திரட்டிபால் செய்யணும்னு, சரி செஞ்சு பாத்துடுவோம்னு,உதவிக்கு அறுசுவை ஒபன் பண்ணி வைச்சிட்டு ஆரம்பிச்சிட்டேன்!
(நாலு நாள் லீவு என்னா ஆனாலும் கவலைப்படக்கூடாதுன்னு ஒரு தைரியம்தான்! பக்கதிலேயே தான் ஆஸ்பத்திரியும் இருக்குல்ல :))

அறுசுவையில இதெல்லாம் தேவையானப் பொருட்கள்ன்னு, சொல்லியிருந்தாங்க, கிடைச்சதால எடுத்து ரெடிப்பண்ணிக்கிட்டு,

தேங்காய் - 2
பயத்தம்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - அரை கிலோ
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்

இப்படித்தான் செய்ய ஆரம்பிச்சேன், தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். பயத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். துருவிய தேங்காயுடன் வறுத்த பயத்தம் பருப்பை சேர்த்து கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.வெல்லத்தை சுத்தம் செய்து அரைத்த கலவையோடு சேர்த்து வாணலியில் இட்டு நெய் ஊற்றி நன்றாக ஒரு மணி நேரம் வேகும்வரை கிளறவும்.

கலவை உருட்டும் பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவிடவும். - இங்க தான் மிஸ்டேக்! இங்கதான் மிஸ்டேக்! - பரவாயில்லைன்னு முந்திரியை வறுத்து (கருக்கி) போட்டு முடிச்சுட்டேன்!

அருமையா வந்துருக்கும்னு நினைச்சு சந்தோஷாமா சாப்பிட்டேன்னு நினைக்காதீங்க ஒரு இடத்துல மிஸ்டேக் ஆகிடுச்சு :-(

உருட்டும் பதத்திற்கு வரவரைக்கும், நாம கொஞ்சம் மெசேஜ் பாத்துட்டு வந்திடுவோம்னு போனா அங்க அபி அப்பா! சாட்ல தம்பி நல்லாயிருக்கியாப்பான்னு? கேட்க, நானும் பதிலுக்கு நல்லாயிருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு? பதில் அனுப்பிட்டு ரிப்ளைக்காக (உக்)காத்திருந்து காத்திருந்து கருகிப்போனதப்பா எனது திரட்டி பால் :-(

உங்களுக்கும் செஞ்சு பார்க்க ஆசையாயிருந்தா இங்க போய் பாருங்க!

அறுசுவை

திரட்டுப் பால் (ஸ்ரீவில்லிபுத்தூர்)

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நீங்கதான் சாதத்தையே கருகவைக்கும் திறமைகாரர் ஆச்சே உங்கள் திறமைக்கு இது கருகி போனது எல்லாம் சும்மா ஜூஜூப்பி:)))

said...

//குசும்பன் said...
நீங்கதான் சாதத்தையே கருகவைக்கும்
//
என்ன் பிரதர் சாதத்தை கருக வைக்கிறது அவ்ளோ சிரமமான விஷயமா :)

said...

ஆயில்யன்,

ஓ இதுக்கு தான் நேத்து புள்ளையார் கோயில் வாசலில் நின்னிங்களா?

ஆமாம் அது எப்படி கருகி போய் இருக்கும்.அதான் நீங்க தான் அடுப்பையே பத்த வைக்காமலே செஞ்சிங்களே! அடுப்பை பற்ற வைத்து வாணலியை வைத்து என்று நீங்க எழுதவே இல்லையே :-))

அப்படி பத்த வைச்சிருந்தா... நீங்க எழுதாமலா போய் இருப்பிங்க!

said...

//வவ்வால் said... //

ஏதோ சொல்லவர்றீங்கன்னு தெரியுது ஆனா புரியலையேப்ப்பா....!!!
:(

said...

இப்படித்தான் இருக்கும்னு நெனைச்சேன்.
அபி அப்பாகூட சாட் டா?ம்மனுஷன் ஒரே நேரத்துல பத்து பேர புடிப்பாரே.அதுக்குள்ள நீ இந்தியாவுக்கே வந்து போயிடலாம்.