மனப்பூக்கள் மலரட்டும் - 4

முடியும்;
முடியாது.

தெரியும்;
தெரியாது.

புரியும்;
புரியாது.

இப்படியான இரு வேறு நிலைகளில் நம்மால் மிக எளிதாய் செய்ய கூடிய காரியம் ஒன்று என்றால் கவலை கொள்ளுதல் :)

முடியும் என்றால் கவலைப்படவே தேவையில்லை முடியாது என்றால் அதை தூக்கி எறிந்துவிட்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான் இந்த மிதிவண்டி இடைவெளியில் கவலை வந்து நம் மனத்தினை ஆக்ரமிக்க எப்படி இடம் கொடுக்கிறோம்?

எந்தவொரு சிக்கலான அல்லது நம்மால் இயலாத காரியம் என்று, ஒன்றை எண்ணும்போதே இது போன்ற சிந்தனைகள் எழுகின்றன.

சில காரியங்களினை எப்படி செய்வது என்ற அடிப்படையே தெரியாது ஆனால் அதை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அதிகம் கவலை மட்டும் கொண்டு உடல் நலத்தினை கெடுத்துக்கொள்வோம்! இதை போன்று சில காரியங்கள் செய்வதில் நெகடிவ் எண்ணங்களின் அதிக ஆழத்திற்கு செல்வோம் முடிவில் கவலை கொண்டு காரியமாற்றாமல் அமர்ந்திருந்தலே அவசியமாகிவிடும்!

கவலை கொள்வதால் மட்டும் நான் செய்யவேண்டிய செயல்களுக்கு மீண்டும் ஒரு சாய்ஸ் கிடைக்கும் என்று எண்ணுவதை முற்றிலும் தவிருங்கள்!



கவலை அவசியம் படத்தான் வேண்டுமா? கவலைப்படாமல் வாழ இயலுமா என்று ஒன்றுகொன்று முரணாய் பல கேள்விகள் கேட்டு தங்களுக்குள்ளாகவே கவலையில்லாத மனிதன் யார் இருக்கிறார் என்று பதில் கூறி கவலைகளோடே பயணித்துக்கொண்டிருப்பார்கள்!

பயம் - இயல்பாகவே வரும் தவிர்க்க முடியாத ஒரு நிலை;
கவலை - இயல்பாய் நாமே வருவித்துக்கொள்ளும் ஒரு நிலை;

கவலையும் பயமும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன - அதனிடத்தில் உங்களை அதிகம் இழக்கும்போது...!

உங்களுக்கு மிக மிக விருப்பமான வேலையினை எடுத்து செய்யுங்கள் இது போன்ற நேரங்களில் அல்லது உங்களுக்கு பிடித்தமானவருடன் பேசிக்கொண்டே இருங்கள் - தற்காலிகமாய் தப்பிக்க வழி கிடைக்கும்!

நிரந்தரமாகவெனில் - நல்ல செயல்களிலும், நல்ல எண்ணங்களையும் யோசிக்க, செயல்படுத்த ஆரம்பித்துவிட்டால் கவலையாவது பயமாவது..!

ப’ரதம்

கேமராவை வைச்சுக்கிட்டு தேமேன்னு சும்மா உக்காந்திருக்காம நிறையா ஷுட்பண்ணிக்கிட்டே இரு அப்பத்தான் நல்லா டெவலப்பண்ணிக்க முடியும் – புரொபஷனல் கூரியர் ஜீவ்ஸ்


&*&*&*&*&*&*&*&*


அட்வைஸ்ன்னு யாராச்சும் எதையாச்சும் சொல்லிட்டா உடனே அதை ஃபாலோ பண்ணி பார்த்துடணும்ங்கற ஒரு பழக்கம் எனக்கு உண்டு.(ஊய்ய்ய்ய்ய் ஊய்ய்ய்ய்ய் -ஒ.கே ஒ.கே! விசில் அடிச்சது போதும் நிப்பாட்டிக்கோங்க !) ஊருக்கு வந்த மறுநாளே கையில கேமரா எடுத்துக்கிட்டு ரெண்டு எக்ஸ்ட்ரா லென்ஸ் பையும் தூக்கிட்டு கிளம்பியாச்சு.

டைமிங்க, அந்த வாரம் எஙக ஊர்ல நாட்டியாஞ்சலி விழா ஏற்பாடு ஆகியிருந்துச்சு - டக்குன்னு கூரியர் சொன்ன வார்த்தைகள் எக்ஸ்ட்ரா ஃப்ளாஷ் அடிக்க கேமரா மற்றும் லென்ஸ் வைச்சுக்கிற அந்த பேக் சகிதம் பேக்கு களத்துல இறங்கிடுச்சு.

பரதநாட்டிய விழா கிட்டத்தட்ட 3 வருசமா நடக்குதாம் (ஆஹா 3வருசமா மிஸ் பண்ணிட்டோம் போல) நல்ல கூட்டம் அங்க போனப்பிறகுதான் தெரிஞ்சுது! விரல் விட்டு எண்ணும் அளவில ஆட்கள் இருப்பாங்கன்னு நினைச்சு போன எனக்கு அம்புட்டு கூட்டத்தை பார்த்ததும் கேமரா கையில எடுக்கற எண்ணமே எஸ்கேப் ஆகிடுச்சு!

கிட்டதட்ட ஒரு மணி நேரம் ஆகியிருக்கும் கொஞ்சமா தைரியத்தை கம்மிக்கிட்டு சைடு கட்டி வெளிச்சம் குறைவா இருக்கிற இடத்துல நின்னுக்கிட்டு கேம்ராவை கையில புடிச்சு ஒரு ரெண்டு மூணு கிளிக் ஒவ்வொரு கிளிக்கும் போதும் போட்டோவை உடனே செக் பண்ணிக்கிடவேண்டியது - ஒவ்வொரு கிளிக்குமே ரொம்ப பர்பெக்ட்டாவரணும் இல்லாட்டி ஒ மைகாட் இது நல்லா இல்ல ஃபீலிங்க் காமிக்கிற மாதிரி ஸீன்போட்டுக்கிட்டே ஒரு அரை மணி நேரம் போச்சு!

அப்பத்தான் அவுங்க எண்ட்ரீ கொடுக்குறாங்க கூட்டத்தில ஒரே பரபரப்பு நானும் அவுங்களை பார்த்துட்டு இந்த முகத்தை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு ரொம்ப நேரம் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்!

நேரா மேடையேறி ஒரு வணக்கம் வைக்கும்போதுதான் பார்க்குறேன் சகல லோக்கல் வி.ஐ.பிக்களும் ஆஜர் ஆகியிருக்காங்க!பரதம் ஆட ஆரம்பிச்சாங்க,அதுக்கு முந்தி ஆடிய மக்களுக்கும் இவுங்களுக்கும் கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு பாக்குறதுக்கு ( தலைக்கு கீழ பாதம் வரைக்கும் ஒரே டையாமீட்டருக்கு உடம்பை மெயிண்டெயின் பண்ணியிருந்ந்தாங்க!)

ஆர்வத்துடன் ஆரம்பித்த கிளிக்குகளுக்கு மத்தியில்,பக்கத்தில இருந்த ஒரு ஆர்வக்கோளாறு அவுங்க பேரு சொர்ணமால்யான்னு சொன்னுச்சு!




டிஸ்கி:- நாட்டியாஞ்சலி போட்டோ வீட்ல இருக்கு, எடுத்து அனுப்புங்க என்று சொன்னதுமே பய இதைத்தான் கேக்குறான்னு என்று, சொர்ணாக்கா போட்டோக்களை மட்டும் தனியாக எடுத்து அனுப்பிய, நண்பனின் புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி!

வெர்னியர் ஸ்கேல்

                                பத்தாவது படிக்கிறப்ப பசங்களை ஒரே ஒரு  வாட்டி பிஜிக்ஸ் (ரைமிங்காவே பிச்சிக்கிச்சுத்தாங்க வரும்!) லேப்ன்னு சொல்லி, ஸ்கூல்ல இருக்கிற ஒரு கார்னர் ரூம்ல அழைச்சிட்டுபோய் சில பல உபகரணங்களை ஒரு வாட்டி ரவுண்ட் அடிச்சு காமிச்சுட்டு ஓடிப்போங்கடான்னு சொல்லுவாங்க அங்க அதிசயமா பார்த்த பொருள் வெர்னியர் ஸ்கேல்.

எப்படியோ 10வது பிச்சுக்கிட்டு, பாலிடெக்னிக் பக்கம் வந்து டமால்ன்னு வுழுந்த பிறகுதான், ஒரு சில நாட்களில் எழுப்பி உக்கார வைச்சு பிஜிக்ஸ்,கெமிஸ்ட்ரி அப்புறம் கணக்கு ஒர்க்‌ஷாப்புன்னு லிஸ்ட் போட்டு சொல்லுறப்பவே ஒரு முடிவுக்கு வந்திருவோம், மாட்டுனோம்டான்னு!

அங்க பிளஸ்1 பிளஸ்2க்கு பயந்து இங்க ஓடிவந்தா,அங்க இருக்கிற சப்ஜெக்ட் எல்லாம் மொத்தமா சேர்த்து இங்க வைச்சிருக்காணுங்கன்னு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடும்.(இதுல டெஸ்ட்ல மார்க் கொறைஞ்சு போச்சுன்னா அப்பாவை அழைச்சுட்டு வந்து லெக்சரர்கிட்ட சமாதான உடன்படிக்கை எழுதி தரணும் இனி பய ஒழுங்க படிப்பான்னு - அவுங்க எழுதி கொடுத்திட்டா மட்டும் பசங்க படிச்சுடுவாங்கன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ ஹய்யோ ஹய்யோ!)

அப்பத்தான் பிஜிக்ஸ் பேப்பர் அப்புறம் அது கூட ஒரு லேப் உண்டுன்னு,இந்த மிதிவண்டி இடைவெளியில் அதாவது ஒரு வாரம் கூட ஆகலைங்க காலேஜ் ஆரம்பிச்சு அதுக்குள்ளாற பயமக்க அரியர்க்கு அர்த்தம் கண்டுபுடிச்சுட்டு வந்து மாப்ள உனக்கெல்லாம் நிச்சயம் பர்ஸ்ட் இயர்ல மினிமாமாவே 6 வரும் போல தெரியுதுங்கறானுவோ அவ்வ்வ்வ்வ் (அம்புட்டு நம்பிக்கை எம் மேல!)

பிஜிக்ஸ் பேப்பர்ல இருக்குற விசயமெல்லாம் லேப்ல செய்யணும்ன்னு இதுதான் பெரிய ரிஸ்க் கிளாஸ்ல பாடம் எடுத்த அடுத்த நாளு லேப்  - பாலிடெக்னிக்குன்னு சொல்லி மாயவரத்துலேர்ந்து சிதம்பரம் போய்க்கிட்டிருந்த பயலுக்கு படிக்க எப்பங்க டைம் கிடைக்கும் இதெல்லாம் ஏன் அந்த லெக்சரர்களுக்கு தெரியமாட்டிக்கிதோ! - உள்ள போன வுடனே கிளாஸ்ல நடந்த விசயமெல்லாம் கொஸ்டீன்ஸா பறந்து வரும் ,அப்படி வர்ற கேள்வி எல்லாம் என்னிய விட்டு அடுத்த பக்கத்து ஆளுங்களுக்கு போற மாதிரி அவுங்களை ஒரு பார்வை பார்த்தா போதும் நாம எஸ்ஸாகிடலாம் ரொம்ப உஷாரான லெக்சரருங்கதான் பேர் சொல்லி கூப்பிட்டு கேள்வி கேப்பாங்க அந்த விசயத்துல நாங்க கொடுத்து வைச்ச ஆளுங்க!





அப்படி ஒரு நாள் செஞ்ச சோதனைக்களத்து முக்கிய உபகரணம்தான் வெர்னியர் ஸ்கேல் (ஹப்பாடா இப்பவாச்சும் டைட்டிலை டச் பண்ணுனீயே!) இது உருளை வடிவங்களை அளவு எடுக்க பயன்படுத்தப்படும் உபகரணம். இந்த வெர்னியர் ஸ்கேல் ரெண்டு விதமான ஸ்கேல்ஸ் இருக்கும் சின்ன ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் ஒண்ணு பெரிய ஸ்கேல் அளவுகளில் எந்த புள்ளியில் சின்ன ஸ்கேல் கோடு ஒத்து வருதோ அதான் சரியான கணக்கீடு  இப்படி எதாச்சும் சொல்லிக்கிட்டே கிளாஸ் எடுத்து முடிச்சுட்டு விசயத்தை கையில கொடுத்த பிறகுதான் தெரியும் ஒரு படபடப்பு,எந்த ஸ்கேல் எந்த கோடு எந்த புள்ளின்னு  - கடைசி லேப் பரீட்சை வரைக்கும் அந்த படபடப்பு அப்புறம் அந்த தடுமாற்றம் இருந்துக்கிட்டேத்தான் இருக்கும்.

ஓவ்வொருமுறையும் சோதனை செஞ்சு அந்த அளவுகளை பார்த்து குரூப்ல இருக்கிற அம்புட்டு பேரும் பார்த்து சரியா ரெக்கார்டு பண்ணி கொண்டு போய் லெக்சரர் கிட்ட நீட்டுனா அப்படியே ஒரு மேலோட்டமா ரீடிங்க் பார்த்துட்டு சிம்பிளா ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் போடுவாரு ! இந்த வெர்னியர் ஸ்கேல் டெஸ்ட் மட்டும் கிட்டதட்ட நாலுவாரத்து ஓடிக்கிட்டிருந்துச்சு இவுனுங்க இப்படியே செஞ்சுக்கிட்டிருக்க சொன்னா 3 வருசத்துக்கும் செய்வானோன்னு டென்ஷன்  ஆகி ஒரு வழியா முடிச்சு அடுத்த 4 வாரத்துக்கு கன்கரண்ட் போர்ஸ் செய்யுங்கடான்னு சொல்லி அனுப்பிச்சிட்டாரு !

இதையெல்லாம் நான் ஏன் இங்க சொல்லிக்கிட்டிருக்கேன்னா......

என் நண்பர்கள் சிலர்  நீங்க எழுதுறதுல ஒண்ணும் கெமிஸ்ட்ரியே இல்லைன்னு வருத்தப்பட்டாங்க, சரி அவுங்க ஃபீலிங்க்ஸை கொறைச்சுப்புடலாம்ன்னு கெமிஸ்ட்ரி எழுத உக்காந்தேனா,சரி முதல்ல பிசிக்ஸ் சொல்லிப்புடுவோம், இல்லாங்காட்டி கெமிஸ்ட்ரி ஒ.கே பிசிக்ஸ் இல்லன்னு டெரரர் பண்ணுவாங்கன்னுத்தான் எனக்கு தெரியுமே....!

நான் யார்? – கண்ணதாசன்!

ஜுன் 24 - பிறந்த நன்னாளில்



நான் யார்?

அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்! மனிதன் அறிய வேண்டிய அறிவுகளிலெல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.

ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகிறது. பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகிறது. நாயை கண்டதும் முயல் ஓடுகிறது. புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது. உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வேயாகும்!

ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.

தாயாலும் தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

வந்தோம் வாழ்ந்தோம்,மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள்.அவர்களில் சிலர் வரவு-செலவு பார்த்திருக்கிறார்கள். சிலர் காதலித்து வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள். சிலர் மணமுடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள். சிலர், 'பதவி பதவி' என்று அலைந்து செத்திருக்கின்றனர். சிலர், 'உதவி உதவி' என்று ஓடி ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.

இவர்களிலே, 'தான் யார்' என்பதைக் கண்டு கொண்டு உலகுக்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்? அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்?

நான் யார்? நான் ஏன் பிறந்தேன்?

நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான். இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.அது எனக்குப் புரியவில்லை. தவிர,ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறேன் என்பது உண்மை. ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு லட்சியத்துக்காகவே படைக்கப்பட்டிருக்கின்றன. ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே!

தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருட்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது.

அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும் பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காக்கையின் பிறப்புக்குக்கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது. அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?  - கவியரசு கண்ணதாசன்

காலத்தால் அழியா காவியங்கள் படைத்த கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில் நினைவில் கொள்வோம்!

தரையோரக்கனவுகளில் நான்…!


வாழ்க்கை பல வகைகளில் பல நேரங்களில அழகான பல விஷயங்களை நமக்கு கற்றுத் தரும் ஆனால் நமக்கு நம்மை அடையாளம் காட்டுவது சில முறை தான் அந்த வகையில என்னை எனக்கே அழகா இருக்கிற மாதிரி காமிச்ச ஒரு பெரிய விஷயம் என்னோட இந்த தரையோர கனவுகள் தான். நான் படுத்திருங்கும்போதும் சரி, என் ஆபிஸ்ல தூங்க ஆரம்பிக்கும்போதும் சரி எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அந்த கொட்டாவி இன்னும் அடங்கினப்பாடில்லை.

என் தூக்கம் ஆரம்பிக்கும் நாளின் காலை வரை (மதியம் சாப்பிடற டைம் தவிர்த்து.) தூக்கத்திற்கும் எனக்குமான தொடர்பு தூக்கத்தோடு மட்டுமே நின்றிருந்தது. (இன்றளவும் நான் தூங்கவே இல்லை என்றெல்லாம் சொல்லி உங்களைக் நம்பவைக்கமாட்டேன்..

"தரையோரக் கனவுகள்" நான் தேடி அலையவில்லை.. (அப்பறம் நான் பார்த்த வித்தியாசமான கனவுக்களுக்கு விளக்கம் தான் தேடி அலைஞ்சேன் என்கிறது ரகசியம்..!

தூங்க போறப்ப ஆரம்பிச்ச கொட்டாவியே எனக்கு அடங்கல! அதுக்குள்ள சூப்பர் கனவு வந்திருச்ச். நாலைந்து முறை அது கனவு தானான்னு சோதிச்சு பார்த்துகிட்டேன்.! அப்படிப்பட்ட தரையோரக்கனவுகளை இன்னைக்கு நான் உங்ககிட்ட சொல்றது ரொம்ப பெருமையா இருக்கு !

இப்படியாக என் கொட்டாவியும் கனவும் தொடர்ந்தாலும் நான் உருப்படியா சொல்லப்போற கனவு, யாரோ நாம சொல்லப்போறதையும் கேட்பாங்கன்னு தெரிஞ்ச பிறகு தான். அதை உக்காந்து கேக்கப்போறவங்க அப்பப்ப வெட்டியாவே இருக்கும் நிஜமா நல்லவன் தம்பி, தமிழ் பிரியன் தம்பி, கானா அண்ணா & சென்ஷியண்ணா!

இதுதான் தரையோரக்கனவுகளோட ஸ்டார்டிங்க் பாயிண்ட் (இனி தான் கொடுமையே…. அதாவது நான் தரையில படுத்திக்கிட்டு என்னென்ன கனவு கண்டே அதுல எனக்கு ரொம்ப பிடிச்சது எதுன்னு சொல்லபோறேன் வித் கொஞ்சம் டெர்ரரா..)

கனவுக்கன்னி உண்மையாகவே கனவுக்கன்னிக்கும் எனக்கும் பரிச்சயம் இருந்ததில்ல. ஆனா, ஏதோ கனவு காண தொடங்கிட்டோமே கனவுக்கன்னிய வரவழைச்சே ஆகனும்ன்னு இந்த கனவு கண்டேன். ஆனா எனக்கே கொஞ்சம் பிடிச்சிருந்தது..!

இதே பாணியிலே கனவு கண்டுக்கிட்டே போனாலும். அதிலிருந்து கொஞ்சம் கேரளா,ஆந்திரான்னு ஸ்டேட்ஸ் மாறிய கனவுகள் ரொம்ப பிடிச்சிருந்தது, அப்பவும், இப்பவும்.

கனவுக்கன்னிகளை மட்டுமே பார்த்து கொஞ்சமா கொடுமைப்பட்டிக்கிட்டிருந்த நானும் கொஞ்சம் ரூட் மாறி போன வெளிநாட்டு கனவுகள் காண ஆரம்பிச்சேன். இப்பவும் அடிக்கடி நினைச்சு பார்த்தா கண்டிப்பா இதவிட இன்னும் நிறைய வெளிநாடுகளுக்கு போகணும்ன்னு நினைச்சதுண்டு அந்த வரிசையில் நான் அண்டார்டிக்காவுக்கு போனதை பத்தி சொல்ல்ல எனக்கு ரொம்ப புடிக்கும் நிறைய சொல்லணும் (எம்புட்டு சுத்தியிருக்கேன் கொஞ்ச நஞ்சமா சுத்தினது??

ரொம்ப ஜாலியா ஊர் சுத்தி கனவு கண்டுக்கிட்டிருந்த இருந்த என்னைய எந்திரிச்சு உக்காருடான்னு சொன்னார் சென்ஷி அண்ணா. விளைவு இதோ,என்னோட தரையோரக்கனவுகளை நீங்க படிச்சுக்கிட்டிருக்கீங்க. தேங்க்ஸ் டு சென்ஷி அண்ணா.. !

அதற்கு பிறகு தான் நான் கொஞ்சம் சீரியஸா கனவு டிரைப்பண்ணனும்ன்னு நினைச்சேன்.போற ரூட்லயே (கனவுலதான்ங்க) நிறைய பேரை மீட் பண்ணி பேசணும்ன்னு எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச விசயம் அது!

நாம் காணும் எந்த ஒரு பகல் கனவுமே அது ரொம்ப சின்ன குட்டியூண்டு கனவா இருந்தாலுமே அதுல ஒரு ஃபிகர் வரும்போது வர்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. அந்த வகைல நேத்து மதியம் சாப்பிட்ட உடனே தூக்கம் வரதா நேரத்துல சேர்ல உக்காந்துக்கிட்டே கண்ட இந்த கனவை தான் சொல்லணும். :

இது வரை சொன்னதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த கனவுகள், இன்னும் நெறைய நிறைய இருக்கு. அப்பறம் என் கனவுகள் முழுசையும் இங்க கொண்டுவர வேண்டியிருக்கும்.. அதை அப்புறம் காப்பியடிச்சு யாராச்சும் படம் எடுத்துப்புடுவாங்க! அதனால, என்னோட சுயமாய் காணும் கனவுகள் பற்றிய மேட்டர்களை இத்தோ இஸ்டாப்பு பண்ணிட்டு, இன்னுமொரு நல்ல தரையோர கனவு காண போய்ட்டு வாரேன் :-)

நன்றி..!நன்றி..!ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (கொட்டாவிவுட்டுக்கினு போறேன்!)

டிஸ்கி:- நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் தேடிக்கிட்டு திரியாதீங்க மூலம் இங்கதான் இருக்கு !

எனக்கு இல்லை பருக்கை..?

பருப்புக்கள்
இல்லாத
சாம்பார்

வெற்று
சாம்பாரினை
வெறித்து
சோற்றினை
மோர் மட்டும் ஊற்றி .
துன்னலாமா?

கல்யாண சாப்பாடு
கிடைக்குமென
மகிழ
கல்யாண மண்டபம்
தேடி போகலாமா?

நான்
சோற்று பண்டாரம்
அதனாலோ
தின்பதில்
எப்போதும்
ஒரு
ஆர்வம் முட்டும்!

 coconutchutney

வானிலை அறிக்கை இங்க வாசிச்சிருக்காங்க நேரம் எனக்கு நல்லா இருந்தா பலத்த அடி சாரி இடி வர வாய்ப்பில்லை!

(முதன் முதலாய் விண்டோஸ் லைவ் ரைட்டரில் எழுதிய பதிவு – நல்லாத்தான்க்கீது!)

தந்தையர் தினம்


டிஸ்கி:- வலைச்சரத்தில் முன்புஅப்பாஎன்ற தலைப்பில் பதிவர்களின் பதிவுகளிலிருந்து எடுத்தாளப்பட்டவை மீள் பதிவாக தந்தையர் தினத்தில்...!

۞۞۞۞۞

வேண்டாம் ராஜா! வந்துருடா, பார்க்காமல் இருக்க முடியல"

இளாவின் இந்த பதிவில் எல்லோருடைய அப்பாக்கள் மனத்தின் வெளிப்பாடுதான் இது !


۞۞۞۞۞


குடும்ப அமைப்புக்களால் பிரிந்திருக்கவேண்டிய சூழலில் தம் பெற்றோரை அருகில் இருந்தும் அடிக்கடி காண இயலாத சூழலில் அது பற்றிய தன் எண்ணங்களை குற்ற உணர்வுகளாய் வெளிப்படுத்தும் இந்த மகளின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள்தான் - அன்பால் அன்பினை


۞۞۞۞۞

அவர் எனக்கு கண்டிப்பான அப்பாவாக இருந்ததில்லை. ஆனால் நான் கண்டிப்பான மகனாகவே இருந்திருக்கிறேன். இன்னமும் அவர் மீது அதிகமாக பிரியம் காட்டியிருக்கலாம் என்று இப்போது உணர்கிறேன். அவர் ஆசைப்பட்ட படியே வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். அது முடிவதற்குள்ளேயே அவசரப்பட்டு விட்டார். அவர் விருப்பப்பட்டபடி வீட்டுக்கு "குமரன் குடில்" என்று பெயர் வைக்க வேண்டும். - லக்கிலுக்கின் நைனா

۞۞۞۞۞

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள் இது கிருத்திகாவின் அப்பா பற்றிய பதிவு

۞۞۞۞۞

கோபியின் உள்ளம் சொல்லும் நல்ல பதிவுகளில் டைரிக்குறிப்புக்களாய் செம கலக்கலானது! உங்கள் கண்களும் கூட கொஞ்சம் கலங்கும்!

என்னையும், அம்மாவையும் தனியா விடாம உன்னோடவே வச்சுக்கிட்டு ஆதரவா பார்த்துக்கிட்டுயிருக்க பாரு. இதுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய போறேன். எனக்கு தோண்றது எல்லாம் உனக்கு மேலும் எரிச்சல்கள் தராம போய் சேர்ந்துட்டா போதும்." என் கண் எல்லாம் கண்ணீர். அப்பாவை அப்படியே இறுக்க அணைச்சிக்கிட்டேன்.

அந்த அணைப்பில் ஒருவிதமான ஆதரவு கிடைத்தவுடன் வெகுநாளாய் மனதில் அடைத்திருந்த ஏதே ஒன்று உடைந்து ஓவென அழத்தொடங்கிட்டார் அப்பா. "எதுக்குப்பா அழுவுறீங்க. என்ன ஆச்சுப்பா"ன்னு கேட்டா பதிலே இல்ல. தெரியலன்னு திரும்பவும் ஓன்னு அழுவுறாரு. ரொம்ப நாளைக்குப்புறம் கண்ணீரின் சுவையை சுவைத்திருப்பார் அப்பா.

۞۞۞۞۞

தமிழ் ஈழத்து அப்பா பற்றிய மகளின் எண்ணங்கள் கவிதையாக,


களத்தில் இரு புத்திரரையும்

புலத்தில் மறு பிள்ளைகளையும்

தொலைத்து விட்டு

எங்கோ அந்தகாரத்துக்குள்

பிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி

களைத்த உன் விழிகள்

பன்னிரண்டு வருடங்கள் கழித்து

என் முகம் பார்த்ததும்

கொட்டும் அருவியாகி

எனை நனைத்த போது

உனை அணைத்துத் தாயானேன்

۞۞۞۞۞

வெளிப்படுத்தும் அன்பைக்கூட நேரடியாக வெளிப்படுத்தாமல்

மற்றவரின் துணையுடன் மறைமுகமாய் காட்டும் அப்பா.!

மறைமுகமாய் ஒவ்வொருப்பிள்ளைகளின்

கதாநாயகனாய் தோன்றும் அப்பா.!

இவர் ராஜாவின் அப்பா

۞۞۞۞۞

நீ இனிமேல் பெரிய மனுஷி' என்று என்னை தனிமை படுத்தாமல் குழந்தை பருவத்தில் என்னுடன் பழகிய அதே தோழமையோடு நீங்கள் என்னுடன் பழகியபோது நான் எத்தனை பாதுகப்பாக உணர்ந்தேன் தெரியுமா???? என்று அப்பாவுடனான பாசத்தை அழகாய் வெளிப்படுத்தும் பதிவு, இவரின் பிரார்த்தனையான

"அப்பா, என்றும் உங்கள் இடத்தை என் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது, எனினும் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள ஒர் துணையை தேடுவீர்கள்/தேடுகிறீர்கள் , அந்த நபரும் என் அப்பாவை போலவே இருக்க வேண்டும்" - இதுவும் கூட கண்டிப்பாக ஆண்டவனின் அருளால் அப்பாவின் துணையால் நலமாக நடந்தேறும் என்ற வாழ்த்துக்களோடு...

۞۞۞۞۞

எனக்கு ரொம்ப பிடித்த, அப்பாவின் மீதான தன் அன்பினை வெளிப்படுத்தும் யாத்தீரிகனின் இந்த கடிதம்

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

۞۞۞۞۞

அப்பா கோவை குப்புசாமி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்காக, இலவசமாக மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றுவார். நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட காலம் தங்க வேண்டி இருந்ததால், அவர்களுக்காக நகைச்சுவை நிகழ்ச்சி, நாடகங்கள் என்று ஏதாவது அரங்கேற்றி, நோயாளிகளின் மனப்பாரத்தை குறைப்பார். இங்கு தான் நான் அவரின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் புற்று நோயால்பாதிக்கப்பட்டவர்களுடன் தான் இருப்பார்.என்று தன் அப்பா பற்றிய எண்ணங்களை பற்றி பகிர்ந்துக்கொள்ளும் மங்கை அக்காவின் இந்த பதிவு

கடலை வறுத்தல் என்னும் கடுப்பாக்கும் வேலை!

முதல் பார்வையிலேயே டக்கென்று பிடித்துபோய்விட்டது அது எனக்கு வேணும் என்று அழாத குறையாக அத்தனை இஷ்டமாய் பிடித்துதான் போனது!

ச்சும்மா பார்த்துக்கிட்டே இருந்தா ஒண்ணும் சரிப்பட்டு வராது உடனே களத்துல தொபுக்கடீர்ன்னு குதிச்சிடலாம்ன்னு பிளான் போட ஆரம்பிச்சாச்சு!

முதல்ல கடலை வறுக்கிறது எப்படின்னு தெளிவா புரிஞ்சுகிடணும் முன்ன பின்னே அனுபவமே இல்லாம இந்த மாதிரி சமாச்சரத்தையெல்லாம் ஹேண்டில் பண்ணுறதுங்கறது, கொஞ்சம் இல்லை ரொம்பவே கஷ்டம்! எதிர்பாரமா எதாச்சும் நடந்துடுச்சுன்னா என்ன ஆகும்...?

சரி இதை எங்க போய் கேக்குறது? கடலை வறுக்கிறதை பத்தி பொதுவுல கேட்டா நொம்ப்ப கேவலமால்ல நினைப்பாங்கன்னு மனசுக்குள்ள டிரெயினு ஓட ஆரம்பிச்சுடுச்சு! சரி

நமக்கு தெரிஞ்ச பையன் ஒருத்தரு இருக்காரு அவர்கிட்ட கேப்போம் அவுரும் தமிழ்நாட்டு ஆளுதான் அதனால அவுருக்கு நல்லா தெரிஞ்ச விசயத்தை சொல்லுவாரு தப்பா எடுத்துக்கமாட்டாருன்னு முடிவும் எடுத்தாச்சு!

தம்பி கடலை வறுக்குறது எப்படின்னு தெரியுமா? உங்களுக்கு தெரிஞ்சுருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்! அப்படித்தான் ஆரம்பிச்சேன் பயபுள்ளை அதுக்குள்ள மேலயும், கீழயும் பார்த்துப்புட்டு கெக்கேபிக்கேன்னு சிரிக்கிது!

தம்பி தெரிஞ்சா சொல்லுங்க இல்லாட்டி தெரியாதுன்னு சொல்லுங்க நான் அப்படி என்ன பெருசா கேட்டுப்புட்டேன்? கடலை வறுக்குறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டா நானும் அதை செஞ்சு இருக்குற மிச்ச மீதி டயத்தை ஓட்டிப்புடுவேன்ல! நேத்து கடைத்தெருப்பக்கம் போயிருந்தப்ப பார்த்தேன், பார்த்ததுமே, எனக்கும் கடலை வறுக்க ஆசை வந்திருச்சு! அவனவன் அவுங்க ரேஞ்சுல செய்யும்போது என்னாலயும், முடியும்ன்னு சமூகத்துக்கு நான் காட்டணும்ப்பா சொல்லிக்கொடு! அப்படின்னு ஒரு வழியாக, கெஞ்சி, மிரட்டி,சமாளிச்சு முக்கிய இன்போக்களை வாங்கிப்புட்டேன்! அதையும் விட, ரொம்ப பெரிய ஹெல்பு ஒண்ணும் அந்த பையன் செஞ்சிருந்தாரு ஆமாம் ஒரு முக்கியமான மேட்டரை சொல்லி, கொடுத்துட்டு போனாரு!

அவர் சொல்ல எல்லா மேட்டரையும் கரீக்டா செஞ்சு சக்சஸும் பண்ணியாச்சு! அன்று ஆரம்பித்த கடலை வறுத்தல் சங்கதி இன்று வரைக்கும் குதூகலமாக எந்தவொரு பிரச்சனையும் இன்றி வார இறுதி நாட்களில் மிக மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருக்கிறது.

ஒரே ஒரு செமையா கடுப்படிக்கிற வேலை என்னான்னா ஃபினிஷிங்க் டைம்ல கொஞ்சம் சொதப்புது!

வறுத்ததுக்கப்புறம் மணல்லேர்ந்து கடலையை சலிச்சு எடுக்கறதுதான் ஒரே சலிப்பா இருக்கு :-(





படமெல்லாம் நான் இந்த பிராசஸ் லேப்ல பண்றச்ச நானே எடுத்தது!

மாசறு பொன்னே வருக...!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருக



மாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்



இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

18.06.2008

டிஸ்கி:- இன்னும் கா.பி அண்ணாச்சி பதில் பதிவு இடவில்லை என்பதனை சமூகத்திற்கு பதிவித்துக்கொள்கிறேன்!

18.06.2009

நீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....!

பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,

பதுங்கியிருந்தத் சத்தம்;

கைகளுக்கிடையில் தொங்கி,

தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;

கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.

நாசித்துளைக்கும் வாசம்;

அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!

அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!

அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!




****************************************

மேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)


குடி மகனே....

இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென...

***************************


செம அடி சார்


வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்

***************************

கொஞ்சம் சீக்கிரமாய்!!


கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்

எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிரமே
சொல்லியிருக்கலாமென.......


பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!

எது இன்பம்...?

நம்முடைய தேவைகளே நமது சொர்க்கங்களை உருவாக்குகின்றன. நம் தேவைகளின் மாறுதலுக்கேற்ப,நமது சொர்க்கங்களும் மாறுகின்றன.

புலன்களின் மகிழ்ச்சி வாழ்க்கையின் எல்லா விசயங்களிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் நிர்மாணிக்கும் சொர்க்கத்தை போன்றதொரு சொர்க்கம் அமைந்தால் நாம் முன்னேறவே இயலாது!

நாம் அடையக்கூடியது இவ்வளவுதானா?

சிறிது காலம் அழுகின்றோம்;
சிறிது காலம் சிரிக்கின்றோம்;
கடைசியில் எல்லாம் இழந்து இறந்து போகின்றோம்!

உலக வாழ்க்கையின் இன்பங்களை துரத்திக்கொண்டே போகின்றோம் எது உண்மையான இன்பம் என்று தெரியாமலே....?

இன்பத்தை விட்டுவிடச்சொல்லி நம்மை தத்துவங்கள் ஒருபோதும் வற்புறுத்துவதில்லை.மாறாக எது உண்மையான இன்பம் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள் என்றே கூறுகிறது.

- சுவாமி விவேகானந்தர்.

இப்”போதைக்கு” இதுவும் ஒரு இன்பம்!




எண்ணமும் செயலும் நல்லா இருந்தா கன்னம் பன்னு மாதிரி அப்படியே தேஜஸ் ஆகிடும் - வண்டுமுருகன்

கேரளம் விளிக்குனு...!

இவுங்க சரண்யா மோகன்


இவுங்க பாமா (இப்பத்தான் இண்ட்ரோ ஆகுறாங்க!)


இவுங்க அஞ்சலி
(இவுங்க கேரளா ஆனா ஆந்திராவுல பொறந்ததா ஒரு சேதி!)



இவுங்க ரூமா (கொஞ்சம் கொஞ்சம் கேரக்டர்ஸ்ல நடிச்சு இப்ப பிரபலமாகிட்டு வராங்க !)


இவுங்க நவ்யா நாயர் (நல்லாவே தெரிஞ்சுருக்கும்!)


கவிதைகள் பார்த்துட்டீங்க!

ஒரு மொக்கை கவுஜ படிச்சுட்டு போங்க...!


அன்போடு நான்;

அறிவோடு நீ;

அரிவாளோடு உன் அண்ணன்!


(காலேஜ் டெக்னிக்கல் டிராயிங்க் ரூம்ல யாரோ ஒரு கவுஜர் வரைந்த கவுஜ!)


டிஸ்கி:- கமெண்ட் பாக்ஸ் இந்த பதிவுக்கு மூடப்படுகிறது. வரும் நண்பர்கள் ஆஹா ஒஹோவென்று கூறுவதை கேட்குமளவுக்கு மனவலிமையினை எல்லாம் வல்ல இறைவன் அருளும் போது நிச்சயம் இதே போன்றதொரு பதிவில் உங்களுக்காய் திறந்திருக்கும்!

அன்புடன்,
ஆயில்யன்.

வெட்கி தலை குனிகிறேன்!


ஒவ்வொரு முறையும் நகர்வலப்பொழுதுகளில் கண்டிப்பாய் கண்ணில்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் யாரேனும்!

பேசும் தமிழில் நம்ம ஊருக்காரங்கன்னு உடன் அடையாளம் கண்டுக்கொள்ளவும் முடிகிறது!

ஆனால்... இதுவரையிலும் யாரிடமும் முன்போய் நின்று பேசியதில்லை :-(

பேசுவோமா...? என்று ஒரு முடிவெடுத்து வார்த்தைகளை வெளிப்படுத்த எத்தனிக்கும் அந்த சில கண் இமைக்கும் நொடிகள் இன்னும் பல பல கணக்குகளை போட்டு மனம் தடுக்கிறது வார்த்தைகள் வெளிப்படாமல் மறுத்து மறைகிறது!

பேசப்போவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும்போது மிக மகிழ்ச்சியடையும் மனம் சட்டென்று நெகடிவ் எண்ணங்களுக்கு தாவிவிடுகிறது.அது வரையிலும் மகிழ்ச்சியாக கணக்கிடப்பட்ட மெஜாரிட்டி இன்பங்கள் சில மைனாரிட்டி துன்பங்களில் வீழ்ந்துப்போகின்றது.

பேசுவோமா என்ற முடிவெடுத்த சில விநாடிகளிலேயே வந்து விழும் கேள்விகளில்

நாம் பேசினால் பதில் சொல்லுவார்களா..?

நம்மை விட்டு விலகி சென்றுவிட்டால் அவமானப்பட்டு போய்விடுவோமா?

இல்லை எனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது?

நாமே முன்வந்து பேசுவதை தவறாக எடுத்துக்கொண்டால் நினைத்துவிட்டால்...?

ஏன் இது போன்ற இரு வேறு மாறுபட்ட சூழலினை சில விநாடிகளில் முடிவுகள் தாறுமாறாய் வந்து விழுகின்றன?

பேசுவதால் பெறப்போகும் நன்மை தீமைகளை கணக்கிட்டு டக்கென்று முடிவுகளை கூறுமளவுக்கு நம் மனத்திற்கு அறிவுருத்தியிருப்பது நாமா? அல்லது நாம் சார்ந்திருக்கும் சமூகமா?


கடந்து விட்ட கணப்பொழுதுகளை நினைத்து பிறிதோர் சமயத்தில் மனம் வெட்கி, அழாத குறையாக வருத்தம் தெரிவிக்கிறது - பேசியிருக்கலாமோ...?

முதுமை - ஜுன் 2009 பிட்டுக்கு






எளிமையாய் தியானம் - இனிமையாய் வாழ்க்கை - ரஜினி



இந்த கேள்வியை நிறைய பேர் என்கிட்ட கேட்டு இருக்காங்க. என்னை என்னவோ பெரிய யோகி, சாதுன்னு நினைச்சுட்டாங்க.

சில பேர் அதை ட்ரை பண்றாங்க. அதை கட்டுப்படுத்த முடியாது!

அதுக்கப்புறம் கட்டுப்படுத்த முடியாம, இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் வந்துடுது.

அது தேவையே இல்லை.

அதைப்பத்தி கவலைப்படாதீங்க!

காலையில எந்திரிச்சவுடனே ஒரு அஞ்சு நிமிஷம் பிக்ஸ் பண்ணிக்கோங்க.

அப்படியே உட்கார்ந்துகிட்டு ஜஸ்ட் உங்க மனசை மட்டும் ·பாலோ பண்ணுங்க.

அது எங்கயாச்சும் போகட்டும்.

எது பின்னால வேணும்னாலும் போகட்டும்

யாரு பின்னால வேணும்னாலும் போகட்டும்.

ஜஸ்ட் அப்சர்வ் பண்ணுங்க. பிறகு எழுந்திடுச்சுடுங்க.

அதை கன்டினியூ பண்ணுங்க.

அதை பண்ண பண்ண அது அப்படியே வந்து மனசு உங்க கண்டோரல்ல வரும்.

அப்ப வந்து உங்க .இஷ்ட தெய்வம் அனுமந்திரம் பத்தி கான்ஸன்ட்ரேட் பண்ணமுடியும்.

இது எப்படின்னு சொன்னா... ஒரு குப்பைத்தொட்டி இருக்கு, அதிலே ஏதாவது புதுசா போடணும்னு சொன்னா, முதலிலே தொட்டில்ல இருக்கிற குப்பையை எடுக்கணும். அதை எடுத்தபிறகுதானே புதுசா போடமுடியும். ஆக, அதெல்லாம் போகட்டும். அதுவந்து இயற்கை. அதைப்பத்தி எந்த இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வெச்சுக்காதீங்க. நீங்க ஜஸ்ட் அதை பாலோ பண்ணுங்க போதும்'

- ரஜினிகாந்த்

கண்ணால் ஒரு சேதி...!

டிஸ்கி:- கொசுவர்த்தி சுத்திக்கிறேன்ப்பா!

ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டுக்கிட்டு போறதுன்னாலே செம டெரரான ஒரு விசயம்! அதுவும் நம்ம இந்தியாவுக்குன்னே எழுதி வைச்ச கலர் மாதிரி வெள்ளை சட்டை காக்கி டவுசர் யூனிபார்ம்ன்னா கேக்கவே வேண்டாம்! அதுவும் எனக்கு நடந்த அநியாயம், ஸ்கூல் வாழ்க்கையின் முக்கால்வாசி காலத்துக்கும் எனக்கு பேண்ட் போட்டிக்குற வாய்ப்பு கிட்டவே அல்லது எட்டவே இல்லை - ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படை மாதிரி நல்லா பெரிய டவுசர்தான் !

மத்த ஸ்கூல் யூனிபார்ம்லாம் பாக்குறதுக்கு ரொம்ப ரொம்ப அழகா தெரியும் அதுவும் குருஞானசம்பந்தர் ஸ்கூல் யூனிபார்ம்மு ரொம்ப புடிக்கும் அந்த ஸ்கூல்ல கோ-எஜுகேஷன் வேற..! (ஏன் என்னைய அந்த ஸ்கூல்ல சேர்க்கல...? ஒரு வேளை எங்க நான் நிறைய இங்கீலிசு படிச்சு பெரிய ஆள் ஆகிடுவேனோன்னு பயம் போல மை டாடிக்கு..?!)

சரி முதல்ல டவுசர்லேர்ந்து பேண்ட்க்கு டிரான்ஸ்பராகறதுக்கு என்ன வழின்னு டெரரர் பிளான் போட ஆரம்பிச்சேன்! போற வரப்ப கேர்ஸ் ஹைஸ்கூலு பசங்க(!?) எல்லாம் கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமா? எங்க கிளாஸ்ல பயலுவோ கிண்டல் பண்றாங்கன்னு சொல்லலாமான்னு ஏகப்பட்ட யோசனை ! ஒரு காரணமுமே சரியா சிக்கல!

யப்போவ்..! எனக்கு புதுசா ஒரு காக்கி பேண்ட்டும் கறுப்பு சட்டைதுணியும் எடுத்துக்கொடு போட்டுக்க வேணும் ?

அப்பா:- இப்ப எதுக்கு உனக்கு?

ம் பொறந்த நாளு வருதுல்ல !

அப்பா:- டேய் அதுக்கு இன்னும் மூணு மாசம் இருக்குடா ?

அப்ப பொங்கல் வருதுல்ல அதுக்கு !

அப்பா:-சரி முடிவு பண்ணிட்டீல்ல எடுத்து தரேன் !

ஒரு வழியாய் சக்சஸ் பண்ணிய சந்தோஷத்தில் பிரதர் சைக்கிள் எடுத்துக்கிட்டு எஸ்ஸாகிவிட, - அட ஆமாங்க அண்ணனுக்கும் அப்பாவுக்கும் நடந்த பேச்சுவார்த்தைதான்! டாடிக்கு பிரதர் மேல ரொம்ப நம்பிக்கை பய நல்லா படிக்கறவன்னு! அப்படித்தான் அவரும் நடந்துக்கிட்டாரு - என்னைய மாதிரியா...?

யப்போவ் எனக்கும் ஒரு செட் சட்டை பேண்டு..? (அப்பா:- ம்ஹுக்கும் நீ படிச்சு கிழிக்கிற கிழிக்கு உனக்கு அது ஒண்ணுதான் கொறைச்சல் - இப்படித்தான் பதில் வந்திருக்கும்ன்னு நினைச்சீங்கன்னா குட்..! நீங்க நல்லாவே என்னிய புரிஞ்சு வைச்சிருக்கீங்கோ!)

சாயங்கால டூயுசன் முடிந்து வந்து பிரதர் சொன்ன பிளானை கேட்டு அதிர்ச்சி - பயபுள்ளை என்னியவிட பக்காவா பிளான் பண்ணி சக்சஸ் பண்ணியிருக்குன்னு ஒரு ஆச்சர்யம்கூட! அதே நேரத்துல நாமளும் வுடப்புடாது டிரைப்பண்ணனும்ன்னு ஒரு ஆர்வக்கோளாறு வேற...!

ஆனா நான் வைச்ச கோரிக்கை ஏற்கப்படல காரணம் - கருப்புக்கு கருப்பு மேட்சிங்க், சேராதுன்னு வெளக்கம் வேற!

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இப்ப உங்களுக்கு ரெண்டு கொஸ்டீன் ரைஸ் ஆகணும் ஆச்சா...?

1.சரி என்ன அப்படி ஒரு பிளானு பிரதர் போட்டாரு...?



இந்த படம் அந்த வருசம் நவம்பர் 91ல ரீலிஸ் ஆச்சு! அதுல தலைவரு வரும் சீன்ல ஒரு காஸ்ட்யூம் கருப்பு சட்டை, காக்கி பேண்ட் - முன்னாடியெ போட்டோஸ் பார்த்து பிளான் பண்ணிட்டாரு பிரதரு! அப்புறம் என்ன கிட்டதட்ட ஒரு நாலு மாசம் இந்த காஸ்ட்யூம்லதான் வலம் வந்தாரு !

2.உனக்கு...?

ப்ச் எனக்கு கருப்பு சட்டை கிடைக்கல பேண்ட்தான் கிடைச்சுது!

அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன் கருப்புக்கு கருப்பு மேட்சிங் ஆகவே ஆகாதுண்ணு!

******************************************

இன்னும் சில சேதிகள் அப்ப நடந்து இன்னும் நினைப்புல இருக்குறது!

சட்டைக்கு பின் பக்கம் ஃபிளிட் வைச்சுக்கிற ஸ்டைலும் இண்ட்ரோ ஆச்சு! (தலைவரு திரும்பி நின்னு பேசும்போது கருப்பு சட்டை பின்பக்கம் கூட லேசா தெரியும் பாருங்க!)

சிங்கிள் ஃபிளிட் வேணுமா டபுள் வேணுமான்னு டைலர்கள் கேக்க ஆரம்பிச்சாங்க!



அப்போதுதான் பனியன்களில் ( தமிழ்ல டி-ஷர்ட்!) நடிகர்களின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யும் பழக்கமும் அப்போதுதான் அறிமுகமானது! அப்படி ஒரு பனியன் எடுக்குறதுக்கு நான் பட்ட பாடு இருக்கே! ஏறாத கடையில்ல போகாத தெருவில்ல அம்புட்டு டிமாண்ட்டு! அதை இன்னொரு கொசுவர்த்தியில கண்டினியூ பண்ணுறேன்! இப்ப நீங்க எஸ்ஸாகிக்கலாம்!

தாக்குதல் - 1






டிஸ்கி:-

தாக்குதல்கள் தொடரும்!

32 கேள்விகள்.!

32 கேள்விகள் ஓரளவுக்கு பதில் சொல்லியாச்சு!

நான் பேக் ஷாட்ல டேர்ன் பண்ணி நிக்கிறேன் நீங்க படிச்சு பார்த்துட்டு வாங்க...! (பின்னே என்னைய பத்தி சொல்லியிருக்கேன் எனக்கு ஒரே வெக்கம் வெக்கமால்ல இருக்கு!)

****************************************
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அது வரவில்லை:-)
நானே வைத்துக்கொண்டேன். எனது சொந்தப் பெயரில் எழுதுவதைவிட இப்படியொரு புனைபெயர் வைத்து எழுதுவதில் ஒரு இரகசியக் குறுகுறுப்பு இருந்தது.சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது - தமிழ்நதியக்கா சொன்ன அதே பதில்தான் என் மனசில இருந்ததும்!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

பாட்டி உடலால் எங்களை விட்டு பிரிந்த அன்று!

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

அழகாக இருக்கிறதோ இல்லையோ எனக்கு கறுப்பு பேனாவில் எழுதி பார்ப்பது என்பது அலாதி ஆர்வம் :)

4. பிடித்த மதிய உணவு என்ன?

சாதம், சாம்பார், தொட்டுக்க ஒரு பொரியலோ அல்லது கூட்டோ கண்டிப்பாக மோர் அல்லது தயிர் அப்பளம் அவ்ளோதான்

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா? இது உண்மையான கேள்வி அல்ல! தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் பதிவில் இருக்கிற உண்மையான கேள்வி: நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

வாழும் வாழ்க்கை வானமாக இருந்தால் அதில் நட்சத்திரங்கள் அளவுக்கு நட்பு வேண்டும் - வேண்டுகிறேன்

ஒரு ஸ்மைலி போதுமே - எல்லோருமே நண்பர்கள்தானே!

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

குளிக்க பிடிக்கும் :) - ஆற்றில் குளிக்க அதிகம் பிடிக்கும்!

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

பொதுவான தோற்றம் - உடைகள்,முகப்பொலிவு
(ப்ரெஷா இருந்தா சரி நாம கொஞ்சம் பேச டிரைப்பண்ணலாம்ன்னு யோசனை வரும்! அதே டல்லா இருந்தா ஏற்கனவே தூங்கிக்கிட்டிருக்காரு எதுக்கு டிஸ்டர்ப்பண்ணனும் கம்முன்னு கிட ஸ்டைல்தான்!)

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

ஆன்மீகம் !

டிரெஸ் சென்ஸ் :-(
அழகா ஒரு டிரெஸ் கூட செலக்ட் பண்ண தெரியலயே...???

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

சாய்ஸ்ல விட்டுட்டேன் !

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

என் குடும்ப உறவுகள்

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

சாய்ஸ்ல விட்டுட்டேன் - இதெல்லாம் ஒரு கொஸ்டீனா? அப்படின்னு பத்தாவது பரீட்சையில கணக்கு கொஸ்டீன் பேப்பரை பார்த்து ஆன அதே டென்ஷன் மீண்டும் வந்துச்சு :)

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சிஸ்டம் மானிட்டர் பார்த்துக்கொண்டு கந்த சஷ்டி கவசம் கேட்டுக்கொண்டு...!

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு

14. பிடித்த மணம்?

கோவிலில் குங்குமம் விபூதி எண்ணெய் நெய் கற்பூரம் என கலந்து வரும் ஒரு வாசம்

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

தமிழ்பிரியன்

( ரெண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்காமதான்,எழுதுவாங்கன்னு ஒரு தைரியத்துலதான்! ரெண்டு பேர்கிட்டயும் பிடித்த விசயம்ன்னா, முக்கியமா எவ்ளோதான் வயசானாலும், இன்னும் 16ல இருக்கிற சின்னபசங்கதான்னு காமிக்கிறதுக்காக என்னைய அண்ணா அண்ணான்னு கூப்பிடறது மட்டுமே!- கூப்பிட்டுட்டு போகட்டுமே..! அதனால என்னோட வயசு என்ன 18 லேர்ந்து 28 ஆ ஆகிடப்போகுது?)

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

பப்பு பற்றிய குறிப்புக்களடங்கிய பதிவுகள் ( எப்படி இப்படி பொறுமையா வாட்ச பண்ணமுடியுது வாவ்..! என்று வியந்த தருணங்கள்! சனியனே என்று டென்ஷனாகும் அம்மாக்களுக்கு மத்தியில் ஆச்சி டிபரெண்ட் கேரக்டர்தான்)

நாமக்கல் சிபி அண்ணாச்சி - கலாய்த்தல்கள் !

17. பிடித்த விளையாட்டு?

முன்பு கிரிக்கெட் பிறகு கேரம் இப்பொழுது ஒன்றுமில்லை :(

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை ! கண்ணாடி பார்ப்பவர் :)

19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?


நகைச்சுவை

20. கடைசியாகப் பார்த்த படம்?

முழு நீள திரைப்படமெனில் - ஆண் பாவம் & கடலோர கவிதைகள் போன வாரம் பொழுது போகாத வெள்ளி கிழமையில

21. பிடித்த பருவ காலம் எது?

மார்கழி அதிகாலை பொழுதுகள் - இங்கு வந்த பிறகு ஊருக்கு செல்லும் விடுமுறை காலங்கள் - எந்த பருவமாகிலும்..!

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர் - ரொம்ப காலமா படிச்சுக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் ஸ்லோ நானு!


23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?


நாளுக்கு நாள் என்ற கணக்கு இல்லை! புரொபைல் படம் மாறும் பொழுதுகளில்...!

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

அதிகாலை வேளை ஆன்மீக பாடல்கள்

அனாவசியமான ஹாரன் சத்தங்கள்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தோஹா கத்தார் சில ஆயிரம் மைல்கள் இருக்கும்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஏதோ இருப்பதாக நினைக்கும் ஒரு திறமை இருக்கிறது

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இருவர் உரையாடுகையில் மூன்றாம மனிதரை பற்றி கேலி பேசுதல் - அந்த மூன்றாம் மனிதர் அங்கு இல்லாத வேளைகளில்..!

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

முன் கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மயிலாடுதுறை

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
தனக்கென்ற சிறப்பு தகுதி உடையவன் என்ற எண்ணத்தோடு வாழ்வில் பயணித்தல்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
_____________________________________
அப்பாலிக்கா ஃபில் அப் செஞ்சுக்கிடலாம்ன்னு இன்னும் ஒர் சாய்ஸ் !


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?


நாம் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை.



டிஸ்கி:- இந்த 32 தொடர்ந்து 50 & 100 போச்சுன்னா அப்புறம் எப்படி இருந்த மக்கள்ஸ் எல்லாம் இப்படி ஆயிடுவாங்க சாக்கிரதை ! இத்தோட நிப்பாட்டிக்கிடலாம்!

”ஏன்”ன்னு கேக்குறேன்..?



மாண்புமிகு அமைச்சர் எதோ ஒரு புராஜெக்ட் பத்தி பேச சைட் விசிட் வந்திருக்காரு கூட ஆபிசர்ஸ் வந்திருக்காங்க ஒ.கே! (எங்க ஆபிசர்? எங்க ஆபிசர்ன்னு தேடாதீங்க பேண்ட் சர்ட் போட்டிருக்கிறவங்களை ஒரு குத்து மதிப்பா ஆபிசரா நினைச்சுக்கோங்க!)

பட் எதுக்கு இம்புட்டு உடன்பிறப்புக்கள்???

ரொம்ப முக்கியமான விசயமெல்லாம் எப்படி ஆபிசர்ஸ் பப்ளிக்கா அமைச்சர்கிட்ட சைட்ல டிஸ்கஸ் பண்ணுவாங்க?

******************************************************



மரம் நடறது ரொம்ப்ப்ப நல்ல விசயம்! ஒருத்தரு மட்டும் வந்து மரம் நடுறதை பாக்கறதுக்கு வந்த இம்புட்டு பேரும் ஆளுக்கொரு மரம் நட்டிருந்தா எப்படி இருந்திருக்கும் ஏன் அப்படி யோசிக்க மாட்டிக்கிறாங்க?

******************************************************



பாவம் வயசான காலத்துல, பாட்டி க்யூவுல வந்து நிக்கிறதே பெரிய விசயம்!
அதுல மாத்திரையை பாட்டி கையில கொடுத்தா போதுமே?
வாயில நேரடியா போட்டு, எதாச்சும் கஷ்டமா போச்சுன்னா...?
ஏன் இந்த வெட்டி பில்ட் அப்?


அதுக்கு கீழ இருக்குற ஆபிசர் மாதிரி செஞ்சிருக்கலாம்ல!




ஹாட்ஸ் ஆப் டூ ஆபிசர் -

யாரையும் கூப்பிட்டு வைச்சு தொந்தரவு செய்யாம மாத்திரையை நீங்களே போட்டுக்கிட்டதுக்கு !

அன்புள்ள ரஜினிகாந்த் & ராஜா !

1984ல் வெளியான, "அன்புள்ள ரஜினிகாந்த்"முதன் முதலில் நடிகரின் பெயரையே படத்திற்கு தலைப்பாக வைத்த பெருமையை,கொண்ட படம்.

ஒரு ஆங்கில படத்தின் கதைக்கரு,கெஸ்ட் ரோலில் நடிக்க முத்லில் அப்ரோச் செய்யப்பட்ட நடிகர் எம்.ஜி.ஆர் அரசாங்க அலுவல் காரணமாக,நடிக்க மறுத்துவிட,டைரக்டர் கே.நட்ராஜ் தேர்வு செய்தது நெருங்கிய நண்பரான, ரஜினியை!

Photo Sharing and Video Hosting at Photobucket

பெற்றோரின் அரவணைப்பை அறியாத சிறுமி பெரும்பாலும் அனைவரையும் வெறுக்கும் கேரக்டர்,அங்கு நடைபெறும் விழாவிற்கு வரும் ரஜினியை காண ஆர்வமின்றி வெறுப்புடன் இருக்கும் சிறுமி பின்னர் அந்த ரஜினியை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்வார் பின்னர்பிறிதொரு சமயத்தில் ரஜினியின் "அன்னை ஒர் ஆலயம்" திரைப்படத்தை காணும் போது அதில் வரும் சம்பவங்கள், ரஜினியின் மீது அளவு கடந்த ப்ரியத்தை உண்டாக்கும்,(அ.ஒ.ஆ போன்ற ரஜினியின் படங்கள் இளம் வயதினரை ஈர்க்க ஆரம்பித்ததால்தான் அவருக்கு சேர்ந்த இம்மாம் பெரிய கூட்டமுன்னுகூட சொல்லலாம்)

இக்காட்சிகள் மட்டுமின்றி, இத்திரைப்படத்தில் பல காட்சிகள் மனதை உருக்கும் விதத்தில் அமைந்திருந்ததும், இப்படத்தின் வெற்றிக்கு காரணம்! ஆதரவற்ற இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனை வெளிநாட்டிலிருந்து வந்து ஒரு தம்பதி தத்தெடுத்து செல்ல முற்படும், போது அந்த சிறுவன் மெல்ல தயங்கியபடியே, தன் நண்பர்களுக்கு விடை கொடுத்து செல்லும் காட்சியில், படத்தினை பார்த்தவர்கள் கண்டிப்பாக கண்கலங்கியிருப்பார்கள்!

பாடல்களில் கூட கதைக்கேற்ப ஒருவித சோகம் இழையோடும்.

லதா ரஜினிகாந்தின் குரலில் கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே...!

கடவுள் உள்ளமே ஒர் கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை
தெய்வம் அன்றி யாரும் இல்லை

சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை!
அன்பு எனும் நூலில் ஆக்கிய மாலை!

பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா!
ஊனம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா!

ஜீவன் யாரும் ஒன்று, இங்கு யாரும் சொந்தமே
இதுதான் இயற்கை தந்த பாச பந்தமே!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே!

கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை!
கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை!

ஊருக்கொரு வானம் இல்லையே இறைவா உன் படைப்பில்..
ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர் பிறப்பில்...


உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வம!
என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்!


கடவுள் உள்ளமே ஒர், கருணை இல்லமே
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம்

தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை!




ஆதரவற்றோர் இல்லங்களுக்கு ஒரு சிறு உதவியாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தை பலரது மனதிலும் விதைத்த பாடல் என்றால் அது மிகையல்ல!




ராகதேவன் இளையராஜாவின் இனிய பிறந்த நாளில், வணங்கி அவர் இசையில் மகிழ்கிறோம்!