ஹிந்தி கத்துக்கலாம் வாங்கப்பா....!

ஒரு பத்து வருஷத்துக்கு, முந்தி ஆரம்பிச்ச ஆசைதான் இது இந்தி கத்துக்கிடணும்னு,ஆனா பாருங்க அதுக்கான வாய்ப்புக்களோ, அல்லது ஊக்கமோ ஒண்ணும் இல்லாமலே இருந்தது!

திடீருன்னு ஒரு நாளு ஸ்கூல் PT வாத்தியார் வந்து, டேய்..! பசங்கள நம்ம ஸ்கூல் கிரவுண்டல (அபி அப்பா & குரங்கு ராதாவின் பேமஸ் ராஜன் தோட்டம்தான்!) ரொம்ப பெரிய ஸ்போர்ட்ஸ் டே நடக்கப்போகுது, அதுல எல்லா ஸ்கூல் பசங்களும் கலந்துக்கிறாங்க,விழா ஆரம்பிக்கறப்ப டான்ஸ் ஆடுறதுக்கும் பசங்கள ரெடி பண்ணிக்கிட்டிருக்கோம், அதனால நீங்களும் எதாவது ஆடுறதுக்கு தயாரா இருந்தா வாங்கடான்னு சொல்ல,எல்லாரும் ஒரு ஆசைதான்!

உடனே டக்குன்னு மனசுக்குள்ள டான்ஸ் ஆடுனாது அந்த டைம்ல ரொம்ப கலக்கலா போய்க்கிட்டிருந்த இந்த ஹிந்திபாட்டுத்தான்!

இந்த பாட்டு (தேசாப் 1988) மூலமா எனக்கு 7 வரைக்கு இந்தி தெரியுமே...!


ஸ்போர்ட்ஸ் டேவும் வந்துச்சு, நல்லபடியா கலை நிகழ்ச்சிகளோட ஆரம்பிச்சு அந்த பாட்டும் போட்டு அதுக்கும ஆடி, நாங்க அடிச்சி தூள் கிளப்புனோம்ல! :-(
(பாட்டுக்கு ஆடினது தருமபுரம் ஸ்கூல்! அடிச்சு தூள் கிளப்புனது நாங்க!
ஐடியா கொடுத்தவனையும், பிராக்டிஸ்க்கே வராதவனையும் ஓட ஓட விரட்டி அடிச்சது நானும் என்னோடே இன்னொரு ரெண்டு பிரெண்ட்ஸூம்...! :- )

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ஹூம்...நிங்க கடகராசி + ஆயில்ய நட்சத்திரக்காரரா? ஏன்னா...நானும்.

said...

இந்த 'தேசாப்' பாட்டு நம்ம ஊர்ல செம ஹிட்டு அந்த காலத்துல ஐநூத்துல ஒருத்தருக்கு கூட ஹிந்தி தெரிஞ்சிருக்குமாங்கிறது சந்தேகமே!!

இப்ப பாட்டு புரியுது!!!!