Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!

எதோ ஒரு சந்தர்ப்பத்தில் கேட்டப்பொழுதில் காதில் விழுந்து மனதில் பதிந்திருந்தது! ( அனேகமாய் அப்பாவின் டேப்ரெக்காடர் வழி கேட்டிருக்கவேண்டும்!)

நினைவுகள் அளிக்கும் தொந்தரவான தருணங்களில்,சில வரிகள் மட்டும் மனம் சிந்தித்து வாய் வழி ஒலித்து தெறித்து விழும் பாடல்!

மிக நீண்ட நாட்கள் தேடலில் ஒரு வழியாய் கிடைத்து பிடித்துவிட்டேன்!

இன்று முதல் இனிய காலை வேளைகளின் தோழமையாய் மாறிவிட்ட இந்த பாடல்

எத்தனையோ செய்திகளை இணைய நட்புகளோடு பகிர்ந்துக்கொண்ட எனக்கு இதையும் பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசையோடு....!


பாடலை காண...




பாடல் வரிகளினை காண

நன்றி செல்லி

நன்றி ஜில்ஸ்!

எல்லாருக்க்கும் மனசுக்குள்ள நன்றி சொல்லிக்கிட்டே சரி ரிஷி மூலத்தை பாக்கலாம்ன்னு போனா அங்க நம்ம கே.ஆர்.எஸ் அண்ணாச்சி ஸ்டைலா படுத்துக்கிட்டு சிரிச்சிக்கிட்டிருக்காரு! அவுருக்கும் ஒருபெரிய்ய்ய்ய் தேங்கஸ்சு!

சோதனை - பதிவாய்....!


சில நேரங்களில் சில குண்ங்க(ளால்)ளில் ஏற்படும் மாற்றங்கள்!

நம்மை எங்கேயாவது கொண்டு செல்லும்

அல்லது எங்கயோ கொண்டு செல்லும்!

சில நேரங்களில் துன்பங்களாலும்
சில நேரங்களில் இன்பங்களாலும்
இச்செயல் நடைப்பெறும்!
அப்படியான சமயங்களில்,
உங்களுக்கே பல எண்ண அலைகள் எழும்பியிருக்கும்!

சாதரண மானிட வாழ்வில் ஈடுபாடு கொண்டதால்,
அன்பில் அடங்குவதால்
பண்பில் மற்றவர்களை பணிய வைப்பதால்,
சமூக பிரக்ஞைகளில் சஞ்சரிப்பதால்,
சில எண்ணங்கள் சிதறிப்போய்விடும்
அல்லது
நம்மை விட்டு உதறி போய்விடும்!

இப்படியில்லாமல் மிக உன்னத நிலைக்கு செல்ல செய்ய வேண்டிய விஷயமாக ரமணர் சொன்னது தான் நான் யார்?

ஒரு சில மணிநேரங்களில் தனிமையில் உங்களைபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கும் தோன்றும் கேள்விதான்..

நான் யார்?
நான் யார்!
எங்கிருந்து வந்தேன்?
என்ன செய்கிறேன்?
எங்கு செல்ல போகிறேன் ?

என்று கன்...........................................டினியூ ஆகும்
விடை தெரியா வினாக்கள்

(இது எனக்கான சோதனையா இல்ல படிக்கிற உங்களுக்கு சோதனையான்னு சொல்ல தெரியலப்பா :-))

விவேகானந்தர் இல்லம் - ”அம்பலத்தில்”

அம்பலத்திலிருந்து "விவேகானந்தர் இல்லம்" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தர்

இந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?
சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார். அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார். ராமேஸ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.
சென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார். சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.

1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன. அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார். அப்போது அவர் பாம்பன், ராமேஸ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார். அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.

விவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.

நம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஸ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஸ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே "ஐஸ் ஹவுஸ்" என்ற பெயர் ஏற்பட்டது.

விவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு "ஐஸ் ஹவுஸ்" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு "காஸில் கெர்னன்" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.

1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு "விவேகானந்தர் இல்லம்" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.

1897-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஸ் ஹவுஸ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், "சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.
அதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.
சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.

1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.

அங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஸில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.

1902-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காஸில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக "விவேகானந்தர் ஜயந்தி" கொண்டாடப்பட்டது.

இப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்தஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஜயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஸில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.
1897-ல் காஸில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.

1906-ஆம் ஆண்டு காஸில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.

1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.

1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.

பிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஜயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.

அன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.

விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குத் தரும்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1997-ஆம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தமிழக அரசு விவேகானந்தர் இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. தமிழக அரசு விவேகானந்தர் இல்லம் கட்டிடத்தை மட்டும்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த நிலப்பகுதியையும் தமிழக அரசு கொடுத்தால்தான், அங்கு இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

எனவே ஸ்ரீராமகிருஷ்ண மடம், இல்லத்தின் அருகிலிருக்கும் பகுதியையும் தரும்படி தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டிருந்தது.

இப்போது 1998 டிசம்பர் மாதத்தில்தான் அந்த இடத்தை தமிழ் நாடு அரசு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது. அப்படி டிசம்பரில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதமே விவேகானந்தர் இல்லத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.

இந்தக் கட்டிடம் 1842-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும். இப்போது இங்கு கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.இன்னும் ஆறு மாதத்தில் கட்டிடம் முழுவதையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.

விவேகானந்தர் இல்லத்தை இந்திய கலாசார மையம் ஆக்குவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது. இந்த இல்லம் சென்னை மாநகரத்தில் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைய இருக்கிறது. இங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம். இங்கு விவேகானந்தரின் கருத்துகள் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் மூலம் விளக்கப்படும். அதோடு இங்கு இளைஞர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தின் கல்வியும், பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

சென்னையின் பெருமைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த விவேகானந்தர் இல்லம் அமைய இருக்கிறது. இந்தப் பணி சிறந்த முறையில் அமைந்து, நாட்டு மக்களுக்குப் பல விதங்களிலும் பயன்படுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி:- அம்பலம்
***************************************************************************

இங்க வாங்க பெட்டிஷன் போடலாம்....

Online petition - Save Vivekananda Illam in Chennai

பதி பசு பாசம்...!

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி
பதியினைச் சென்று அணுகாப் பசுபாசம்
பதி அணுகிற் பசுபாசம் நில்லாவே.

என் கண்களில் அதிகம் தென்பட்ட வர்த்தையாக இது இருந்தது அடிக்கடி தருமபுரம் பக்கம் செல்லும் போதும் சரி மாத இத்ழாக வரும் ஞானசம்பந்தம் இதழிலிலும் சரி, இந்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்!ரொம்ப நாட்களாக இதன் அர்த்தங்கள் தெரியாது,யாரிடம் கேட்டாலும், நீயெல்லாம் சின்னபயடான்னு தான் பதில் வரும்( ஒரு வேளை அவங்களுக்கும் கூட தெரியாமல் இருந்திருக்கலாம்!)

பதி பசு பாசத்திற்கான விளக்கம் வெகுநாட்கள் கழித்துத்தான் அறிந்துக்கொண்டேன்.

பதி இறைவனையும் பசு எனப்படுவது ஆன்மா அல்லது

உயிரையும் பாசம் எனபது மலங்கள் என்று அழைக்கப்படும்

ஆணவம் கன்மம் மாயை குறிக்கும் சொற்களாம்ஒரு முறை இந்த பதிபசுபாசத்தொகையின் புத்தகம் எங்களின் பெரியப்பா வீட்டில் யாருக்கும் உபயோகமின்றி இருந்தப்போது அதை நான் எடுத்து வந்து படிக்க முயற்சித்து,முடியாமல் தனித்தனியாக டைரியில் எழுதி வைத்து, அப்போதும் அது சம்பந்தமாக சரியான விளக்கங்களுக்கு புரிந்து கொள்ள இயலாமல் விட்டுவிட்டேன்! அதிலிருந்து சில வரிகளாக சிற்சில பகுதிகளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனதில் ஆழ பதிந்து எண்ணங்களுக்கு விதையாகவும் அமையும்!

உதவி இரவி உலகுக்கு

இரவிக்கு உதவி செய்யுமோ உலகு

உலகத்திற்கே உதவும் சூரியனுக்கு உலகம் என்ன செய்யப்போகிறது? என்ற விடை தெரியாத கேள்விகள் சில வரிகளாக நிறைய உள்ளன.

பொதுவாக இது போன்ற புத்தகங்களின் அட்டையை பார்த்தாலே பீதி கிளம்பும்
இவர்களால் இயற்றப்பட்டு;
இவரது உரையுடன்;
இவரது திருவுளப்பாங்கின்படி;
இவரால் பரிசோதனை செய்யப்பட்டு;
இவர்களால்,
இந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது .
இவை அனைத்தையும் படித்து முடிக்கும் முன்பே அலுப்பு வந்து புத்தகம் திரும்பவும் ஒரு மூலைக்கு போய் விடும்!

ஆனாலும் கூட இது போன்ற புத்தகங்களை படிப்பதன் மூலம்தான் பழந்தமிழ் மொழி சம்பந்தமான,நிறைய சொற்களை தெரிந்து கொள்ளலாம்!

முடிந்தால் முயற்சித்து பாருங்களேன்!

சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்

எனத்தொடங்கும் அந்த தேவாரப்பாடல் சாதாரணமாக முத்லில் தோன்றினாலும் 63 நாயன்மார்களின் வரலாற்றை ஒரிரு வரிகள் சொல்லி முடிக்ககூடிய திருத்தொண்டர் புராணமாக எனக்கு தெரிய வந்தது வெகு நாட்கள் கழித்துத்தான்!


வாரங்களின் இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில்,பெரிய கோவிலை வலம் வராவிட்டால் தொடங்கும் வாரமே,எதையோ தொலைத்துவிட்டு,ஆரம்பிப்பதை போன்ற எண்ணம்!

ஞாயிறு விடுமுறை நாளாக இருந்தாலும் பெரிய கோயிலில் அவ்வளவாக கூட்டமிருக்காது,நாம் நினைத்தப்படியான வழிபாடுகளை,தேவாரப்பாடல்களை உரக்க நம்க்கு தெரிந்த ராகத்தில் பாடலாம்,உட்கார்ந்து யோசிக்கலாம்? அதாங்க தியானமுனு சொல்வாங்க ஆனா பாருங்க நான் எப்ப அத செஞ்சாலும், உட்கார்ந்து ரொம்பத்தான் யோசிப்பானே என்ற ரீதியிலேயே அமையும்! சாதரணமா வராத நினைப்பெல்லாம் வரும்,- வெளியில இருக்கற வண்டியை எவனாவது எடுத்துப்போயிட்டா,என்ன பண்றது? எப்படி போய் போலீஸ்ல கம்பளைண்ட் கொடுக்கறது? கால்ல வேற செருப்பு இல்லையே – இப்படி லிங்க் மேல லிங்க போட்டு அதுப்பாட்டுக்கு போயிக்கிட்டே இருக்கும் அத நிப்பாட்டுணுமுனா நான் செய்ற அந்த தியானத்தை நிப்பட்டணும்! இத்தோட நிப்பாட்டிக்குவோம் இந்த மேட்டர!

அது போன்ற சமயங்களில் நான் மிகவும் எதிர்பார்த்து,கேட்டு ரசிப்பது,

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்

என்ற கணீர் குரலுடன், வலம் வரும் சிவனடியார் திருக்கூட்டத்தினர்தான்!

எதோ வயசான ஆளுங்கன்னு நினைச்சிடாதீங்க! எல்லாருமே இளம்வயதுக்காரர்கள்தான்! தலைமை வகித்து செல்பவருக்கு ஒர் முப்பது வயதிருக்ககூடும்,கூடவே பாடிக்கொண்டு செல்லும் தொண்டர்கள் அனைவருமே வயது 22க்குள்தான் அதிலும் ரொம்ப குட்டி ஒரு வாண்டு 5 வயசு இருக்கு நெற்றியில வீபுதி அணிந்து பாடிச்செல்லும் காட்சி,காண ரொம்ப ஆசையாத்தான் இருக்கும்!

தமிழிசை பாடல்களில் தேவராப்பாடல்களை கொண்டு வழிபட்டு செல்லும் இக்காட்சி இந்த பாடலும் என்னை மிகவும் கவர்ந்திழுக்க அது நாள் முதல் கொண்டு நானும் சுந்தரர்சுவாமிகளால் பாடப்பெற்ற ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றையும் ஒற்றை வரிக்குள்ளாகவே சுருக்கி கூறும் தேவராத்தின் திருதொண்டர்கள் புராணம் கூறும் பாடல்களை,கற்று ஒரளவுக்கு பாடத்தெரிந்துகொண்டேன்!

பெரியபுராணத்திற்கு அடிப்படையாக அமைந்த இப்பாடல்கள் மற்றும் தேவாரப்பாடல்களை ஒவ்வொரு கோவில்களிலும் ஒலிப்பதன் மூலமும் தமிழ் வாழும்!

சுற்றுகிற உலகத்திலே, சுற்றுகிற மனிதர்களே...!

ஹைய்யா இது கார்த்திகை மாசமான்னு குஷியோட ஆரம்பிக்கிற மாசம்தாங்க ஆனா பாருங்க கார்திகை 20 தேதிக்கு மேலதான் ரொம்ப பரபரப்பா இருக்கும்!

சீக்கிரம் முடிக்கணுமே..!

சீக்கிரம் முடிக்கணுமே,

பயங்கர டென்ஷனா இருக்கும்! நாம இப்படி டென்ஷன்ல இருக்கறத பார்த்துட்டே நிறையபேரு ரொம்ப கிண்டலா என்னடா இப்பத்தான் ஆரம்பிக்கிறீயா? எப்ப முடிக்கறது அதுக்குள்ள தை மாசம் வந்துரும்டான்னு, ஆனா அதப்பத்தியெல்லாம் நாம கவலைப்படறது கிடையாது அவங்களுக்கு தெரியாதுல்ல நம்ம டைமிங்கே வேறன்னு ..! (காலையில 4.00 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு முடிச்ச கையோட மயூரா 2 ஸ்ட்ராங்க் பில்டர் காபி ஒண்ண உள்ள வுட்டுக்கிட்டு 5 மணிக்கு ஆரம்பிச்சா 7.30 க்குள்ள 25 சுத்து வந்துடலாம்!)

என்னாடா இந்த இழு இழுத்துட்டு வரானேன்னு பாக்குறீங்களா?
எல்லாம் சுத்தல் மேட்டர்தாங்க!

வருஷா வருசம் கார்திகை மாசம் வந்தா போதும் எங்க ஊருல இருக்கற கோவில்கள் ரொம்ப பிசியாகிடும் (எங்க ஊருன்னு இல்ல பல ஊர்களிலும் இதான் கதை) ஊர்ல உள்ள அம்புட்டு 6லிருந்து 60 வரையானவர்கள் கோவில் பிரகாரம் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்!

சும்மா சாதாரணமா சுத்தறது இல்லைங்க, கார்த்திகை மாசத்து டார்கெட் 1008 அவ்ளோதான்!ஆனா ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு மாதிரியான ரவுண்ட்ஸ் பிக்ஸ் பண்ணியிருப்பாங்க நம்ம மக்கள்ஸ்

பெரிய கோவில்லுன்னு எடுத்துக்கிட்டா அபயாம்பிகை சன்னதியை 1008 தடவை சுத்திவரணும்,கோவிலையே 108 முறை சுத்திவரணும்ன்னு, இதெல்லாம் சீக்கிரமாவே முடிச்ச பி.டி.உஷாக்கள் சுவாமி சன்னதியையும் 108 சுத்திக்கிட்டு இருப்பாங்க! (பெரிய கோவில்தான் பெரிய விஷயம் பெரிய பிரகாரம் நிறைய டைம் எடுக்கும்!)

வள்ளலார் கோவில் சொல்ற வேதபுரீஸ்வரர் கோவில் அம்பாள் சன்னதியை தினமும் 108 சுத்து சுத்தணும்! (இது சின்ன பிரகாரம்தான் இதுல சுத்தறவங்க மற்ற கோவில்களிலும் கமிட் ஆகியிருப்பாங்க!)

மற்றபடி அய்யாரப்பர் கோவில் & புனுகீஸ்வரர் கோவில்களிலும் இந்த சுற்றல்கள் உண்டு ஆனா அந்தளவுக்கு கூட்டம் இருக்குமான்னு தெரிய்லை! (இந்த ஏரியாக்கள் நம்ம கண்ட்ரோல்ல வராதுங்க..!)

ஆனா எனக்கு தெரிஞ்சு இங்க சுத்துனாவங்க எல்லாம் நல்ல வேலை கிடைச்சு, நல்ல வாழ்க்கை கிடைச்சு நல்லாத்தான் இருக்குறாங்க! அதுக்கு நிறைய பேர உதாரணமா சொல்லலாம் !
(நாங்கூடத்தான் உதாரணம்!)

எங்க ஊர்லேர்ந்து போயி முன்னணி சாப்ட்வேர் கம்பெனிகள் பணிபுரியும் அத்தனை பெண்களும் பெரும்பாலன் ஆண்களும் கண்டிப்பாக சுத்தியிருப்பார்கள்! (நாங்க எவ்ளோ பேர பாத்துருக்கோம் கோவில்ல!)

இந்த வாரத்தோட முடியுதுங்க கார்த்திகை பிரகார சுற்று விஷயங்கள்!

இப்போதைக்கு எங்க ஊரு கோவில்களுக்கு போனீங்கன்னா கோவில் சுவத்துல ஒரே நம்பர்களா இருக்கும் (இதை மட்டும் மாத்த முடியலப்பா!)

அதெல்லாம் இந்த கார்த்திகை மாசத்து கைங்கரியங்கள்தான் :-)

அண்ணாமலைக்கு அரோகரா...!

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தில் தோன்றுகிற கார்த்திகை ஜோதிதான் பிரபஞ்சத்திற்கே அக்னி சக்தியை அளிக்கிறது. மேலும் வானில் திகழ்கிற கோடானு கோடி நட்சத்திரங்களும் நம் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும், நாம் அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற கோள்களுக்கும் ஒளி சக்தியை அளிப்பது திருவண்ணாமலை கார்த்திகை தீப ஜோதிதான். திருவண்ணாமலை ஜோதிக்கு நிகர் வேறெதுவும் இல்லை. பஞ்சபூத லிங்கத்தில் அக்னி லிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே. திருக்கார்த்திகை தீபம் அண்ட சராசரங்களுக்குமே, ஒளிவிளக்கான திருவண்ணாமலை ஜோதி ஏற்றப்படுகிறது.


இந்த தீப ஜோதி தரிசனத்தைப் பார்ப்பவர்கள் கோடானு கோடி புண்ணியத்தைப் பெறுவதுடன் அண்ணாமலையாரின் அருள் பெற்று அனைத்துத் துன்பங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள். கார்த்திகை மகா தீபத்தைக் காண, மாநில மக்கள், உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டவர்களும் வருகின்றனர். இந்தக் கண்கொள்ளா நிகழ்ச்சிகள் வானொலி மூலமும், தொலைக்காட்சி மூலமும் உலகெங்கும் ஒலி ஒளிபரப்பாகின்றன.

ஆண்டுதோறும் தீபத் திருவிழாவின் பத்தாவது நாள் விழாவாக அதிகாலை அருணாசலேசுவரர் கோயிலில் பரணி தீபமும், பிரதோஷ காலத்தில் அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளிக் காட்சி கொடுக்கும் நேரத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.இந்த நேரத்தில் வீதியில், வீட்டில் மலையைச் சுற்றியுள்ள 20 கி. மீ. தொலைவில் உள்ள கிராமங்களிலும், பட்டிதொட்டிகளிலும், வீடு, கங்கைக் கிணறு, மாடம், நிலம் என அனைத்து இடங்களிலும் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள். "அண்ணாமலைக்கு அரோகரா' என அனைவரும் வேண்டுவார்கள்.

நன்றி - சிஃபி தமிழ்

இனிய பக்தி நிறைந்த நன் நாளில்,

தமிழும்,பக்தியும் இசையோடு சேர்ந்த இனிய குரலில், நித்யஸ்ரீ பாடலில்..!

இறைவனை துதிப்போம்

இன்பம் துய்ப்போம்!

மயிலாடுதுறை துலாஉற்சவம் - கடைமுழுக்கு இன்னைக்கு!

காலை 5.00 மணிக்கு பாதி தூக்கதிலிருக்கும்போது, அம்மாவும் பாட்டியும், டேய் காவிரி ஆத்துக்கு போய்ட்வர்றோம் தெரு கதவைப்பூட்டிக்கோவென்று சொல்லும் சப்தம் கேட்டு,தூக்கத்திலிருந்து எழும்போதே, அம்மா..! வரும்போது மயூரா பொங்கல் வாங்கிட்டுவர்றீயாம்மா? ன்னுதான் வார்த்தை வரும்!

அது போலவே 7. மணிக்கு சூடான பொங்கல் கொண்டு வந்து வைத்துதான் எழுப்புவார்கள்! இது பல வருடங்களுக்கு முன்பு வரை!

கடைமுழுக்கு பற்றி ஒன்றும் பெரிதாக தாத்பரியங்கள் அறிந்திருக்காவிட்டிலும் கூட அன்னைக்கு போய் காவிரியில குளிச்சா, நல்லதுங்கற எண்ணம் மட்டும் ரொம்ப கெட்டிய மனசுல் இறுகிப்போச்சு!

என்னதான் காலையில் காவிரி ஆற்றுக்கு சென்றுவந்தாலும் பாட்டிக்கு சாயங்காலமும் சென்று சாமி தீர்த்தம் கொடுக்கும் போது குளித்துவந்தால்தான் மனசுக்கு நிம்மதி! (ஏம்மா! அதான் காலையில போய் குளிச்சுவந்தாச்சுல்ல பின் திரும்ப எதுக்கு சாயங்காலமும்ன்னு சொல்றத கேட்கதபோது எங்களுக்கு கோபம்தான் வரும்! ஆனால் பெரியவர்களின் பிடிவாதம் என்பதே ரொம்ப நாட்கள் நினைத்திருந்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடல்லவா!)

காலை 10.00மணிக்கு கோவிலுக்கு செல்லும் நான் சாமி புறப்பாடாகி கோவில் வாசலிலிருந்து அந்த மடவளாக விளிம்புக்கு வர ஒரு மணி நேரமாவது ஆகும்! ஆம் அங்குதான் மிகவும் விமரிசையாக பலர் ஊர்களிலிருந்து வந்த நாதஸ்வர சக்ரவர்த்திகள் இறைவனை வணங்கி கச்சேரி செய்வார்கள் ( மல்லாரி ராகத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு பாடுவார்கள்ன்னு நினைக்கிறேன்!)

வீட்டுக்கு வந்து சாமி கிளம்பிவிட்டது என்று தகவல் சொன்னால் போதும் பரபரக்க ஆரம்பித்துவிடுவார் பாட்டி! இத்தனைக்கும் கோவிலிலிருந்து கிளம்பு உற்சவமூர்த்திகள் துலாகட்டம் சென்று சேர எப்படியும் சாயந்திரம் 5 மணியாகிவிடும்! வழி நெடுகிலும் நாதஸ்வர கச்சேரி தூள் கிளப்பிக்கொண்டிருக்கும்!

ஒரு வருடம் நானும் துலாகட்டத்தில் சாமி வருகையை எண்ணி காத்திருந்தப்போது, சுமார் 3 மணிக்கு முதலில் யானை வந்து சேர கூட்டம் பரபரப்பாகி ஆற்றை நிரப்பியது மக்கள் வெள்ளம் ஆனால் உற்சவ மூர்த்திகள் வந்து சேர்ந்ததோ 5 மணிக்கு மேல்தான்! அவ்ளோ நேரம் ஆச்சு கடைத்தெருவை கிராஸ் செய்து வர..!

ஒவ்வொரு வருடமும் இதே போன்ற நிகழ்வுதான் என்றாலும், இன்றும் கூட மிகுந்த உற்சாகத்தோடு கடைமுக உற்சவத்தில் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரள்கிறது!

காவிரி அன்னை எம்மை காண வராமல் தவிக்கும் நாட்களில், வருணபகவான் வாரி வழங்குகிறான்

எம் மயிலாடுதுறை மக்களுக்கு வளங்களோடு நல் வாழ்க்கையையும் - மயூரநாதரின் கருணையால்...!

படங்கள்- நன்றி sbalu

கடகத்திலிருந்து விட்டு விலகி.......! (துறை சார்ந்தது..?)




கடக ராசி


மிதுன ராசி





சிம்ம ராசி





கன்னி ராசி





துலா ராசி





தனுசு ராசி





விருச்சிக ராசி





மகர ராசி





கும்ப ராசி





மீன ராசி



இது ஜோதிட "துறை" சார்ந்த பதிவுல போய் ரொம்ப நாளைக்கு நின்னுக்கிட்டிருக்க நீங்க ரெகமண்ட் பண்ணுவீங்களா, குசும்பா...??!!

சஷ்டி ஸ்பெஷல் - சித்தனாதன் விபூதி

அருத்தவமானது நீறு அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு;
பொருத்தமாவது நீறு புண்ணியம் அளிப்பது நீறு;

என்று திருஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகத்தில் புகழப்பெற்ற திருநீறு - துண்ணுறு (மரூஉ)- விபூதி யாக அழைக்கப்படும் அந்த வெள்ளை நிற பொருளுக்கு பெரும் மகிமை அல்லது மணம் பரப்ப ஆரம்பித்தது இந்த பழநி சித்தனாதன் நிறுவன தயாரிப்பில்தான் அதிகம் என்று கூட கூறலாம்!
பெரும்பாலும் கோவில்களில் அவரவர்க்ள் தம்மால் இயன்ற முறையில் விபூதிகளை தயாரித்து பிரசாதமாக விநியோகித்து வந்த சுழலில்,பிராண்டட் பிரபலமானது பழனி சித்தனாதன் தயாரிப்பு விபூதிதான்!


பழனிக்கு சென்று மொட்டை போட மறந்தாலும் மறப்பார்களே ஒழிய, அடிவாரத்து கடையில் விபூதி கிலோ கணக்கில் வாங்க எந்த பக்தருமே தவறுவது கிடையாது! அந்தளவுக்கு தெய்வீக மணத்துடன் விபூதியின் அடையாளமாகியது பழனி சித்தனாதன் வாசனை விபூதி! அது போலவே பழனி போய் வந்தேன் என்று யாரிடமாவது கூறினால அவர்களின் முதல் கேள்வி சித்தனாதன் விபூதி வாங்கிவந்தாயா? என்பதுதான்!

நல்ல பேரும் புகழும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெற்று விபூதி விற்பனையில் முன்ணணியில் இருந்துவருகிறது சித்தனாதன் விபூதி.

முருகன் புகழ்பாடும் சஷ்டி திருநாளில்,

விபூதி அணிவோம்! முருகன் தாள் பணிவோம்..!!!

சஷ்டி ஸ்பெஷல் - ரமணி அம்மாள்

முருகனைப்பற்றிய பக்தி பாடல்கள் பலர் பாடியிருந்தாலும், பாடிக்கொண்டிருந்தாலும், சிலரது குரல்களில் மட்டுமே வெளியாகும் அந்த தெய்வீக மணம் வீசுவதை அனுபவிக்கமுடியும்! அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்!

பெங்களூர் ரமணி அம்மாள்!

இவரது பாடல்கள் மார்கழி மாத அதிகாலை வேளைகளில் ஒலிக்காத கோவில்களே இல்லை!

என்றைக்கும் நீடித்து இருக்கும் இவரது பாடலில் வெளிப்படும் பக்தி
எனக்கு மிகவும் பிடித்தமான, அதிகாலைவேளைகளில் விரும்பி கேட்கும் பல பாடல்களிலிருந்து ஒன்றினை நீங்களும் கேளுங்கள் சஷ்டியில் முருகன் வணங்குங்கள்...!

ஊர் ஸ்பெஷல் – தேர் திருவிழா - இன்னைக்கு..!


ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துவிடும் கொத்த தெரு ஆட்கள் அனுமார் கோவில் வாசலில் காலையில் கூட ஆரம்பித்தாலே தேருக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கியதற்கான சிக்னல் கிடைக்கும்!

தேருக்காக சாரம் கட்டிய சவுக்கை மரங்களினுடாக புகுந்து வருவது என்னமோ இமயமலைய டச் பண்ணுன சந்தோஷம் வரும்!

ஐப்பசி மாதம் தேர் திருவிழான்னா வர்ற சந்தோஷம் ஒரு ரூபாயிக்கு விக்கும் பலூனை வாங்கி தட்டலாமேன்னுதான்! அது மாதிரியே பலூன் வாங்கி வந்து கடைசியாக சுருங்கி குட்டியூண்டு ஆகும் வரைக்கும் அத வைச்சு விளையாடுவேன் இது ஒரு வாரத்துக்கு ஒடும்!

இப்ப ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியிலருந்து எங்க ஊருக்கு பெரிய அழகான மரத்தேர் செஞ்சி உபயமா கோவில்லுக்கு கொடுத்திருக்காங்க அது யாரோ மன்னர்குடி வகையறாவம் யார்ன்னு தெரிய்லை! நல்லாயிருக்கட்டும்!
அது ஆடி வர்ற அழகே தனிதான்!

சின்ன வயசுல தேர் பார்க்குற ஸ்பாட்டுன்னா அது சின்னகடைத்தெரு தொங்கலில் இருக்கும் சியாமளா மாரியம்மன் கோவில் வளாகம்தான்! உள்ள நின்னுக்கிட்ட்டு பார்த்தா ரொம்ப பாதுகாப்புன்னு பாட்டி சொன்னதால அந்த சுவற்றின் சிமெண்ட் ஜாலிகளுக்கிடையில் முகத்தை மாட்டிக்கொண்டு பார்த்தது!

பெரிய மனுசனானதுக்கப்புறம் ஸ்பாட்டு மாறிப்போச்சு! தேரை விட தெற்கு வீதி பிகர்தான் முக்கியமென்ற காலம் வந்தது! அதே இடம் தொடர்ந்தது கல்யாணம் ஆகும்வரை – அந்த பிகருக்கு!

திரும்பவும் ஆன்மிக பாதையில் ஸ்ட்ராங்காக அடிவைத்ததும் கோவிலிலிருந்தே சாமி பக்கதில் நின்று சென்றது ஆரம்பமாகியது! தேர் சக்கரங்களினூடாக முட்டு போடும் அந்த மனிதர்களின் உற்சாகத்துடன் சேர்ந்து குரல் கொடுத்து வந்தவன் காலச்சக்கரத்தில் உள்ளே புகுந்து சக்கையாகி இப்ப இங்க.....!!!!

எனக்கும், இந்த கொடுமைய(பதிவ) படிக்கறவங்களுக்கும் அந்த மாயூரநாத சுவாமி சமேத அபயாம்பிகை அருள் புரிவாராக!

சஷ்டி ஸ்பெஷல் – குடுமியான் மலை

வருடந்தோறும் வரும் கோடை விடுமுறைகளில் புதுக்கோட்டையில்தான் சுமார் இருபது நாட்களுக்குமேல் அத்தை வீட்டில் தஞ்சம்! அங்குதான் சைக்கிள் ஓட்டுவதிலிருந்து சாமி கும்பிடுவது வ்ரை நன்றாக கற்றுக்கொண்டது! வாரம் வெள்ளி ஞாயிற்றுகிழமைகளில் ஏதெனும் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்! (ஊரைச்சுத்தி கோவில்கள் இருக்கும் எங்க ஊருல எனக்கு சாமி கும்பிடற எண்ணம் அப்ப வர்லை..!)

அப்படி ஒரு நாள் சென்ற இடம்தான் குடுமியான் மலை முருகன் கோவில்! காலையிலேயே தயிர்சாதம் புளிசாதம் என கை நிறைய் பைகளை நிரப்பிக்கொண்டு,கிளம்பியாச்சு டவுன் பஸ்ல,ஒரு ஒருமணி நேரம் போயிருக்கும் ஊர் வந்துச்சு! அண்ணாந்து பார்த்தா மலை உச்சியில ஒரு சின்ன கோவில்!

சீக்கிரம் நடங்கன்னு சொன்னதும் உற்சாகத்துல ஓடியவனை, அத்தை அதட்டும் குரலில் டேய்..! கையில செருப்பு எடுத்துக்கோ இல்லை இங்கயே போட்டுட்டு வான்னு மிரட்ட..! (செருப்பு போட்டுக்கிட்டு படியேறக்கூடாதாம்!) எதுக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ் மாதிரி கையிலன்னு படி ஆரம்பிக்கிற இடத்துலயே போட்டுட்டு படி ஏற ஆரம்பிச்சாச்சு!

கோவிலுக்கு போனா ஒருத்தரும் கிடையாது! அப்படியே இருட்டில முருகன் தெரியுறாரன்னு உத்து உத்து பார்த்துக்கிட்டுருந்தேன்..!

கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு குருக்கள் ரொம்ப பாவமா நடந்துவந்துக்கிட்டிருந்தாரு! அவருக்கு அடிவாரத்திலதான் வீடாம் யாரோ நாலு பேரு மலையேறிப்போயிருக்காங்களேன்னு பரிதாபப்பட்டு வந்தவர நானும் பரிதாபமாத்தான் பார்த்துக்கிட்டிருந்தேன்! (சரியா கவனிக்க ஆளில்லாத கோவில்களெல்லாம் இது மாதிரி ரொம்ப பேர பார்த்துருக்கேன்! என்ன நிர்பந்த்துக்கு இவங்க இவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் வந்து வேலை பார்க்கணும்ன்னு,மனசுக்குள்ள தோணும்...?)

கொஞ்ச நேரத்திலயே, கொஞ்சம் பயத்துடனே சாமி கும்பிட்டு முடிச்சு, பிரசாதம் வாங்கிக்கிட்டு,நாங்க எடுத்துவந்த சாதத்தையும்,எடுத்து வயித்த நெப்பிக்கிட்டு நல்ல புல் கட்டுல இறங்கும்போதுதான் இவ்ளோ நேரம் நான் ஆடுன ஆட்டத்துக்கு, சோதனை வந்தது! அது கோடைக்காலம்னு முன்னாடியே சொன்னோன்ல, சுமார் 11.00 மணிக்கு மேல மலைப்பாதையில நடக்கறதும், மாரியம்மன் கோவில்ல தீ மிதிக்கிறதும் ஒண்ணுதானே..!

என் அத்தை எம் மேல பரிதாபப்பட்டு ஒரு துண்டு கொடுத்தாங்க அதை எடுத்துகிட்டு வேகமா ஒடி வந்து,துண்ட போட்டு அது மேல நின்னு திரும்ப திரும்ப அது மாதிரியே செஞ்சு ஒரு வழியா வந்துசேர்ந்தேன்...!
என்ன தான் அப்ப கஷ்டப்பட்டாலும் இப்ப இங்க உக்காந்துக்கிட்டு சஷ்டியும் அதுவுமா நினைச்சு பார்க்கறது ரொம்ப சந்தோஷமா இருக்கு!

உங்களுக்கு வாய்ப்பு இருக்கா? அப்ப போய் பாத்துட்டுவாங்களேன் தமிழ்கடவுளை...!

சஷடி ஸ்பெஷல் - திருவிடைக்கழி முருகன் கோவில்

மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 9 கி.மீ செம்பனார்கோவிலிலிருந்து பிரியும் மேமாத்தூர் சாலையில் சென்றால் 3 கி.மீ இடது புறம் திரும்பி மஞ்சளாற்றின் கரைகளில் அழகான தார்சாலையில் வளைவு நெளிவுகளில் வளைந்து நெளிந்து,கொண்டேஏஏஏஎ சென்றால், சரியாக 12வது கிமீ ஒரு கோபுரம் அகலத்தில் சிறிதாக உயரமாக தெரியும்!அங்குதான் திருப்புகழ் பாடப்பெற்ற இறைவன் முருகன் காட்சி + அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் - (நேரடியாக திருக்கடையூர் வந்து, அங்கிருந்து தில்லையாடி வந்தால் எளிதாக இருந்தாலும் அதைவிட இந்த ரூட் எதுக்குன்னா? வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில் வருவதென்பது எவ்ளோ சுகமானதுன்னு அனுபவிச்சு பார்க்கத்தான்...!) தேவாரப்பாடல்களில் திருவிசைப்பாவில் பாடல் பெற்ற ஸ்தல்ம் கூடுதலாக அருணகிரிநாதரால் முருகன் அருளை பெற, திருப்புகழினால் பாடப்பெற்ற இடமும் கூட இது! புராணத்தில் சூரன் மகன் இரண்யாசுரனை அட்டாக் செய்த இடமாக கூறப்படுகிறது!

ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது.

தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது! அது மட்டுமல்லாமல் சஷ்டி விழாவும், சுற்றுபுற கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூட இங்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றுவருகிறது!
முன்பு பஸ் வசதி ரொம்ப குறைவாக இருந்து, கால நேரம் தெரியாமல் காத்திருந்த காலங்கள் மனதில் நினைவாடுகின்றன! அந்த பிரச்சனைகள் இப்போது இல்லவே இல்லை அடுத்தடுத்து பஸ்கள் அல்லது மினி பேருந்துகளால் அமர்க்களப்படுகின்றது!

பெரும்பாலும் திருக்கடையூர் கோவிலை தரிசிக்க வருபவர்கள் இந்த கோவிலை தவறவிடுவதில்லை! இந்த கோவில் தெற்குவீதி (மெயின் ரோடும் அதான்) பார்த்தால் தில்லையாடி சிவன் கோவில் அதற்குபக்கத்திலேயே தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் வாசலில் காந்தி சிலை!

இங்கு சென்றால், கண்டிப்பாக ஒரு மனநிம்மதியுடன் திரும்பலாம் அது உறுதி!

பாட்டு படிப்போமா...!?

தீபாவளிக்கு ஊருக்கு வந்து ஒரு நாள் ஆட்டம் முடிஞ்சு போரடிச்சு போய் உக்காந்துருக்கீங்களா? இன்னும் மூணு நாள் இருக்கு திரும்ப அலுவல்கள் தொடங்க, அதுவரைக்கும் பொழுது போக இந்த பாட்ட படிங்க...!

அருணகிரிநாதரோட கந்தர் அந்தாதியில வர ஒரு பாட்டு இன்னைக்கு சஷ்டி தொடங்குதுல்ல! அதான் ஸ்பெஷல்!


திதத்தததத் திததத திதிதாதை தாததுத தித்தததிதா

திதததத்தத திதத திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் திததத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத திததிததி தீதீ திதிதுதி தீதொத்ததே

மயிலாடுதுறை பெரிய கோவில்


என்னதான் வேலையாயிருந்தாலும் சரி, வெள்ளிகிழமையாச்சுன்னா சாயங்காலம் 7.00 மணிக்கப்புறம் பெரியகோவில்தான்! இரவு அர்த்த சாமம் முடியறப்பத்தான் முன்னாடிதான் வீட்டுக்கு ரிடர்ன் ஆகறதே!

ஊரைச்சுற்றி பல கோவில்கள் உண்டு என்றாலும்,எனக்கு பிடித்த கோவில் எங்க ஊரு பெரிய கோவில்தான்!

மனசுக்கு சங்கடமா எதாவது நடந்துடுச்சா, நேரா கிளம்பி போய் சிவன் சன்னதியில் உட்கார்ந்தா உலகமே மறந்து உள்ளம் மகிழும்!

மத்த ஊர்கள்ல, சுவாமி பேரோட கோவில சொல்லி கூப்பிடுவாங்க! ஆனா எங்க ஊருல சாமிபேர சொல்லி கூப்பிட்டா பலருக்கு தெரியாது! பெரிய கோவில்ன்னு சொன்னிங்க, சன்னதி முன்னாடி கொண்டு போய் விடுவாங்க!

இரண்டு பெரிய திருக்குளங்கள் கோவில் உள்ள இருக்கற குளத்துக்கு பிரம்ம தீர்த்தம்ன்னு பேரு!

படிக்கற காலத்துல கொஞ்சம் டல்லாயிடுச்சின்னா தம்பி! போய் குளிச்சிட்டு வந்து படின்னு சில இடங்கள்ள சொல்லுவாங்க அப்பத்தான் கொஞ்சம் ஃபிரஷ் ஆகும்னு அதுபோலத்தான் பிரம்மா ரொம்ப டயர்டாகி இருக்கறப்ப்ப, பார்முலா மாற ஆரம்பிச்சதும் எல்லாரும் உஷாரகி, யப்பா பிரம்மா போயி, மாயவரத்துல, டேக் பாத்! தென் யூ வில் கம் டூ ஸ்டார்ட்ன்னு சொல்ல அப்புறம்தான் எல்லாம் ஒ.கேயாச்சாம்!

கோவில் உள்ள நுழைஞ்சு இடதுப்புறத்தில் பிரும்மாண்டபமான வினாயகர் பேரு முக்குறுணி வினாயகர்! சங்கடஹர சதுர்த்தி அன்னைக்குத்தான் இவருக்கு ரொம்ப ஸ்பெஷலா இருக்கும்! மத்த நேரத்தில நாமதான் போய் நலம் விசாரிச்சிக்கிட்டு நல்லபடியா வையுப்பான்னு கோரிக்கை விட்டுட்டு வரணும்!

அப்படியே இடதுபக்கம் மதில் சுவர பார்த்தீங்கன்னா பெரிய எழுத்துக்கள்ல பெரிய கோவில பத்தி வரலாறு இருக்கும்! அதுக்கு பக்கத்துலதான் மடப்பள்ளி! (என்னது எழுத்து சரியா தெரியலையா???? சரி சரி வாங்க நானே சொல்றேன்.!)

சுவாமி பேரு மயூரநாதர்;
அம்பாள் பேரு அபயாம்பிகை தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் அது மட்டுமல்லாமல், அபயாம்பிகை சதகம் என்னும் 100
பாடல்கள் அம்பாளை துதித்து பாடப்பட்ட ஸ்தலம்!

மயூரநாதஸ்வாமி கோவில் சன்னதிக்கு உள்ள நுழைஞ்சதும் நம்மை வரவேற்கும் அந்த பெரிய உண்டியல்! அதுக்கும் நேர் மேல உச்சியில பார்த்தீங்கன்னா வட்டமாக அனைத்து ராசிகளின் உருவம் செதுக்கி அமைந்திருப்பார்கள்! எந்த ராசிக்கு நேர் கீழ நின்னு சுவாமியை பார்த்தால் விசேஷம்ங்கறது பெருசுங்க சொல்ற மேட்டர் அதனால அதையும் ஃபாலோ பண்ணிப்போம்!

அப்படியே இடதுபுறமா நேர பார்த்தீங்கன்னா மயில் உருவம் ஒரு சின்ன அறையில இருக்கும் அதுதான் மயிலம்மன் இப்ப நடந்துக்கிட்டிருக்கற ஐப்பசி உற்சவத்தில ஒரு நாள் மயிலம்மனுக்குன்னு ஸ்பெஷல் பூஜை உண்டு! அன்னைக்கு மயிலம்மன் தூக்கிட்டு எங்க இளவட்டங்கள் ஆடுற ஆட்டத்த போய் பார்த்தீங்கன்னா சூப்பரா இருக்கும்! மயிலம்மன் ஆட்டம்ன்னு இடமும் வலமும் முன்னும் பின்னுமாக பல்லாக்கில் வைத்து ஆடி வருவார்கள்!

தொடரும்....!

அவ்ளோ சீக்கிரத்தில சுவாமி தரிசனம் முடிஞ்சுடுமா? கடைமுகம் வரைக்கும் கொண்டுப்போய்த்தான் முடிக்கணும்னு!

ஆண்டவன் சொல்றான் இந்த ஆயில்யன் முடிப்பான்!?

(பார்ட்டு பார்டா போடறதுக்கு என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கு!?!)

தருமை ஆதீனம்

சைவதமிழ் வளர்த்துக்கொண்டிருக்கும் பழமையான மடங்களில் தருமை ஆதீனம் முக்கியத்துவம் வாய்ந்தது!

17ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட குருஞான சம்பந்த குருமூர்த்தி சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சைவ மடம், தெய்வத்தமிழ் மன்றம் நிறுவி சைவதமிழ் வளர்த்து வருவதோடு, தமிழ் திருமுறைகளையும்,சைவ சமயம் தொடர்பான நூல்களையும் கடந்த 1941 முதல், மூலம் மற்றும் விளக்க உரையுடன் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது.

1985களில் சிறுவனாக இருந்தப்போது, ஞாயிற்று கிழமை மதியங்களில் இந்த மடம் அமைந்திருக்கும் தருமபுரத்தில்தான் பொழுது போகும்! நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நான்கு வீதிகளை மையமாக வைத்து அமைந்த, யாழ்முரிநாதர் திருக்கோயில், அருகிலேயே ஆதீன மடம் அதனுள் அமைந்த கோயில் சொக்கநாதர்.



மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து தரங்கம்பாடி சாலையில் சென்றால் சரியாக மூணாவது கி.மீல் இடது பக்கம் அலங்கார வளைவுடன் ஆரம்பிக்கும் தருமபுரத்தின் எல்லை!

அலங்கார வளைவுக்கு நேர் எதிரே ஒரு தோட்டம் அதனுள் அமைந்திருக்கும் பிள்ளையார், பெரும்பாலானோர் இந்த கோவிலை அறிந்திருக்கமாட்டார்கள்! ஆனால் சாலை வழியே செல்பவர்களின் கண்களையும் மனதையும் கவரும் வகையிலான சின்ன கோவிலின் தோற்றம்! அதன் அருகிலே தற்போது ஆதீனத்தின கல்லூரி செய்ல்பட்டுக்கொண்டிருக்கிறது!

எதிரே குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி,பள்ளி மைதானமென பெரிய பரப்பளவில் அமைந்திருந்தாலும், சில வகுப்புகள் இன்னும் மரத்தடியில்தான்!


ஆதீன பங்களாவிலிருந்து தொடங்கும் மேலவீதி நேரே சென்றால் இடது புறத்தில் முன்பு ஆதீனங்களாக இருந்தவர்களின் நினைவிடங்கள் பெரிய தோட்டங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது!

மேலவீதியின் முடிவில் துவங்கும் வனதுர்க்கை கோயிலுக்கு செல்லும் பாதை, உள்ளே சென்றால் பார்க்கும் தூரம் வரையில், விளை நிலங்களில் காவிரியின் கொடையில் பச்சை பசேலாக இருந்த்து இப்போது பம்பு செட் உதவியுடன்..! வடக்கு வீதியை மத்திய பகுதியில் ஒரு நுழைவாயில் இடதுபக்கம் 100 மீ தூரம் சென்றால் காவிரியை அடையலாம் வலதுபக்கமாக சென்றால் நாங்கள் எப்போதுமே சுத்தி திரிந்த யானை கொட்டகை அதை தாண்டி சென்றால், வெளியே காவல் காக்கும் விதமாக ஒரு புள்ளையார் கோவில்! அதுல, எப்பவும் யாராவது உட்கார்ந்து யாருக்காகவாவது காத்துக்கிட்டுருப்பாங்க!

ஆதீன கல்லூரி விரிவுப்படுத்தப்பட்டு செயல்பட துவங்கியபோது, கல்லூரி மாணவர்கள் அந்த பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர்!

வினாயகரை வணங்கி உள்ளே சென்றால் யாழ்முறிநாதர் கோவில் கொஞ்சம் இருட்டாகத்தான் இருக்கும் பார்த்துதான் போகணும்! அவரை தரிசித்து பிரகாரம் சுற்றி வந்தால் துர்க்கையம்மன் சன்னதி கருவறையின் முன்னால் சிறிய ஃபவுண்டைன் ஆனால் இது நாள் வரையில் அதில் தண்ணீர் இருந்து நான் பார்த்ததில்லை!

அதையொட்டி துர்க்கையம்மன் சந்நிதி,வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளிலும் மட்டும் நல்ல கூட்டம் கூடும்! மற்றைய தினங்களில் நிசப்தமான இனிய சூழலை நான் மிகவும் ரசித்ததுண்டு!

வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் குருபூசை விழாவில் மடத்தினுள் அமைந்திருக்கும் சொக்கநாதர் சன்னதியில் 108 சிவாச்சாரியார்கள் சிவபூஜை செய்து வழிபாடு செய்துவருகின்றனர்! மற்றுமொரு ஸ்பெஷல் கஜபூஜை என சொல்லப்படும் யானைகளுக்கான சிறப்பு பூஜை! (வருஷம் வருஷம் எதாவது ஒரு யானை ரகளை பண்ணிக்கிட்டுத்தான் இருக்குது! அதுவும் அந்த திருக்கடையூர் குட்டி யானை பண்ணும் விளையாட்டுகளுக்கு நிறைய பேர் ரசிகர்கள்!
தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடின் கீழ் 27 பெரிய கோவில்களும் மற்றும் சிறியகோவில்கள்,உள்ளன. ஆதீனத்தின் கீழ்வரும் கோவில்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் பலரால் கையகப்படுத்தப்பட்டு, உபயோகிக்கப்பட்டு வந்தாலும் இது நாள் வரையில் குத்தகை பணங்களாக பெறப்படுவது மிக சொற்ப தொகை! நீதிமன்றத்தில் பல வழக்குகளும் நிலுவையில் உள்ளன! வைத்தீஸ்வரன் கோவில் பிரகார பகுதிகளில் முன்பொரு காலத்தில் குத்தகை நெல்களை கொட்டி அளப்பார்களாம் அந்தளவுக்கு வருமானம் கடந்த 1998ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது அப்பிரகாரம் அனைத்தையும் கூரை போட்டு மூட சொல்லி விட்டது தருமபுர ஆதீனம்!

மக்களிடமிருந்து வந்த குத்தகை நின்றுபோன நிலையில் அவ்ளோ பெரிய இடத்தை கோவிலுக்கு வரும் மக்கள் பயன்படுத்திகொள்ள வசதியாக...!

பிரசன்ன மாரியம்மன் @ மயிலாடுதுறை


அதிகாலையில் எங்கோ வேலைக்கு செல்லும் அந்த வெள்ளைச்சட்டை வெள்ளை பேண்ட்க்காரர்...!

அவசரரவசரமாக ஆட்டோவை நிறுத்தி அமர்ந்த இடத்திலிருந்தே விழிபட்டு செல்லும் அந்த ஆட்டோக்காரன்..!

பக்திமணம் கமழ் நெற்றி நிறைய விபூதி பூசி வந்து மெதுவாக கும்பிட்டு செல்லும் அந்த கார் டிரைவர்..!

மிக்க பொறுமையாக ஒவ்வொரு இடத்திலும் விளக்கேற்றி வழிபாடு நடத்தி செல்லும் அந்த யூனியன் இன்ஜினியர்!

தினந்தோறும் காலை வந்து கோவிலை கழுவி விட்டுச்செல்லும்,அந்த வயதான அம்மா..!

கம்பீரமான குரலில் பாடியபடியே வரும் அந்த ஊனமுற்ற மனிதர்..!

கோவில் வாசலில் கடை போட்டாலும்,முதலில் வந்து ஒரு பந்து பூவை சாத்திச்செல்லும் அந்த பூக்காரம்மா!

என வந்துசெல்லும், ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கும்போது, ஒரு வேலையுமின்றி, ஊர் சுத்திவரும் நம்க்கும் எதாவது நல்லது நடக்கும் என்று ஆரம்பித்ததுதான் பிரசன்ன மாரியம்மன் தரிசனம் – தினந்தோறும்..! – நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு...!

மயிலாடுதுறையிலிருந்து - நாதஸ்வர ஓசையிலே...!

காலை வேளைகளில் சின்னகடைத்தெருவில் அந்த பகுதியை கடக்கும் போது எப்போதும் கேட்கும் மனத்துகினிய அந்த நாதஸ்வரம்+தவில் ஒசை! மங்கல ஒசை!

இந்த நாதஸ்வர ஒசை பொறந்த இடம்னு நம்ம பழைய தஞ்சை மாவட்டத்ததான் சொல்லணும்!. இந்த வாத்தியத்தில் அதிக பிரபலமானதும் எங்க மாவட்டத்துக்காரங்கதான்!

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியம் பிள்ளை இவர்களின் சிஷ்ய கோடிகள்தான் மாவட்டம் ஃபுல்லா இறைஞ்சு + நிறைஞ்சு இருக்கறது!

அதுல, எங்க ஊரு ஸ்பெஷல் பார்ட்டிகள்ன்னு சொன்னா,
"செம்பனார் கோவில் சகோதரர்கள்" என்றழைக்கப்ப்டும் எஸ்.ஆர்,ஜி.குரூப்ஸ் அல்லது எஸ்.ஆர்.குரூப்! ரெண்டு குரூப்புமே அண்ணன் தம்பி வழிமுறைதான்!

இந்த தவில் நாதஸ்வரம் விஷயங்களெல்லாம் எதாவது கல்யாணம், வீட்டு விசேஷங்கள் இல்லாட்டி கோவில் திருவிழாக்கள்ன்னுதான் பார்த்து பழக்கம்! அது மாதிரி அடிக்கடி, பார்த்து தெரிஞ்ச முகங்களானவங்கதான் இவங்க!

Photo Sharing and Video Hosting at Photobucket


Photo Sharing and Video Hosting at Photobucket

இப்போதைக்கு அஞ்சாவது தலைமுறை ஆளுங்க வாசிச்சிக்கிட்டிருக்காங்க!

பிரபலமான எல்லா நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்களோடு இணைந்து பல கச்சேரிகளை கலக்கியவர்கள்!

நாலவது தலைமுறை சம்பந்தம் & ராஜண்ணா பிரதர்ஸ்க்கிட்ட, முறைப்படி கலை கற்றுக்கொண்டவர்க்ள் இப்போ வெவ்வேறு இடங்களில் தங்கள் திறமையில், ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள்!

வருடந்தோறும் விமரிசையாக கொண்டாடப்படும் ஐப்பசி விழாவின், இறுதி வாரத்தில் நடக்கும் ஊஞ்சல் உற்சவம், திருத்தேர் விழாக்களில் இவர்கள்தான் ஸ்பெஷல்!

ஐப்பசி கடைசி நாள் கடைமுழுக்கு அன்று, பெரிய கோவிலில் காலைல 10 மணிக்கு ஆரம்பிக்கும், சுவாமி ஊர்வலத்தில், வெளியூர்களிலிருந்து வரும் மற்ற நாதஸ்வர வித்வான்களுடன் சேர்ந்து, போட்டிப்போட்டுக்கொண்டு பாடும் மல்லாரி ராகத்திற்கு கூடும் கூட்டத்தை காண, அட..! அடுத்த வாரம் நீங்க நேர்லயே போய்த்தான் பாருங்களேன்..!

சுவாமி ஊர்வலம் கடைவீதிகளை வலம் வந்து மாலையில் 4 மணிக்கு இவர்களின் தீர்த்த மல்லாரியுடன் தீர்த்தம் கொடுத்து துலாகட்டத்தில முடியும்!

அதோ போல தருமபுர ஆதீனத்தில் நடக்கும் குருபூசை விழாவிலும் இவர்கள்தான் பிரதான கலைஞர்கள்!

தம் உயிர்காற்றை உருக்கி, ஊதி, அதன் மூலம் தம் சந்ததிக்கு உணவிடும் இவர்களுக்கும்,

இவர்களுக்கு துணை நின்று, ஊருக்கே மங்கல ஒசை முழங்கும் அந்த நாதஸ்வரத்துக்கும்,

நாம் மரியாதை செய்வோம்..!

மங்கல ஒசை எங்கும் முழங்கவும் செய்வோம்..!



LINK TO THIS MATTER - என்னோட கணக்குப்படி, அபி அப்பா வீட்டுக்கும் சில வீடுகள் தள்ளி, இவங்க் வீடு இருக்குன்னு நினைக்கிறேன்!

அபி அப்பா மேலதிக தகவல்கள் உண்டா...????

ஆயில்ய(ன்) நட்சத்திரத்தில்...!

வந்த நடசத்திரங்கள்;
வரப்போற நட்சத்திரங்கள்;
பழைய நட்சத்திரங்கள்;
என எல்லா நட்சத்திரங்களுக்கும்,

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி,
அருள்வாய் அபிராமியே! ன்னு சாமிய வேண்டிக்கிட்டு,

எங்க ஊரு பிரசன்ன மாரியம்மன் கோவில் ஸ்பெஷல் பிரசாதம் வாங்கிட்டு வந்து வைச்சிருக்கேங்க! எடுத்துக்கோங்க!



மாரியாத்தா!

காளியாத்தா!

இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!

நட்சத்திர வாரத்தில யாரும் என்னைய ஒட்டாம, நான் இந்த வாரத்தை நல்லபடியா ஒட்டிட்டு,ஒடணும்...!