மதியம் திங்கள், டிசம்பர் 03, 2007

ப்ளீஸ் லைட்ட அணைங்க....!


ஒரு மணி நேரம் ஒரே ஒரு மணி நேரம் நீங்க லைட்ட ஆஃப் பண்ணுங்க ஃப்ளீஸ்!

இப்படி ஒரு கான்செப்ட்டோட கிளம்பியிருக்காங்க ஒரு நாலு பொடியன்கள்!

அதுவும் எல்லாருமே ஒரே நேரத்தில, டிசம்பர் 15 அன்னைக்கு ஒரு மணி நேரத்துக்கு லைட்ட அணைச்சிட்டு இருந்தா....!

ஏதோ நம்மளால செய்யமுடிஞ்ச விஷயமா சூடாகிக்கிட்டிருக்க உலகத்தோட சூட்ட கொஞ்சம் குறைக்கலாம்னு, இந்த பசங்க ஃபீல் பண்றாங்களாம்!

இநத நாளு பொடிப்பசங்களையும் இப்படி ஃபீல் பண்ண வைச்ச விஷயம் ஆஸ்திரேலியாவுல நடந்துச்சாம்! எர்த் ஹவர்ங்கற பேர்ல ஒரு மணி நேரம் கரண்ட் கட் பண்ணினாங்கலாம், அதுவும் அதை ஒரு பெரிய பங்ஷனாக நடத்தினாங்களாம்!

சுமாரா2.2 மில்லியன் மக்கள் சேர்ந்து, அவங்களோட ஒரு மணி நேரத்து மின் பயன்பாட்டின் வெளிப்பாடான, சுமார் 24.86 டன் கார்பன் டை ஆக்சைடு வெளிய வராம இருக்க உதவி பண்ணுனாங்களாம்!

சும்மா அந்த ஒரு மணி நேரம் கரண்ட் நிப்பாட்டுனாக்கூட நீங்க சந்தோஷமா அக்கம்பக்கத்துல பேசிக்கிட்டிருங்க குழந்தைகளோட உட்கார்ந்து விளையாடுங்கன்னுல்லாம் சொல்லி எல்லாரையும் ஃபீல் பண்ண சொல்றாங்க இந்த பொடிப்பசங்க!

ஆனா இது எல்லாம் நடக்கப்போறது நம்மூரில இல்ல மும்பையில....!

நாமளும் இதே மாதிரி செய்யுலாம்ல,- அல்ரெடி நம்ம வீட்டு பெருசுங்க செஞ்சுக்கிட்டிருக்கும் - வீட்டுல லைட்டப்போட்டுட்டு வீட்டுக்கு வெளிய வந்து நின்னுக்கிட்டு, முதல்நாளில் நடந்த மெகா நாடகங்களை அசைப்போட்டுக்கொண்டிருப்பார்கள்!

அநத ஆளுங்களுக்குகிட்ட நாம இந்த பிரச்சாரத்த கொண்டுப்போகலாம்ல.....!!!

(அட...! ஆமாம், ஒரு நாளைக்கு மெகா தொடர் பாக்காம இருந்தாலே எவ்ளோ நல்ல விஷயங்கள் தேறும்போல தெரியுதே....????!!!)

7 பேர் கமெண்டிட்டாங்க:

pudugaithendral said...

இப்ப மீ த பர்ஸ்ட்.

நீங்க சொல்றது ரொம்ப சரி. கரண்ட் இல்லாட்டி போனா கிடைக்கக் கூடிய ஆன்ந்தங்கள அனுபவிக்கலாம்.

நிலாச்சோறு, பாட்டி சொன்ன கதைங்கள்.
இருட்டுல குழந்தைங்க பயப்படாம அதே சமயம் போர் அடிக்காம் வாய்ப்பாடு, மணக்கணக்கு சொல்லி கொடுத்த எங்க டியுஷன் தாத்தா ஞாபகத்துக்கு வர்றாரு.

ஆனா, இங்கே கரண்ட் கட்ன்னாலே பயம்தான்.

ஆயில்யன் said...

அட! ஆமாங்க நீங்க சொல்றதும் கரெக்ட்தான்
1989 ல புதுக்கோட்டையில காமராஜர் வீதி 21 இல்ல 23 சரியா ஞாபகமில்ல எங்க ரிலேடிவ் அறிவொளி கிளாஸ் டீச்சரா இருந்தாங்க அவங்க கூட ஒரு நாள் போனப்ப கரண்ட் இல்லாத அந்த மாலை வேளைத்தான் இப்ப எனக்கு ஞாபகத்துக்கு வந்தது!

cheena (சீனா) said...

நல்ல செயல் - எல்லோரும் செந்தா அணைக்கலாம்

Veera said...

கரண்ட்ட நிப்பாட்டனுமா!?? ஹி.ஹி.ஹி.. எந்த ஊருல இருக்கீங்க?? இங்கன கவர்மென்ட்ல இருந்தே அடிக்கடி கரண்ட்ட கட் பண்ணிப் புடுறானுங்க!!!

குசும்பன் said...

கவுண்டமணி ஒரு படத்தில் திருமணத்தில் குத்துவிளக்கு காணமல் போனதுக்காக லைட்டை ஆப் செய்ய சொல்வார்.. அந்த கதை தெரியுமா:))))

பெரியசாமி said...

Kalaingar government nowadays doing the same, but people are not understanding.....:)

பாச மலர் / Paasa Malar said...

நல்ல விஷயம்..எல்லோரும் ஒத்துக்கறது கஷ்டந்தான்