கணித மேதை ராமானுஜர் - நினைத்துபார்க்கிறேன் கணிதத்தை!

பத்தாவதுக்கு பிறகு வெறுப்பை வரவழைத்த பொருளடக்கங்களை கொண்ட பாடம் கணிதம் என்று சொன்னால் மறுப்பேதும் சொல்லாமலே ஒத்துக்கொள்வார்கள் இன்றைய மாணவர்கள் வரை!

அதுவும் தொழில்நுட்ப பயிலும் மாணவர்கள் என்றால் கணித்ததில் எப்படியோ தேர்வானதை நினைத்து,நினைத்து சந்தோஷப்படுவார்கள்! (என்னைய மாதிரியே...!)

அப்படி ஒரு தோஷம் புடிச்ச சப்ஜெக்ட்தான்! ஆனா ஒண்ணு கொஞ்சமா இன் ட்ரஸ்ட் இருந்து எப்போதுமே அதுக்குள்ள முழ்கினா அது இன்ப கடல்ன்னு என் கணக்கு பிரெண்ட் சொன்னான்!

எது எப்படியோ இந்த சப்ஜெக்ட்ல ரொம்ப முழ்கி வேலையேல்லாம் விட்டுப்புட்டு நிறைய கணித தேற்றங்களை (பித்தகராஸ் தேற்றத்துக்கு நான் பட்ட பாடு இருக்கே அப்பா சொல்லிமாளாது..! ஒரு வேளை வாத்தியார் சரியில்லையோ??-) இவரு கண்டுபிடிச்சு, சொன்ன விஷயங்கள்தான் இன்னிக்கு எல்லா இன்ஜினியரிங்க டிபார்ட்மெண்ட்களிலும் சும்மா போடு போடுன்னு போடுது!

இன்னிக்கு டிசம்பர் 22 இவரோட பிறந்தநாள் இன்னிக்கு எல்லாரும் கண்டிப்பா இவர நினைச்சு பார்க்கணும்!

ஏதோ என்னால நினைச்சு பாக்க முடிஞ்ச விஷயம்

நான் நினைச்சு பாக்குறேன் நீங்களும் இது மாதிரி இல்லாட்டியும் இன்னும் நல்லாவே நினைச்சு பாருங்க ஒ.கே! (இத விட 10 வாய்பாடு இன்னும் ஈசியா இருக்கும் ;-))

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கணித மேதை இராமானுஜத்தை நினைவு கூர்ந்ததற்கு நன்றி. அவரை எல்லோரும் மறந்து விட்ட நிலையில் இப்படியாவது நினைத்துப் பார்ப்பது நல்ல செயல்.

said...

எல்லாம் சரிதானுங்கோ... நீங்க அஞ்சாம் வாய்பாடு எதுக்கு எழுதுனீங்கோ. அதுவும் 25 வரைக்கும். ஏதாவது வேண்டுதலா?

said...

//காட்டாறு said...
எல்லாம் சரிதானுங்கோ... நீங்க அஞ்சாம் வாய்பாடு எதுக்கு எழுதுனீங்கோ. அதுவும் 25 வரைக்கும். ஏதாவது வேண்டுதலா?
//

எனக்கு ரொம்ப பிடிச்சது,ரொம்ப ஈசியானது அதனாலதான் நீங்க நல்ல கஷடமானத கூட நினைச்சு பார்க்கலாம் :))