கா.பி வித் ஆயில்யன்!

அண்ணன் கானா பிரபாவிடமிருந்து தொடுக்கப்பட்ட நான்கு கேள்விகள் அதற்கு என்னாலான நான்கு பதில்களோடு - (விவரமா சொல்லறதுக்கு நாம ஸ்ட்ரெய்ட்டா விஷயத்திற்கு போய்டலாமே...!??)

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கண்டிப்பாக உங்களின் கணிப்பு சரிதான்! நானே கூட சில சமயங்களில் எங்கள் பேச்சு வழக்கு பதிவு போடவேண்டும் என்று தோன்றி உடனேயே அதற்கான ஆர்வமின்மை சூழ்ந்துக்கொண்டு அதை பற்றிய எண்ணங்களை தவிர்க்க செய்துவிடுகிறது!

ஈழத்து மொழி ஆரம்பத்தில் எனக்கு தாவூ தந்த மொழிதான் - இணையத்தில் அல்ல இங்கு வந்ததும் பழக ஆரம்பித்த ஈழத்து நண்பர்களின் பேச்சு வழக்குகளால், அதுவும் ஒருவர் யாழ் மொழி மற்றொருவர் மட்டகளப்பு மொழி பேசி இவர்கள் இருவரிடமும் நான் பேசியது ஆங்கிலம் mixed தமிழ்!(ஆக்சுவலி எனக்கு நீங்க பேசுற லாங்குவேஜ் கரெக்டா விளங்கலை!) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இருவரிடமே ஒருவர் பேசுவதை மற்றொருவர் சொல்ல கேட்டு கேட்டு கொஞ்சம் பழகிக்கொண்டுவிட்டேன்!

அதுவும் சில சொற்கள் நாங்கள் அதிகம் பயன்படுத்திய ஆனால் வேறு அர்த்தங்களினை தரும் சொற்கள் என்னை முதலில் தயக்கமுற செய்தாலும் கூட பின்னாளில் ஏற்றுக்கொள்ளமுடிந்தது! (வெளிக்கிடறேன்! ச்சீய்! & கதைக்கிறீங்கோ! வெட்டிக்கதை வேணாம்!)

பதிவுகளில் வாசிக்கும்போது கொஞ்சம் கடினமாக இருக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் வாசித்து செல்லவேண்டிய தேவையே அன்றி மற்றபடி அதிகம் சிரமப்படுத்தவில்லை! - இன்னும் பெருமளவு பிரதேச மொழிகளில் பதிவுகளினை வரவேற்கிறேன்! - இன்றைய பதிவு நாளைய வரலாற்றின் பக்கங்களும் கூடத்தானே..!

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

முற்போக்காக என்று சொல்வதில் எனக்கு அந்தளவுக்கு பெரிய விஷயங்கள் ஒன்றும் மனதில் தோன்றவில்லை! (இருக்கு ஆனால் எல்லாம் ”மல்லு”கட்டிக்கிட்டு வெளியே வர மாட்டிக்கிது!)

வேணும்னா இதை முற்போக்குன்னு வைச்சுக்கலாம் - தமிழ்நாட்டில இருக்கற அத்தனை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தமிழ் முதன்மை மொழியாக செயல்படுத்தப்படவேண்டும் - (ஆனா இதெல்லாமா முற்போக்கா செய்யணும்னு யாரும் ஃபீல் பண்ணாதீங்க!) அப்புறம் இன்னொரு விஷயமாக பொது வழிப்பாட்டு அறை ஒன்று நிர்மாணித்து, பணிக்கு வரும் ஒவ்வொருவரும் சாமி கும்பிட்டபின் தான் சாட்டிங் ஆரம்பிக்கவேண்டும் என்றும் ஒரு ஆர்டர் போட்டுடுவேன்! ( ஆமாங்க காலங்கார்த்தால வந்து ”நாளை அழியப்போகும் உலகில் நாம் எதற்கு நம்பிக்கை ? யாரிடம் வைக்கவேண்டும்? என்றெல்லாம் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்கிறாங்களே!)

வாய்ப்புக்கள் சாதகமாக அமைந்தால் சாதாரண வாழ்க்கையை விட, நல்லதொரு பணியாக தன்னார்வ சேவைகளில் பெயர் வெளிப்படுத்தாமல், வேண்டிய பணிகளினை செய்யவேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கிறது!

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

பஞ்சாயத்து தலைவர் போஸ்டிங்குக்குத்தான் எனது முதல் விருப்பம்!

காரணம் ரொம்ப சிம்பிள்:- மொழிப்பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு எல்லோரையும் சங்கடப்படுத்திக்கொண்டு ஐ.நாவில் நாயாக திரிவதை விட இங்கு லோக்கலில் நாய் மாதிரி மக்களுக்கு எதாவது செஞ்சுக்கிட்டு நாயகன் மாதிரி சீக்கிரத்திலேயே இமேஜ் பில்ட்- அப் செய்துக்கொள்ளமுடியும் அப்படின்னு நான் தீர்க்கமாக நம்புவதால்....! அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! (மக்கா அதுக்குன்னு டேஷ் ஆகிடணும்ன்னு நினைக்காதீங்க! எனக்கு சொல்றதுக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்கு அதான் கோடு போட்டு விட்டிருக்கேனாக்கும் நீங்களே அந்த கோட்டினையும் என்னோட ஆசையையும் பூர்த்தி செஞ்சுடுங்க!

ஒ.கே!

அடுத்து ஆப்பு வைக்கற மாதிரியான கேள்வி!5.
கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))


ஒளியில் மிளிரும் அனைத்தும் அழகானவைதான்
ஒலியில் ஒலிரும் அனைத்தும் அற்புதமானவைதான்!

ஒளியின்றி ஒலிக்கலாம் !
ஒலியின்றி ஒளிக்கலாம் !

முன்னதை விட பின்னது பார்க்க வெறுமையாய் இருக்கலாம்!
பின்னதை விட முன்னது கேட்க பெருமையாய் இருக்கலாம்!

முன்னதையும் பின்னதையும் பற்றி , (கண்ணால்) கண்டதையும் கேள்வியாக கேட்டால் நான் எண்ணத்தை எப்படி சொல்லமுடியும்!? பின் ஜொள்ளமுடியும்!?

ஆனாலும் கூட எனக்கு கிட்டதட்ட பல ஆண்டுகளாய் பிடித்தது ஒலியும் ஒளியும் தான்! (1984ல்லேர்ந்து வெள்ளிகிழமை தவறாம பாத்துருக்கேன்ல!)(மீ த எஸ்கேப்பூ! - ஷ்ஷ்ஷ் அப்பாடா! இன்னும் எவ்ளோவோ இருக்கு அதுக்குள்ள கேள்விங்கற பேருல ஆப்புவைத்த அண்ணனுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணா!)

அமீரகத்து அண்ணன் சென்ஷியிடம் நான் கேக்கப்போறேன் பாருங்க கேள்வி.......!

1.தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா?

2.பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும் உங்களின் நடவடிக்கைகள் எப்படி கட்டமைக்கப்பட்டு உருவானது என்று கடுமசொற்பிரயோகமின்றி பிரக்ஞையோடு சொல்லுங்களேன்?

3. லிஸ்ட் போட்டு வாசிக்கும் உங்களின் காதல்களில் ஏதேனும் உங்களை குழப்பியதுண்டா? அதாவது நினைவுகளில் வாழ்க்கையில் யார் முன்பு வந்தது யார் பின்பு வந்தது என்ற வரிசைகளில் மாறுதல்கள் இருந்தால் எப்படி நீங்கள் செக் செய்து கொள்வீர்கள்?

4.மீரா ஜாஸ்மீனுடன் நீங்கள் எண்ண அலைகளினூடாக சென்று பேசினால் என்ன பேசிக்கொள்(ல்)வீர்கள்?

இனிய ஞாயிறு - கொண்டாட்டம்!நினைத்து நினைத்து பார்த்தால்..
நெருங்கி அருகில் வருவேன்..
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ...
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..


எடுத்து படித்து முடிக்கும் முன்னே..
எரியும் கடிதம் உனக்கு கண்ணே..
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஒ..
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்..

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் ..
நமது கதையை காலமும் சொல்லும்..
உதிர்ந்து போன மலரின் வாசமா..
தூது பேசும் கொலுசின் ஒலியை..
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்..
உடைந்து போன வளையலின் வண்ணமா..
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்..
விரல்கள் உந்தன் கையில்..
தோளில் சாய்ந்து கதைகள் பேச..
நமது விதியில் இல்லை..
முதல் கனவு போதுமே காதலா..
கண்கள் திறந்திடு...

பேசி போன வார்த்தைகள் எல்லாம்..
உனது பேச்சில் கலந்தே இருக்கும்..
உலகம் அழியும் உருவம் அழியுமா..
பார்த்து போன பார்வைகள் எல்லாம்..
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்..

உனது விழிகள் என்னை மறக்குமா..
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்..
வந்து வந்து போகும்..
திருட்டு போன தடயம் இருந்தும்..
திரும்பி வருவேன் நானும்..
ஒரு தருணம் என்னடா காதலா..
உன்னுள் வாழ்கிறேன்...

கேரளம் - என் விருப்பம் நிறைவேறுமா...?

ஒவ்வொரு முறையும் எனது கேரளா சுற்றுப்பயணம் என் விருப்பதிற்கான தேடுதல்களுடனேயே ஆரம்பிக்கிறது!

ஒவ்வொரும் முறையும் என் எண்ணங்களில் இந்த விருப்பத்தினை எப்படி நான் தவறவிடுவேனோ...?! என்று தெரியவில்லை ஆனாலும் என்னால் இது நாள் வரையில் கேரளாவிலிருந்து செல்லும் சமயங்களில் நான் நினைத்த அந்த விருப்பத்தினை மட்டும் செய்யவே முடியவில்லை! ஆனாலும் கண்டிப்பாக மனதிற்குள் ஒரு எண்ணம் வளர்ந்தோங்கி இருக்கிறது எப்படியாகிலும் நான் இந்த விடுமுறை பயணத்தில் அந்த விருப்பத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்று முடிவுடனேயே இருக்கிறேன்! ஆண்டவன் கருணையும் கூட வேண்டி...!

நான் மட்டுமில்லைங்க, பெரும்பாலும் கேரளா சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கும் கூட இதே எண்ணம், இருக்கும் பலர் எண்ணத்தினை நிறைவேற்றி மகிழ்ந்திருப்பார்கள்! மகிழ்ந்துக்கொண்டும் இருப்பார்கள்!

என்னதான் நம் தமிழ்நாட்டிலும் கூட இந்த விருப்பத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றாலும் கூட, அந்தளவுக்கு கேரளாவின் தனித்தன்மையினை இங்கு நாம் காண்பது மிககடினம்!

எத்தனை எத்தனை அழகாய்....! வடிக்கப்பட்ட சிலையினை போலவே தோன்றும் அந்த உருவத்தினை வீட்டின் மையத்தில் (அதாவது ஹாலில்!) மாட்டி வைத்து பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் விஸ்வரூபமான உருவத்தில், நீங்களும் பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கும் அதன் மீது விருப்பம் வந்துவிடக்கூடும்!

மூங்கில் பட்டைகளினால் செய்யப்பட்ட காலண்டரின் வடிவினை ஒத்து இருக்கும் அந்த படம் -ஒவியத்தில் உயிர் கொடுத்தது போன்ற தோற்றத்துடன் அழகாய் நிற்கும் அந்த உருவத்திற்கு பெயர் கூட எனக்கு தெரியுமே..!

கேசவன்!குருவாயூரில் போய் கேசவன் ஆணை (யானை) அப்படின்னு சும்மா சொன்னாலே போதும் அங்கு இருக்கும் எண்டே தேசத்துக்காரர்களுக்கு ஒரு வித தெய்வபக்தி + மரியாதையோடுதான் அந்த யானையினை பற்றி பேசுவார்கள்!

அப்படி ஒரு ராஜ மரியாதையோடு இன்னும் உருவத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பெரிய உருவம் மறைந்தது 1976ல் தனது 72 வது வயதில் ஒரு நல்ல நாளில் கடவுளினை தும்பிக்கையினால் துதித்தபடியே ஆலய வாசலிலேயே அமரத்துவம் பெற்றது!

இன்றும் கூட கேசவன் படமிட்ட அந்த ஒவிய பதாகைகளுக்கும் பலத்த கிராக்கி உண்டு ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளுக்கு இணையான அந்தஸ்து பெற்றுள்ளது!

நம் தமிழ்நாட்டிலிருந்தும் கூட சுற்றுலா கேரளா செல்லும் மக்கள் கண்டிப்பாக இந்த ஒவியத்தினை வாங்கிவர மறக்க மாட்டர்கள்! அவ்ளோ பிரபலமாக நம் ஊர்களிலும் வீடுகளில் நீங்கள் காணமுடியும்!

இந்த வருடத்திலாவது கேரள சுற்றுபயணத்தில் என் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசையுடன்.....!


டிஸ்கி:-
என்னாடா..! திடீருன்னு கேசவன் மேல பாச மழை பொழியிறேன்னு பாக்குறீங்களா? ஒண்ணுமில்லைங்க இன்னிக்கு நம்ம தேசத்து தமிழ் நடிகை திவ்யா உன்னியோட நடனம் பார்த்துக்கிட்டே இருந்தேனா?

சரி அவுங்கள பத்தி எழுதலாம்னு யோசிச்சேன்! ஆனா பாருங்க பாவம் நல்ல நடிகை ஆனா சீக்கிரமே ஃபீல்டு அவுட்டாகிட்டாங்க!(இப்ப பரத நாட்டியம் ஸ்கூல் வைச்சு நடத்துறாங்களாம்!) சரி அவுங்கள பத்தி பேசி என்ன பிரயோசனம்ம்னு அவங்க பரத நடனத்தில் பின்புறம் ராஜ கம்பீரததுடன் நின்னுக்கிட்டிருந்த கேசவன் ஞாபகம் வந்துடுச்சி!

குங்க்ஃபூ பாண்டா :-)

டிஸ்கி:- இது விமர்சனம் அல்ல ஒரு வெளம்பரம் மட்டுமே!

போஸ்டர்ல அழகா போஸ் கொடுக்கிற பாண்டா கரடியை பார்த்ததுமே சரி ஏதோ வித்தியாசமாக இருக்கும்போல கண்டிப்பா போய் பாத்துடுவோம்னு ஒரு ஆசை வந்துச்சு!

பார்த்தாச்சு! - மனசுல கொஞ்சமா அந்த பாண்டா கரடியும் ஆக்கிரமிச்சிடுச்சு!

படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்குள்ளாற மனசுக்குள்ள ஒரு திக் பீதி! ஒரே கார்ட்டூன் கேரக்டர்ஸா போய்க்கிட்டிருக்கு! ஒண்ணுமே புரியல! ஆஹா ஏமாத்துட்டோம்டான்னு ஆகிப்போச்சு! சரி ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம் இல்லாட்டி போய் நல்லா ஒரு தூக்கம் போடலாம்னு நினைச்சு முடிக்கும்போது டமாருன்னு அந்த பாண்டா கரடி தூக்கத்திலேர்ந்து கீழ விழ - கனவாம் அதுல பழங்காலத்து சண்டை காட்சியாம்!

அழகான ஆசையாக சிரிக்க வைத்து பார்க்க வைக்கும் பாண்டா கரடி கேரக்ட்டர்! மற்றும் இன்ன பிற கேரக்டர்களும் உண்டு!


சொல்லிக்கொள்ளுமளவுக்கு மிகப்பெரிய காமெடி சீன்கள் கிடையாதுன்னு சொன்னாலும் கூட கண்டிப்பாய் சிரித்த முகத்துடனேயே உங்களை பார்க்க வைக்கும் படம்!

பாண்டா கரடியின் சண்டைகாட்சிகள் ரசிக்கவைக்கும் விதமாகவும் அதே சமயத்தில் சிரிக்கவும் வைத்திருக்கிறது! குறிப்பாய் அந்த பயிற்சி களத்து மாஸ்டருடனான சண்டை காட்சியும் கிளைமாக்ஸும் கலக்கல் கிராபிக்ஸ்த்தான்!

குழந்தை படங்கள் என்றால் பயங்கர முகத்துடன் படம் பார்த்து முடித்தபின்னும் பல வருடங்களுக்கு பயப்படவே வைக்குமான வில்லன் கேரக்டர்கள் கிடையாது! அதனால் பயப்படாமல் குழந்தைகளை பார்க்க வைக்கலாம்!

கலங்கலான தண்ணீரில் தெரியாத விஷயங்கள் நீர் தெளியும் போது தெரியும் போன்ற சின்ன சின்ன ரகசியங்களும், அவ்வப்போது தெளித்துப்போகும் நம்பிக்கை வரிகளில் வாழும் வாழ்க்கையின் நியதிகள்! ( ஒண்ணுமே இல்லை அப்படிங்கறதுதான் படத்துல டாப் சீக்ரெட் ஆன விஷயமே!)

எந்த வயசுக்காரர்க்ளும் சென்று படத்தை பார்க்கலாம் - சிரிக்கலாம் !

கிட்டதட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிறதாம்!

படம் தவிர்த்து, மற்ற சிறப்பு செய்திகளாக படத்தில் வரும் பிராணிகளுக்கு பின் குரல் கொடுத்திருப்பது மிக பிரபலமான நடிகர் நடிகைகள் - ஜாக்கி சான், ஆஞ்சலினே ஜூலி மற்றும் இன்ன பிற ஹாலிவுட் சமூகங்கள்!

தனது பலவீனங்களையே பலமாக மாற்றி எதிரியை பந்தாடுவதுதான் படத்தில் பாண்டாவின் கதாபாத்திரத்திற்கான கரு!அதற்கேற்றார்போலவே தொப்பையையும் குண்டான உருவத்தையும் முன்பு பலவீனமாக காட்டும் முயற்சிகளில் நன்றாகவே சிரிக்க வைத்துவிடுகிறார்கள்! (முதல் காட்சியிலேயே மல்லாந்து கிடந்துக்கிட்டு திரும்ப எழுந்திருக்க முடியாம திணறுவதை பார்த்தும் நல்லா சத்தமா சிரிச்சுப்புட்டேங்க...! அட நம்மள மாதிரியே எந்திரிக்க முடியாம தவிக்குதேன்னு!)

கிட்டதட்ட 1.15 நிமிடங்களுக்கான படம்! பார்க்கும் நேரத்தில் பெரும்பான்மையான நேரம் மனதில் மகிழ்ச்சியையும் மெல்லிய புன்னகையையும்

வரவழைக்கும் காட்சிகள்! சிம்பிளா சொல்லணும்னா போய் பாருங்க டயம் போறதே தெரியாது அவ்ளோதான்! ஆனா மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் உங்களின் குழந்தைகளோடு...!

ச்சும்மா ஒரு டிரெயிலரும் வேணும்னா பாருங்களேன்!


நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?

நீங்கள் இணையத்தில் இருக்கும் காலங்களில் அதிக தேடி தேடி SEARCHல் ஈடுபடும் ஆளா?

அல்லது அவ்வப்போது இணையத்திற்கு வந்துச்சென்றாலும் எதாவது தேடுவதற்காகவே வரும் ஆளா நீங்கள்?

உங்களுக்குத்தான் இந்த செய்தியை நான் முதலில் சொல்லவேண்டும்!

தேடிக்கிடைப்பதில்லை

என்று

தெரிந்த ஒரு செய்தியை,

தேடிப்பார்ப்போம் என்று

தேட தொடங்குகையில்

கூகுள் உங்களுக்கு கைக்கொடுக்குமல்லாவா!

அந்த கூகுளாண்டவர் மற்றுமொரு வரமாக தன் பக்கத்தில் ஒரு பாகத்தினை உலக சுற்றுசுழலுக்கு நிதி திரட்டி சேவை செய்வதற்காய் கொடுத்திருக்கிறார்!


அந்த பக்கத்திற்கு சென்று நீங்கள் சர்ச்சில் ஈடுபடும்போது உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் உங்களை மகிழ்விக்கலாம்! ஆனால் அதே சமயத்தில் உங்களின் கிளிக்குகளால் கிடைக்கும் விளம்பர வருவாய் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ அமைப்புக்களுக்கு நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டும் உலகின் சுற்றுசுழல் இயற்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்! அது எப்படின்னு இங்க கொஞ்சம் சொல்லியிருக்காங்க இன்னும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில் கொடுக்கவும் தயாராகவே இருக்காங்களாம்!


சரி இதுல போய் நாம சர்ச் பண்றதால கூகுளை மாதிரியில்லாமல் தகவல்களை பிழையாக தருமோ அப்படின்னெல்லாம் நீங்க பயப்பட வேணாம் ஏன்னா? நம்ம கூகுள்ல இருக்கற அதே மெனுக்கள்தான் இதுலயும் இருக்கு ஜஸ்ட் ஸ்கின் மாத்தின டெம்ப்ளடேதான் ஸோ வர்ற ரிசல்ட்கள் எல்லாம் கூகுளாண்டவரிடமிருந்துதான்!

இனி உங்களுக்கு 'சர்ச்'சில சிக்கறதுக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம்,

இங்க போய் வார்த்தைகளால் வலை விரிச்சு காத்திருக்க முயற்சிக்கலாமே....!

கண்டிப்பாய் நல்லது நடக்க நாமும் காரணமாக இருக்கலாமே...!

பென்சில் :-)


இந்த ஆயுதத்துடனான என் ஆட்டம் தொடங்கியது அனேகமாக 6வதோ அல்லது 7வதிலிருந்தோதான் இருக்கும் என நினைக்கிறேன்! ஏன்ன அப்பத்தான் நாங்க அன்னிய மொழி கற்க ஆரம்பித்திருந்தோம் அதாங்க ஆங்கிலம்ன்னு சொல்லுவாங்கள்ல, அட நம்ம இங்கீலீஸுங்க!

இரட்டை வரி நோட்டுல அழகா A B C D எழுத ஆரம்பிச்ச நேரம்தான் எனக்கும் பென்சிலுக்குமான முதல் தொடர்பு! அப்ப தெரியாது கடைசி வரைக்கும் நாந்தாண்டா உன்கூட கண்டினியூவா வரப்போறேன்னு அந்த பென்சில் சொல்லியிருக்கும்போல!

அதன் பின்னர் எல்லா வகுப்புகளிலும் கண்டிப்பாய் பென்சில் இருக்கவேண்டும் என்று உத்தரவு போட்ட ஆசிரியர்கள்!

ஆங்கில கிராமர் எழுதிப்பழக,(படிச்சிருக்கோம்! படிச்சிருக்கோம்!!))

தமிழ் மனப்பாட பாடல்கள் படித்துக்கொண்டே எழுதிப்பழக,

கணித வகுப்புகளில் கண்டபடி கிறுக்கி கணக்கிட.

அறிவியலில் படம் வரைந்து பாகங்களை குறிக்க ( படத்தை வரைஞ்சுட்டு பாகத்தை வேற இடத்துல குறிச்சு வைச்சதால பொளோர்ன்னு அறை கொடுத்த அந்த சயின்ஸ் வாத்தியை ( கோவம்!) மறக்கமுடியுமா?)

வரலாற்றில், வரவே பயப்படும் காவிரியிலிருந்து கண்ட ஆறுகளையும் தமிழ்நாட்டுக்குள் ஓடவிட்ட நாட்கள்! ( இந்தியா மேப்ல ஆறுகளை குறிங்கடான்னு சொன்னதுக்கு எல்லா ஆறையும் அப்போ எனக்கு தெரிஞ்ச நாடான தமிழ்நாட்டுக்குள்ளையே வரைஞ்சு வைச்சிருந்தேன்ல!)

இப்படியாக இன்ப துன்பமனைத்தையும் அள்ளி நோட்டுப்புக்கில் தெளிக்க காரணமாயிருந்த பென்சில்லுக்கு அடுத்த புரொமோஷன் படம் வரையறது!

பாலிடெக்னிக் போனா அங்கயும் முதல்லேர்ந்து விதவிதமாக திரும்பவும் அன்னிய மொழியினை அலங்கரிக்க சொல்லி வற்புறுத்திய அந்த வாத்தி (கோவம்!)

சரின்னு பொறுத்துக்கிட்டுத்தான் அந்த வேலையும் செஞ்சோம்! ஆனா பாருங்க ஒரு நாள் அந்த வாத்தியாரு வன்முறையில என் பென்சிலை ஈடுபடுத்த வைச்சுட்டாரு!

தொடரும்....!

(இப்படித்தான் போட்டு அடுத்த பாகத்துல அதிக ஆர்வத்தோட சொல்லலாம்ம்னு நினைச்சேன் பட்..! ரெண்டு வரிக்கெல்லாம் தனியா ஒரு பதிவு போட்டா அடி விழும்னு அண்ணன்களெல்லாம் பயமுறுத்துனதால இப்பவே சொல்லிக்கிறேன்!)

ஒரு நாள் அதே டிராயிங்க் கிளாஸ் அதே வாத்தி! பட் எங்களுக்குள்ள ரெண்டு பேர்கிட்ட பென்சில் மிஸ்ஸிங்க்! என்ன பண்றதுன்னு ஒரே ரோசனை ரோசனையா வருது! சரி சமாளிப்போம்ன்னு ப்ரெண்டுகளுக்கிட்ட இருந்த பென்சிலை எடுத்து உடைச்சிட்டோம்! ஆனா எந்த நாயுமே ஷார்ப்னர் வைச்சிருல்ல! (கிளாஸ்ல நாங்க மொத்தமே 12 பேருதாம்ல) சரி திரும்பவும் சமாளிப்போம்னு கொஞ்சமா கடிச்சி கருப்பு கிராபைட் தெரியுற அளவுக்கு ரெடி பண்ணிக்கிட்டு சும்மா பாவ்லா காட்டிக்கிட்டு உக்காந்திருக்கோம்!

ஆனா இதை கரெக்ட்டா கண்டுபிடிச்சு வந்தாரு எங்ககிட்ட வாத்தியாரு (எப்படித்தான் கண்டுபிடிப்பாய்ங்களோ!)

வாத்தி:- என்னாடா இது?

கோரஸ்:- சார் பென்சில் சார்!

வாத்தி:- .கே எங்க டிப்பை காணும்?

கோரஸ்:- வரையலாம் சார்!

வாத்தி:- இங்க கொடு! வாங்கி பார்த்துட்டு,அவரு பையில இருந்து ஒரு பென்சில எடுத்து காட்டி இப்படி இருக்கணும் ஷார்ப்பனரை யூஸ் பண்ணி நல்லா சீவி இப்படி ( என் கையை டக்கென பிடித்து ) குத்தி பார்த்தா....! தோ பாரு இப்படி ரத்தம் வர்ற அளவுக்கு ஷார்ப்பா இருக்கணும்ன்னுட்டு போய்ட்டாருங்க!

இதுதான்ய்யா தேன் கிண்ணம்!

கடுமையான வேலையாகிப்போயிடுச்சு இன்னிக்கு ஆபிஸ்ல :-(

சரி நாமளும் ஆபிஸ்ல அப்பப்ப வேலை பாக்குறோம்முனு தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிச்சு அதை ஆவணப்படுத்தியே ஆகணும்னு ஒரு யோசனையில் இந்த ஆவணப்படுத்தலினூடாகவே தமிங்கிலீஸ் அரங்கேறியது!

ஒரு வழியாக ரொம்ப திருப்தியுடன் நான் செய்த அலுவலக பணியும், ஹெட்டின் GOOD டோடு நலமாக முடிந்தது!

சரிடாப்பா ஒரு சாங் பாடிக்கலாம்னு நினைக்கறப்பவே தானாகவே முணுமுணுத்த பாடல்தான் இது! அட நம்ம நண்பர்களுக்கும் சொல்லுவோம் இந்த விஷயத்தை அப்படின்னு இந்த போஸ்ட்டு வேற (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!)

நம்ம தமிழ் பதிவுலகில் தேன் கிண்ணத்து தேனீக்களும் சும்மா அசத்திக்கிட்டுத்தாங்க இருக்காங்க அப்படின்னு சொல்றதுக்கும் கூட...! ஆமாங்க சும்மா ஒரு லைன் போட்டு கூகுளாண்டவரை வேண்டுனா அப்படியே பறந்து வந்து நிக்கிறாங்கங்க!

நன்றிகள் + வாழ்த்துக்கள் தேன் கிண்ணம்!

முணுமுணுத்த பாட்டையும் நீங்க கேட்டுக்கிட்டு போங்க ப்ளீஸ்!இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

(இன்றைக்கு)

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
(இன்றைக்கு)

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

(இன்றைக்கு)

நன்றி தேன்கிண்ணம் - கப்பி!

இங்க பாட்டு பார்க்க முடியாதவங்க இங்க போயும் பார்க்கலாம் ஆனா எப்படியும் பார்க்கணும் கண்டிப்பா ஒ.கே!

சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

கோவையில் - ஒரு குழுமாய் இவர்களின் பணி!

ஒவ்வொரு நாளும் மாலை 8.00 மணிக்கு கூடும் இவர்களின் சேவை சிறப்பு வாய்ந்தது!

இவர்களின் இந்த சேவைக்கு விளம்பரமில்லை வெற்றுக்கூச்சல்கள் இல்லை ஏன் பெயரே இல்லை!

உறுப்பினர்கள் என்று யாரும் கூறிக்கொள்வதில்லை அன்றாடம் யாருமே வந்து இந்த சேவையினை செய்ய முடியும்!

யாரும் பிறரிடமிருந்து பணம் எதிர்பார்பதில்லை தம் பையில் இருந்தே பணத்தினை எடுத்து போட்டு செய்கிறார்கள்!

அடாது மழை பெய்ந்தாலும் கூட இவர்களின் சேவை தொடர்கிறது!

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் தொடங்கி, கோவை நகர்ப்புறங்களின் முக்கிய இடங்களில்,
வாழ்க்கையே வாழ்ந்து தொலைத்தவர்கள்,
வாழ்க்கையை தொலைத்து வாழ்பவர்கள்
வாழ்க்கையை விட்டு விலக நினைத்து தொலைந்துப்போனவர்கள்
என பலரின், ஒரு வேளை உணவுக்கு உதவுகிறார்கள் இந்த மனிதருள் மாணிக்கங்கள்!

ஒவ்வொரு முறையும் இது போன்ற மனிதர்களை பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும்,மற்றும் சாலையோரங்களில்லும் காணும்போது எனக்கு தோன்றிய வினாவுக்கு “இவர்களின் உணவு உறைவிடம் என்ன? இவர்களின் குடும்பம் இப்போது எப்படியிருக்கும்? “ என்ற வினாக்களின் உணவுக்கான விடையாக இது போன்ற சேவை மனிதர்களின் செய்திகளால் நிறைவுபெற்றாலும் பல கேள்விகள் பதிலின்றியே தொடர்கின்றன!

இந்த சேவைக்காக யாரிடமும் சென்று பணம் கேளாமல் தானாகவே முன்வந்து உதவுபவர்களின் நல் உள்ளங்களின் ஆதரவோடு செய்லபட்டுக்கொண்டிருக்கிறார்கள்! பெரும்பாலும் பல நல் உள்ளங்கள் தம் குடும்பத்தின் நிகழும் சுப நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக இந்த சேவைக்கென சிறிதளவும் பணம் கொடுத்தும் உதவிக்கொண்டிருக்கிறார்களாம்!

முன்பு நான் படித்த செய்தியும் பின்பு பிஐடியில நான் பார்த்திருந்த என்னை பாதித்த படத்தினாலும் கூட இந்த பதிவு ! - சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

ஏப்ரல் மாத போட்டியில் வெளியான கோமாவின் பதிவின் படத்தினை இத்துடன் இணக்கிறேன்!

கீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்...

அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே!
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே!
போகும்போது வேறுபாதை போவதில்லையே!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...!உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

*********************

நன்றிகளுடன் நினைவில் வைத்து வணங்குகிறோம் கவியரசு கண்ணதாசனை !

வாழ்க நின் புகழ்!

கலர் பார்க்க போகலாமா?

கலர் பார்க்க போகலாமா? அப்படின்னு ஒரு கேள்வி வந்தாலே போதும் பயபுள்ளைங்க எல்லாத்துக்கும் மனசுக்குள்ள மத்தாப்பூ சிறகடிச்சு, சிரிப்பு சிரிப்பா பறந்து வரும்!

நான் ரெடி நீ ரெடின்னு நிப்பானுங்க! ஆனா பாருங்க எவனுக்கும் அப்ப எந்த வேலையிருந்தாலும் சரி அதைப்பத்தியெல்லாம் அப்பவே மறந்துடுவானுங்க!

கலர் பாக்குறதுன்னா அம்புட்டு இஷ்டமாக்கும்!

தீபாவளி பொங்கல் நியூ இயர்ன்னு வந்துட்டா போதும் தினமும் கடைத்தெருவுக்கு போய்ட்டு வரதுக்கு எல்லாம் ரெடியா நிக்கும் அதுவும் பாருங்க சொன்ன டைம்முக்கு ஒரு மணி நேரமு முன்னாடியே வந்து நின்னுப்பாங்க! (எக்ஸாமுக்கு குரூப் ஸ்டடி போடணும்னா சொன்னா வாட்சை மறந்திட்டேன்னு சொல்ற பயலுக!)

மாசத்துக்கு ஒரு நாளாச்சும் இப்படி கலர் பார்க்க போகலைன்னா ஒருத்தன் முகத்தை ஒருத்தன் ரொம்ப ஏக்கமா பாத்துக்குவானுங்க! அந்த மாதிரி சமயங்களில் சரி பாவம் போகட்டும் நாம இன்னிக்கு இவுங்களை அழைச்சிட்டுப்போவோம்னு ஒரு பரிதாபத்தோட அழைச்சுட்டு போகவேண்டிய சூழல் நிறைய வந்திருக்கு எனக்கு!

சரி பாவம் பார்த்து அழைச்சுப்போறோமே நாம பாக்குற கலர்களை பத்தில் எதாச்சும் சாதகமா சொல்லுவானுங்கன்னு பார்த்தா ஆயிரம் நொள்ளை சொல்லியே, ஏண்டா இவனுகளை அழைச்சிட்டு வந்தோம்முனு நொந்து போற அளவுக்கு என்னைய பேசியே சாகடிச்சிடுவானுங்க!

சரி அவனுங்க பாக்குற கலர்களை பார்த்த நம்ம மனசுக்கு மேட்சே ஆகாது அவ்ளோ கொடூரமா இருக்கும் கேட்டா இதுதாண்ட்டா இப்ப ஸ்டைலு டிரண்டு அப்படி சொல்லியே எஸ்ஸாகிடுவானுங்க!

எனக்கு எப்பவும் வெள்ளைத்தான் பிடிக்கும்! ஆனா பாருங்க படுபாவிங்க ஒரு நாள் கூட, உனக்கு வெள்ளை மேட்சே ஆகாது அத போய் எப்படிடா நீ அவ்ளோ லைக் பண்றேன்னு ஒவர் நக்கலு வேற! வேணும்னா லைட் கலாரா டிரைப்பண்ணி ப்பாருடான்னு அட்வைஸ்!

இப்படியா எனக்கு பிடிச்ச கலர் அவங்களுக்கு பிடிக்காம போக அவுங்களுக்கு பிடிச்ச கலர் எனக்கு உவ்வேக் வர வைக்க சில சமயம் பெரிய வாக்குவாதமாககூட ஆகிப்போய்டும் அந்த மாதிரி சமயத்திலதான் கடைக்காரான் சொல்லுவான்

ஏம்ப்பா நீங்க டிரெஸ் எடுக்க வந்தீங்களா? இல்ல எங்க கடையில சண்டை போட வந்தீங்களா போங்கப்பா போய் முடிவு பண்ணிட்டு பிறகு வாங்க்ப்பான்னு சொல்லுவான்! ( நிறைய தடவை திட்டியிருக்காங்க பட் நாம எப்பவும் பொது ஊடகங்களை நல்ல மாதிரியான சூழ்நிலையிலதானே அறிமுகப்படுத்தணும்!)

சரி வாங்க இப்ப கலர் பாக்கலாம்!ஆமாம் நீங்க நினைச்ச கலர் இதுல இல்லைல்ல! ???

சிலப்பதிகாரம்- வாழ்தல் வேண்டி!


ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் ஆரம்பிக்கும் முதல் தமிழ் பாடவகுப்பில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடலினை படித்து ஒப்பித்து பின் எழுதிகாட்டவேண்டும்!

இது எங்க தமிழாசிரியர் போட்டிருந்த ரூல்ஸ்!

புத்தகத்தினை முன் பக்கம் வைத்துத்துக்கொண்டு சம்மணமிட்டு உட்கார்ந்து விழுந்து விழுந்து படித்த பாடல்களில் ரொம்பவும் அதிகமாகவே படித்த பாடல் இது!

காரணம்:

ஆசிரியர் குரல்: டேய்....! இது நம்ம பக்கத்து ஊர்ல நடந்த விஷயம்டா! நாளைக்கு நீங்க எருமை மாடாட்டம் வளர்ந்து நிக்கும்போது யாராவது கேட்டாங்கன்னா சொல்ல தெரியணும்ல அதனால ஒழுங்கா நல்லா கரீக்டா படிச்சு படிச்சு வைச்சுக்கோங்கடா..!

அதனாலேயே இந்த சிலப்பதிகாரமும் கொஞ்சம் மணிமேகலையும் நன்றாகவே மனப்பாடம் செய்து வைத்திருந்தோம் அப்போது!

சும்மா லேசா எந்த பையனிடமும் லேசா தட்டி தேரா மன்னா அப்படின்னு சொன்னாலே போதும் பெண்ணணாங்கேல முடிச்சுட்டுத்தான் மூச்சு விடுவானுங்க! அந்தளவுக்கு உள்ளுக்குள்ள கொண்டுப்போயாச்சு! ( பின்ன தூக்கத்தில எந்திரிச்சு கேட்டாலும் சொல்லணும்டான்னு வேற ஆசிரியர் சொல்லியிருக்காரே!)


தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே


ஆனா பாருங்க..! இன்னிக்கு வரைக்கும் இருக்கற ஒரே சந்தேகம்! ஏன் பரீட்சைக்கு, இருக்கற மத்த வரிகளையெல்லாம் விட்டுப்புட்டு சரியாக முடியறதுக்கு முன்னாடி உள்ள பாடல் வரிகள் அதுவும் குறிப்பாக இந்த வரிகளை மட்டும் எடுத்து படிச்சுட்டு வந்தோம்னு தெரியலப்பா?

இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்!

உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லி கொள்ள யாருமில்லை யாருமில்லை....!


எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 1


ஒருவருடைய வாழ்வையும், வளத்தையும் நிர்ணயிப்பது அவரது சிந்தனையே. மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை எண்ணினால், அலைக்கழிக்கப்படும் மனதை எந்த நிலையிலும், எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.

இந்த உலகில் இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிர் உண்டு என்பதை உணர வேண்டும். குறிப்பாக மனித உயிரை மதிக்க வேண்டும். மனிதநேயத்தைப் பேண வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து வீண் வாதம் செய்யத் தேவை யில்லை.

நானே அனைத்தும் அறிந்தவன்; எனக்கு நிகர் எவருமில்லை என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். நான் என்ற அகந்தையை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும்.

சமூகத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற தேவையற்ற சர்ச்சையை விடுத்து, சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் நமது பணிகள் அமைய வேண்டும்.

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். உயர் நிலையில் உள்ளவர்கள், தமக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் இன்முகத்துடன் பழக வேண்டும். அனைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.அவ்வாறு அவர்களிடம் அன்பு காட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது. பிறருக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யவே கூடாது.

நாம் பேசும் வார்த்தைகள் பிறரது இதயங்களில் இதமளிக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, ரணங்களை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது.

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று நாம் செலவழித்துக் கொண்டிருக்கும் நாள் மீண்டும் திரும்பப் போவதில்லை. எனவே இன்றைய நாளை இனிய நாளாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல செயல்களைச் செய்ய எண்ணும் போது, எந்த ஒரு நாளையும் தேவையற்ற நாள் என கழிக்கக் கூடாது.

திட்டமிடலே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம். திட்டமிடாத வாழ்க்கை அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போன்றதாகும்.திட்டமிடலுக்கு அடிப்படை நல்ல எண்ணங்களே. நம்மால் எதையும் செய்ய முடியும்.

இதை உறுதியாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


நன்றி - தினமணி

அழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி!மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "அவுஸ்திரேலியா"
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!
அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புழுதி மண்" வாசம்தான்!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!

ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.

என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!

என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பாயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"

என்ன வேண்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.


வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!

காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உணர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்,
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!

ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்கள் தாயகத்தில் தான்.

அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?

"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"
ஐயா...!
அழுதாலும் விளங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!இன்று ஜூன் 20 - அன்னை மண்ணிலிருந்து வெளியேறி அடைக்கலமான மக்களினை பற்றிய செய்திகளை உலக்குக்கு சொல்லும் நாள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் தம் உறவுகளை உடைமைகளை விட்டு பிரிந்து, மற்றைய நாடுகளில் வாழ்ந்துவரும் எண்ணற்ற மக்களின் உணர்வுகளில் இருக்கும் தாய்மண்ணின் கனவுகள் நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்!

கவிதை ஆக்கம் :- தமிழ்பொடியன் @ தமிழ் சிட்னி

பரிந்துரை செய்த கானா பிரபாண்ணாவுக்கு நன்றி!

சோதனை - பதிவாய்....!


சில நேரங்களில் சில குண்ங்க(ளால்)ளில் ஏற்படும் மாற்றங்கள்!

நம்மை எங்கேயாவது கொண்டு செல்லும்

அல்லது எங்கயோ கொண்டு செல்லும்!

சில நேரங்களில் துன்பங்களாலும்
சில நேரங்களில் இன்பங்களாலும்
இச்செயல் நடைப்பெறும்!
அப்படியான சமயங்களில்,
உங்களுக்கே பல எண்ண அலைகள் எழும்பியிருக்கும்!

சாதரண மானிட வாழ்வில் ஈடுபாடு கொண்டதால்,
அன்பில் அடங்குவதால்
பண்பில் மற்றவர்களை பணிய வைப்பதால்,
சமூக பிரக்ஞைகளில் சஞ்சரிப்பதால்,
சில எண்ணங்கள் சிதறிப்போய்விடும்
அல்லது
நம்மை விட்டு உதறி போய்விடும்!

இப்படியில்லாமல் மிக உன்னத நிலைக்கு செல்ல செய்ய வேண்டிய விஷயமாக ரமணர் சொன்னது தான் நான் யார்?

ஒரு சில மணிநேரங்களில் தனிமையில் உங்களைபற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தால் உங்களுக்கும் தோன்றும் கேள்விதான்..

நான் யார்?
நான் யார்!
எங்கிருந்து வந்தேன்?
என்ன செய்கிறேன்?
எங்கு செல்ல போகிறேன் ?

என்று கன்...........................................டினியூ ஆகும்
விடை தெரியா வினாக்கள்

(இது எனக்கான சோதனையா இல்ல படிக்கிற உங்களுக்கு சோதனையான்னு சொல்ல தெரியலப்பா :-))

மாசறு பொன்னே வருக!

வலைச்சர வாரத்தில் சொல்ல நினைத்து சொல்ல மறந்த விஷயங்கள் நிறைய இருக்குங்குங்க!

எனக்கு ரொம்ப பிடிச்ச, உங்களுக்கும் கூட பிடிக்கும்னு நான் நினைக்கிற விஷயங்கள் நிறைய! இப்போதைக்கு அதுல ஒண்ணு!

மனத்திற்கினிய பாடல்! கண்டிப்பாக பாடலின் படம் எல்லோருமே தெரிந்திருக்ககூடிய பிரபலமான படம்தான்! இந்த பாடலின் மீது இவர் கொண்ட ஈடுபாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாய் மிக்க விருப்பத்துடன் இதற்கு விளக்கம் எழுதிக்கொடுத்த அய்யா குமரன் அவர்களுக்கும் நன்றி!

பாடல் பெற்ற தளத்தினை காண கீதம் சங்கீதம்!


மாசறு பொன்னே வருகமாசறு பொன்னே வருக!
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக!
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும்
குளிர்நிலவென நீலவிழியும்
பிறைநுதலும் விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு)

நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம் இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் மாகாளி உமையே!
கருமாரி மகமாயி காப்பாற்று எனையே!

பாவம் விலகும் வினையகலும்
உனைத்துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...! (அவ்ளோ சீக்கிரத்தில விட்டுடுவோமா???)

கானா பிரபாண்ணே! உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இந்த பாடலை + வீடியோவோடு சேர்த்து வீடியோஸ்பதியில எல்லோருக்கும் போட்டுக்காட்டணும்ங்கறதுதான் என்னோட வேண்டுகோள்!

தசாவதாரம் @ கத்தார்!கொஞ்சம் தமிழ்!

கொஞ்சம் கொல்ட்டிஸ்!

கொஞ்சம் இலங்கை சிங்களம்!

கொஞ்சம் இலங்கை தமிழ்!

நிறைய மல்லுக்களோடான...!

எனது தசாவதார திரைப்படம் பார்க்கும் கனவு நனவாகியது -நேற்றிரவு !

படம் பற்றிய பதிவுகள் ஏற்கனவே அலசி ஆராய்ந்து துவைச்சு காயப்போட்டுவிட்டு போய்விட்டன (சில காயப்படுத்தியும் போய்விட்டன!)அதனால அதையெல்லாம் திரும்பவும் இங்க பண்ண வேணாம்!


படத்தில் பிடித்தது :-

1.அறிமுக காட்சியில் அசத்தும் ஒளிப்பதிவாளர்!

2.ஆக்ரோஷமாக அறிமுகமாகும் கமல்.

3. முகுந்தா முகுந்தாவில்,மிருதங்கத்திற்கு வலிக்காமல் வாசிக்கும் கிழவி கமலின் கிரியேடிவிட்டிகளாக அசத்தும் பொம்மலாட்டங்கள்!

4. பல்ராம் நாயுடு கேரக்டர் செட்டானதுமே கதைக்களத்திலிருந்து கண்டிப்பாய் ஒரு தைரியம் கிடைத்திருக்கும், தொடங்கலாம் படப்பிடிப்பை என்று...! - கலக்கல் கேரக்டர்!

5.உதிரம் சொட்டும் உழைப்பில் கமல்!

6.சுனாமி அழிவுக்குப்பிறகு போர்க்கால நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை படத்தில் காட்சிப்படுத்தியது நல்லவிஷயம்! ( அதே நேரத்தில் நானும் அரசு ஊழியனாக போர்க்கால நடவடிக்கைகளில் பங்குகொண்டதன் ஞாபகங்களோடு இந்த செய்தி!)

7.ஓ ஓ சனம் ஓ சனம் - பாடல்கள் இல்லாத நீண்ட இடைவெளிக்குபபிறகு வரும்போது கொஞ்சம் நல்லா இருக்குன்னு நினைக்க தோணுது! ( வழக்கமான கமல் டான்ஸ்!)

8. ஒவ்வொரு கேரக்டர்களுமே நானே ஒவ்வொருமுறையும் உறுதிசெய்துக்கொண்டு இவரும் கமல்தான் என்று பக்கத்து சீட்டுக்கு சொல்லவேண்டிய சூழல் (அந்த பன்னு மாதிரி இருக்கும் ரப்பர் மேக்கப் வைச்சுத்தான் நானே கண்டுபிடிச்சேனாக்கும்!

9.மிகக்கவனமாய் காட்சிகளில் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவங்கள்! (சிதம்பரம் பஸ்ஸை புடிச்சுக்கிட்டேத்தான் காய்கறி வண்டியில போறாங்கங்ன்னா பாருங்களேன்!)

10.கமலுக்கே கிடைக்காத வாய்ப்பு கே.எஸ் ரவிக்குமாருக்கு கிடைத்தும் கூட (அதாங்க வெளிநாட்டு நடன அழகிகள்) அவர் பாடகர் மாதிரி மைக் வைச்சுக்கிட்டு தனியா ஆடறாருங்க!

11.Nacl ஒரு பாம் போட்டு அந்த வைரஸ கெளப்பிடலாமான்னு புஷ் கமல் கேட்க அதற்கு நக்கலாய் சிரிக்கும் அந்த உதவியாளர் சும்மா நச்சுன்னு இருக்கு!

12.கருப்பு வைரமாய் மின்னும் கமல் சூப்பர்! - ஆனாலும் கூட சில தேவையற்ற வசனங்களும் கூட உண்டு!

இவ்ளோ உன்னிப்பா பார்த்தேனாக்கும்!

அமெரிக்காவுலேர்ந்து பார்சல்ல வந்து சட்டை மாத்த கூட நேரமின்றி சுத்திக்கிட்டே இருக்கும் அந்த கமலுக்கு செல்போனுக்கு பாஸ்கர் போன் பண்ணி கடத்திவைச்சுருக்கற சேதியை சொல்றது - யாரோ ஒரு அசிஸ்டெண்ட் சொதப்பிட்டாரு போல! - இது போன்றே நிறைய காட்சிகள் - லாஜிக் இல்லாத மேஜிக்காக!

ரத்ததின் ரத்தமாக போறீங்களேன்னு? கேள்வி கேட்க்கும் கமல்,அதற்கு எங்க என்னது? என்று பதில் கேள்வி சொல்லும் கமல் (ஆஹா பீதியை கிளப்புறாங்கப்பா!)

யோசிச்சிக்கிட்டிருக்கற விஷயம்!

மணல் மாஃபியா பற்றிய செய்திகள் நடப்பதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கும் காட்சிகளை,படத்தினை நம் முதல்வர் பார்க்கும்போது என்ன தோணும் அவருக்கு? ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது இந்த அதிரும் செய்தியினை அறிய செய்யும் எனில் அதுவும் படத்துக்கு கிடைத்த ஒரு வெற்றித்தான்!


சோகம்!

come dance with me before you goன்னு எண்ட் ஸ்கீரின் போடற கடைசியிலதாங்க ரவிக்குமார் கூப்ப்பிடறாரு! கொஞ்சம் முன்னாடி கூப்பிட்டிருந்தாருன்னா அந்த வெள்ளைக்கார அழகிகள்கூட சேர்ந்து ஒரு டான்ஸ் ஆடியிருந்துருக்கலாம்!


மொத்தத்தில்....!

படம் பற்றிய தனது எண்ணங்களை ஆர்வமுடன் பகிர்ந்துக்கொள்ளும் தலைவரின் இந்த ஆர்வத்தோடு படத்தினை சென்று பாருங்கள்!


வீழ்வது யாராகினும்!

வாழ்வது நாடாகட்டும்!

உடல் பூமிக்கே போகட்டும்

தமிழ் பூமியை ஆளட்டும்!!!(ஹலோ மக்களே! எல்லாருக்கும் கேக்கிற மாதிரி சொல்லிக்கிறேன்ப்பா நானும் பிளாக்கர்தான்! நானும் பிளாக்கர்த்தான்!)

முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

கடலூரில் நடைப்பெற்று முடிந்த திமுக மகளிரணி மாநாடு!

முன்னிறுத்தப்பட்டிருக்கும் மூவர்!

இவர்கள் - இளையவர்கள்!தமிழக அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களாய்...

வாழ்த்தி வரவேற்போம் இளையத்தலைமுறைகளை...!


(அப்பாடா...! நானும் நடைமுறை அரசியல் பத்தி பதிவுல எழுதிட்டேனே...........!!!)

மேரியும் நானும் - உண்மையை சொல்கிறேன்!

எப்பொழுதிலிருந்து என்பது இன்னும் திட்டவட்டமாக தெரியவர மறுக்கிறது! ஆனாலும் கூட என்னோடான ஈர்ப்பு சரியாக மினிமம் 15 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்!

நடுவில் சில காலங்கள் மேரியை காணாமல் நான் துடித்து போவதை பார்த்து மேரி ஒரு நாளும் கவலைப்பட்டதாகவே எனக்கு தோன்றவில்லை! தானுன்டு தன் பணி என்பதிலேயே மேரியின் குறிக்கோள் இருக்கும். இதைத்தான் நான் நேரிலேயே பார்த்ததுண்டு!

எனக்கு சிலசமயங்களில் மேரியை காணாமல் கடும் கோபம் கூட வருவதுண்டு அது போன்ற சந்தர்ப்பங்களில் மேரியின் மீதான கடுப்பு,கோபம், எல்லாவற்றையும் ஏதேனும் ஒரு புள்ளியில் கொண்டுபோய் குவித்தாகவேண்டுமல்லாவா? அந்த சமயங்களில் எங்கள் வீட்டு பிளாஸ்டி சேரின் ஒரு கால் ஊனப்படுத்தப்படும்!

எவ்ளோதான் அடிச்சாலும் தாங்கி கிட்டாண்டா! இவன் ரொம்ப நல்லவன்டா என்று நினைக்கும் மனது! கோபம் போன பிறகுதான் குணமே தன் நிலைக்கு திரும்பும் போல! - அப்போதும் கூட மேரி கொஞ்சம் மனதில் வந்து நிற்க கண்டு மகிழ்ந்தும்போவேன்!

ஏனோ தெரியவில்லை இந்த ஒரு வாரமாய் வலைச்சரம் கொஞ்சம் அதிக பிஸியோடு ஆர்வமாக மற்றவர்கள் பதிவுகளினை பதிவுகளை படித்து பதித்துகொண்டிருக்கையில் திடீரென்று எனக்கு மிகுந்த ஆர்வம் + விருப்பம் உருவாகி ஒரு சந்தர்ப்பத்தில் மேரி மீது காதல் மீண்டும் எனக்குள் விஸ்வரூபம் எடுத்துவிட்டது !

இந்த ஒரு வாரமும் மேரியின் மீது கொண்ட அதீத காதல் என்னால் கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்க இயலாத அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு கொண்டுபோய் நானும் கூட கூடவே போய்விட்டேன்!

இனி வரும் நாட்கள் எப்படி போகப்போகின்றன என்று தெரியாமலே மேரியையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.....!!!


(மேரி இங்கே எனக்கு திரும்ப கிடைச்ச கதையை உங்களுக்கு சொல்லவேயில்லையில்ல அது அப்புறமா இன்னொரு (மொக்க) சமயத்தில் சொல்றேன் ஒ.கே!)

ஜூன் PIT -ப்ராக்ரஸ்!
எப்படியோ ஜூன் - 2008 பிஐடிக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் அனுப்பியாச்சு! அடுத்தது ஜூலை பிஐடி என்ன தீம் எப்படி படம் புடிக்கிறதுன்னு ஒரே கவலையா இருக்கு...!?? (ஆனாலும் எனக்கு இது கொஞ்சம் ஓவர்தான்!)

என்ன தம்பி அதுக்குள்ள அடுத்தமாசத்து போட்டோவை பத்தி கேட்கறீங்களேன்னு கேக்க நினைக்கறவங்களுக்கு! - ஆமாங்க எப்படியும் கஜினி மாதிரி 18 அப்புறம் தேறுதோ அல்லது அப்பவும் தேறாமலே போகுதோன்னு தெரியலை இப்போதைக்கு 4 ஆயிருக்கு!

முன்னாடியே பிளான் பண்ணியாச்சு பதினெட்டுக்கு அப்புறம்தான் முழுமையாவே என்னைய மாதிரி மொக்கை போட்டோவெல்லாம் ஒரளவுக்கு தகுதிசுற்று வரக்கூடும் அப்படின்னு! சரி அதான் டார்கெட் 18 அப்புறம் வைச்சுட்டேன்!

இப்ப சும்மா போட்டோ போட்டு வெளையாடிக்கிட்டு இருக்கேன்!

இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல்!

திறந்த கதவு என்றும் மூடாது!

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் எது சொல் தோழி!


கேபிள் டிவி - ஏமாளி மக்கள் - எத்தனை கேள்விகள்? - தினமணியிலிருந்து...


கட்சி தொடங்கிய கையோடு ஒவ்வொரு தமிழக அரசியல் தலைவரும் யோசிக்கும் அடுத்த விஷயம் தங்களுக்கென ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவது பற்றித்தான். அந்த அளவுக்கு தொலைக்காட்சியின் தாக்கமும் ஆதிக்கமும் தமிழகத்தில் இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. தமிழ்நாட்டில் 10 கோடி மக்கள் தொகையில், தொலைக்காட்சி பார்க்காதவர்களின் எண்ணிக்கை 5 சதவீதம்கூட இருக்காது என்கிற நிலைமை. போதாக்குறைக்கு அரசே இலவசமாக தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கவும் தொடங்கி விட்ட நிலையில், இதைவிடச் சிறந்த பிரசார சாதனம் இருக்க முடியாது என்று அரசியல்வாதிகள் கருதுவதில் ஆச்சரியம் இல்லை.

தொலைக்காட்சிச் சேனல்களுக்கு இடையிலான யுத்தம் ஒருபுறம் இருக்க, இந்தச் சேனல்களை விநியோகம் செய்யும் கேபிள் டிவி நிறுவனங்களின் போட்டா போட்டி வேறு தொடங்கி இருக்கிறது. கேபிள் டிவி விநியோகத்தின் மொத்த குத்தகைக்காரர் என்பதுபோல இயங்கி வந்த சுமங்கலி கேபிள் விஷனின் (எஸ்.சி.வி.) மேலாதிக்கத்தை ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கி இருக்கிறது மதுரையிலுள்ள ராயல் கேபிள் விஷன் (ஆர்.சி.வி.)வேடிக்கை என்னவென்றால், எஸ்.சி.வி. என்னென்ன யுக்திகளைப் பிரயோகித்துத் தனக்குப் போட்டியே இல்லாமல் மேலாதிக்கம் செய்ததோ, அதையே இப்போது ஆர்.சி.வி.யும் செய்ய முற்பட்டிருக்கிறது.

ஒரு தவறு அதே தவறு மீண்டும் செய்யப்படுவதை நியாயப்படுத்தி விடாது. அப்போது, தங்களுக்கு இருந்த அரசியல் பலத்தைப் பயன்ப டுத்தித் தங்களது வியாபார எதிரிகளை எஸ்.சி.வி. முடக்கியது எப்படித் தவறோ, அதேபோல இப்போது ஆர்.சி.வி.யின் செயல்பாடுகளும் கண்டனத்துக்குரியவை.

முன்பணம் கட்டி, மாதக் கட்டணமும் செலுத்தி கேபிள் மூலம் இந்தத் தொலைக்காட்சிச் சேனல்களைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித உரிமையும், தாங்கள் விரும்பும் சேனல்களைப் பார்க்கும் வசதியும் கிடையாது என்றால் எப்படி? யார் வேண்டுமானாலும் கேபிள் விநியோகம் செய்யட்டும்; யாருடைய சேனல் நன்றாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கிறதோ அதை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளட்டும் என்பதுதானே முறை? இதைக் கண்காணித்து கேபிள் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்குத்தானே அரசும் ஆட்சியாளர்களும் இருக்கிறார் கள்? முந்தைய அதிமுக அரசு அறிவித்தபோது எங்கள் கழுத்தை நெரிக் கிறார்கள் என்று கூக்குரலிட்டு எஸ்.சி.வி.க்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, ஆளுநரிடம் மனு கொடுத்தவர்கள், உறவு கசந்ததும் அரசுத் தரப்பில் கேபிள் விநியோகம் என்று அறிவித்தனர். அறிவித்து வருடம் ஆயிற்று, கேபிளையும் காணோம், விஷனையும் காணோம்.

முதல்வரின் மகனே கேபிள் விநியோகம் செய்ய ஆர்.சி.வி. தொடங்கு கிறார். அப்படியானால் அரசு நிறுவனம் அவ்வளவுதானா? மின்சாரம் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்க முடியாது. மின்சார விநியோகம் செய்யும் மின்வாரியம் கேபிள் விநியோகத்தையும் செய்யட்டுமே. மின்வாரிய நஷ்டமாவது ஈடுகட்டப்படுமே? அதை ஏன் செய்ய இவர்கள் முன்வரவில்லை? இந்தக் குடும்பமோ, அந்தக் குடும்பமோ, தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் கேபிள் விநியோகம் செய்ய வேண்டும் என்பதாலா?

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இலவசச்சேனல்களில் தான் விளம்பரங்கள் போடமுடியும். கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்காது. இங்கே மாதக் கட்டணமும் வசூலித்து, ஐந்து நிமி டத்துக்கு ஒரு தடவை விளம்பரங்களையும் போடும் அயோக்கியத்தனமும் நடைபெறுகிறதே, அதைக் கேள்வி கேட்பாரே இல்லையா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அனைவரையும் முட்டாள்களாக்கி,விளம்பரத்திலும், கட்டணத்தி லும் வருமானத்தை அள்ளிக் விக்கிறார்களே,இது என்ன நியாயம்? 2 கோடி கேபிள் இணைப்புகள் என்றால்,ரூ. 100 மாதக் கட்டணம் என்று வைத்துக் கொண்டாலும் வருடத்திற்கு ரூ. 2,400 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் அரசுக்கு என்ன கிடைக்கிறது? இந்த வருமானம் ஏன் மின்சார வாரியத்துக்குக் கிடைக்கக் கூடாது? அதை விட்டுவிட்டு மின்வாரியத்தைத் தனியார் மயமாக்க சிந்திப்பது ஏன்? எஸ்.சி.வி., ஆர்.சி.வி. என்றெல்லாம் தனியார் கேபிள் விநியோகம் நடைபெறுவதாக இருந்தால் அனைத்துத் தரப்பினரும், எந்த உருட்டல் மிரட்டலுக்கும் ஆட்படுத்தப்படாமல் தங்களது சேவையை முன்னிலைப்படுத்தி போட்டியிடட்டும். அதனால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். இல்லையென்றால், தனியாரின் தலையீடு இல்லாமல் அரசு நடத்தட்டும். அதை விட்டுவிட்டு, ஏகபோக உரிமை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கைமாறுவதில் பொதுமக்களுக்கு என்ன நன்மை?

நன்றி - தினமணி

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

ஜூன் 12 - இன்று குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

இளமை காலங்களின் ருசியைக் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது ஒரு குறிப்பிட்ட சதவிகித சிறுவர் இளையோர் பட்டாளம்!

அவர்களை மீட்க முயற்சிக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டுவரும் வகையில் இன்று ஜூன் 12 - குழநதை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

நம் கண் எதிர்லேயே எத்தனையோ சிறுவர் சிறுமியர் வேலை செய்துவருவதை நம்மால் காண
முடிந்தாலும் கண்டும் காணாமலே இருந்துவிடுகிறோம்!

இனியும் இது போன்று இருக்காமல் நம்மால் ஆன முயற்சிகளாக இது போன்ற குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்திருக்கும் கடைகளை, நிறுவனங்களை, கம்பெனிகளை, பற்றி அரசு தொழிலாளார் துறைக்கோ அல்லது உள்ளூரில் உள்ள தன்னார்வ சேவை அமைப்புக்களுக்கோ தகவல் கொடுத்தும் கூட உதவலாம்!

இது எதற்கு தேவையில்லாத வேலை என்று நினைப்பவர்களுக்கும் கூட ஒரு யோசனை! பார்க்கும் குழந்தை போன்று உங்களின் குழந்தையும் ஆனால் என்னவாகும் என்று ஒரு முறை யோசித்து செல்லுங்கள் உங்கள் வழிப்பார்த்து....!


அரசின் முயற்சிகளில் கல்வி முறையில் சீர்திருத்தம்!கல்வி இலவசமாக கிடைக்கப்பெறுதல், போன்றவற்றில் அரசின் ஈடுபாடு தீவிரமடைவதன் மூலமே இந்த சோகங்களிலிருந்து குழந்தைகளை சிறுவர்களை காப்பாற்ற முடியும்! பார்ப்போம் செய்வார்களா என்று எதிர்பார்ப்போம்!
என்னுடனே சில வகுப்புக்காலங்கள் படித்து, பல்வேறு சூழ்நிலைகளுக்கு இலக்காகி பள்ளி படிப்பினை பாதியில் விட்டுச்சென்ற,முகம் மறந்த நண்பர்களை இன்று உணர்வுகளால் கொஞ்சம் நினைத்துப்பார்க்கிறேன்!

கணக்குப்பாடமும் பின்னே நகைச்சுவை/நையாண்டியும்! - பார்ட் 1

என்னதான் சுட்டுப்போட்டாலும் வரவே வராத விஷயத்தை பத்தி பதிவுல கண்டிப்பாக எழுதணும்னு ஒரு நீண்ட கால திட்டமெல்லாம் இருக்குங்க! அதுல முதல்ல இருக்கறத கண்க்கு பாடமும் நகைச்சுவை நையாண்டியும்தான்!

கணக்கு பாடம் எல்லாரும் படிச்சிருப்பீங்க ஸோ அதப்பத்தி சொல்லவேண்டிய தேவையில்லை! இதுல சிலபேர் கணக்குல நூத்துக்கு நூறெல்லாம் கூட எடுத்திருப்பீங்க அவங்க யாரு எங்க இருக்கீங்கிங்கன்ன்னு திசையோட சொன்னா அந்த திசையை நோக்கி விழுந்து கும்பிட்டுக்கொள்ள வசதியா இருக்கும்!

கணக்கு பாடத்தை பொறுத்த வரைக்கும் எல்லா வாத்தியார்களும் சொல்றாது கண்க்கு போட்டு போட்டு பார்த்தா ஈசியாயிடும்னுத்தான் அப்படியும் நான் ஒரு சமயத்தில் ஸ்லேட்டில் குச்சி உடைய ச்சே விரல் உடைய கணக்கு போட்டு பார்த்தும் கூட 1ம் தேறலைங்க :-(

ஆனா அதே சமயத்தில கணக்கு புத்தகத்தை வைச்சுக்கிட்டு உக்கார்ந்து அப்படியே மேலோட்டமா பார்த்தா அவ்ளோ ஈசியா இருக்கும்! ச்சே இவ்ளே ஈசியா இருக்கே நாம ரொம்ப ஃபீல் பண்ணிட்ட்டோம் போலன்னு நினைச்சு படிச்ச புக்கை தூக்கி கடாசிட்டு அப்படியே பரீட்சை ஹால்ல போய் உக்கார்ந்தா கொஸ்டீன் பேப்பர் வரும்போதுதான் நமக்குள் வேதியியல் உயிரியல் மாற்றங்களெல்லாம் தெரியும்! ஆமாங்க 1மே தோணாது எல்லாம் அப்படியே வெறுமையா அந்தராத்மாவாக மனது கிடந்து உழலும் ( இந்த இடத்துல கூட ஒரு pin நவீனத்துவ வார்ததையிடலாம்!) - அய்யோ அய்யோ படிச்சோமே ஒண்ணும் ஞாபக்கத்துக்கு வரமாட்டிக்கிதேன்னு! அப்புறமென்ன வெறும் பேப்பர்ல திரும்ப கொஸ்டீன் பேப்பரையே ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் போட்டு விட்டு வந்ததுதான் அதிகம்!


சரி இப்ப எதுக்கு இந்த ஃபீலிங்க்ஸ்னு கேக்கறீங்களா? இதே மாதிரிதான் எனக்கு பதிவுலகில் வரும் நகைச்சுவை நையாண்டி பதிவுகளை பார்க்கும்போதும் கூட கணக்கு புத்தகம் பார்க்கிற மாதிரியே அட நமக்கும்கூட இது மாதிரி வேற வேற சந்தர்ப்பங்கள்ள நினைச்ச விஷயங்களததான் இவுகளும் எழுதி நகைச்சுவை நையாண்டியில வகைபடுத்தி வைச்சுருக்காங்களான்னு ஒரு எண்ணம் வரும் சரி நாமும் ஒரு நாளைக்காவது இது மாதிரி பதிவு போடணும்னு வைராக்கியம் வரும்! இதுவரைக்கும் நிறைய தடவை டிரைப்பண்ணியும் அது மாதிரியான ஒரு பதிவு வரலை!!!??? (புலியை பார்த்து பூனை ச்சூடு வைச்சுக்கிட்ட கதைதான்!)

பட்! ஆனா இன்னிக்கு தட்டிட்டேன்!

நகைச்சுவை.நையாண்டி வகைப்படுத்தல் பதிவு போட்டோ ஆகணும்னு முடிவு பண்ணி போட்டுட்டேன்ல வலைச்சரத்துல...

(கணக்குன்னு வார்த்தை போட்டு எழுதறப்ப நினைபெல்லாம் எங்கெங்கோ கிளைவிட்டுப் போயிருச்சுங்க அதான் கடைசி நேரத்துல எதுக்கும் இருக்கட்டுமேன்னு பார்ட் - 1 போட்டிருக்கேன்!)

தோஹா - ஒலிம்பிக்ஸ் 2016!?


சென்ற வாரம் உலக ஒலிம்பிக் வாரியத்தால் வெளியிடப்பட்ட 2016 பரிசீலனை நாடுகளின் பட்டியலிலிருந்து கத்தார் வெளியேற்றப்பட்டது! கத்தாரில் வாழும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு கொஞ்சம் வருத்தமான விஷயமாகத்தான் இருந்தது!

அரபு நாடுகளிலேயே அசுரவளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடாக, கல்வி,தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்போடு வளர்ச்சி கண்டு வரும் நாடு கத்தார்!

பாரம்பரியத்தோடு அறிவியல் தொழில்நுட்பவளர்ர்சியினை உலக நாடுகளுக்கு தெரிவிக்கவேண்டுமெனில் ஏதேனும் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டிகளை நிகழ்த்தி உலக நாடுகளில் மக்களின் கவனத்தை இந்த குட்டியூண்டு நாட்டு பக்கம் திருப்பவைக்கவேண்டும் என்பதில் ரொம்ப விருப்பமாக இருக்கும் கத்தார் மன்னர்! இப்படியான சூழலில்தான் கத்தார் 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை தம் நாட்டில் நடத்த வேண்டி விண்ணப்பித்தது!

கைநிறைய பணம் இருக்கும் இடத்தில் ஏராளமான வசதிகளை செய்து தரமுடியும் என்ற தீர்க்கமான திட்டங்கள் என்று எல்லாவற்றையும் எதிர்நோக்கியே பலப்பரீட்சையில் இறங்கியது சில மாதங்களுக்கு முன்பு!

ஒலிம்பிக் கமிட்டியில் உத்தேசமாக தீர்மானிக்கப்பட்டிருந்த 2016 போட்டிகள் ஜூலை 15 தொடங்கி ஆகாஸ்ட் 31 வரைக்குமான தேதிகளாகும் இதில்தான் முதல் சிக்கலே ஆரம்பித்தது! இந்த காலகட்டங்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் காலகட்டம் ஆனால் கத்தார் ஒலிம்பிக் கமிட்டி நீங்க வேணும்னா அக்டோபர்ல ஆரம்பிச்சுடுங்க ஆட்டம் களை கட்டும் கத்தாரும் சும்மா குளு குளுன்னு இருக்கும்னு சொன்னதை உலக ஒலிம்பிக் கமிட்டிஏத்துக்கலை!

அதுக்குள்ளகவே அடுத்தடுத்து ரிஜக்ட்டட் கேள்விகளாவே எடுத்து வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணா கேட்க ஆரம்பிச்சுது கமிட்டி!

தம்மாதுண்டு நாட்டில இருக்கறதே 1 மில்லியன் மக்கள் நீங்க எப்படி சீனா ஒலிம்பிக்ஸுக்கே போற மினிமம் 8 மில்லியன் மக்களை சமாளிப்பீங்க அதுவும் 2016 காலகட்டத்துல இன்னும் கூடுதலாவே இருக்குமே என்ன பண்ணுவீங்க ?அப்படின்னு இன்னொரு பிட் போட...! கத்தாரும் அதற்கு ஈடுகொடுத்து பிரம்மாண்டபமான திட்டங்களை பற்றி சொல்ல, அப்ப ஆச்சர்யப்பட்டது ஒலிம்பிக் கமிடடி அல்ல கத்தார்ல வாழும் எங்களை மாதிரியான ஆளுங்கள்தான்!

பின்ன சும்மாவா நாட்டை சுத்தியும் ஒரு ரெயில் நெட் ஒர்க்! ஆளுங்களே இல்லாத பல பாலைவனப்பிரதேசங்களில் பிரும்மாணடபமான கட்டிடங்கள் பாரம்பரியத்தை காட்டும் வகையில் தோஹாவினையே அப்படியே சேஞ்சு பண்ணி ஒரு 50 வருஷத்துக்கும் பின்னால கொண்டுபோக வைக்கிற மாதிரியான திட்டங்கள்தான்! நிறைய வேலைவாய்ப்புக்கள் அதோட ஒலிம்பிக்ஸ் நல்லபடியா நடத்தி முடிக்கணும்னா கண்டிப்பா பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வேலை பார்க்கும் மக்களின் வாலண்டியர் ஆதரவும் கண்டிப்பா தேவை!

ஆனாலும் கடைசிவரைக்கும்... ம்ஹும் ஒப்புக்கு கூட தலையாட்டுலைங்க இந்த உலக ஒலிம்பிக் கமிட்டி!

சரி விட்டுதள்ளுங்கடா மக்கா ஒலிம்பிக்ஸ் போனா என்னா 2018 உலக ஃபுட்பால் மாட்ச் நடத்தி காட்டி அசத்திடுவோம்னு அடுத்த நாளே முடிவெடுத்தாச்சு! இன்னும் கொஞ்ச நாள்ல அதுக்கு அப்ளை பண்றத்துக்கு இங்க பீச்ல பிரம்மாண்டபமான மீட்டிங்க! வாணவேடிக்கை அசத்தல்கள்னு களை கட்டப்போகுது! நம்மளையும் கூப்பிட்டிருக்காங்க நான் வர்ட்டா!

தன்னானே தன்னானே தன்னனானே தானேனே :-)

IIFA அவார்ட்ஸ் இந்திய திரைப்படங்களில் கடந்த ஆண்டின் சிறந்த பின்ணணி பாடகிக்கான ஸ்ரேயா கோஷல்க்கு வழங்கப்பட்டுள்ளது அதை கொண்டாடும் வகையில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் பதிவு+ கவுஜயுடன் !

குரு திரைப்படத்தில்,அவர் பாடிய ஹிந்தி பாட்டு!என்னோட தமிழ் கவுஜ

எனக்கு பிடிச்ச பாடல்
அது உங்களுக்கும் பிடிக்குமே!
இவுங்க பாடும் அனைத்து பாட்டும்
விருதை அள்ளுமே!

கேட்பது நீங்கள்தான்!
கேட்ட பிறகு தெரியும் எங்கள் தலைவி புகழ்தான்!

என்னை பிடித்த நிலவு
அது உங்களுக்கும் பிடிக்குமே

உதிர்வது சொற்களா?
பாட்டு வளர்த்த சோலையே
பதிவு பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ கனவில் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ இறங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே என் இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்

வெள்ளி கம்பி தலை போலே
ஒரு தூரல் போடுதே
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே

நீர் துளி நீங்கினால்
நீ தொடும் நியாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

அவ்ளோதான்!


விருது வாங்கிய தலைவியை புகழ்ந்து அழகிய கவிதையாக எழதி முடித்த பின் சரி யாரிடமாவது பிழை திருத்தம் செய்து வாங்கலாம் என்று நம்ம அண்ணாச்சி கானா பிரபாவிடம் காட்டினேன்! அதற்கு அவரிடமிருந்து வந்த பதில்!

அடப்பாவி மக்கா இது ஏற்கனவே ஒரு படத்துல பாட்டாக வந்ததுய்யா! அப்படின்னுட்டாருங்க!

(அப்படின்னா என்னோட கவுஜய நான் எழுதறதுக்கு முன்னாடியே யாரோ திருடிட்டாங்களா???????)

IIFA அவார்ட்ஸ் ஸ்பெஷல் - வெற்றிக்கனி சுவைத்த சக்தே இந்தியா!


ஆஸ்கார் விருத்துக்கு இணையான பாலிவுட்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன! சக்தே இந்தியா திரைப்படம் அதிக விருதுகளை பெற்றிருக்கின்றது!

எப்போழுதோ ஒரு இனிய வியாழன் இரவில் பார்த்த படம் திரும்ப மனத்தில் ஓடியது இப்போது!

படம் துவங்கும் அந்த சினிமாத்தனமான மீட்டிங்கில் இருந்து,ரிப்ளை ஆகும், தவறாக விளையாடியதாக ஷாருக்காணை குற்றம் சாட்டும் அந்த குறிப்பிட்ட போட்டி, எல்லாமும் முடிந்த முடிவாய் சொந்தவீட்டிலிருந்து, சொந்த ஊரிலிருந்து வெளியேறிச்செல்லும் அந்த நொடிகள் எனக்குள் ஆர்வத்தை அதிகரிக்கவே, தொடர்ந்து பார்ப்போம் இந்தி படத்தினை என்ற முடிவெடுத்தேன்!

இத்தனைக்கும் இந்தி கிலோ கித்னா ரியால்? கேட்க்கும் ஆளாக நான் இங்கு இருக்கையில், ஏதோ ஒரு தைரியம் மெளன படமாக பார்ப்போம் என்று! ( இந்த படத்தின் கதையோடு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அரசியல் காரணங்களும் சேர்த்திருப்பதாக ஏற்கனவே படித்திருந்த ஸ்கூப் நியுஸ்களும் கூட அவசியம் படம் பார்த்தே ஆகவேண்டும் என்று அமர காரணமும் கூட! - கடைசியில் கதை உண்மைகதைதானாம் ஆனால் தன்ராஜ் பிள்ளை இல்லையாம் வேறு ஒருவரின் கதை அப்படியே படமாக..)

பிடித்த காட்சிகளாய்....

எல்லா மாநிலங்களிலிருந்தும் அவரவர் மண்ணின் வாசத்தோடு விளையாட்டு மைதானம் வந்து சேரும் காட்சிகள்!

உடற்பயிற்சியோடு ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தலே விளையாட்டில் வெற்றிக்கு அடிப்படை என்ற குழுமனப்பான்மையை வளர்க்கும் விதமாய் ஷாருக்கான் அளிக்கும் கண்டிப்பான பயிற்சிகள்!

ஆண்கள் ஹாக்கி குழுவிற்கும் பெண்கள் ஹாக்கி குழுவிற்கும் நடக்கும் விளையாட்டு போட்டியில் முடிவில் நன்கு பயிற்சி பெற்ற ஆண் வீரர்கள் வெற்றி பெற்றாலும் கூட பெண்கள் ஹாக்கி குழுவினை வாழ்த்தி அட்வைஸ் தரும் காட்சிகள்!

என் இன்னும் பல காட்சிகள் மனத்துக்கு இனிமையாய்,இது போன்றே நிஜத்திலும் அணிகள் அமைந்தால் எப்படி இருக்கும் என்று இன்னுமொரு கனவுகாட்சியினை தொடங்கி வைத்த படம்! (நம்ம பயபுள்ளைங்க, அந்தளவுக்கு மன ஈடுபாட்டோட இது போன்ற அணிகள் அமைப்பார்களான்னு நினைச்சு பார்த்தா ம்ஹும் ஒண்ணுமே தோணமாட்டேங்குது!)

கடைசியில் உலகக்கோப்பையினை கைப்பற்றிய வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் தன் சொந்த வீட்டுக்கு திரும்பும் காட்சியும் அப்பொழுது ஊரே கூடி நின்று உற்சாக கோஷமிட்டு வரவேற்பதும், வெற்றிகளை மட்டுமே போற்றும் சமூகத்தின் கோரமுகம் அங்கே இளித்துக்கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது எனக்கு!

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படங்கள் வரிசையில் சக் தே இந்தியாவினையும் சேர்த்துக்கொள்ளுங்கள் இப்போதைக்கு ஒரு பாட்டு கேட்கலாம் வாங்க!

திண்ணை - 1980-85

1980 ஜூன் மாதத்தின் ஏதோ ஒரு நாளில் சுப நேரத்தில் கீழநாஞ்சில் நாட்டின் பர்மா செட்டியார் வீட்டு திண்ணைக்கு நான் அறிமுகமான காலந்தொட்டு 2006 செப்டமர் வரையிலுமான காலகட்டத்தில் திண்ணையும் என்னையும் சேர்த்தே வைத்திருந்தது வாழ்க்கை!

அப்ப எனக்கு குவார்ட்டர் வயசு கூட கிடையாதாம்!(ஒன்றரை மாசம்!) குவா..! குவான்னு...! கத்திக்கிட்டே இருந்ததால கடுப்பாகிப்போன அம்மா திண்ணையில தூக்கி வைச்சுடடு வீட்டு பாத்திரங்கள் பார்சல லாரியிலேர்ந்து டவுன்லோடு பண்றதுல பிசியாகிட்டாங்களாம்!

அப்புறம் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து,காலையில தூக்கத்திலேர்ந்து முழிச்ச உடனேயா அய்யோ அப்பா என்னைய விட்டுட்டு காளியாக்குடிக்கு காபி குடிக்க போயிருக்குமேன்னு அடிச்சு புடிச்சுக்கிட்டு வந்து தெருவில பார்த்த சைக்கிள் மிஸ்ஸிங்காயிருக்கும் அப்படியே அந்த 6'X 3' ( கொஞ்சம் சின்னதுதான்) உக்காந்திர்ந்து ஊளையிட ஆரம்பிச்சா பிற்பாடு அரைமணி நேரம் கழிச்சு காளியாக்குடி பொங்கலை வாயில வைச்சு அடைச்சுத்தான் நிப்பாட்டுவாங்க!

எப்பொழுதுமே அம்மாவுக்கு ஸ்கூலுக்கு போய்ட்டு சாயந்திரம் திரும்பி வந்து வீட்டுக்க்குளே நுழைஞ்சதுமே அப்பாடான்னு நிம்மதியா உக்கார்ந்து ரெஸ்ட் எடுக்கறது இந்த திண்ணையிலதான்! ( பின்னே சும்மாவா ஸ்கூலுக்கு போக 2 கி.மீ வர 2 கி.மீன்னு 4 கி.மீ நடைப்பயணமாச்சே!)

ஞாயிறுகளின் மத்திய நேரத்தில் வாய்க்கால் குளியலில் விளையாடிவிட்டு வந்து உக்கார்ந்து திண்ணையில் பாடிய பாடலை மறக்கமுடியுமா? என்ன பாட்டுன்னு ரொம்ப ஆர்வமா இருக்கீங்களா? அப்போலேர்ந்தா நான் இந்த பஞ்ச பாட்டுட்தான் பாடி வள்ர்ந்திருக்கேனாக்கும் - அம்மா பசிக்குது அம்மா பசிக்குது !

மாலை நேரங்களில் டூயுசன் முடிந்து ரொம்ப களைப்பாக வரும்போதே அதுவும் வாயில்படியில் கால் வைக்கும்போதே அம்மா காபி என்று ச்வுண்ட் விடும் அதே நேரத்தில்,படு சுவாரஸ்யமான டிஸ்கஷன அக்கம்பக்கத்து வீட்டு பாட்டிகளோடு திண்ணையில் பேச்சு நடந்துக்கொண்டிருக்கும்! ( அப்ப போய் டிஸ்டர்ப் பண்ணுனா என்னவாகும்னு வேற தனியா சொல்லணுமா நீங்க டிஸைட் பண்ணிக்கோங்க!)

காலையில் மன்னம்பந்தலிலிருந்து காய்கறி கொண்டுவந்து கொடுத்துச்செல்லும் பாட்டியின் தின வருகையில் ஆரம்பித்து மாத வசூல் செய்ய வரும் பால்காரர் பேப்பர்காரர் அவ்வப்போது சைக்கிள் ரிப்பேர் செய்து கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணம் வாங்கிசெல்லும் முக்கூட்டு சைக்கிள் கடைக்காரர்,விழாகாலங்களில் வசூலுக்கு வரும் பூசாரி,அவஸ்தையான அரசு அலுவல்களில் அப்பாவின் ஆதரவு தேடிவரும் அப்பாவின் அலுவலக நண்பர்கள் என திண்ணை விருந்தாளிகளின் வருகைக்கும் இடையிலும் கூட, என் வாசம் திண்ணையில்தான்!

திண்ணை ஒய்வுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு இடம் என்பதை தாண்டி அதில் வெவ்வேறு வகையிலான அமைப்புகளை உழைத்து உருவாக்கிய விதவிதமான திண்ணைகளை பார்க்கும்போதெல்லாம் ஏனோ ஒரு வித ஈர்ப்பு!

பெரும்பாலும் எல்லோருக்குமே திண்ணையினை பார்த்தால் ஹய்யோ எப்படி சூப்பரா இருக்கு! கொஞ்சம் நேரம் இருந்து ரெஸ்ட் எடுக்கலாம்போல இருக்கேன்ன்னு ஏற்படும் எண்ணத்தை மறுக்கவோ அல்லது மறைக்கவோ இயலாது! (நானெல்லாம் கவலையே படமா மாட்டேன் கட்டையை சாச்சுடுவேன்!)

எனக்கு வீடு கட்டவேண்டும் என்ற ஆசையினை விட அழகானதொரு கிராமத்தில் படத்தில் இருப்பதுபோன்ற பாழடைந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கிப்போட்டு அதன் பழமை மாறாமல் சரி செய்யவேண்டும் என்பதுதான்!


சரி செஞ்சு சூப்பரா இதோ...! இந்த ஆளப்போல ஸ்டைல்லா படுத்து தூங்கணும்ப்பா அவ்ளோதான்!

(இத்துடன் 1980 -1985களுக்கான திண்ணை பற்றிய பதிவு பார்ட் - 1 நிறைவடைந்தது! இன்னும் எத்தனை பார்ட்டு வரப்போகுத்துன்னு எனக்கு தெரியாது ஆனால் அதை படிக்கறத்துக்கும் இல்லாட்டி படிக்காம எஸ்ஸாகுறதுக்கும் நீங்க ரெடியாகிக்கோங்க!

திண்ணை பற்றி என்னை எழுத சொல்லி அழைத்த முத்துலெட்சுமியக்காவிற்கு நன்றிகளை கூறிக்கொண்டு ( ஏண்டா கூப்பிடோம்ன்னு திண்ணை பார்ட் 3 அல்லது 4க்கப்புறம் ஃபீல் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்!)

என் நட்பு வட்டத்தில் நிற்கும் பதிவர்களை திண்ணை பற்றி எழுத அழைக்கிறேன்!
அபி அப்பா
தஞ்சாவூரண்ணன்
மதுமதியக்கா

கானா பிரபா - இவங்ககிட்ட அனுமதி கேட்டப்பா நான் திண்ணை வீட்ட பார்த்ததே இல்லப்பா எப்படி எழுதுறதுன்னு ஒரு பின்வாங்கல் கடிதம் அனுப்புனாங்க! சரி நீங்க பார்த்துட்டு அப்புறமா உங்க அனுபவத்தை எழுதுங்கன்னு சொல்லிட்டேன் இங்க!

எல்லாரும் வாங்க திண்ணைய பத்தின உங்களது சுவையான செய்திகளை தாங்க!

இனிய ஞாயிறு - ஸ்ரேயா கோஷல் ஸ்பெஷல் :-)

சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்
உன்னை நெஞ்சில் வைச்சுக்கிட்டேன்

ஒத்தையா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்!

ஒரு கோடி புள்ளி வைச்சு
நான் போட்ட காதல் கோலம்

ஒரு பாதி முடியும் முன்ன
அழிச்சுடுச்சு காலம் காலம்

இன்னொரு ஜென்மம நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன்!

அப்பவும் சேராமல் இருவரும் பிரியணும்னா
பொறக்காம போய்டுவேன்!

நீ போன பாதை மேலே
சருகாக கடந்தா சுகமா?

உன்னோட ஞாபக்மெல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா!

ஆன்ம அனுபூதியும் - சிவாஜி வாயில ஜிலேபியும்!

சாதாரணமாக எழும் பெரிய கேள்வி தத்துவத்தின் பயன் என்ன என்பதுதான்? இந்த கேள்விக்கு ஒரேயொரு பதிலதான் இருக்க முடியும்.

பயன்நோக்கு வாதத்தின்படி இன்பம் தேடுவதே மனிதர்களுக்கு நல்லது என்றால்.மத விஷயங்களில் இன்பம் காண்பவர்கள் ஏன் அவறை நாடி போகக்கூடாது?

புலனின்பங்கள் பலருக்கு மகிழ்ச்சியை தருவதால் அவர்கள் அவற்றை நாடிப்போகிறார்கள்! ஆனால் புலனின்பங்களில் நாட்டம் இல்லாமல்,அவற்றை விட உயர்ந்த இன்பங்களை நாடிச்செல்பவர்கள் இருக்கிறார்கள்.

உண்பதிலும் குடிப்பதிலும்தான் ஒரு நாய் இன்பம் அடைகிறது. எல்லாவற்றையும் துறந்து, ஒருவேளை ஏதோ மலை உச்சியில் அமர்ந்து வானத்திலுள்ள நடசத்திரங்களை ஆராயும் விஞ்ஞானியின் இன்பத்தை நாயால் புரிந்துகொள்ள முடியாது. அவன் ஒரு பைத்தியம் என்று நினைத்து அந்த நாய் சிரிக்கலாம்!

ஆனால் விஞ்ஞானி அதைப்பார்த்து, ‘அன்புள்ள நாயே நீ அனுபவிக்கும் புலனிப்பத்தை பற்றி மட்டுமே உனக்குத்தெரியும் அதற்கு அப்பாலுள்ள இன்பத்தை பற்றி உனக்குதெரியாது ஆனால் எனக்கு இதுதான் மிகவும் இன்பம் தரும் வாழ்க்கை உன் வழியில் இன்பம் தேட உனக்கு உரிமை இருந்தால் அதே உரிமை என் வழியில் இன்பம் தேட எனக்கும் இருக்கிறது! என்று கூறுகிறான்.

நம்முடைய சிந்தனையை போல்தான் உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.நம் மனத்தையே பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் மனத்திற்கும் அளவுகோலாக கொள்கிறோம் இது நாம் செய்யும் தவறு!

உங்களை பொறுத்தவரையில் புலனின்பமே மிகப்பெரிய இன்பமாக இருக்கலாம் ஆனால் என் இன்பமும் அப்படியே இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.நீங்கள் அதை வற்புறுத்தினால் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன்!

நன்றி - ஞான யோகம்


சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்குதே என நினைக்கிறவங்க நினைக்கட்டும்! ஏதோ சம்பந்தம் இருக்குன்னு நினைக்கறவங்களுக்கு என் நன்றிகள்:-)

சிவாஜி வாயில ஜிலேபி இது மாதிரி ஒரு டைட்டில் கொடுத்து தொடர் பதிவுகளுக்கு என்னை அழைத்த ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு எனது நன்றிகளுடன்....

நான் அழைக்கும் பதிவுலக உறவுகள்

கப்பியண்ணன்

சென்ஷி அண்ணன்

தமிழ் பிரியண்ணன்

வாங்க வந்து இந்த தலைப்பில் எது வேணும்னாலும் எழுதுங்க ஆனா எழுதிட்டு நீங்க மூணு பேரையோ அல்லது உங்க பதிவு வட்டத்திற்கு ஏத்த மாதிரி எத்தனை பேரையும் வேணும்னாலும் கூப்பிடலாம், கூப்பிட்டு எழுத சொல்லணும் அது முக்கியம்!

தெரிந்த காதலன் தெளித்த கவிதைகள் :-)

எல்லோருக்குமே தெரிந்த காதலன் இங்கு தெளித்த கவிதைகள் ஒரு தொகுப்பாய் :-)நீ சிந்திடும் முல்லைச்சிரிப்பில்
வாழ்ந்து கெட்டு மீண்டும்
சேர்ந்து வாழ
துடிக்குது மனசு..!

கனவுகள் தொலைத்த
ஞாபக மாத்திரையில்
பத்திரமாயுள்ளது
உன் பெயரென்னும் போதை!

நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!

உனது சிரிப்பில்
சிதறிப்போனது
புன்னகை மொட்டுக்கள்
போதும்..
சற்று என்னை
பொறுக்கியாய் மாறவிடு!

உவமைகள் எல்லாம்
உன்னை கண்டு
வெட்கப்பட்டு
செத்துப்போகின்றன.
உனக்கு எதை உதாரணங்காட்ட!

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது.
நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து,
கவிதை வரியாய் வடிக்கிறது!

பூப்பறிக்க போகும் சமயம்
பூவை உன் முகம் தெரிகிறது
பூக்களெல்லாம் வாடிடுமென்றே
அதற்கும் குடையை விரிக்கிறது!

மொட்டை மாடி வெட்கச்சலனம்
நிலவும் கண்டு ரசிக்கிறது
மோதுகின்ற திருட்டுப்பார்வை
பத்திரப்படுத்த துடிக்கிறது!

மனதுக்குள்ளே இத்தனை காதல்
உன்னால் உணர முடிகிறதா?
உணர்ந்த பின்னும் மௌனம் காட்டும்
காதலே இதுதான் பெண் மனதா!?

கொட்டி வைத்த ஆசைகள் எல்லாம்
சேர்த்துப்பார்க்க நேரமில்லை
காதல் என்ற ஒற்றைச்சொல்லில்
கோத்துப்பார்க்க முடியவில்லை!

கைப்பிடித்து வீதியில் அலைந்த
நாட்கள் மிச்சம் கழிந்ததடி
உன்னை காணுகின்ற சமயங்கள்
எல்லாம் ஏதோ ஒன்று குறைந்ததடி!

உள்ளுக்குள்ளே சீறிப்பாயும்
காதல் மோகப்பாம்பென்றேன்
காதலிக்காக பைத்தியமான,
புதிய மஜ்னு நானென்றேன!!
**************

கவிதைகளில் விளையாடிவிட்டு சென்ற அண்ணன் சென்ஷிக்கு

நன்றி!

நன்றி!!

நன்றி!!!

( பயபுள்ள! பாவனா வேணாம் மீரா ஜாஸ்மினுக்கு பொறந்த நாளுன்னு போஸ்ட மாத்துன்னு சொல்றாருங்க! அந்தளவுக்கு அவருக்கு மீரா ஜாஸ்மின் மேல உசுராம்! அண்ணனுக்கு சப்போர்ட்டா அப்பப்ப மாப்பி கோபியும் ”மீராவின் கண்ணன் மீராவிடமேன்னு” ஸ்டேட்டஸ் விட்டு ஹாப்பி பண்றாராம்! சரி ஏதோ நம்மலால முடிஞ்சது மீரா ஜாஸ்மின் போட்டோஸ் தான்!)