Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

பயம் - பெங்களூரு குண்டு வெடிப்புகள்!


பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்!

ஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள்! இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா!

இது தொடர்பான சம்பவங்களும் அதாவது பயத்தின் அடிப்படையிலேயே நிறைய சம்ப்வங்கள் நம் நாட்டில் நிகழ்ந்திருக்கின்றன நிகழ்ந்துக்கொண்டும் இருக்கின்றன!

ஜம்ப் ஆகும் பூட்ஸ் மாட்டின திருடர்கள்!
தானாகவே எரியும் வீடுகள்!
சைக்கோ திருடர்கள்! என ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விசயங்கள் பிரபலமாகியிருந்தாலும் கூட முழுமையான விசாரணையில் இது மாதிரியான சம்பவங்கள் நடைப்பெற்றது பயத்தினை அனைவர் மத்தியிலும் வரவழைக்கவேண்டும் என்பதாகவே இருக்கும்!

இந்த அடிப்படையினைத்தான் தற்போது பெங்களூருவில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு தெரிவிக்கின்றன! ஏற்கனவே பெங்களூருவின் அறிவியல் கல்லூரியில் நிகழ்த்தப்ட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச்சுட்டு நிகழ்வுகளும் கூட இந்த செய்தியைத்தான் நமக்கு தெரிவித்தன!

ஏன் பெங்களூரூ தேர்ந்தெடுக்கப்படுகிறது? என்ற விஷயத்தில் நிறைய காரணங்களும் இருக்கின்றன! இதில் அரசியல் மட்டும் சுட்டிக்காட்டப்படுவது அவ்வளவாக சரியான விஷயமில்லை!

இந்தியாவின் சாப்ட்வேர் பூங்காவாக இருக்கும் நாடுகள் அனைத்திலும் தம் உதவியினை தினமும் தந்துக்கொண்டிருக்கும் ஒரு மையமாகவும் இப்போது பெங்களூரு திகழ்ந்துக்கொண்டிருக்கிறது!- இங்கு ஒரு சின்ன வன்முறை செய்திகூட அது பெருமளவில் பேசப்படக்கூடிய அளவு உலகளவில் தகவல் தொடர்பு துறை மிக விழிப்பாகவே இருக்கிறது!

இத்தனைக்கும் இப்போது பெங்களூரு பெருமளவு படித்தவர்களின் கட்டுபாட்டிலேயே உள்ளது! அப்படி இருந்தும் இது போன்ற சம்பவங்கள் - அதிலும் ஜனத்திரள் அதிகம் உள்ள இடங்கள் என்ற செய்தி வேறு - வேறு என்ன சொல்வது எல்லோருமே எவனா இருந்தா எனக்கென்ன மனநிலையிலேயே தத்தமது தினசரி வாழ்க்கையினை பழகிவருகிறார்கள்....!



கிட்டதட்ட 9 இடங்களில் குண்டுகள் வைக்கப்படுகின்றன, வெடிக்கச்செய்யப்படுகின்றன! யாராவது ஒருவர் கண்ணில் கூடவா இந்த காட்சி பட்டு சந்தேகம் எழுந்திருக்காது?

எழுந்திருந்திருக்கலாம்!

ஆனால்,

பயம்

கேள்வி கேட்பதில் பயம் - நீ என்ன செய்கிறாய்? என்று கேள்வி கேட்பதில் பயம்!

பொது இடங்களில் யாரும் யாரிடமும் கேள்வி கேட்கமுடியும்தானே!

இனி வரும் நாளிலாவது நாம் இந்த பயத்தினை தொலைத்து, வாழ முயற்சிப்போம்!

”வாழ்க்கையில பயம் இருக்கலாம் ஆனா பயமே வாழ்க்கையா இருக்ககூடாது”

தப்பே இல்ல! இந்த வார்த்தைகளினை பெரிதாக ப்ரேம் போட்டு வீட்டில் மாட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம்!

இந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும்,பாதிப்பில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அடையவேண்டி பிரார்த்தனையோடு....!

Mentholலில் விளை சுகமே....!

எனக்கு வர்றப்ப பாரின் சிகரெட்டு வாங்கிட்டு வா மாப்ளே!

டேய்...! பாரின் ரிடர்ர்ன்னு பாரின் சிகரெட்டு ஒண்ணும் வாங்கிட்டு வர்லையாடா?மச்சி!

உங்க ஊர்லெல்லாம் சிகரெட்டு மென் தால் தானாம்ல அது பத்தி ஒண்ணும் சொல்லமாட்டிக்கிறியேடா? ஒண்ணும் வாங்கி வந்துருக்கலாம்ல!

இப்பபடி பலரிடரிமிருந்தும் கோரிக்கைகள், கேள்விகள் தொடர்ந்த, பதில்கள் ஆதங்கங்கள் சந்தேகங்கள் எழவைக்கும் அந்த பாரின் சிகரெட்ல அப்படி என்னதாங்க விஷயம் இருக்கு.???



அப்படின்னு பார்த்தா பெருசா ஒண்ணும் விஷயம் இல்லைங்க! கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் விஷம் மட்டும் இருக்கறதுமட்டும்தான்!

அதிக புகையில்லாத அதே சமயத்தில் அதிக ஆபத்தினை விளைவிக்க கூடிய நிக்கோடின் அளவினை அதிகமாக கொண்ட இந்த மென்தால் வகை சிகரெட்டுக்கு இப்ப ரொம்ப நல்ல கிராக்கியாம்!

பொதுவாக பற்பசைகளிலும்,இருமல் சிரப்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த மென்தால் ஒரு கூலிங்க் எபெக்டினை மட்டுமே தரும் வேறு எதுவும் பிரத்யோகமான மருத்துவ குணங்கள் கொண்டவையாக இருப்பதில்லை! இந்த சங்கதியினை சிகரெட்டினில் நுழைத்து, இப்போது அதிக அளவில் பலரது விருப்பமான பொருளாக சிகரெட்டினை மாற்றியதும் இந்த மென்தால்தான்!

இந்த சிகரெட்டுகளை ஒரு முறை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் அந்த பழக்கத்தினை விட்டுச்செல்வது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறும் அளவுக்கு உங்களை அடிமைப்படுத்தும் அதிசயம்தான் அந்த மென்தாலின் மூலம்!




முன்பெல்லாம் மேம்போக்காக சிகரெட் குடித்தவர்கள் இந்த மென்தால் சிகரெட்டில் நீண்ட இன்ஹேலில் இன்பம் எய்துகிறார்களாம்! பாவம் அவர்களுக்கு தெரியாது அதிகம் நிக்கோடினையும் கார்பன் மோனாக்சைடினையும் கூடவே எடுத்துக்கொள்கிறார்கள் என்று !

நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?

நீங்கள் இணையத்தில் இருக்கும் காலங்களில் அதிக தேடி தேடி SEARCHல் ஈடுபடும் ஆளா?

அல்லது அவ்வப்போது இணையத்திற்கு வந்துச்சென்றாலும் எதாவது தேடுவதற்காகவே வரும் ஆளா நீங்கள்?

உங்களுக்குத்தான் இந்த செய்தியை நான் முதலில் சொல்லவேண்டும்!

தேடிக்கிடைப்பதில்லை

என்று

தெரிந்த ஒரு செய்தியை,

தேடிப்பார்ப்போம் என்று

தேட தொடங்குகையில்

கூகுள் உங்களுக்கு கைக்கொடுக்குமல்லாவா!

அந்த கூகுளாண்டவர் மற்றுமொரு வரமாக தன் பக்கத்தில் ஒரு பாகத்தினை உலக சுற்றுசுழலுக்கு நிதி திரட்டி சேவை செய்வதற்காய் கொடுத்திருக்கிறார்!


அந்த பக்கத்திற்கு சென்று நீங்கள் சர்ச்சில் ஈடுபடும்போது உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் உங்களை மகிழ்விக்கலாம்! ஆனால் அதே சமயத்தில் உங்களின் கிளிக்குகளால் கிடைக்கும் விளம்பர வருவாய் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ அமைப்புக்களுக்கு நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டும் உலகின் சுற்றுசுழல் இயற்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்! அது எப்படின்னு இங்க கொஞ்சம் சொல்லியிருக்காங்க இன்னும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில் கொடுக்கவும் தயாராகவே இருக்காங்களாம்!


சரி இதுல போய் நாம சர்ச் பண்றதால கூகுளை மாதிரியில்லாமல் தகவல்களை பிழையாக தருமோ அப்படின்னெல்லாம் நீங்க பயப்பட வேணாம் ஏன்னா? நம்ம கூகுள்ல இருக்கற அதே மெனுக்கள்தான் இதுலயும் இருக்கு ஜஸ்ட் ஸ்கின் மாத்தின டெம்ப்ளடேதான் ஸோ வர்ற ரிசல்ட்கள் எல்லாம் கூகுளாண்டவரிடமிருந்துதான்!

இனி உங்களுக்கு 'சர்ச்'சில சிக்கறதுக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம்,

இங்க போய் வார்த்தைகளால் வலை விரிச்சு காத்திருக்க முயற்சிக்கலாமே....!

கண்டிப்பாய் நல்லது நடக்க நாமும் காரணமாக இருக்கலாமே...!

சீனா பூகம்பமும், ஷெரான் ஸ்டோனின் ”கர்மா”வும் மற்றும் இன்ன பிற சங்கதிகளும்!

சுமார் 68000 ஆயிரம் பேரினை பலி வாங்கிய பூமி அன்னையின் செயலால் ஸ்தம்பித்துப்போய் நிற்கும் சீனாவிற்கு - இந்த காலகட்டத்தில் ஒலிம்பிக் போட்டிகளையும் வேறு நடத்தியாகவேண்டும் - கொஞ்சம் சிரமாமான காலகட்டம்தான்!

இந்த நேரத்தில்தான் கேன்ஸ் படவிழாவிற்கு வந்திருந்தா ஷெரான் ஸ்டோனிடம் ஒரு கேள்வியினை கேட்டிருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள்.

ப:- சீனா பூகம்பம் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என்று? ( இதுவும் வழக்கமான பத்திரிக்கைக்காரர்களின் கொலவெறி கேள்விதான். ஸ்டேன் புத்தமதத்திற்கு மாறியவர். சமீபத்தில் திபெத் தலைவர் தலாய் லாமாவிடம் அழகாய் வணங்கி ஆசி பெறுவதை அகில உலகமே ஏற்கனவே அறிந்திருந்த ஒன்றுதான்!)
இந்த கேள்விக்கு,மிக்க ஆர்வத்துடன் பதிலளித்த ஸ்டோன் ” எனக்கு முதலில் சீனா திபெத்திடம் நடந்துக்கொள்ளும் முறை வெறுப்படைய செய்கிர்றது. கருணையே இல்லாத செயலாக எனக்கு தெரிகிறது! எல்லா செயல்களும் எல்லா சோகங்களும் சீனாவிற்கு நிகழ்வதற்கு காரணம் கர்மா திபெத்தியர்களுக்கு அவர்கள் செய்த பாவச்செயலுக்கு பலன்தான் என்ற ரீதியில் கூறிச்செல்ல,- நீங்களும் இங்க போய் பார்க்கலாம்!

இப்ப அந்த மேட்டர்தான் சீன பத்திரிக்கைகளின் சூடான இடுகை பகுதிக்கு போயிருக்கு!

கிழிடா போஸ்டரை, படப்பொட்டியை தூக்கிட்டு போங்கடா அதையும் மீறி படத்தை போட்டிங்கன்னா தியேட்டரை எரிப்போம், அப்படின்னுல்லாம் மக்கள் மிரட்டாம, டைரக்டா கவர்ன்மெண்ட்டே சொல்லிடுச்சு இதையெல்லாம் செய்யாதீங்கடாப்பான்னு!?

இப்படிப்பட்டதொரு கடுமையான எதிர்ப்பினை கிளப்பிய இந்த செயலில் அதிகம் பாதிக்கப்பட்டது தியார் என்னும் அலங்கார பொருட்கள் சந்தைப்படுத்தும் நிறுவனம்தானாம்! ஏகப்பட்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட விளம்பரங்களில் ஸ்டோனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்ததால் அனைத்து பொருட்கள் + விளம்பரத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்பு வந்து இப்போதைக்கு கம்பெனி ஸ்டோனை கழட்டி விட்டுவிட்டது!

சரி! அப்படி என்ன, கர்மாவில அப்படின்னு கேட்கறவங்களுக்கு கர்மா - இந்துக்களும் சீக்கியர்களும் புத்தமதத்தினை சார்ந்தவர்களிடையே அதிக புழக்கத்தில் இருக்கும் சொல்லாகும்!

கர்மா என்பதன் பொருள் வினை அல்லது செயல் என்று கூறலாம் (சரியான்னு சொல்லுங்கப்பா!)

ஏற்கனவே செய்த செயலுக்கான பலனாகவும் இந்த கர்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது!

ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது பொது!

கர்மா என்பது அவரவர் வினைப்பயன்,அதாவது அவரவர் செய்யும் நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு ஏற்றாற்போல பலன் வந்து சேரும்! நம் தமிழில் இதற்கு ஊழ் வினை என்றும் கூட பெயருண்டு!

சரி இத விட்டுதள்ளுங்க அப்புறம் பார்த்துக்கலாம் ஷெரான் ஸ்டோனுக்கு என்னாச்சுன்னு சொல்லணும்ல....

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும் கெட்டது நினைச்சா கெட்டதுதான் நடக்கும்ங்கற விஷயத்தை தான் அந்தம்மா சொல்லியிருக்காங்கன்னு பலர் ஸ்டோனின் கருத்துக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க, கடைசியா ஸ்டோன் சொன்னது:

நான் எதுனா தப்பா சீனா மக்களை பத்தி சொல்லியிருந்தா அதப்பத்தி கண்டுக்காதீங்க! நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!

(அப்படின்னுத்தானே சொல்லியாகணும் இல்லாங்காட்டி தியார் எவ்ளோ காசு போட்டு விளம்பரம் எடுத்து எல்லாத்தையும் பொட்டியில போட்டு பூட்டி வைக்கறதுக்கா!?)

ILA - இளா 2008

ஒவ்வொரு முறையும் இவரின் நிகழ்வுகள்!
எல்லோரையும் பரவசத்தில் ஆழ்த்தும் விதமாகவே இருந்துவந்துள்ளது!
நீண்ட காலமாக இவரின் செயல்பாடுகள் நம் பாரம்பரியத்தையும் சுட்டிகாட்டும் விதமாகவே இருந்துவந்துள்ளது!

சில காலங்கள் இயங்க முடியாத சூழல் இருந்தும் கூட, பெரும்பாலோனரின் முயற்சியில் மீண்டும் ஆட தொடங்கிவிட்டார்கள்!

சாரங்க் (மயிலாக மாறியவள்)


மயில் தோகை விரித்து ஆடும் இயந்திரபறவைகளாய் நம் இந்திய ஹெலிகாப்டர்கள் பறந்து ஆடிக்கொண்டிருக்கும் பெர்லின் நகரம்!

ஜெர்மனியின் பெர்லினில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் விமான கண்காட்சியில் உலகில் சுமார் 37 நாடுகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட விமானங்களின்,அணிவகுப்புகளுடன் தொடங்கி,போய்க்கொண்டிருக்கிறது!

உயர்ந்துக்கொண்டே இருக்கும் பெட்ரோலிய பொருடகளின் விலைகள் அதற்கேற்றார்போல மாற்றி அமைக்கவேண்டிய சூழலில் விமான தயாரிப்பு நிறுவனங்கள் இதுவே இந்த கண்காட்சியின் முக்கியமானதொரு அம்சமாக எதிர்பார்க்கப்படுகிறது!


புதிய ரக விமானங்களின் அறிமுகங்களும் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இந்த கண்காட்சியில் பல நாடுகளின் கொள்முதல் ஆர்வத்தை தூண்டு விதமாக புதிய வடிவமைப்பில் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு சாம்பிள்தான் இந்த நியோ (குட்டியூண்டு ஹெலிகாப்டருங்க அனேகமா,கார் மக்களின் அடுத்த ஆர்வமிக்க பொருளாக மாறக்கூடும்!)

விமானங்களில் திங்கிறதுக்கு சோறும் குடிக்கிறதுக்கு கொடுக்கப்படும் தண்ணியும் வைக்க பயன்படுத்தப்படும் கண்டெய்னர்களுக்கு செலவிடப்படும் இடமும், மின் வசதியையும் குறைக்கும் நோக்கத்தில் பாக்கெட்வடிவில் கூல் ஆக்வும் ஹாட்டகவும் அதே சமயத்தில் குறைந்த இடவசதியோடும் இருக்கும் வகையிலான பேக்குகளும் கூட இந்த கண்காட்சியின் ஸ்பெஷல் ஐட்டங்களாம்!

ரொம்ப தூரம் நீண்ண்ட நேரம் பயணிப்பவர்களின் வசதிக்காக அதுவும் எகனாமிக் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அரெஸ்ட் ஆகி இருக்கும் நிலைமையை விடுவித்து, அங்க இங்க அலையறதுகும், அப்பப்ப உடம்பை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி சாதனங்களை நிரப்பப்போகிறார்களாம் அதுவும் கூட இந்த கண்காட்சியின் இன்னுமொரு ஸ்பெஷல்!





இன்னும் கூட நிறைய ஸ்பெஷல்கள் 1ண்ணு 1ணா வெளியே வரும் இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல :-)

நான் அப்பவே சொன்னேன்ல - சைக்கிள் ஸ்டேண்ட்!

நம்மளோட நிலைமை;
பூமியோட நிலைமை;
நாட்டோட நிலைமை;
இதையல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கஷ்டமாத்தான் இருக்கு! :-(

எவ்ளோ பேர் சொல்லிக்கிட்டு இருக்காங்க! உங்க லைப் ஸ்டைல மாத்திக்கோங்கப்பா! மாத்திக்கோங்கப்பான்னு, ஆனாலும் அக்கம்பக்கத்தில் கடனை வாங்கியாவது வண்டி வாங்கி ஊர சுத்த சொல்லுது மனசு!

இப்ப வண்டி வாங்குறதுக்கு கடன் கொடுத்த காலமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு இனி பெட்ரோல் வாங்குறதுக்கு பங்க்ல பாங்க் ஒபன் பண்ணி கடன் கொடுக்கற நிலைமை வர்ற வரைக்கும் ஆடுங்க மக்கா ஆடுங்க அப்படின்னுத்தான் சொல்லத்தோணுது! நம்ம ஆளுங்க விதவிதமான ஸ்பீடுகளில் & ஸ்டைல்களில் வண்டி மாடல் பார்த்து பார்த்து வாங்கறதுல்ல ஆர்வமா இருக்கோம்!

பெரிய பெரிய நாட்டுல இருக்கறவங்களெல்லாம் இப்ப சைக்கிள் சவாரி தான் அதிகம் செய்யிறாங்க! சைக்கிள் சவாரிகள் அதிகமான அதுக்கேத்த மாதிரி பார்க்கிங், பிராப்ளங்களையும், சைக்கிளை பத்திரமாவும் பாதுகாத்து அதே சமயத்தில் நல்ல இடவசதியோடயும் ரொம்ப ஈசியாக்கிற மாதிரி விதவிதமாவும் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

எது எப்படியோ போனாலும் ஒரு காலகட்டத்தில நாமும் இந்த மாதிரி ஒரு நிலைமைக்கு கண்டிப்பா வரப்போற நாளும் வரக்கூடும்ல அப்ப நமக்கும் இது மாதிரியான ஒரு ஏற்பாடும் வேண்டியிருக்கும்!



அதனாலதான் மக்களே! இப்பவே வெளிநாட்டுக்காரனுங்க ஐடியாவை மேலோட்டமா நான் சொல்லிடுறேன்! அப்புறம் உங்க திறமையில இத நீங்க நல்ல டெவலப் பண்ணி வைச்சீங்கன்னா வரும் கால வரலாற்று புத்தகத்தில உங்க பேர நல்ல அழுத்தமா பதிக்க முடியும்!

1.வண்டியை அப்படியே மேலாக்க நிப்பாட்டிடணும்
2.முன்னாடி சக்கரத்தோட லாக் ஆகிடுடற மாதிரி ஒரு அமைப்பு இருக்கு அது அப்படியே ஆட்டோமேடிக்கா லாக் பண்ணிக்கும்!
3.இப்ப நீங்க ஸ்டார்ட் பண்ணனும்
4.இப்ப நீங்க ஒரு கைரேகை வைக்கணும் ( இது திருட்டு போகாம இருக்க)
5.ஒ.கே பண்ணுனா வண்டி சர்'ருன்னு மேலே போயிடும்! (ஒரேடியா இல்லைங்க கொஞ்ச தூரத்துக்குத்தான்!)

குறிப்பு :- ”நான் அப்பவே சொன்னேன்ல” இது என்னோட ஹிஸ்டரி ரெபரன்ஸ்க்கு! :-)

உலகமே பார்க்கும் அர்விந்த கண் மருத்துவமனை - மதுரை


40 வருடகால மருத்துவசேவையில் அதுவும் மிக மிக முக்கியமான உலகை காணும் உறவைக் காணும் உண்மையை காணும் ஒரே உறுப்பாக செயல்படும் இரு ஜோடிக்கண்களின் எந்த பிரச்சனைகளாகிலும் கவனமுடன் கையாண்டு பலருக்கு பார்வை பிச்சை அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனை

மதுரை கோவிலுக்கும் மல்லிக்கைப்பூவுக்கும் இட்டிலிக்கும் மட்டுமல்ல இந்த மருத்துவமனைக்கும் கூட நல்ல பேரும் புகழும் உண்டு இது எங்கள் மாவட்டங்களில் மட்டும்தான் என்று நான் நினைத்திருந்தது ஆனால் உலகம் முழுவதும் இந்த மருத்துவ சேவையின் அருமை பெருமைகள் பலரால பலரிடத்திலும் பரப்பபட்டு இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளும் படியான ஒரு சேதிதான் இது!

2008 ஆம் ஆண்டிற்கான கேட்ஸ் விருது - உலக அளவில் மருத்துவ துறையில் இதுதான் அதிக மதிப்புமிக்க பரிசுப்பொருளாம் - $1 மில்லியன் டாலர் பெற்றுள்ளது.


1976ல் ஜி.வெங்கடசுவாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவமனையின் சேவையில் 2.4மில்லியன் மக்களினை பார்வை அளித்து பயனான வாழ்வினையும் பெற்று தந்துள்ளதாம்!


எங்கள் ஊர்லிருந்தும் பலரும் சென்று பார்வை பெற்று திரும்பிய அனுபவங்களை நேரில் கண்டவன் என்ற முறையில் இந்த மருத்துவமனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

தொடரட்டும் தொண்டுள்ளம் கொண்ட மக்களின் சேவைப்பணிகள்!


அரவிந்த் கண் மருத்துவமனை - மதுரை பற்றி பதிவர் யாத்தீரிகனின் பதிவிலிருந்து

சாராய சாவு - கண்டுபுடிச்சிட்டோம்ல!

கிட்டதட்ட 180 பேருக்கும் மேல் பலிவாங்கிய சாராய சாவின் ஆரம்ப கட்ட விசாரணையில் அந்த சாராயத்தில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்டதுதான் காரணம் என்று தெரியவந்துள்ளதாம்!

இது பற்றிய செய்தியாக...

தமிழகம், கர்நாடகத்தில் சாராயம் குடித்து 134 பேர் இறந்த சம்பவத்துக்கு, அதில் கலக்கப்பட்ட "மெத்தனால்'தான் காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள கள்ளச்சாராய விற்பனையாளர்கள் போலீஸரால் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். பழைய சாராய வியாபாரிக ளைக் கணக்கெடுத்து கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

100 மில்லி லிட்டர் கொண்ட எத்தில் ஆல்கஹால் அல்லது எரிசாராயம் ஆகியவற்றைக் கொண்டு 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்தால் 1,000 மில்லி எத்தில் ஆல்கஹால் கிடைக்கும்.இதைக் குடிப்பதால் உயிருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. ஆனால் சிலர் எத்தில் ஆல்கஹாலுக்குப் பதிலாக மெத்தனாலை வாங்கி 1:10 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து குடிக்கின்றனர். இது முதலில் கண் எரிச்சலைக் கொடுக்கும். பின்னர் கண் பார்வை மங்கி உயிரைப் பறிக்கும்'' என்றார் ஒரு போலீஸ் அதிகாரி. "


இதோடல்லாமல் ஆய்வகங்களில் எப்படி சரியான முறையினில் சாராயம் தயாரிப்பது என்று கரெக்ட் பார்முலாவினை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு வழிமுறைப்படுத்தி கொடுக்கவும் ஏற்பாடு செய்ய *** உத்தரவிட்டுள்ளது!

பாடி பிரிட்டானியா பிஸ்கெட் பேக்டரி - CLOSED


சென்னை பாடியில் இருக்கும் பிரிட்டானியா பிஸ்கெட் பேக்டரி கடந்த 7ந்தேதியுடன் தனது உற்பத்தியினை நிறுத்திக்கொண்டு அங்கு வேலைப்பார்த்து வந்த சுமார் 200 தொழிலாளர்களுக்கு விருப்ப ஒய்வு திட்டத்தின் அடிப்படையில் பணி ஒய்வளிக்க முடிவெடுத்துள்ளது.

பெரும்பாலுலான பிஸ்கெட் உற்பத்தியை அவுட்சோர்ஸிங் முறைக்கு அனுப்பிவிட்ட பிரிட்டானியாவிற்கு வரும் லாப விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கையில் இங்கு சென்னையில் உள்ள தொழிற்சாலையை மூடி தொழிலாளர்களை அவர்களின் விருப்பத்தோடு வீட்டுக்கு அனுப்பி, கிட்டதட்ட 20 ஏக்கர் நிலத்தையும் விற்றுதீர்த்தால் நல்ல லாபமாம் அதனாலேயே உடனே முடிவெடுத்துவிட்டது!

ஏற்கனவே மூன்று ஷிப்டுகளாக இயங்கி வந்த உற்பத்தி இரண்டு வருடங்களாக ஒருஷிப்டில் மட்டுமே இயங்கி வருகிறதாம். சில வருடங்களுக்கு முன்பே சுமார் 250 பேரை வீட்டு வி.ஆர்.எஸ்ஸில் அனுப்பிவிட்டார்களாம்.

தற்போதைய பாடி ஃபேக்டரி இடம் ஹச்.சி.எல் ஷிவ் நாடாரின் கைக்கு செல்கிறது கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தொழிலில் கட்டுமானங்களை உருவாக்க ஹச்.சி.எல் முடிவெடுத்து போட்டியில் முதலில் உள்ளது .

அவுட் சோர்சிங் முறையில் தற்போது தமிழ்நாட்டில் சோழிங்க நல்லூரிலும் மதுரையில் வெள்ளக்கோவிலும் சுமாராக 2500டன்கள் தயாரிக்கப்படுகின்றதாம்.

பாடி பஸ்நிலையத்தில் நிற்கும்போதும் சரி அந்த ஃபேக்டரியின் காம்பவுண்ட் சுவரினை ஒட்டி இருக்கும் சந்து வழியாக சீனிவாசா நகர் செல்லும்போதும் சரி,ஃபேக்டரி புரொடெக்‌ஷனிலிருந்து, காற்றினில் கலந்து வெளிவரும் அந்த இனிய பிஸ்கெட் வாசம் - இனி வராத அந்த வாசத்தை - ஏனோ இன்று ஞாபகப்படுத்தியது.

வேணாம் ராசா வந்துடு...!

மலைக்குன்றுகள் நிறைந்த, எந்த நேரமும் கடுமையானதாக்குதல்கள் நடைபெறும் ஆப்கானின் ஹெல்மண்ட் ( இந்திய விமானம் கடத்தல் நாடகம் அரங்கேறிய கந்தகாரின் அருகாமை பகுதிதான்) மாகாணாத்தில் இங்கிலாந்தின் ராணுவத்தில் பணி. சார்லஸ் டயானா ஜோடியின் அருமை புதல்வன் ஹாரிக்கு..!

அரச பரம்பரையில் இரண்டாவது ஆளாக போர்க்களம் கண்டவர்,சென்றவர்தான் ஹாரி!
இச்செய்தி கேட்டு இங்கிலாந்து செய்தி நிறுவனங்கள் ஹாரியை பின் தொடர்வதற்கு முன்பே பாதுகாப்பு துறையிலிருந்து செய்தி நிறுவனங்களுக்கு ரகசிய தகவலாக இத்தகவலை ரகசியமாக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது!

டிசம்பர் மாதத்திலிருந்தே தன் பணியை ஆப்கானிஸ்தானில் துவக்கிய ஹாரிக்கு மூன்றாம் நிலையில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தை புகைப்படங்களோடு, புதன் கிழமை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியது ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கை !

கொஞ்சம் புகைப்படங்கள்தான் வெளியான நிலையில் பல தரப்பிலிருந்தும் விதவிதமான புகைப்படங்கள் இன்று பத்திரிக்கைகள்,இணையங்களை ஆக்ரமித்துக்கொள்ள,எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல கதையாகி விட்டது ஹாரியின் நிலைமை!

இந்நிலையில் அரச குடும்பத்தின் சார்பில் ஹாரியை திரும்ப வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது! இன்னும் சில நாட்களில் திரும்ப சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்.ஆப்கானிஸ்தானில் போர்க்களத்தில் பணி புரிந்த இளவரசருக்கு தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் வரும் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு அவர் தற்போது இருக்கும் இடம் பற்றிய தகவல்கள் வெளியிடப்படாமல் வைக்கப்பட்டுள்ளது!



PHOTOS - HERALD TRIBUNE


மே மாத காலத்திலேயே இவருக்கு இராக்கில் இருக்கும் ப்ளூஸ் & ராயல் படைப்பிரிவில் பணியில் செல்ல தயாராக இருந்தபோது கடைசி நேரத்தில் அங்கிருந்து வந்த தகவல்களின் அடிப்படையில்,பாதுகாப்பு காரணங்களால் தவிர்க்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பரில் ஆப்கானிஸ்தான் சென்றவராம்!

மேலும் சில படங்களுக்கு இங்கே செல்லவும்!

பெனசிர் பூட்டோ


இன்று மாலையில் நடந்த பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசிர் பூட்டோ சரியாக பாகிஸ்தான் நேரப்படி 6.16 மரணமடைந்தார்! 15க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்

சென்ற அக்டோபர் 19 அன்று பாகிஸ்தான் வந்திறங்கியபோதே நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலில் தப்பி பிழைத்த பெனசிருக்கு அந்த சம்பவத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 136 பேரை பலி கொடுக்க நேர்ந்தது!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் மகளான இவருக்கு கூடபிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள்,ஹார்வர்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகங்களில் பயின்ற இவர் பிறந்த இடம் பாகிஸ்தானில் கராச்சி
பின்னாளில் பெனசிரின் இரண்டு சகோதரர்களையும் தனது தந்தையையும்,இவரது தந்தையிடமிருந்து ஆட்சியை பறித்த ஜியா-வுல்-ஹக்கால் கொல்லப்பட்டனர்!

பெனசிர் தனது புத்தகத்தில் ,பாகிஸ்தான் நாடு மற்ற நாடுகளைப்போன்று சாதரண சூழலை கொண்ட நாடல்ல, என்றும் அது போலவே எனது வாழ்வும் சாதரண மனிதர்களை போன்றதல்ல என்றும் பலவிதமான கஷ்டங்கள்,சோகங்களை சந்தித்திருப்பதாகவும் மேலும் பாகிஸ்தானின் அரசியல்தான் என்னை தேர்ந்தெடுத்தது என்றும் தான் நினைத்துகூட பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்!

1988ல் விமான விபத்தில் ஜியா-வுல்-ஹக் பலியான பிறகு நடந்த தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமராக பாகிஸ்தானின் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தார் பெனசிர்! பிற்பகுதியில் ஊழல் காரணமாக 1990ல் ஆட்சி கலைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்,திரும்பவும் 1996ல் ஊழல் காரணமாக ஆட்சியை இழந்தார்!

பின்னர் வந்த அரசியல் மாற்றங்களில் 1999க்கு துபாய்க்கு சென்ற பெனசிர் அங்கும் லண்டனிலும் தம் பிள்ளைகளுடன் காலத்தை கழித்து வந்த நிலையில் இவர்தம் கணவர் ஊழல் வழக்கில் 8 வருட சிறை வாழ்க்கையிலிருந்து 2004 வெளிவந்த பிறகு, முஷாரப்புடனான உடன்படிக்கையின் படி மீண்டும் பாகிஸ்தானில் கால்பதித்தார் அக்டோபர் 19 அன்று !

முஷாரப்புக்கும் பெனசிரிக்குமிடையே ஏற்பட்ட சமரச உடன்பாட்டிற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் இருந்ததும் இதனால் ஜிகாதிகளிடமிருந்தும்,அல்கய்தாவிடமிருந்தும் மிரட்டல்கள் வரும் என்றும் பெனசிர் எதிர்பார்த்திருந்தார்!

அன்று பெனசிர் எதிர்பார்த்தது நடந்தது இன்று !

Dr.ராமதாஸ் - உரிமைக்குரலா..??


ராமதாஸின் பார்வை இப்போது புறம் போக்கு நிலங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது ! (அட கருணை பார்வையோடத்தாங்க...!!!)

ஆறுகள் குளங்களை ஆக்ரமித்து கட்டப்பட்டிருக்கும் குடிசைகள் வீடுகளுக்கு நிரந்த பட்டா வழங்குவதன் மூலம் இனியும் யாரு ஆக்ரமிப்ப்பு செய்ய மாட்டார்கள் என்ற தீர்க்க சிந்தனையின்பால் வெளிவந்துள்ள கருத்துக்கள்!

ராமதாஸ் சொல்வது போல அங்கு தம் ரத்தம் சிந்தி உழைத்த காசை கொண்டு ஆற்றின் கரைகளில் பெற்ற சிறு துண்டு நிலங்களை கல் மண் கொண்டு குடிசை வேய்ந்து காலம் தள்ளிக்கொண்டிருப்பது 100 சதவீகிதம் உண்மையே!

சாதரண கூலி வேலை செய்யும் அவர்கள் இவ்வளவு தைரியமாகவா எதிர்கால சூழ்நிலைகளை பற்றி சிந்திக்காமலா புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டுவார்கள்?

அரசியல்வியாதிகளே இதற்கு முழுமுதல் காரணம் !

கூலி தொழிலாளிகளிடமும் கூட பெற்ற அந்த காசினை கொண்டு தம் வளமான வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் கீழ்மட்டத்தில் உள்ள தம் அடிப்பொடிகளிடம் தான் இந்த கலெக்ஷன் கலாச்சரத்தை வழிநடத்தி செல்ல யோசனை அளிக்கின்றனர்!

அவ்வப்போது விழித்துக்கொள்ளும் அரசு துறையினர் ஆக்ரமிப்பு அகற்றல் என்ற ஆயுதம் ஏந்தி புறப்படுகையிலேயே நமக்கு தெரிந்து விடும் அது அவர்களின் கையில் இருக்கும் மொக்கையான கத்திதான் என்று! அப்படியே சில ஷார்ப்பான அதிகாரிகளும் மேல்மட்டத்து ஆட்கள்,மூலம் மொக்கையாக்கப்படுகின்றனர்!

இந்த அரசு இதை செய்ல்படுத்தாவிட்டாலும்,இனி வரும் 2011ல் பா.ம.கவின் ஆட்சியில் (?!) இது செயல்படுத்தப்படக்கூடும்! அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் இன்றிலிருந்தே தொடக்கப்பட்டு விடக்கூடும் (அதாங்க கலெக்ஷன்ஸ்...!?)

வாழ்க ஜனநாயகம்

ஆறுகளின் கரைகள் கரைந்து,

எழும்பட்டும் எங்களின் இல்லங்களாய்....!!!

திருநீர்மலை – “கழிவு”ப்பாதையில்

சென்னைவாசிகளுக்கு அதிகமே பழக்கமான ஊராக கூட இது இருக்ககூடும்

திருநீற்றுமலையாக ஆன்மிக அன்பர்களுக்கு காட்சி அளித்துக்கொண்டிருக்கும் காஞ்சிபுர மாவட்டத்தின் ஒரு சின்ன ஊர்தான்!

இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது! சுமாராக 200 மேற்பட்ட வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளிலிருந்து பெறப்படும் மீத்தேனை உபயோகித்து,அதன் முலம் சுமார் 3000 வாட்ஸ் சக்தியை பெற்று அங்குள்ள வீதிகளுக்கு விளக்குகளால் வெளிச்சம் அளித்துக்கொண்டிருக்கின்றனர்!


அங்கு அல்லது இங்கு போய் பாருங்களேன் என்னதான் நடக்கிறது என்று...? (அட நாத்தமெல்லாம் கிடையாதாம்ங்க!)

தமிழ்நாடு காங்கிரஸ் (நக்மா கோஷ்டி)


இருக்கற கோஷ்டிகளை எண்றதுக்குன்னு ஒரு கோஷ்டி போட்டா அவங்களும் சத்தியமூர்த்தி பவன்ல் உக்காந்துக்கிட்டு தனி தர்பார் நடத்துவாங்க! அப்படியாகிப்போச்சு, நம்ம தமிழ்நாடு காங்கிரஸ் நிலைமை (சும்மா டீ கொண்டு வந்து கொடுக்கற டீக்கடை ஆளுங்களுக்கே அந்த கோஷ்டி பாதிப்பு உண்டாம்ல..! )

இப்படி பட்ட இக்கட்டான நிலைமையிலதான் அன்னை சோனியா கூறவுள்ள உத்தரவை ஏற்று மக்கள் பணி ஆற்ற வருகிறார் நக்மா!

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பும், டெல்லியில் முக்கியமான எம்.பிக்களுக்கு விருந்து அளிக்கும் வழக்கம் கொண்ட நம்ம நெல்லை எம்.பி தனுஷ்கோடி ஆதித்தனின் இந்த வருட பார்ட்டியில்,பிரதமர் மற்றும் அன்னை சோனியா பங்கேற்க, அந்த பார்ட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தாரம் நக்மா!

அன்னை சோனியாவின் ஆலேசனையின்படி, மிக விரைவில் அறிக்கை ரீலிஸோட அசத்தல் அறிமுகம் அரசியலில்...!

நேஷனல் லெவலா இல்லை தமிழ்நாட்டு லெவல்லையான்னு இன்னும் சரியா தெரியலைங்க!

எது எப்படியே…! நல்ல கில்(ஜில்)பான்ஸியா இருக்கும்ல :)))

டூபாயில் கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்...!




டூபாயில் பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஜூமைரா பீச் ரோட்டில் ஜில்லென்று ஜொலிக்க தொடங்கி விட்டது பேருந்து நிறுத்தம்!

ஆனா பாருங்க இப்ப சீசன கூல்ல்ல்ல்ல்.....!

(டூபாய் பத்தி - எனக்கு அங்க வேலை கிடைக்காததாலத்தான் நான் துபாய் கூட டூ விட்டுட்டேன்..!)

படங்கள் - X Press

குப்பைகளின் கூடாரமாகப்போகும் இந்தியா..!


பாடாத ரேடியோக்கள் & டேப்புகள், பழைய இத்துப்போன சைக்கிள்கள்,பெரிய பெரிய மருந்துப்பாட்டில்கள், மற்றும் இன்னும் பிற உபயோகப்படுத்தப்பட்டு பின்பு, உபயோகிக்கமுடியாத நிலையை அடைந்த பொருட்களை அடைகாத்து வைத்திருக்கும் மனிதர்களை நீங்கள் கண்டிப்பாக சந்தித்திருக்ககூடும்!

ஒரு பிரயோசனமில்லவிட்டாலும் கூட அதை இழக்க மனமின்றி இருக்கும் மனிதர்கள்!

அப்படியே சிலரால் தூக்கி எறியப்படும் பொருட்கள் இதே மனநிலை கொண்ட மற்ற மனிதர்களால் கைப்பற்றப்பட்டு, மீட்டு கொண்டு வந்து வீட்டில் அடைத்து வைப்பவர்களும் உண்டு!

இதே மன நிலையில்தான், இப்போது நமது மத்திய அரசாங்கமும் செயல்பட போகின்றது!

உலகநாடுகளிலிருந்து வீணான பொருட்களை பெற்று அதைக் கொண்டு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது! ஆனால் இதனால் வரும் காலத்தில் உலகிலில் இருந்து வரும் குப்பை பொருட்களின் கூடாரமாகத்தான் நம் நாடு மாறிப்போகுமே ஒழிய இதனால் வேறு பலனேதும் இல்லை! அது மட்டுமின்றி கவர்ன்மெண்ட் சொல்வது, போல 60 சதவீகிதமான பொருட்கள் மறு சுழற்சி முறையில் உபயோகிக்ககூடிய பொருட்கள்தான் எனற கான்செப்ட் ஒ.கேதான்! என்றாலும் பிரித்தெடுக்கப்படும் உபயோகிக்ககூடிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை எப்படி நாம் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்போகிறோம் எனபது ஒரு பெரிய ?

ஏற்கனவே சுற்றுசுழல் ஆர்வலர்கள்,அறிஞர்கள் என பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பான கருத்துக்கள் அரசை சென்றடைந்திருக்கும் நிலையில், என்ன விதமான முடிவு என்பது இனிமேல்தான் தெரியும்!

எது எப்படியோ, வரும் காலங்களில் நாட்டை குப்பையாக்குவதாக இருந்தாலும் சரி,கோபுரத்து உச்சியில கொண்டு போய் வைக்கிறதா இருந்தாலும் சரி, எல்லா முடிவும் அரசியல்வாதிகள் கையில்தானே இருக்குது…?!

மருத்துவ மாணவர்கள் போராட்டம்?


பெரிய திரையின் பின்னால் சுற்றி,

சின்ன திரையில் எண்ணங்களை சிதறவிட்டு,

செமஸ்டர் அரக்கனின் பிடியில் சிக்கி,

பருவ கோளாறுகளில் பங்கேற்று,

இளம்வயதில் இளமை கொண்டாட்டங்களே,

வாழ்க்கையாக்கி கொண்டு,

பல

வேடிக்கை மாணவர்களை போல - நாம்

வீழ்வோ மென்று நினைத் தீரோ...!?


போராட்டம் வெற்றி பெற

வாழ்த்துக்களுடன்....!

அடிமாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா? - பார்க்கலாம்!

கோமாரி நோய் பாதிக்கப்பட்ட, கறவை மாடுகளை அடி மாட்டு விலைக்கு விற்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில்...!??

பெரும்பாலும் அடிக்கடி செய்திகளில் தென்படும் விஷயம்தான்! அதுவும் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த செய்திகள் சர்வ சாதாரணம்! சாதரணமாக பார்க்கும் நமக்கு இது அந்தளவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது! ஆனால் இதனால் பாதிக்கப்பட்ட மாடுகளால் பாதிக்கப்ப்ட்டு பெரும் கடன் சுமைக்கு ஆளாகி பலர் விவசாய தொழிலையும் கிராமத்தையும் நிலத்தையும் விட்டு சென்றுள்ளனர் என்பது புள்ளி விவரங்களை கொண்டுதான் இதன் அபாயம் புரியும் சாதரணமாக கிராமங்களில் அந்தளவுக்கு சுகாதாரம் பேணும் வகையில் மாட்டு தொழுவங்கள் இல்லையென்றாலும், தினப்படி தொழுவத்தை சுத்தப்படுத்தித்தான் பிற வேலைகளை கவனிக்கின்றனர் ஒரு பயபக்தியும் இதற்கு காரணம்!

ஆனால் இதையெல்லாம் மீறி மாடுகளை இந்த கொடிய கோமாரி நோய் தாக்குகிறது சிறிது சிறிதாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோயால் மாடுகளின் அவதியினை காண் கஷ்டமாகத்தான் இருக்கும்!


மாடுகளின் கால்களிலும் வாயிலும் வரும் கொப்புளங்கள் பெரும் புண்களாகி பின் சில நாட்களில் மாடுகளால் தாங்க முடியாத அளவுக்கு ரணத்தில் கொண்டுபோய்விட்டுவிடுகின்றன!

மொத்ததில் இந்த நோய் வந்த மாடுகளை வைத்து கொள்வது என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தை சீக்கிரத்தில் உண்டாக்க ஒரு எளிய வழிதான்!

பெரும்பாலானோர் அடி மாட்டு விலைக்கு தள்ளிவிடுவதை நிறைய இடங்களில் காணலாம்!

தற்போதைய சூழலில் விவசாயத்தோடு சேர்த்து இது போன்று மாற்று தொழில்களையும் சேர்த்து செய்வதால் ஒரளவுக்கு கடன் தொல்லையின்றி இருக்க நினைக்கும் விவசாயிகளுக்கு இந்த பிரச்சனை பெரும் பிரச்சனையாகவும் மீள இயலாத அளவு இழப்புக்களையும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது!

தீர்வு காண்பதில் தீவிரம் காட்டவேண்டிய அரசு மருத்துவ முகாம்களை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தாலும், நிரந்தர நோய் தடுப்பு தீர்வுக்காண முயற்சிகள் இது வரைக்கும் இல்லை!?

இன்னாப்பா இது..? - 2



திருவாரூர் மாவட்டம் பூராவும் பிரச்சனையே கூடுமான அளவில் பஸ் வசதி இல்லைங்கறதுதான், கஷ்டம் தெரிஞ்சவங்களே இப்படின்னா...??

கிரெடிட் கார்டு பார்ட்டிகளுக்கு – தினமணியிலிருந்து....

நீங்கள் கிரெடிட் கார்டு உபயோகிப்பவரா? அப்படியானால் உங்களது கிரெடிட் கார்டின் எண்ணைக்கூட யாருக்கும் தெரியப்படுத்தவோ, தரவோ வேண்டாம். ஏனெனில், உங்கள் கிரெடிட் கார்டு எண் வேறு யாருக்காவது தெரிந்திருந்தால் அதைப் பயன்ப டுத்தி உங்கள் பணத்தைச் சுருட்டிவிட முடியும். இத்தகைய நூதன மோசடிக்கு ஒரு புதுவித சாஃப்ட்வேர் உதவுகிறது என் பது அதிர்ச்சிகரமான தகவல். எனவே, அவ்வப்போது உங்க ளின் கிரெடிட் கார்டு கணக்கு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.அதுபோல தனி நபர் கடன் பெறுவதற்கோ அல்லது வேறு உபயோகத்துக்கோ கிரெடிட் கார்டின் "இருபக்க ஜெராக்ஸ் நகல்களை' யாருக்கும் கொடுக்கக் கூடாது.

சென்னையில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி தொடர்பான மோசடிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. 2006-ம் ஆண்டு புள்ளி விவரப்படி கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய நிலவரப்படி 2007-ல் இதுவரை சுமார் 19 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. 32 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். கிரெடிட் கார்டு மோசடி தொடர்பாக தினந்தோறும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்று போலீஸôர் தெரி விக்கின்றனர்.


நூதன மோசடி நடப்பது எப்படி? கிரெடிட் கார்டில் நூதன முறையில் தற்போது மோசடி நடந்து வருகிறது. பொதுவாக கிரெடிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்ட் எதுவும் தேவையில்லை.

நீங்கள் "எலக்ட்ரானிக்ஸ் டேட்டா கேப்சர்' என்ற இயந்திரத்தில் "ஸ்வைப்' செய்தால் உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்.தற்போதோ கிரெடிட் கார்டு இல்லாமலேயே, அதாவது கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு உங்களது பெயரில் பணத்தைச் சுருட்டி விட முடியும்.

சில வங்கிகள் இதற்கான சேவைகளை வழங்கி வருகிறது.நட்சத்திர ஹோட்டல்கள், கிளப் களில் இம்மாதிரியான சேவையைப் பெற முடியும். இதற்கு "கீ என்ட்ரி ஆப்ரேஷன்ஸ்' என்ற புதிய சாஃப்ட்வேர் முறை பின்பற்றப்படுகிறது.

இதன்படி கிரெடிட் கார்டு எண்ணை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்காவிலோ அல்லது பிரான்ஸிலோ உள்ள ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை புக் செய்து கொள்ள முடியும்.

இம்மாதிரியான சேவைகளில் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளன. எனவே, கிரெடிட் கார்டுகளின் எண்களை யாருக்கும் தெரிவிக் கக்கூடாது. அதேபோல கிரெடிட் கார்டுகளின் இரு பக்க ஜெராக்ஸ் நகல்கள், சிவிவி எண் (கார்டு வேல்யூ வெர்ஃபிகேஷன்), கிரெடிட் கார்டின் பயன்பாட் டுக் காலம் குறித்து தகவல் தெரி விக்கக்கூடாது. ஆன்-லைன் மூலமாக இந்தச் சேவை நடைபெறுகிறது. ஆன்-லைன் மூலமாக நடைபெறும் இந்த மோசடியைத் தடுக்க வேண்டுமெனில், கிரெடிட் கார்டில் உள்ள சி.வி.வி. எண்களை கறுப்பு பேனாவால் எழுதி மறைத்துவிடவேண்டும். அதன்பின்னர் ஜெராக்ஸ் நகல் கொடுத்தால், மோசடி நடப்பது தவிர்க்கப்படும் என்று போலீஸôர் தெரிவிக்கின்றனர்