Showing posts with label அறிஞர்கள். Show all posts
Showing posts with label அறிஞர்கள். Show all posts

மகாத்மா - காந்தி !



இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.
-மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!

photo from independent

மகாத்மா!



இது நம் நாடு என்று ஏழை எளியோர்கள் நினைக்ககூடிய இந்தியாவிற்காக நான் பாடுபடுவேன்.அந்த இந்தியாவில் எளியோருக்கு உரிமை இருக்கும். உயர்ந்தவர் தாழ்ந்தவர் வேறுபாடு நீங்கியிருக்கும். அனைத்துப்பிரிவினரின் முழுமையான சகவாழ்வு இருக்கும். தீண்டாமை சாபம் ஒழிந்திருக்கும். மதுப்பழக்கம் ஒழிந்திருக்கும்.ஆண்களுக்கு நிகராக பெண்களும் உரிமைகள் பெற்றிருப்பர்.மற்ற உலகத்தினரோடு நாம் அமைதியான வாழ்க்கையை பெற்றிருப்போம். இதுதான் நான் காணும் கனவு இந்தியா.
-மகாத்மா காந்தி

மகாத்மாவின் கனவுகளோடு காலங்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறோம்...!

photo from independent

கீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்...





அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே!
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே!
போகும்போது வேறுபாதை போவதில்லையே!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...!



உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

*********************

நன்றிகளுடன் நினைவில் வைத்து வணங்குகிறோம் கவியரசு கண்ணதாசனை !

வாழ்க நின் புகழ்!

சுஜாதா - மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!


எழுத்தாளர் சுஜாதாவைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம், படிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. 1970-களில் தமிழ் பத்திரிகைகளில் எழுத்தாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோது, அவர்களில் இளம் தளகர்த்தராக சுஜாதா இருந்தார்.

சுஜாதா என்ற புனைபெயர், அவருடைய துணைவியாரின் பெயராகவே இருந்தபோதிலும் அதில் கவர்ச்சி மின்னியது. அவருடைய எழுத் தும் மின்னல், கதையும் மின்னல். மிகப்பெரிய தத்துவ விசாரங்களை யும், கள வர்ணனைகளையும் எழுதாமலேயே நாவல்களையும் சிறுக தைகளையும் உள்ளத்தில் பதிய வைத்தவர்.

பெண்களை வர்ணிக்க அவர் செலவிட்ட நேரமும் எழுத்துகளும் குறைவுதான் என்றாலும் வாசகனின் நினைவில் அவை புகுந்து கொண்டு இம்சை செய்த நேரங்கள் அதிகம். இளைஞர்கள் மட்டும் அல்ல யுவதிகளாலும் போட்டி போட்டு வாசிக்கப்பட்டவர்.

அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தை மட்டும் அல்லாது பெங்களூருவையும் தில்லியையும் (அதன் அஜ்மல்கான் ரோடு, எம்.ஜி. ரோடு மகாத்மியங்கள் உள்பட) வர்ணித்து காசு செலவில்லாமல் "காதல் ஷேத்ராடனம்' போக வைத்தவர்.

விமானம் எப்படி ஓடுகிறது, கம்ப்யூட்டர் எப்படிச் செயல்படுகிறது, ஹைஜாக்குகள் எப்படி நடக்கின்றன, கணினியின் கட்டுப்பாட்டில் எதிர்கால நகரங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்ற நடைச் சித்திரமும், கடைசி பாராவில் கதையின் போக்கையே படு கிண்டலாக மாற்றிய முத்திரைக் கதைகளும் இன்ன பிற உத்திகளும் சுஜாதாவின் முத்திரைகள்.

பத்திரிகைகளில் எழுத தொழில்முறை எழுத்தாளர்கள் ஆயிரம் பேர், நமக்குக் கிடைத்த நல்ல உத்தியோகத்தில் நாலு நாட்டைப் பார்ப்போம், நமது தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்ப்போம் என்று ஸ்ரீரங்கம் எஸ். ரங்கராஜன் நினைத்திருந்தால், நமக்கு "சுஜாதா'வின் அறிமுகமே கிட்டியிருக்காது.

எதற்காக எழுத வந்தாரோ, தமிழ் வாசகர்களுக்கு நல்லதொரு எழுத்து விருந்து படைத்தார். அவரைத் தன்னிடம் அழைத்துக் கொண்ட "மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்'.

(வாசிக்கலாமோ கூடாதோ என்ற அச்சத்தோடு பள்ளிக்கூட நாட்களிலிருந்து சுஜாதாவின் கதைகளை வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் படித்து மகிழ்ந்திட்ட வாசகனின் கண்ணீர்த்துளி அஞ்சலி இது.)

நன்றி - தினமணி 28/02/08

தெரிந்து கொள்வோம் இவரைப்பற்றி - ஆண்டாள் தாமோதரன்

1967ல் குழந்தைகளின் நலனின் மீது ஆர்வம் கொண்டு சமூக சேவை உலகில் காலடி எடுத்து வைத்தவருக்கு மனதுக்கு திருப்தியளிக்கும் பணியாக இந்த சேவை அமைந்திருப்பதில் மகிழ்ச்சிதான்!

சாதரணமாக குழந்தைகள் அதுவும் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப்படும் சிறார்கள் அனுபவிக்கும் பணி சார்ந்த இடத்து பயங்கரங்கள் மிகக்கொடுமையானது! அதுவும் பெண் சிறார்களுக்கோ சொல்ல இயாலத அளவு உள்ளன!

அதுபோன்ற பயங்கரங்களிலிருந்து சிறார்களை மீட்டு, அவர்களது இளமை பருவம் வீணாகமலும்,வாழ்க்கையின் அடிப்படையை அமைந்துகொள்ளும் வயதில் அதற்கேற்ற வகையில் கல்வி கற்கவும் வேண்டிய ஏற்பாடுகளை செய்வதுதான் இந்த அரசு சார தனியார் சேவை அமைப்பின் முக்கிய நோக்கம்!

கொஞ்சம் நீங்களே யோசிச்சு பாருங்க! ஒரு பையனோ அல்லது பெண்ணோ சிக்னல்ல நின்னு பிச்சை எடுத்து சுமாரா 100 வரைக்கும் சம்பாதிக்கும் போது,அந்த சிறார்கள பெத்தவங்க ஒ.கே.ஒ.கே போய்க்கோடா ராசான்னுதான் சொல்வாங்க! அவங்களை புடிச்சு சம்மதிக்க வைச்சு, அது மட்டுமில்லாம அந்த சிறார்களை ஒரு காலகட்டத்துக்கு பிறகு அந்த தொழில்லேர்ந்து விடுவிச்சு,படிக்க வைக்கிறதுங்கறது ரொம்ப்ப்ப் ரொம்ப பெரிய கஷ்டமான விஷயம்தான்! அதை செஞ்சுக்கிட்டிருக்கற இந்த மனிதர்களை பற்றி நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!

சுனாமி பாதிப்பின் போதும் தங்களது சேவை அமைப்பின் மூலம் பல பணிகளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளிலும் நிறைவேற்றியுள்ளனர்!

பெரும்பாலும் குழந்தை தொழிலாளர்கள்,அடிமைத்தொழிலில் சிறார்கள் ஈடுபடுத்தும் செயல், போன்றவற்றிலிருந்தும்.சிறார்களை சட்டப்படி விடுவித்து, சிறார்கள் தங்களின் இளம் வயது வாழ்க்கையை மிக்க மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும் அத்தனை செயல்களிலும் ஈடுபடுவதில் மிக்க மகிழ்ச்சியும், மிக்க மனத்திருப்தியோடு செய்துவருவதாக கூறும் இவரின் பணி குறித்து, உசிலம்பட்டியில் மீண்டு, வாழும் பெண் குழந்தைகளின் வாழ்க்கை சொல்லும் பெருமிதத்தோடு...!

டாக்டர்.மு.ஆனந்தகிருஷ்ணன்.

கட்டிடப்பொறியியல் வல்லுநர்

கணினித்தமிழ் வல்லுநர்.

Photo Sharing and Video Hosting at Photobucket


1960களில் தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணியாற்றிய, இவர் தன்னை துறைக்கேற்ப சமரசப்படுத்திக்கொண்டிருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டளவில் தலைமை பொறியாளர் வரைக்கும் பணி வகித்து இந்நேரம் தம் ஒய்வு காலத்தை கழித்துக்கொண்டிருந்திருக்ககூடும்!

பொதுப்பணித்துறையின் பணிகளை விட கல்விபணி இவரை கவர்ந்திழுக்க கான்பூர் ஐ.ஐ.டியில் கல்வியாளராக பணி வகித்த இவருக்கு நினைத்தையெல்லாம் செயல்படுத்துமளவுக்கு சுதந்திரம்., மிக்க மகிழ்ச்சியுடன், அன்று இவர் மேற்கொண்ட பணிகள் - இன்று தரமான தொழில்நுட்ப உயர் கல்வி அளிக்கும் ஒரு நிறுவனமாக அமைவதற்கு போட்ட விதைகள்!

புதிய, புதிய, தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை நம் நாட்டிற்கேற்ற முறையில் பயன்படுத்துதல் தொடர்பான பணிக்காக, இந்திய அரசு சில குறிப்பிட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களில் அறிவியல் ஆலோசகர் என்ற, பதவியினை ஏற்படுத்தி அதில் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்தது. இப்பணிக்காக அமெரிக்காவிற்கு சென்றார் ஆனந்தகிருஷ்ணன்.

அமெரிக்காவில் கணினி தொடர்பான பணிகளால் இவருக்கு ஏற்பட்ட ஆர்வம்தான் பின்னாளில் தமிழை கணிணிக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்கி, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த விஷயங்களில், தமிழகம் பெரும் வளர்ச்சியடைய, இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு காரணம் என்றும் கூறலாம்.!

பின்னர் சில வருடங்கள் ஐ.நாவின் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொண்டு,தமிழ்நாட்டில் அண்ணா பல்கலையில் துணைவேந்தராக பணியாற்றிய காலகட்டத்தில்தான் தொழில்நுட்ப கல்வித்துறையில் மிக பெரும் மாற்றங்கள் கண்டது. தொழில்நுட்ப கல்லூரிகளில் நுழைவு தேர்வு முறையில் சேரும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

அடுத்து வந்த கலைஞர் அரசில் தகவல் தொழில் நுட்பத்துறைக்கான முதல்வரின் ஆலோசகராக பணியாற்றிய சமயத்தில்தான்,கணிணித்துறையில் தமிழை கொண்டு வரும் முயற்சிகள் தீவிரமடைந்தன.

1997ல் சிங்கப்பூரில் ஆரம்பித்து, இன்று வரை புதிய தொழில்நுட்பங்களை, நான்காம் தமிழாம் கணினித்தமிழிற்கு அறிமுகப்படுத்தும் பணியில் மு. ஆனந்த கிருஷ்ணன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது!

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக பணியாற்றிவரும்
மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தொழில் நுட்ப கல்வி சார்ந்த கட்டுரைகளை வருடம்தோறும் வெளிவரும் “தினமணி” மாணவர் மலரில் படித்து பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கும் பெருமைதான்..!

கல்வி சான்றிதழ் மட்டுமே நம்மை ஒரு நல்ல வேலைக்கு தகுதியான நபராக மாற்றது கூடுதல் தகுதிகளாக கணினிக்கற்றல், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை..!

கல்லூரிகளில் கற்றறிந்தது மட்டுமே போதுமென்ற நிலையை தவிர்த்து,புதிது புதிதாக பயில தயாராக இருக்க வேண்டியதன் அவசியம்.தம் பயின்ற துறை தவிர்த்து,சார்ந்திருக்ககூடிய துறைகளிலும் சற்று ஈடுபாட்டை அதிகரித்தல் போன்ற விஷயங்களை திரு மு.ஆனந்த கிருஷ்ணன் அவர்களிடமிருந்து என்னை போன்று பலரும் கற்றிருப்பார்கள் என்பது நிச்சயம்.!