மயிலாடுதுறை பதிவர்கள் - என் மனதில்....! (பாகம் - 2 )

புனைப்பெயரில் எழுதுவது என்பது எல்லோருக்குமே அலாதியான விஷயம்தான் அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டுமே நீடிக்கும்! ரொம்ப காலத்துக்கு பொறுமையா எழுத முடியாது! புனைப்பெயர்ல எழுதறத விட, அட இது நாந்தான்ப்பா சொல்றதுல அதைவிட அலாதியான இன்பம்தான்! ஆனா பாருங்க கிட்டதட்ட நாலுவருஷமா முகமூடியோடத்தான் எழுதுறாரு!
எங்க ஊர்க்காரரு..!
அவரும் முகமூடிய கழற்றலை!அதுக்கு காரணமா சொல்ற விஷயமும் - 'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால் - இன்னும் இருக்கறதும் உண்மைதான்!

நக்கல்,கிண்டல்,கேலி இன்னபிற சமாச்சாரங்கள் நிறைந்த பதிவுகள் ஒவ்வொரு முறையும்..! எனக்கு ரொம்ப பிடிச்சதுன்னா டைட்டில்கள்தான்...!

எதாவது பிரச்சனை வந்து ஆடி அடங்கும்போது இவர் ஒரு பதிவு போடுவாரு! பிரச்சனைக்குக் மங்களம் பாடற மாதிரியும் இருக்கும், அட, பிரச்சனை இன்னும் ஸ்டார்ட் பண்ணவேயில்லையான்னு? கேட்கற மாதிரியும் இருக்கும்!

ஒரு சமயம் எல்லாரும் 6 எழுதிக்கிட்டிருக்கறப்ப இவரு எழுதின ஆறு! அண்ணாமலை பல்கலை மாணவியை தற்கொலை பத்தின டீடெயில்டு பதிவு!

அட.. நம்ம காலேஜ்ன்னு! ஒரு பாச உணர்வை கொண்டு வந்து கொட்டிடுச்சு!

ஊர்க்காரருன்னு தெரியாத டைம்ல இந்த மூக்கு படத்து மேல ஒரு ஈர்ப்பு வந்து அடிக்கடி வந்து செல்லும் பக்கம் இவருடையது.!

அந்த காலத்துல (என்ன பண்றது! இப்ப இவரு மாசத்துக்கு ஒண்ணு இல்லாட்டி அரைன்னுதான் பிலாக்குறாரு! - இவரு மட்டுமா இந்த போஸ்டல் நான் சொல்லியிருக்கற எல்லரும்தான்!)

இவர் பக்கம் சென்றபிறகுதான், மற்ற பக்கங்களுக்கு போக, லிங்க் கொடுக்கும் முறை பற்றி புரிந்துகொண்டேன்!!

சுத்தமா, ஒதுங்கிடாம அப்பப்ப வந்து போயிட்டிருக்காரேன்னு ஒரு ஆறுதல்!

ஊர்ல உள்ள எல்லா கோவில்களிலும், இவர் பேர் அல்லது இவங்க குடும்ப பெயர் கண்டிப்பாக இருக்கும்!

முதலில் பேர் பழக்கமானதே, அந்த மாதிரி கோவில்களுக்கு செல்லும்போது பார்த்துத்தான்!
ஒரு பதிவில் பூம்புகார் சாலை குருமூர்த்தி ஸ்கூல் போட்டோஸ் பார்த்துட்டு, அட அவர்தானா, இவர்ன்னு ஒரு ஆச்சர்யம்! அதுக்கப்புறம்,அவர் போஸ்ட் போட்டா, நான் அங்க உடனே ஆஜர்!

அப்பப்ப, வந்து செல்லும் இவரின் பதிவுகள் என்னை, மயிலாடுதுறை சம்பந்தமான நினைவுகளை அதிகம் கிளறி விட்டு செல்லும் விஷயங்களாகின!

மயிலாடுதுறை பதிவர்கள் - என மனதில்....! (பாகம் - 1 )

வலைப்பதிவு வாழ்க்கையில் இரு வருடங்களுக்கு முன்பே தமிழ்மணம் அறிமுகமிருந்தாலும்,தேடிப்பிடித்து படிக்க முற்பட்டது மயிலாடுதுறை மற்றும் அதைசார்ந்த பதிவுகளை மட்டுமே!

சில சமயங்களில் அவுட் ஆப் சிலபஸாக சில வலைப்பூக்களுக்கு சென்றதுண்டு! ஆனா பாருங்க பெரும்பாலும், சுற்றின இடம்னு சொன்னா
இங்கதான்

மயிலாடுதுறை சிவா- எங்கள் ஊரின் மையம் என்று சொன்னால் மணிக்கூண்டு அதை மையமாக வைத்த இவரின் வலைப்பூ. எனக்கு இவரைத்தெரியும் ஆனால் இவருக்கு என்னை தெரியாது! ஆரம்பத்தில் பத்திரிக்கைகளில்,மயிலாடுதுறை சிவா என்று எனக்கு அறிமுகமாகிய பெயர் இணையத்தில் இருந்தது கண்டு ஆச்சர்யமடைந்தவன் நான்!

வாஷிங்டன் தமிழ் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருப்பதில் ஊர்க்காரர்களான எங்களுக்கு பெருமைதான்!

உங்களுக்கு இது போல் நடந்து இருக்கா?பதிவும், தாய்தமிழ் பள்ளி பதிவும், ஊரிலிருக்கும் ஒட்டல்கள் பற்றிய அனுபவ குறிப்பும் என்னை மிகவும் கவர்ந்த பதிவுகள்! மொத்ததில் மயிலாடுதுறையிலிருந்து உண்மையான திராவிட பதிவர்!

பத்திரிக்கைகளின் மூலம்,மயிலாடுதுறையிலிருந்து மற்றொருவர் மாயவரத்தான்!

தற்போதைக்கு பதிவுலகிலிருந்து, ஒதுங்கி இருந்தாலும், எபோவாவது பதிவை புதிப்பிக்க மாட்டாரன்னு ஆர்வத்தோடு அவ்வப்போது சென்று வரும் தளம்
சில சமயங்களில் சில வரிகளிலேயே பல விஷயங்களை சொல்லும் ஸ்டைல்தான் இவரோட ஸ்பெஷாலிட்டி!

பத்திரிக்கையுலகிலிருந்து இன்னுமொரு பதிவர் ரஜினி ராம்கி சொல்லவே வேணாம்! பேரை பார்த்தாலே தெரியும். ரஜினி சம்பந்தபட்ட விஷய்ங்கள்ல ரொம்ப ஈடுபாடு! அதற்குன்னு தனியா நாளு பேருகூட சேர்ந்து தனியா இணையத்தளம் நடத்திக்கிட்டு வராரு!அதுவும் பெரிய ஹிட்டான வெப்சைட்டா போயிட்டிருக்கறதுல கொஞ்சம் நாங்களும் காலரை தூக்கிவிட்டுக்கலாம்!

இவரோட பதிவுகள்ள,எனக்கு பிடிச்சது, சுனாமி சம்பந்தமான செய்திகள், அப்போதைக்கப்போது வரும் அரசியல் மேட்டர்கள் மற்றும் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரங்கட்டேய்..!

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பதிவர்னா எல்லே ராம்தான்! என்னைக்கு வேணும்னாலும் எடுத்து படிச்சா, மனசுல பட்டாம்பூச்சி சிறகடிக்க வைக்கும் பிறந்தகப்பொருமைகளும்,கபாலி மேட்டர்களும்,அருவி போல வரும் சென்னை பாஷையும் பெரியண்ணனோட பிளஸ் பாயிண்ட்டு! எங்களுக்கும் அதான ரொம்ப பேவரைட்டு

தொடரும்...!

(ஆபிஸ்ல எல்லோரும் என்னைய பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க இப்போதைக்கு எஸ்ஸாகிக்கிறேன்..!)

மருதமலை – படம் அல்ல இடம்..!

1995 ஆம் வருடம் சபரிமலை சென்று திரும்புகையில், கோவை வந்து, மருதமலையில் இரவு தங்கி அதிகாலை 4.30க்கு கோயிலுக்கு செல்ல தயாரகும் வரை எனக்கு மருதமலை பற்றி ஒரு துளிச்செய்தி கூட அறிந்திராதவன், ஏன் கோயமுத்தூர் என்னும் ஊரை கூட அறிந்திருக்கவில்லை.!

5.00 மணிக்கு மலைப்படிகளில் ஏற ஆரம்பிக்கும்போதுதான் எதோ ஒரு இனம்புரியாத உணர்வு, மகிழ்ச்சியாகவும் இருந்தது அந்த அனுபவம்!படிகளில் அமைந்துள்ள மண்டபங்களில், காணப்பட்ட சாண்டோ சின்னப்ப தேவரின் பெயரை படித்துக்கொண்டே வர கூட வந்த என் குடும்ப நண்பர் (சிறுவனான நான் மட்டுமே அந்த சபரிமலை பயணத்தில் இவரின் துணையுடன் சென்றேன்..! அது வரையிலும் யாரும் எங்கள் குடும்பத்திலிருந்து சபரிமலை பயணம் மேற்கொண்டது கிடையாது.)

தேவரின் கதைகளை சுவரஸ்யமாக, தேவரின் மருதமலை முருகன் மீதான் பக்தி குறித்தும் தனக்கு தெரிந்த தகவல்களை கூறிக்கொண்டே அவ்வப்போது மலைப்படிகளில் நின்று திரும்பி அந்த அதிகாலை நேரத்து விளக்கு வெளிச்சத்தில் கோவையின் அழகை கண்டது இன்னும் நினைவை விட்டு அழியாத நினைவுகள்..!

கோயில் நுழைவாயிலில் அப்போது தங்கதேர் தயாரிக்கும் பணிக்கான ஆயத்த வேலைகள் நடந்துகொண்டிருந்தன!

கோயிலின் கருவறையில் பிரும்மாண்டமாக,கம்பீரமாக நிற்கும் சுப்ரமணிய சுவாமி!பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும்படியான உருவ அமைப்பு,வழிபட்டு கோயில் பிரகாரம் சுற்றி வந்து,பாம்பாட்டி சித்தரை வழிபட,படிகளில் கிழிறங்கி சென்றால் வரும் குகைக்கோயில்!

வரும் வழியில் சிலரின் மூலம் பெற்ற தகவல்களாக, கோயிலுக்கு நேர் பின்புறம் மலையில் கார்த்திகை தீபத்தன்று விஷேசமாக இருக்கும் என்பதும்,ஆனால் கடினமான பாதையில் பயணித்துதான் அங்கு செல்லமுடியும் என்பதும், மலையை பார்த்து வியக்கத்தான் முடிந்தது எங்களால்!

அந்த நாள் முதல் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிக்க தொடங்கியது மருதமலை!

வருடம் ஒரு முறை கேரளா டூர் (இதப்பத்தி தனி தொடராத்தான் போடணும்.!) செல்கையில் எப்படியாவது நண்பர்களை சரிக்கட்டி, மருதமலை தரிசித்துதான் தொடங்குவோம் அல்லது முடிப்போம்!

ஒரு சமயம் பகுதி நேர பொறியியல் படிப்பு நுழைவுத்தேர்வுக்கு செல்ல வேண்டிய சூழல் காரைக்குடியில் தேர்வு மையம் இருந்தாலும் ஊர் சுத்த வேண்டி சென்றது கோவைக்கு!

வெகு சீக்கிரமாக தேர்வை(!) முடித்து கொண்டு, மருதமலையிலிருந்து ஆரம்பித்து, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக பழனியில் முடித்தோம் எங்களின் இரண்டு நாள் டூரை!

நீங்களே சொல்லுங்கள் எங்களுக்கா படிக்க இடம் கிடைத்திருக்கும்..?!

நட்சத்திரங்களாய் எழுகவே...!!!

சிவாஜியில,அமெரிக்காவிலிருந்து வரும் ரஜினியிடம் விவேக் சொல்வார் எல்லாமே மாறி சென்னை இப்ப சிங்கார சென்னையாயிடிச்சுப்பான்னு!
அப்ப ஒரு பொண்ணு கையில் குழந்தைய வைச்சிக்கிட்டு பிச்சை கேட்கும் ,எல்லாமே மாறிடுச்சி ஆனா இது மட்டும் மாறலையேன்னு ரஜினி பீல் பண்ணுவாரு!

இதே காட்சிதான் நிஜத்திலயும்! ஆனா ரஜினிக்கு பதிலா பத்மான்னு ஒரு பெண்மணி அமெரிக்க்விலிருந்து திரும்பும் இவருக்கும் இதே காட்சிகள்! பெரும்பாலும் இவர் கண்ணில் பட்டவர்கள் பிச்சைக்காரர்கள் அதுவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு வீடு வசதியின்றி அலைந்து திரிந்து பிச்சையெடுப்பவர்கள்தான்!

மனதில் மிகுந்த யோசனைகளேடு ஒரு நாள் சமையறையில் தன் நண்பிகளுடன் இது சம்பந்தமாக பேசிக்கொண்டிருந்தவருக்கும் மனதில் உதயமானதுதான் – உதித்ததுதான் நட்சத்திரம் RISING STARசாதரணமாக கல்வி சம்பந்தமாக பண உதவி தேவைப்படுவோர்ருக்கு வழங்குவது என ஆரம்பித்து,பின்னர் குழந்தைகளுக்கு அதுவும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இருப்பிட வசதி கல்வி வ்சதி அமைத்து 18 வயது வரையிலும்,அவர்களின் விருப்பத்தின்படி கல்வி கற்று செல்லும் வகையில் அமைப்பை ஏற்படுத்தினர்!

பின்னர் சில வருடங்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் பொருட்டு,சுய தொழில் செய்யும் வகையில் உபகரணங்களை கொடுத்து,அவர்கள் தம் வாழ்க்கையை நேர்த்தியாக்கிகொள்ள உதவி செய்ய ஆரம்பித்தனர் இவ்வமைப்பினர்!

சேவை தொடர்கிறது....!

சில செய்திகளை பார்க்கும்போது மனம் அழுகிறது!
சில காட்சிகளை பார்க்கும்போது மனம் வலிக்கிறது!

சில சமயங்களில் நம்மை இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டால் மனம் நிறையுமோ...????


வாழும் வாழ்வுக்கு அர்த்தம் கிடைக்குமோ...????

குறிப்பு:-இந்த அமைப்பினை நிறுவி, சமூக சேவைக்கு தம்மை அர்ப்பணித்து கொண்ட பத்மாவின் தந்தை ஆர்.வெங்கட்ராமன் முன்னாள் இந்தியா குடியரசு தலைவர் - தமிழ்நாடுஎங்க ஊரு பில்டர் காபி !

காலையில் 5.00 மணிக்கு சீர்காழியின் "அருள் தரு சரவண பவனென்னும் முருகனின் அடியினை பணி மனமே" கேட்க ஆரம்பிக்கும், எங்கள் வீட்டு டேப்பிலிருந்து அந்த தெருவுக்கே..!

எனக்குள் உள்ளுக்குள் ஆஹா...! அப்பா கிளம்பிட்டாருடான்னு, அலறி அடிச்சுக்கிட்டு, தெருவுக்கு போனா மப்ளர தலையில் முண்டாசு ஸ்டைல்ல கட்டிக்கிட்டு சைக்கிள்ல ரெடியா நிப்பாரு? (அப்படி ஹோட்டல் போயி தீரும்பி வந்தப்ப எடுத்த போட்டோ முன்னாடியய போட்டுட்டேன்!)

நீயும் வர்றீயாடா?

ம்.. நானும் வருவேன்!

சரி வா பின்னாடி உட்காரு! என்னதான் பின்னாடி உட்கார வைச்சாலும்,நாஞ்சில் நாட்டிலிருந்து கொத்ததெரு வருவதற்குள் ஒரு பத்து தடவையாவது,தூங்குறீயாடா? கேள்வி வந்துக்கிட்டே இருக்கும்!

எனக்கு எரிச்சலா இருக்கும்! அதெல்லாம் இல்லை நீ போப்பா..!

சைக்கிள் மணிக்கூண்டு வருவதற்குள், எதிர்ப்படும் பால்காரன்,பேப்பர்க்காரன் போன்றவர்களின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வந்தாலும் என்னைய செக் பண்றதுக்கு மட்டும் அலுத்துக்க மாட்டாரு!

காளியாக்குடி ஹோட்டல் அம்பிதான் கல்லாவில் அமர்ந்திருப்பார்!
தம்பி சாருக்கு ரெண்டு காபி ஸ்ட்ராங்கா..!


நுரைப்பொங்க வரும் காபியை எடுத்து சூட்டைஆற்றப்போக, அதெல்லாம் வேணாம் இங்க கொடுன்னு, வாங்கி அந்த சூட்டோடயே நான் பர்ஸ்ட் குடிச்சி முடிச்சிட்டு இன்னொன்னு கிடைச்சா நல்லாயிருக்குமேன்னு கேட்டா, அதெல்லாம் நிறையா குடிச்சின்னா அப்புறம் தலைமுடியெல்லாம் வெள்ளையாகி கிழவனாகிடுவ சொல்லி நிறுத்துவார்!

இப்படியே காபி தேடி ஊர் சுற்ற 8 வய்தில் கிளம்பியவன் மயிலாடுதுறையில் அத்தனை ஹோட்டல்களிலும் காபி டேஸ்ட் அத்துபடியாச்சு!

காளியாக்குடி காபி அப்ப நல்லாருந்துச்சு..! அப்புறமா மயூராவை தேடிப்போக ஆரம்பித்தேன்! இந்த மயூராவுல சாப்பிடுறத விட வேற என்ன ஸ்பெஷல்ன்னு பார்த்தீங்கன்னா – காலண்டர்தான்!

ஒட்டல் புல்லா காலண்டர் மாட்டி தொங்கவிட்டிருப்பாங்க! அதுமட்டுமில்லாம அத்தனை காலண்டர்களிலும் கரெக்டா அன்றைய தேதியோட..!

காபி மாஸ்டர் பார்த்தீங்கன்ன ரொம்ப சிம்பிளா எதோ குளிக்கறதுக்கு கிளம்பிக்கிட்டிருக்கற மாதிரிதான் ஒரு துண்ட கட்டிக்கிட்டு நிப்பாரு!

டபராவில் ஏற்கனவே டிகாஷன் ரெடியா இருக்கும்,ஸ்ட்ராங்க் பார்டிக்களுக்கு,டபுள் ஸ்ட்ராங்க ஆளுங்க பார்த்தே கண்டுபிடிச்சு அது மாதிரி போட்டு கொண்டு வந்து வைப்பாரு!

இப்பவும் நீங்க ஐந்து மணிக்கு அங்க போனீங்கன்னா யாராவது காபிக்கு வெயிட்டிங்ல்ல இருப்பாங்க! சாம்பிராணி மணம் கமழ,அந்த சூடான காபி குடிக்கறது எவ்ளோ சுகம் தெரியுமா?

அதற்கப்புறம் அர்ச்சனா ஹோட்டல் வந்துச்சு, இப்ப காபி குடிக்கறதுல, சில சமயங்களில் குழப்பம் வர ஆரம்பிக்கும் அளவு அஙகேயும் டிகிரி காப்பி கிடைக்க ஆரம்பிச்சுது!

ஆனாலும் ஒரு ரசனையோட குடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, காலை 5 மணிக்கு மயூராதான் அதுபோல மாலையில் அர்ச்சனாதான்னு பொழப்பு போனது!

இது மட்டுமில்லாம, அப்பப்ப அய்யப்பன்,ஆரி(றி)யபவன், ரயிலடி ஜீ.வி.எஸ்ன்னு தேடி போறதுண்டு!

இப்ப இங்க வந்ததிலிருந்து, அத நினைச்சு, நினைச்சு நெஸ்காபி குடிச்சிக்கிட்டிருந்தேன் – போன மாசம் வரைக்கும்...!! ( ஹைய்யா....! இன்னொரு போஸ்ட் ரெடி..!)

ஆமாம் காபி குடிச்சா எங்க அப்பா சொன்ன மாதிரி, கிழவனாயிடுவேனா...???

நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு..!


இது நாள் வரையில் நான் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டேன், நானா இப்படி செய்வது.? என்று எனக்கே என்னை பற்றி ரொம்ப பெருமையாகிடுச்சுங்க!

வந்த புதிதில், பல இடங்களில் நான் பலரால் வித்தியாசமாக பார்க்கப்படுகிறேன் என்பதனை என் உள்ளுணர்வு எனக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும் ஆனால் என்ன செயவது நான் வந்த வழி என்று என் விதியினைத்தான் நான் நொந்துகொள்வேன்.ஆனால் வெகு விரைவிலேயே நாம் இப்படி ஆவேன்! என்று நினைக்கவேயில்லை.
(என்னாடா இவன் இப்படி கிறுக்குறானே டென்ஷனாகதிங்க)

முதல் நன்றி! அறுசுவைக்கு!

அடுத்த நன்றி! முகமறியா, சமையல் செய்முறைகளினை, அளிக்கும் பெண்கள்.

ஒரு விதத்தில் எனக்கு இவர்கள் என் அம்மாவினை போன்றே தெரிகிறார்கள்! ஏனெனில் நம் அம்மாவினை தவிர வேறு யாரிடமும்,நம்மால் சமையல் பழக, தெரிந்து கொள்ள முடியாது.! (எனி அப்ஜெக்ஸன்?!)

அயல்நாடுகளில், பணிக்கு செல்லும் என்னை போன்றவர்கள் முதலில் பாதிக்கப்படுவது உணவு பிரச்சனையில்தான்! அதுவும் சைவ உணவு வகைகளினை மட்டும் எடுத்து உண்ட எனக்கு இது மிகப்பெரும் பிரச்சனையானது.

வெஜ் சாப்பாடு இருக்கான்னு கேட்டா,எரிக்கற மாதிரி பார்த்துட்டு,பூரிக்கு செஞ்சு மீந்த கிழங்கையும், கடலையயும் போட்டு ஒரு அப்பளத்த வைச்சு கொடுப்பாங்க! அதுவும், வெள்ளிகிழமையில எல்லா கடையிலயும் அசைவம்தான்!

இதனால பல வெள்ளி கிழமைகள் நான் உண்ணாவிரதம் இருந்துள்ளேன்..!

இங்கு கத்தாரில், பெரும்பாலன கடைகளில் நம்ம கேரளாக்காரங்க இருந்தாலும், சைவ உணவு வகைகள் என்பது இங்கு எளிதான விஷயமன்று! அதுவுமில்லாமல்,அசைவ உணவுகளை விட விலையும், அதிகம் அதனால் இங்கு பெரும்பாலனோர் வெகு சீக்கிரத்திலேயே அசைவத்திற்கு மாறிவிடுகின்றனர்!

கடைசியாக எடுத்தமுடிவுதான், எனக்கு நானே சமைக்கும் திட்டம்!

ஸ்டார்டிங் எப்போதும் எனக்கு நல்லா வரும், ஆனா ஃபினிஷிங்தான் சொதப்பும், ஆனாலும் மனச தளரவிடாம அந்த ஐட்டங்கள சுட, சுட, சாப்பிட்டு முடிச்சாத்தான் ஒரு திருப்தி.( ஆறி போன எவன் தின்பான்!)

இப்படி நான் இஷ்ட்டப்பட்டு சமைச்சு,கஷ்ட்டப்பட்டு சாப்பிட்டு வாழ பழகிகிட்டேன்!

ஒருநாள் கூகுளில் தமிழில் விளையாடிக்கொண்டிருந்தபோது கண்ணில் பட்டதுதான் இந்த அறுசுவை.

இப்போது எனக்கு இதுதான் சமையல் கலை கற்றுக்கொள்ளும் இடம்!

அடுப்பு பத்த வைக்குறதுக்கு முன்னாடி வெப்சைட் ஒபன் பண்ணிவைச்சுக்கிட்டாதான் எல்லாம் சரியா வரும்ங்கறது நான் கத்துக்கிட்ட முதல் பாடம்!

இந்த சைட்ட நான் பார்க்காத நாட்கள்னா, விரத நாட்கள்தான் என்பது இன்றைய நிலைமை..!

திக்கெட்டும் அறுசுவை மணம் பரப்பும் இவ்விணையம் புறப்படும் இடம் எங்கள் மாவட்ட தலைநகர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

இளம் பிராயத்தில் (பிரளயத்தில்)

காலையில 8.00 மணிக்கு, அடிச்சி துவைச்சி, காயப்போடாத குறையா எங்க மூணு பேரையும் பாட்டி ரெடி பண்ணி விட்டுருப்பாங்க! மூணு பேரும் மூணு திசைக்கு நிப்போம், எல்லாரையும் ரெண்டு கையில புடிச்சிக்கிட்டு, மேற்க பார்த்து நடக்கா ஆரம்பிப்பாங்க அம்மா!

இப்படியே கிட்டதட்ட ஒன்பது வருஷம் நடந்து போய், கீழநாஞ்சில் நாடு டூ புதுத்தெரு வரைக்கும் எல்லாருக்கும் அறிமுகமாகி போன முகமாயிட்டேம்னா பாருங்களேன்!

எங்க அண்ணனும் அக்காவும் தான் அப்ப 1984ல்ல ஸ்கூல்ல படிச்சிக்கிட்டு இருந்தாங்க, நான் சும்மா ஒப்புக்கு சப்பாணி கேஸ் ஸ்கூலுக்கு போயி படுத்து தூங்கிட்டு, மதியம் தின்னுட்டு, திரும்பவும் தூங்கிட்டு, எழுந்து வர்றதுதான் வேலை!

சில் சமயங்களில் என்னோட அலறல் அலாரத்தை வைச்சித்தான் சில வீடுகள்ள பசங்களை ஸ்கூலுக்கு அனுப்ப தயார் பண்ணுவாங்கனா பார்த்துக்கோங்களேன்!?

காலையில வீட்லேர்ந்து எல்லோரும் ஒண்ணா கிளம்பினாலும் நான் மட்டும் வேகமா ஒடிப்போய் கரெக்ட்டா புலிமார்க் சீயக்காய்தூள் வாசல்கிட்ட போய் நின்னுக்கிட்டு,அங்க அப்போ இருந்த ஒரு தென்னை மரத்தில மூணு கிளைகள பார்த்து ரசிச்சிக்கிட்டிருப்பேன்! ( ஒரே டய்த்தில் இதுல ஏறி எப்படி தேங்காய் பறிக்காலம்னு????)

அதுக்குள்ள எங்க வீட்டு இரண்டு வானரங்களும்,அம்மாவும் சத்தம் போடாம என்னைய கிராஸ் பண்ணிடுமவாங்க! தூரத்தில ஏ.வி.சி ஹாஸ்டலுக்கிட்ட போயி நின்னுக்கிட்டு கூப்பிடுவாங்க!

இந்த இடைப்பட்ட ஏரியாவிலதான் எனக்கு ரொம்ப புடிச்ச இடங்களான சப் கலெக்டர் பங்களா & காலேஜ் ஹாஸ்டல் இருக்கு!

பெரிய இடம் சுத்தியும் ஃபென்ஸ் கட்டி நடுவுல, அந்த காலத்துல் ஸ்டைல் பங்களா.
ரோட்ல போறப்ப பாக்குறதுக்கே அவ்ளோ அழகா இருக்கும்!

அதுக்கு நேர் எதிரா ஹாஸ்டல் பில்டிங் அழகான நுழைவாயில் உள்ள போனா, மூணு நாளு பில்டிங் அங்கயும் நல்ல பெரிய பரப்பளவுல் இடம் விஸ்தாரமா இருக்கும்! ஆனா இப்ப அது அனேகமா எல்லாம் உடைஞ்சு சிதைஞ்சு இருக்கும் 1992 லயே அந்த ஹாஸ்டல குளோஸ் பண்ணிட்டாங்க!

அதுக்கு அடுத்த ஸ்பாட்ன்னா கொத்த தெரு சுமைதாங்கிதான்! ரொம்ப தூரம் கையில் பாரத்தோட போறவங்க அங்க வைச்சுக்கிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டு போவங்கன்னு சொல்லுவாங்க! ஆனா உண்மை என்னான்னு தெரியாது! அங்க போயி அது மேல ஏறி ஒக்காரணும்னு ரொம்ப நாளா ஆசை ஆனா ஹைட் இல்லாததால சும்மா நின்னு வேடிக்கை பார்த்திட்டு போறதோட சரி!

கடைசியா பொணம் போற சந்துக்கிட்ட( ரெகுலர் ரூட் இதுதான் எங்க ஊருக்கு) பாமா சைக்கிள் கம்பெனியில் போய் நின்னுக்கிட்டு, சின்ன சைக்கிள பார்த்து ஒரு ஏக்கப்பார்வை!

வயசு அதிகமானத்துக்கப்புறம் பார்வைகளில் மாற்றங்கள் வந்தது - வரத்தானே செய்யும்!

பெரும்பாலான நாட்கள் இந்த ரூட்டுதான் இதுக்குமேல ஊருக்குல்ல எங்கயும் போனது கிடையாது! போகவிட்டதும் கிடையாது! ஏன்னா நாம் அப்ப சும்மா சூப்பரா கொழுக்மொழுக்குன்னு நல்ல கலரா இருப்பேனாம்! யாரவது தூக்கிட்டு போயிடுவாங்கன்னு பயம்!
(உண்மையிலேயே நான் சின்ன வயசுல
செவப்புதான்,
செவப்புதான்,
செவப்புதான்!
ப்ளீஸ் நம்புங்கப்பா...!!!!)

கிட்டக்க இருந்தப்ப ரசிக்க முடியாத விஷயங்கள இப்ப நினைச்சு நினைச்சு பாக்கறப்ப, ஏதோ எல்லாம் கைய விட்டு போயிடுச்சோன்னு ஒரு ஃபீலிங்ஸ்!

இருக்காதா பின்னே! நாம் வாழும் வாழ்க்கையின் தத்துவமே,பலவற்றை விட்டு வருவதுதானே!

ஓய்விலா உழைப்பால் திணறும் டெல்லி..!

ஓய்வில்லாமல் உழைப்பவர்களால் திணறாமல் நல்ல வாழ்க்கைதானே வாழ முடியும்! பிறகு டெல்லியில் எதற்கு திணறுகிறார்கள் என்று யோசிக்காதீங்க!பிச்சைக்காரர்கள்

ஓய்வின்றி உழைக்கிற இந்த ஆட்களால மத்தவங்களுக்கு நிறைய தொந்தரவுகள் அதைவிட காவல்துறைக்கும், தலைநகர் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களால் மண்டையிடி அதிகம் தானாம்!

அக்கம்பக்கத்து மாநிலங்களிலிருந்து வேலையின்றி வரும் மக்கள் அல்ல்து அங்க செஞ்சுக்கிட்டிருந்த வேலையை டிரான்ஸ்பர் பண்ணிக்கிட்டு வருபவர்களை கட்டுபடுத்த முடியாம தலைநகரம் த்டுமாறிக்கிட்டிருக்காம்!கணக்கெடுக்க முடியாதபடி தினமும், வந்து இறங்கிக்கிட்டுதான் இருக்காங்களாம்! ஒரு குத்து மதிப்பா, அம்பதுலேர்ந்து எழுபத்தி அஞ்சாயிரத்துக்குள்ள இருப்பாங்களாம்! (யம்மாடியேவ்!)

2010 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைப்பெற இருக்கும் இச்சூழலில் டெல்லி அரசாங்கத்திடம், விளையாட்டு போட்டிகளை நடத்த உள்ளவர்கள் பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வேண்டி, முறையிட ஆரம்பித்துள்ளார்கள்!

டெல்லி அரசாங்கமும் ஏற்கனவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு, பிச்சை எடுப்பவர்களை கைது செய்து, மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து, அவர்களுக்கு வேண்டிய, உணவு, இருப்பிட மருத்துவசதிகளுடன், மீண்டும் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு, சுய தொழில் செய்வதற்குரிய அனைத்து பயிற்சிக்ளையும் தருகிறது!

எல்லா முயற்சிகளுமே பாழ்..! என்பது போல, ஏகசந்தோஷமாக இவற்றை சில காலங்கள் அனுபவித்துவிட்டு, திரும்ப நார்மல் வாழ்க்கைக்கு திரும்பவர்களே( பிச்சை எடுக்க) அதிகமாம்!

எதுக்கு வெயில் மழையில அலைஞ்சு திரிஞ்சு பிச்சை எடுக்கணும் அதான் கவர்ன்மெண்டே எல்லா வசதியும் செஞ்சு தருதுல்லன்னு மறுவாழ்வு மையத்திலேயே தங்கிடறாங்களும் இன்னும் சிலர்! – ரொம்ப பயங்கரமான சோம்பேறிகள் போல...!!!!???

வந்த நாள் முதலாய்...!

24.09.2006

காலை 7.30 க்கு பிளைட், நாம இரண்டு மணி நேரம் முன்னாடியே போயிடணுமான்டா? வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற வெறியோடு பலரிடம், சேகரித்த தகவல்களை என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் நண்பன் – அவனுக்கு மட்டும் வாய்ப்புகள் தட்டிச்சென்றது ஏன், என்று தெரியவில்லை?

சோப்பு, பவுடர் எல்லாம் அதிகமாவே எடுத்துக்கோ, அங்க பயங்கர விலை! விலைய பார்த்தா இதையெல்லாம் யூஸ் பண்ண்வே தோணாது என்ற நண்பனிடம்,அதனாலதானே அவங்க இந்த நாட்டு காச விட நாலு மடங்கு அதிகமா தராங்க! என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தான் மற்றெருவன்!

இந்த அலம்பல்களுக்கிடையே அரை மனத்துடன் அரபு நாட்டை நோக்கிய என் பயணத்தை ஆரம்பித்தேன் இத்தனைக்கும் எனக்கு அரபு நாட்டில் தான், சென்று பணிபுரிய வேண்டும் என்று கொள்கை வெறியொன்றும் கிடையாது!

என் நேரம், என் ஸ்பான்சரோட கெட்ட நேரம் அவ்வளவுதான்!
டெலிபோன் இண்டர்வீயுலேயே நான் ஒ.கே ஆக அடுத்த நாளே மெயிலில் மிதந்து வந்த ஆபர் லெட்டர பார்த்த முதல் கொஞ்சம் சந்தோஷம், என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது என் நண்பர்கள்தான்!

பஹரைன் வந்து வேறு பிளைட் மாறி வர வேண்டும் ஒண்ணும் பிரச்சனை இருக்காதுடா? நீ ஏர்போர்ட்ட விட்டு வெளிய போகமுடியாது! அதுவுமில்லாம, நீ எங்கயாவது சுத்திக்கிட்டு இருந்த கூட, அவங்களே வந்து அழைச்சிட்டு போயிடுவாங்கன்னு சொன்ன தைரியம் தான்!

ஆனால் என் நேரம் கல்ப் ஏர்’ன் வழக்கமான சேவையின் படி அந்த பிளைட் ரத்தாகி அடுத்து 6 மணி நேரம் கழித்துதான் பிளைட்!

இது கல்ப் ஏரின் தந்திரமான நடவடிக்கைகளாம். கொஞ்சம் கொஞ்சமாக ஆளுங்களை சேர்த்து – அவர்களின் அட்டவணைப்படியான விமானத்தை,ரத்து செய்து மொத்தமாக ஒரு பிளைட்டில் போட்டு அள்ளிச்செல்கின்றனர்

முடிவில் வந்து இறங்கியாச்சு! கத்தாருக்கு! வரவேற்க கூட்டம் குழுமியிருக்கும் போது, வரவேற்க யாருமே இல்லாமல் யாரையும் பார்க்கவும்,தோணாமல் குனிந்து கொண்டே செல்லும் போது எல்லோருக்கு ஏற்படும் அனுபவமே அன்று எனக்கும் நிகழ்ந்தது!


எனக்கு தெரியும் கண்டிப்பாக யாரும் வந்திருக்கமாட்டர்கள் பிளைட் ரத்தானது தெரிந்திருக்காது என்பதால் !

வாசலில் வந்து அமரும்போது, ரிடர்ன் டிக்கெட்டோடு நாம் ஊருக்கே போக வாய்ப்பு இருந்தா போடா..! நீங்களும் உங்க வேலையும்ன்னு போய்க்கிட்டே இருக்கலாம்ன்னு, தோணுச்சு..!

கிட்டதட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு மந்தூப் என்று சொல்லப்படும் பி.ஆர்.ஒ வந்து சேர்ந்தார்! கையில் என் பெயரிட்ட பேப்பர் வைத்துகொண்டு
சென்று கொண்டிருந்தவரை நான் கண்டு பிடித்து அழைத்து வந்தேன்! பின் அவர் கொண்டு வந்து கம்பெனி குவார்ட்டர்ஸ்லில் விட்டுச்செல்ல,எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையை திற்ந்து படுக்கைகளுக்குரிய ஏற்பாடுகளை செய்திருந்த பெங்காலியும் விடைப்பெற்றுக்கொள்ள..,

அதுவரையிலும், எனக்கு ஒன்றும் புரியாமல் இருந்து அப்போதுதான் தெரிந்தது 24 மணி நேரத்திற்குள் சொந்தங்களிடமிருந்து, தனித்து விடப்பட்டது!
அப்படியே உட்கார்ந்து எதோ நினைத்துகொண்டிருந்தேன், வீட்டு ஞாபகம் மாறி மாறி வந்து கொண்டிருந்தது! இங்க நான் எப்படி இருக்கப்போறேன்
பேச்சு துணைக்கு கூட ஆள் இல்லையே! அந்த பெங்காலிக்கிட்ட பேசுறதுக்கும் இந்தி தெரியாதே!அப்போதுதான் பக்கத்து ரூமிலிருந்து,கதவு திறக்கும் சப்தம்!

நல்ல தூக்கத்திலிருந்து, முழித்தவாறு வந்த அந்த நண்பர் கேட்டார் - தமிழில்,

எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா?

கூட இருந்த மற்றொருவர் பழச்சாறு பாட்டிலை கொண்டு வந்து கொடுத்து,

எடுத்துங்கோங்க மாஸ்டர்...!!!

பயணத்தில் நான்....!நீண்ட நெடிய சாலை!

பாதை தெரிகிறது!

பயமும் தெரிகிறது!

தனி ஒருவனாக கடக்கப்போவதை நினைத்து!

யாருமில்லா இருபக்கங்களில்

யாரை நான் கூப்பிடுவேன்!

யாரை நான் கும்பிடுவேன்!

எங்கள் ஊர் அரசியல்வாதிகள்;

எண்கண் முன்னே என்னை பழித்து சிரிக்கின்றார்கள்;

யாருமே இல்லாத இடத்தில் போட்ட கும்பிடுக்காக

நான் அவர்களைப்பார்த்து எத்தனை முறை சிரித்திருப்பேன்..!

யாருமில்லா ஊராகத்தான் முதலில் தெரிகிறது!

பள்ளங்கள்தான் முதலில் கண்ணில்படுகின்றன,

ஒன்று மட்டும் உறுதியாகிறது.

போகும் பாதையில் பயங்கரம் இல்லையென்று;

தென்றல் காற்று என்னை தொட்டுச்சொல்கிறது,

நானும் செல்வேன் வெல்வேன் என்று..!

எதிர்கொள்ள யாருமில்லாவிட்டாலும்,

இதோ பயணம் தொடங்கிவிட்டேன்!

பாதையே மலர்களால் வேண்டாம்!

பாதையில் வரும் மரங்களாவது,

என் மீது மலர்களை உதிருமா..?

ஆயில்ய(ன்) நட்சத்திரத்தில்...!

வந்த நடசத்திரங்கள்;
வரப்போற நட்சத்திரங்கள்;
பழைய நட்சத்திரங்கள்;
என எல்லா நட்சத்திரங்களுக்கும்,

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி,
அருள்வாய் அபிராமியே! ன்னு சாமிய வேண்டிக்கிட்டு,

எங்க ஊரு பிரசன்ன மாரியம்மன் கோவில் ஸ்பெஷல் பிரசாதம் வாங்கிட்டு வந்து வைச்சிருக்கேங்க! எடுத்துக்கோங்க!மாரியாத்தா!

காளியாத்தா!

இந்த ஒரு வாரமும் நல்லபடியா, போகணும்பா!

நட்சத்திர வாரத்தில யாரும் என்னைய ஒட்டாம, நான் இந்த வாரத்தை நல்லபடியா ஒட்டிட்டு,ஒடணும்...!

வடிவேலு & ஸ்ரேயா - So What?என்னாங்க இந்த மாதிரி போட்டோ பாக்கறப்பத்தான் ஒரு தன்னம்பிக்கை வருது!

ஆனா பாருங்க எவ்ளோ கூச்சல்..!

பொறமைக்கார பசங்கப்பா...!!!நான் அப்பவே சொன்னேன்ல..!

சில வருடங்களுக்கு முன்பு, பலர் ஆர்வமுடனும், ஆச்சர்யத்துடனும் பார்த்த,விஷயம்தான் கூகுளின் எர்த.

எந்த மூலையில் இருந்தும் நாம் நினைக்கும் இடத்தின் வரைபடத்தை மிக துல்லியமாக பார்க்க இயலும்!

சாலைகள், ரயில்வே, மற்றும் நீர் வழித்தடங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும், ரொம்ப கிட்டத்தில் பார்த்தால் எப்படியிருக்குமே? அப்படியே இணையத்தில் காண முடிந்தது!

ஆனால் இந்த படங்களை இப்படி காண்பது பல நாடுகளுக்கு கவலையளிக்கும் விஷயமாக காட்சியளித்தது! அதுவும் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் உள்ள நாடுகளில்,தீவிரவாத செயல்களுக்கு ரொம்ப துல்லியமான தகவல்களை இந்த கூகுளின் எர்த மூலமே பெறமுடியும் எனபதும் அதிர்ச்சியளிக்ககூடியதாக இருந்தது!

இது சம்பந்தமாக இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எச்சரிதிருந்தாராம்!

சில நாட்களுக்கு, முன்பு பாலஸ்தீனிய தீவிரவாதிகள் காஸா முனையில் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலுக்கு, தாங்கள் கூகுள் எர்த்தையே பயன்படுத்தியதாக படு அசத்தலாக பேட்டியும் கொடுத்துள்ளார்கள்! அதுக்கப்புறம் தான் இப்ப கொஞ்சம் பரபரப்பாகியிருக்கு!

அதே நேரத்தில கலிபோர்னியாவில எரிஞ்சுக்கிட்டிருக்கிற காட்டு தீயையும் போட்டோ எடுத்து,அதன்மூலமா மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு வர்றாங்க!

ஒரு வழியில் மிக்க உபயோகமானதாக இருந்தாலும், தீவிரவாதிகள் கையில் கிடைத்து,ரொம்ப ஈஸியாக இருந்த இடத்திலேர்ந்தே வேலைய முடிச்சிக்கிட்டாங்கன்னா என்னா ஆவும்?

நினைச்சு பார்க்கவே திக்குன்னு இருக்கு!

எங்க நல்ல நேரம் எங்க ஊர மட்டும் துல்லியமா பார்க்க முடியாதபடி கூகுளில் இருக்கு அதனால நாங்க தப்பிச்சோம்! (அது சரி எங்க ஊருக்கு எதுக்கு இவ்ளோ செக்யூரிட்டின்னு கேட்கறீங்களா? அபி அப்பா மாதிரி ரொம்ப பேரேட சொந்த ஊருக்கு பாதுகாப்பு வேணாமா?)

ராமன் எபெக்ட்...?!

பதினெண்டு வருடத்துக்கு முன்பிலிருந்து ஆரம்பித்த வழிபாடு இன்று தற்காலிகமாக ,அரசின் குறுக்கீட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

அரசின் தரப்பிலிருந்தோ சரியானதொரு விளக்கமும் தரப்படாத சூழல் இந்த ஜனநாயக நாட்டில்!

இச்செய்தி நடந்த இடத்திற்கும் நம்க்கும் ரொம்ப தூரம் என்றாலும் ஏதோ ஒரு வகையில் நம்மை தொடர்பு படுத்தும் விஷயம் தான்
பத்து தலை ராவணணை பற்றி பெரும்பாலும் தெரிந்திருப்பீர்கள்! ராமாயணத்தில பார்த்திருந்தாலும் சரி; இல்லை, சிவதாண்டவத்தில படிச்சிருந்தாலும் சரி! – எப்படியோ தெரிஞ்சிருந்தா சரி!

ஜோத்பூரில் தேவ்கோட் சமூகத்தை சார்ந்தவர்கள் ராவணணை தம் முன்னோர்களாக கருதி வழிபாடு செய்து வருகின்றனர்! இது ஒரு 18 வருஷமா நடந்து வருதாம்!

மெகரங்கார்க் (குளறுதுப்பா!!) கோட்டைக்கு அப்பரத்த சைடு இருக்கற இந்த கோவில்ல, எல்லா சாமிகளும் உண்டாம்!

சரி ரொம்ப வருஷாமாச்சே! கோவில கொஞ்சம் புதுப்பிச்சு கட்டுவோம்னு எல்லாம் சரி பண்ணி, அழகான ஜோத்பூர் கல்லில் செதுக்கிய, சிவனுக்கு பூஜை செய்வது போல் நிற்கும் ராவணன்சிலையை பிரதிஷ்டை பண்ண போறப்பத்தான் அதெல்லாம் முடியவே முடியாதுன்னு, காவி குரூப்ஸ் எதிர்க்க ஆரம்பிச்சு,

Photo Sharing and Video Hosting at Photobucket

ராஜஸ்தான் பிஜேபி கவர்ன்மெண்ட்தானே! - விளக்கம் எதுவும் சொல்லாம நிப்பாடிப்புட்டாங்க, கவர்ன்மெண்ட் ஆபிசருங்க!

தற்காலிகமாத்தான்னு சொன்னாலும் அடுத்து காங்கிரஸ் கவர்ன்மெண்ட் வந்தாத்தான் சாத்தியம் போல....!

அவங்கவங்க விரும்பற சாமியை கும்பிடறதுதானே சுதந்திரம்!

என்ன சனநாயக நாடோ..?

நாம எதாவது கரசேவை பண்ண முடியுமா இந்த மேட்டர்ல..?

தோஹா 2016 - ஒலிம்பிக்ஸ்..?

2016ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தப்போகும் நாடுகளுள், கத்தாரும் தனது தகுதிகளை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவித்து, 2016ல் தேஹாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்து முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியுள்ளது!

அரபு நாடுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் நடத்த, தகுதிகளின் அடிப்படையிலான தேர்வுகளில் கலந்துகொள்கிறது கத்தார்!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக சுமார் 2பில்லியன் டாலர் செலவழித்து,சிறப்பான அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் புதிய மைதானங்களை அமைத்து, வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

அதன் பிறகு கத்தாரின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்கை மையமாக வைத்துதான் செயல்பட தொடங்கியது!

கத்தாரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்படவேண்டும், என்று சர்வதேச அளவில் கவன ஈர்க்கும் விதமாக நேற்று தோஹாவில் நடைப்பெற்ற தோஹா கடற்கரையில் பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிம்பிக் 2016க்கான சின்னம் வெளியிடப்பட்டது!

Photo Sharing and Video Hosting at Photobucketஎது எப்படியோ 2016ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றால் இந்தியர்கள் நமக்கும், கூட பெருமைதான்!

பெரும்பாலும் வாலண்டியர்கள் உதவியோடு சிறப்பாக நடத்தி முடித்த ஆசிய விளையாட்டு போட்டிகளை போன்றே, ஒலிம்பிக்கிலும் அதிகளவில் வாலண்டியர்கள் ஈடுபடுத்தப்படபோவது உறுதி!

அதில் அதிகளவில் இந்தியர்கள் இடம்பெறப்போவதும் உறுதி! (விளையாட்டுல் இல்லைங்க..!!!)

E - வேஸ்ட்..?

கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்கள், மொபைல் போன் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மிக்ஸி, ரெப்ரிஜிரேட்டர், மற்றும் புதிதாக வந்துகொண்டே இருக்கும் உபயோகப்படுத்தி உதறிவிடும் பொருட்கள்

என ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் வாங்குவதென்றால் எல்லோருக்குமே ஆனந்தம்தான்!

கொஞ்சம் காலம் கழித்து,பழுதடைந்தாலோ அல்லது புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலோ அந்த பழைய பொருட்கள் பரணுக்கு சென்றுவிடும்.

இது தொடர்ந்துகொண்டே செல்லும்போது, அதை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் தெருக்குப்பையில் போட்டுவிடலாம் என்ற எண்ணம்தான் சராசரி மனிதனுக்கு தோன்றும்!

அதையேதான் இன்று பலரும் செய்துகொண்டிருக்கின்றனர், ஆனால் அதற்கு பின்னர் அந்த பொருட்களால் தாம் சார்ந்த சமூகத்துக்கு வரும் ஆபத்து பெரும்பாலும் யாரும் உணர்வதில்லை!

பாதரசம்,காரீயம் மற்றும் பிவிசியினால் செய்யப்பட்ட உதிரிபாகங்கள் பெரும்தீங்கு விளைவிக்ககூடிய பொருட்கள் உள்ளடக்கிய பழைய கம்யூட்டர்களுக்குத்தான் சுற்றுசுழலை மாசுபடுத்துவதில் பெரும்பங்கு!

Photo Sharing and Video Hosting at Photobucket


சரி இந்தியா அந்தளவுக்கா முன்னேறிடுச்சு! கம்யூட்டர தூக்கி போடற அளவுக்கு இங்க ஆள் இருக்கான்னுத்தானே கேட்கறீங்க?

அதுதான் இல்ல! இதிலும் நமக்கு ஆப்பு - வெளிநாடுகளிலிருந்து வாங்கி - வைச்சிக்கிறோம்!

நல்ல காசு கிடைக்கும்னு, கம்யூட்டர அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சி, முக்கியமான பார்ட்கள எதாவது கடைக்காரனிடம் கொடுத்து, காசு வாங்கிகிட்டு, மீதியை மண்ணுக்குள்ள போட்டு புதைச்சிட்டுறோம், அல்லது எரிச்சிடுறோம்! அது அப்படியே மண்ணில தங்கி, மழை சமயங்களில், கொஞ்சம் கொஞ்சமாக, நிலத்தடி நீருக்கு போய் எமனுக்கு ஹெல்ப் பண்ணும் வேலையை வெகு சிரத்தையாக செய்து முடிக்கிறது!

Photo Sharing and Video Hosting at Photobucketஇந்த மாதிரியான வேலைகளில் ஈடுபடுவோர் பெரும்பாலும், ஏழ்மையின் காரணமாகவும், படிக்காதவர்களாகவும், இதன் பயங்கரம் அறியாதவர்களாகவும்தான் இருக்காங்க!

மறுசுழற்சி முறையில் இந்த பொருட்களை பயன்படுத்த சொல்லி பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது!

அரசு பிரச்சாரம் என்பது எப்போதும் அதிகம் எடுபடாதா விஷயம்தானே நம் நாட்டில்...?!

இனிய தீபாவளி நாள் நல்வாழ்த்துக்கள்..!?

பதினைந்து நாட்கள் கழித்து வரப்போகும் தீபாவளிக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துக்கள்!


குறிப்பு:- இனி வரும் நாட்களில் மிக்க சந்தோஷத்துடன் கடைவீதிகளில் காலம் களி(ழி)க்கப்போகும் நண்பர்களே!

உங்களின் கண்களில் இதுபோன்ற ஏக்க முகங்கள் தெரிந்தால் கொஞ்சம் உதவுங்களேன்!

அவர்களும் இருப்பார்கள் சந்தோசமாக ஒருநாளைக்கு..!

கக்கூஸ்

ரொம்ப..

ரொம்ப…,

அவசியமான விஷயம்தான் !

ஆனா பாருங்க!

நம்ம நாட்ல இதுக்கு கொடுக்கற முக்கியத்துவம்

ரொம்ப..

ரொம்ப...

குறைச்ச கக்கூஸ் வசதி இல்லாததால சுமார் 70 கோடி பப்ளிக்கு, பப்ளிக்கா இருக்கறாங்கன்னு ஒரு சேதி!

Photo Sharing and Video Hosting at Photobucket


அரசும் அலசி ஆராய்ந்து இதுக்கு ஒரு முடிவு கட்டணுமுனு, பஞ்சாயத்துக்கள் மூலமா கக்கூஸ் கட்ட, பிரச்சாரம் பண்ண நிதிகள அள்ளிகொடுக்குது ஆனா பாருங்க!

இவ்வொரு பஞ்சாயத்து பில்டிங்ல பெரிய படத்த மட்டும் வரைஞ்சு பிரச்சார நிதியை “நல்லா” செலவழிச்சிருப்பாங்க!

(பஞ்சாயத்து பில்டிங்கு பக்கத்துல உக்காந்துக்கிட்டு, அந்த படத்த பார்த்து இன்னாது இது? கேட்கற ஆளுங்களும் இன்னமும் இருக்கு!)

பொதுவா போய் உக்காரதால ரொம்ப மோசமா சுற்றுசுழல் பாதிக்கப்படுதுன்னு சொல்லி, இத தடுக்கணும் மக்களுக்கு விழிப்புணர்வு வர்ற வைக்கணுமுனு முடிவு கட்டிக்கிட்டு ஒரு அமைப்பு இயங்கிக்கிட்டிருக்கு(ஆச்சர்யமா இருக்கா!?)

வர்ற 31ந்தேதி டெல்லியில ஒரு மீட் போட்டு, இன்னும் என்னா செய்யலாமுணு அலசி ஆராயப்போறாங்களாம்! அவங்க எடுக்கற முடிவ இவங்க(அரசியல்வாதிகள்தான்) நல்லபடியா நிறைவேத்தணும்னு நாம் ஆள்பவனைத்தான் வேண்டனும்!

இந்த மீட்ல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம தமிழ்நாட்டு பொண்ணு ஒண்ணுக்கு இந்த மீட்டிங்கல விருது கொடுத்து பெருமைப்படுத்தப்போறாங்களாம்!

நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் மாசா நஸிம் 2005 ல ரயில்களில் பயன்படுத்துவதற்காக வேண்டி ஒரு கக்கூஸை டிசைன் பண்ணி அறிவியல் கண்காட்சியில டெமோ பண்ணி பலரது பாராட்டையும்,முதல் பரிசையும் வாங்கியவரை நம்ம அப்துல் கலாமும் பாரட்டி சில யோசனைகளையும் கூறியிருந்தாராம்!

Photo Sharing and Video Hosting at Photobucketஇப்ப டிரெயின்களில் தனியா கக்கூஸ் இருந்தாலும், தண்டவாளங்கள்தான் நாசமா போயி, அருவருக்கதக்க வகையில் இருக்குது! (உண்மையிலேயே பாவம் அந்த கேங்மேன்கள் எனச்சொல்லப்படும் தண்டவாளங்களை சோதிப்பவர்கள்

இந்த பொண்ணு சொல்ற டிசைன் படி அப்படியே கக்கூஸ்களிலிருந்து கழிவுகளை, ஒவ்வொரு ஸ்டேஷன்களில் மட்டும் வெளியேற்றி,அதை சுகாதாரமான முறையில் அங்கிருந்தும் வெளியேற்றிவிடலாம்முனு சொல்லியிருக்காங்க! இது நடந்தது 2005லயே..!

அதை ரயில்வே நிர்வாகமும் தொழில்நுட்ப அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டாலும், இதுவரையில் அமல்படுத்தவில்லை – அமல்படுத்துவாங்க...!!!??

(டிரெயின்னாலே எப்பவும் லேட்டுதானே!)

அதிரடிதான்...! மச்சான் மச்சான் மச்சானே..!நல்லாத்தான் திங்க் பண்றாங்கள்ல

அன்புமணி Vs வேணுகோபால் - மீண்டும்..?

திரும்பவும் ஒரு சின்ன பிரச்சனை !

அன்பு மணி அமைச்சரகத்திலிருந்து, தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சீனியர் கார்டியாலிஜிட்டான சம்பத்குமார் என்பவர் மார்பு மற்றும் இதயம் சம்பந்தமான மருத்துவ பிரிவின் தலைவராக நியமிக்கப்பட ஆனால், எய்ம்ஸ் டைரக்டரான வேணுகோபால் மற்றெருவாரை இன்சார்ஜ்க்கிவிட்டார்!


Photo Sharing and Video Hosting at Photobucketஏற்கனவே ஒரு சிறுவன் இதய அறுவை சிகிச்சை பிறகு இறந்துப்போனதால் அந்த அறுவை சிக்ச்சை செய்த சம்பத்குமார் மீது விசாரணை நடைப்பெறுவதால் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்!


இதற்கிடையில் அமைச்சகத்திலிருந்து எய்ம்ஸ்க்கு, பரிந்துரைகளை செயல்படுத்த மறுத்ததற்கான விளக்கம் கேட்டு வேணுகோபாலுக்கு கடிதம் வந்துள்ளதாம்!

Photo Sharing and Video Hosting at Photobucketஆக மொத்ததில் இன்னும் பிரச்சனைகள் ஒடிக்கொண்டுத்தான் இருக்கின்றன்!
அனேகமா இன்னும் சில நாட்களில் டெல்லியில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தி வருமோ..???

Gadget ஆகும் IT வாழ்க்கை!

அட..! இதெல்லாம் டெஸ்க் டாப்ல வந்து உக்காந்துக்குதே!

யாரும் பார்க்கறதுக்குள்ள டக்குனு மினிமைஸ் பண்ணி அசத்த முடியுதே!
என்ற ஆர்வம்தான் வந்தது முதலில் பார்த்ததும்...!

நிறைய தகவல்கள் தக்குணுண்டு சைசில்!

இதுக்கு பேரு gadget தமிழில் உபகரணம்

அதாவது நமக்கு மேல் சென்ன உதவிகளை, செய்யும் உபகரணமாம்!

இனி அலுவலகத்தில் பயமின்றி இணைய உலா வர விரும்புவர்கள் செய்யவேண்டிய முதல் விஷயம்! இதை புடிச்சு போட்டுக்கவேண்டியதுதான்!

Photo Sharing and Video Hosting at Photobucket


இப்போதைக்கு தமிழில் சில உள்ளன ஆனால் கூடிய சீக்கிரம் தமிழ் உபகரணங்கள் நிறைய வர வாய்ப்புக்கள் இருக்கும் என நம்புவோம்..!

எனது கொலு கால நினைவுகள்!

டேய்..! எங்க வீட்ல கொலு வைச்சிருக்கோம் வாங்கடான்னு? கூப்பிடவேவே கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது!

பின்ன என்னாங்க கழுதை வயசாயிடுச்சு! இப்ப போய் சின்ன பசங்க மாதிரி வாங்கடா கொலு பார்க்கன்னு சொன்னா பிரெண்ட்ஸ் என்னா நினைப்பாங்க?

அதனால டேய்..! இன்னிக்கி சாயந்திரம் வீட்டுக்கு வாங்க சுண்டல் சக்கரைப்பொங்கல் தர்றேன்னு! சொன்னாப்போதும், அத்தனை பேரும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடியே கிளம்பி எல்லாரையும் கூட்டிக்கிட்டு, தெரு முனையில, வந்து நின்னு இப்ப கரெக்ட் டயமா வர்லாமான்னு? கேட்கற டைப்பு..! (நாங்க மொத்த பேரும் இதே மாதிரி விஷயங்களில் ரொம்ப ஒத்துமை!)

கொலு வைக்கறதுல இன்னொரு விஷயமுமிருக்கு என்னானா? தெருவுல இருக்கற வாண்டுகள அப்பத்தான் கரெக்ட் பண்ணி, நம்மக்கிட்ட வர்ற வைக்கலாம்!

இந்த ஒன்பது நாளும் பார்த்தீங்கனா! வீட்ட விட்டு வெளியில வந்து நிற்கமுடியாது! எல்லாம் வாண்டுகளும் நம்மள சுத்தி வந்துடும்..! (எதாவது கரெக்ட் பண்ணி பொம்மைகள சுட்டுப்போக நினைக்கும் சில கிரிமினல் வாண்டுகளும் எம் தெருவில் உண்டு..!)

சரி இத விடுங்க எங்க வீட்ல கொலு வைக்க ஆரம்பிச்ச கதைய சொல்லணும்ல..!
சின்ன வயசுல எங்க வீட்டு மூத்தவருக்கு புள்ளையாருன்னா உசுரு! பிள்ளையாரு வாங்கி, வாங்கி, வீட்டோட ஹால்ல, பாங்க் லாக்கர் மாதிரி ஒரு பெரிய பொட்டியில் போட்டு வைச்சுருப்பாரு! இந்த மாதிரி நவராத்திரி நாள்ல, தருமபுரம் கோவில்ல கொலு வைச்சிருக்கறத பார்த்து, எங்க பெரியவருக்கு ரொம்ப இன்ட்ரஸ்ட் வந்துடுச்சி..!

(அங்க இருக்கற பிள்ளையார கட்டிப்புடிச்சிக்கிட்டு, இதுவும் வேணுமுனு கேட்டு, குடும்பமே சாத்து, சாத்துன்னு, சாத்திதான் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்களாம்!)

எங்க அப்பா சொந்தகாரங்கள கூப்பிட்டு வைச்சு,மீட்டிங் போட்டு, கருத்து கேட்டு, நமக்கு இந்த பழக்கமெல்லாம் கிடையாது! என்ற பலத்த எதிர்ப்பையும் மீறி பையனோட ஆசைக்கு ஒ.கே சொல்ல, ஆரம்பிச்சுது கொலு வைக்கும்,கொலு பொம்மைகள் வாங்கும் படலம்! அதன் பின்னர் வந்த வருடங்களில் பொம்மைகளின் எண்ணிகை எகிறின!

அட..! இத யார் பார்த்து, என்ன பிரயோஜனம் என்ற அலட்சியத்தில் நாங்க இருக்க; தெருவுல உள்ளவங்க, இந்த சேதிய எங்ககிட்ட சொல்லமாட்டிங்களான்னு? ரொம்ப கவலையா கேட்டுப்போக, அன்றிலிருந்து அக்கம்பக்கத்திலுள்ளவர்களை அழைக்கும் முறை ஆரம்பமானது!

கலர் பேப்பர்களில் காகித பூக்கள் கட் செய்வது,சீரியல் விளக்குகளால் அழகுப்படுத்துவது, போன்ற விஷயங்களில் அப்போதிருந்த ஆர்வம் ! இப்ப சுத்தமா போயே போச்சு..!

அது இன்னும் கன் டினியூ ஆகிக்கிட்டிருக்கு என்ன ஒண்ணு பழைய மாதிரி பிருமாண்டமா கொலு வைக்கத்தான் ஆளுங்க இல்ல...!

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வேலிமுட்டி

வேலிமுட்டி பற்றிய தெரிஞ்சுக்கணும் ரொம்ப ஆர்வமா இருக்கறாவங்க இங்க, வாங்க வேலி முட்டின்னா என்னான்னு இப்ப புரியும்..!
புரிஞ்சுதா?

குறிப்பு:- நீங்க தெரிஞ்சுக்க வந்த விஷயத்தை விட்டுபுட்டு வடிவேலு - பார்த்திபன் காமெடிய பார்த்துக்கிட்டு இருந்தா,
என்னால உங்களுக்கு வெளங்க வைக்கமுடியாதப்பா..!?

சொல்வதற்கு ஒன்றுமில்லை..?!

ஊரையே கலக்கிய பெரிய ரவுடின்னுல சொன்னாங்க....?


செல்போன் செக்கிங்...!

அரசு அறிவித்தது போல,அமல்படுத்தப்பட்ட விஷயம் மொபைல் போன் தடை செய்யப்பட்டுவிட்டது!

பள்ளிகளில் செக்கிங் பண்ணவும் உத்தரவு!Photo Sharing and Video Hosting at Photobucketஅதையும் தாண்டி இது...!Photo Sharing and Video Hosting at Photobucketஇந்தளவுக்கு யோசித்து முயற்சித்த அந்த மாணவிக்கு, படிக்கும் புத்தகத்தை சீரழிக்கிறோமே, என்று தோன்றாதது, ஏன்..?


(புத்தகத்த பார்த்தா, அத புக்கா உபயோகப்படுத்துனமாதிரியே தெரியலை! எதோ டைரி மாதிரியே இருக்கு...?)


நன்றி - தினகரன்

வன்முறையான வரவேற்பு - பெனசிருக்கு

Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at PhotobucketPhoto Sharing and Video Hosting at Photobucketபெனசிரின் வரவேற்பு ஊர்வலத்தில் குண்டு வெடித்ததில்,பெனசிருக்கு வரவேற்பு அளிக்க குழுமியிருந்த, அவரது ஆதரவாளர்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் பலியானதாக ஏ பி செய்தி நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன!
மேலும் 150க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
பெனசிர் பத்திரமாக இருப்பதாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனித வெடிக்குண்டாக சம்பவமாக இச்செயல் இருக்கக்கூடும் என முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன

பாசக்கார குடும்பம் - கலங்கிய மனதுடன் நான்...!

ஒத்த கருத்துடையவர்கள் சந்திக்கும் ஒரு புள்ளியில், இது நிகழும்..!

எதிரெதிரே இருப்பவர்கள், தம் மனநிலைகளில் ஒத்து இருக்கும் போது, இது நிகழும்...!

நாம் பரிமாற நினைக்கும் கருத்துகளை நமக்கு பரிமாறப்படும் போது, இது நிகழும்...!

உறவுகளிடம் கூட சொல்லாத, விஷயங்கள் சந்தோஷங்களை, நாம் பகிரும்போது இது நிகழும்...!

நம் உறவுகள் கூடும் போது சில மணி துளிகளில் மட்டுமே இது நிகழும்...!

மனம் கலங்கி இருக்கிறீர்களா நீங்கள்..?

உள்ளம் உற்சாகமின்றி இருக்கிறாத உங்களுக்கு.?

கவலைகளிலேயே கவனம் செல்கிறதா...?

போங்க...!

இங்க - :-)

கடைசி வரி வரைக்கும் படியுங்கள்!

கண்டிப்பாக உங்களுக்கு இது நிகழும்...

சந்தோஷம்...!


Photo Sharing and Video Hosting at Photobucket
ஹாட்ஸ் ஆப்!

டூ

கண்மணியக்கா
அபி அப்பா
குசும்பன்
குட்டிபிசாசு
முத்துலெட்சுமி
தருமி
மின்னுது மின்னல்
கோபிநாத்
காயத்ரி
அய்யனார்
.:: மை ஃபிரண்ட் ::.

உறவுகளை பிரிந்து வந்து, ஒரு ஆண்டை கடந்த நினைவுகளில், தனிமையில் கலங்கியிருந்த, என்னுடைய ஒர் இனிய இரவில், எனக்குள் விழுந்த, என்னுள் எழுந்த,

எண்ணங்கள்..!

இங்கு எழுத்தில்...!கண்ணதாசா.....!

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட்டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத்தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப் படாதீர்கள். விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடைத்து விடுங்கள். எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.

உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
- கவியரசு கண்ணதாசன்

கவியரசரின் நினைவு நாளில் ( 17.10.1981 )

மழைக்காலம் - இன்று ஆரம்பம்..?!

Photo Sharing and Video Hosting at Photobucketராமர் பிரச்சனை;

முன்னாள முதல்வர் - கொடநாடு பிரச்சனை;

சேதுசமுத்திரம் பிரச்சனை;

கேபிள் டிவி பிரச்சனை;

முதல்வரின் உண்ணாவிரதம்;

சுப்ரீம் கோர்ட்டின் அரசுக்கான கண்டனங்கள் சம்பந்தமான பிரச்சனைகள்,

போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைக்களுக்கு தீர்வு காணும் பொருட்டு இன்று முதல் மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது! முடிஞ்சா டிவியில போடுங்கப்பா! சிம்பு அழுகை+ ஆக்ஷன் மேட்டரால விஜய் டிவி டி.ஆர்.பி ரேட்டிங்க எகிறிடிச்சாம்! அதுக்கு உடனடியா நடவடிக்கை எடுங்க..!ஆனா ஒரு நல்ல விஷயம் போன ஆட்சி மாதிரி ஜால்ராஸ் சத்தம் அதிகம் வராதுன்னு நம்பலாம்!

(இவர இந்த மாதிரி கூட்டங்கள்ல பார்த்தாதான் உண்டு அதான் இந்த போட்டோ..!)

தப்பித்த அந்த பெண்ணுக்கு தெரியாத கதை!

மகனின் எண்ணங்கள்!

நல்லா வேலை கிடையாது ! அதற்கான முயற்சிகளும் இல்லை!

வயசும் 26.

கெட்ட பழக்கம் எதுவும் கிடையாதுன்னு, யாரும் சொல்லக்கூடாத அளவுக்கு கைவசம் இருக்கு!

சண்டை போட்டா பெத்தவங்க கல்யாணம் பண்ணி வைப்பாங்கன்னு ஒரு நப்பாசை..!


தந்தையின் கவலைகள்!

பெருசா வருமான வராத வேலை - லாரி டிரைவர்

குடும்பத்தையும் கட்டி காக்குற பொறுப்பு இன்னும் பையனுக்கு வராத கவலை!

பையனோட தகுதிகளை நினைச்சு பொண்ணு பார்க்க போக தயக்கம்..!

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிபாருன்னு சொல்வாங்க,ஆனா நம்ம பையன் வீட்டை வித்து, எனக்கு கல்யாணம் பண்ணி பாருங்கறானேன்னு பெரும் கவலை!

இவையெல்லாம்...


Photo Sharing and Video Hosting at Photobucket


தப்பித்த அந்த ஏதோ ஒரு பெண்ணுக்கு தெரியாது தானே..!?

அதுவும் சென்னையில் இருந்துக்கிட்டு காலையில 5மணிக்கு எழுந்து பார்த்தாலே, எல்லாரும் கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு போகாத குறையா போகும்போதுவீட்ல சும்ம உக்காற யாருக்காவது மனசு வருமா? பார்த்தாலே உள்ளுக்குள், வாழ்க்கைய பற்றியதான எண்ணங்களில் அதிரவேணாமா..?

தவறுகள் ஏற்பட்டது பெற்றோராலா அல்லது சமூகமா? (அதாங்க டி.வி சினிமா.!)

(இதுக்கு எதுக்கு ஸ்ரேயா படம்ன்னு யோசிக்கிறீங்களா..? உருப்படாம போனது கண்டிப்பா, ஸ்ரேயாவை நினைச்சு ஃபீல் பண்ணியிருக்கும்னு, எனக்கு ஒரு ஃபீலிங் அதான்!)

www.youtube.in – அட அப்படியா..?!

Photo Sharing and Video Hosting at Photobucket

யூ டீயூப் வநத பிறகு வீடியோ பார்க்கும் எண்ணிக்கை அதிகமாக தொடங்கி, எதுவும் டவுன்லோட் செய்து பார்க்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட்டு, நல்ல இணைய இணைப்பு இருந்தாலே போதும், அதிலேயே பார்த்துவிடலாம், எனற அளவுக்கு மாறிப்போனது!

அதுவும், டி.வி சீரியல்கள் முதல் ரீலிஸான புதுப்படம் வரை அடுத்த 24 மணி நேரத்தில் இணையத்தில் உலா வரத்தொடங்கிவிடுகிறது! எங்களைப்போன்ற ஆட்களுக்கு எங்கேயோ இருந்துகொண்டு மணிக்கொருதரம் அப்டேட் செய்யும் அந்த ஆத்மாவிற்கு நன்றி சொல்வதோடு, மிக முக்கியமாக அதை பெற உதவும் யூ டீயூபுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கோம்ங்கறதயும் இங்க சொல்லிக்கணும்.!

நம்ம இந்தியாவிலேர்ந்து வீடியோக்கள் அப்லோடு செய்வது குறைவுதான் என்றாலும், பார்ப்பவர்கள் அதிகமாம்..!(நாம வெவரமுல்ல..!?)

அதனால நம்மளுக்குன்னு www.youtube.in தனியா யூ டீயூப் தர்ற போறதா சொல்லிட்டாங்க.!

அது மூலமா, நாம் ஈஸியா நமக்கு தேவையான விஷயங்களை எடுத்துக்கிடலாம் அதுவுமில்லாம, நம்மாளுங்க புது படம் டிரெய்லர்கள் (முழுப்படமும் வந்துடும்ல்ல!) டாக்குமெண்ட்ரி படங்கள்,விளம்பரங்கள் என எல்லாம் அப்லோடு பண்ணி என் ஜாய் பண்ணலாமாம்!

வளர்ந்து வரும் அகலப்பட்டை இணைய இணைப்பு,மற்றும் அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை இவைதான் இதற்கு பின்ணணியாம்..!

நம்ம சூப்பர் ஸ்டார் படத்தோட ஒரு கிளிப்ங்ஸ் டாப் 100 ரேங்க்ல வந்திருக்காம்ல, இப்ப இந்தியாவுக்குன்னு தனியா வர்றதுக்கு, இந்த மாதிரி ஆதரவு தர்ற பார்வையாளர்கள் இருக்கறதும் ஒரு காரணமாம்.!

கத்தார் புது டிரெஸ் கோடு - வெளிநாட்டினருக்கு?

வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரிபவர்கள் கத்தார் நாட்டின் கலாச்சாரத்திற்கேற்ப நடந்துகொள்ளும் பொருட்டு, ஆடை அணிதல் தொடர்பாக புதிய சட்ட விதியினை கத்தார் அரசு வெளியிட இருப்பதாக,உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது!

ஏற்கனவே இங்கு பொறியாளர்கள், தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடுவோர் மற்றும் தொழிலாளர்கள் கட்டாயம் பணியிடங்களில் யூனிபார்ம் அணிந்துதான் பணி மேற்கொள்ளவேண்டும் இது பாதுகாப்பு சம்பந்த பட்ட விதிமுறையாகவும், இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சுழலில்,தற்போது அறிவிக்கப்பட உள்ள ஆடை அணிவது பற்றிய பரிந்துரைகள்,பெரும்பாலும் அலுவலகங்கள், வங்கிகள் சார்ந்த பணி செய்பவர்களுக்காத்தான் என தெரிகிறது!

Photo Sharing and Video Hosting at Photobucket


அலுவலங்களை பொருத்தமட்டில் ஆசியாவை சார்ந்தவர்கள், பெரும்பாலும் ஃபார்மல் டிரெஸ் எனப்படும் பேண்ட் சர்ட் அணிகிறார்கள் மற்ற நாடுகளிலிருந்து வருபவர்கள் – எகிப்து, லெபனான், சூடான், ஜோர்டான், சிரியா & பிலிப்பைன்ஸ் - அவர்களின் இஷடப்பட்ட உடைகள்தான்! (அலுவலகத்துக்கு வருவதே ஏதோ ஸ்போர்ட்ஸ்க்கு செல்வது போன்று ஜீன்ஸ் டீ-ஷர்டோடுதான்!)

எதிர்பார்ப்போம் என்ன மாதிரியான சட்டவிதிகள் அமலாகின்றனவென்று...?!

நாலுக்கோட்டை – நாலு பேருக்கு தெரிய வைக்கணும்.!

சமீபத்தில் ஜுனியர் விகடனில் நாலுக்கோட்டை ஊராட்சி பற்றி செய்திகள் வெளியாயிருந்தன.

தமிழ்நாட்டில் ஒரு முன்னோடி ஊராட்சியாக 1965லிருந்து பஞ்சாயத்து தலைவராக ஒருவரே வந்தாலும், கட்சி சார்பின்றி இருந்தாலும், இந்தளவுக்கு ஊரின் நலனை மட்டுமே, முக்கியமாக கொண்டு பணி செய்து வருவது ஆச்சர்யம்தான்! இதுவே எங்க ஊரு பஞ்சாயத்து தலையா இருந்தா, ஊருக்கு அதிபராகி,தனி கவர்ன்மெண்டயே நிர்மாணிச்சிருக்கும்..!(பாதி ரோடு மெட்டீரியல்ஸ் அவரு வூட்ல (வீடாகவும்) இருக்குன்னா பாருங்களேன்.!?) நாலுக்கோட்டை மக்கள் உண்மையிலேயே கொடுத்து வைச்சவங்கதான்!

இது போலவே எல்லாம் ஊராட்சிகளும் இருக்கணுமுனு ஆசைப்பட்ட அது பேராசை..!
அது வேணாம்.!
இந்த ஊராட்சியில் நடந்துக்கிட்டிருக்கற அல்லது நடக்க இருக்கற திட்டங்கள பத்தி தெரிஞ்சுக்கற மாதிரி, அனைத்து மாவட்டங்களுக்கும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை ஒளிப்படக்காட்சிகளா எடுத்து,

சும்மா வந்து ஒரு டீக்கு கூட வழியில்லாம உட்கார்ந்துவிட்டு, கலைந்து செல்லும் கிராம சபா கூட்டங்களில் வீடியோ ஒளிப்பதிவை காண்பித்தால், அட்லீஸ்ட் அத பார்க்குற பத்து பேருல, ஒருத்தருக்காவது, அது மாதிரி நம்மூருலயும் பண்ணணுமேன்னு ஒரு ஆசையாவது வருமே..! அப்புறம் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாவது மாற்றம் வரலாமுல்ல?

விருது கொடுத்து,போட்டோ எடுத்து கொளவதோடு,அரசு கட் பண்ணிக்காம இது மாதிரியும் கன்டினீயு பண்ணனும்?

பண்ணுமா?

அட்வைஸ் From ராதிகா..!

குட்டிப் பசங்க நிறைய கேள்விகள் கேட்பாங்க. நம்மால் பதில் சொல்ல முடியாத கேள்விகளாக இருக்கும். அவங்களுடைய கேள்விகள் நியாயமாகவும், புத்திசாலித்தனமாகவும் இருக்கும். முக்கால்வாசி நமக்கு பதில் தெரியலைங்கிறதாலதான் எரிஞ்சி விழுவோம். பொறுமையாக யோசித்துப் பார்த்தால் அறிவுபூர்வமான இந்தக் கேள்விகள் இவங்களுக்கு எப்படி தோணுதுனு ஆச்சரியமா இருக்கும். கேள்விகள் கேட்பது சிந்தனை வளத்தையும், கற்பனைத் திறனையும் வளர்க்குமாம். அதனால முடிந்த வரையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலைனாலும், அவங்க கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருந்தால் நல்லது! என் பையன் குடைகிற கேள்விகளையெல்லாம் இப்படித்தான் சமாளிக்குறேன்!

பசங்களை படிபடின்னு டார்ச்சர் கொடுக்காமல் பார்த்துக்கணும். படின்னு சொன்னாலே படிப்பு அவங்களுக்கு அதிக பிரஷர் கொடுத்துடும். ரேயான் பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருக்காள்.பொதுத் தேர்வை எதிர்நோக்க வேண்டிய கட்டத்தில் இருக்காள். நான் அவகிட்ட நீ படிச்சிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குன்னு மட்டும்தான் சொன்னேன். தினமும் காலையில் அலாரம் வைத்து எழுந்து தானாகவே நல்லா படிக்குறாங்க... நானும் ஷ¨ட்டிங் முடிஞ்சவுடன் முதல்வேளையா வீட்டுக்குக் கிளம்பிடுவேன். படின்னு சொல்லலைனாலும் அம்மா வீட்டில் இருக்காங்க படிக்கணும்ங்கிற உணர்வு அவங்களுக்கு இருக்கு. மகளுக்கு எல்லாமே நான்தான். என்னோடவே பிண்ணிப் பிணைஞ்சுட் டாங்க...’

பொதுவாகவே குழந்தை வளர்ப்பில் அப்பாவின் பங்கை ரொம்ப எதிர்பார்க்க முடியாது. வேலையில் பிஸியாக இருந்துவிடுவதால் முழு பொறுப்பும் நம்ம கையில் தான் இருக்கு. வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கணும்னு அவங்களை எதிர்பார்ப்பதில் நியாயமும் இல்லை. ஆனால் நாம என்னதான் பார்த்துகிட்டாலும் பசங்க அப்பா செல்லம்தான்! காலையில் எழுந்தவுடன் ராகுல் அப்பாவைதான் கேட்பான். ஜிம்முக்கு போயிருக்காருன்னு சொன்னால் நான் எழுந்தாச்சுன்னு சொல்லி உடனே வீட்டுக்கு வரச்சொல்லுங்கன்னுவான். அவரும் உடனே வந்திடுவாரு. அப்பான்றவரு குழந்தைகளுக்கு ஒரு மிகப்பெரிய சப்போர்ட்தான்!

ஒண்ணு மட்டும் தெளிவா புரிஞ்சுக்கணும். கெட்ட பெற்றோர்கள் வேணா இருக்கலாம், கெட்ட குழந்தைகள் இருக்க சான்ஸே இல்லை. நம்மளைதான் நம்ம பசங்க இமிடேட் பண்றாங்க. அதனால கூடிய வரையில் நாம நல்லவாங்களாக இருக்கப் பழகினால் குழந்தைகளும் நல்லவர் களாகவே வளருவாங்க’’ திருத்தமாக பேசுகிறார் ராதிகா சரத்குமார்
நன்றி:-குமுதம்

********************************************************************

நல்ல விஷயம்தான்..! பெரும்பாலன பெற்றோர்கள் இந்த விஷயங்கள கடைப்பிடிக்கணும் ஒ.கேவா?!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஒ.கே.! இப்ப முக்கியமான, இந்த கட்டுரை படிக்கும்போதும், புகைப்படங்களை, பார்க்கும்போதும் மனதை துளைத்துக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருவோம்..

சரத்குமார் தன் முதல் மனைவியை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்! என்றும், ஏற்கனவே, அவருக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு எப்போதோ, எதிலோ படித்த தகவல்.!

அவர்கள் இந்நேரம் எந்த நிலைமையில் உள்ளார்கள் என்னதான் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை என்றாலும் அதற்காக அந்த அப்பாவி பிள்ளைகள் பாதிக்கப்படுவது, ஏன்?

இது போன்ற பேட்டிகள் கட்டுரைகளை படிப்பதன் மூலம் அந்த பிள்ளைகளின் மனதில் உருவாகும் ஏக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துமல்லவா?

அப்படியில்லாவிட்டாலும் இதை காணும் அந்த பிள்ளைகளின் நண்பர்கள் அவர்களிடம் ஏதாவது கேட்டால்?

இப்படியாக பார்க்கையில் எதோ ஒரு வகையில் இது சரியா? அல்லது தவறா?

செங்கல்

தமிழகத்தைப் பொறுத்தவரை செங்கல் உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை இப்போதும் அமைப்புசாராதொழிலாகவே உள்ளது. இதனால் இதற்கான விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. செங்கல் உற்பத்தி சூளைகள் அனைத்தும் ஆற்றுப்படுகைகளிலேயே இருப்பதால் மழைக்காலங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அதனால் இதன் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் செங்கல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.

நன்றி தினமணி

செங்கல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் இந்நேரத்தில், என்னதான் கான்கீரிட் பிளாக்குகளின் வருகையிருந்த்தாலும் மக்கள் அதிகம் விரும்புவது செங்கல்லால் கட்டப்படுவதைத்தான்!

Photo Sharing and Video Hosting at Photobucket


செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் வளம் சில இடங்களில் மட்டுமே இருக்கும் அதன் மூலம் தயாரிக்கப்படும் செங்கல்லிலிருந்தே நமது கட்டிடத்திற்கு தேவையான பளு தாங்கும் தன்மை அல்லது உறுதிதன்மை பாதுகாப்பானதாக இருக்கும். அப்படியான மூலப்பொருளான மண் பெரும்பாலும், ஆற்றங்கரைகளிலோ, அல்லது வாய்க்கால் கரைகளிலோதான் களவாடப்படுகின்றன. பின்னர், அரசு செலவில் பொதுப்பணித்துறை மூலம் கரை பலப்படுத்தும் பணி நடைபெறுகிறது!

ஆற்று பாதுகாப்புக்கு அரசுப்பணியாளர்கள் இருந்தாலும் கூட அவர்கள் செயலற்றுத்தான் உள்ளார்கள். லோக்கல் பாலிடிக்ஸ் சமாளிக்கறதுங்கறது சும்மா லேசான விஷயம் இல்லை..!

இது போன்ற சூழ்நிலையில், மண் விற்பனையை அரசே ஏற்றுக்கொண்டு, நல்ல லாபத்துடன் (யாருக்குன்னு கேட்காதீங்க்??!!) செயல்பட்டு கொண்டிருக்கும்போது, இநத தொழிலையும் அரசு ஏற்று அல்லது அரசு மேற்பார்வையில், மாவட்டங்கள்தோறும் உள்ள சுய உதவிக்குழுக்களின் துணையோடு, இவ்விற்பனையை நடத்திட முன்வரலாம்! இதன் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வேலை கிடைக்கும்! எல்லோருக்கும்(!?) லாபம் கிடைக்கும்..! ஆற்றுக்கரைகள் காணாமல் போவதும் காப்பாற்றப்படும்!

வர்றாரு! வீரப்பன்.!

சந்தனமரம்ன்னு சொன்னா, வீரப்பன்னு இப்ப இருக்கும் சமுதாயமும் சரி, இனி வரும் சமுதாயமும், டக்குன்னு ஞாபகத்துக்கு கொண்டுவந்துடும்! ரசிகர்மன்றம் அமைக்காத குறையாத்தான் இருந்துச்சு அவரு புகழ்..!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஆனா இப்ப, நிலைமை வேற, ரொம்ப ஏழையான குடும்பத்தில பொறந்து சூழ்நிலைகேற்ப தன்னை மாற்றி,காட்டு ராஜாவா வாழ்ந்த வீரப்பனை பற்றி மிருகங்களே பயந்த மனிதன்,எல்லா மிருக பாஷையும் தெரியும்,நல்ல மனிதாபிமானி, தமிழ்ப்பற்று மிக்கவன் போன்ற பல செய்திகளில் புகழாரம் சூட்டப்பட்டு ஆர்கெட் கம்யூனிட்டியில உலாவிக்கிட்டிருக்காரு!

அவன் இருந்திருந்தா முல்லை பெரியாறு மேட்டரே கிளம்பியிருக்காது! அதுவுமில்லாம இப்ப அதிகமா நடக்குற சந்தன மர கடத்தலும் நடக்காம இருந்திருக்கும் போன்ற வசனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் இந்நிலையில், மக்கள் டிவியில் வீரப்பன் பற்றிய ஒரு தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்ப தயாராகிக்கொண்டிருக்கிறது, சுமார் 125 வாரங்களை கடக்க உள்ள இந்த தொடரில் வீரப்பனின் மறுபக்கம் தெளிவாக்கப்படக்கூடும் என்றும்,சிறப்பு அதிரடிப்படையின் மறுபக்கம் தெரிவிக்கப்படக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன! கடந்த மூன்று வருடங்களாக வீரப்பன் பற்றி சேகரித்த தகவல்களை கொண்டு இத்தொடர் தயாரிக்கப்பட்டிருக்கு,வர்ற அக்டோபர் 15 முதல் இது ஆரம்பமாகும் டைரக்டர் சொல்லியிருக்காரு!

ஆனா,வீரப்பன் மனைவியோ,டைரக்டர் எங்களை ஏமாத்தி, எங்களுக்கு தெரியாம நாங்க பேசுனத, டேப் பண்ணி அத இப்ப தொடர எடுத்து வெளியிடப்போறதா சொல்றாரு, ஆனா அந்த தொடர் வந்தா என் மகள்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுவிடுவார்கள், எனவே அதை தடுத்து நிறுத்த நான் கோர்ட்டுக்கு போகப்போறேன் சொல்ல, மேட்டர் இப்ப கொஞ்சம் விறுவிறுப்பாகியிருக்கு!

எப்படியிருந்தாலும் டிவி தொடர்கள் பைத்தியங்களுக்கு ஒரு சீரியல் ரெடியாயிடுச்சிங்கறது முக்கியமான மேட்டர்தானே..!

டிரைவிங் டெர்ரரிஸம் @ டெல்லி

எப்போதாவது, எதிர்பாராமல் நடக்கும் விஷயங்களை, நாம் விபத்து என்ற வார்த்தையில் வைத்து பேசமுடியும், ஆனால் தினசரி நடக்கும் விஷயங்களாகிவிட்ட, - கவனமற்ற, அதிவேகமான முறையில் வாகனத்தை நினைத்த இடத்திற்கு,நினைத்த மாதிரி - ஒட்டி செல்லுதல் ( கொல்லுதல்) எப்படி விபத்தாகமுடியும்? ஆனாலும், நடக்கிறது இந்த மாதிரியான விபத்துக்கள் நம் தலை நகர் டெல்லியில்!

Photo Sharing and Video Hosting at Photobucketநேற்று வரைக்கும் 96 பேர் பலியாகியுள்ளனர் இது போன்ற விபத்துக்களால்! டெய்லி பேப்பர்களில் தனி பக்கம் ஒதுக்கி இது போன்ற செய்திகள போடுற அளவுக்கு போயிடுச்சுன்னா பாருங்களேன்..!

போக்குவரத்து காவலர்களும், தங்களிடம்,கண்காணிக்கும் அளவு காவலர்கள் எண்ணிக்கையில்லைன்னு சொல்றாங்க..!

எல்லா கட்சி தலைகளும் இருக்கும் தலைநகரத்திலேயே இவ்ளோ பிரச்சனை!

அரசும் விபத்துக்களை தடுக்கும் பொருட்டு டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது சுமார் 8000க்கு ம் மேற்பட்ட டிரைவர்கள் இருந்தும் பங்கு கொண்டவர்கள் வெறும் 1500 பேர்தான்,சில பயிற்சி முகாம்களில் ஒருவருமே வரவில்லை!

Photo Sharing and Video Hosting at Photobucket


ஒரு கட்டத்தில் போக்குவரத்து துறை அலுவலர்கள் இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்களை பணியிலிருந்து விடுவித்து,பயிற்சி பெற்று பின்னர் பணி மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த அதற்கும் நோ ரெஸ்பான்ஸ்..!

கடுப்பாகிப்போன டெல்லி ஹைகோர்ட் உடனடியாக இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அவசரணை பிறப்பித்தது.

சரி இவ்ளோ விபத்துக்கள் நடக்க அங்க என்ன பிராப்ளம் யாராவது சூன்யம் வைச்சிட்டாங்களானா? (மர்ம மனிதன் சுத்தியல் கொலைக்காரன்னு ஏற்கனவே பீதியில இருக்குது டெல்லி!)

உண்மைதான்! மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள்தான் மக்களுக்கு சூன்யம் வைச்சது! பினாமிகள் பேருல பஸ்களை வாங்கி விட்டது மட்டுமல்ல, டெய்லி கலெக்ஷனுக்கும் ஒரு டார்கெட் வைக்க, ரூட் பிரச்சனையும் கிடையாது,வர்ற வருமானம் போகவேண்டிய இடத்துக்கெல்லாம் போய் சேர்ந்துடுது அப்புறம் யார் கேட்கப்போறான்னு? எவ்ளோ பேர வேணும்னாலும் ஏத்திக்கிட்டு போகலாம், எவ்ளோ தூரம் வேணுமுனாலும் போகலாம் அப்புறம் என்ன போட்டிதான் அதிகமாகியிருக்கு!

இப்ப போட்டி போட்டு,அப்பாவிகளோட உயிரை பறிச்சிக்கிட்டுருக்காங்க!

இன்றைய செய்தி!

இந்த பிரச்சனையிலும், பி.ஜே.பி பார்ட்டி எக்ஸ் மினிஸ்டரு விஜய் கோயல் நான் உண்மை நிலவரத்த முதல்வருக்கு நேரிலேயே காண்பிக்கிறேன்னு போயி, பஸ்ஸ ஒட்டி, இது மாதிரிதான் பயிற்சியே, இல்லாத ஆளுங்க சிட்டியில பஸ் ஒட்டிக்கிட்டு இருக்காங்கன்னு சொல்ல, பார்த்துக்கிட்டிருந்த போலீஸ் வாங்க, வந்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுங்கன்னு! அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டுப்போயிட்டாங்க...!

மதுரை – செம ஹாட்டு மச்சி..!

கேளுங்க..! கேளுங்க...! கேட்டுக்கிட்டே இருங்க! இது சும்ம செம ஹாட்டு மச்சிய்ய்ய்ய்ய்ய்..! என்ற ஆரவாரத்துடன் இனி வரும் வாரங்களில் மதுரைய்க்காரங்கள் தொலைப்போச ஆரம்பித்துவிடுவார்கள்!

எனக்கு பிடித்த பாடல்..!

எனக்கு பிடித்த் காதல்ன்னு..!?

போன்ல நல்ல பொழுதும் போகும்,டெலிபோன் பில்லும் கிழியப்போகுது!
மதுரைக்காரங்களுக்கு ஏற்கனவே ஏகப்பட்ட டைமிங் காமெடியான ஆளுங்க பாவம் ரேடியோ ஜாக்கிகள் என்ன பண்ண போறாங்களோ!?

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket


சூரியன் எப்.எம்மும்ம் ரேடியோ மிர்ச்சியும் மதுரையில் எப்.எம் ஸ்டேஷன் திறக்க பர்மிட் வாங்கிட்டாங்க! ,மேலும் சூரியன் எப்.எம் தூத்துகுடியிலும் ஒரு ஸ்டேஷனை திறக்க போறாங்க இது மட்டுமல்லாமல் ரேடியோ ஒன்னும் ஒரு எப்.எம் ஸ்டேஷனை மதுரையில் ஸ்டார் பண்ணப்போறாங்க!

ஆக மொத்ததில்,கலக்க போவது யாருன்னு,போட்டி போட்டு மதுரைக்காரங்கள கூல் ஆக்க போறாங்க!

ஆமாம்! ஏம்ப்பா ரேடியாக்காரங்களே ஏன் வட மாவட்டங்களில் இந்த மாதிரி ரேடியோ கேட்க ஆளுங்க கிடையாதுன்னு நினைச்சிட்டிங்களா?