இங்கீலிசு ஸ்கூலேய்!


கைகள் கைகளுக்குள் கைகள் வைச்ச கொலாஜ்;

குட்டீஸ்களின் போட்டோக்கள் அதை சுற்றிலும் அழகாய் கைவண்ணத்தில் பூக்கள்;

வித விதமான மேக்கப்களில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் டீச்சர்ஸ்;

மொத்தத்தில் ஸ்கூல், ஆபிஸ்ன்னு தொடங்கி எங்கெங்கு காணினும் கலர்களடா ரேஞ்சுலதான் பெயிண்டிங்க்ஸ் போட்டு சுவரை அலங்காரம் செஞ்சிருக்காங்க எல்லா பெயிண்டிங்க்ஸும் பசங்களோட டெரர் அட்டாக்தான்! - சரி அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க!

இன்னிக்குன்னு பார்த்து நான்-யூனிபார்ம் டேவாம் (அப்புடி டேவெல்லாம் கொண்டாடுறாங்க - ஹம்ம்ம்ம்) டீ சர்ட்டு முக்கால் டவுசரு/ஜீன்ஸ் பேண்ட் போட்ட வாத்தியாருங்க யூனிஃபார்மெல்லாம் இல்லாம குட்டீஸ் எல்லாம் வித விதமான டிரெஸ் போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாய் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கற அந்த இடத்துல நாங்க போன வேலையெல்லாம் மறந்துட்டு ன்னு வாய் பொளக்க பார்த்துக்கிட்டு இருந்தோம்ன்னு தான் சொல்லணும்!

எல்லா டீச்சர்ஸும் ஒரு ரேஞ்சுக்கு ஓடிக்கிட்டும் வெளையாடிக்கிட்டும் பாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க! இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வாத்தியாரு!(ஹம்ம்ம்)

சயின்ஸ் லேப்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு ஒரு செவப்பு அம்மிணி உக்காந்திருந்தாங்க கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் 7வது பசங்களாம் ஹாய் டீச்சர்ன்னு எண்ட்ரீ கொடுத்துக்கிட்டே வந்து என்னமோ ப்ரெண்ட்கிட்ட கிண்டல் அடிக்கிற மாதிரி அம்மிணி ஏன் சோகமா இருக்கீங்க ரேஞ்சுக்கு கொஸ்டீனு போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் பெற ஒரே கலகல சத்தம்தான்! (ஹம்ம்ம்ம்)

ஒருவழியா வந்த வேலைகள் முடிஞ்சு வெளியில வந்து நின்னா, ஒரு டீச்சரு கழுத்தில நிறைய வளையத்தை மாட்டிக்கிட்டு ஒடிவராரு பின்னாடி பார்த்தா லைன் கட்டி குட்டீஸ்ங்க ஒடியாறாங்க! எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம்! (ஹம்ம்ம்ம்) - அதுல ரெண்டு மூணு குட்டீஸ்ங்க நம்ம புதிய வானம் எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல தாவி தாவி போனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு!

இப்படியே நிறையா ஹம்ம்மிக்கிட்டே ஒரு 4 மணி நேரம் சுத்தி சுத்தி வந்ததுல ஒரு விசயம் மட்டும் - மனசுல நிறைஞ்சிருந்தது -குட்டீஸ்ங்க முகத்துல எந்தவிதமான டல் மூட் அல்லது அழுகையோ இல்லை என்பதுதான்! எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்!

படிக்கிற காலத்துல டெய்லி எந்திரிச்சு முதல் நாள் செய்யாம விட்ட ஹோம் ஒர்க் செஞ்சுப்புட்டு ரொம்ப கடுப்போட ஸ்கூலுக்கு போகும்போது போற வழியில பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கையில பேக் எடுத்துக்கிட்டு ஆபிஸ் போற ஆபிசர் அண்ணன்களை பார்த்து நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு ஃபீலிங்க் வுட்ட கால நினைவுகளெல்லாம் மறந்து போய் மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு!

பிராக்கெட் குறிப்பு - படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே!

பரீட்சை பேப்பரேய்ய்!

வாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா! பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு! எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும்டோய்ய்ய்ய்!

அலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்கு போயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும்! ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு! அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது!



சரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர் கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாக அமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம் ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு! வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூட ஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னா அடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னாக்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும்! [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா? இல்ல எல்லாருக்குமேவா!?]

சரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்து குந்தும் பாருங்க! அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமா நாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்க கிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு!

பலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுல டிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்க வீணாக்குவேன்!?)

சயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்!

குட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்த அந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் ! :)


டிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே!

ஹாலிவுட் அழைக்கிறது!

சிறு முயற்சி !



சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.

வானவில் வண்ணங்களால் படி கட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

- முத்துலெட்சுமி


சிறு முயற்சி தான் முயன்று பாருங்களேன்!


இன்று இனிய பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ரொம்பவும் பு(ப)டிச்ச இன்னுமொரு கவிதையின் வரிகளிலிருந்து...

மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.


- முத்துலெட்சுமி



ஜி ஃபார் GIS


காலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா <போ>கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் !

லைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும்! அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்!

அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!

அப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு! அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது! பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!

அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு! ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்! அது மாதிரிதான் ஜிஸ்!ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் !

இன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு!

GIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

GIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும்! புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு! புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.

GIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...!


GIS விக்கிபீடியா -
Guide to GIS

துறவு!

வார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்து போய்விட்டது! - களையிழந்தும்கூட போய்விட்டது!

இப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதால்!

ஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும்! காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவே முடிவடையக்கூடும்!

உலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சரியான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்!

சாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்
கூட...!

கொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்


ஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்!
நிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில
எழுந்து நிக்க வேண்டிய நேரத்தில
விழுந்துடுவ என்று நான் போட்ட மொக்கையை நம்பி
நீ
காலேஜ்லேயே விட்டு வந்த
நம்ம தெரு ஃபிகருடனான காதல்
என் நினைவில்
உறுத்திக்கொண்டிருக்கிறது
இன்னமும்...!

[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]

டிஸ்கி:- இங்கு படிச்சதால் கிடைச்சது

நான் ஆதவன்!

சூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை! அதை கேட்டு வாங்கினது நானேதான்! நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்!

பயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....!

அந்த நாள்.....

காட்சி ஒண்ணு:-



நான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க

டேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....!

நான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது?

டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....


காட்சி நெண்டு:-


நான் ஆதவன்:- ஹலோஓ?

டேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா?

நான் ஆதவன்:- முடியாது! பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க?

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...!

நான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு! நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்!

டேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா? நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...?

நான் ஆதவன்:- அவ்வ்வவ்வ்வ்வ்வ்!


காட்சி மூணு:-




நான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்!

டேமேஜர்:- டேய்...! நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல..? சரி இரு நான் மேலே ஏறி வரேன்..!

நான் ஆதவன்:- நோ! நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர்! அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்!

டேமேஜர்:- டேய்...! எனக்கு இப்ப கொலைவெறி வருது! இப்போ உனக்கு என்ன மேன் வேணும்?

நான் ஆதவன்:- குட்! குட்! இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்!

டேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்?

நான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்!

[பேக்கிரவுண்ட்ல மியூஜிக் ஸ்டார்ட்டு]

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
டிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ?
பவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ?
ஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்?
ஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்?


ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா


டிஸ்கி:-
இனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...!

ஓரங்க நாடகம்/ஸ்டேஜ் ஷோ

பள்ளிக்கூட ஆண்டுவிழாக்கள் கல்லூரி வருட இறுதி கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் செலுத்தும் மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே மிக அரிதாக இந்த ஓரங்க நாடகம் கான்செப்ட் எடுத்துக்கொண்டு கலக்குறத்துக்கு முயற்சி செய்வாங்க! பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி ..சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு! ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை! (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்!)

சரி அந்த விசயமெல்லாம் வேண்டாம் நாடகம் பத்தி பேசுவோம் நானெல்லாம் ஸ்கூல்ல படிச்ச காலத்துல ஆண்டுவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே அருமையான சப்ஜெக்ட் எடுத்து வைச்சு யார் யாரு என்ன என்ன கேரக்டருன்னெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு முடிஞ்சா ரிகர்சல் பாக்கலாம்ன்னு முடிவு பண்ணினதோட சரி ரொம்ப சீக்கிரத்துலயே செலக்ஷன் கமிட்டிகூடி நீங்க என்னா செய்யப்போறீங்கன்னு கேக்கப்போற நாளும் வந்து அன்னிக்குன்னு பார்த்து டைரக்டரா இருக்கறேன்னு சொன்ன பய வராததால என்/எங்களோட ஓரங்க நாடக கனவு கம்பெனி இழுத்து மூடப்பட்டது! ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு! - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ! நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான்!)

பிறகு பாலிடெக்னிக்ல சுத்திக்கிட்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஆசை வந்துச்சு ஆனா செலக்ஷன் பண்ணப்போற வாத்தி எங்க குரூப்பு மேல செம கடுப்புல இருந்ததால நாங்களே வேண்டாம் பொழச்சுப்போங்கன்னு விட்டுட்டோம். ஆனா அந்த டைம்ல எங்க ப்ரெண்ட்ஸ் குரூப்பு செஞ்ச நாடகம் செம க்ளாப்ஸ் வாங்கினுச்சு! - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்ஷன்! ஸ்டூடன்ஸ் லெக்சரர் பிரின்ஸ்பால் இப்படி எல்லாருக்கும் அடக்க முடியாத சிரிப்பு நடிச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அவுனுங்க ஃபிகருங்ககிட்டேர்ந்துல்லாம் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன்!!

ஓரங்க நாடகங்கள் இப்போதைய காலகட்டத்தில் ரொம்ப குறைஞ்சுடுச்சுன்னு பொதுவாக பார்க்கும்போதே தெரியுது. துணுக்கு தோரணங்களாக வர்ணிக்கப்பட்ட நகைச்சுவை நாடக அரங்கேற்றங்கள் ஆடியோ கேசட் ரீலிசுகள் சுத்தமா நின்னுப்போச்சு அல்லது அது பற்றிய செய்திகள் காணக்கிடைப்பதில்லை! இதெல்லாம் விரும்பாத அளவுக்கு மக்கள் சந்தோஷமாக இருக்காங்களோன்னு நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு!

டிவிக்களில்
முழு நேரமும் தொடர்களும்,திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் ஒரே நகைச்சுவை காட்சிகளும் மக்களை கட்டிப்போட்டுவைத்திருக்கிற உண்மையினை நாடகம் நடத்துறவங்க நல்லா புரிஞ்சுக்கிட்டு கம்முன்னு இருக்காங்க போல...!

பதிவுலகத்தில கூட அவ்வப்போது நாடக டைப்புல பதிவுகள் வந்துக்கிட்டிருக்கும் இப்பவெல்லாம் சுத்தமா நின்னுப்போச்சு! டெரர் காமிக்கிற பதிவுகள் தான் எழுதறவங்களும் படிக்கறவங்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க போல..!

தேவைப்படும் போது தேவைப்படற விசயம் கிடைக்காம போச்சுன்னா அக்கம்பக்கத்துலேர்ந்து வாங்கிகிடலாமாம் - காபி தூள் சக்கரைக்கு பக்கத்து வூட்டுல போய் கடன் கேட்டு வாங்கியாச்சும் ஃபில்டர் காபி குடிக்கிற மாதிரி - இப்ப ஸ்டேஜ் ஷோவுக்கு சாம்பிள் எதாச்சும் காமிக்கலாம்னு தேடி அலைஞ்சா ஒண்ணுமே சரியா சிக்கல சரின்னு எண்ட தேசம் பக்கம் போயி புடிச்சுட்டு வந்துட்டேன்!

பைஜு {Byju} காமெடி - பயபுள்ள டாப் லெவல்ல இருக்கிற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம் தண்ணிப்போட்ட மாதிரி நடிக்கிறதுல கில்லாடியாம்! அதுமாதிரியான கேரக்டர்தான் நல்லா பேரு வாங்கி கொடுத்து இப்ப உலகம் பூரா சுத்தி சுத்தி ஷோ போட்டுக்கிட்டிருக்காராமாம்!