சாட்டிலைட் இமேஜ்களில் செத்துக்கொண்டிருக்கும் மக்களினை பார்த்துக்கொண்டிருக்கும் உலக நாடுகள் சபை
எந்த நோக்கத்தினை எதிர்பார்த்து காத்திருக்கிறதோ....??
ஒட்டுமொத்தமாய் அழிந்து போகட்டும் ஒரு இனம் என்ற ஆர்வத்தினூடாகவா....!
கிட்டதட்ட இரு மாதங்களுக்கு முந்தைய நிலைமையில் இப்படி என்றால் இப்பொழுது அதிவேகத்துடன் தன் வெறித்தனத்தினை காட்டிவரும் அரசின் செயல்பாடுகளில் என்ன நிகழ்ந்திருக்கும் என்பது வெளி உலகுக்கு தெரியகூடாத வகையினில் பத்திரிக்கையாளர்களினை தடுத்துவரும் நிலையில் இப்படியான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளி வர ஆரம்பித்திருக்கிறது.
சாட்டிலைட் இமேஜ்கள் பெறப்பட்ட தளம் - இங்கே
IDP - இடுங்கி கிடக்கும் எம் தமிழினம் :(
# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க
அய்யா பெரியவரே.....!
பொறுத்து
பொறுத்து
பொறுமையே
பொறுமையிழந்திருக்கும் நேரமாகிவிட்டது இன்று..!
இனியும் பொறுமை காத்தல் என்பது பிணங்களை பார்த்தல் என்பதில் மட்டுமே முடியக்கூடும்!
மத்திய அரசிடம் வைத்த் கோரிக்கைகள் யாவும் வீணாகிப்போனது இன்னும் புரிபடவில்லையா...?
இல்லை இதற்கு மேலும் எதோ ஒன்று தமிழினத்தை காப்பாற்றும் என்ற இறை நம்பிக்கை முடிவில் இருக்கிறீர்களா...?
வீழும் ஈழ தமிழ் மக்களின், கல்லறைகளில், தமிழன் உதவி செய்யாததால் வீழ்ந்தவர்கள் இவர்கள் என்ற குறிப்புக்கள் எழுத்துகளாய் அல்ல எண்ணங்களாய் நிறைந்திருக்கும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்!
# ஆயில்யன் 17 பேர் கமெண்டிட்டாங்க
தமிழ்ச்செல்வன்!
புன்னகை இழந்த ஈழமக்களின் வாழ்வில் ஒளியேற்றம் கிடைக்கும் என்று நம்பிய சமாதான பேச்சுவார்த்தைகளின்போது புன்னகையோடு வலம் வந்துக்கொண்டிருந்த சகோதரனை இழப்போம்! என்று எவருமே நினைத்திருக்காத தருணத்தில் எதிரிகளின் வஞ்சகத்தால் ஈழ மக்களின் புன்னகை நெஞ்சம் கருகி இன்றோடு ஒராண்டு!
முகத்தில் புன்னகை எப்போதும்;
முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;
போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;
ஈழத்தின் நிம்மதிக்கு நியாயம் தேடி!
ஆண்டனை இழந்த போது, அதிர்ச்சியில் நின்றவர்களுக்கு!
ஆச்சர்யம் கொடுத்தவர்! சர்வதேச அரசியலில் ஆண்டனின் வாரிசாய்!
இரையானார் கொடிய மிருக(குண)ங்களின் நடவடிக்கைக்கு
விதையானார்..!
தன் விருட்சங்(க)கிளை விட்டு...!
# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க
கலக்கிய கலைஞர்!
தமிழகத்தில் இன்று செவ்வாய்கிழமை,பிற்பகலில் நடைப்பெற்று முடிந்த ஈழத்தமிழர் பிரச்சனையில், இந்தியாவின் தலையீட்டு முயற்சிகளினை முடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகத்தின் நடவடிக்கைகள் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது!
இரு வார கால கெடு கொடுத்து தமிழ் பகுதிகளில் நடைப்பெற்றுவரும் சண்டைகளினை நிறுத்த இந்தியா தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு,
கொஞ்சமும் செவி சாய்க்காமல் தம் உதவிகளை மத்திய அரசு தொடருமெனில் தமிழக எம்.பிக்கள் தங்களின் பதவிகளினை ராஜினாமா செய்வார்கள் என்ற அதிரடி முடிவும் எடுக்கப்பட்டுள்ளது!
(எனக்கு தெரிந்து எந்த எம்.பிக்களும் அத்தனை சீக்கிரத்தில் தம் பதவிகளினை விட்டுக்கொடுத்து வந்ததாக ஞாபகமில்லை - காவிரி பிரச்சனையில் வாழப்பாடி ராமமூர்த்தியின் எம்.பி ராஜினாமா தவிர்த்து!)
மதிமுக அதிமுக தேமுதிக கட்சிகள் புறக்கணித்தது குறித்த நிருபரின் கேள்விக்கு கலைஞர் அளித்த பதிலாக “எதிர்கட்சிகளுக்கு எவர்மீதும் கோபம் இல்லை வெறுப்பு இல்லை என் மீதான கோபத்தின் காரணமாகவே புறக்கணித்திருக்கிறார்கள் என்றார்.!
சில எதிர்கட்சிகள் இக்கூட்டத்தினை புறக்கணித்தது குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் பேசினர் டி.ஆரும் கூட பேசினார்! - இது கலைஞர் ஸ்டைல் :-)
(ஆமாம் எங்க ஊருக்காரரூ என்ன கட்சியெல்லாம் ஆரம்பிச்சிடாரா? - இத்தினி நாளா எனக்கு இது கூட தெரியலயே?)
பிபிசி தமிழோசை!
# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க
ஈழ மக்கள் தமிழ்நாட்டில்...?
சொந்த நாட்டில் ஏற்படும் போரினாலும், பிரச்னைகளாலும் மற்றொரு நாட்டுக்கு இடம்பெயரும் அகதிகள், இடம்பெயர்ந்த நாட்டிலும் அடைக்கலம் கிடைக்காவிட்டால், அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி தான்!
அப்படியொரு நிலைதான் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் உறவையும், உறைவிடத்தையும் விட்டுவிட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு அரசின் அதீத கட்டுப்பாட்டால் வாழ்க்கையே நரகமாக மாறியுள்ளது
இலங்கையில் 1983-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின் விளைவாக, இலங்கை தமிழர்கள் புலம்பெயரத் தொடங்கினர். மூன்றில் ஒருபங்கு தமிழர்கள், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு வந்தனர் அவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்த இலங்கைத் தமிழர்களைத் தங்க வைக்க தமிழகத்தில் 117 முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்களில் தற்போது ஒரு லட்சம் பேர் உள்ளனர்.
சொந்த நாட்டில் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் வந்த அகதிகளுக்கு, இங்கும் எந்த வாழ்க்கை உத்தரவாதமும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது!
தங்களது இனம், மொழி, கலாசாரம் என பல ஒற்றுமைகளுடன் இருக்கும் தமிழகத்தை நம்பி வந்த இலங்கை மக்களுக்கு பெரும்பாலான இடங்களில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது
உயர் கல்வி படிக்க 2000-ம் வரை தமிழகத்தில் அகதிகளுக்கு மேல் ஒதுக்கீடு 5 சதம் இருந்தது. ஆனால், நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் விளைவாக, அந்த ஒதுக்கீடு பறிபோனது. கல்வி மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலுமே இந்தியாவில் உள்ள பிறநாட்டு அகதிகளைவிட, இலங்கை அகதிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளதாகவே காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களும் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறை, முகாம்கள் மீதான கட்டுப்பாட்டையும், கண்காணிப்பையும் தேவைக்கு அதிகமாகவே அதிகப்படுத்தியுள்ளது. இதனால், அகதிகள் ஓரிடத்தில் நிலையாக வேலை செய்து, அன்றாட வாழ்க் கையை கழிக்கவே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
அதீத கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக அகதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் ஆவண நகல்களை வழங்க வேண்டும்; வேலை செய்யும் இடத்தின் முகவரியை தெரிவிக்க வேண்டும்; செல்போன் கண்காணிப்பு, வெளியூர் வேலைக்குச் செல்லக் கூடாது என பல கட்டுப்பாடுகளை காவல்துறையினர் இலங்கை அகதிகள் மீது திணித்துள்ளனர்.
இலங்கையில் அந்த நாட்டு ராணுவம் செய்த வேலையை, இந்தியாவில் காவல் துறையினர் செய்கின்றனர். சோதனைகள் குறையவும் இல்லை, மாறவும் இல்லை. ஆள்களும், இடமும்தான் மாறி இருக்கிறது.
இலங்கை அகதிகள் காவல் துறையினரால் மிகவும் கண்காணிப்படுவதால், அவர்களுக்கு வேலை வழங்க தொழில் நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. மேலும் சில நிறுவனங்கள் வெளிப்படையாகவே இலங்கை அகதிகளுக்கு வேலை கொடுப்பது இல்லை என அறிவிக்கின்றன.இந்தியாவில் குடியேறி உள்ளதுபோல கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு அகதியாகச் சென்ற இலங்கை மக்களுக்கு, இவ்வளவு விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை
மேலும், இங்குள்ள அகதிகளைவிட, அங்குள்ள அகதிகள் பொருளாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் நன்றாகவே உள்ளனர். மேலும், அங்கு அவர்களுக்கு சமுதா யத்தில் அந்தஸ்தும் கொடுக்கப்படுகிறது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக போட்டிபோட்டு குரல் கொடுக்கும் தமிழக அரசியல்வாதிகள், உள்ளூரிலேயே அடிப்படைத் தேவைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, அடைக்கலம் தேடி வந்த இடத்தில் அடைக்கலம் கிடைக்காமல் வதைக்கப்படும் இலங்கைத் தமிழர்களுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்பதே மக்களின் கேள்வி.
நன்றி - தினமணி
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாளில்..!
ஈழத்தமிழர்களது சோகங்களின் குரலாக
உலக நாடுகளின் செவிகளுக்கு செல்ல,
ஈழத்தமிழர்களது வலி நிறைந்த துயரங்களை
உலக நாடுகளின் விழிகளுக்கு தெரிவித்த,
போர்களம் செல்லவில்லையென்றாலும்,
போர் அற்ற ஒரு புதிய பரிணாமத்தில்,
ஈழ விடுதலைக்கான முயற்சிகளை,
மேற்கோண்ட தேசத்தின் குரல்!
ஈழத்தின் மீது தான் கொண்ட நினைவுகள்,
நிஜமாக்கும் நாள் வரும் வரை காத்திருக்கும்
இவர் ஆன்மா அமைதியாய்....!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஈழம்
விதையாகிய விருட்சம் - இறுதி அஞ்சலி
முழக்கமும் தமிழில்தான் எப்போதும் ;
போர் வீரனாய் இருந்தவர், பார்தோறும் சென்றார்;
தன் விருட்சங்(க)கிளை விட்டு...!
# ஆயில்யன் 0 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஈழம், நிகழ்வுகள்
துக்கத்தில் பங்கேற்கிறேன்...!
சுப.தமிழ்செல்வன் மறைவில்,
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: ஆயில்யன், ஈழம், என் உள்ளத்தில்