சுற்றுகிற உலகத்திலே, சுற்றுகிற மனிதர்களே...!

ஹைய்யா இது கார்த்திகை மாசமான்னு குஷியோட ஆரம்பிக்கிற மாசம்தாங்க ஆனா பாருங்க கார்திகை 20 தேதிக்கு மேலதான் ரொம்ப பரபரப்பா இருக்கும்!

சீக்கிரம் முடிக்கணுமே..!

சீக்கிரம் முடிக்கணுமே,

பயங்கர டென்ஷனா இருக்கும்! நாம இப்படி டென்ஷன்ல இருக்கறத பார்த்துட்டே நிறையபேரு ரொம்ப கிண்டலா என்னடா இப்பத்தான் ஆரம்பிக்கிறீயா? எப்ப முடிக்கறது அதுக்குள்ள தை மாசம் வந்துரும்டான்னு, ஆனா அதப்பத்தியெல்லாம் நாம கவலைப்படறது கிடையாது அவங்களுக்கு தெரியாதுல்ல நம்ம டைமிங்கே வேறன்னு ..! (காலையில 4.00 மணிக்கு எந்திரிச்சு குளிச்சு முடிச்ச கையோட மயூரா 2 ஸ்ட்ராங்க் பில்டர் காபி ஒண்ண உள்ள வுட்டுக்கிட்டு 5 மணிக்கு ஆரம்பிச்சா 7.30 க்குள்ள 25 சுத்து வந்துடலாம்!)

என்னாடா இந்த இழு இழுத்துட்டு வரானேன்னு பாக்குறீங்களா?
எல்லாம் சுத்தல் மேட்டர்தாங்க!

வருஷா வருசம் கார்திகை மாசம் வந்தா போதும் எங்க ஊருல இருக்கற கோவில்கள் ரொம்ப பிசியாகிடும் (எங்க ஊருன்னு இல்ல பல ஊர்களிலும் இதான் கதை) ஊர்ல உள்ள அம்புட்டு 6லிருந்து 60 வரையானவர்கள் கோவில் பிரகாரம் சுற்ற ஆரம்பித்துவிடுவார்கள்!

சும்மா சாதாரணமா சுத்தறது இல்லைங்க, கார்த்திகை மாசத்து டார்கெட் 1008 அவ்ளோதான்!ஆனா ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு மாதிரியான ரவுண்ட்ஸ் பிக்ஸ் பண்ணியிருப்பாங்க நம்ம மக்கள்ஸ்

பெரிய கோவில்லுன்னு எடுத்துக்கிட்டா அபயாம்பிகை சன்னதியை 1008 தடவை சுத்திவரணும்,கோவிலையே 108 முறை சுத்திவரணும்ன்னு, இதெல்லாம் சீக்கிரமாவே முடிச்ச பி.டி.உஷாக்கள் சுவாமி சன்னதியையும் 108 சுத்திக்கிட்டு இருப்பாங்க! (பெரிய கோவில்தான் பெரிய விஷயம் பெரிய பிரகாரம் நிறைய டைம் எடுக்கும்!)

வள்ளலார் கோவில் சொல்ற வேதபுரீஸ்வரர் கோவில் அம்பாள் சன்னதியை தினமும் 108 சுத்து சுத்தணும்! (இது சின்ன பிரகாரம்தான் இதுல சுத்தறவங்க மற்ற கோவில்களிலும் கமிட் ஆகியிருப்பாங்க!)

மற்றபடி அய்யாரப்பர் கோவில் & புனுகீஸ்வரர் கோவில்களிலும் இந்த சுற்றல்கள் உண்டு ஆனா அந்தளவுக்கு கூட்டம் இருக்குமான்னு தெரிய்லை! (இந்த ஏரியாக்கள் நம்ம கண்ட்ரோல்ல வராதுங்க..!)

ஆனா எனக்கு தெரிஞ்சு இங்க சுத்துனாவங்க எல்லாம் நல்ல வேலை கிடைச்சு, நல்ல வாழ்க்கை கிடைச்சு நல்லாத்தான் இருக்குறாங்க! அதுக்கு நிறைய பேர உதாரணமா சொல்லலாம் !
(நாங்கூடத்தான் உதாரணம்!)

எங்க ஊர்லேர்ந்து போயி முன்னணி சாப்ட்வேர் கம்பெனிகள் பணிபுரியும் அத்தனை பெண்களும் பெரும்பாலன் ஆண்களும் கண்டிப்பாக சுத்தியிருப்பார்கள்! (நாங்க எவ்ளோ பேர பாத்துருக்கோம் கோவில்ல!)

இந்த வாரத்தோட முடியுதுங்க கார்த்திகை பிரகார சுற்று விஷயங்கள்!

இப்போதைக்கு எங்க ஊரு கோவில்களுக்கு போனீங்கன்னா கோவில் சுவத்துல ஒரே நம்பர்களா இருக்கும் (இதை மட்டும் மாத்த முடியலப்பா!)

அதெல்லாம் இந்த கார்த்திகை மாசத்து கைங்கரியங்கள்தான் :-)

2 பேர் கமெண்டிட்டாங்க:

said...

உங்க ஊரு ஆளுங்க எல்லாம் நல்லா தான் சுத்துரிங்க...;)

said...

புதுசா இருக்கே.. எங்க ஊருல எல்லாம் ஆடி மாதத்தில தான் கோவில் சுற்றுவாங்க ..