உதயமாகும்...!

இயற்கையினை ரசித்தபடியே இயல்பான வாழ்க்கையினை வாழ்வதற்கு கண்டிப்பாக சுதந்திரமான மனநிலையோ அல்லது தற்காலிகமானதொரு தோற்றம் கொண்ட சுதந்திரத்தினையோ ஏற்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகிறது.விடுமுறை பொழுதுகள் முன்பெல்லாம், வெளிப்புறங்களுக்கு சென்று சுற்றி களைத்து வந்த காலமெல்லாம் போய், தற்போது உடை களையாமல் உறக்கம் கொள்ளும் பொழுதுகளாகியேவிட்டன !

அஸ்தமித்தலில் இருக்கும் அழகினை விட, ஆரம்பித்தலில் இருக்கும் அழகினை ரசிப்பதே அனைவருக்குமான ஆவலாக/ஆசையாக இருக்ககூடும் !மிக விருப்பமாய்,உள்ளம் மகிழும் உணர்வோடு விவரிக்ககூடிய விசயங்கள் அதிகாலை சூரிய உதயத்தில்...

மெல்ல எட்டிப்பார்க்கும் அந்த அதிகாலை சூரியன் கண்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் கீழிருந்து மேல் நோக்கிபறக்க எத்தனிக்கும் அந்த காட்சி - வாழ்த்து அட்டைகளில் வர்ணங்களின் வசத்தில் அடைப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் - உயிர்ப்புடன் காண முடியும்

எதிர்பார்ப்பில்லாத வாழ்க்கை வாழவேண்டும் என்பதை கண்டிப்பாய் உணர்த்தும் பழமொழிகளோ ஞானிகளின் பொன்மொழிகளோ படித்து படித்து அலுத்துப்போன தருணங்கள் நம்மால் இயலாது என்று முடிவு கண்ட தருணங்கள் ஞாபகத்துக்கு வருகிறது! எந்த எதிர்பார்ப்பினை தேடி, சூரியன் மென் தாக்குதல் தொடுக்கும் செங்கதிர்களினூடாக பறந்துகொண்டிருக்கின்றன அந்த பறவைகள்!?

ஒ.கே

டிஸ்கி:- இல்லை என்பதே காரணமானது எல்லாவற்றிற்கும்.....கே என்றால் விட்டு விடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: .கே.

இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடுக்காமலே கூட இருக்கலாம்; பிரச்சினை அதுவல்ல. .கே என்பதுதான் பிரச்சினை.

நீங்கள் கடந்த காலத்தில் எனக்குச் செய்த நன்மைகளுக்கு மிக்க நன்றி. இனி செய்யப் போகிறவற்றுக்கும் நன்றி. ஆனால் உங்களுக்கு என் பதில்.கேதான். நீங்கள் எனக்கு நிறைய நன்மைகள் செய்தவராக இருப்பின் உங்களுக்கு ஒரு பதில்: என்னடா இவன் நன்றி கெட்டவனாக இருக்கிறானே என்று நினைப்பதற்கு முன் நீங்கள் எனக்கு எத்தனை தீமைகள் செய்திருக்கிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். நினைவில் எதுவும் அகப்படவில்லை என்றால் என்னிடம் கேளுங்கள்.

உலகில் யாரும் யாருக்கும் பெரிதாக நன்மைகள் அதிகம் செய்துவிட முடியாது. அதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இவன் ஒரு தடவை .கே என்று சொல்லிவிட்டதால் இவன் நண்பன் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். .கே என்று சொல்லுமுன்பே நான் உங்களுக்கு நண்பன் தான்.

யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார், நான் யார் என்று. நம்மைப் போல் இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் உலகம் தாங்குமா? மூன்றாவது உலக நாடுகள் இது வரை பட்டது போதாதா? நம்மால் வேறு இன்னும் படவேண்டுமா? உங்களோடு என்னைப் பார்த்தால் எனக்கு அசிங்கம். என்னோடு உங்களைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கம்.

.கே என்று சொல்வதால் நான் உங்களை விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. மனதிற்குள் சபித்துக்கொண்டு போவதை விட .கே என்று சொல்வதையே நீங்கள் விரும்புவீர்கள், குடி போதையிலாவது. குடித்திருக்கும்போது நீங்கள் எல்லாரும் மனிதருள் மாணிக்கங்கள் என்று எனக்குத் தெரியும். .கே. நான் அது வரை போவதில்லை. என் எல்லை எனக்குத் தெரியும். பேலன்ஸ் தவறி உத்தமன் ஆகிவிடும் ரகம் நான்.

உங்கள் தேவையைத் தற்காலிகமாக மறந்துவிட்டு .கே என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தேவை உங்களுக்குத்தானே தவிர எனக்கல்ல என்பதையும் உங்கள் பிரச்னைகள் என்னைத் துளி கூட பாதிப்பதில்லை என்பதையும் தயவுசெய்து மறக்காதீர்கள். .கே என்ற வார்த்தை ஆமாம் என்பதை விடத் தெளிவானது. ஆமாம் என்பதற்கு சமயத்தி .கே என்றும் அர்த்தமாகும்.

நான் என்ன சொன்னேன்? ‘.கேஎன்றுதானே சொன்னேன்? .கே என்று சொன்னால் புரிந்துகொள்ள மண்டையில் மசாலா இல்லாதவர்கள் கேட்கவே தகுதி இல்லாதவர்கள். அவர்களுக்கு .கே என்ற பதிலே அதிகம். அவர்களிடம் .கே என்று சொல்லிக்கொண்டிருப்பதற்கு பதிலாக ஒரு அரூப ஓவியத்தை வரைந்து காட்டலாம். அதற்குசுயத்தின் எச்சங்கள்என்பது போன்றொரு தலைப்பு வைக்கலாம். கேட்டவர்கள் மனம் நிறைந்து போகட்டும்.

ப்ளீஸ்! நானும் உங்களைப் போன்று டீசன்ட்டானவன்தான். நானும்தான் கோல்ட்ஃப்ளேக் கிங்ஸ் பிடிக்கிறேன். நானும்தான் உங்களைப் போலலாஜிக் இடிக்கிறதுஎன்பதற்கு பதில்தர்க்க இடிபாடுகளிடையே சிக்கியுள்ளதுஎன்று சொல்ல விரும்புகிறேன். நானும் கஷ்டப்பட்டும் முன்னுக்கு வர முடியாதவன்தான். ஆனால் இதே போலொரு சூழ்நிலையில் நீங்கள் என்னிடம்.கேஎன்று சொன்னால் புரிந்துகொள்வேன். என்னவோ நீங்கள்தான் என்னிடம் கையேந்தி நிற்பது போல் நடந்துகொள்ள மாட்டேன்.

கடைசியாக ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது முதலில் நான் உங்களுக்கு சொன்னதுதான்: .கே. நான் சொல்வது புரிகிறதா? புரியவில்லை என்றால் அது என் பிரச்னை .கே. .கே என்று நிறைய தடவை சொல்லிவிட்டேன். ஒரு விஷயத்தைப் பல தடவை சொன்னால் புரிந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். புரிந்துகொள்ள மிக எளிமையான ஒரு விஷயத்தைப் பல முறை சொன்னால் இன்னும் தெளிவாகவெல்லாம் புரிந்துவிடாது என்பதும் எனக்குத் தெரியும். தெளிவுக்கும் வரம்புகள் உண்டு. நான் திரும்பத் திரும்ப சொல்லக் காரணம், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல் உங்களுக்கு ஒரு சொல் போதவில்லை அதனால்தான் இவ்வளவும்.

வீட்டில் எல்லோரையும் விசாரித்ததாக சொல்லுங்கள். நீங்கள் நான் பார்த்துப் பல வருடங்களான நண்பராக இருந்து உங்கள் குடும்பத்தினரில் யாராவது நடுவில் இறந்துவிட்டிருந்தால் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நான் வந்திருப்பேனே! நண்பர்கள் எதற்கு இருக்கிறார்கள், சொல்லுங்கள். இடையில் யாருக்காவது திருமணம் ஆகிவிட்டதா? என் வாழ்த்துக்கள். அதே நாளில் என் நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம், அதனால்தான் வர முடியவில்லை.

பார்த்தீர்களா, என்னைத் தவிர உங்களுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள்! அவர்களைக் கேட்காமல் என்னிடம் மட்டும் கேட்பது ஏன்? என்பால் உள்ள அன்பினாலா? என்பால் உள்ள அன்பைக் காட்ட உங்களுக்கு இதுதானா சமயம்? அதான் .கேன்னு சொல்லிட்டேனே

நன்றி - ரைட்டர் பேயோன்

வாழ்த்துக்கள் கானா பிரபா!
நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

முதியோர் வதம்!

தினமணி கருத்துக்களத்தில் வெளிவந்த முதியோர்வதம் கட்டுரையிலிருந்து சில வரிகள்...

இசைபட வாழ்ந்த நாட்களை அசைபோட்டபடி கால வெள்ளத்தில் துடுப்பில்லாத ஓடமாகப் பயணிக்கிறது முதுமை வாழ்க்கை.
முதியவர்களின் கம்பீரம் காக்கும் சுய உழைப்பு சில்லறை வியாபாரங்களும் கால வெள்ளத்தில் கரைந்துபோயின. ரயில் பயணங்கள் சில பரிதாபங்களையும் பரிகாசங்களையும் படம் பிடித்துக் காட்டும். உரிமம் பெறாமல் வேர்க்கடலை, சுண்டல், கொய்யாப்பழம், டீ, காபி, பானங்கள் விற்கும் சில்லறை வியாபாரிகள் இரயில் பெட்டிகளில் தென்படுவது பயணிகளுக்கு ஒரு சாதாரண காட்சி. வெளியில் தெரியாத வேதனைகள் ஏராளம். சில்லறை வியாபாரிகளில் பெரும்பாலோர் முதியவர், மூதாட்டிகள். சுயமரியாதையை இழக்க மனமில்லாமல் இரயில் பயணத்தில் சில்லறை வியாபாரம் செய்து குறைந்த வருமானத்தைக் கொண்டு நிமிர்ந்து வாழும் உழைப்பின் சிறு தேவதைகள் அவர்கள்.

திருநெல்வேலி ரயில் பயணிகளுக்கு மிகவும் அறிமுகமான இட்லி வியாபாரியை எளிதில் மறக்க முடியாது. வயது எண்பத்தி ஐந்தைத் தொடும். கூன் பின்னுக்கு இழுக்கும். இரணியா வீக்கம் முன்னுக்குத் தள்ளும். கரணம் தப்பினால் மரணம். உயிர் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இரயில் பெட்டிகளில் ஏறி இறங்கி கூவிகூவி அவர் இட்லி வியாபாரம் செய்வது கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.

விவசாயத்துறை, தொழிலாளர்கள், வாலிபப் பருவத்தில் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பின் வாயிலாகத் தங்களைத் தியாகம் செய்கிறார்கள். முதுமை அவர்களை முடக்கிப்போடும்போது குடும்பத்திற்குப் பராமரிக்கிறார்கள். குலை நடுங்கி துயரத்தில் குமைகிறார்கள். காந்தியும், புத்தரும் காருண்ய இயேசுவும் வள்ளலாரும் புனிதமாய் மதிக்கப்படும் இந்தியத் திருநாட்டில் ஏழை முதியவர்களிடமும் கருணை காட்ட வேண்டும்

முழுமையான கட்டுரை வாசித்தலுக்கு


நன்றி - தினமணி

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

புறா!

ஏறக்குறைய நாற்பதுக்கும் அதிகமான புறாக்களின் கூட்டத்தினுள் பார்வையினை செலுத்தியபடி மெளனமாய் அமர்ந்திருக்கின்றேன்!வார வேலை நாட்களின் பரபரப்புக்களில் புறாக்களும் சிக்கிக்கொண்டுவிட்டனவோ என்று நிறைய நாட்களில் காலை வேளைகளில் காணாமல் போன் இக்கூட்டத்தினை நினைத்து நினைத்ததுண்டு!

வார இறுதி விடுமுறை வெள்ளிகளில் கண்டிப்பாய் காலை 4.30 தொடங்கி 7.00 மணி வரையிலும் இக்கூட்டம் கண்களுக்கு புலப்படும் மற்ற நாட்களில் ஏனோ இத்தனை எண்ணிக்கையிலான புறாக்களின் சங்கமம் இருப்பதில்லை!

எல்லா புறாக்களிலும் செயல்பாடுகளும் ஒரே மாதிரியாகவே இருக்கின்ற உணவினை உண்பதில் தொடங்கி ஏதேனும் சிறு அசைவுகளில் கவனம் செலுத்தி எச்சரிக்கை உணர்வினோடு பறக்க முறபடுகின்ற புறாக்கள் - அவைகளுக்கு! பாதுகாப்பு பறத்தலில் தான் இருக்கிறது போலும்!

கூட்டத்திலிருந்து பிரிந்த புறா ஒன்று தனியே நடக்க தொடங்குகிறது! நான் அமர்ந்திருக்கும் பக்கமாய் செல்லும்போது மனதினில் ஒரு பேராசை உருவாகிறது நம் அருகினில் வந்தமர்ந்து நம்முடன் தன் குறைகளை கூறப்போகும் புறாவாக மனம் அதை நினைக்கதொடங்குகிறது! முன்னர் கதைகளில் மட்டும் கேட்டிருந்த பறவைகள் விலங்குகளுடனான மனிதர்களின் உரையாடல்கள் பற்றிய நினைவுகள் வந்து செல்கிறது - புறா தன்போக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறது!

சற்றே இடைவெளி விட்டு மற்றுமொரு புறா அதனை தொடர்ந்து வந்து இணையாக நடக்கமுயற்சிக்கும்போது,முன் சென்ற புறா கோபத்துடன் கழுத்துப்பகுதியிலிருந்து சிலிர்ப்புடன் தலையினை உயர்த்தி எச்சரிப்பதுபோல செய்கையில் வந்த புறா தனித்து திரும்பி கூட்டத்துடன் இணைந்துகொள்கிறது என்ன சிக்கலோ?

ஊரில் இருந்த கால கட்டத்தில் எங்கள் தெருவில் ஒரு வீட்டினில் புறாக்கள் வளர்த்துவந்தனர் புறாக்கள் கிளிகள் மற்றும் சில வகை குயில்கள் என பலவித பறவைகள் சுதந்திரமாக கூண்டில் சுற்றிவந்துக்கொண்டிருந்தன. கம்பிகளின் இடுக்குகளின் வழியே கண்ட காட்சிகளுக்கும், தற்போது வெட்டவெளியில் தன் இஷ்டப்படி சுற்றிவருகின்ற புறாக்களினை காண்கின்ற காட்சி நிச்சயம் வெகு சுவாரஸ்யமானதாக இருக்கிறது!கூண்டினில் அடைப்பட்டிருக்கும் புறாக்களினை காண்பதை விட வெட்டவெளியில் சுதந்திரமாய் உலாவும் புறாக்களினை காண்கையில் மனம் நிச்சயம் மகிழ்வடையக்கூடும்!

ஏதேதோ சூழல்களால் நம்மால் இருக்க இயலாமல் போன சுதந்திர நிலையினை அவைகள் அடைந்திருக்கின்றன என்பதற்காகவும் அந்த மகிழ்ச்சி இருக்ககூடும்!