Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

12.12.11


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

வாழ்க்கை ஒரு புத்தகமாக முதல் சில பக்கங்களும் கடைசியில் சில பக்கங்களும் தொலைத்து காணப்படுகின்றது! அவற்றை தேடுவதுதான் வாழ்க்கை! நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகப்போகிறோம்! என்று நமக்கு தெரியாது அதை தெரிந்துக்கொள்ள முயல்வதுதான் வாழ்க்கை!

காணாமல் போன பக்கங்கள் பற்றிய கவலையின்றி கிடைத்த பக்கங்களோடு வாழ்க்கை வாழ பழகிக்கொள்வன் சாதாரண மனிதன்!
- ரஜினிகாந்த்

வாழ்த்துக்கள் கானா பிரபா!





இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நண்பண்ணா aka கானா பிரபா

தை - முகம்



தை முகம் மலரும் இந்நன்னாளில்
உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

எத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்!




எழுத்தறிவித்த இறைவன்களை வணங்குகின்றேன்!

எல்லாவர்க்கும் ஓணாஷம்ஸங்கள்!

வாழ்த்துக்கள் கானா பிரபா!




நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

சென்ஷி - காதலன்

காதல் என்பது அனுபவம்;

காதலித்தல் சுகானுபவம்;

காதலிக்கப்படுதல் பேரனுபவம்

காதல்...நமது ஆசைகளின் முதல் திறவுகோளாக மாறி மனம் திறந்து பூட்டிக் கொள்ளும் விசித்திர சாவி.

காதல்....நம்மை நமக்கும், நம்மைப் பற்றி பிறர்க்கும் காட்டிக்கொடுக்கும் அற்புத கண்ணாடி.

காதல்...அமைதியாய் தொங்குகிற திரைச்சீலையின் மடிப்பில் அமர வைக்கும் அற்புத தொட்டில்.

காதல்... ஆழ்கடலின் அமைதியை வெளியிலும் அளவில்லாத அலை ஓசையை மனதிலும் நிறுத்தி வைக்கும் பூந்தொட்டி.

காதல்... இனக்கவர்ச்சியின் முதல் விருந்து.

காதல்... மனக்கலவரத்தின் மறு அத்தியாயம்.

காதல்... கூடுகளில் வாழும் சந்தோஷம்.

காதல்... வானவில்லில் கலந்த புதிய நிறம்.

காதல்... எதிரொலிகளில் எதிர் ஒளி

காதல்... நினைவுகளின் சங்கமம்

காதல்.. மோசமான யுத்தத்தின் மிகப்பெரிய வெற்றி

காதல்.... எல்லைகள் இல்லாத தொடுவானத்தின் முற்றுப்புள்ளி.

காதல்.... பாதைகள் போட்டுக்கொள்ளாத புல்வெளி.

காதல்.... ரசனைகள் கைகோர்க்கின்ற ரசவாதம்.

காதல்.... கண்களில் வழிகின்ற கானல் நீர்.

காதல்.... கற்பனைகள் வளர்க்கின்ற புத்தகம்.

காதல்.... கனவுகள் தருகின்ற நல்லுறக்கம்.

இடைவெளிகளை நிரப்புகின்ற அந்த தருணங்கள் காதலென சொல்வதை கடினமாக கருதும் அசௌகர்யம் கொண்டவர்கள் நட்பென்ற பூக்களின் மேல் நடக்கட்டும். ஏனெனில் காதல் பாதையில் சற்று முட்கள் அதிகம். அதனாலேயே காதல் பரிசாக ரோஜா போற்றப்படுகிறது.

சென்ஷி - காதலன்

*********************************************************************************



இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சென்ஷி...!

பொங்கல் - பானையில் பொங்குவோம்!


ஒவ்வொரு வருடமும் ஜனவரி தமிழர்களுக்கு உற்சாகமான ஆரம்பம்தான் தையாக பிறக்கும் தமிழர் நாள்! அதுவும் காவிரி டெல்டாக்களில் தை பிற்ப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்த எந்த பண்டிக்கைக்குமே கொடுக்கமாட்டார்கள்!

பொங்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு மாட்டு வண்டிகளில் வந்து சேரத்தொடங்கும் மண்பானைகளின் வருகையில் மாலை நேரத்தில் பள்ளி விட்டு செல்லும் எங்களுக்கு பொங்கல் வரும் நாளையும் விடுமுறை வரப்போகும் வேளையையும் குறிப்பில் உணர்த்தும் மண் பானைகளின் வருகை!

எங்கும் பரந்த விற்பனை மையங்களாக அன்றி, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டு வந்து இறக்கும் மண் பானைகளை கிட்டதட்ட 15 நாட்களுக்கு,பானைகளை பத்திரமாக பாதுகாத்து,பனியிலேயே பானைகளோடு உறங்கி உண்டு,வாழ்க்கையை தொடரும் மக்கள்!

இத்தனைக்கும் சொற்பமான வருமானம்தான் அவர்களின் அந்த நேரத்து விற்பனையில் பெறமுடியும்!

நவீன நாகரிகத்தில் பொங்கல் பானையிலிருந்து குக்கர்க்கு மாறி,பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலிட்ட மக்கள்,குக்கரின் விசில் சத்ததில் பொங்கல் கொண்டாடி, டிவிக்களில் வீழ்ந்துகிடக்கிறார்கள்!

வருடத்தின் ஒரு நாளில் நாம் ஏன் பானைகளை உபயோகித்து பயன்பெறக்கூடாது! அல்லது ஒரு ஏழைக்குடும்பம் பயன் பெற் உதவகூடாது ?

சிந்திப்போம்!

பானையில் வைத்து, பொங்கலை சுவைத்திருப்போம்!

வரும் தமிழர் திருநாளில்...!

2010ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்...!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா !


இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புச்சகோதரி ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்களோடு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை பகிர்ந்துக்கொள்கிறேன்!

எல்லார்க்கும் இனியவராய்... - இருக்க வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...!

# தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது?

# எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...

# பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம்! விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே!

# வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.

# தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை!

# அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...?

# சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.

*****************************

முகமே உன் கண்கள் அழகே
விழியே உன் பார்வை அழகே
இதழே உன் பேச்சு அழகே
மொழியே உன் வார்த்தை அழகே

மனமே உன் எண்ணம் அழகே
நினைவே உன் நேர்மை அழகே
உயிரே உன் மூச்சும் அழகே
மனிதா உன் தேகம் அழகே


வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே
இது உண்மையே!

ஒவ்வொரு வரிகளிலும் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பாடல் இயக்குநர் அகத்தியனில் எழுத்தில் கோகுலத்தில் சீதையில் பாடலாக வெளிப்பட்டது! எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் ! கேட்டு ரசித்துபாருங்களேன் நம் தேன்கிண்ணத்தில் இன்றைய ஸ்பெஷல் !
நன்றி:- தேன்கிண்ணம் & முத்தக்கா!

12.12.2009


நம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்!

********

Happiness begins when ambition ends.

ஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது!

********

பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை...!
லட்சியமாவது, புடலங்காயாவது,சுகமாக,சந்தோஷமா,நிம்மதியாக வாழ்ந்து ..
கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்!

- ரஜினிகாந்த்

வாழ்க வளமுடன்!

டிஸ்கி:-

ஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்!


வாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்

ஒவ்வொருவரும் காலையில் எழுந்தவுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்

அன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.
வேதாத்திரி மகரிஷி



வேண்டுகோள்:-

வாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்!

சிறு முயற்சி !



சிறுதூறலாய் கடந்துவிடும் மேகம்.
வந்த சுவடுக்கு மண்வாசனை
நாளெல்லாம் மனதின் ஓரத்தில்.

வானவில் வண்ணங்களால் படி கட்டி,
மனமேறி உட்கார்ந்து விடும்
நொடிப்புன்னகை.

- முத்துலெட்சுமி


சிறு முயற்சி தான் முயன்று பாருங்களேன்!


இன்று இனிய பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ரொம்பவும் பு(ப)டிச்ச இன்னுமொரு கவிதையின் வரிகளிலிருந்து...

மௌனம் கலை.
வார்த்தைகளை விடுதலை செய்..
எழுத்துக்கூட்டியேனும் பேசிவிடலாம்.
அந்த பேசாத வார்த்தைகள்
பின்னெப்போதாவது ஒரு மாலைநேரம்
எதிரில் உட்கார்ந்து கொண்டு
அன்றைக்கு ஏனப்படி
மௌனியாயிருந்தாயென்று
பாடாய்படுத்தாமல் இருக்கட்டும்.


- முத்துலெட்சுமி



நான் ஆதவன்!

சூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை! அதை கேட்டு வாங்கினது நானேதான்! நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்!

பயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....!

அந்த நாள்.....

காட்சி ஒண்ணு:-



நான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க

டேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....!

நான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது?

டேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....


காட்சி நெண்டு:-


நான் ஆதவன்:- ஹலோஓ?

டேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா?

நான் ஆதவன்:- முடியாது! பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க?

டேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...!

நான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு! நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்!

டேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா? நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...?

நான் ஆதவன்:- அவ்வ்வவ்வ்வ்வ்வ்!


காட்சி மூணு:-




நான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்!

டேமேஜர்:- டேய்...! நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல..? சரி இரு நான் மேலே ஏறி வரேன்..!

நான் ஆதவன்:- நோ! நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர்! அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்!

டேமேஜர்:- டேய்...! எனக்கு இப்ப கொலைவெறி வருது! இப்போ உனக்கு என்ன மேன் வேணும்?

நான் ஆதவன்:- குட்! குட்! இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்!

டேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்?

நான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்!

[பேக்கிரவுண்ட்ல மியூஜிக் ஸ்டார்ட்டு]

அல்லா ஜானே அல்லா ஜானே
அல்லா ஜானே அல்லா ஜானே
டிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ?
பவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ?
ஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்?
ஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்?


ஆக்கம் :- கோபிநாத் அமீரகம்

ஊக்கம் :- ஆயில்யன் தோஹா


டிஸ்கி:-
இனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...!

தீபாவளி

தீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு!

1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு ?

சிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு! (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்!) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு! இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை

2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம் ?

வீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது ! இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது!

3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?

தோஹா - கத்தாரில் இருக்கிறேன்!

4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள் ?

என்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும்! சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது.! உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்!



5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
எப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம்! அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது !

இந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது !

6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?

1ம்மில்ல!

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

இந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட! நம்புங்கப்பா பிசியோ பிசி!)

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?

ஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது !

அதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது!

9) இந்தஇனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள் ? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?

உதவி செய்வேன்!

10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் லைத்தங்கள் ?

கயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்

சந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...!( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே? - அவ்வ்வ்வ்வ்வ் )

ராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]

நிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்!

வாழ்த்து அட்டை!


பொங்கல்,தீபாவளி மற்றும் புத்தாண்டு போன்ற இன்னபிற விசேஷங்கள் வருகிறதென்று தெரிந்தால் ஒரு மாதத்திற்கு முன்பே ரொம்ப ஜாலி + இண்ட்ரஸ்ட் ரெண்டும் கலந்து கட்டி அடிக்கும் !குட்டி பையனை இருக்கும்போது கடையில கார்டு வாங்கி வாழ்த்துக்கள் எழுதி அனுப்புற பழக்க இருந்துச்சு பிறகு இப்ப சுட்டி பையன் ஆனாப்பிறகு எதையாச்சும் கிரியேடிவ்வா செஞ்சு வாழ்த்து சொல்லணும்ன்னு மனசு கிடந்து துடியாய் துடிக்கும்! அதுவும் போட்டோஷாப் இன்னும் பல கிறுக்கு வேலைகள் எல்லாம் தெரிஞ்சுக்கிட்ட பிறகு நிறைய நிறைய டெஸ்ட் செஞ்சு பார்க்க தோணிடும்!

கூகுள்ல அலைஞ்சு திரிஞ்சு சூப்பரா ஒரு போட்டோவை சுட்டு அதுல என்னோட (இல்லாட்டி மல்லு ஃபிகர்) போட்டோவை போட்டு பேக்கிரவுண்ட் எல்லாம் சூப்பரா செட் பண்ணி கீழ அழகாய் வாழ்த்துக்கள்ன்னு டைப் செஞ்சுட்டு அதை அப்படியே ஒரு பத்து பதினைஞ்சு ப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பிச்சு வைச்சுட்டா ஹப்பாடான்னு ஒரு திருப்தி வரும்! அதுக்கு ரிப்ளை வருதோ அல்லது அந்த வாழ்த்து or போட்டோ யாரையாச்சும் ஈர்க்குதா அப்படின்னு எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது!- (ஒரே ஒரு முறை மட்டும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து அனுப்பிச்சதுக்கு ஒரு நண்பர் அதெல்லாம் நம்ம கலாச்சரம் இல்லைன்னு போட்டு கும்மிட்டாங்க!)

இயல்பாவே வாழ்த்து அட்டைகள் மேல ஒரு பிரியம் இருக்கறவங்களாலதான் தொடர்ந்து இது மாதிரி வாழ்த்து அட்டைகள் செஞ்சு அல்லது வாங்கி அனுப்பிச்சிக்கிட்டே இருக்கமுடியும்! இதை செய்யறதால என்ன பெருசா சாதிச்சுட்டோம் பதில் ஒருத்தங்க கூட போடமாட்டேங்கறாங்களேன்னு சில சமயம் தனக்கு தானே கேள்விகள் ரைஸ் ஆனாலும்,வெகு சீக்கிரத்துலயே அதை மறக்க வைக்கிற மாதிரி அடுத்து வர்ற விசேஷ நாளுக்கு என்ன செய்யலாம்ன்னுதான் யோசிக்க தோணும்! - லைஃப்ல இதெல்லாம் சாதா’ரண’மப்பான்னு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க :)

போட்டோஷாப்ல ரெடி பண்றது ஒரு ஸ்டைல்ன்னா இன்னும் சில பேர் ஓவியங்கள் வரையறது,படங்களில் சின்ன சின்ன மணிகளை கொண்டு ரொம்ப பொறுமையாக ஒட்டி அனுப்புவாங்க! -சூப்பரா இருக்கும் - முன்பெல்லாம் இப்படி வரும் ஓவியங்களை நிறைய பேர் ஆர்வத்தோட ஃப்ரேம் செஞ்சு,யாரு கொடுத்தான்னு பேர் எல்லாம் எழுதி வீட்ல மாட்டி வைச்சுப்பாங்க! இப்ப அதெல்லாம் ரொம்ப கம்மியாகிடுச்சு !

சரி இப்ப எதுக்கு இந்த பீலிங்க்ஸ் அப்படின்னு நீங்க கேக்கமாட்டீங்க இருந்தாலும் சொல்லவேண்டிய நிர்பந்தம் எனக்கு இருக்கே! (பின்னே எண்ட்கார்டு போடணும்ல!) இன்னிக்கு உலகம் பூரா வாழ்த்து அட்டைகள் கிரியேடிவா தாங்களாகவே தயாரிப்பவர்களை உற்சாகப்படுத்தணும்ன்னு உலக நாடுகள் சபை சார்பாக WORLD CARD MAKING DAY கொண்டாடுறாங்க அதான்!

வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் ஆர்வம் நிறைய இருக்கறவங்க ந்த பக்கம்போனீங்கன்னா - ஏகப்பட்ட வித விதமான டிசைன் கார்டுகள் செய்யுறதுக்கு மாடல்கள் கொடுத்து - சோறு போட்டு குழம்பும் ஊத்துறாங்க! டிரை பண்ணி பாருங்க!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி!

அன்பு சகோதரர் ”கறுப்பியின் தமிழன் - காண்டீபராஜ்” இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களுடன்....!




கவிதைகளால் காதலித்து, காதலித்து, காதலை காத்து வரும் தூணாக...! புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே...!)

எண்ணங்களை எழுத்துக்களாக்கி, ப்ளாக்கி வைக்காமல் மனம்போன போக்கிலேயே காற்றிலேயே கவி எழுதி காணாமல் போகுமாறு செய்துக்கொண்டிருக்கும் சகோதரர் தீவிரமாக இணையத்தில் எழுதிட வேண்டும் என்ற கோரிக்கையினூடாக,பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்!

என் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...!

நானும் நீயும் அமர்ந்திருந்த
மணல் மேட்டில் குவிந்திருந்தது
காதல்...!
***********************************
காலம் மாற்றங்களை
கவ்விக்கொண்டு பயணிக்கிறது...
மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
***********************************
எத்தனை அழகு உன்னிடம்
நீ கோபப்படுகையில்
போடி...
அழகாகத்தான் கோபப்படுகிறாய் நீ!
***********************************
நேற்றும்
இப்படித்தான் சிணுங்கினாய்
இப்பொழுதும்
அப்படித்தான் வெட்கப்படுகிறாய்
இன்னொருமுறை கேட்டால்
"என்ன இப்ப" என்று முறைக்கிறாய்
இருந்தாலும்
இன்னுமொரு முறை கேட்கலாம்
என்றுதான் தோன்றுகிறது
நீ தர மறுக்கும் முத்தங்களை...
***********************************
நீ
காலைப் பயற்சிக்கு வருவாய் என்றே
விடியாமல் காத்திருக்கிறது
மைதான வெளி!
***********************************
அவள்
ஓடிக்களைத்ததில்
மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறது
காற்று!
***********************************
உரையாடல்கள் நின்றுபோன
உறவொன்றின் அழைப்புக்காய்
ஏங்கிக் கொண்டிருக்கிறதென்
தொலைபேசியும்
மாலைப்பொழுதுகளும்.
***********************************
காதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இன்னமும் ஈரமாய்...
நானும் நீயும் வாழ்ந்த ஊரில்
நம் வருகைக்காய்......
***********************************
டிஸ்கி:-
பூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)


உன்னால் தானே நானே வாழ்கிறேன்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகுமார்


காதல் சுவை கொட்டிக்கிடக்கும் கவிதைகள்,பயணத்தில் பார்த்ததை தன் பாணியில் வர்ணிக்கும் அழகு - இவரின் பயணத்தின் பிம்பங்களில், ரஜினியும் தேவதையின் தேசங்களும் புகைப்படமாகவும், லேபிளாகவும், கண்டு தொடர்ந்து சென்ற எனக்கு கதைகளும் கவிதைகளும் வர்ணிப்புக்களும் எளிய இனிய சொல்லாடல்களும் ஈர்ப்பினை உண்டாக்கிட பயணத்தின் பிம்பங்களின் வழியே நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்!

காலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கும் இந்த நாள் இனிய ஞாயிறு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!

***************************

எந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளிக்கிறது வானம்! எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி! கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில்! நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு!

நில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை! ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள்! பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு காலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்!

ஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள்! பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங்காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்!

மென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர்! வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..!

***************************

டிஸ்கி:- மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் எவ்வித முன் அனுமதியுமின்றி பயணத்தின் பிம்பங்களிலிருந்து எடுக்கப்பட்டது பதிவர் இரா.வசந்தகுமார் மன்னிப்பாராக...! :-)

வாழ்த்துக்கள் புதுகை தென்றல்


புதுக்கோட்டை - விடுமுறைக்கு அதிகம் சென்ற ஒரே ஒரு ஊர் !சின்னஞ்சிறுவயதில் என்றாலும் இன்றும் கூட மனதில் பதிந்து நிறைந்திருக்கும் புதுக்கோட்டை - எதோ ஒரு வெள்ளிகிழமைகளின் மதிய வேளையில் கூகுளில் பயணம் மேற்கொள்வேன்!

ஊர் பெயர் மூலம் அறிமுகம் பெற்ற இணைய நட்பு! அன்பு காட்டவும் எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியவர் புதுகை தென்றல் கலா அக்கா! இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனியவேளையில் வாழ்த்துக்களுடன் கலா அக்கா அவர்களின் பழைய நினைவுகள் பதிவு ஒன்றினை பகிர்ந்துக்கொள்கிறேன்!

இந்த பதிவு படித்தப்பொழுது எனக்குள் என் விடுமுறைக்கால புதுகை ஞாபகங்கள் தாலாட்டின :)

***************
எங்கள் புதுகை சின்ன ஊர்தான். காலை 5 மணி, 9 மணி, பகல் 12 மணி, சாயந்திரம் 5 மணி, மற்றும் இரவு 8 மணிக்கு சாந்தாரம்மன் கோவில் அருகில்
இருக்கும் மார்க்கெட்டிலிருந்து சங்கு ஒலி கேட்கும்.(இன்றும் இப்பழக்கம் இருக்கிறது) இதை வைத்தே நேரத்தை கணக்கிட்டுக்கொள்வோம்.

(அதற்கு முன்னரே பக்கத்துவீட்டில் மாடு கறக்க கோனார் வந்துவிடுவார்.) பால் கறந்த கையோடு(3 மணிக்கு) முதல் பால் டெலிவரி எங்கள் வீட்டிற்குத்தான். பால் சொம்போடு வந்து என்னைத்தான் எழுப்புவார் மோகனம்மா. (மோகன் அவர்களின் பையன்) அப்போது எழுந்து (சமையற்கட்டு மேடை மீது அமர்ந்து (சிம்மாசனம் :) ) படித்துவிட்டு 5 மணி சங்கு ஊதியதும் வந்து படுத்துக்கொண்டு அதிகாலையை ரசிப்பேன்.

அதிகாலை 5 மணி சங்கு ஒலிக்கேட்ட கொஞ்ச நேரத்தில்பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்கும். 10 நிமிட கழித்து வீட்டுக்கருகில் (வடக்கு 4ல் எங்கள் வீடு)இருக்கும் சர்ச்சில் ஜபம் தொடங்கும். இன்று என்ன பாடல் போடுவார்கள் என்றுகாத்திருப்பேன்.யேசு ராஜா முன்னே செல்கிறாரா..இல்லை வேறு எந்தப் பாட்டு என்று என் மனதும் நானும் பந்தயம் கட்டிக்கொள்வோம்.

வாசல்
பெருக்கும் சத்தம், பால்வண்டி மணி, இவைகளுடனே துவங்கும் நாள்.

மார்கழி மாதக் குளிருக்கு பயந்து மஃப்ளர் கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம் போடுவது தனி சுகம்..அந்த நேரத்தில் சைக்கிள் எடுத்துக்கொண்டு கீழராஜவீதியில் போவது ஒரு சுகம்.:) 6.30 மணிவாக்கில் கீரை, பூசணிக்காய், உப்பு விற்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும தண்ணீரை பிடித்து வைக்க குடம் தூக்கிப்போகும் பெண்கள்.“எனக்கும் ரெண்டு குடம் தண்ணிக்காஎன்று சைக்களில் குடம் கட்டி வரும் பையன்கள்,குழாயடி சண்டை. வாகனங்கள் அதிகம் போகத் துவங்கியிருக்காத என வீதியே அழகாய் இருக்கும் அந்தக் காலை நேரத்தில்.பல்துலக்கி,குளித்து கல்லூரிக்கு ரெடியாகும் வரைதோழி ஒலித்துக்கொண்டிருப்பாள்.( ரேடியோவில் பக்திமாலை, செய்திகள்.. எக்ஸ்ட்டரா...)

நான் மிகவும் ரசித்த தருணங்கள்!


***************


இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா !