தெரிந்த காதலன் தெளித்த கவிதைகள் :-)

எல்லோருக்குமே தெரிந்த காதலன் இங்கு தெளித்த கவிதைகள் ஒரு தொகுப்பாய் :-)நீ சிந்திடும் முல்லைச்சிரிப்பில்
வாழ்ந்து கெட்டு மீண்டும்
சேர்ந்து வாழ
துடிக்குது மனசு..!

கனவுகள் தொலைத்த
ஞாபக மாத்திரையில்
பத்திரமாயுள்ளது
உன் பெயரென்னும் போதை!

நீ
சிந்திய வெட்கத்தை
எந்த பாத்திரத்தில்
நிரப்பி வைத்து
குடிப்பேன்!

உனது சிரிப்பில்
சிதறிப்போனது
புன்னகை மொட்டுக்கள்
போதும்..
சற்று என்னை
பொறுக்கியாய் மாறவிடு!

உவமைகள் எல்லாம்
உன்னை கண்டு
வெட்கப்பட்டு
செத்துப்போகின்றன.
உனக்கு எதை உதாரணங்காட்ட!

நெற்றிப்பொட்டு கதிரென நினைத்து
தாமரை மலர்ந்து சிரிக்கிறது.
நெஞ்சுக்குள்ளே காதலும் அமர்ந்து,
கவிதை வரியாய் வடிக்கிறது!

பூப்பறிக்க போகும் சமயம்
பூவை உன் முகம் தெரிகிறது
பூக்களெல்லாம் வாடிடுமென்றே
அதற்கும் குடையை விரிக்கிறது!

மொட்டை மாடி வெட்கச்சலனம்
நிலவும் கண்டு ரசிக்கிறது
மோதுகின்ற திருட்டுப்பார்வை
பத்திரப்படுத்த துடிக்கிறது!

மனதுக்குள்ளே இத்தனை காதல்
உன்னால் உணர முடிகிறதா?
உணர்ந்த பின்னும் மௌனம் காட்டும்
காதலே இதுதான் பெண் மனதா!?

கொட்டி வைத்த ஆசைகள் எல்லாம்
சேர்த்துப்பார்க்க நேரமில்லை
காதல் என்ற ஒற்றைச்சொல்லில்
கோத்துப்பார்க்க முடியவில்லை!

கைப்பிடித்து வீதியில் அலைந்த
நாட்கள் மிச்சம் கழிந்ததடி
உன்னை காணுகின்ற சமயங்கள்
எல்லாம் ஏதோ ஒன்று குறைந்ததடி!

உள்ளுக்குள்ளே சீறிப்பாயும்
காதல் மோகப்பாம்பென்றேன்
காதலிக்காக பைத்தியமான,
புதிய மஜ்னு நானென்றேன!!
**************

கவிதைகளில் விளையாடிவிட்டு சென்ற அண்ணன் சென்ஷிக்கு

நன்றி!

நன்றி!!

நன்றி!!!

( பயபுள்ள! பாவனா வேணாம் மீரா ஜாஸ்மினுக்கு பொறந்த நாளுன்னு போஸ்ட மாத்துன்னு சொல்றாருங்க! அந்தளவுக்கு அவருக்கு மீரா ஜாஸ்மின் மேல உசுராம்! அண்ணனுக்கு சப்போர்ட்டா அப்பப்ப மாப்பி கோபியும் ”மீராவின் கண்ணன் மீராவிடமேன்னு” ஸ்டேட்டஸ் விட்டு ஹாப்பி பண்றாராம்! சரி ஏதோ நம்மலால முடிஞ்சது மீரா ஜாஸ்மின் போட்டோஸ் தான்!)

20 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு...

அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள் :))

அவள் கனவில் யார் வருவார்
யாரைப்பார்த்து அழைப்பாள் :((

said...

என்ன இருந்தாலும் மீரா மீரா தான், தல கோபிகிட்ட கேளுங்க மீராவின் கண்ணன் மீராவிடமே என்பார்.

யாருங்க அது பாவனா? ( மீரா கண்ணை மறைக்குது)

said...

//சென்ஷி said...
கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு...

அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள் :))

அவள் கனவில் யார் வருவார்
யாரைப்பார்த்து அழைப்பாள் :((
//


யாரைப்பார்த்து அழைப்பாள் ????????????????

said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
கனவு காணும் மனிதனுக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே
வருவதெல்லாம் உறவு...

அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள் :))

அவள் கனவில் யார் வருவார்
யாரைப்பார்த்து அழைப்பாள் :((
//


யாரைப்பார்த்து அழைப்பாள் ????????????????
//


என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!

said...

//யாரைப்பார்த்து அழைப்பாள் ????????????????
//


என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!
என்னைய பார்த்து!//

அடப்பாவி.. மீரா ஜாஸ்மின் போட்டோ போட்டிருக்கியேன்னு ஆசையா வந்தா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((

ஆயில்யா இது ஓவரு.. :))

said...

\\
சென்ஷி said...

அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப்பார்த்து சிரிப்பாள் :))

அவள் கனவில் யார் வருவார்
யாரைப்பார்த்து அழைப்பாள் :((//

:))

said...

\\கானா பிரபா said...
என்ன இருந்தாலும் மீரா மீரா தான், தல கோபிகிட்ட கேளுங்க மீராவின் கண்ணன் மீராவிடமே என்பார்.//

மறுக்க சொல்லிக்கறேன்ப்பா..

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
\\கானா பிரபா said...
என்ன இருந்தாலும் மீரா மீரா தான், தல கோபிகிட்ட கேளுங்க மீராவின் கண்ணன் மீராவிடமே என்பார்.//

மறுக்க சொல்லிக்கறேன்ப்பா..
//

மறுக்க சொல்றீங்களா... ஏன் :))

said...

//சென்ஷி said...
//கயல்விழி முத்துலெட்சுமி said...
\\கானா பிரபா said...
என்ன இருந்தாலும் மீரா மீரா தான், தல கோபிகிட்ட கேளுங்க மீராவின் கண்ணன் மீராவிடமே என்பார்.//

மறுக்க சொல்லிக்கறேன்ப்பா..
//

மறுக்க சொல்றீங்களா... ஏன் :))
///

அதானே ஏனக்கா மறுக்க சொல்றீங்க :))

said...

வழக்கம்போல வழிமொழிகிறேன்னே சொல்லி இருக்கலாம்..மறுக்கா வுக்கு மறுக்கன்னு அடிச்சிட்டேனா.... :))

said...

ஹிஹிஹீ இவங்க தான் சூப்பரா இருக்காங்க... இது வெள்ளிக்கிழமை ஸ்பெஷலா ஆயில்... :)))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
வழக்கம்போல வழிமொழிகிறேன்னே சொல்லி இருக்கலாம்..மறுக்கா வுக்கு மறுக்கன்னு அடிச்சிட்டேனா.... :))
//

:))

ஹி..ஹி.. ரிப்பீட்டேன்னே கூடப் போட்டுரூக்கலாம் :)))

said...

அது என்னமோ தெரியலைப்பா இந்த மலையாளப்பொண்ணுங்க எப்படித்தான் செஞ்சு வச்ச மாதிரி புறக்குதுங்களோ யாருக்கு தெரியும்...:)

said...

இது ரொம்ப அநியாயம் தல ஒரே நாள்ள இரண்டு செல்லங்களோட பதிவை போட்டது...:)

said...

Your comment has been saved and will be visible after blog owner approval.

???????

said...

தல இங்கதான் இருக்கிங்க போல, ஆனா நம்ம எங்க இருக்கிங்கன்னு சொன்னா நாமளும் வருவம்ல:)

said...

போட்டோ சூப்பரு!!!

said...

சென்ஷி அண்ணே காலைல இருந்து கும்மி அடிக்கணும் கும்மி அடிக்கணும் சொன்னீங்க. ஆனா கலக்கலா கவிதை கும்மி அடிச்சி இருக்கீங்களே. சூப்பர்!

said...

நல்லாயிருங்க ராசா ;)

Anonymous said...

நல்லா தான் இருக்கு... :)