குங்க்ஃபூ பாண்டா :-)

டிஸ்கி:- இது விமர்சனம் அல்ல ஒரு வெளம்பரம் மட்டுமே!

போஸ்டர்ல அழகா போஸ் கொடுக்கிற பாண்டா கரடியை பார்த்ததுமே சரி ஏதோ வித்தியாசமாக இருக்கும்போல கண்டிப்பா போய் பாத்துடுவோம்னு ஒரு ஆசை வந்துச்சு!

பார்த்தாச்சு! - மனசுல கொஞ்சமா அந்த பாண்டா கரடியும் ஆக்கிரமிச்சிடுச்சு!

படம் ஆரம்பிச்சு பத்து நிமிஷத்துக்குள்ளாற மனசுக்குள்ள ஒரு திக் பீதி! ஒரே கார்ட்டூன் கேரக்டர்ஸா போய்க்கிட்டிருக்கு! ஒண்ணுமே புரியல! ஆஹா ஏமாத்துட்டோம்டான்னு ஆகிப்போச்சு! சரி ஒரு பத்து நிமிஷம் பார்ப்போம் இல்லாட்டி போய் நல்லா ஒரு தூக்கம் போடலாம்னு நினைச்சு முடிக்கும்போது டமாருன்னு அந்த பாண்டா கரடி தூக்கத்திலேர்ந்து கீழ விழ - கனவாம் அதுல பழங்காலத்து சண்டை காட்சியாம்!

அழகான ஆசையாக சிரிக்க வைத்து பார்க்க வைக்கும் பாண்டா கரடி கேரக்ட்டர்! மற்றும் இன்ன பிற கேரக்டர்களும் உண்டு!


சொல்லிக்கொள்ளுமளவுக்கு மிகப்பெரிய காமெடி சீன்கள் கிடையாதுன்னு சொன்னாலும் கூட கண்டிப்பாய் சிரித்த முகத்துடனேயே உங்களை பார்க்க வைக்கும் படம்!

பாண்டா கரடியின் சண்டைகாட்சிகள் ரசிக்கவைக்கும் விதமாகவும் அதே சமயத்தில் சிரிக்கவும் வைத்திருக்கிறது! குறிப்பாய் அந்த பயிற்சி களத்து மாஸ்டருடனான சண்டை காட்சியும் கிளைமாக்ஸும் கலக்கல் கிராபிக்ஸ்த்தான்!

குழந்தை படங்கள் என்றால் பயங்கர முகத்துடன் படம் பார்த்து முடித்தபின்னும் பல வருடங்களுக்கு பயப்படவே வைக்குமான வில்லன் கேரக்டர்கள் கிடையாது! அதனால் பயப்படாமல் குழந்தைகளை பார்க்க வைக்கலாம்!

கலங்கலான தண்ணீரில் தெரியாத விஷயங்கள் நீர் தெளியும் போது தெரியும் போன்ற சின்ன சின்ன ரகசியங்களும், அவ்வப்போது தெளித்துப்போகும் நம்பிக்கை வரிகளில் வாழும் வாழ்க்கையின் நியதிகள்! ( ஒண்ணுமே இல்லை அப்படிங்கறதுதான் படத்துல டாப் சீக்ரெட் ஆன விஷயமே!)

எந்த வயசுக்காரர்க்ளும் சென்று படத்தை பார்க்கலாம் - சிரிக்கலாம் !

கிட்டதட்ட படம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களுக்கு பின்னர் வந்திருக்கிறதாம்!

படம் தவிர்த்து, மற்ற சிறப்பு செய்திகளாக படத்தில் வரும் பிராணிகளுக்கு பின் குரல் கொடுத்திருப்பது மிக பிரபலமான நடிகர் நடிகைகள் - ஜாக்கி சான், ஆஞ்சலினே ஜூலி மற்றும் இன்ன பிற ஹாலிவுட் சமூகங்கள்!

தனது பலவீனங்களையே பலமாக மாற்றி எதிரியை பந்தாடுவதுதான் படத்தில் பாண்டாவின் கதாபாத்திரத்திற்கான கரு!அதற்கேற்றார்போலவே தொப்பையையும் குண்டான உருவத்தையும் முன்பு பலவீனமாக காட்டும் முயற்சிகளில் நன்றாகவே சிரிக்க வைத்துவிடுகிறார்கள்! (முதல் காட்சியிலேயே மல்லாந்து கிடந்துக்கிட்டு திரும்ப எழுந்திருக்க முடியாம திணறுவதை பார்த்தும் நல்லா சத்தமா சிரிச்சுப்புட்டேங்க...! அட நம்மள மாதிரியே எந்திரிக்க முடியாம தவிக்குதேன்னு!)

கிட்டதட்ட 1.15 நிமிடங்களுக்கான படம்! பார்க்கும் நேரத்தில் பெரும்பான்மையான நேரம் மனதில் மகிழ்ச்சியையும் மெல்லிய புன்னகையையும்

வரவழைக்கும் காட்சிகள்! சிம்பிளா சொல்லணும்னா போய் பாருங்க டயம் போறதே தெரியாது அவ்ளோதான்! ஆனா மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் உங்களின் குழந்தைகளோடு...!

ச்சும்மா ஒரு டிரெயிலரும் வேணும்னா பாருங்களேன்!


18 பேர் கமெண்டிட்டாங்க:

said...

panda கரடின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா பாத்துடலாம்..

said...

ஆஷிஷ் ,அம்ருதா சார்பில் மிக்க நன்றி.

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறைந்துவிட்டது (இல்லை என்றே சொல்லலாம்) என்பது என் ஆதங்கம்.

நல்ல திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

said...

வீக்கெண்டு பார்த்துருவோம் :))

said...

மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னா யாருக்குதான் பிடிக்காது? பார்க்கிறோம்ங்க.

said...

கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் அண்ணா...

said...

// ஆனா மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் உங்களின் குழந்தைகளோடு...!//

நான் மிஸ்டர்... குழந்தைங்களுக்கு இப்ப எங்க போறதுன்னு தெரியல..
பக்கத்துலயும் ஏதும் ஸ்கூல் இல்ல :((

said...

பாத்துருவோம்ம்ம்ம்ம்ம்ம்! :D .தகவலுக்கு நன்றி!:)

said...

அப்படியே எங்க டவுன்லோட் பண்ணலாம்னு சிரமப்படாம பார்த்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :))))

said...

என்னாது? 1.15 நிமிடம் படமா? :))))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
panda கரடின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா பாத்துடலாம்..
//

கண்டிப்பா பாக்கணும் :)

said...

//புதுகைத் தென்றல் said...
ஆஷிஷ் ,அம்ருதா சார்பில் மிக்க நன்றி.

குழந்தைகளுக்கான திரைப்படங்கள் குறைந்துவிட்டது (இல்லை என்றே சொல்லலாம்) என்பது என் ஆதங்கம்.

நல்ல திரைப்படத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
//

பசங்களுக்கு முதல்ல டிரெய்லர் காமிச்சாச்சா?/ :))

said...

//கப்பி பய said...
வீக்கெண்டு பார்த்துருவோம் :))
//

பார்த்துட்டு திங்கள் கிழமை காலங்கார்த்தால வந்து சூடச்சுட விமர்சனம் போடணும் இது தம்பியின் கட்டளை :)

said...

//ராமலக்ஷ்மி said...
மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னா யாருக்குதான் பிடிக்காது? பார்க்கிறோம்ங்க.
//

டாங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :))

said...

//சென்ஷி said...
கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் அண்ணா...
//
தம்பி ஏமாத்த கூடாது சரியா?? :))

said...

// சென்ஷி said...
// ஆனா மிஸ் பண்ணாம கண்டிப்பாக பாருங்கள் உங்களின் குழந்தைகளோடு...!//

நான் மிஸ்டர்... குழந்தைங்களுக்கு இப்ப எங்க போறதுன்னு தெரியல..
பக்கத்துலயும் ஏதும் ஸ்கூல் இல்ல :((
//

கவலைப்படாதே சகோதரா!

உன் கவலை உங்கள் வீட்டுக்கு தெரிவிக்கப்படும்!

:)))))

said...

//NewBee said...
பாத்துருவோம்ம்ம்ம்ம்ம்ம்! :D .தகவலுக்கு நன்றி!:)
//

டாங்க்ஸு :)

said...

//பொன்வண்டு said...
அப்படியே எங்க டவுன்லோட் பண்ணலாம்னு சிரமப்படாம பார்த்து சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் :))))
//

டப்பு

தம்பி

டப்பு :)))

said...

//SanJai said...
என்னாது? 1.15 நிமிடம் படமா? :))))
//

அய்யோ!

அய்யா மன்னிக்கவும் 1மணி 15 நிமிடங்கள்னு இருந்திருக்கணும்

நன்றிகளுடன்....!