ஆதிவாசிகள்

நம் நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாதபடியான ஒரு மனித சமூகம் காடுகளில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

அதுவும் இந்த காலகட்டத்தில் எப்படியாகிலும் ஒன்று நம்மை போன்ற மனிதர்கள் கண்டிப்பாய் காடுகளில் தேடிதிரிந்து கண்டுபிடித்து கொண்டுவரமுயற்சிப்பார்கள்!

அல்லது ஆதிவாசிகளே தட்டுதடுமாறி நகரத்திற்கோ அல்லது நார்மல் மனிதர்களையோ கண்டிருக்கமுடியும் ஆனால் இதில் எதுவுமே நடைப்பெறவில்லை இதுவரையிலும்...!

சிவப்பு நிற வர்ணங்களில் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக ஆண்களாக இருக்கக்கூடும்!


கருப்பு நிறம் வர்ணம் அல்லது தங்கள் உடல் நிறத்தினை வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர் அனேகமாக பெண்களாக இருக்ககூடும்!

எப்பொழுதுமே கொடிய மழையின் பிடியில் சிக்கி தவிக்கும் பிரேசில் - பெரு எல்லைப்புற காடுகளில் காணப்படும் இந்த ஆதிவாசிகள்!

இது போன்ற சூழலினை நீங்க எதிர்பாராமல் காணும்போது உங்களுக்கு தோன்றும் அதே கேள்விகள்தான் அனைவருக்குமே தோன்றுகிறதாம்!

1.ஏன் இவர்கள் வர்ணங்களின் மூலம் வித்தியாசப்படுத்திக்கொள்கிறார்கள்?
2.என்ன சாப்பிடுவார்கள்?
3.எப்படி இவர்களால் இதுபோன்றதொரு குடிசை அமைப்பினை உருவாக்க முடிந்தது?
4.இவர்களின் மொழி என்ன?
5.சமூக அமைப்பு எப்படி இருக்கிறது?

இது போன்ற பலப்பல கேள்விகள்!

இந்த புகைப்படங்கள் விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாம்! விமானத்தினை அதிசயமாக பார்க்கும் சிலர் அதே சமயத்தில் ஏதோ ஆபத்து என்று, வில்லினை கொண்டு குறிபார்க்கும் ஆண்கள் என பிரமிப்பினை ஏற்படுத்தும் சமாச்சாரங்கள்தான் இவை!

ஆதிவாசிகள் வாழ்க்கை இப்படியே சென்றாலும் ஒன்றும் யாருக்கும் பிரச்சனையே இல்லையென்றாலும் கூட இவர்களின் பாதுகாப்புக்கு நம்மால் எந்தவொரு பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் இப்போதைய கவலை!

ஏற்கனவே பெரும்பாலும் அழகிய இயற்கை சார் இடங்களில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகளை மிரட்டி பணியவைத்து நிலங்களை சூறையாடிக்கொண்ட பிரபுக்கள் பரம்பரையினரை போன்று வேறு எவரும் வந்து இவர்களின் வாழ்க்கையினை சீரழித்துவிடக்கூடாது என்ற கருத்தினையே பல ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்!

இது போன்ற ஆதிவாசி மக்களின் வாழ்க்கையினை நாம் மதித்து அவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்களின் வாழ்க்கை பயணத்தை தொடரச்செய்யவேண்டும்! அவர்களுக்காய் எப்பொழுது எந்த மாதிரியான தொடர்புகளாக நம் நாகரீக வாழ்க்கை முறைக்கு மாற வருகிறார்களோ, அப்பொழுது வரட்டும் அது வரையிலும் ஆராய்ச்சி என்ற பெயரில் கூட,அவர்கள் வாழ்வில் அதிகம் குறுக்கிடவேண்டாம் என்பதே மனிதாபிமானமுள்ள ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது!

நாம் நம் நார்மல் வாழ்க்கையினை நாகரீகமாக வாழ்ந்து இயற்கையினை நாசப்படுத்திசெல்வோம்!

ஆதிவாசிகள் - அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!

எனது நினைவுகளில்.....
இதே போன்றதொரு சம்பவமாக டிசம்பர் 26 2004ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவில் கடும் பாதிப்புக்குள்ளான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்றிருந்த, அரசின் ராணுவ விமானம் ஒரு காட்டு பகுதியினை கடந்து வருகையில் இதே போன்றதொரு ஆதிவாசி உருவம் கையில் அம்புடம் துரத்தி வந்த காட்சியினை போட்டோவாக "ஹிந்து" நாளிதழின் கடைசிபக்கத்தில் வெளியிட்டிருந்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது! யாருக்காவது அது சம்பந்தமான சேதிகள் தெரிந்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

photo courtesy : survival - international
Daily mail

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்ல பதிவு! நன்றி!

said...

மிக நல்ல பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

said...

///நாம் நம் நார்மல் வாழ்க்கையினை நாகரீகமாக வாழ்ந்து இயற்கையினை நாசப்படுத்திசெல்வோம்!

ஆதிவாசிகள் - அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்!///


வழிமொழிகிறேன்.

said...

இந்த செய்திகளை[செய்திதாளில்] ஆங்கிலத்தில் படித்தபோது இல்லாத சுவாரஸியம் உங்கள் தமிழ் எழுத்து நடையில் இப்பதிவில் உணர முடிந்தது, நன்றாக எழுதியுள்ளீர்கள்,பாராட்டுக்கள்!!

said...

திவ்யா சொல்றதை மறுக்கா சொல்லிக்கறேன்ப்பா..

ஏன் ரெண்டு கலர்ன்னு ம் வீடு அழகா இருக்கேன்னும்
நானும் நியூஸ்ப்பேபர்பாத்ததும் நினைச்சேன்..