Showing posts with label நாள். Show all posts
Showing posts with label நாள். Show all posts

கவியரசரின் பிறந்த நாளில்..!

Photo  Sharing and Video Hosting at Photobucket


உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங்கள்; உடம்பை அலட்டிக் கொள்ளாதீர்கள். யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், அவர்கள் சொல்வதே சரியாக இருக்கக் கூடும் என்று சொல்லி விடுங்கள்.

உங்களை ‘முட்டாள்’ என்று திட்டினால், ‘எனக்குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கருதுங்கள். யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.

வருகிற துன்பங்களை எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள் ளுங்கள்.

புதுப் புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்துக்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடா தீர்கள். ‘நம்மால் ஆனது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை!’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.

- கவியரசு கண்ணதாசன்
கவியரசரின் பிறந்த நாளில் -
ஜூன் 24 1927

அன்புள்ள அப்பாவுக்கு..!

எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

55 வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை!

- யாத்ரீகன்



தொடர்புடைய பதிவு - அன்புள்ள அப்பாவுக்கு..!

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்







உலகின் மூலை முடுக்குகளில்,

வாழ்க்கையின், நம்பிக்கை கீற்றின்;

ஏதோ ஒரு நுனி பிடித்து வாழ்ந்துக்கொண்டிருக்கும்;

உணர்வால் அன்னையரான அனைவருக்கும்,

எம் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !

பணியிடத்தில்...




பணியிடத்தில் பாதுகாப்பினை உணருங்கள்;

மற்றவர்களிடத்தில் பாதுகாப்பு பற்றி உணர்த்துங்கள்!


ஏப்ரல் - 28 -பணியிட பாதுகாப்பு விழிப்புணர்வு நாள் [workplace safety day]

ஜி ஃபார் GIS


காலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா <போ>கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் !

லைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும்! அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்!

அப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு!

அப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு! அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது! பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு!

அதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு! ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும்! அது மாதிரிதான் ஜிஸ்!ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் !

இன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு!

GIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

GIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும்! புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு! புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.

GIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...!


GIS விக்கிபீடியா -
Guide to GIS

கண்ணதாசன் !

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்

கை கழுவியாச்சா...?


சாப்பிடப்போறதுக்கு முன்னாடி கை கழுவணுமா அட வேண்டாம் போப்பா..! என்ற மனத்தோடு இருந்த இளம் பிராயத்து நினைவுகள் இன்றும் எப்பொழுதாவது தலைதூக்குவதுண்டு. பரபரப்பான மனநிலையோ அல்லது பதட்டமான மனநிலையிலோ சாப்பிடும் சூழல் இருக்கும்போது இப்படித்தான் தோன்றும்! ஆமாம் என்ன கெட்டுப்போனதை தொட்டுட்டோம் போய் கை கழுவிட்டு வந்து சாப்பிடறதுக்க்...? அப்படின்னு மனசு சமாதானமாகிவிடும்.

முன்னாடி எல்லாம் சாப்பாட்டு தட்டை கழுவிட்டு வந்து சாப்பிடற வைபோகத்துல தட்டோட சேர்ந்து நம்ம கை அழுக்கும் போயிருச்சுன்னு மனசுக்குள்ள காம்ப்ரமைஸ் கோட்டை கட்டி வைச்சிருந்தேன் கை கழுவிட்டு சாப்பிடுங்க அப்படின்னு ரொம்ப தடவை சொன்னப்பிறகுதான் சரி நாமளும் கொஞ்சம் இந்த பழக்கத்தை ஃபாலோ பண்ணுவோம் அப்படின்னு சொல்லி கொஞ்சம் வருசமா நடைமுறைப்படுத்திக்கிட்டு வாரேன்!

நண்பர்களுடனான விருந்து வைபோகங்களில் கிண்டலாய் உபயோகிக்கும் வார்த்தைத்தான் அட என்னடா கை கழுவுறேன் கால் கழுவுறேன்னு எவண்டா கண்டுபுடிச்சான்னு சில பல சிரிப்பொலிகள் கிளம்ப காரணமாகியிருந்த கமெண்ட் மட்டுமே!

கை கழுவாம சாப்பிட்டா சகல நோய்களும் வந்து வாழ்ந்துட்டு போற அளவுக்கு உடம்பு படுவீக்காகிடுமாம்! மட்டும்மில்லாம உடலுக்கு ஒவ்வாத பொருட்களின் வெளியேற்றம் அதிகம் நடத்தும் வாந்தி பேதி போன்ற சம்பவமும் உண்டேய்!

இன்று 15 அக்டோபர் 2010 உலக முழுவதும் கை கழுவுவதால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், தீமைகள் தடுக்கப்படுவது பற்றியும் விழிப்புணர்வினை ஏற்படுத்த குறிப்பாக இளம் வயதினரிடம் இது போன்ற விசயங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் உலக நாடுகளுக்கான சுகாதார அமைப்பு பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டிருக்கிறது!

உங்களால் இயன்ற வரையில் உங்களுக்கு தெரிந்த அறிந்த சுற்றுவட்டார நட்புக்கள் உறவுகளிடமும் இந்த விசயத்தை சொல்லுங்க எல்லாம் ஒரு வெளம்பரம்தானே!


டெல்பின் டாக்டரம்மாவின் பார்வையில்...

வாங்க வாங்க.. கையை நனைச்சுட்டு போங்களேன்......

டீசண்ட் ஒர்க்!


படிச்சு முடிக்கிற இடத்துல மட்டுமில்ல அதுக்கு பிறகு வருகின்ற முக்கியமான கட்டங்களில் எல்லாம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்!


டீசண்ட் ஒரு வேலை கிடைச்சா போதும்?

டீசண்டான ஒர்க் பண்ற பையன் கிடைச்சா போதும்? இன்னும் பலவிதமான டீசண்ட் கோட்பாடுகள் இருக்கு !

இதுல மிக முக்கியமான பெரும் ஆதரவோட இருக்கிற விசயம் டீசண்ட் ஒர்க் - இதை எந்த ஸ்கேல் வைச்சு அளந்து சொல்லியிருக்காங்கன்னுல்லாம் தெரியாது! டீசண்டான வேலை என்பதே, நாம் எதிர்பார்க்கின்ற அதிகபட்ச தேவைகளாகவே இதுவரையிலும் இருந்துவருகின்றது -அதற்கேற்ற வகையில் நிறுவனங்களோ அல்லது அரசோ தலையாட்டுவதும் அரிது!

ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு விதமான ஸ்கேல் கொண்டு ஃபிக்ஸ் பண்ணிக்கிறதுதான் டீசண்ட் ஒர்க் ரூல்!

மாசா மாசம் சம்பளம் கரீக்டா வரணும்,வருசத்துக்கு போனஸ் கரீக்டா வரணும் லீவு நாள் ரொம்ப குறைச்சலா இருக்ககூடாது அதிகமா வேலை செய்ய சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது என்பது ஒரு விதமான ஸ்கேல்!

எந்தவிதமான தொல்லையும் இருக்ககூடாது நாம நம்மளுக்குன்னு கொடுத்த வேலையை செஞ்சுட்டு போய்க்கிட்டே இருக்கணும்ன்னு நினைக்கறது இன்னொரு டைப்!

இப்படி ஒவ்வொருத்தங்களுக்கு ஒவ்வொருவிதமான ஃபீலிங்க்ஸ் உண்டு - டீசண்ட் ஒர்க் அப்படிங்கற விசயத்தில ஆனா பொதுவாகவே நல்லதொரு தன்னார்வத்துடன் மகிழ்ச்சியாக செய்யப்படும் எந்த பணியுமே நல்ல பணிதான்!

உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் வேலை வாய்ப்பின்மை குறைக்கப்படும் இந்நேரத்தில் தனிமனிதனுக்கு தகுதிக்குரிய வேலை அடிப்படை வசதிகள் மற்றும் சமூகத்தில் எல்லாருக்கும் உரிய இணையான அந்தஸ்தினை பெறுகிறார்களா என்று கண்காணித்திடவும், குறைகளினை நிறைவேற்றிடும் முயற்சிகளினை மேற்கொள்ளவும்,வேலை வாய்ப்புக்களில் பெண்களின் உரிமையினை நிலைநாட்டவும், உலக நாடுகளில் இயங்கிவருகின்ற தொழிலாளர் சங்கங்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 07 - WORLD DECENT WORK DAY

சரி நாம பாக்குற பணி டீசண்டானதுதானா அப்படின்னு எதாச்சும் நெருடல் வருதா? வரக்கூடாது ஏன்னா மனிதர்களால் செய்யக்கூடிய எல்லா பணிகளுமே கண்ணியமானதுதான் டீசண்டானதுதான் - அதை நேசிக்கும்போது!

டீசண்ட் ஒர்க் அப்படின்னு நாம எந்த எல்லைக்கோடும் (செட்) பண்ணிக்கிடவேண்டாம்! பொதுவாக நாம செய்யகூடிய பணிகளில், கீழ்கண்ட விசயங்களில் ஈடுபாடு காட்டினாலே போதும் அந்த பணி கண்டிப்பாக மிகுந்த மனநிறைவினை தரும் பணியாகவே இருக்கும்!

-வரையறுத்துக்கொண்ட உரிமைகள் எந்த நெருக்கடியிலும் விட்டுக்கொடுக்காத தன்மை (நமக்கென இருக்கும் ரெஸ்பான்ஸபிலிட்டியை விட்டுக்கொடுக்காதிருத்தல்)

-கட்டளையிடாமலே தம் கட்டுக்குள் எந்த ஒரு பணியினையும் செய்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் (ஆர்டர் போட்டாத்தான் நான் என்னோட ஒர்க் செய்வேன்னு நினைக்காதிருத்தல்)

-தொடர்கின்ற அல்லது செய்துக்கொண்டிருக்கின்ற பணியினை தன்னார்வத்துடன், மேம்படுத்திக்கொள்ள முயலும் தன்மை (நம்ம பணியினை இன்னும் எப்படியெல்லாம் ஃபைன் ட்யூன் பண்ணி செய்யமுடியும் அப்படிங்கற ஆர்வம்)


டிஸ்கி:-அடைப்புக்குறிகளில் நம்ம தமிழ்ல எழுதியிருக்கேன் கஷ்டமா இருந்தா சொல்லுங்க !

கண்ணதாசன் நினைவு நாளில்....

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

ஐயோ! மரணபயம் வருகிறது!

நான் ஒரு நாள் மடிந்து போவேன்!

அதற்குள் நான் அனுபவிக்கவேண்டும்!

ஆனந்தத்தில் புரளவேண்டும்

போய்விடு!

சுரண்டி தின்னாதே!

சூழச்சி செய்யாதே

என் நண்பர்களே ஓடி வாருங்கள்!

ஓ..! என் உயிருக்குரிய நண்பர்களே

உண்ணுங்கள்

தேன் வேண்டுமா?

பால் வேண்டுமா?

கனி வேண்டுமா?

தெவிட்டாது உண்ணுங்கள்

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

காலம் ஒடிக்கொண்டிருக்கிறது

நாம் ஒரு நாள் மடிந்து போவோம்!

இடைக்காலத்தை வீணாக்காதீர்!

உண்போம்!

புதுமை செய்வோம்!

பெருமை கொள்வோம்!

மற்றவர்களினிடத்திலிருந்து உயர்ந்து நிற்போம்

விந்தை கருவிகள் வேண்டியன செய்வோம்!

நாம் அனுபவிப்போம்

வாரி வழங்குவோம்!

நன்றி :- கண்ணதாசன் - போய் வருகிறேன்


கண்ணதாசன் நினைவு நாளில்....

சில பாடல் வரிகளுடன்..!

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லைஆடி

>>>>>>>>>>>>>>>>>

எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்
அவளே என்றும் என் தெய்வம்

>>>>>>>>>>>>>>>>>

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

>>>>>>>>>>>>>>>>>

பேசச் சொன்னது அன்பு நிலா
பிரியச் சொன்னது துன்ப நிலா
தூங்க சொன்னது காதல் நிலா
துடிக்க விட்டது கால நிலா..

>>>>>>>>>>>>>>>>>

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

>>>>>>>>>>>>>>>>>

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறுநாளை எண்ணாதே இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு
உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

>>>>>>>>>>>>>>>>>

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!

விடியும் பூமி அமைதிக்காக விடியவே...!

வெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் பூமி அமைதிக்காக விடியவே
மண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கதகதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

காற்றின் பேரிசையும் - மழை
பாடும் பாடல்களும்
ஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனமும் - கவி
கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ (வெள்ளைப்பூக்கள்)

எங்கு சிறு குழந்தை - தன்
கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் - போர்
ஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு
கூவாயோ வெள்ளை குயிலே






செப்டம்பர் - 21 - உலக சமாதான நாள்!

செப்டம்பர் 16 - ஓசோன்! ?

பலூன் போன்ற உலகம்

அதில் பாதுகாப்பாய் நாம்

உழன்றுகொண்டும் உருண்டுகொண்டும்!

இன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,

இயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை

பஞ்சராக்கிக்கொண்டும்...!

சுழன்று கொண்டிருக்கிறோம்!






செப்டம்பர் - 16 - உலக ஓசோன் தினம்!

நம்ம கவர்ன்மெண்ட் இன்னா சொல்லுதுன்னா, ரகசிய மொழியில சொல்லியிருக்காங்க நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

தந்தையர் தினம்!

இன்று தந்தையர் தினம்!

நாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட..! நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்! அப்படி ஒரு பதிவிலிருந்து..
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



அன்புள்ள அப்பாவுக்கு,

இப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல

நேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.

உங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.

உங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.

அம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.

வருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு ? இதை சரியா பயன் படுத்துறது தானே இந்த வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை

பழங்குடி மக்கள் - விழிப்புணர்வு நாள் - ஆகஸ்ட்டு 9

இயற்கை வாழ்க்கையின் மீது இஷ்டப்பட்டு வாழ நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரிவு!

சலுகைகள் முழுதும் கிடைக்கப்பெறாமல் அது பற்றிய கவலைகள் ஏதுமின்றி அவர்களும் சரி, அரசும் சரி, தன் தினசரி கடமைகளினை நிறைவேற்றிக்கொண்டு செல்கின்றனர்!

இந்தியாவில் பழங்குடி மக்கள் எஸ்.டி ஆக்கப்பட்டவர்கள்! ஆனால் இவர்களின் வாழ்க்கை இன்னும் எம்டியாகவே இருக்கிறது!

நம் தமிழகத்தில் உள்ள பழங்குடி மக்களில் சிலரை பற்றி கொஞ்சம் விசயம் தெரிந்துக்கொளவோம்!

முண்டா! - இவர்கள் காடுகளினை சார்ந்திருந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்துவந்தவர்களாம் மிக எளிதில் இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களால் இப்போது இவர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கும் நிலைதான்! வில்லும் அம்புடனும் திரிந்த இவர்கள் அதை பெரும்பாலும் தங்களை தாக்கவரும் மனிதர்களினை திருப்பி தாக்கவே பயன்படுத்தி வந்திருக்கிறாங்களாம்! - அவுங்களுக்கு தெரிஞ்சிருக்கும்போல காட்டுல இருக்கற ஆளுங்கள விட நாட்டுல இருக்கற ஆளுங்க ரொம்ப விஷம்ன்னு !

கோயா! - இவர்கள் காடுகளில் விளையும் பழவகைகளினை முதலீட்டாக்கி அதை கொண்டு ஜீவனம் நடத்தியவர்கள்!

காணிக்காரர்கள் - மலையாள தமிழ்நாடு காடுகளில் இவர்கள் வாழ்ந்த கதையினை இவர்கள் பேசும் இரு மொழி கலந்த பேச்சு உங்களுக்கு உணர்த்தும்!

காடர் :- டாப் ஸ்லிப்ல் இவர்கள் வாழந்து வருகிறார்கள்! ஒட்டுமொத்தமாக தேசிய வனவிலங்கு பூங்காவாக மாற்றம் செய்ய வேண்டி டாப்ஸ்லிப்பில் வசிக்கும் இவர்களினை வெளியேற்ற கடும் பிரயத்தனம் செய்கிறது அரசு!

சோளகர் :- இவர்கள் பேச்சு மொழி கன்னடம் தமிழ் இவர்களை கிழங்கு வகை விவசாயம் இவர்களின் தொழிலாக ஒரு காலததில் இருந்து வந்தது!

இருளர் :- பாம்புகள் எலிகளை பிடிப்பதினை தொழிலாக சில சமயம் மேற்கொண்டவர்கள் தற்பொழுது விவசாய கூலிகளாக வேலை செய்து வருகின்றனர்!

இவர்களை போன்றே லம்பாடிகள் குறிச்சான்கள் என மேலும் நிறைய பிரிவினர் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கெல்லாம் பொதுவான ஒரு விசயம்!



தம் வாழ்ந்த இடத்தினை,நிலத்தினை விட்டு தொழிலினை விட்டு பிறிதொரு இடத்துக்கு சென்றதாலும், இன்றும் பெரும்பாலோனோர் ஏழைகளாக அரசின் உதவிக்கு கை ஏந்தியபடியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்!

அவர்களின் காத்திருப்புக்கு கட்டாயம் நன்மை வந்து சேரட்டும்! அதுவே இது போன்ற பழங்குடியினருக்காக, உலகம் முழுவதிலும் விழிப்புணர்வு வேண்டி கடைப்பிடிக்கப்படும் இன்றைய நாளின் வெற்றியாக இருக்கும்!

******************************************************************************
சம்பந்தா சம்பந்தமில்லாதது!

தமிழக அமைச்சரவையில் இடம் வேண்டும் - தங்கபாலு தலைவர், காங்கிரஸ் தமிழ்நாடு

>>>

தமிழகத்தின் நலனுக்காக எத்தனை அவமானங்களையும் சந்திக்க தயார் - தமிழக முதல்வர், தமிழ்நாடு

கீதம் பாடுவோம் - கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளில்...





அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே,
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே!
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே!
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே...!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே!
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே!
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே!
போகும்போது வேறுபாதை போவதில்லையே!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை!
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை!
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை!
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

கவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...!



உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

*********************

நன்றிகளுடன் நினைவில் வைத்து வணங்குகிறோம் கவியரசு கண்ணதாசனை !

வாழ்க நின் புகழ்!

அழிக்கப்படவேண்டிய வார்த்தை - அகதி!



மனிதாபிமானம் மரித்த மண்ணில்
மறுக்கப்பட்ட வழ்வை தொலைத்து
தொட்டழைந்த மண்ணையும் விட்டு
உடன் இருந்த உறவுகளையும் தொலைத்து
முளையோடு பிடுங்கி எறியப்பட்ட "விதையாய்"
ஊன்ற நிலம் கேட்டு வந்திருக்கும்
தமிழ் பொடியனின் தவிப்பு இது!

தலை நிமிர்ந்து வாழ்ந்த "தாய்மண்ணை"
உயிர் காக்கும் "உறங்காத விழிகளை"
தலை சாய்ந்துறங்கும் "தாய்மடியை"
என் உயிராய் நேசித்த "நண்பர்களை"
இவற்றையெல்லாம் தொலைத்து விட்டு "வலியோடு"
வந்திருக்கிறேனே!-நான்
வாழ்வதற்கா? இல்லை வாழ வைப்பதற்கா???

ஆழக்கடல் கடந்து "அவுஸ்திரேலியா"
வந்தவனை "அகதி" எண்டு அடையாளம் இட
"ஆயிரம்" கேள்விகள்!
அழகான பூந்தோட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்பட்ட சின்னஞ்சிறு செடி நான்
என் வேர்களில் இப்போதும் ஒட்டி இருப்பது-என்
தாய்மண்ணின் "புழுதி மண்" வாசம்தான்!
இங்கே நிரந்தரமாய் வேரூண்டி விழுதுகள் விட
ஆசையில்லை எனக்கு!

ஆணிவேரும் அடிக்கட்டைகளும் அங்கே இருக்க-இங்கே
ஆழ வேரூண்ட எவனுக்கும் ஆசை இல்லை.

என் ஒவ்வொரு கிளைகளும் கொடுக்கின்ற "நிழலில்"
இளைப்பாற வேண்டும் என் இனம்! என் சனம்!

தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு
தங்கத்தட்டில் தரமான உணவாம்!

என்ன கொடுத்தாலும் என் தாய் கொடுக்கும்
"புட்டுக்கும்" "நண்டுக்கறிக்கும்" ஈடாகுமா?

ஓலைப்பாயில் ஒழுகும் மழைத்துளியில்
நனைந்து உறங்கியவனுக்கு-இங்கே
ஓசியாய் கிடைக்கிறது "ஏசி"

என்ன வேண்டும்?எண்டு கேட்டபின் கொடுக்கும் இவர்களுக்கு தெரியாது
கொடுத்தபின், இன்னும் வேண்டுமா? எண்டு கேட்கும் "இனம்" நான் எண்டு.


வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் எல்லாம்-அங்கே
வீடு கட்டி வாழ்வதில்லை!

காலநிலை மாற்றம் அவற்றை கடல் கடக்க வைக்கிறது.
இப்போது எங்கள் மண்ணில் இலையுதிர்காலம்-நாளை
வசந்தகாலம் வரும்போது மீண்டும் வானமேறுவோம்
எங்கள் மண்ணில் நிரந்தரமான "வாழ்வை" தேடி!

விரக்தியின் விளிம்பிலும்! வேதனையின் வேக்காட்டிலும்!
விம்முகின்ற உணர்வுகளை
"கவிதை" எனும் கட்டுக்குள் அடங்காமல்,
விழி வழி வழியும் நீர்துளிகளைப்போல
வலியின் உச்சத்தில் வரும் என் வாய் "பிதற்றல்"
என் விரல் கிறுக்கும் கிறுக்கல் இது!

வாழ்ந்த மண்னை விட்டு
"வாழ்க்கை" தேடி வாழ வந்த மண்ணை
"பழிக்கும்" பாவம் செய்யும் பாவி நான் இல்லை!
"அடைக்கலம்" தந்த வீடுகளை "ஆலயங்களாய்"
நினைக்கும் ஆயிரம் தமிழர்களில் நானுமொருவன்!

ஐயா...!
"தமிழன்" என்ற செருக்கோடு தலை நிமிர்ந்து
வாழ்ந்த நாங்கள்....
"அகதி" என்ற அவமானத்தோடு அவலப்படுகிறோமே.!
அந்த "ஆதங்கம்" தான் எனக்கு!

"சிற்றிசன்" தந்தாலும் "சிம்மசனம்" எமக்கெல்லாம்
எங்கள் தாயகத்தில் தான்.

அன்னை மண்ணில் ஆறடிக்குள் புதைந்து "துயிலும்"
அற்புதம் நம்மில் எத்தனைபேருக்கு கிடைக்கும்?

"ஆயிரம்" சொன்னாலும் "அகதி" என்ற பேரோடுதான் - இங்கே
"அடக்கம்" செய்யப்படும் அவலம்!

சொந்த மண்ணிலும் "அகதி"
வந்த மண்ணிலும் "அகதி"
ஐயா...!
அழுதாலும் விளங்காது..!
எழுதினாலும் புரியாது...!
"அகதி" எனும் சொல்லின் அவமானத்தின் "அசிங்கம்"
வாழ்ந்து பாருங்கள் "வலி" தெரியும்...!



இன்று ஜூன் 20 - அன்னை மண்ணிலிருந்து வெளியேறி அடைக்கலமான மக்களினை பற்றிய செய்திகளை உலக்குக்கு சொல்லும் நாள்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசத்திலிருந்தும் தம் உறவுகளை உடைமைகளை விட்டு பிரிந்து, மற்றைய நாடுகளில் வாழ்ந்துவரும் எண்ணற்ற மக்களின் உணர்வுகளில் இருக்கும் தாய்மண்ணின் கனவுகள் நிறைவேற நாமும் பிரார்த்திப்போம்!

கவிதை ஆக்கம் :- தமிழ்பொடியன் @ தமிழ் சிட்னி

பரிந்துரை செய்த கானா பிரபாண்ணாவுக்கு நன்றி!

குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

ஜூன் 12 - இன்று குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள்

இளமை காலங்களின் ருசியைக் கொஞ்சங் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது ஒரு குறிப்பிட்ட சதவிகித சிறுவர் இளையோர் பட்டாளம்!

அவர்களை மீட்க முயற்சிக்கும் விதமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டுவரும் வகையில் இன்று ஜூன் 12 - குழநதை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

நம் கண் எதிர்லேயே எத்தனையோ சிறுவர் சிறுமியர் வேலை செய்துவருவதை நம்மால் காண
முடிந்தாலும் கண்டும் காணாமலே இருந்துவிடுகிறோம்!

இனியும் இது போன்று இருக்காமல் நம்மால் ஆன முயற்சிகளாக இது போன்ற குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்திருக்கும் கடைகளை, நிறுவனங்களை, கம்பெனிகளை, பற்றி அரசு தொழிலாளார் துறைக்கோ அல்லது உள்ளூரில் உள்ள தன்னார்வ சேவை அமைப்புக்களுக்கோ தகவல் கொடுத்தும் கூட உதவலாம்!

இது எதற்கு தேவையில்லாத வேலை என்று நினைப்பவர்களுக்கும் கூட ஒரு யோசனை! பார்க்கும் குழந்தை போன்று உங்களின் குழந்தையும் ஆனால் என்னவாகும் என்று ஒரு முறை யோசித்து செல்லுங்கள் உங்கள் வழிப்பார்த்து....!


அரசின் முயற்சிகளில் கல்வி முறையில் சீர்திருத்தம்!கல்வி இலவசமாக கிடைக்கப்பெறுதல், போன்றவற்றில் அரசின் ஈடுபாடு தீவிரமடைவதன் மூலமே இந்த சோகங்களிலிருந்து குழந்தைகளை சிறுவர்களை காப்பாற்ற முடியும்! பார்ப்போம் செய்வார்களா என்று எதிர்பார்ப்போம்!




என்னுடனே சில வகுப்புக்காலங்கள் படித்து, பல்வேறு சூழ்நிலைகளுக்கு இலக்காகி பள்ளி படிப்பினை பாதியில் விட்டுச்சென்ற,முகம் மறந்த நண்பர்களை இன்று உணர்வுகளால் கொஞ்சம் நினைத்துப்பார்க்கிறேன்!

ஸ்டாப் தம்!

மே 31 சனிக்கிழமை உலக முழுவதும், சிகரெட் குடிக்காதீங்கப்பா, அதுவும் வாழ்வின் ஆரம்பகட்டத்தில் இருக்கும் வாலிப பசங்களே நீங்க இந்த மோசமான பழக்கத்துக்கு அடிமையாகிடாதீங்கன்னு வற்புறுத்தும் விதமாக புகை பிடிக்ககூடாதுங்கறத ஞாபகத்துல வைச்சிக்கணும்ங்கற மாதிரி இன்றைய நாள் கடைப்பிடிக்கப்படுகிறது!

சிகரெட் சில மணித்துளிகள் குடிப்பதால் உண்டாகும் பலனை விட, அதை விட்ட அடுத்தடுத்த நிமிடங்களில் நடக்கும் மாற்றங்களை பற்றியும் ஆராய்ந்து கூறியிருக்கிறார்கள்!

சிகரெட் பிடிப்பதை விட்ட 20 நிமிட நேரத்திற்குள்

ரத்த அழுத்தம் சீராகும்.
நாடித்துடிப்பு சாதரணமாகும்.
கை மற்றும் பாதங்களில் உடல் வெப்பம் சீராகும்.

எட்டு மணி நேரத்திற்குப்பிறகு,

ஏற்கனவே ரத்ததில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்சைடு நிக்கோடின் குறைய தொடங்கி பழைய நிலைமைக்கு திரும்ப ஆரம்பிக்கிறது!
ரத்ததில் ஆக்ஜிஜனின் உயர்ந்து சாதரண நிலைக்கு வருகிறது!

24 மணி நேரத்திற்கு பிறகு,

ஹார்ட் அட்டாக் ரிஸ்கிலிருந்து மெல்ல விடுபட ஆரம்பிக்கிறீர்கள்.
நுரையிரலீல் படர்ந்திருந்த விஷப்பொருட்கள் மெல்ல காலியாகின்றன!

48 மணி நேரத்திற்கு பிறகு,

உண்ர்வு நரம்புகள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வாசனை மற்றும் சுவையுணர்வினை உணர முடியும்!

72 மணி நேரத்திற்கு பிறகு,

மூச்சு விடுதல் மிகச்சுலபமானதாக தோன்றும்
உடல் சக்தி வலுப்படும்.

2- 12 வாரங்களில்
ரத்தம் ஓட்டம் சும்மா அந்த மாதிரி இருக்கும் எப்பவுமே ஃப்ரஷா இருக்கறாப்ல ஃபீல் பண்ணுவீங்க!

இப்படியே நிறைய நல்ல விஷயங்கள் இருக்குங்க இதெல்லாம் ரொம்ப சிகரெட் குடிக்கிறவங்களுக்கு விட்டுடலாம்னு மனசு ஓரத்துல கொஞ்சமா எண்ணத்தை விதைக்கிற முயற்சிதான்!

இது நம்ம ஊரு நியூஸ்!

வரும் 2010ஆண்டிற்க்குள் சென்னை டெல்லி,மும்பை அகமதாபாத் ஆகிய நான்கு நகரங்களிலும் புகைப்பிடித்தலை தடைச்செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்போகிறதாம்! காமன் வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிப்பதற்குள் இந்த நடவடிக்கைகள் முழுமைப்பெற்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

அமைதியாக சொல்லி புரியவைப்பது,
அதட்டிச்சொல்லி புரியவைப்பது,
அதிகாரமாக சொல்லி புரியவைப்பது,
என வித விதமான வடிவங்களில் என்னதான் மெசேஜ் சொன்னாலும்,
மக்களே நம்ம வாழ்க்கை நம்ம கையிலதான்!
அவ்ளோதான் சொல்லலாம்!

( பய புள்ள என்னாமா ஃபீல் பண்ண வைச்சிருச்சுன்னு டென்ஷன்ல இப்ப போய் சிகரெட் பத்தவைக்கவேணாம்! அட்லீஸ்ட் இன்னிக்கு மட்டுமாவது சிகரெட் குடிக்காம இருங்களேன்ஃப்ளீஸ்!)

அலுக்கவைக்காத ஆமைக்கதை - ரீப்பிட்டேய்!

முன்னொரு காலத்தில் "வேகம் மிக்கவர் யார்?" என்று ஆமையும் முயலும் விவாதித்துக்கொண்டன. ஒரு பந்தயத்தின் மூலம் அந்த விவாதத்திற்கு முடிவு கட்டத் தீர்மானித்தன. பந்தயத்தில் வேகமாக ஓடத் தொடங்கிய முயல்.... ஆமை நெடுந் தொலைவு பின் தங்கியிருப்பதைப் பார்த்து.... மரத்தடியில் சிறிது அமர்ந்து ஓய்வெடுத்து பின் ஓடத் தீர்மானித்தது. ஆனால் விரைவிலேயே உறங்கிப்போனது. தவழ்ந்து நடந்த ஆமையோ எந்தத் தொந்தரவுமில்லாமல் - தூங்கும் முயலைக் கடந்து சென்று பந்தயத்தை முடித்துக்கொண்டது. விழித்தெழுந்த முயல், தான் பந்தயத்தில் தோற்றுப் போனதை உணர்ந்து வருந்தியது.

கதை கூறும் கருத்து :- பொறுமையும், ஈடுபாடும் பந்தயத்தில் வெல்ல அவசியம் தேவை. மேலே சொன்னதுதான் நாம் கேட்டு வளர்ந்த கதை.

ஆனால் சமீபத்தில் நண்பர் ஒருவர் சொன்ன சுவாரசியமான கதை இப்படிப் போகிறது.... பந்தயத்தில் தோற்ற முயல் மிகுந்த ஏமாற்றத்துடன் தோற்ற காரணத்தைத் தேடத் தொடங்கியது. அளவுக் கதிகமான நம்பிக்கையும், கவனக் குறைவுமே தோல்விக்கான காரணம் என்பதை உணர்ந்து கொண்டது. தனக்கு வரமாகக் கிடைத்த "வேகத்தைப்" பயன் படுத்தி ஓடியிருந்தால்... ஆமை ஒரு போதும் வென்றிருக்காது என அறிந்தது.இப்படி நினைத்த முயல், இன்னொரு பந்தயத்திற்குச் சவால் விட்டது. ஆமையும் ஒப்புக் கொண்டது. இம்முறை முயல் நிற்காமல் வேகமாக ஓடிப் பல மைல்கள் வித்தியாசத்தில் ஆமையை வென்றது.

கதை கூறும் கருத்து:- வேகமும் உறுதியும் உடையவர்களிடம் பொறுமையும், ஈடுபாடும் உள்ளவர்கள் தோற்றுவிடுகிறார்கள். கதை இங்கே முடிந்துவிடவில்லை.

இப்போது ஆமை யோசித்தது. தற்போதுள்ள நிலையில் பந்தயத்தில் முயலை வெல்வது என்பது சாத்தியமல்ல. அதனால் சற்றே மாறுதலான ஒரு வழியைச் சிந்தித்து முயலைப் பந்தயத்திற்கு அழைத்து. முயலும் ஒப்புக்கொண்டது.ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி முயல் வேகமாயும், உறுதியாயும் ஓட ஆரம்பித்தது. ஆனால்.... ஓர் அகலமான ஆற்றை அடைந்தபோது நின்றுவிட்டது. பந்தய முடிவுக் கோடு ஆற்றின் அக்கரையில் இரண்டு கி.மீ. தொலைவில் இருந்தது. அதனால் என்ன செய்வதென்றறியாது வியப்புடன் முயல் அப்படியே உட்கார்ந்துவிட்டது. அதே சமயம் ஆமை மெதுவாகத் தவழ்ந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி எதிர்க்கரையை நீந்திக் கடந்து தொடர்ந்து நடந்து பந்தயத்தை முடித்துக் கொண்டது

கதை கூறும் கருத்து :- முதலில் உனது போட்டித்திறனின் தகுதி மையத்தைப் புரிந்துகொள். அதற்கேற்ப ஆடுகளத்தை மாற்றிக் கொள்.

இன்னமும்கூட இந்தக் கதை முடிவடையவில்லை. இக்காலக் கட்டத்தில் முயலும் ஆமையும் நல்ல நண்பர்களாகிவிட்டதால் ஒற்றுமையுடன் சிந்தித்துப் பார்த்தன. கடைசிப் பந்தயத்தை இன்னமும் சிறப்பாகச் செய்திருக்க முடியும் என்று உணர்ந்துகொண்டன. அதனால் கடைசிப் பந்தயத்தை மீண்டும் நடத்தத் தீர்மானித்தன. இம்முறை இணைந்து ஓடத் துணிந்தன. பந்தயத்திற்குத் தயாராயின. இம்முறை முயலானது ஆற்றின் கரை வரை ஆமையைத் தன் முதுகில் சுமந்து கொண்டோடியது. ஆற்றை அடைந்ததும் ஆமை முயலைத் தன் முதுகில் சுமந்து ஆற்றை நீந்திக் கடந்தது. கரையில் மீண்டும் முயல், ஆமையைக் சுமந்து ஓடியது. இறுதியில் இரண்டும் ஒன்றாகவே பந்தயக் கோட்டைத் தொட்டன.

முன் எப்போதும் உணர்ந்திராத தன்னிறைவை இரண்டும் அதிகமாகவே உணர்ந்துகொண்டன. கதை கூறும் கருத்து:- பலமான போட்டித் தகுதிகளுடன் தனிப்பட்ட முறையில் புத்திசாலியாக இருப்பது நல்லதே. ஆனால் பிறரது தகுதியை மதித்து இணைந்து செயலாற்ற முடியாத பட்சத்தில் நமது திறமை வரையறுக்கப்பட்ட எல்லைக்குக் கீழாகவே இருக்கும். ஏனெனில் சில சூழலில் பிறர் நம்மை விடச் சிறப்பாகச் செயலாற்ற முடியும்.கூட்டு முயற்சியில் சூழல் சார்ந்தே தலைமை உருவாகிறது.

குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட் மனிதரைத் தலைமை ஏற்கும்படி விட்டுவிடுதல் நல்லது.
இந்தக் கதையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு.

தோல்விக்குப் பிறகு முயலோ, ஆமையோ துவண்டு போய் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பிறகு, முயல் கவனத்துடன் முயன்று, கடுûமாய் உழைக்கத் தீர்மானித்தது.

ஆமை தனது போராடும் வியூகத்தை மாற்றிக்கொண்டது. ஏனெனில் அது ஏற்கெனவே இயன்றவரை கடினமாகவே உழைத்திருக்கிறது.

வாழ்வில் நாம் தோல்விகளைச் சந்திக்கும்போது, சில நேரங்களில் முயன்று கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் போட்டி வழிகளை மாற்றிக்கொண்டு மாறுபட்ட வழிகளைத் தேட வேண்டியுள்ளது. சில நேரங்களில் உழைப்பு வழிகள் இரண்டையும் மாற்றிப்பார்க்க வேண்டிய தாயுள்ளது.

முயலும், ஆமையும் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம்:

எதிரியுடன் போட்டியிடுவதை விட்டுவிட்டு சூழலுக்கு எதிராகப் போட்டியிடும்போது... மிக மிகச் சிறப்பாக செயலாற்ற முடிகிறது.

நன்றி - சிஃபி அமுதசுரபி




நேற்று 23.05.08 ஆமைகள் பாதுகாப்பு தினம் - உலகம் முழுவதும் இயற்கை மாற்றங்களினாலும்,மனிதர்களின் பழக்கங்களிலும் பாதிக்கப்பட்டு அழிந்து வரும் ஆமைகளின் வாழ்வினை அவைகளின் பாதுகாப்பினை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகிறது.


குறிப்பு:- ஆமை வேகத்தில் வந்தாதால் கொஞ்சம் லேட்டு :-)

இன்னிக்கு சனிக்கிழமை :-)


ஒவ்வொரு வருடமும் உலகம் முழுதும் உழைப்பாளர்கள் கொண்டாடி குதூகலிக்கும் மே மாதத்தில், வரும் இரண்டாவது சனிக்கிழமை நேர்மையான வணிகத்தினை வலியுறுத்தும் பொருட்டு கொண்டாப்படும் நாளாக மாறுகிறது!

இன்று ஒரு முக்கியமான நாள் அவ்வளவாக விளம்பரப்படுத்தபடாத,பொதுமக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத நேர்மையான வணிகம் செய்ய உலகம் முழுவதும் வணிகர்களை பொதுமக்களை விழிப்புணர்வு பெறச்செய்யும் நாள்!

உள்ளூர் பொருட்களையே உபயோகியுங்கள் சுற்றுசூழலுக்கும் உபத்திரவம் செய்யாமல் வாழப்பழகிக்கொள்ளுங்கள் என்பதுதான் இந்த வருடத்திய விழிப்புண்ர்வினை ஏற்படுத்தும் அடிப்படை அம்சம்!

உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு உரிய விலை கொடுத்து பெற்றுக்கொண்டு, உற்பத்தியாளர்களும் நுகர்வோர்களும் நலம் பெற்றால் நாடும் நலமோடு வளமாக வறுமையினை தவிர்த்துவிட செய்யும் வழிமுறைகளை எளிதில் அணுகிட முடியும்!

சரி இந்த நாளில் நாம் என்ன செய்ய முடியும் என்று வினா எழுப்புபவர்கள் முடிந்தால் உழவர் சந்தைக்கு போய் வாங்க! நான் அறிந்த வரையில் ஓரளவுக்கு நேர்மையான வணிகம் நடைப்பெறும் ஸ்தலம் நம் தமிழ்நாட்டில் உழவர்சந்தைகளதான்!

விளைவிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக விவசாயிகளே நுகர்வோர்க்கு நேர்மையான விலையுடன் கொடுத்து லாபம் பெற்று கொள்ளும் உழவர் சந்தைகளுக்கு இது வரைக்கும் நீங்கள் செல்லவில்லையென்றால், இன்று மட்டுமாவது சென்று வாருங்களேன்!