கா.பி வித் ஆயில்யன்!

அண்ணன் கானா பிரபாவிடமிருந்து தொடுக்கப்பட்ட நான்கு கேள்விகள் அதற்கு என்னாலான நான்கு பதில்களோடு - (விவரமா சொல்லறதுக்கு நாம ஸ்ட்ரெய்ட்டா விஷயத்திற்கு போய்டலாமே...!??)

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கண்டிப்பாக உங்களின் கணிப்பு சரிதான்! நானே கூட சில சமயங்களில் எங்கள் பேச்சு வழக்கு பதிவு போடவேண்டும் என்று தோன்றி உடனேயே அதற்கான ஆர்வமின்மை சூழ்ந்துக்கொண்டு அதை பற்றிய எண்ணங்களை தவிர்க்க செய்துவிடுகிறது!

ஈழத்து மொழி ஆரம்பத்தில் எனக்கு தாவூ தந்த மொழிதான் - இணையத்தில் அல்ல இங்கு வந்ததும் பழக ஆரம்பித்த ஈழத்து நண்பர்களின் பேச்சு வழக்குகளால், அதுவும் ஒருவர் யாழ் மொழி மற்றொருவர் மட்டகளப்பு மொழி பேசி இவர்கள் இருவரிடமும் நான் பேசியது ஆங்கிலம் mixed தமிழ்!(ஆக்சுவலி எனக்கு நீங்க பேசுற லாங்குவேஜ் கரெக்டா விளங்கலை!) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இருவரிடமே ஒருவர் பேசுவதை மற்றொருவர் சொல்ல கேட்டு கேட்டு கொஞ்சம் பழகிக்கொண்டுவிட்டேன்!

அதுவும் சில சொற்கள் நாங்கள் அதிகம் பயன்படுத்திய ஆனால் வேறு அர்த்தங்களினை தரும் சொற்கள் என்னை முதலில் தயக்கமுற செய்தாலும் கூட பின்னாளில் ஏற்றுக்கொள்ளமுடிந்தது! (வெளிக்கிடறேன்! ச்சீய்! & கதைக்கிறீங்கோ! வெட்டிக்கதை வேணாம்!)

பதிவுகளில் வாசிக்கும்போது கொஞ்சம் கடினமாக இருக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் வாசித்து செல்லவேண்டிய தேவையே அன்றி மற்றபடி அதிகம் சிரமப்படுத்தவில்லை! - இன்னும் பெருமளவு பிரதேச மொழிகளில் பதிவுகளினை வரவேற்கிறேன்! - இன்றைய பதிவு நாளைய வரலாற்றின் பக்கங்களும் கூடத்தானே..!

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

முற்போக்காக என்று சொல்வதில் எனக்கு அந்தளவுக்கு பெரிய விஷயங்கள் ஒன்றும் மனதில் தோன்றவில்லை! (இருக்கு ஆனால் எல்லாம் ”மல்லு”கட்டிக்கிட்டு வெளியே வர மாட்டிக்கிது!)

வேணும்னா இதை முற்போக்குன்னு வைச்சுக்கலாம் - தமிழ்நாட்டில இருக்கற அத்தனை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தமிழ் முதன்மை மொழியாக செயல்படுத்தப்படவேண்டும் - (ஆனா இதெல்லாமா முற்போக்கா செய்யணும்னு யாரும் ஃபீல் பண்ணாதீங்க!) அப்புறம் இன்னொரு விஷயமாக பொது வழிப்பாட்டு அறை ஒன்று நிர்மாணித்து, பணிக்கு வரும் ஒவ்வொருவரும் சாமி கும்பிட்டபின் தான் சாட்டிங் ஆரம்பிக்கவேண்டும் என்றும் ஒரு ஆர்டர் போட்டுடுவேன்! ( ஆமாங்க காலங்கார்த்தால வந்து ”நாளை அழியப்போகும் உலகில் நாம் எதற்கு நம்பிக்கை ? யாரிடம் வைக்கவேண்டும்? என்றெல்லாம் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்கிறாங்களே!)

வாய்ப்புக்கள் சாதகமாக அமைந்தால் சாதாரண வாழ்க்கையை விட, நல்லதொரு பணியாக தன்னார்வ சேவைகளில் பெயர் வெளிப்படுத்தாமல், வேண்டிய பணிகளினை செய்யவேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கிறது!

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

பஞ்சாயத்து தலைவர் போஸ்டிங்குக்குத்தான் எனது முதல் விருப்பம்!

காரணம் ரொம்ப சிம்பிள்:- மொழிப்பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு எல்லோரையும் சங்கடப்படுத்திக்கொண்டு ஐ.நாவில் நாயாக திரிவதை விட இங்கு லோக்கலில் நாய் மாதிரி மக்களுக்கு எதாவது செஞ்சுக்கிட்டு நாயகன் மாதிரி சீக்கிரத்திலேயே இமேஜ் பில்ட்- அப் செய்துக்கொள்ளமுடியும் அப்படின்னு நான் தீர்க்கமாக நம்புவதால்....! அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! (மக்கா அதுக்குன்னு டேஷ் ஆகிடணும்ன்னு நினைக்காதீங்க! எனக்கு சொல்றதுக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்கு அதான் கோடு போட்டு விட்டிருக்கேனாக்கும் நீங்களே அந்த கோட்டினையும் என்னோட ஆசையையும் பூர்த்தி செஞ்சுடுங்க!

ஒ.கே!

அடுத்து ஆப்பு வைக்கற மாதிரியான கேள்வி!5.
கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))

ஒளியில் மிளிரும் அனைத்தும் அழகானவைதான்
ஒலியில் ஒலிரும் அனைத்தும் அற்புதமானவைதான்!

ஒளியின்றி ஒலிக்கலாம் !
ஒலியின்றி ஒளிக்கலாம் !

முன்னதை விட பின்னது பார்க்க வெறுமையாய் இருக்கலாம்!
பின்னதை விட முன்னது கேட்க பெருமையாய் இருக்கலாம்!

முன்னதையும் பின்னதையும் பற்றி , (கண்ணால்) கண்டதையும் கேள்வியாக கேட்டால் நான் எண்ணத்தை எப்படி சொல்லமுடியும்!? பின் ஜொள்ளமுடியும்!?

ஆனாலும் கூட எனக்கு கிட்டதட்ட பல ஆண்டுகளாய் பிடித்தது ஒலியும் ஒளியும் தான்! (1984ல்லேர்ந்து வெள்ளிகிழமை தவறாம பாத்துருக்கேன்ல!)

(மீ த எஸ்கேப்பூ! - ஷ்ஷ்ஷ் அப்பாடா! இன்னும் எவ்ளோவோ இருக்கு அதுக்குள்ள கேள்விங்கற பேருல ஆப்புவைத்த அண்ணனுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணா!)

அமீரகத்து அண்ணன் சென்ஷியிடம் நான் கேக்கப்போறேன் பாருங்க கேள்வி.......!

1.தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா?

2.பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும் உங்களின் நடவடிக்கைகள் எப்படி கட்டமைக்கப்பட்டு உருவானது என்று கடுமசொற்பிரயோகமின்றி பிரக்ஞையோடு சொல்லுங்களேன்?

3. லிஸ்ட் போட்டு வாசிக்கும் உங்களின் காதல்களில் ஏதேனும் உங்களை குழப்பியதுண்டா? அதாவது நினைவுகளில் வாழ்க்கையில் யார் முன்பு வந்தது யார் பின்பு வந்தது என்ற வரிசைகளில் மாறுதல்கள் இருந்தால் எப்படி நீங்கள் செக் செய்து கொள்வீர்கள்?

4.மீரா ஜாஸ்மீனுடன் நீங்கள் எண்ண அலைகளினூடாக சென்று பேசினால் என்ன பேசிக்கொள்(ல்)வீர்கள்?

48 பேர் கமெண்டிட்டாங்க:

said...

:))

said...

செல்லாது செல்லாது

ரொம்ப சின்னதா பதில்கள் போட்டிருக்கீங்க ;-)
கடைசிக்கு எஸ்.ஜே.சூர்யா தனமான விடை வேணாம்

ஆனாலும் கடலை சாரி கடமை உணர்ச்சியோடு பதிலளித்தமைக்கு நன்றிகள்

said...

அருமையா இருக்கு பதிலும்கேள்வியும்..

said...

என்ன அண்ணே இவ்வளவு சிம்பிளா பதில் சொல்லிட்டிங்க...

said...

பஞ்சாயத்து தலைவர் தெரிவும் விளக்கமும் செம பிராக்டிக்கல்...ஆனா அந்த __________________ தான் கொஞ்சம் ஓவரு...:)

said...

///அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்///

அப்ப... 2016 இல ஆயில்யனா...

said...

:))
\\முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!
\\

100% ரைட்ட்டு

said...

:))))

உங்கள் தலைப்பின் பொருட்பிழையை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்....

கொஸ்டின் கேட்டது பிரபாதானே?? அப்போ... 'காஃபி வித் கானா பிரபா'னுதானே போடனும்???

said...

'காஃபி வித் அனு' நிகழ்ச்சியைத் தூக்கி குடித்து (சாப்பிட்டு) விட்டது 'கா.பி வித் ஆயில்யன்' பதிவு.

said...

தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா//

ஆயில், என்னது இது? அப்படி என்றால் வயசானவங்க எல்லாம் பதிவு போட கூடாதா :-)
(எனக்கு தெரிஞ்ச கெமிஸ்ட்ரி சினிமாவிலும், டீவியிலும் சீ படுகிறதே அதுதான் :- ))))))

said...

//பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!//

கலக்கல்...பலருக்கும் இதே நிலைமைதான். சென்னை சென்ற போது, பதிவர்கள் தவிர்த்து பழைய நண்பர்கள் எவரும் நினைவுக்கே வரவில்லை.
:(

said...

ஆயில்யன்,
கச்சிதமா பதில் இருந்தது.

இப்போ ஒண்ணு தெரிஞ்சாகணும்.

கோசலா,
இல்லை ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ரேயாவா:)

said...

சூப்பர்.... :)))

said...

aaha!!!!!!!!!

said...

// kappi said...
:))
//

ஒ.கேய்ய்ய்!

said...

//கானா பிரபா said...
செல்லாது செல்லாது

ரொம்ப சின்னதா பதில்கள் போட்டிருக்கீங்க ;-)
கடைசிக்கு எஸ்.ஜே.சூர்யா தனமான விடை வேணாம்

ஆனாலும் கடலை சாரி கடமை உணர்ச்சியோடு பதிலளித்தமைக்கு நன்றிகள்
//

ஹை அஸ்கு புஸ்கு நீங்க எதிர்பாக்குற மாதிரி இதுல எல்லாம் பார்ட் பார்ட்டா போடமாட்டேன் நானு! :))

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
அருமையா இருக்கு பதிலும்கேள்வியும்..
//

தாங்க்ஸ்க்கா!

said...

//தமிழன்... said...
என்ன அண்ணே இவ்வளவு சிம்பிளா பதில் சொல்லிட்டிங்க...
///

தமிழ் தம்பி இது சின்னதா...??? ( இதெல்லாம் நொம்ப ஓவரு!)

said...

//தமிழன்... said...
பஞ்சாயத்து தலைவர் தெரிவும் விளக்கமும் செம பிராக்டிக்கல்...ஆனா அந்த __________________ தான் கொஞ்சம் ஓவரு...:)
//

ஆமாம் இல்ல! :))

said...

//தமிழன்... said...
///அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்///

அப்ப... 2016 இல ஆயில்யனா...
//

ஆஹா ஆட்டோவுக்கு வழி காட்டுறீங்களா...????

said...

//Ramya Ramani said...
:))
\\முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!
\\

100% ரைட்ட்டு
//

ஹய் நீங்களும் அப்ப நம்ம குரூப்பு!

said...

//ஜி said...
:))))

உங்கள் தலைப்பின் பொருட்பிழையை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்....

கொஸ்டின் கேட்டது பிரபாதானே?? அப்போ... 'காஃபி வித் கானா பிரபா'னுதானே போடனும்???
//

ஆஹா...!
காபியோட கேட்டிருந்தா ஒ.கே பட் கா.பியே கேள்வி கேட்டா நான் எப்படி அப்படி போடமுடியும் ???!!! :)))

said...

//ராமலக்ஷ்மி said...
'காஃபி வித் அனு' நிகழ்ச்சியைத் தூக்கி குடித்து (சாப்பிட்டு) விட்டது 'கா.பி வித் ஆயில்யன்' பதிவு.
///

தாங்க்ஸ்க்கா!

said...

//ramachandranusha(உஷா) said...
தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா//

ஆயில், என்னது இது? அப்படி என்றால் வயசானவங்க எல்லாம் பதிவு போட கூடாதா :-)
(எனக்கு தெரிஞ்ச கெமிஸ்ட்ரி சினிமாவிலும், டீவியிலும் சீ படுகிறதே அதுதான் :- ))))))
//

உஷாக்கா வாங்க! வாங்க!

ஆஹா நான் வயசானவங்கன்னு ஒண்ணும் சொல்லலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

(சரி உஷாக்கா அடுத்த பதிவு எப்போ?)

said...

//கோவி.கண்ணன் said...
//பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!//

கலக்கல்...பலருக்கும் இதே நிலைமைதான். சென்னை சென்ற போது, பதிவர்கள் தவிர்த்து பழைய நண்பர்கள் எவரும் நினைவுக்கே வரவில்லை.
:(
//

100% உண்மைதாங்க!

4 வருடத்திற்கும் மேல் பழகிய நண்பர்களை விட அதிகம் (சாட்)டச்ல இருக்கறது இவுங்கதான் எனக்கு :))

said...

//வல்லிசிம்ஹன் said...
ஆயில்யன்,
கச்சிதமா பதில் இருந்தது.

இப்போ ஒண்ணு தெரிஞ்சாகணும்.

கோசலா,
இல்லை ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ரேயாவா:)
//

வல்லி அம்மா! நீங்க ரொம்ப சீரியஸா தெரிஞ்சுக்க ஆசைப்படறதால நானும் பதில் சொல்றேன்!

லெப்ட்ல இண்டிக்கேட்டர் போட்டு ரைட்ல கையை காமிச்சிட்டு ஸ்ட்ரெய்ட்டா போற ஆளுங்கள்ல நானும் ஒருத்தன்! :))

said...

//VIKNESHWARAN said...
சூப்பர்.... :)))
/

தாங்க்ஸ்ண்ணா!

said...
This comment has been removed by the author.
said...

//புதுகைத் தென்றல் said...
aaha!!!!!!!!!
//

என்னக்கா என்னாச்சு! படத்தை பார்த்துட்டு ஆஹாங்கற மாதிரி இருக்கு!

said...

அடங்கொக்கமக்கா.... கடைசி கேள்விக்கு நேத்துல இருந்து ரொம்ப ஆர்வத்தோட காத்து இருந்தா இப்படி எஸ் ஆகிட்டீரே:(

said...

///தமிழன்... said...
பஞ்சாயத்து தலைவர் தெரிவும் விளக்கமும் செம பிராக்டிக்கல்...ஆனா அந்த __________________ தான் கொஞ்சம் ஓவரு...:)///

இதுல என்னப்பா ஓவரு? யார் யாரோ நான் தான் ______________ ன்னு சொல்லுறப்போ எங்க ஆயில்யனுக்கு என்ன கொறைச்சல்?

said...

இல்ல ஆயில்யன்,

முன்னாடி எட்டு போட வேண்டும்னு

ஆப்பு வெச்சாங்க,

அப்புறம் தொடர் பதிவுன்னு வெச்சாங்க

இப்படி ஒவ்வொன்னா கிளம்பியிருக்க, இப்ப இந்த மாதிரி புயல் கிளம்பியிருக்க என்னை யாரும் மாட்டி விடாம இருக்கணுமேன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.

(உக்காந்து யோசிப்பாங்களோ)

:))))))))))))

said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நடிகை ஸ்ரேயா படத்தின் மேல் மட்டும் ஏன் ஆயில்யன் என்று பச்சை குத்தியிருக்கு?

said...

//ஆஹா...!
காபியோட கேட்டிருந்தா ஒ.கே பட் கா.பியே கேள்வி கேட்டா நான் எப்படி அப்படி போடமுடியும் ???!!! :)))//

தலைப்புலயே கலக்கிட்டீங்க :))

அடுத்த ஆப்பு எனக்கா :(

said...

அண்ணே பதில்கள் எல்லாம் பொறுப்பா கொடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.. :)))

said...

///அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! ///
அப்ப நீங்களும் அந்த 2011ல் ஆட்சி அமைக்கும் லிஸ்ட்டில் இருக்கீங்களா?....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;))))

said...

முதல் கேள்விக்கு பதில் இங்கேயும் அதே மாதிரி தான்... எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய உலகில் இருக்கிறோம்.... :)

said...

///கானா பிரபா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நடிகை ஸ்ரேயா படத்தின் மேல் மட்டும் ஏன் ஆயில்யன் என்று பச்சை குத்தியிருக்கு?///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே... ;))
ஆனா எங்க தலைவி மீது இல்லை என்பதால் ஆயில்யனை மன்னித்து விடுகின்றோம்.... ;)

said...

//நிஜமா நல்லவன் said...
அடங்கொக்கமக்கா.... கடைசி கேள்விக்கு நேத்துல இருந்து ரொம்ப ஆர்வத்தோட காத்து இருந்தா இப்படி எஸ் ஆகிட்டீரே:(
//

அடப்பாவிகளே! நான் சிக்கி சின்னாபின்னாமாக போறதுக்காக ரெண்டு நாளா வெயீட்டீஸ் வேற உட்டுக்கினு குந்தியிருந்தீங்களா! ???

said...

//நிஜமா நல்லவன் said...
///தமிழன்... said...
பஞ்சாயத்து தலைவர் தெரிவும் விளக்கமும் செம பிராக்டிக்கல்...ஆனா அந்த __________________ தான் கொஞ்சம் ஓவரு...:)///

இதுல என்னப்பா ஓவரு? யார் யாரோ நான் தான் ______________ ன்னு சொல்லுறப்போ எங்க ஆயில்யனுக்கு என்ன கொறைச்சல்?
///

அவ்வ்வ்வ்வ்வ்வ் அம்புட்டு பாசமாலே வைச்சீருக்கீக நீங்க எம்மேல....! :)))

said...

//புதுகைத் தென்றல் said...
இல்ல ஆயில்யன்,

முன்னாடி எட்டு போட வேண்டும்னு

ஆப்பு வெச்சாங்க,

அப்புறம் தொடர் பதிவுன்னு வெச்சாங்க

இப்படி ஒவ்வொன்னா கிளம்பியிருக்க, இப்ப இந்த மாதிரி புயல் கிளம்பியிருக்க என்னை யாரும் மாட்டி விடாம இருக்கணுமேன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.

(உக்காந்து யோசிப்பாங்களோ)

:))))))))))))
//

ஒஹோ உங்களுக்கு இப்படி ஒரு பயமா!? (ஆண்டவா சீக்கிரம் அக்காவை யாராவதுசிக்கலான கேள்வி கேட்டு மாட்டிவிடணும்னு நானும் வேண்டிக்கிறேன்!)

said...

//கானா பிரபா said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நடிகை ஸ்ரேயா படத்தின் மேல் மட்டும் ஏன் ஆயில்யன் என்று பச்சை குத்தியிருக்கு?
//

இது ஸ்.கோ.ந.ம தலைமைக்கு ஆப்பு வைக்க செய்யும் முயற்சியாகவே எனக்கு தோணுகிறது! :))

said...

//சென்ஷி said...
//ஆஹா...!
காபியோட கேட்டிருந்தா ஒ.கே பட் கா.பியே கேள்வி கேட்டா நான் எப்படி அப்படி போடமுடியும் ???!!! :)))//

தலைப்புலயே கலக்கிட்டீங்க :))

அடுத்த ஆப்பு எனக்கா :(
//

என்ன பிரதர்..! y பீலிங்க்ஸ் எல்லாம் நடத்துங்க நல்லபடியா...!

said...

//தமிழ் பிரியன் said...
அண்ணே பதில்கள் எல்லாம் பொறுப்பா கொடுத்திருக்கீங்க... வாழ்த்துக்கள்.. :)))
//

கடமை! :))

said...

//தமிழ் பிரியன் said...
///அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! ///
அப்ப நீங்களும் அந்த 2011ல் ஆட்சி அமைக்கும் லிஸ்ட்டில் இருக்கீங்களா?....... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;))))
/

இல்லப்பா கொஞ்சம் லேட்டா வர்றேன்னே!:)

said...

//தமிழ் பிரியன் said...
முதல் கேள்விக்கு பதில் இங்கேயும் அதே மாதிரி தான்... எல்லாவற்றையும் மறந்து ஒரு புதிய உலகில் இருக்கிறோம்.... :)
//
கரெக்ட்டூ :))

said...

//தமிழ் பிரியன் said...
///கானா பிரபா said...

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். நடிகை ஸ்ரேயா படத்தின் மேல் மட்டும் ஏன் ஆயில்யன் என்று பச்சை குத்தியிருக்கு?///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே... ;))
ஆனா எங்க தலைவி மீது இல்லை என்பதால் ஆயில்யனை மன்னித்து விடுகின்றோம்.... ;)
//

தமிழின் பெருந்தன்மைக்கு தலை வணங்கும் தம்பி ஆயில்யன்!

said...

ஆயில் அண்ணே...பதில் எல்லாம் சூப்பரு ;)

அடுத்து மாப்பியா!! ;)