தன்னானே தன்னானே தன்னனானே தானேனே :-)

IIFA அவார்ட்ஸ் இந்திய திரைப்படங்களில் கடந்த ஆண்டின் சிறந்த பின்ணணி பாடகிக்கான ஸ்ரேயா கோஷல்க்கு வழங்கப்பட்டுள்ளது அதை கொண்டாடும் வகையில் ஒரு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் பதிவு+ கவுஜயுடன் !

குரு திரைப்படத்தில்,அவர் பாடிய ஹிந்தி பாட்டு!என்னோட தமிழ் கவுஜ

எனக்கு பிடிச்ச பாடல்
அது உங்களுக்கும் பிடிக்குமே!
இவுங்க பாடும் அனைத்து பாட்டும்
விருதை அள்ளுமே!

கேட்பது நீங்கள்தான்!
கேட்ட பிறகு தெரியும் எங்கள் தலைவி புகழ்தான்!

என்னை பிடித்த நிலவு
அது உங்களுக்கும் பிடிக்குமே

உதிர்வது சொற்களா?
பாட்டு வளர்த்த சோலையே
பதிவு பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது
நீ கனவில் போகிறாய்
விட்டு விலகிடும் போது
நீ இறங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே என் இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்

வெள்ளி கம்பி தலை போலே
ஒரு தூரல் போடுதே
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதே

நீர் துளி நீங்கினால்
நீ தொடும் நியாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே
மோகம் வளர்த்து கலைக்கிறாய்

அவ்ளோதான்!


விருது வாங்கிய தலைவியை புகழ்ந்து அழகிய கவிதையாக எழதி முடித்த பின் சரி யாரிடமாவது பிழை திருத்தம் செய்து வாங்கலாம் என்று நம்ம அண்ணாச்சி கானா பிரபாவிடம் காட்டினேன்! அதற்கு அவரிடமிருந்து வந்த பதில்!

அடப்பாவி மக்கா இது ஏற்கனவே ஒரு படத்துல பாட்டாக வந்ததுய்யா! அப்படின்னுட்டாருங்க!

(அப்படின்னா என்னோட கவுஜய நான் எழுதறதுக்கு முன்னாடியே யாரோ திருடிட்டாங்களா???????)

8 பேர் கமெண்டிட்டாங்க:

said...

விருதுக் கமிட்டி வாழ்க

ஸ்ரேயா கொசல் நற்பணி மன்றம்
சிட்னி கிளை

said...

//அப்படின்னா என்னோட கவுஜய நான் எழுதறதுக்கு முன்னாடியே யாரோ திருடிட்டாங்களா???????//

அடப்பாவமே..

ஆயில்யன்.. உங்களக்கு 'Goshal fever' வந்திருக்கு என்று நினைக்கிறேன். சீக்கிரமா ஒரு நல்ல டாக்டரை பாருங்க..! :))

said...

தலைவிக்கு விருது தந்து பெருமை தேடிக் கொண்ட IIFA அமைப்பிற்கு வாழ்த்துக்கள்


இவண்
கப்பி
தலைவி ஸ்ரேயா கோஷல் ரசிகர் நற்பணி மன்றம்
டல்லாசுப்பட்டி

said...

//கானா பிரபா said...
விருதுக் கமிட்டி வாழ்க
//

கண்டிப்பாக நாமும் வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் விருது கமிட்டிக்கு:)))

said...

//ஆ.கோகுலன் said...
//அப்படின்னா என்னோட கவுஜய நான் எழுதறதுக்கு முன்னாடியே யாரோ திருடிட்டாங்களா???????//

அடப்பாவமே..

ஆயில்யன்.. உங்களக்கு 'Goshal fever' வந்திருக்கு என்று நினைக்கிறேன். சீக்கிரமா ஒரு நல்ல டாக்டரை பாருங்க..! :))
//

:))))

நன்றிகளுடனும் ..... :))

said...

//கப்பி பய said...
தலைவிக்கு விருது தந்து பெருமை தேடிக் கொண்ட IIFA அமைப்பிற்கு வாழ்த்துக்கள்


இவண்
கப்பி
தலைவி ஸ்ரேயா கோஷல் ரசிகர் நற்பணி மன்றம்
டல்லாசுப்பட்டி
//

வாங்க டல்லாசுப்பட்டி தலைவரே :))

said...

தங்கத் தலைவிக்கு விருது கொடுத்ததன் மூலம் அந்த விருதுக்கு பெருமை கிடைத்து விட்டது என்பதை எங்கள் சங்கம் சார்பாக தன்னடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
தங்கத் தாரகை ஸ்ரேயா கோசல் நற்பணி மன்றம்
சவுதி கிளை

said...

/// கானா பிரபா said...

விருதுக் கமிட்டி வாழ்க///
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே