IIFA அவார்ட்ஸ் ஸ்பெஷல் - வெற்றிக்கனி சுவைத்த சக்தே இந்தியா!


ஆஸ்கார் விருத்துக்கு இணையான பாலிவுட்டின் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன! சக்தே இந்தியா திரைப்படம் அதிக விருதுகளை பெற்றிருக்கின்றது!

எப்போழுதோ ஒரு இனிய வியாழன் இரவில் பார்த்த படம் திரும்ப மனத்தில் ஓடியது இப்போது!

படம் துவங்கும் அந்த சினிமாத்தனமான மீட்டிங்கில் இருந்து,ரிப்ளை ஆகும், தவறாக விளையாடியதாக ஷாருக்காணை குற்றம் சாட்டும் அந்த குறிப்பிட்ட போட்டி, எல்லாமும் முடிந்த முடிவாய் சொந்தவீட்டிலிருந்து, சொந்த ஊரிலிருந்து வெளியேறிச்செல்லும் அந்த நொடிகள் எனக்குள் ஆர்வத்தை அதிகரிக்கவே, தொடர்ந்து பார்ப்போம் இந்தி படத்தினை என்ற முடிவெடுத்தேன்!

இத்தனைக்கும் இந்தி கிலோ கித்னா ரியால்? கேட்க்கும் ஆளாக நான் இங்கு இருக்கையில், ஏதோ ஒரு தைரியம் மெளன படமாக பார்ப்போம் என்று! ( இந்த படத்தின் கதையோடு முன்னாள் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட அரசியல் காரணங்களும் சேர்த்திருப்பதாக ஏற்கனவே படித்திருந்த ஸ்கூப் நியுஸ்களும் கூட அவசியம் படம் பார்த்தே ஆகவேண்டும் என்று அமர காரணமும் கூட! - கடைசியில் கதை உண்மைகதைதானாம் ஆனால் தன்ராஜ் பிள்ளை இல்லையாம் வேறு ஒருவரின் கதை அப்படியே படமாக..)

பிடித்த காட்சிகளாய்....

எல்லா மாநிலங்களிலிருந்தும் அவரவர் மண்ணின் வாசத்தோடு விளையாட்டு மைதானம் வந்து சேரும் காட்சிகள்!

உடற்பயிற்சியோடு ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தலே விளையாட்டில் வெற்றிக்கு அடிப்படை என்ற குழுமனப்பான்மையை வளர்க்கும் விதமாய் ஷாருக்கான் அளிக்கும் கண்டிப்பான பயிற்சிகள்!

ஆண்கள் ஹாக்கி குழுவிற்கும் பெண்கள் ஹாக்கி குழுவிற்கும் நடக்கும் விளையாட்டு போட்டியில் முடிவில் நன்கு பயிற்சி பெற்ற ஆண் வீரர்கள் வெற்றி பெற்றாலும் கூட பெண்கள் ஹாக்கி குழுவினை வாழ்த்தி அட்வைஸ் தரும் காட்சிகள்!

என் இன்னும் பல காட்சிகள் மனத்துக்கு இனிமையாய்,இது போன்றே நிஜத்திலும் அணிகள் அமைந்தால் எப்படி இருக்கும் என்று இன்னுமொரு கனவுகாட்சியினை தொடங்கி வைத்த படம்! (நம்ம பயபுள்ளைங்க, அந்தளவுக்கு மன ஈடுபாட்டோட இது போன்ற அணிகள் அமைப்பார்களான்னு நினைச்சு பார்த்தா ம்ஹும் ஒண்ணுமே தோணமாட்டேங்குது!)

கடைசியில் உலகக்கோப்பையினை கைப்பற்றிய வெற்றிக்கு பிறகு ஷாருக்கான் தன் சொந்த வீட்டுக்கு திரும்பும் காட்சியும் அப்பொழுது ஊரே கூடி நின்று உற்சாக கோஷமிட்டு வரவேற்பதும், வெற்றிகளை மட்டுமே போற்றும் சமூகத்தின் கோரமுகம் அங்கே இளித்துக்கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது எனக்கு!

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய படங்கள் வரிசையில் சக் தே இந்தியாவினையும் சேர்த்துக்கொள்ளுங்கள் இப்போதைக்கு ஒரு பாட்டு கேட்கலாம் வாங்க!

0 பேர் கமெண்டிட்டாங்க: