சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

கோவையில் - ஒரு குழுமாய் இவர்களின் பணி!

ஒவ்வொரு நாளும் மாலை 8.00 மணிக்கு கூடும் இவர்களின் சேவை சிறப்பு வாய்ந்தது!

இவர்களின் இந்த சேவைக்கு விளம்பரமில்லை வெற்றுக்கூச்சல்கள் இல்லை ஏன் பெயரே இல்லை!

உறுப்பினர்கள் என்று யாரும் கூறிக்கொள்வதில்லை அன்றாடம் யாருமே வந்து இந்த சேவையினை செய்ய முடியும்!

யாரும் பிறரிடமிருந்து பணம் எதிர்பார்பதில்லை தம் பையில் இருந்தே பணத்தினை எடுத்து போட்டு செய்கிறார்கள்!

அடாது மழை பெய்ந்தாலும் கூட இவர்களின் சேவை தொடர்கிறது!

ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் தொடங்கி, கோவை நகர்ப்புறங்களின் முக்கிய இடங்களில்,
வாழ்க்கையே வாழ்ந்து தொலைத்தவர்கள்,
வாழ்க்கையை தொலைத்து வாழ்பவர்கள்
வாழ்க்கையை விட்டு விலக நினைத்து தொலைந்துப்போனவர்கள்
என பலரின், ஒரு வேளை உணவுக்கு உதவுகிறார்கள் இந்த மனிதருள் மாணிக்கங்கள்!

ஒவ்வொரு முறையும் இது போன்ற மனிதர்களை பஸ் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும்,மற்றும் சாலையோரங்களில்லும் காணும்போது எனக்கு தோன்றிய வினாவுக்கு “இவர்களின் உணவு உறைவிடம் என்ன? இவர்களின் குடும்பம் இப்போது எப்படியிருக்கும்? “ என்ற வினாக்களின் உணவுக்கான விடையாக இது போன்ற சேவை மனிதர்களின் செய்திகளால் நிறைவுபெற்றாலும் பல கேள்விகள் பதிலின்றியே தொடர்கின்றன!

இந்த சேவைக்காக யாரிடமும் சென்று பணம் கேளாமல் தானாகவே முன்வந்து உதவுபவர்களின் நல் உள்ளங்களின் ஆதரவோடு செய்லபட்டுக்கொண்டிருக்கிறார்கள்! பெரும்பாலும் பல நல் உள்ளங்கள் தம் குடும்பத்தின் நிகழும் சுப நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக இந்த சேவைக்கென சிறிதளவும் பணம் கொடுத்தும் உதவிக்கொண்டிருக்கிறார்களாம்!

முன்பு நான் படித்த செய்தியும் பின்பு பிஐடியில நான் பார்த்திருந்த என்னை பாதித்த படத்தினாலும் கூட இந்த பதிவு ! - சம்பந்தமில்லை - சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

ஏப்ரல் மாத போட்டியில் வெளியான கோமாவின் பதிவின் படத்தினை இத்துடன் இணக்கிறேன்!

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

ம் .. நல்லவிசயம்..
ஆனா எப்படியாவது எதயாவது சம்பந்தப்படுத்தி பதிவு மட்டும் தேறிடுதுப்பா ..

said...

1

said...

படிக்கப்பட வேண்டிய பதிவு...

said...

//அடாது மழை பெய்ந்தாலும் கூட இவர்களின் சேவை தொடர்கிறது!//

விடாது இவர்கள் செய்யும் சேவையை மெச்சித்தான் அடாது பெய்கிறது மழை.

//மனிதருள் மாணிக்கங்கள்!//

உண்மை.

கோமாவின் புகைப்படம் பதிவுக்கு உயிரோட்டம் கொடுக்கிறது.

said...

நல்ல உள்ளங்கள். நல்ல பதிவு. இதில் ஏதும் சோஅஸ் தியரி இல்லையே?>....