கலர் பார்க்க போகலாமா?

கலர் பார்க்க போகலாமா? அப்படின்னு ஒரு கேள்வி வந்தாலே போதும் பயபுள்ளைங்க எல்லாத்துக்கும் மனசுக்குள்ள மத்தாப்பூ சிறகடிச்சு, சிரிப்பு சிரிப்பா பறந்து வரும்!

நான் ரெடி நீ ரெடின்னு நிப்பானுங்க! ஆனா பாருங்க எவனுக்கும் அப்ப எந்த வேலையிருந்தாலும் சரி அதைப்பத்தியெல்லாம் அப்பவே மறந்துடுவானுங்க!

கலர் பாக்குறதுன்னா அம்புட்டு இஷ்டமாக்கும்!

தீபாவளி பொங்கல் நியூ இயர்ன்னு வந்துட்டா போதும் தினமும் கடைத்தெருவுக்கு போய்ட்டு வரதுக்கு எல்லாம் ரெடியா நிக்கும் அதுவும் பாருங்க சொன்ன டைம்முக்கு ஒரு மணி நேரமு முன்னாடியே வந்து நின்னுப்பாங்க! (எக்ஸாமுக்கு குரூப் ஸ்டடி போடணும்னா சொன்னா வாட்சை மறந்திட்டேன்னு சொல்ற பயலுக!)

மாசத்துக்கு ஒரு நாளாச்சும் இப்படி கலர் பார்க்க போகலைன்னா ஒருத்தன் முகத்தை ஒருத்தன் ரொம்ப ஏக்கமா பாத்துக்குவானுங்க! அந்த மாதிரி சமயங்களில் சரி பாவம் போகட்டும் நாம இன்னிக்கு இவுங்களை அழைச்சிட்டுப்போவோம்னு ஒரு பரிதாபத்தோட அழைச்சுட்டு போகவேண்டிய சூழல் நிறைய வந்திருக்கு எனக்கு!

சரி பாவம் பார்த்து அழைச்சுப்போறோமே நாம பாக்குற கலர்களை பத்தில் எதாச்சும் சாதகமா சொல்லுவானுங்கன்னு பார்த்தா ஆயிரம் நொள்ளை சொல்லியே, ஏண்டா இவனுகளை அழைச்சிட்டு வந்தோம்முனு நொந்து போற அளவுக்கு என்னைய பேசியே சாகடிச்சிடுவானுங்க!

சரி அவனுங்க பாக்குற கலர்களை பார்த்த நம்ம மனசுக்கு மேட்சே ஆகாது அவ்ளோ கொடூரமா இருக்கும் கேட்டா இதுதாண்ட்டா இப்ப ஸ்டைலு டிரண்டு அப்படி சொல்லியே எஸ்ஸாகிடுவானுங்க!

எனக்கு எப்பவும் வெள்ளைத்தான் பிடிக்கும்! ஆனா பாருங்க படுபாவிங்க ஒரு நாள் கூட, உனக்கு வெள்ளை மேட்சே ஆகாது அத போய் எப்படிடா நீ அவ்ளோ லைக் பண்றேன்னு ஒவர் நக்கலு வேற! வேணும்னா லைட் கலாரா டிரைப்பண்ணி ப்பாருடான்னு அட்வைஸ்!

இப்படியா எனக்கு பிடிச்ச கலர் அவங்களுக்கு பிடிக்காம போக அவுங்களுக்கு பிடிச்ச கலர் எனக்கு உவ்வேக் வர வைக்க சில சமயம் பெரிய வாக்குவாதமாககூட ஆகிப்போய்டும் அந்த மாதிரி சமயத்திலதான் கடைக்காரான் சொல்லுவான்

ஏம்ப்பா நீங்க டிரெஸ் எடுக்க வந்தீங்களா? இல்ல எங்க கடையில சண்டை போட வந்தீங்களா போங்கப்பா போய் முடிவு பண்ணிட்டு பிறகு வாங்க்ப்பான்னு சொல்லுவான்! ( நிறைய தடவை திட்டியிருக்காங்க பட் நாம எப்பவும் பொது ஊடகங்களை நல்ல மாதிரியான சூழ்நிலையிலதானே அறிமுகப்படுத்தணும்!)

சரி வாங்க இப்ப கலர் பாக்கலாம்!ஆமாம் நீங்க நினைச்ச கலர் இதுல இல்லைல்ல! ???

13 பேர் கமெண்டிட்டாங்க:

said...

naan ninaichathu green, ok?

said...

//கானா பிரபா said...
naan ninaichathu green, ok?
//

அப்ப நீங்க நினைச்சது இருக்கு :)))

said...

மாசமாசம் சட்டை எடுப்பீங்களா.. பொருந்தலயே.. ரெண்டுத்தயும் இணைக்கப்பாடுபட்டா மாதிரி இருக்கு..

said...

நான் நினைச்சது இல்ல - ஆமா கலாவா கலரா - எதப் பாக்கப் போகணும் - ஆயில்யன் ?

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
மாசமாசம் சட்டை எடுப்பீங்களா.. பொருந்தலயே.. ரெண்டுத்தயும் இணைக்கப்பாடுபட்டா மாதிரி இருக்கு..
///

கரெக்ட்டா ஜாயிண்ட் போட்ட இடத்துல ரிப்பேர் பண்ணிட்டீங்க :(

( ஆமாம் உங்களை யாரு கண்ணாடி போட்டுக்கிட்டு கலர் பார்க்க சொன்னது :))) )

said...

//cheena (சீனா) said...
நான் நினைச்சது இல்ல - ஆமா கலாவா கலரா - எதப் பாக்கப் போகணும் - ஆயில்யன் ?
//

என்னது கலாவா?

சார் சார்! எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க!
நான் பதிவுல தவிர வேற எங்கயுமே சொல்லமாட்டேன்
ப்ளீஸ் ப்ளீஸ்!

said...

அண்ணே இத்தெல்லாம் நெம்ம ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்...
அப்பாவுபுள்ளையா ( நான்ந்தேன்) கலர்காட்டறேன்னு சொல்லி
கூட்டியாந்து இப்படி ஏமாத்திப்புட்டீயளே.... ஞாயமா..??
ஒழுங்கா கலர் கலரா காட்டுங்க சொல்லிபுட்டேன்... ;))))))))))

said...

//ஜொள்ளுப்பாண்டி said...

அண்ணே இத்தெல்லாம் நெம்ம ஓவரு ஆமா சொல்லிபுட்டேன்... அப்பாவுபுள்ளையா ( நான்ந்தேன்) கலர்காட்டறேன்னு சொல்லி
கூட்டியாந்து இப்படி ஏமாத்திப்புட்டீயளே.... ஞாயமா..??
ஒழுங்கா கலர் கலரா காட்டுங்க சொல்லிபுட்டேன்... ;))))))))))//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்

said...

:)

said...

எனக்கு நீலம் தான் பிடித்த கலர்... :) ஆமா சிலர் வேற ஏதோ கலரை எதிர்பார்த்து வந்ததாக சொல்றாங்களே என்னங்கண்ணா அது ;)

said...

ஆயில்யன் அண்ணே!கலர்ங்குறது அவ்வளவு அசிங்கமான விசயமான்ணே? ஏன்னா அசிங்கமானா படம்னா நீலப் படம்ங்குறாய்ங்க. அசிங்கமா எழுதுனா மஞ்சள் பத்திரிக்கைங்குறாய்ங்க. அசிங்கமா பேசுனா பச்சையா பேசுறாங்குறாய்ங்க..

said...

நான் நினைச்சது இல்ல - ஆமா
:(((

said...

/ஆமாம் நீங்க நினைச்ச கலர் இதுல இல்லைல்ல! ???//

இருக்கே! நாலாவது வரியில் முதல் கட்டத்தில் :))))