கேரளம் - என் விருப்பம் நிறைவேறுமா...?

ஒவ்வொரு முறையும் எனது கேரளா சுற்றுப்பயணம் என் விருப்பதிற்கான தேடுதல்களுடனேயே ஆரம்பிக்கிறது!

ஒவ்வொரும் முறையும் என் எண்ணங்களில் இந்த விருப்பத்தினை எப்படி நான் தவறவிடுவேனோ...?! என்று தெரியவில்லை ஆனாலும் என்னால் இது நாள் வரையில் கேரளாவிலிருந்து செல்லும் சமயங்களில் நான் நினைத்த அந்த விருப்பத்தினை மட்டும் செய்யவே முடியவில்லை! ஆனாலும் கண்டிப்பாக மனதிற்குள் ஒரு எண்ணம் வளர்ந்தோங்கி இருக்கிறது எப்படியாகிலும் நான் இந்த விடுமுறை பயணத்தில் அந்த விருப்பத்தினை நிறைவேற்றியே தீர்வேன் என்று முடிவுடனேயே இருக்கிறேன்! ஆண்டவன் கருணையும் கூட வேண்டி...!

நான் மட்டுமில்லைங்க, பெரும்பாலும் கேரளா சுற்றுப்பயணம் செல்பவர்களுக்கும் கூட இதே எண்ணம், இருக்கும் பலர் எண்ணத்தினை நிறைவேற்றி மகிழ்ந்திருப்பார்கள்! மகிழ்ந்துக்கொண்டும் இருப்பார்கள்!

என்னதான் நம் தமிழ்நாட்டிலும் கூட இந்த விருப்பத்தினை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றாலும் கூட, அந்தளவுக்கு கேரளாவின் தனித்தன்மையினை இங்கு நாம் காண்பது மிககடினம்!

எத்தனை எத்தனை அழகாய்....! வடிக்கப்பட்ட சிலையினை போலவே தோன்றும் அந்த உருவத்தினை வீட்டின் மையத்தில் (அதாவது ஹாலில்!) மாட்டி வைத்து பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் விஸ்வரூபமான உருவத்தில், நீங்களும் பார்த்தால் கண்டிப்பாக உங்களுக்கும் அதன் மீது விருப்பம் வந்துவிடக்கூடும்!

மூங்கில் பட்டைகளினால் செய்யப்பட்ட காலண்டரின் வடிவினை ஒத்து இருக்கும் அந்த படம் -ஒவியத்தில் உயிர் கொடுத்தது போன்ற தோற்றத்துடன் அழகாய் நிற்கும் அந்த உருவத்திற்கு பெயர் கூட எனக்கு தெரியுமே..!

கேசவன்!



குருவாயூரில் போய் கேசவன் ஆணை (யானை) அப்படின்னு சும்மா சொன்னாலே போதும் அங்கு இருக்கும் எண்டே தேசத்துக்காரர்களுக்கு ஒரு வித தெய்வபக்தி + மரியாதையோடுதான் அந்த யானையினை பற்றி பேசுவார்கள்!

அப்படி ஒரு ராஜ மரியாதையோடு இன்னும் உருவத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த பெரிய உருவம் மறைந்தது 1976ல் தனது 72 வது வயதில் ஒரு நல்ல நாளில் கடவுளினை தும்பிக்கையினால் துதித்தபடியே ஆலய வாசலிலேயே அமரத்துவம் பெற்றது!

இன்றும் கூட கேசவன் படமிட்ட அந்த ஒவிய பதாகைகளுக்கும் பலத்த கிராக்கி உண்டு ஒவ்வொரு வீடுகளிலும் கடவுளுக்கு இணையான அந்தஸ்து பெற்றுள்ளது!

நம் தமிழ்நாட்டிலிருந்தும் கூட சுற்றுலா கேரளா செல்லும் மக்கள் கண்டிப்பாக இந்த ஒவியத்தினை வாங்கிவர மறக்க மாட்டர்கள்! அவ்ளோ பிரபலமாக நம் ஊர்களிலும் வீடுகளில் நீங்கள் காணமுடியும்!

இந்த வருடத்திலாவது கேரள சுற்றுபயணத்தில் என் எண்ணம் நிறைவேற வேண்டும் என்ற ஆசையுடன்.....!


டிஸ்கி:-
என்னாடா..! திடீருன்னு கேசவன் மேல பாச மழை பொழியிறேன்னு பாக்குறீங்களா? ஒண்ணுமில்லைங்க இன்னிக்கு நம்ம தேசத்து தமிழ் நடிகை திவ்யா உன்னியோட நடனம் பார்த்துக்கிட்டே இருந்தேனா?

சரி அவுங்கள பத்தி எழுதலாம்னு யோசிச்சேன்! ஆனா பாருங்க பாவம் நல்ல நடிகை ஆனா சீக்கிரமே ஃபீல்டு அவுட்டாகிட்டாங்க!(இப்ப பரத நாட்டியம் ஸ்கூல் வைச்சு நடத்துறாங்களாம்!) சரி அவுங்கள பத்தி பேசி என்ன பிரயோசனம்ம்னு அவங்க பரத நடனத்தில் பின்புறம் ராஜ கம்பீரததுடன் நின்னுக்கிட்டிருந்த கேசவன் ஞாபகம் வந்துடுச்சி!

6 பேர் கமெண்டிட்டாங்க:

said...

அண்ணே கேசவன் சரி... திவ்யா உண்ணி சரி.... அது ஏன் கேரளா செய்திகளில் எல்லாம் லேபிளில் மாமியார் வீடு வருது... என்ன விசேஷமோ.... ;)))

said...

கேரளம் - விருப்பம் என்றெல்லாம் சொன்னதும் என்னவோ, ஏதோ கில்மா என்று ஓடிவந்தேன். ஏமாற்றிவிட்டீர்களே சக ராசிக்காரரே? :-(

said...

///கேரளம் - விருப்பம் என்றெல்லாம் சொன்னதும் என்னவோ, ஏதோ கில்மா என்று ஓடிவந்தேன். ஏமாற்றிவிட்டீர்களே சக ராசிக்காரரே? :-(///

??????:))

said...

/
லக்கிலுக் said...

கேரளம் - விருப்பம் என்றெல்லாம் சொன்னதும் என்னவோ, ஏதோ கில்மா என்று ஓடிவந்தேன். ஏமாற்றிவிட்டீர்களே :-(
/

ரிப்பீட்டு

said...

என் அடுத்த பயணத்தில் குருவாயூருக்கும் இடம் உண்டு, நீங்க சொன்ன கேசவனையும் சேர்த்துக் கொள்கிறேன்.

said...

வீட்டில் ஒரு படம் ரொம்ப நாளா சுவற்றில் மிதந்து கொண்டுள்ளது.நீங்க சொல்லித்தான் தெரியும் அவர் பெயர் கேசவன் என்று.