மதியம் செவ்வாய், ஜூன் 24, 2008

கவியரசு கண்ணதாசன் - பிறந்த நாளில்...!



உள்ளம் என்னும் கோயிலைக்
கட்டி வைத்தவன்!

கண்கள் என்னும் வாசலை
தந்து வைத்தவன்!

கண்ணில் வரும் பாதையை
காணச் சொன்னான்!

நல்ல நல்ல பாதையில்
போகச் சொன்னான்!

கண்கள் அவனைக் காண்க!

உள்ளம் அவனை நினைக்க!

கைகள் அவனை வணங்க!

ஒன்றுகூடி,

அறிவோம் அவனை - அவன்

அன்பே நாம் பெறும் கருணை

இறைவன் வருவான் - அவன்

என்றும் நல்வழி தருவான்!

*********************

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி!
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்!

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்!
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்....
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் - பெரும்
பணிவு என்பது பண்பாகும் - இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

*********************

நன்றிகளுடன் நினைவில் வைத்து வணங்குகிறோம் கவியரசு கண்ணதாசனை !

வாழ்க நின் புகழ்!

5 பேர் கமெண்டிட்டாங்க:

ஆ.கோகுலன் said...

நினைவூட்டியமைக்கு நன்றி ஆயில்யன்..

SP.VR. SUBBIAH said...

///நன்றிகளுடன் நினைவில் வைத்து வணங்குகிறோம் கவியரசு கண்ணதாசனை !///

ஆகா, அவர் புகழும் வாழ்க!
உங்களைப் போன்ற அவருடைய ரசிகர்களும் வாழ்க!

மணியன் said...

அவரது பாடல்களை நினைவுறுத்தி அழகான அஞ்சலி செலுத்தியுள்ளீர்கள்.
கவியரசுக்கு எனது அஞ்சலிகளும்.

மங்களூர் சிவா said...

நினைவூட்டியமைக்கு நன்றி ஆயில்யன்..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆயில்யன். அவர் வரிகளே அவருக்கு அஞ்சலியாக அமைந்தது அருமை