எண்ணங்கள் செயல்களை மேம்படுத்துங்கள்! - தினமணி - 1


ஒருவருடைய வாழ்வையும், வளத்தையும் நிர்ணயிப்பது அவரது சிந்தனையே. மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரும் நற்சிந்தனைகளை எண்ணினால், அலைக்கழிக்கப்படும் மனதை எந்த நிலையிலும், எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும்.

இந்த உலகில் இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உயிர் உண்டு என்பதை உணர வேண்டும். குறிப்பாக மனித உயிரை மதிக்க வேண்டும். மனிதநேயத்தைப் பேண வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து வீண் வாதம் செய்யத் தேவை யில்லை.

நானே அனைத்தும் அறிந்தவன்; எனக்கு நிகர் எவருமில்லை என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும். நான் என்ற அகந்தையை கண்டிப்பாக விட்டொழிக்க வேண்டும்.

சமூகத்தில் நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற தேவையற்ற சர்ச்சையை விடுத்து, சமூகத்திற்குப் பயனளிக்கும் வகையில் நமது பணிகள் அமைய வேண்டும்.

இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். உயர் நிலையில் உள்ளவர்கள், தமக்குக் கீழ்நிலையில் உள்ளவர்களிடம் இன்முகத்துடன் பழக வேண்டும். அனைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.அவ்வாறு அவர்களிடம் அன்பு காட்ட முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்கு இன்னல் விளைவிக்கக் கூடாது. பிறருக்கு உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யவே கூடாது.

நாம் பேசும் வார்த்தைகள் பிறரது இதயங்களில் இதமளிக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, ரணங்களை ஏற்படுத்தும் வகையில் அமையக் கூடாது.

நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று நாம் செலவழித்துக் கொண்டிருக்கும் நாள் மீண்டும் திரும்பப் போவதில்லை. எனவே இன்றைய நாளை இனிய நாளாக்கிக் கொள்ள வேண்டும். நல்ல செயல்களைச் செய்ய எண்ணும் போது, எந்த ஒரு நாளையும் தேவையற்ற நாள் என கழிக்கக் கூடாது.

திட்டமிடலே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம். திட்டமிடாத வாழ்க்கை அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போன்றதாகும்.திட்டமிடலுக்கு அடிப்படை நல்ல எண்ணங்களே. நம்மால் எதையும் செய்ய முடியும்.

இதை உறுதியாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


நன்றி - தினமணி

5 பேர் கமெண்டிட்டாங்க:

said...

திட்டமிடலே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம். திட்டமிடாத வாழ்க்கை அஸ்திவாரம் இல்லாத கட்டடம் போன்றதாகும்.திட்டமிடலுக்கு அடிப்படை நல்ல எண்ணங்களே. நம்மால் எதையும் செய்ய முடியும்.

இதை உறுதியாகச் செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டு

said...

me the first

said...

உள்ளேன் ஐயா!

said...

ஒருவருடைய வாழ்வையும், வளத்தையும் நிர்ணயிப்பது அவரது சிந்தனையே.இதைத்தான் ''தீதும் நன்றும் பிறர் தர வாரா '' என அன்றே பெரியவர்கள் கூறி வைத்தனர்.

said...

திட்டமிடலே வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அஸ்திவாரம்.