கணக்குப்பாடமும் பின்னே நகைச்சுவை/நையாண்டியும்! - பார்ட் 1

என்னதான் சுட்டுப்போட்டாலும் வரவே வராத விஷயத்தை பத்தி பதிவுல கண்டிப்பாக எழுதணும்னு ஒரு நீண்ட கால திட்டமெல்லாம் இருக்குங்க! அதுல முதல்ல இருக்கறத கண்க்கு பாடமும் நகைச்சுவை நையாண்டியும்தான்!

கணக்கு பாடம் எல்லாரும் படிச்சிருப்பீங்க ஸோ அதப்பத்தி சொல்லவேண்டிய தேவையில்லை! இதுல சிலபேர் கணக்குல நூத்துக்கு நூறெல்லாம் கூட எடுத்திருப்பீங்க அவங்க யாரு எங்க இருக்கீங்கிங்கன்ன்னு திசையோட சொன்னா அந்த திசையை நோக்கி விழுந்து கும்பிட்டுக்கொள்ள வசதியா இருக்கும்!

கணக்கு பாடத்தை பொறுத்த வரைக்கும் எல்லா வாத்தியார்களும் சொல்றாது கண்க்கு போட்டு போட்டு பார்த்தா ஈசியாயிடும்னுத்தான் அப்படியும் நான் ஒரு சமயத்தில் ஸ்லேட்டில் குச்சி உடைய ச்சே விரல் உடைய கணக்கு போட்டு பார்த்தும் கூட 1ம் தேறலைங்க :-(

ஆனா அதே சமயத்தில கணக்கு புத்தகத்தை வைச்சுக்கிட்டு உக்கார்ந்து அப்படியே மேலோட்டமா பார்த்தா அவ்ளோ ஈசியா இருக்கும்! ச்சே இவ்ளே ஈசியா இருக்கே நாம ரொம்ப ஃபீல் பண்ணிட்ட்டோம் போலன்னு நினைச்சு படிச்ச புக்கை தூக்கி கடாசிட்டு அப்படியே பரீட்சை ஹால்ல போய் உக்கார்ந்தா கொஸ்டீன் பேப்பர் வரும்போதுதான் நமக்குள் வேதியியல் உயிரியல் மாற்றங்களெல்லாம் தெரியும்! ஆமாங்க 1மே தோணாது எல்லாம் அப்படியே வெறுமையா அந்தராத்மாவாக மனது கிடந்து உழலும் ( இந்த இடத்துல கூட ஒரு pin நவீனத்துவ வார்ததையிடலாம்!) - அய்யோ அய்யோ படிச்சோமே ஒண்ணும் ஞாபக்கத்துக்கு வரமாட்டிக்கிதேன்னு! அப்புறமென்ன வெறும் பேப்பர்ல திரும்ப கொஸ்டீன் பேப்பரையே ரிப்பிட்டேய்ய்ய்ய்ய் போட்டு விட்டு வந்ததுதான் அதிகம்!


சரி இப்ப எதுக்கு இந்த ஃபீலிங்க்ஸ்னு கேக்கறீங்களா? இதே மாதிரிதான் எனக்கு பதிவுலகில் வரும் நகைச்சுவை நையாண்டி பதிவுகளை பார்க்கும்போதும் கூட கணக்கு புத்தகம் பார்க்கிற மாதிரியே அட நமக்கும்கூட இது மாதிரி வேற வேற சந்தர்ப்பங்கள்ள நினைச்ச விஷயங்களததான் இவுகளும் எழுதி நகைச்சுவை நையாண்டியில வகைபடுத்தி வைச்சுருக்காங்களான்னு ஒரு எண்ணம் வரும் சரி நாமும் ஒரு நாளைக்காவது இது மாதிரி பதிவு போடணும்னு வைராக்கியம் வரும்! இதுவரைக்கும் நிறைய தடவை டிரைப்பண்ணியும் அது மாதிரியான ஒரு பதிவு வரலை!!!??? (புலியை பார்த்து பூனை ச்சூடு வைச்சுக்கிட்ட கதைதான்!)

பட்! ஆனா இன்னிக்கு தட்டிட்டேன்!

நகைச்சுவை.நையாண்டி வகைப்படுத்தல் பதிவு போட்டோ ஆகணும்னு முடிவு பண்ணி போட்டுட்டேன்ல வலைச்சரத்துல...

(கணக்குன்னு வார்த்தை போட்டு எழுதறப்ப நினைபெல்லாம் எங்கெங்கோ கிளைவிட்டுப் போயிருச்சுங்க அதான் கடைசி நேரத்துல எதுக்கும் இருக்கட்டுமேன்னு பார்ட் - 1 போட்டிருக்கேன்!)

3 பேர் கமெண்டிட்டாங்க:

said...

கணக்கில் நான் 60 முதல் 80 வரை வாங்கிடுவேன். நாலாவது ஃபார்ம் படிக்கும்போது ஹிந்தி உண்டு. நீங்கள் சொன்னீர்களே கணக்கு கேள்விகளை அப்படியே எழுதுவேன் என்று. அது போல ஹிந்தி கேள்வித்தாளை எழுதி தந்து விடுவேன். ஹிந்தி வாத்தியார் சர்மா அவர்கள், "உன் கையெழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் உனக்கு 15 மார்க்" என்று சொல்வார்.
சகாதேவன்

said...

வரவர .. பார்ட் 1 இரண்டுன்னு போட்டுட்டே போறதுக்கும் சேர்த்து பட்டம் கொடுக்கனும் போலயே..

said...

சரி இதுல எதுக்கு மீரா ஜாஸ்மீன் படம்?