Showing posts with label கானா. Show all posts
Showing posts with label கானா. Show all posts

வாழ்த்துக்கள் கானா பிரபா!




நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

கானா பிரபா!



நண்பனுக்கும்
சகோதரனுக்கும்
இடைப்பட்ட ஒர் உறவுக்கு,
பெயர் இருந்தால் அதை நான்
கானா பிரபா என்றே அழைப்பேன்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கானா பிரபா

அன்புடன்,
ஆயில்யன்

அம்ருதா - கானா பிரபா !


அண்மைய காலங்களில் இவரின் நடவடிக்கைகளில் தெரிந்த சிற்சில மாற்றங்கள்!

கவிதை பேசிய ஸ்டேட்டசுகள்!

திடீர் திடீரென்று காணாமல் போன தருணங்கள்!

கொஞ்சமாய் யோசிக்க வைத்திருந்தாலும்,கேட்க கூச்சப்பட்டு கேள்விகளை முடக்கிப்போட்டு வேடிக்கை மட்டுமே பார்த்திருந்த எனக்கு உண்மை புலப்பட்டது!

வண்ணப்படங்களில் பார்க்கையில் ஆச்சர்யமே மேலிட்டது..!


ஆஸ்கார் விருது நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பற்றிய தொடர்பில் ஒரு கட்டுரை ரகுமானால் பிரபலமான பாடக பாடகியர் பற்றிய விசயங்கள் என முழுமையான,மிக நேர்த்தியாக சேகரிக்கப்பட்ட தகவல்களோடு அமைந்த கட்டுரை.

அச்சு ஊடகங்கள் வழிப்பயணத்தினை அ(ம்ருதா)வில் ஆரம்பித்திருக்கும் கானா பிரபா மேலும் பல இசைத்துறை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நல்ல கட்டுரைகளை தமிழுலகத்திற்கு வழங்க வேண்டும். 

இசைத்துறை தொடர்பான பிரத்யோக விசயங்களை தமிழ் அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் மிககுறைவான எண்ணிக்கையே,கானாவின் இசைத்துறை ஈடுபாட்டில் மேலும் பல இசைத்துறை தொடர்பான கட்டுரை செய்திகளை எதிர்ப்பார்த்து,வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.










2 கானாவுக்கு :- எப்பொழுதோ இளமை பருவத்தின் இனிமை நாட்களில் எடுத்த புகைப்படத்தினையே இப்பவும் அனுப்பிக்கொண்டிருக்கும் மர்மம் ஏனோ...?


அப்டேட் பண்ணுங்க பாஸ்...! :-)

மீள் பதிவு! - மனதில் சுகம் மலரும் மாலையிது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது ஆஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே (2)
இருகரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது

(இதழில்)

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ரகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே (2)
ஏன் இனும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தணிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்

(இதழில்)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி (2)
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாறன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கணைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதைத் தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது




(சில நேரங்களில் இங்கன இந்த பாட்டு தெரிய்லைன்னா அங்கன போய் பார்த்துட்டும் வரலாம்!)


டிஸ்கி :-
நாம எழுதுன பதிவுகள்லேர்ந்துதான் மீள் பதிவு போடமுடியுமா? ஏன் மத்தவங்க பதிவுலேர்ந்து சுட்டு போட்டா அது மீள் பதிவு வகையில் வராதா?? என எனக்குள்ளே பீறிட்டு வந்த எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் இந்த மீள் பதிவு! பாட்டு கேட்டு பாருங்க எத்தனை பேர் எத்தனை தடவை மீள் பதிவா போட்டாலும், போய் பார்த்து கேட்க துடிக்க வைக்கற ரகம்தான்!

விடுமுறை நாள்! இரவு நேரம் இது போன்ற ரா(ர)கங்களில் பாடல்கள் கேட்பது ஒரு வித சுகானுபவம்தானே!

கா.பி வித் ஆயில்யன்!

அண்ணன் கானா பிரபாவிடமிருந்து தொடுக்கப்பட்ட நான்கு கேள்விகள் அதற்கு என்னாலான நான்கு பதில்களோடு - (விவரமா சொல்லறதுக்கு நாம ஸ்ட்ரெய்ட்டா விஷயத்திற்கு போய்டலாமே...!??)

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

பதிவுலகிற்கு வருவதற்கு முன்பு

இணைய சூழல்:-

வெள்ளிகிழமை மட்டும் இரு மணி நேர இணையமாக இருந்தது

இப்போது

வெள்ளிகிழமை இருக்கும் மணி நேரங்களெல்லாம் இணையமாகவே இருக்கிறது!

வாழ்க்கை :-

முன்பு வீட்டிற்கும் நண்பர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருந்தது!.

இப்போது நெட் நண்பர்களுக்கும்,தமிழ்மணத்திற்கும் எனக்குமான தொடர்புகள் மட்டுமே அதிகம் ஆக்கிரமித்திருக்கிறது!

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கண்டிப்பாக உங்களின் கணிப்பு சரிதான்! நானே கூட சில சமயங்களில் எங்கள் பேச்சு வழக்கு பதிவு போடவேண்டும் என்று தோன்றி உடனேயே அதற்கான ஆர்வமின்மை சூழ்ந்துக்கொண்டு அதை பற்றிய எண்ணங்களை தவிர்க்க செய்துவிடுகிறது!

ஈழத்து மொழி ஆரம்பத்தில் எனக்கு தாவூ தந்த மொழிதான் - இணையத்தில் அல்ல இங்கு வந்ததும் பழக ஆரம்பித்த ஈழத்து நண்பர்களின் பேச்சு வழக்குகளால், அதுவும் ஒருவர் யாழ் மொழி மற்றொருவர் மட்டகளப்பு மொழி பேசி இவர்கள் இருவரிடமும் நான் பேசியது ஆங்கிலம் mixed தமிழ்!(ஆக்சுவலி எனக்கு நீங்க பேசுற லாங்குவேஜ் கரெக்டா விளங்கலை!) பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இருவரிடமே ஒருவர் பேசுவதை மற்றொருவர் சொல்ல கேட்டு கேட்டு கொஞ்சம் பழகிக்கொண்டுவிட்டேன்!

அதுவும் சில சொற்கள் நாங்கள் அதிகம் பயன்படுத்திய ஆனால் வேறு அர்த்தங்களினை தரும் சொற்கள் என்னை முதலில் தயக்கமுற செய்தாலும் கூட பின்னாளில் ஏற்றுக்கொள்ளமுடிந்தது! (வெளிக்கிடறேன்! ச்சீய்! & கதைக்கிறீங்கோ! வெட்டிக்கதை வேணாம்!)

பதிவுகளில் வாசிக்கும்போது கொஞ்சம் கடினமாக இருக்கும் சொற்களை மீண்டும் மீண்டும் வாசித்து செல்லவேண்டிய தேவையே அன்றி மற்றபடி அதிகம் சிரமப்படுத்தவில்லை! - இன்னும் பெருமளவு பிரதேச மொழிகளில் பதிவுகளினை வரவேற்கிறேன்! - இன்றைய பதிவு நாளைய வரலாற்றின் பக்கங்களும் கூடத்தானே..!

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

முற்போக்காக என்று சொல்வதில் எனக்கு அந்தளவுக்கு பெரிய விஷயங்கள் ஒன்றும் மனதில் தோன்றவில்லை! (இருக்கு ஆனால் எல்லாம் ”மல்லு”கட்டிக்கிட்டு வெளியே வர மாட்டிக்கிது!)

வேணும்னா இதை முற்போக்குன்னு வைச்சுக்கலாம் - தமிழ்நாட்டில இருக்கற அத்தனை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் தமிழ் முதன்மை மொழியாக செயல்படுத்தப்படவேண்டும் - (ஆனா இதெல்லாமா முற்போக்கா செய்யணும்னு யாரும் ஃபீல் பண்ணாதீங்க!) அப்புறம் இன்னொரு விஷயமாக பொது வழிப்பாட்டு அறை ஒன்று நிர்மாணித்து, பணிக்கு வரும் ஒவ்வொருவரும் சாமி கும்பிட்டபின் தான் சாட்டிங் ஆரம்பிக்கவேண்டும் என்றும் ஒரு ஆர்டர் போட்டுடுவேன்! ( ஆமாங்க காலங்கார்த்தால வந்து ”நாளை அழியப்போகும் உலகில் நாம் எதற்கு நம்பிக்கை ? யாரிடம் வைக்கவேண்டும்? என்றெல்லாம் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டுக்கிறாங்களே!)

வாய்ப்புக்கள் சாதகமாக அமைந்தால் சாதாரண வாழ்க்கையை விட, நல்லதொரு பணியாக தன்னார்வ சேவைகளில் பெயர் வெளிப்படுத்தாமல், வேண்டிய பணிகளினை செய்யவேண்டும் என்ற ஆசையும் கூட இருக்கிறது!

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

பஞ்சாயத்து தலைவர் போஸ்டிங்குக்குத்தான் எனது முதல் விருப்பம்!

காரணம் ரொம்ப சிம்பிள்:- மொழிப்பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு எல்லோரையும் சங்கடப்படுத்திக்கொண்டு ஐ.நாவில் நாயாக திரிவதை விட இங்கு லோக்கலில் நாய் மாதிரி மக்களுக்கு எதாவது செஞ்சுக்கிட்டு நாயகன் மாதிரி சீக்கிரத்திலேயே இமேஜ் பில்ட்- அப் செய்துக்கொள்ளமுடியும் அப்படின்னு நான் தீர்க்கமாக நம்புவதால்....! அப்படியே கொஞ்ச நாள் ஆச்சுன்னா ச.ம.உவாகி அப்படியே கொஞ்சமா அமைச்சராகி அப்படியே கொஞ்ச வருஷம் கழிச்சு ___________ ஆயிடணும்! (மக்கா அதுக்குன்னு டேஷ் ஆகிடணும்ன்னு நினைக்காதீங்க! எனக்கு சொல்றதுக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்கு அதான் கோடு போட்டு விட்டிருக்கேனாக்கும் நீங்களே அந்த கோட்டினையும் என்னோட ஆசையையும் பூர்த்தி செஞ்சுடுங்க!

ஒ.கே!

அடுத்து ஆப்பு வைக்கற மாதிரியான கேள்வி!5.
கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))


ஒளியில் மிளிரும் அனைத்தும் அழகானவைதான்
ஒலியில் ஒலிரும் அனைத்தும் அற்புதமானவைதான்!

ஒளியின்றி ஒலிக்கலாம் !
ஒலியின்றி ஒளிக்கலாம் !

முன்னதை விட பின்னது பார்க்க வெறுமையாய் இருக்கலாம்!
பின்னதை விட முன்னது கேட்க பெருமையாய் இருக்கலாம்!

முன்னதையும் பின்னதையும் பற்றி , (கண்ணால்) கண்டதையும் கேள்வியாக கேட்டால் நான் எண்ணத்தை எப்படி சொல்லமுடியும்!? பின் ஜொள்ளமுடியும்!?

ஆனாலும் கூட எனக்கு கிட்டதட்ட பல ஆண்டுகளாய் பிடித்தது ஒலியும் ஒளியும் தான்! (1984ல்லேர்ந்து வெள்ளிகிழமை தவறாம பாத்துருக்கேன்ல!)



(மீ த எஸ்கேப்பூ! - ஷ்ஷ்ஷ் அப்பாடா! இன்னும் எவ்ளோவோ இருக்கு அதுக்குள்ள கேள்விங்கற பேருல ஆப்புவைத்த அண்ணனுக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்கண்ணா!)

அமீரகத்து அண்ணன் சென்ஷியிடம் நான் கேக்கப்போறேன் பாருங்க கேள்வி.......!

1.தமிழ் வலைப்பதிவுகளில் கெமிஸ்டிரி வேணும்னு சொல்றாங்களே! அது பத்தி கெமிஸ்டிரி படிச்ச நீங்க எதாவது ஐடியா சொல்லமுடியுமா?

2.பின் நவீனத்துவ வாதியாக மாறிக்கொண்டிருக்கும் உங்களின் நடவடிக்கைகள் எப்படி கட்டமைக்கப்பட்டு உருவானது என்று கடுமசொற்பிரயோகமின்றி பிரக்ஞையோடு சொல்லுங்களேன்?

3. லிஸ்ட் போட்டு வாசிக்கும் உங்களின் காதல்களில் ஏதேனும் உங்களை குழப்பியதுண்டா? அதாவது நினைவுகளில் வாழ்க்கையில் யார் முன்பு வந்தது யார் பின்பு வந்தது என்ற வரிசைகளில் மாறுதல்கள் இருந்தால் எப்படி நீங்கள் செக் செய்து கொள்வீர்கள்?

4.மீரா ஜாஸ்மீனுடன் நீங்கள் எண்ண அலைகளினூடாக சென்று பேசினால் என்ன பேசிக்கொள்(ல்)வீர்கள்?