மீண்டு(ம்) வரும் மஞ்சள் பை!

ஹோட்டல்கள்;
ஜுவல்லரிகள்;
ஜவுளிக்கடைகள்;
சூப்பர் மார்க்கெட்டுக்கள்,
என சகலவிதமான பொருட்கள் விற்கும் இடங்களும் பெருகின்றன விற்கும் பொருட்களுக்கான விலைகளும் பெருகுகின்றன.

இந்த பெருக்கத்தினூடாகவே சுற்றுசுழலுக்கு கெடுதல் விளைவிக்கும் விதவிதமான வகை வகையான வண்ண பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டோ போகிறது.

வாங்கும்போது இருக்கும் ஆர்வம் சில பல நாட்களில் விரைந்து குறைந்து அலட்சியமாக தூக்கிவீசப்படும் அந்த பிளாஸ்டிக் பைகள் பூமிக்கு பாரமாகவே தங்குகின்றன!

முன்பெல்லாம் ஹோட்டல்களுக்கு ஏதேனும் உணவுகள் பார்சல் வாங்க சென்றால் தூங்கு வாளி ( தளும்பற மாதிரி ஊத்துப்பா சாம்பாரை!) கொண்டு சென்ற பழக்கமெல்லாம் எப்போழுதோ போயே போய்விட்டது! இப்ப்போதெல்லாம் ரொம்ப சிம்பிளாக பிளாஸ்டிக் கவரில் கட்டி அந்த நூலினை உருட்டோ உருட்டென்று உருட்டி கொடுக்கையில் வெள்ளை நூல் கருத்திருக்கும் (எப்படிப்பா கருத்துப்போகுது அப்படின்னெல்லாம் நான் கேக்கமாட்டேன்ப்பா?!)


இதேபோன்று ஜவுளிக்கடைகளுக்கு சென்றுவந்தால் முழுதும் மஞ்சள் துணிப்பைகளுக்குள் முழ்கியபடியே வரும் பெற்றோர்களையே, பார்த்த காலங்கள் கரைந்துப்போயிற்று! இப்ப டைலர் கடைகள் வரைக்கும் கலர் கலரான டிசைன்களில் ஐஸ்வர்யா ராயும் ஏதோ ஒரு பாரின் இளைஞனும் அழகான உடைகளில் காட்சியளிக்கும் பிளாஸ்டிக் கைப்பைகள்தான் இருக்கிறது!


மஞ்சள் பையின் மகத்துவம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது!இயற்கை நலனில் அக்கறை கொண்டவர்கள் பிளாஸ்டிக் மாயையிலிருந்து விட்டு விலகி துணிப்பைகளுக்கு தாவுங்கள் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள்!


இன்னும் சில ஆண்டுகள் கழித்து நாம் எப்ப்டி பள்ளிகளுக்கு மஞ்சள் பையினை அக்குளிலோ அல்லது கையில் தொங்கவிட்டப்படியோ அல்லது கையில் வைத்து தோளில் தொங்கவிட்டப்படி போனோமோ, அதே போன்று செல்ல, நம் இளம் தலைமுறை தயாரகிகொள்ளும் நாள் வரப்போகிறது! பை கிழிந்துப்போகும் அளவுக்கு புக்ஸ் இருக்காதுங்க! அதையும் அப்போதைய் சூழலில் கொறைச்சுடுவங்க!(பை காது அறுந்து அதற்கு ஊக்கு ( பின்) தேடும் நிலையெல்லாம் வராது பயப்படாதீங்க!)

மஞ்சள் பை பயன்படுத்த இப்பலேர்ந்தே ஆரம்பிச்ச்சுடுங்க!

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

me the first:)

said...

மஞ்ச பையா? என்னதான் சொன்னாலும் பிரஸ்டீஜ் பாதிக்குமே? கிராமத்தான் போல இருக்குன்னு வீட்டம்மா திட்டுதுங்க... அவ்வ்வ்வ்
என்ன செய்யலாம்?...

said...

நல்ல மாட்டரு...

நிச்சமாக வரவேற்க வேண்டிய விடயம்...

said...

நான் முதலாவது இல்லன்னா அந்த கமன்ட விட்டுடுங்க...

said...

அது சரி துணிப்பையிலல்லாம் திரிஷா படமோ, ஸ்ரேயா படமோ போட முடியாதாண்ணே...:)

said...

ஊரில் இருக்கற ஒரு பொருளை விடறதா இல்லையாய்யா... இப்படி கொசுவத்தியா சுத்திவிட்டா ..(இருமல்) ....

இங்க மஞ்சப்பைக்கு பதிலா ப்ரவுண் பை வச்சிருக்கோம். நானெல்லாம் எப்பவோ துணிப்பைக்கு மாறியாச்சுங்கோ..

said...

ஒரு காலத்தில மஞ்சப் பையில சாமான்
எடுத்துக்கிட்டு போனா கேவலம். ஊர் நாட்டான் அப்படின்பாங்க.

இப்ப அதுவே ஈக்கோ ஃப்ரெண்ட்லின்னு ஆச்சு.

ஓல்ட் இஸ் கோல்ட்

said...

நம்ம ஊர்ல அதிமுக பை, அதாவது பச்சை நிறப்பை

said...

///புதுகைத் தென்றல் said...
ஒரு காலத்தில மஞ்சப் பையில சாமான்
எடுத்துக்கிட்டு போனா கேவலம். ஊர் நாட்டான் அப்படின்பாங்க.

இப்ப அதுவே ஈக்கோ ஃப்ரெண்ட்லின்னு ஆச்சு.

ஓல்ட் இஸ் கோல்ட்///


ரிப்பீட்டேய்....

said...

சிங்கையில் ஒரு இயக்கம் நடக்கிறது, பேரங்காடிகளுக்கு சொந்தப் பைகளைக் கொண்டு வருவதற்காக..
இதன் படி ஒவ்வொரு புதன் கிழமையும் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருவோர் தங்கள் சொந்தப் பைகளைக் கொண்டு வரவேண்டும்..

முதலில் மாதத்தின் முதல் புதன் மட்டும் என்று இருந்ததை இப்போது அனைத்து புதன் கிழமைகளுக்குமாக மாற்றியிருக்கின்றனர்...

said...

//தமிழ் பிரியன் said...
மஞ்ச பையா? என்னதான் சொன்னாலும் பிரஸ்டீஜ் பாதிக்குமே? கிராமத்தான் போல இருக்குன்னு வீட்டம்மா திட்டுதுங்க... அவ்வ்வ்வ்
என்ன செய்யலாம்?...
//

எவ்வளவோ திட்டுக்களில் இதுவும் ஒண்ணுன்னு கண்டுக்காம போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதானே :)))

said...

//தமிழன்... said...
நான் முதலாவது இல்லன்னா அந்த கமன்ட விட்டுடுங்க...
/

ஒண்ணும் பிரச்சனையில்ல!

தமிழன்தான் முதல்ல இருக்காங்க:))

said...

//ஜெகதீசன் said...
சிங்கையில் ஒரு இயக்கம் நடக்கிறது, பேரங்காடிகளுக்கு சொந்தப் பைகளைக் கொண்டு வருவதற்காக..
இதன் படி ஒவ்வொரு புதன் கிழமையும் கடைகளுக்கு பொருள்கள் வாங்க வருவோர் தங்கள் சொந்தப் பைகளைக் கொண்டு வரவேண்டும்..

முதலில் மாதத்தின் முதல் புதன் மட்டும் என்று இருந்ததை இப்போது அனைத்து புதன் கிழமைகளுக்குமாக மாற்றியிருக்கின்றனர்...//

அருமையான தகவல்!
நன்றிகள் :))

ம் நம்ம ஊர்க்காரங்களும் கூடிய சீக்கிரம் இப்படி மாறிடுவாஙக்ன்னு நினைக்கிறேன் பார்ப்போம்!

said...

முன்னெல்லாம் பழைய நியூஸ்பேப்பரில் சாமான்களை சுற்றி சணல் கயிரால் கட்டித்தான் கடைகளில் தருவார்கள். 60களில் என் அத்தை இப்படி வரும் பார்சல்களை பேப்பர் கிளியாமல் பிரித்து மடித்து வைத்துவிட்டு, சணல் கயிரை பந்தாக சுருட்டி வைத்திருப்பார்கள். வீட்டிலிருந்து சாமான் ஏதாவது கொண்டு செல்லும் போது அந்த பேப்பரில் சுருட்டி சணலால் கட்டி தருவார்கள்.
இப்போது ப்ளாஸ்டிக் பையைக்கூட மீண்டும் உபயோகிக்காமல் குப்பையாக வீசிவிடுகிறர்கள்.
கடைக்கு இனி பை நாமே கொண்டு செல்வது நல்லதுதான்.
சகாதேவன்

said...

சுற்றுச்சூழல் குறித்த ஆர்வம் பெருகி வரும் நிலையில் பாலித்தீன் பைகளுக்கு எதிரான இந்த பதிவை வரவேற்கிறேன்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பதில் அரசுக்கு இணையாக நமக்கும் கடமைகள் உள்ளன.

இந்த ஆண்டின் சுற்றுச்சூழல் தின(ஜூன் 5)த்தில் இயன்றவரை பாலித்தீன் பயன்பாட்டை குறைப்பதற்கு உறுதி ஏற்போம்.

said...

//நூலினை உருட்டோ உருட்டென்று உருட்டி கொடுக்கையில் வெள்ளை நூல் கருத்திருக்கும் (எப்படிப்பா கருத்துப்போகுது அப்படின்னெல்லாம் நான் கேக்கமாட்டேன்ப்பா?!)//

ஆனா நான் கேப்பேன்.. எப்டிப்பா கருத்து போகுது...

ஹ்ம்ம்ம்.. வர வர மொக்கை பதிவர்கள் கொறைஞ்சிட்டே வராங்க.. எல்லாரும் உருப்படியா எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. ஆசை தீர கும்மி அடிக்க கூட முடியலை..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

நல்லா எழுதியிருக்கிய அன்னாச்சி:))

தினத்துக்கும் பதிவு போட ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு கிடைக்குது பாருங்க!!
நீங்க ரொம்ப நல்லாயிருப்பீகண்ணே,வாழ்க:))

said...

மஞ்சள் பை கிடைத்தால் விட மாட்டேன். நம்ம ஊரிலும் சில துணிக் கடைகளில் மஞ்சள் பைகள் தராங்க.
என் அலமாரியில் நிறைய பொருட்களைப் பத்திரமாக வைக்க மஞ்சள் பைதான் உபயொகமாகும்.
எல்ஜி பெருங்காயப் பை நினைவிருக்கிறது.
உண்மையாவே இப்படி துணிப்பைகள் உப்யோகத்தில வந்தா நல்லா இருக்கும்.

said...

எங்க ரங்கமணி மஞ்சப்பை மகத்துவத்தைப் பற்றி அடிக்கடி இப்படிச் சொல்வார்,' மஞ்சப்பையை
சுருட்டி கக்கத்தில் இடுக்கிக் கொண்டு
போவோரை பட்டைகாட்டான் என்பார்கள். ஆனால் அந்த மஞ்சப்பையை வாங்கி பிரித்துப் பார்த்தால் அதில் ரூபாய் நோட்டுக்கள் கட்டுகட்டாயிருக்கும். பந்தாவா உடையணிந்து கையில் ப்ரீஃப் கேஸோடு போவார். அந்த ப்ரீஃப் கேஸை திறந்து பார்த்தால் அதில்
அழுக்கு பனியனும் ஜட்டியும்தான் இருக்கும்.' தெரிந்ததா மஞ்சள் பையின் அருமை!!!