இதுதான்ய்யா தேன் கிண்ணம்!

கடுமையான வேலையாகிப்போயிடுச்சு இன்னிக்கு ஆபிஸ்ல :-(

சரி நாமளும் ஆபிஸ்ல அப்பப்ப வேலை பாக்குறோம்முனு தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிச்சு அதை ஆவணப்படுத்தியே ஆகணும்னு ஒரு யோசனையில் இந்த ஆவணப்படுத்தலினூடாகவே தமிங்கிலீஸ் அரங்கேறியது!

ஒரு வழியாக ரொம்ப திருப்தியுடன் நான் செய்த அலுவலக பணியும், ஹெட்டின் GOOD டோடு நலமாக முடிந்தது!

சரிடாப்பா ஒரு சாங் பாடிக்கலாம்னு நினைக்கறப்பவே தானாகவே முணுமுணுத்த பாடல்தான் இது! அட நம்ம நண்பர்களுக்கும் சொல்லுவோம் இந்த விஷயத்தை அப்படின்னு இந்த போஸ்ட்டு வேற (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!)

நம்ம தமிழ் பதிவுலகில் தேன் கிண்ணத்து தேனீக்களும் சும்மா அசத்திக்கிட்டுத்தாங்க இருக்காங்க அப்படின்னு சொல்றதுக்கும் கூட...! ஆமாங்க சும்மா ஒரு லைன் போட்டு கூகுளாண்டவரை வேண்டுனா அப்படியே பறந்து வந்து நிக்கிறாங்கங்க!

நன்றிகள் + வாழ்த்துக்கள் தேன் கிண்ணம்!

முணுமுணுத்த பாட்டையும் நீங்க கேட்டுக்கிட்டு போங்க ப்ளீஸ்!இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

(இன்றைக்கு)

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
(இன்றைக்கு)

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

(இன்றைக்கு)

நன்றி தேன்கிண்ணம் - கப்பி!

இங்க பாட்டு பார்க்க முடியாதவங்க இங்க போயும் பார்க்கலாம் ஆனா எப்படியும் பார்க்கணும் கண்டிப்பா ஒ.கே!

23 பேர் கமெண்டிட்டாங்க:

said...

Kndippa paarkkiren(ada thamingileesu)

said...

விளம்பரச்சேதிக்கு நன்றிங்கண்ணோவ்!

said...

சூப்பரப்பு....

said...

:)

நன்றி!

said...

:) இரட்டை நன்றி...

பாஸ் கிட்ட குட் வாங்கினதுக்கு வாழ்த்து..தொடர்ந்து குட் வாங்கவும்.

said...

:) நன்னி!

said...

நல்லா இருக்கும் இந்த பாட்டு! நன்றி:-))

said...

அருமையான பாட்டுண்ணே! இப்ப பாட்டு சீசனா?.... நல்லா இருக்கு :)

said...

சில பல காரணங்களுக்காக இந்த பாட்டை நான் எனது எம்பி3 ப்ளேயரிலிருந்து நீக்கியதால், அதன் பிறகு இதை கேட்கவில்லை.....:-(((((

said...

//நிஜமா நல்லவன் said...
Kndippa paarkkiren(ada thamingileesu)
//

அட நீங்களுக்கும் நம்ம ரகசிய பாஷை தெரிஞ்சுபோச்சோ??

said...

//Jeeves said...
விளம்பரச்சேதிக்கு நன்றிங்கண்ணோவ்!
/

நன்றிங்கண்ணா! (அப்ப பொட்டி உண்டா?? கொடுக்காட்டி, என்னைய போட்டோ புடிக்கச்சொல்லி உங்களை மிரட்டுவேன்!)

said...

//கப்பி பய said...
:)

நன்றி!
//

:) - நன்றி !

நன்றி - நன்றி !

அப்படியே உங்க கை வண்ணத்தில் பாட்டு வரிகளை பதிவிட்டமைக்கும் நன்றிகளுடன்...!

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
:) இரட்டை நன்றி...

பாஸ் கிட்ட குட் வாங்கினதுக்கு வாழ்த்து..தொடர்ந்து குட் வாங்கவும்.
//

தாங்க்ஸ்க்கா!

அப்பப்ப வாங்குவேன்! அதனாலதான் நானும் கூட அவரை ”குட்”ன்னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்கேன் :))

said...

//கூடுதுறை said...
சூப்பரப்பு....
//

தாங்க்ஸ்ப்பா :))

said...

//இராம்/Raam said...
:) நன்னி!
//

ரொம்ப நன்றி!

said...

//அபி அப்பா said...
நல்லா இருக்கும் இந்த பாட்டு! நன்றி:-))
//

எல்லா புகழும் அந்த தேனீக்களுக்குத்தான் :))

said...

//தமிழ் பிரியன் said...
அருமையான பாட்டுண்ணே! இப்ப பாட்டு சீசனா?.... நல்லா இருக்கு :)
//

பாட்டுக்கு எப்பங்கண்ணா சீசனு!

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்தானே :))

said...

//ச்சின்னப் பையன் said...
சில பல காரணங்களுக்காக இந்த பாட்டை நான் எனது எம்பி3 ப்ளேயரிலிருந்து நீக்கியதால், அதன் பிறகு இதை கேட்கவில்லை.....:-(((((
//

ச்சின்னப்பையன் என்ன பெரிய கதையெல்லாம் இருக்கும்போல!

பரவாயில்ல! ச்சும்மா கேட்டுட்டு அப்புறம் விட்டுடுங்க ( தவறா இருந்தா மன்னிச்சுடுங்க! )

said...

:-)

said...

சின்னப்பாண்டி

இப்பவாச்சும் பொறுப்பான பையனா காதலில் விழுந்ததுக்கு வாழ்த்துக்கள் :)

said...

\\கானா பிரபா said...
சின்னப்பாண்டி

இப்பவாச்சும் பொறுப்பான பையனா காதலில் விழுந்ததுக்கு வாழ்த்துக்கள் :)
\\

தல

அண்ணன் எப்பாவே விழுந்துட்டாரு. ;)

said...

எனக்கு ரம்பா ரம்பா புடிச்ச பாட்டுல இதுவும் ஒன்னு பெரிய அண்ணா. :)

said...

ஆனா, அந்த பாட்டை நீங்கள் முனுமுனுத்ததற்கு வேற ஒரு ”சுப”மான காரணத்தை அல்லவா ரொம்ப நல்லவரு சொனனாரு.. ;)