சிட்டுக்குருவிகள்
சங்க காலம் முதல் பாரதியார் பாடல்கள் வரை போற்றிப் புகழ்ந்த சிட்டுக் குருவிகள், இன்று நம்மைவிட்டு எட்டாத இடத்துக்குப் போய்விட்டன.
சிறுவயதில் மூத்த குடிமக்கள் வாழ்ந்த பழைய வீடுகளின் மூலை முடுக்கு சுவரின் பொந்துகளில் கூடுகட்டி கீச்...கீச்... என்று சத்தமிட்டபடி அங்கும் இங்கும் வீட்டுக்குள்ளேயே பறந்து செல்லும் சிறிய குருவிகள் இன்று எங்கே போய்விட்டன?
சுற்றுச்சூழல் மாறுதல்களால் நம் எதிர்கா லச் சந்ததியினருக்கு பல இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதில் சிட்டுக் குருவி இனமும் ஒன்று. இது பற்றிய விழிப்புணர்வில்லாமல் பல விஷயங்களால் நாம் கண்டுகொள்ளாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் நமது கட்டட அமைப்புதான். வீடுகளில் உத்தரங்கள், காற்று துவாரங்கள், ஓட்டு வீடுகளில் ஓடுகளுக்கிடையே உள்ள சந்துகள் சிட்டுக் குருவிகளின் வாழ்விடமாக இருந்தன.
தானியங்களைப் புடைக்கப் பயன்படுத்திய முறங்களில் இருந்து விழும் குறுநொய், வீட்டு முற்றங்களில் பாத்திரங்களைக் கழுவும் போது அவற்றில் எஞ்சியிருக்கும் சோற்றுப் பருக்கைகளைச் சாப்பிட்டு குருவிகள் உயிர் வாழ்ந்து வந்தன.
உடலுக்கு வலிமை தரும் அந்த தானியங்களைச் சாப்பிடுவது குறைந்து பீசா, பர்கர், ஃபாஸ்ட் புட் கலாசாரத்துக்கு நாம் மாறிவிட்டோம்.
கல், குறுநொய் நீக்கப்பட்ட கம்ப்யூட்டர் அரிசி, கோதுமை என்றாகிவிட்டது. வீட்டுச் சமையல் அறைகளில் இருந்து சோற்றுப் பருக்கைகள் "சிங்க்' மூலம் நேராக பாதாள சாக்கடைக்குப் போய்விடுவதால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு என்பதே கனவாகிவிட் டது.
உணவு, வாழ்விடம் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் நகரப் பகுதியில் இருந்து கிராமப்புறங்களுக்கு இவை குடிபெயர்ந்து விட்டன. சுமார் 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழக்கூடிய இக்குருவிகள் ஊர்க் குருவிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்டு முழுவதும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். 3 முதல் 5 முட்டைகள் வரை இடும்.
சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்டத் தெரியாது. வீடுகளில் உள்ள சந்து, பொந்துகளில் அருகம்புல், வைக்கோல், குப்பைகளில் உள்ள நார்க்கழிவுகள், பஞ்சு போன்றவற்றை திணித்து அவற்றில் முட்டையிடும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும். முருங்கை, கருவேலமரம், அவரைக் கொடி, பூசணிக்கொடியில் உள்ள புழுக்கள் மட்டுமே சிறிய குஞ்சுகளுக்கு உணவு. புழுக்கள் உருவாகும் செடிகள் நகரத்தில் இல்லாமல் போய்விட்டன.
சிறிய பொந்துகளில் தங்கும் இந்தக் குருவிகளுக்கு குஞ்சுகள் பொறித்தவுடன் போதிய இடவசதி இருக்காது என்பதற்காக குஞ்சு களை கூட்டில் தனியாக விட்டுவிட்டு ஆண், பெண் குருவி மட்டும் வீட்டுக்கு அருகில் உள்ள குட்டையான மரங்களில் அமர்ந்து இரவுப் பொழுதைக் கழிக்கும்.
நன்றி - தினமணி
நன்றி - தினமலரில் இன்று 20.03.2010 வெளியான செய்தி
சிட்டுகுருவிகள் விஷயத்தில் நம் நடவடிக்கைகள் எல்லாமுமே மாறி விட்டன! தெருக்களில் விளையாட்டின் போது அல்லது விளையாட்டே சிட்டுகுருவி காண்பது என்றிருந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன! நமக்கே தெரியாமல் நாம் செய்யும் தீமைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே செல்கிறது! தெரிந்த விஷயங்களாய் இது போன்ற சிட்டுகுருவிகளின் மறைவுகள் இருக்கும்போது தெரியாத எத்தனை எத்தனை உயிர்கள் நம்மால் காணமல் அடிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றனவோ....???
# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க
பளீஸ் வேணாம்..!

இது ரொம்ப சகஜமானதொரு அனைவராலும் அலட்சியமாக அட! இதனால என்ன பெருசா ஆகிடப்போகுதுன்னு மனோபாவத்தோடு செய்யப்படும் சமூக பணி!
சுத்தம் செய்யும் பணிதான் ஆனாலும் ஊர் சுத்தமாகிறது - உலகம் அசுத்தமாக்கப்படுகிறது!
குப்பைகளாகிவிட்ட இலை தழைகளை தீயிலிட்டு தயவு செய்து எரிக்காதீர்கள் என்று பல இடங்களிலிருந்து பலமுறை வேண்டுக்கோள்கள் விடுக்கப்பட்டும் கூட,மக்களிடம் பழக்கமாகிவிட்ட இந்த வழக்கத்தினை மாற்ற இயலவில்லை :-(
சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி வரைமுறைக்குட்பட்டு நடக்கும் அரசாங்க அலுவலகங்களில் கூட இதே முறையினைத்தான் பின்பற்றப்பட்டு வருகிறது! அலுவலக வளாகங்களில் வளர்ந்து நிற்கும் மரங்களின் இலைகள் வாரத்திற்கொருமுறை இவ்வாறு தீயிலிட்டு எரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது!
பெரும்பாலும் இப்படியாக அப்புறப்படுத்தும் பணிகள் அதிகாலை வேளைகளிலோ அல்லது இரவு நேரங்களிலோதான் நடைப்பெறும்!
இப்படி எரிக்கப்படும் போது வெளிப்படும் மிக நுண்ணிய தூசுகள் அந்த புகையாக வெளிப்பட்டு காற்றில் கலக்கிறது!
காற்றினை சுவாசிப்பவர்களின் சுவாசக்காற்றாக மாறுகின்றது பின் வெகு விரைவில் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகச்செய்கிறது!
சிறு பணியாக நாம் செய்தது பெரும் தவறாக வியாபித்து நம்மையே நோய் கொண்டு வதைக்கிறது!
நம்மால் முடிந்தவரை தடுப்போம்!
நம்மால் முடிந்தவரை தவிர்ப்போம்!
# ஆயில்யன் 20 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை
வாழைக்காய்!
>>>>>>>>>
எளிதாய் கிடைக்கக்கூடிய விளை பொருளாக நம் இல்லங்களிலிருந்து பெற்றுக்கொள்ளமுடிந்த வாழைக்காய் முக்கிய விசேஷங்களின் கட்டாயம் சமையலில் சேர்க்கப்படும் ஒரு காய்! கனியாகவும் இருக்கும் - ரொம்ப கனிந்து போச்சுன்னா கண்றாவியாவும் இருக்கும்!
சுமாராக பல வருடங்களுக்கு முன்பு வரை எல்லோர் வீடுகளிலும் கொல்லையில் தோட்டம் போடுவதையும் அதில் வாழை போடுவதையும் ஒரு வழக்கமான பழக்கமாக வைத்திருந்தார்கள் நம் தமிழ் மக்கள்!இன்றைய காலகட்டத்தில் 2400 சதுர அடி பிளாட்டில் கான்கீரிட் தவிர்த்து மணலை காண்பதே அரிதாகிப்போய்விட்டது! இன்னும் நெருக்கமாய் வீடுகள் அமைந்து, கொஞ்ச நாள் கழித்து அடுத்தவன் வீட்டு மூச்சுக்காற்று என் வீட்டிற்குள் வருகிறதே என்று மொத்தமாய் மூடிவிடும் வாய்ப்பும் அதிகம்!
சரி சிட்டியை விட்டுட்டு கிராமப்புற போகலாம்ன்னு பார்த்தா, அவ்வ்ப்போது வநது கொல்லும் பலத்தமழைக்கு பயந்து வாழைத்தோட்டம் என்ற ஒரு சொல்லினையே சொல்ல தயங்க ஆரம்பித்துவிட்டனர்!
ஏதோ இருக்கும் ஒரு சிலர் மட்டுமே மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு விளைவிக்கும் வாழைகள் அது தரும் கனிகள் தான் இன்றும் இந்த வாழையின் பெயர் மார்கெட்டுக்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்க காரணமாய் அமைந்திருக்கின்றன!
வாழைக்காய் இரும்புச்சத்து மாவுச்சத்து கொண்ட காய் என்பதால் சிறுவயது முதலே உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேணடிய பொருளாக நம் பெரியோர்கள் கட்டளை இட்டுவிட்டனர் போலும்!
ஆங்கில காய்கறிகளின் ஆதிக்கத்துக்கு முன்பு நம் சமையலறைகளினை ஆக்ரமித்து இருந்த காய்கறிகளில் வாழைக்காய்,வாழைப்பூ & வாழைத்தண்டு இவைகள்தான் ஸ்பெஷல்!
ஜஸ்ட் வாழைதண்டு போட்டு சாம்பார் வைச்சு,வாழைக்காய் பொரியல் செய்து,வாழைப்பூ போட்டூ கூட்டு வைத்து சமைத்து சாப்பிட்டாலே ஒரு பெரிய விருந்தே சாப்பிட்ட மாதிரியான பீலிங்க் இருக்கும் அப்படின்னுயாரும் சொல்லலை ஆனா நான் அப்படி தின்னு நிறைய் தடவை ஃபீல் பண்ணியிருக்கேன் இப்ப கிடைக்காம, திங்க முடியாம ஃபீல்பண்றேன்!
சரி எனக்கு ரொம்ப பிடிச்ச ஐட்டங்கள் மட்டும் சொல்றேன்! உங்களுக்கு பிடிச்ச வாழைக்காய் ஐட்டம் எதாவது இருந்தா வாய்ப்பு கிடைச்சா செஞ்சு சாப்பிட்டு வந்து சொல்லுங்க ஒ.கே!

வாழைக்காய் காரக்கறி - அதுவும் கொஞ்சம் காரத்தோட மிளகு சீரகம் போட்டு வாழைக்காயை வில்லை வில்லையா நறுக்கிப்போட்டு செஞ்சா...! ச்சே சான்ஸே இல்லப்பா!( இப்ப அதிகம் உருளைகிழங்கு யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க! :-( )
வாழைக்காய் பொறியல் - இது அதிகம் எல்லோருமே சாப்பிட்டிருக்ககூடும்! அழகிய ஸ்கெயர் டைப்புல வெட்டி அதுல தேங்காய் துருவிப்போட்டு.....!
வாழைக்காய் பஜ்ஜி- இது நீளமா வெட்டிபோட்டு பஜ்ஜி போட்டாலும் சரி இல்ல வில்லையாக்கினாலும் சரி சூப்பர் டேஸ்ட் அத்தோட கொஞ்சம் தேங்காய் சட்னி சைடுல உட்டுக்கிட்டா சூப்பரோ சூப்பர்! (வெளியே கடையில செக்கசெவேல்ன்னு விக்கிற பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதீங்கப்பு!)
கூடுதல் தகவல்:-
தமிழ் பெயர்:- வாழைக்காய்
ஆங்கில பெயர்:- Plantain, green
அறிவியல் பெயர்:- Musa sapientum
# ஆயில்யன் 16 பேர் கமெண்டிட்டாங்க
நாம் அடிமைகளாகிப்போன அவலம்!
19.08.08 செய்திகளில்....!
நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் சென்னைக்குத் திரும்பியுள்ளது. நேற்று காலை முதல் பல விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்லை என்று கூறி கயிற்றைக் கட்டி மூடி விட்டனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாலை வாக்கில் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஸ்டாக் இல்ைல என்ற வாசகம் காணப்பட்டது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசல் பஞ்சம் திரும்பி விட்டதோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பாதிக்கும் மேலான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போதிய சப்ளை இல்லை என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காரணம் கூறப்படுகிறது. சப்ளை வந்தால்தான் விநியோகம் சுமூகமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக திறந்திருக்கும் ஓரிரு பெட்ரோல் நிலையங்களில் பெருமளவில் கூட்டம்காணப்படுகிறது. திடீரென பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டதால் பெட்ரோல், டீசல் தீர்ந்து போன வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே தேக்கமடைந்து காணப்பட்டது.
# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க
நம் ஆழ்வார்!
இந்த பெயரினை பிரபலப்படுத்திய பெருமை கண்டிப்பாய் நம் தினசரி பத்திரிக்கை மீடியாவுக்கே போய்சேரவேண்டும்!
இயற்கை விவசாயம் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வினை கொண்டு வரும் நோக்கில் இவர் மேற்கொண்டுள்ள பயணங்கள் பயன் தரும் நிச்சயம்! மிகத்தெளிவான கருத்துக்கள்! பொதுவில் பார்த்தால் இவரின் கருத்துகளையொத்த கருத்தினை உடையவர்கள் இன்றும் கிராமங்களில் டீக்கடைகளுக்கு முன்பு சாலை ஒரங்களில் உட்கார்ந்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருப்பவைதான்!
பத்திரிக்கைகளில் வெளி வர ஆரம்பித்த இவரினை பற்றிய செய்திகள் மற்றும் இவரின் ஆலோசனைகள் பலவும் இயற்கை விவசாயத்தின் நோக்கம் அதனால் நாம் பெறப்போகும் நன்மைகள் நம் வருங்காலத்து தலை முறைகள் பெறப்போகின்ற நன்மைகளினை பற்றிய விளக்கத்தில் கண்டிப்பாக பலரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே அமைந்தது!
இயற்கை விவசாயம் தொடர்பாக தமிழ் நாடு முழுக்க சுற்றி வரும் இவரினை ஓரிடத்தில் காண்பது என்பது மிக சிரமமான காரியமாம்! நிறைய விவசாயிகளை செய்ற்கை உரங்களின் பய்ன்பாட்டிலிருந்து விடுவித்து இயற்கை விவசாய முறைகளை மேற்கொள்ள பயிற்சியும் ஊக்கமும் கொடுத்து வருவதில் தான் தன் அனைத்து முயற்சிகளையும் செலவிட்டு வருகிறார்!
இவரின் மனதில் நிற்கும் பெரும்பாலும் வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் செயல்படுத்த நினைக்கும் பணி மரம் நடும் பணி ஒன்றுதானாம்! அது சம்பந்தமாக மிக எளிய பேச்சு வழக்கில் இவர் கூறும் விஷயங்கள்! நம் பெற்றோர்கள், நம் தாத்தாக்கள் சொல்லும் அறிவுரை போன்றே அத்தனை எளிமையாய்,நாம் முயற்சித்தாலும் கூட மிக எளிதாய் செயல்படுத்தகூடிய விசயங்கள் தான் இவை!
கொஞ்சம் கேட்டுப்பாருங்களேன்!
# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை
விறகு ராட்டி அடுப்பு! - திரும்புதல் இயற்கை
உலகம் உருண்டையானது நீ ஒரிடத்தில் விட்டு பிரியும் நபரை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அதே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பினை பெறுவாய் என்ற ரீதியில் ஆட்டோ கிராப் போட்டு தந்த அந்த சகோதரியின் நினைவு வந்தது! ஆட்டோ கிராப் மட்டுமல்ல கிராமப்புற வாழ்க்கை பற்றிய சில பல செய்திகளும் கூட நான் கல்லூரி நாட்களில் அந்த சகோதரியிடமிருந்துதான் பெற்று, கற்றுக்கொண்டேன்!
சரி மேட்டருக்கு வர்ரேன்!
கிராமப்புறங்களில் அதிகாலை எழுந்து மாட்டுத்தொழுவத்தினை சுத்தம் செய்து,மாடுகளை அந்த இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் குறிப்பாக கொஞ்சம் வெயில் வந்து விழும்படியான இடத்தில் கட்டி விட்டு ( அந்த மாட்டு கயிற்று சுருக்கு போடற ஸ்டைல்லு இன்னிக்கும் கூட உங்களை ரசிக்கவைக்குற ஒரு விசயம்தாங்க!)மாட்டுச்சாணங்களை குவித்து, மாடுகளின் உணவில் மீந்த சிதறிக்கிடக்கும் வைக்கோல்களோட சேர்த்து அள்ளி தனியாக ஒரிடத்தில் குவித்து அழகாய் வட்டமாய் உருவமைத்து வெயிலிலிட்டு, காயவைத்து பெரும்பாலும் தம் வீட்டு உபயோகத்திற்கும், சிலர் மற்றவர்களுக்கும் கூட விற்பனை செய்யும் அந்த ராட்டி பற்றி மேலும் சொல்வதற்க்கு என்னிடம் ஒரு விசயமும் இல்லை!
ஆனால்,இதே இந்த கான்செப்டினைத்தான் இப்போது படு வேகமாய் பரப்பிக்கொண்டு வருகிறார்கள் இந்த என்விரோபிட் அமைப்பினை சார்ந்தவர்கள்!
அதிகரித்துவரும் சுற்றுசுழல் மாசு அதை விட வேகமாய் அதிகரிக்கும் எரிபொருட்களின் விலைகள் இவை எல்லாவற்றிற்குமே இது ஒரு எளிய தீர்வாய் அதே சமயத்தில் மிகப்பெரிதாய் சுற்றுசுழலுக்கு மாசு ஏற்படுத்தவண்ணம் இவர்களின் தயாரிப்பில் விலை குறைவான சமையல் அடுப்புக்களை தற்போது விநியோகித்துக்கொண்டு வருகின்றனர்!

எப்பொழுதோ அல்லது இப்பொழுதும் கூட நம் கிராமங்களில் பயன்பாட்டில் இருக்கும் இதே போன்ற விஷயங்கள் இன்னும் கூட நம்மில் அலட்சியமான பார்வையில் பட்டுத்தான் ஒளிர்ந்து அல்லது ஒளிந்துக்கொண்டிருக்கின்றன!எது எப்படியோ வெளிநாடுகளிலிருந்தும்,இயற்கை பற்றிய விழிப்புணர்வுகளின் பிரச்சாரத்தின் மூலமும் இது போன்றதொரு விசயம் நம் கிராமங்களுக்கு செல்லும் போது நம் கிராம மக்கள் சொல்லும் செய்தி இதுவாகத்தான் இருக்கும் !
அட இதுதான் எங்களுக்கும் தெரியுமே!
# ஆயில்யன் 4 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை
சுத்தம் காசு போடும் - ஆய் மேட்டர்!

பொது இடங்களில் அசுத்தம் செய்தால் தண்டனை - அறிவிப்புகள் ஆங்காங்கே காணும் அதே நேரத்தில் அங்கோ அல்லது அதற்கு அருகில் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு வகையில் அசுத்தம் செய்து கொண்டிருப்பதையும் காணும் நிகழ்வுகள் தான் அதிகம் நம் அன்னை தமிழ் நாட்டில்!
ஆனாலும் கூட ஒரு ஆச்சர்யமான நிகழ்வு நடந்துக்கொண்டிருக்கிறது நம் தமிழ்நாட்டிலேயே...!
தனியார் தன்னார்வ அமைப்பு ஒன்றும் மற்றும் அரசு வேளாண் பல்கலையும் இணைந்து, தினமும் சுத்தமான முறையில் அசுத்தம் செய்பவர்களுக்கு தலா பத்து பைசா தந்து ஊக்குவிக்கும் ஒரு முறையினை செய்லபடுத்தியுள்ளதாம் - திருச்சி அருகில் இருக்கும் முசிறியில்....!
பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கழிவு நீர் அறை ஒன்று வீதிகளின் அமைக்கப்பட்டு தற்போதைக்கு அதாவது இந்த நிமிடம் வரைக்கும் ஒன்லி ஒண்ணும் மட்டும்தானாம்! வேளாண் பல்கலையின் இயற்கை உரம் சம்பந்தமான ஆய்விற்கும் இந்த முறை சிறப்பானதொரு முடிவினை கொடுக்கும் என்று நம்புகின்றனர்!
இன்னும் சில நாட்களிலேயே ஒன்றும் இரண்டும் ஒன்று கூடும் வகையில் எளிய வடிவமைப்பில் தற்காலிக முறையில் அருமையானதொரு கழிவறையினை அமைக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் தனியார் தன்னார்வ அமைப்பும் வேளாண் பல்கலையும்!
எது எப்படியோ இன்னும் சில தினங்களில் முசிறியில், சாலையில் நடக்கும் சகலரும் மூகமுடி அணிந்தோ அல்லது கர்சீப்பினால் மூடிக்கொள்ளாமலே நிம்மதியாக கை வீசி நடந்துப்போய் வரலாம்!
குறிப்பு:- செய்தி நான் படித்து தெரிந்துக்கொண்டது ஒரு வெளிநாட்டு இணையதளத்தில்! அதுவும் வித்தியாசமான தலைப்பில்!? இங்க சொன்னா நல்லா இருக்காது! இருந்தாலும் என்ன தலைப்பின்னு ஆர்வமா கேட்குறவங்களுக்காக நான் ரகசியமான மொழியில சொல்றேன்! ஒ.கேவா?!
fee to pee !
# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை
நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?
அல்லது அவ்வப்போது இணையத்திற்கு வந்துச்சென்றாலும் எதாவது தேடுவதற்காகவே வரும் ஆளா நீங்கள்?
உங்களுக்குத்தான் இந்த செய்தியை நான் முதலில் சொல்லவேண்டும்!
தேடிக்கிடைப்பதில்லை
என்று
தெரிந்த ஒரு செய்தியை,
தேடிப்பார்ப்போம் என்று
தேட தொடங்குகையில்
கூகுள் உங்களுக்கு கைக்கொடுக்குமல்லாவா!
அந்த கூகுளாண்டவர் மற்றுமொரு வரமாக தன் பக்கத்தில் ஒரு பாகத்தினை உலக சுற்றுசுழலுக்கு நிதி திரட்டி சேவை செய்வதற்காய் கொடுத்திருக்கிறார்!
அந்த பக்கத்திற்கு சென்று நீங்கள் சர்ச்சில் ஈடுபடும்போது உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் உங்களை மகிழ்விக்கலாம்! ஆனால் அதே சமயத்தில் உங்களின் கிளிக்குகளால் கிடைக்கும் விளம்பர வருவாய் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ அமைப்புக்களுக்கு நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டும் உலகின் சுற்றுசுழல் இயற்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்! அது எப்படின்னு இங்க கொஞ்சம் சொல்லியிருக்காங்க இன்னும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில் கொடுக்கவும் தயாராகவே இருக்காங்களாம்!
சரி இதுல போய் நாம சர்ச் பண்றதால கூகுளை மாதிரியில்லாமல் தகவல்களை பிழையாக தருமோ அப்படின்னெல்லாம் நீங்க பயப்பட வேணாம் ஏன்னா? நம்ம கூகுள்ல இருக்கற அதே மெனுக்கள்தான் இதுலயும் இருக்கு ஜஸ்ட் ஸ்கின் மாத்தின டெம்ப்ளடேதான் ஸோ வர்ற ரிசல்ட்கள் எல்லாம் கூகுளாண்டவரிடமிருந்துதான்!
இனி உங்களுக்கு 'சர்ச்'சில சிக்கறதுக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம்,
இங்க போய் வார்த்தைகளால் வலை விரிச்சு காத்திருக்க முயற்சிக்கலாமே....!
கண்டிப்பாய் நல்லது நடக்க நாமும் காரணமாக இருக்கலாமே...!
# ஆயில்யன் 19 பேர் கமெண்டிட்டாங்க
சுற்றுசூழல் தின - கதம்பம்
சலவைசோடா (வாஷிங் சோடப்பூ!) பத்தி உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலும் அறிந்திருக்ககூடும் தெரிந்திருக்கக்கூடும் சில பல சமயங்களில் பயன்படுத்தியும் இருக்கக்கூடும்! துணிகளை சலவை செய்வதற்காக வாஷிங் பவுடர் நிர்மா வரும் காலத்திலிருந்து, வாஷிங்பவுடர் நிர்மா வந்த காலத்திலும், கூட பலரும் இதை பயன்படுத்தியே துணிகளை துவைத்து பழகினார்கள்!
சூடுபடுத்திய நீரில் சலவை சோடாவினை போட்டு பிறகு துணிகளை அதில் சுமாராய் 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து பின்னர் துவைப்பார்கள்! இப்பொழுதும் கூட கடைகளி கிடைக்கிறது மற்ற வாஷிங் பவுடர்களைவிட மிக மிக விலை குறைவாக....
*****
இட்லி,பூரி,மற்றும் பஜ்ஜி வகைகளுக்கும் மற்றும் அதிக அளவு பயன்பாட்டில் குறைந்த அளவாக சமையலில் சேர்க்கப்படும் பொருள் சமையல் சோடா அல்லது ஆப்ப சோடா! அதிகம் ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் பொருளும் கூட!
சமையல் அறையில் தற்பொழுது பயன்படுத்தப்படும் பல வகை ( சுத்தம் செய்வதற்கு, வாசனைப்பொருட்கள் ) கெமிக்கல் லிக்விட்களுக்கும் மாற்றாக உபயோகிக்க கூடிய பொருள் இதுவாகும்!
*****
ஒவ்வொரு முறையும் கடைத்தெருவுக்கு செல்லும் அம்மாவிடம் வரும்போது கீரை விதைகள், வெண்டைக்காய் விதைகள் கத்தரிக்காய் விதைகள் வாங்கி வாம்மா! என்று கோரிக்கை வைக்கும் எத்தனையோ பிள்ளைகளுள் ஒருவராக கூட நீங்கள் வாழ்ந்து வந்திருக்கக்கூடும்! ஆனால் அதிலெல்லாம் ஆர்வம் இருந்தது சிறுவயதில், என்று மெல்லிய புன்னகையுடன் மலரும் நினைவுகள்தானே இப்போது!?
இப்பொழுதும் கூட அதே போன்ற கடைகள் இருக்கின்றன ஆனால் யாருடைய ஆதரவும் அதிகமின்றி?!
ஏன் நாம் அந்தளவுக்கு பெரிய மனிதர்களாக மாறிபோய்விட்டோமா? இனிமேலும் நம்மால் அது போன்று விதை விதைத்து காய்கனிகளை அல்லது மரங்களை மலரச்செய்ய முடியாதா???
வருடத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ளவர்களுக்கு பிறந்த நாள் திருமண நாள் என வரும் நாட்களில் ஒரு மரம் நட்டு வைத்தால் நலமாக இருக்குமே!
*****
வாழைக்காய் தோலினை தனியே சீவி வைத்துக்கொள்ளுதல்,வெங்காயதோலினை உறித்து தனியே வைத்துக்கொள்ளுதல், இதே போன்று எடுத்து வைத்த தோல்கள் அனைத்தினையும் கொல்லையில் ஏதேனும் செடிகளின் வரப்புகளுக்குள் போட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு வந்த பாட்டிகளின் வாழ்க்கையினை நாம் பழக மறந்தது ஏனோ?
*****
வயசானவங்க வீட்ல இருக்காங்களா எதுனா பொருள் வெளியே வீசப்போறப்ப தடுக்கறாங்களா? கரெக்ட்தான் அவங்க அனுபவத்தில உங்களுக்கு சொல்ல வர்ற விஷயத்தை நீங்க எப்பத்தான் தெரிஞ்சுக்கப்போறீங்களோ!?? முடிஞ்சா திரும்ப பயன்படுத்தற மாதிரி இருக்கற பொருடகளை பயன்படுத்த முயற்சி செய்யுங்களேன்!
*****
இன்று உலக சுற்றுசூழல் தினம்!
சுற்றுசூழல் பத்தி கத்துவோம்! கத்துவோம்! கத்திக்கிட்டே இருப்போம்!! என்றாவது ஒரு நாள் எவர் காதிலாவது எங்களின் சத்தம் வேதமாய் ஒலிக்க தொடங்கும் என்ற எதிர்ப்பார்ப்பில்.....!
# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை
மீண்டு(ம்) வரும் மஞ்சள் பை!
ஹோட்டல்கள்;
ஜுவல்லரிகள்;
ஜவுளிக்கடைகள்;
சூப்பர் மார்க்கெட்டுக்கள்,
என சகலவிதமான பொருட்கள் விற்கும் இடங்களும் பெருகின்றன விற்கும் பொருட்களுக்கான விலைகளும் பெருகுகின்றன.
இந்த பெருக்கத்தினூடாகவே சுற்றுசுழலுக்கு கெடுதல் விளைவிக்கும் விதவிதமான வகை வகையான வண்ண பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையும் பெருகிக்கொண்டோ போகிறது.
வாங்கும்போது இருக்கும் ஆர்வம் சில பல நாட்களில் விரைந்து குறைந்து அலட்சியமாக தூக்கிவீசப்படும் அந்த பிளாஸ்டிக் பைகள் பூமிக்கு பாரமாகவே தங்குகின்றன!
முன்பெல்லாம் ஹோட்டல்களுக்கு ஏதேனும் உணவுகள் பார்சல் வாங்க சென்றால் தூங்கு வாளி ( தளும்பற மாதிரி ஊத்துப்பா சாம்பாரை!) கொண்டு சென்ற பழக்கமெல்லாம் எப்போழுதோ போயே போய்விட்டது! இப்ப்போதெல்லாம் ரொம்ப சிம்பிளாக பிளாஸ்டிக் கவரில் கட்டி அந்த நூலினை உருட்டோ உருட்டென்று உருட்டி கொடுக்கையில் வெள்ளை நூல் கருத்திருக்கும் (எப்படிப்பா கருத்துப்போகுது அப்படின்னெல்லாம் நான் கேக்கமாட்டேன்ப்பா?!)
இதேபோன்று ஜவுளிக்கடைகளுக்கு சென்றுவந்தால் முழுதும் மஞ்சள் துணிப்பைகளுக்குள் முழ்கியபடியே வரும் பெற்றோர்களையே, பார்த்த காலங்கள் கரைந்துப்போயிற்று! இப்ப டைலர் கடைகள் வரைக்கும் கலர் கலரான டிசைன்களில் ஐஸ்வர்யா ராயும் ஏதோ ஒரு பாரின் இளைஞனும் அழகான உடைகளில் காட்சியளிக்கும் பிளாஸ்டிக் கைப்பைகள்தான் இருக்கிறது!
மஞ்சள் பையின் மகத்துவம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது!இயற்கை நலனில் அக்கறை கொண்டவர்கள் பிளாஸ்டிக் மாயையிலிருந்து விட்டு விலகி துணிப்பைகளுக்கு தாவுங்கள் என்று கூவ ஆரம்பித்துவிட்டார்கள்!
இன்னும் சில ஆண்டுகள் கழித்து நாம் எப்ப்டி பள்ளிகளுக்கு மஞ்சள் பையினை அக்குளிலோ அல்லது கையில் தொங்கவிட்டப்படியோ அல்லது கையில் வைத்து தோளில் தொங்கவிட்டப்படி போனோமோ, அதே போன்று செல்ல, நம் இளம் தலைமுறை தயாரகிகொள்ளும் நாள் வரப்போகிறது! பை கிழிந்துப்போகும் அளவுக்கு புக்ஸ் இருக்காதுங்க! அதையும் அப்போதைய் சூழலில் கொறைச்சுடுவங்க!(பை காது அறுந்து அதற்கு ஊக்கு ( பின்) தேடும் நிலையெல்லாம் வராது பயப்படாதீங்க!)
மஞ்சள் பை பயன்படுத்த இப்பலேர்ந்தே ஆரம்பிச்ச்சுடுங்க!
# ஆயில்யன் 19 பேர் கமெண்டிட்டாங்க
Labels: இயற்கை

