நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?

நீங்கள் இணையத்தில் இருக்கும் காலங்களில் அதிக தேடி தேடி SEARCHல் ஈடுபடும் ஆளா?

அல்லது அவ்வப்போது இணையத்திற்கு வந்துச்சென்றாலும் எதாவது தேடுவதற்காகவே வரும் ஆளா நீங்கள்?

உங்களுக்குத்தான் இந்த செய்தியை நான் முதலில் சொல்லவேண்டும்!

தேடிக்கிடைப்பதில்லை

என்று

தெரிந்த ஒரு செய்தியை,

தேடிப்பார்ப்போம் என்று

தேட தொடங்குகையில்

கூகுள் உங்களுக்கு கைக்கொடுக்குமல்லாவா!

அந்த கூகுளாண்டவர் மற்றுமொரு வரமாக தன் பக்கத்தில் ஒரு பாகத்தினை உலக சுற்றுசுழலுக்கு நிதி திரட்டி சேவை செய்வதற்காய் கொடுத்திருக்கிறார்!

அந்த பக்கத்திற்கு சென்று நீங்கள் சர்ச்சில் ஈடுபடும்போது உங்களுக்கு கிடைக்கும் தகவல்கள் உங்களை மகிழ்விக்கலாம்! ஆனால் அதே சமயத்தில் உங்களின் கிளிக்குகளால் கிடைக்கும் விளம்பர வருவாய் உலகெங்கிலும் உள்ள தன்னார்வ அமைப்புக்களுக்கு நிதியாக பகிர்ந்தளிக்கப்பட்டும் உலகின் சுற்றுசுழல் இயற்கை சம்பந்தமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறதாம்! அது எப்படின்னு இங்க கொஞ்சம் சொல்லியிருக்காங்க இன்னும் விரிவான தகவல்கள் வேண்டுமெனில் கொடுக்கவும் தயாராகவே இருக்காங்களாம்!

சரி இதுல போய் நாம சர்ச் பண்றதால கூகுளை மாதிரியில்லாமல் தகவல்களை பிழையாக தருமோ அப்படின்னெல்லாம் நீங்க பயப்பட வேணாம் ஏன்னா? நம்ம கூகுள்ல இருக்கற அதே மெனுக்கள்தான் இதுலயும் இருக்கு ஜஸ்ட் ஸ்கின் மாத்தின டெம்ப்ளடேதான் ஸோ வர்ற ரிசல்ட்கள் எல்லாம் கூகுளாண்டவரிடமிருந்துதான்!

இனி உங்களுக்கு 'சர்ச்'சில சிக்கறதுக்கு டைம் கிடைக்கும்போதெல்லாம்,

இங்க போய் வார்த்தைகளால் வலை விரிச்சு காத்திருக்க முயற்சிக்கலாமே....!

கண்டிப்பாய் நல்லது நடக்க நாமும் காரணமாக இருக்கலாமே...!

19 பேர் கமெண்டிட்டாங்க:

said...

நல்லது நடக்க நிச்சயம் காரணமாய் இருப்பேன். தகவலுக்கு நன்றி ஆயில்யன்.

said...

சரிங்க.. நல்லதா எப்படி கண்ணுல படுது .. நல்லா சர்ச் பண்ணுறீங்க.. நான் சர்ச் ன்னா கிருஸ்டீன் கோயிலோன்னு நினைச்சேன். :)

said...

/
"நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?"
/

சர்ச் இல்லிங்க கோவில் - தான்

:)))

said...

ஹோம் பேஜையே Ecosearch ஆக மாத்தியாச்சு,....

said...

ஆனா தமிழ் யுனிகோட் சப்போர்ட் இல்லைண்ணே..... :(

said...

//புதுகைத் தென்றல் said...
நல்லது நடக்க நிச்சயம் காரணமாய் இருப்பேன். தகவலுக்கு நன்றி ஆயில்யன்.
//

நன்றிகளுடன்....!

said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...
சரிங்க.. நல்லதா எப்படி கண்ணுல படுது .. நல்லா சர்ச் பண்ணுறீங்க.. நான் சர்ச் ன்னா கிருஸ்டீன் கோயிலோன்னு நினைச்சேன். :)
//

நீ எதை விரும்புகிறாயோ அதையே நீ ”சர்ச்”சித்தால் அது சம்பந்தமான தகவல்களையே நீ பெறுவாய்ன்னு ஒரு இ.பகவத் கீதையில படிச்சிருக்கேனாக்கும் :))))))

said...

// மங்களூர் சிவா said...
/
"நீங்கள் அடிக்கடி ”சர்ச்”ல் ஈடுபடுபவரா...?"
/
சர்ச் இல்லிங்க கோவில் - தான்
:)))
//
ம் நீங்க கொடுத்து வைச்சவருதான்!?
:)

said...

//தமிழ் பிரியன் said...
ஹோம் பேஜையே Ecosearch ஆக மாத்தியாச்சு,....
//

நன்றி தமிழ் :)

said...

//தமிழ் பிரியன் said...
ஆனா தமிழ் யுனிகோட் சப்போர்ட் இல்லைண்ணே..... :(
///

நம்பு தமிழ் !

நாளை வரும்

நம் செந்தமிழ் என்று....!

said...

ஆகட்டும் ஆயில்யா!
அப்படியே செய்துடுவோம்

said...

டிரையலும் முடிச்சாச்சு

said...

// கண்மணி said...

ஆகட்டும் ஆயில்யா!
அப்படியே செய்துடுவோம்///

நன்றி டீச்சர் :)

said...

//கண்மணி said...

டிரையலும் முடிச்சாச்சு//

சூப்பரு :))

said...

சூப்பரு மேட்டரு ஆயில்ஸ்... ;)
இதனால் இந்தியாவில் யாராவது பயன் அடைவங்களா? :) காரணமே இல்லாம கன்னாபின்னானு தேடறேன். :).. இல்லைனா தேடுவது நமக்கே ஆபத்தா முடியும்...

நம்மளால கிடைக்கிற நிதியை வைத்து அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ப்ளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகளை கப்பல் கப்பலாக நம் நாட்டுக்கே அனுப்பி நமக்கே ஆப்பு வைப்பார்கள்... அதையும் செய்துவிட்டு பிறகு நம் நாட்டு சுற்று சூழலை பாதுகாக்க நிதி தரேன்னு சொல்லி நாட்டை அடகு வைக்கும் அளவுக்கு நிபந்தனை போடுவாங்க...

அதனால் உணர்ச்சிவசப் ப்டாம நல்லா ஆராய்ந்து உதவி பண்ணலாம்.

said...

தகவலுக்கு நன்றி ஆயில்யன்.

said...

// SanJai said...

சூப்பரு மேட்டரு ஆயில்ஸ்... ;)
இதனால் இந்தியாவில் யாராவது பயன் அடைவங்களா? :) காரணமே இல்லாம கன்னாபின்னானு தேடறேன். :).. இல்லைனா தேடுவது நமக்கே ஆபத்தா முடியும்...

நம்மளால கிடைக்கிற நிதியை வைத்து அமெரிக்காவையும் ஐரோப்பிய நாடுகளையும் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ப்ளாஸ்டிக் மற்றும் இரும்புக் கழிவுகளை கப்பல் கப்பலாக நம் நாட்டுக்கே அனுப்பி நமக்கே ஆப்பு வைப்பார்கள்... அதையும் செய்துவிட்டு பிறகு நம் நாட்டு சுற்று சூழலை பாதுகாக்க நிதி தரேன்னு சொல்லி நாட்டை அடகு வைக்கும் அளவுக்கு நிபந்தனை போடுவாங்க...

அதனால் உணர்ச்சிவசப் ப்டாம நல்லா ஆராய்ந்து உதவி பண்ணலாம்.//

உங்களோட பார்வையும் சரிதான் சஞ்சய்!

நான் அறிந்த வரையில் அங்கு உள்ள செய்திகளின் அடிப்படையில் அவர்கள் வெளியிட்டிருக்கும் தன்னார்வ மையங்களின் விபரங்களின்படி பெரும்பாலும் உலக அளவில் சுற்றுசுழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான செயல்பாடுகளே பிரதானமாக தெரிகின்றது!

நல்லதா இருக்கும்னு ஒரு நம்பிக்கை பட் எல்லாருக்குமே ஒரு சுய பரிசோதனை கண்டிப்பா வேணும் :)

said...

//வேளராசி said...

தகவலுக்கு நன்றி ஆயில்யன்.//

நன்றிகளுடன்....!

said...

கயல்விழி முத்துலெட்சுமி said...
//நான் சர்ச் ன்னா கிருஸ்டீன் கோயிலோன்னு நினைச்சேன்.//

ஹி..நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்.

நல்ல தகவல் ஆயில்யன். நானும் மாறி விடுகிறேன் ecosearch-க்கு.