Showing posts with label தோஹா. Show all posts
Showing posts with label தோஹா. Show all posts

தோஹா - ஒலிம்பிக்ஸ் 2016!?


சென்ற வாரம் உலக ஒலிம்பிக் வாரியத்தால் வெளியிடப்பட்ட 2016 பரிசீலனை நாடுகளின் பட்டியலிலிருந்து கத்தார் வெளியேற்றப்பட்டது! கத்தாரில் வாழும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு கொஞ்சம் வருத்தமான விஷயமாகத்தான் இருந்தது!

அரபு நாடுகளிலேயே அசுரவளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடாக, கல்வி,தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வெளிநாடுகளின் ஒத்துழைப்போடு வளர்ச்சி கண்டு வரும் நாடு கத்தார்!

பாரம்பரியத்தோடு அறிவியல் தொழில்நுட்பவளர்ர்சியினை உலக நாடுகளுக்கு தெரிவிக்கவேண்டுமெனில் ஏதேனும் மிகப்பெரிய விளையாட்டுப்போட்டிகளை நிகழ்த்தி உலக நாடுகளில் மக்களின் கவனத்தை இந்த குட்டியூண்டு நாட்டு பக்கம் திருப்பவைக்கவேண்டும் என்பதில் ரொம்ப விருப்பமாக இருக்கும் கத்தார் மன்னர்! இப்படியான சூழலில்தான் கத்தார் 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை தம் நாட்டில் நடத்த வேண்டி விண்ணப்பித்தது!

கைநிறைய பணம் இருக்கும் இடத்தில் ஏராளமான வசதிகளை செய்து தரமுடியும் என்ற தீர்க்கமான திட்டங்கள் என்று எல்லாவற்றையும் எதிர்நோக்கியே பலப்பரீட்சையில் இறங்கியது சில மாதங்களுக்கு முன்பு!

ஒலிம்பிக் கமிட்டியில் உத்தேசமாக தீர்மானிக்கப்பட்டிருந்த 2016 போட்டிகள் ஜூலை 15 தொடங்கி ஆகாஸ்ட் 31 வரைக்குமான தேதிகளாகும் இதில்தான் முதல் சிக்கலே ஆரம்பித்தது! இந்த காலகட்டங்களில் கடுமையான வெப்பநிலை நிலவும் காலகட்டம் ஆனால் கத்தார் ஒலிம்பிக் கமிட்டி நீங்க வேணும்னா அக்டோபர்ல ஆரம்பிச்சுடுங்க ஆட்டம் களை கட்டும் கத்தாரும் சும்மா குளு குளுன்னு இருக்கும்னு சொன்னதை உலக ஒலிம்பிக் கமிட்டிஏத்துக்கலை!

அதுக்குள்ளகவே அடுத்தடுத்து ரிஜக்ட்டட் கேள்விகளாவே எடுத்து வைச்சுக்கிட்டு ஒவ்வொண்ணா கேட்க ஆரம்பிச்சுது கமிட்டி!

தம்மாதுண்டு நாட்டில இருக்கறதே 1 மில்லியன் மக்கள் நீங்க எப்படி சீனா ஒலிம்பிக்ஸுக்கே போற மினிமம் 8 மில்லியன் மக்களை சமாளிப்பீங்க அதுவும் 2016 காலகட்டத்துல இன்னும் கூடுதலாவே இருக்குமே என்ன பண்ணுவீங்க ?அப்படின்னு இன்னொரு பிட் போட...! கத்தாரும் அதற்கு ஈடுகொடுத்து பிரம்மாண்டபமான திட்டங்களை பற்றி சொல்ல, அப்ப ஆச்சர்யப்பட்டது ஒலிம்பிக் கமிடடி அல்ல கத்தார்ல வாழும் எங்களை மாதிரியான ஆளுங்கள்தான்!

பின்ன சும்மாவா நாட்டை சுத்தியும் ஒரு ரெயில் நெட் ஒர்க்! ஆளுங்களே இல்லாத பல பாலைவனப்பிரதேசங்களில் பிரும்மாணடபமான கட்டிடங்கள் பாரம்பரியத்தை காட்டும் வகையில் தோஹாவினையே அப்படியே சேஞ்சு பண்ணி ஒரு 50 வருஷத்துக்கும் பின்னால கொண்டுபோக வைக்கிற மாதிரியான திட்டங்கள்தான்! நிறைய வேலைவாய்ப்புக்கள் அதோட ஒலிம்பிக்ஸ் நல்லபடியா நடத்தி முடிக்கணும்னா கண்டிப்பா பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வேலை பார்க்கும் மக்களின் வாலண்டியர் ஆதரவும் கண்டிப்பா தேவை!

ஆனாலும் கடைசிவரைக்கும்... ம்ஹும் ஒப்புக்கு கூட தலையாட்டுலைங்க இந்த உலக ஒலிம்பிக் கமிட்டி!

சரி விட்டுதள்ளுங்கடா மக்கா ஒலிம்பிக்ஸ் போனா என்னா 2018 உலக ஃபுட்பால் மாட்ச் நடத்தி காட்டி அசத்திடுவோம்னு அடுத்த நாளே முடிவெடுத்தாச்சு! இன்னும் கொஞ்ச நாள்ல அதுக்கு அப்ளை பண்றத்துக்கு இங்க பீச்ல பிரம்மாண்டபமான மீட்டிங்க! வாணவேடிக்கை அசத்தல்கள்னு களை கட்டப்போகுது! நம்மளையும் கூப்பிட்டிருக்காங்க நான் வர்ட்டா!

தோஹா 2016 - ஒலிம்பிக்ஸ்..?

2016ல் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்தப்போகும் நாடுகளுள், கத்தாரும் தனது தகுதிகளை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் தெரிவித்து, 2016ல் தேஹாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்து முழு முயற்சியுடன் களத்தில் இறங்கியுள்ளது!

அரபு நாடுகளில் முதல் முறையாக ஒலிம்பிக் நடத்த, தகுதிகளின் அடிப்படையிலான தேர்வுகளில் கலந்துகொள்கிறது கத்தார்!

கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளுக்காக சுமார் 2பில்லியன் டாலர் செலவழித்து,சிறப்பான அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் புதிய மைதானங்களை அமைத்து, வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

அதன் பிறகு கத்தாரின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்கை மையமாக வைத்துதான் செயல்பட தொடங்கியது!

கத்தாரில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தப்படவேண்டும், என்று சர்வதேச அளவில் கவன ஈர்க்கும் விதமாக நேற்று தோஹாவில் நடைப்பெற்ற தோஹா கடற்கரையில் பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒலிம்பிக் 2016க்கான சின்னம் வெளியிடப்பட்டது!

Photo Sharing and Video Hosting at Photobucket



எது எப்படியோ 2016ல் இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றால் இந்தியர்கள் நமக்கும், கூட பெருமைதான்!

பெரும்பாலும் வாலண்டியர்கள் உதவியோடு சிறப்பாக நடத்தி முடித்த ஆசிய விளையாட்டு போட்டிகளை போன்றே, ஒலிம்பிக்கிலும் அதிகளவில் வாலண்டியர்கள் ஈடுபடுத்தப்படபோவது உறுதி!

அதில் அதிகளவில் இந்தியர்கள் இடம்பெறப்போவதும் உறுதி! (விளையாட்டுல் இல்லைங்க..!!!)